அத்தியாயம் 34
ஆதவ் தன் மனைவியுடன் தன் வாழ்க்கையை ஆரம்பித்து இன்றுடன் ஒருமாதம் கடந்திருந்தது.
அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்தது.
வழமை போல எதிரிகளின் சதித்திட்டங்களை தூசி போல தட்டி விட்டு தன் தொழில் துறையில் எந்த மகானும் ஈட்டிக் கொள்ளாத பல வெற்றிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தான் ஆதவ் க்ரிஷ் ரத்தினவேல்.
இடையிடையே மனைவியின் நினைவுகள் தன்னை இம்சிக்கும் போதெல்லாம் அடுத்த நிமிடம் அவள் முன் ஆஜராகி இருப்பான்.
அக்ஷய ப்ரியாவோ இத்தனை நாட்களும் தன்னுள் பொத்தி வைத்திருந்த வாயாடித் துடுக்கு தனம் எல்லாவற்றையையும் இடைக்கிடையே அவிழ்த்து விட இன்னும் இன்னும் அவள் மேல் பித்தனாகிப் போனான் காளை...
.....
விக்ரமோ தர்மலிங்கத்தின் சொல்லுக்கினங்கி அவரின் ஆபிஸையும் சேர்த்து கவனித்து வந்தான்.
இதற்கிடையே ஆதவிடம் இத்தனை நாட்களும் தான் இழந்திருந்த ஃபேமிலி கிடைத்ததையும் அது வேறு யாருமில்லை தர்மலிங்கம் தான் என்பதையும் அவர் அவரின் ஆஃபிஸில் தன் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள சொன்னதையும் அதற்கு அவன் மறுத்ததையும் கூறி இருந்தான்.
அவனின் மறுப்பில் சந்தோஷம் கொண்டாலும் அவனின் எதிர்காலம் ஆதவிற்கு முக்கியமாக பட அவனும் தர்மலிங்கத்தின் கூற்றிற்கு உடன்பட்டவனாக விக்ரமிற்கு ஆலோசனை வழங்க, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என ஒரேயடியாக மறுத்துவிட்டான் விக்ரம். ஆதவின் வளர்ப்பல்லவா அவன்.. அவனின் பிடிவாத குணம் இருக்காத என்ன அவனுக்கும்...
அதுமட்டுமின்றி விதூர்ஷன ப்ரியா என்ற தங்கை இருப்பதாக கூறி அவளின் சேட்டைகளை கூறும் போது அவனின் கண்ணில் தெரிந்த அளவில்லா பாசத்தை கண்டவனுக்கு அடுத்து அவனின் பேச்சிலும் கண்ணிலும் தெரிந்த துக்கத்தில் கவலைக்கு பதிலாக புன்னகையே அரும்பியது ஆதவிற்கு. அதனை விக்ரமிற்கு தெரியாமல் மறைத்தவன் என்றும் போல உணர்ச்சிகளை காட்டாது நின்று கொண்டான்.
அக்ஷய ப்ரியா என்று தனக்கொரு சகோதரி இருந்தாள் எனவும் தங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனது முதல் இன்று வரையான தன் தேடல் அனைத்தையும் கூறி முடித்தான்.
இது அனைத்தும் எனக்கு எப்போதோ தெரியும் என்ற தோரணையில் ஆதவ் நிற்க அவனை கவனியாதது விக்ரமின் துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.
...
ஆம். எப்போது அக்ஷய ப்ரியா அவனின் இதயக் கூண்டினுள் புகுந்து கொண்டாளோ அன்றே அவள் பற்றி ஆதி முதல் அந்தம் வரையில் தேடத் தொடங்கினான் ஆதவ் க்ரிஷ்.
அதன் முதல் அடி தான் கமலாம்மா...
அவளை முதன் முதலாக கண்டெடுத்த இடம் பற்றி தகவலை கேட்டறிந்து கொண்டவன் தானே களத்தில் இறங்கி விட்டிருந்தான்.
அவனின் தேடலில் முதல் தடயம் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த போலிஸ் ஸ்டேஷன்.
கமலாம்மா விபத்து நடந்த திகதியை கூறி இருக்க அந்த திகதியை குறிப்பிட்டு ஸ்டேஷனில் விசாரித்தான்.
விபத்து நடந்து பல வருடங்கள் ஆகி இருக்க எப்படியும் அப்போது இருந்த பொலிஸ் மேலதிகாரி இன்று வரை அங்கே இருக்கமாட்டார் என்பதை கணித்தவன் இப்போது அவர் ரிடயர் ஆகி இருக்க வேண்டும் இல்லை மாற்றம் பெற்று வேறிடம் சென்றிருக்க வேண்டும் என்பதை சரியாக ஊகித்து அந்த பொலிஸ் ஸ்டேஷனில் விசாரித்தான்.
இருந்தும் அவர்களிடமிருந்து சரியான தகவல் கிடைக்காதிருக்க ருத்ரன் மூலம் விசாரிக்க தொடங்கி இருந்தான்.
ருத்ரன் பெற்ற தகவலில் அந்த ஆபிசர் வயதானவர் என்றும் அவர் ரிடயர்டாகி விட்டார் என்பதும் தெரிய வர அடுத்து அவர் இருக்கும் இடத்தை தன்னுடைய பலம் கொண்டும் கண்டுபிடித்தவன் அவரில்லம் நோக்கி சென்றான் ஏ.சி.பி ருத்ரனுடன்.
அந்த அதிகாரி பற்றியும் முழுமையாக அறிந்த பின்னே அவன் சென்றான்.
ஓய்வு பெற்ற வயதான அதிகாரியிடம் தன்னிலை விளக்கியவன் அந்த விபத்து பற்றி விசாரிக்கலானான்.
அவர் ஓய்வு பெற்றவர் தான் எனினும் இன்றும் பல கேஸ்களில் டிபார்ட்மெண்டிற்கு உதவி செய்து கொண்டு தான் இருந்தார். அதனால் இவர் இன்வெஸ்டிகேஷன் செய்த அனைத்து கேஸ்களினதும் கோப்புகள் அனைத்தும் ஓர் அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.
நேர்மையான அதிகாரி தான் எனினும் பணம் என்று வந்து விட்டால் அந்த நேர்மை பஞ்சாக பறந்துவிடும் இவரை பொறுத்தவரை..
அவரிடம் விபத்து நடந்த திகதியை கூற ருத்ரனின் உதவியுடன் அந்த ஃபைல் தேடி எடுக்கப்பட்டது.
"*** இந்த திகதில எக்சிடன்ட் நடந்திருக்கு இல்ல..?"ஆதவே ஆரம்பித்திருந்தான்.
ஃபைலிலே கவனத்தை செலுத்திய வண்ணம் "ஆமாப்பா.."என்றவர் இவ்வளவு நேரமும் சாதாரணமாக அமர்ந்திருந்த ஆதவ் இறுகிப் போனதை அவர் அறிய வாய்ப்பில்லை.
"எத்தனை பேர் இறந்தாங்க..? உங்க இன்வெஸ்டிகேகஷன் படி நான்கு பேர்..அப்படி தான மிஸ்டர்...?" என்கவும் சடார் என ஆதவை நிமிர்ந்து பார்த்தார் அந்த அதிகாரி.
அதில் ஆதவின் பார்வை இன்னும் கூர்மையாக அவர் மேல் படிய அவருக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க ஆரம்பித்தது. அவர் செய்த செயல் அப்படி.
"ஆ..ஆமா.."இப்போது அவர்.
"ம்ம்...பெரியவங்க இரண்டு பேரும் குழந்தைகள் இரண்டும்...ஏம் ஐ கரெக்ட்?"
ஆதவின் தொனியில்"ஆம்" என்று வாயும் "இல்லை"என தலையும் அசைந்தன..பின் தன்னிலை உணர்ந்த வயதான அதிகாரி "எ..எஸ்"என்று மண்டையை மேலும் கீழும் ஆட்டி வைத்தார்.
முரணான அவரின் பதிலிலே ஆதவுக்கு வெற்றிப் புன்னகை கீற்றாக வந்து மறைய காலுக்கு மேல் கால் போட்டு வாகாக அமர்ந்து கொண்டான்.
"நெக்ஸ் டே குழந்தை ஒன்றோட ஒரு அம்மா வந்திருக்காங்க..பட் அவங்க யாரு என்றே நிமிர்ந்து பார்க்காம பக்கத்துல இருந்த அரசியல்வாதி லஞ்சம் தரவும் வாய் நிறைய பல்லாக அத வாங்குவதிலே உங்க கவனம் இருந்திருக்கு..." என்றவன் தன் தலையை கோதிவிட
"இ..இதெப்படி இவனுக்கு?" என்று விழி பிதுங்கி நின்றார் அந்த கடமை தவறிய அதிகாரி.
.....
கமலாம்மாவே மேலே ஆதவ் குறிப்பிட்ட விடயத்தை கூறி இருந்தார். அக்ஷய ப்ரியா கிடைத்த உடனே அந்தக் குழந்தையை போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவோம் என்றே அவர் கிளம்பி இருந்தார். ஆனால் அங்கே தன் காவல் கடமையை விற்றுக் கொண்டிருந்தார் அங்கு இருந்த போலிஸ் அதிகாரி. அதாவது இப்போது ஆதவ் சந்திக்க வந்திருக்கும் நபர்.
அதனை பார்த்தவருக்கு பார்த்த முதல் தடவையிலே அந்த பொலிஸ் மீது தவறான எண்ணம் தோன்ற அக்ஷயாவை அணைத்துக் கொண்டே வந்த சுவடு தெரியாமல் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்.
...
"அந்த குழந்தைங்கள் இரண்டு பேருக்கும் என்னாச்சு...?" ஆதவ்.
"அ..அவங்க தான் அ..அங்கனயே..இ..இறந்துட்டாங்களே.."அதிகாரி.
"பொய்...டோன்ட் லைய்...ஐ நோ எவ்ரிதிங்..." என்று பல்லை கடித்தான் ஆதவ்.
"இ..இல்லைப்..பா...நா..நா.." என்று அவர் பதில் சொல்ல தெரியாமல் திக்குமுக்காட
"நான் சொல்லவா என்ன நடந்தது என்று" இப்போது ருத்ரன்.
அவரோ நிமிர்ந்து ருத்ரனை பார்க்க ருத்ரன் திரும்பி ஆதவை பார்த்தான். அவனோ சொல் என்பது போல ஜாடை காட்ட
ருத்ரன் "அந்த குழந்தைங்க சாகல்ல...எக்சுவலி என்ன நடந்ததுனா விபத்துல தாய் தந்தை இறந்தாங்களே தவிர குழந்தைகள் இறக்கவில்லை.. குழந்தைகள் அந்த காருக்குள்ள தான் இருந்தாங்க என்பதே உங்களுக்கு தெரியாது. கேஸை க்ளோஸ் பண்ணனும்னு உங்களுடைய ஈசிக்காக குழந்தைகளும் இறந்து சாம்பல் ஆகிடாங்கனு பொய் சொல்லி இருக்குறீங்க..." என்று தீப் பார்வை பார்த்தான் ருத்ரன். செய்யும் தொழிலே தர்மம் என வாழ்பவன் அல்லவா அவன். கடவுளே என்றாளும் நேர்மையாக நடப்பவன் ருத்ர பிரசாத்...
அவன் கூற்றில் ஆணி அடித்தது போல அமர்ந்திருந்தார் அந்த அதிகாரி. ருத்ரன் கூறிய அனைத்தையும் உண்மையல்லவா..
ஏதோ நடந்ததை நேரில் பார்த்தவர்கள் போல அல்லவா கூறுகின்றர். இவை அனைத்தும் ஆதவின் புத்தி சாதுர்யத்தினாலும் ருத்ரனின் தந்திரத்தினாலும் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் அல்லவா...
இதுவரையில் குழந்தை ஒன்று, அதுவும் தன் மனைவி மட்டுமே இருந்ததாக ஆதவ் நினைத்திருக்க விபத்தின் போது காரில் இரண்டு குழந்தைகள் இருந்ததாகவும் இருவரும் அந்த விபத்து நடந்த பின் காரினுள் இல்லை எனவும் கூறியிருந்தார் அப்பாவியாக சிக்கிக் கொண்ட கான்ஸ்டபிள் ஒருவர். அவர் இந்த தகவலுக்கு மேலே தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட வேறுவழியில்லாமலே இந்த நபரை காண வந்திருந்தான்.
இதுவும் ஆதவின் தேடலில் கிடைத்த தடயமே...
அவரோ "த..தம்பி...மன்னித்துவிடுங்க எங்க தவறு தான்..." என்று தன் வயதை மீறி அவர்களிடம் மன்னிப்பு யாசிக்க ஆதவ் கொஞ்சம் கூட இரங்கினான் இல்லை.
இருந்த இடத்தை விட்டு எழுந்த ஆதவ் "வயசாகிருச்சேனு பார்க்குறேன்..இல்ல " என்று விரல் நீட்டி எச்சரித்தவன் திரும்பி நடக்க எத்தணிக்க
"தம்பி..." என்று அந்த போலிஸ் அழைக்க ஆதவின் நடை தடைப்பட்டதே தவிர திரும்பவில்லை அவன்.
ருத்ரன் திரும்பி "என்ன...?" என்க
"இந்த விடயத்தை தர்மலிங்கம் என்றவர்ட மட்டும் சொல்லிறாதிங்க... ஏன்னா அவர் தான் இந்த விபத்து பற்றி சின்ன க்ளூ கூட கிடைக்காதா என்று அடிக்கடி வந்து போனவர்" என்கவும்
இவ்வளவு எச்சரித்தும் திருந்தாமல் பேசும் சாக்கடையின் பேச்சில் அதிர்ச்சியும் கோபமும் உண்டானது மற்றைய இருவருக்கும்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தன் வழியில் சென்றனர்.
.....
வெளியே வந்த நண்பர்கள் இருவருக்கும் சற்று முன் கிடைத்த தகவலில் குழப்பம் சூழ்ந்து கொண்டாலும் மறுபடியும் அந்த விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு நடையை கட்டினர்.
அந்த மற்ற குழந்தை யார்...? அதற்கு என்ன நடந்தது? என்று யாரிடம் கேட்பது என தெரியாமல் தடுமாற அருகில் விசாரித்த போது விக்ரமை அடையாளம் கூறினர் அனைவரும். ஆனால் விக்ரம் என தெரிந்திருக்கவில்லை அவர்களுக்கு. எப்போதும் அந்தப் பையன் வந்து செல்வதாக கூறி கூடுதல் தகவலாக இப்போது அவன் வரும் நேரம் எனவும் கூறினர் அருகில் இருந்தவர்கள்.
இவர்களோ சற்று மறைவாக நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கலானர்.
எதிர்பாராத விதமாக அங்கு வந்ததோ விக்ரம் ஜெயசந்திரன்...
அவனை அதிர்ச்சியுடன் இருவரும் பார்க்க தகவல் கூறியவர்களில் ஒருவர் கண்ணால் ஜாடை காட்டினார் ஆதவிற்கு "இவன் தான்" என்பது போல.
விக்ரமின் முகத்தில் வந்து போன சோகத்தை கவனித்தவர்களுக்கும் உள்ளம் உருகிற்று.
பாய்ந்து செல்லப் போன ருத்ரனை இழுத்துப் பிடித்து வேண்டாம் என அழைத்து சென்றான் ஆதவ்.
அதன் பிறகே ஆதவ் அக்ஷய ப்ரியாவிற்கு தன் காதலை உணர்த்தியது...
தர்மலிங்கத்திடம் வேறு நபர் மூலம் அனைத்தையும் போட்டு வாங்கியது...
விக்ரம் சங்கவியை பார்கில் சந்தித்தது..
அதன் பின் விது விக்ரம் சங்கவி என மூவருமாக வாகனத்தில் சென்றது...
அதனை ஆதவ் கவனித்தது...
தன் மனைவி போல இருந்த விதூர்ஷன ப்ரியாவை கண்டது. தன் மனைவியோ என சந்தேகம் கொண்டு அக்ஷய ப்ரியாவை ஆச்சிரம வாசலில் வைத்து மீண்டும் பார்த்தது...
இவர்கள் தான் தன் மனைவியின் குடும்பம் என அவன் ஊகித்தது...
அதனை உறுதிப் படுத்தவே அன்றிரவு பார்டிக்கு தர்மலிங்கம் என்ட் விக்ரமை அழைத்தது..
ஆதவின் ஊகத்தை உண்மை ஆக்குவதை போலவே இருவரும் பங்ஷனுக்கு வராமல் போனது; அனைத்தும் அரங்கேறி முடிந்தன...
தொடரும்...
தீரா.