அத்தியாயம் 33
காதலனின் வருகையால் நிலாவோ வெட்கப்பட்டு மறைந்து கொள்ள, அவனோ கம்பீரமாக தன் கதிர்களை பரப்பிக் கொண்டு தன் ஒளியால் காதலியை அணைத்துக் கொண்டு அடிவானில் உதயமானான் சூரியன்.
பறவைகளின் சத்தத்தில் கண் விழித்த நாயகியை எழும்ப விடாமல் அணைத்திருந்தது இரும்புக் கரம் ஒன்று.
தன் கன்னத்திலே கதகதப்பான தேகத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் கண்களை கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்க ஒரு கையை நெற்றியில் வைத்துக் கொண்டு மறுகையால் தன்னை அணைத்துக் கொண்டும் தூக்கத்தில் கூட முகத்தில் அதன் அசதியை காட்டாதவனின் உதடுகளோ இன்று இலேசாக புன்னகைத்துக் கொண்டிருப்பது போல தோன்றியது அவளுக்கு. அது அவனின் ஆழ்மனதின் வெளிப்பாடு.
பல நாட்கள் தாயை இழந்து இன்று அந்த தாய் கிடைத்த சந்தோஷத்தில் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனையே ஆசை தீர பார்த்துக் கொண்டிருக்கிறாள் அக்ஷயா.
தான் அவனை பார்த்த நாளிலிருந்தே அவனின் கூர் நாசியில் எப்போதும் அவளுக்கு ஓர் அதிகபடியான ஈர்ப்பு உண்டு.
தனக்கு சொந்தமாகாது என தான் நினைத்திருந்த கனவுகள் இன்று நிஜமாகி, முன் பந்தியில் அமர்ந்து கொண்டு வா..என அவளை அழைத்துக் கொண்டிருந்தது.
அப்படியே எக்கி அவனின் கூர் நாசியில் ஆசையாக முத்தம் வைத்தாள் அக்ஷு. அதில் ஆதவ் சிறிதாக அசைய பக் என்றிருந்தது அவளுக்கு..
வாயை பிளந்து கொண்டு அதிர்ந்து போய் அவனை பார்க்க அவனோ தலைக்கு மேல் வைத்திருந்த தன் கையை கீழே போட்டுவிட்டு தான் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இல்லாவிட்டால் அப்படி நடித்தானோ...!?
அதன்பிறகே அவளுக்கு மூச்சு சீராக வர, தன் கணவனை மீண்டும் பார்க்க உச்சி முடியோ அவனின் நெற்றியில் தவழ்ந்து கொண்டிருந்தது.
அது தனக்கான இடம் என நினைத்தாளோ..., தன் தளிர் விரலால் அதனை ஒதுக்கிவிட்டவள் சுருக்கம் கூட இல்லாத அவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
அவளின் செயல்களில் இவ்வளவு நேரமும் நடித்துக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு வர உதட்டை விரித்தான். அதில் மீண்டும் அதிர்ந்தவள் அவனை குனிந்துபார்க்க அவனோ எந்தவித எதிர்வினையும் இல்லாமல் கண் மூடி இருந்தான்.
யோசனையில் இவளோ குழம்பிப் போய் உதட்டை குவித்து விட்டு தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு கிடந்தவனுக்கு அவளின் விளையாட்டு ஒரு வித எதிர்ப்பார்ப்பை கொடுக்க அப்படியே அசையாது இருந்தான்.
அவளோ மீண்டும் "திஸ் இஸ் மை ப்லேஸ். இங்க வந்த கை கால நறுக்கி வச்சிடுவன் ஜாக்கிரதை" என அவனின் உச்சிமுடியை அவள் தாளித்து கொட்ட ஆதவுக்கோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அமைதியாக கிடந்தான்.
அப்படியே தன் விரலால் கோலம் போட்டு கொண்டே வந்தாள் ஆதவின் அக்ஷு. கூர்நாசியில் சில நிமிடம் தங்கிய அந்த பயணம் அடுத்து கன்னத்துக்கு இடம்மாறி இருந்தது.
நேற்று தன்னை அவனின் உணர்ச்சிகளின் பிடியால் காதல் செய்தவனை இன்று அவள் தன் செயலால் காதலிக்கிறாள்.
ட்ரிம் செய்யப்பட்ட கறுத்த தாடியுடன் கூடிய அவன் கன்னம் "என்னை முத்தமிடு.." என அழைப்பது போல இருக்க "இந்தா வந்துட்டேன்.. " என்று அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்றை வைத்தாள் அக்ஷு.
தன்னுள்ளே பேசிக் கொண்டு தன்னை சீண்டிக் கொண்டிருந்த மனைவியை அப்படியே மீண்டும் மஞ்சத்தில் கொண்டாடவே ஆசை கொண்டான் அந்தக் கள்வன். இதற்கு மேல் தாங்க முடியாமல் திரும்ப எத்தணித்தவனை அவளின் அடுத்த செயல் தடுத்திருந்தது.
தொடர்ந்த அவளின் பயணம் அந்த உதட்டில் இறுதியாக தரித்தது.
மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டவன் இப்படி தன்னை சோதிக்கும் மனைவியை நொந்து கொண்டான்..
தன்னை இரவு முழுவதும் முத்தாடி கழித்த அந்த உதட்டில் கடுகளவு கூட களைப்பின் ரேகை இல்லை.
அதில் அவள் உதடுகளோ வெட்கத்தில் சிரித்தது. பின் அதன் நீள விட்டத்தை அளந்தவள் "மாம்ஸ்...எந்த கெட்ட பழக்கமும் இல்லை போலயே... இப்படி செக்க செவந்து போய் இருக்கு லிப்.."என அதனை மெதுவாக தடவி விட்டவளின் பேச்சிலும் தழுவலிலும் அவனுக்கு தான் மூச்சு தடைபட்டு நின்றது.
"இவளை அமைதியானவனு நெனச்சிட்டு இருந்தோமே.. சரியான வாலா இருப்பா போலயே...
இதுவும் நல்லா தான் இருக்கு.." என்று எண்ணிக் கொண்டவன் அவள் எதிர்பாராத நேரம் அவளை கீழே தள்ளிவிட்டு அவள் மேல் முழுவதும் படர்ந்தான் வேங்கை.
அவளின் இருகைகளையும் சிறை செய்தவன் "என்னடி செஞ்சிட்டு இருந்த இவ்வளவு நேரமும்..?" என்றவனின் பேச்சில் முழுவதும் மயக்கமே...
அவள் அதிர்ந்திருப்பதையும் பார்த்து "ஆமா..கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொல்லி கூப்பிட்ட..? ஆங்?" என்று அவன் அவளை முழுவதுமாக தழுவ, கண்களை அகல விரித்தவள் அவஸ்தையுடன் நெளிந்தாள்...
"எ..எ..என்ன பண்..?" என்று கூற வந்ததை கூறாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள்.
சத்தம் போட்டு சிரித்தவன் "இந்த திக்கல் கொஞ்ச நேரம் முன்னாடி எங்கடி போச்சு?" என கிண்டலடிக்க சிணுங்கிக் கொண்டே அவனுள் புதைந்து போனாள் அக்ஷயா..
அப்படியே அவளை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டவன் "பேபி... என்னைய என்ன சொல்லி கூப்பிட்ட..?" என மீண்டும் கேட்க "அப்போ இவ்ளோ நேரம் இவங்க தூங்கலையா..?"என்று இப்போது தான் அவளுக்கு பல்ப் எரிந்தது..
நிமிர்ந்து ஆச்சர்யத்துடன் அவனை பார்க்க "அக்ஷு..இப்படி பார்த்தா பிறகு சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை..." என்று அவள் உதட்டை ஒருமார்க்கமாக பார்க்க..
"யூ...ச்சீ.." என்றவள் தன் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாததை போல நாணத்தில் அவனுடனே ஒன்றினாள்..
அவனோ சத்தம் போட்டு சிரிக்க அவளுக்கு தான் எங்கே சரி முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது..."மாமா.." என்று சினுங்கிக் கொண்டே அவன் நெஞ்சில் அடிக்க "ஹேய்..வலிக்குதுடி உன் மாமனுக்கு.." என்று நெஞ்சை நீவிக் கொண்டவனின் உதடுகளோ எதிர்மாறாக சிரித்துக் கொண்டு இருந்தன..
அக்ஷய ப்ரியாவோ உண்மையில் வலித்து விட்டதோ என்று சடாரென எழுந்து பார்க்க அவன் முத்துப் பற்களை காட்டிக் கொண்டிருந்தான். அவளின் முறைப்பில் அவனின் இதழ்கள் இன்னும் விரிய "ஆனாலும் சும்மா கிக் ஆஆ இருக்கு அக்ஷு" என இருகைகளையும் தலைக்கு கீழே கொண்டு சென்று கால்களை நீட்டி வாகாக படுத்துக் கொண்டு அவன் கூற அவளோ எதற்கு இந்த பதில் என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
அவளை ஒரு கையால் இழுத்தவன் தன்னுள் பொத்திக் கொண்டே "பேபி..நீ மாம்ஸ் னு சொல்லும் போது வேற மாதிரி ஃபீல் ஆச்சு.." என்ற பின்னர் தான் அவளுக்கு அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
அவளின் கன்னம் தன் நெஞ்சில் அழுந்தப் பதிந்து விரியவும், அவள் சிரிக்கிறாள் என்பதை உணர்ந்தவனும் மனம் விட்டு புன்னகைத்தான்.
அவனுக்கு இந்த வாழ்க்கை சுவர்க்கமாகிப் போனது.
கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தவன் நெஞ்சில் சூட்டை உணரவே அவளை நிமிர்த்திப் பார்த்தான்.
ஆம் அவள் அழுதிருந்தாள். இந்த நேரத்தில் ஏன் இப்படி என நினைத்தவனுக்கு தெரியும் அவளின் அழுகையின் காரணம். அடுத்த கணம் அவன் உடல் விறைத்தது.
இருந்தாலும் "என்னாச்சு?"என வெறுமனே கேட்டு வைத்தான்.
அவளோ வேதனையுடன் அவனை பார்த்தாள். ஆனாலும் அவனின் கைகள் அவளுக்கு ஆறுதல் கூறி தடவிக் கொடுத்ததே தவிர பேசினான் இல்லை.
அவனின் அமைதி அவளை சுட "எ..என்னங்க நா..நான் உங்களுக்கு த..த..தகுதி..இல்.." என்று முடிப்பதற்குள் அவனின் முறைப்பில் வாயை கப் என மூடிக் கொண்டாள்.
அவளை தன்னை விட்டும் நீக்கியவன் எழுந்து செல்ல, அவனின் இந்த ஒருகணப் பிரிவே அவளை வலிக்கக் கொன்றது..
"ஆ..ஆதவ்..." என அவள் அழைக்க, இதுவரையில் மற்றவர்கள் அவனை க்ரிஷ் என அழைத்திருந்தும் நெருங்கியவர்கள் மட்டுமே ஆதவ் என அழைத்திருந்தாலும் இன்று தன் உயிரானவள் அழைத்த அழைப்பு அவனை உயிர் வரை தீண்டியது..
அதில் உதடுகள் புன்னகைத்தாலும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன் எழுந்து சென்று கபேர்டை திறந்து ஒரு ஃபைலை எடுத்து வந்து அவள் முன் நீட்டினான்.
அவளோ கண்களில் கண்ணீரை தேக்கிக் கொண்டு அவனையும் ஃபைலையும் மாறி மாறி பார்த்தவள் அவன், இன்னும் முன் நீட்ட.. வாங்கி படிக்கலானாள்.
ஒவ்வொரு டாக்கிமெண்டும் அவளுக்கு சந்தோஷத்திற்கு பதிலாக துக்கத்தையே பரிசலித்தது..
ஆம் ஆதவ் அனைத்து சொத்துக்களையும் தன் மனைவி அக்ஷய ப்ரியாவின் பெயருக்கு மாற்றி இருந்தான்.
அவளின் டயரியை படித்தவனுக்கு தன் தகுதியை நினைத்து, அவள் புனிதமான தன் காதலை மனதினுள்ளே புதைத்துக் கொண்ட அந்த விடயத்தை தவறவிடுவானா...!? அதன் பின்னே அவன் இப்படி செய்தது.
"இப்போ சொல்லு..உன்னுடைய தகுதி கூடவா...?என்னுடையதா..?" என்கவும் அவளோ வேதனையுடன் தலையை இருபுறமும் ஆட்டினாள்.
முகம் சிவந்து போய் அமர்ந்திருந்த அவளை பார்க்க அவனுக்கே கஷ்டமாகியது..
பெருமூச்சுடன் அவள் அருகில் அமர்ந்தவன் அவளின் கைகளில் தன் கையால் அழுத்தம் கொடுத்தவன் "அக்ஷுமா..தகுதிங்குறது நம்மிடம் இருக்க வசதி, சொத்து, அந்தஸ்துல இருக்கிறது இல்லடா... அது நம்மிடம் இருக்க பெருமதியில்லாத குணத்துல தான் இருக்கு. அப்படி பார்த்தா அந்த ப்ரைஸ்லெஸ், வெலுவபில் ப்ராப்படி உனக்கிட்ட தான் இருக்கு. அப்போ நீ இந்த உலகத்துலயே மிகவும் தகுதி கூடியவ தானே..?இந்த ப்ராப்படிஸ் தான் நம்ம தகுதியை பார்க்கும்னு நீ நெனச்சா இன்னேரம் என்னைய விட்டுட்டு போய்ப்பல்ல?..ம்ம்..??" என்று சொன்னவனின் வார்த்தைகள் அனைத்தும் ஆணித்தரமானவை...
முடியுமா அவளால் அவனை விட்டுச் செல்ல..? இந்த நொடி நேர பிரிவிலே தன்னை ஏங்க வைத்தவனை காலம் பூராக விட்டுவிட்டு தன்னால் இருக்க முடியுமா...? என்பதே அவளுக்கு சாட்டையால் அடித்திருந்தது. இவ்வளவு நாளும் தான் நினைத்திருந்த முட்டாள் தனமான சிந்தனையினால் வெட்கினாள் அக்ஷயா.
அழுது கொண்டே பாய்ந்து அவனின் கழுத்தை சுற்றிக் கொண்டு அவனை கட்டியணைத்தவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து கதறினாள்..
"இ..இல்லைங்க..இந்த சொத்து இதெல்லாம் எனக்கு வேண்டாம்...எ..எனக்கு நீங்க மட்டுந்தான் வேணும்...நான் உங்கள விட்டுப் போகமாட்டேன்..."என சிறுபிள்ளை போல அழுதவளின் பேச்சில் இவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் நீங்கி அவளை அணைத்திருந்தான் ஆதவ்.
"இதுக்கப்றம் இத பற்றி பேசுவ?" என்கவும் "இல்லை.." என்ற தலையசைப்புடன் விரும்பியே அவனுள் சிறைகைதியாகினாள்...
தொடரும்...
தீரா.