அத்தியாயம் 35
சமயலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் அக்ஷய ப்ரியா..
திடீரென தன் இடையில் உரோமம் நிறைந்த கரமொன்று ஊர்வதை உணர்ந்தாள் பாவை. அது வேறு யாருடையதாக தான் இருக்கும். சாக்ஷாத் நம்ம ஆதவினுடையதே...
அவன் தான் என உள்ளம் அடித்துக் கூறினாலும் திடீரென்ற அவனின் செயலில் உடல் வாரித் தூக்கிப் போட்டது பெண்ணவளுக்கு...
இரு கைகளாலும் அவளது இடையை சுற்றிக் கொண்டவன் கதகதப்பான அவளின் கழுத்துக்கடியில் நாடியை குற்றி பின்னாலிருந்து அவளை அணைத்திருந்தான்.
"என்ன தவிர எவனாலும் உன் நிழல கூட நெருங்க முடியாது. அப்படி இருக்கும் போது ஏன் இந்தப் பயம்?" என்று ஹஸ்கி வாயிசில் கூறியவன் அவளின் தேகத்தில் வாசம் பிடிக்க, பெண்ணவளுக்கு மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்து நின்றன...
அவளின் மாற்றத்தை உணர்ந்தவன் இன்னும் அவளினது வெற்றிடையில் அழுத்தத்தை கூட்டி கழுத்தில் முத்தம் வைத்தான்...
மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டவள் தன் கையால் அவன் கையை கோர்த்திருந்தாள்...
தன் அருகாமையில் சிலிர்க்கும் தன்னவளின் செயலில் என்றும் போல இன்றும் அவனின் இதழ்கள் விரிந்தன..
"அக்ஷு..." என்றவன் அவளிடையில் தன் கைகளால் கோலம் போட அவனது சேட்டை அவளுக்குத் தான் சுகமான அவஸ்தையாகிப் போனது...
"ஆ..ஆதவ் " என்றவளின் சத்தத்திற்கு பதிலாக வெறும் காற்றே வெளியானது..
சிறிது நேரம் அப்படியே நின்றவள் தன் மோகக் கைற்றிலிருந்து அறுபட்டு திடீரென திரும்ப இன்னும் வசதியாகிற்று ஆதவிற்கு..
அவனோ உதட்டை வளைத்து சிரிக்க... வலிக்காமல் அவனின் வாயில் அடிபோட்டவள் "சிரிக்காதிங்க.." என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினாள்.
அதில் இன்னும் அவன் சத்தமிட்டு சிரிக்க போலிக் கோபம் கொண்டவள் "விடுங்க" என்றவாறு அவனின் கையை தட்டிவிட்டு போக எத்தணித்தவளை போக விடாமல் தடுத்திருந்தான் அவளவன்...
அக்ஷய ப்ரியாவோ முகத்தை திருப்பிக் கொண்டு உற்றென இருக்க அவனோ அவளை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்..
"பேபி...இப்படி க்யூட்டாலாம் ரியக்ட் பண்ணாதடி. மறுபடி ஒரு ரவுன்ட் போக வேண்டி வரும்.." என்று இருபொருள் பட தங்களின் இரகசிய மொழியில் அவன் பேச அவள் நாணத்தில் தலை குனிந்தாள்...
தன்னவள் வெட்கத்தில் கர்வமடைந்தவன் அவளை அப்படியே விட மனமில்லாமல் குனிந்து தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
இப்படி செய்வான் என எதிர்பாராத அக்ஷயா அவனின் கழுத்தை சுற்றி தன் கையை கோர்த்து அதிர்ந்து போய் அவனை பார்த்திருந்தாள்...
"பேபி..." என்றவன் அவளின் மூக்கில் முத்தம் வைக்க அவள் சிறு பிள்ளை போல கண்களை சிமிட்டினாள்...
இதற்கு மேலேயும் இவளை விட்டு வைத்தால் அவன் ஆதவில்லையே...
படிகளில் தன்னவளை ஏந்திக் கொண்டு சென்றவன் மஞ்சத்தில் அவளை கொண்டாடி தீர்த்தான்...
நல்ல வேளை இன்று வேலை செய்பவர்கள் யாரும் வந்திருக்கவில்லை...
...
திருமணம் முடித்த நாளிலிருந்து தான் கொடுத்த கஷ்டங்களுக்கு ஈடாக அதனைவிட அதிகமாக அவளை தன் உள்ளத்தில் தாங்கி கூடலில் இன்பக்கடலில் தத்தளிக்க வைத்தான் என்றால், நேரில் குழந்தை போல பதமாக தாங்கினான் தன்னவளை தன் காதலினால்...
இந்த சில நாட்களாக ஆதவ் அவளுக்கு சுவர்க்கத்தை காட்டினான் என்றால் மிகா...
அவள் வாழ்கிறாள்!!தன்னவனுக்காக, தான் இழந்த அனைத்திற்குமாக வாழ்கிறாள் இன்பமாக, தன்னவன் ஆதவ் க்ரிஷுடன்!!!
......
காலையிலேயே தன் லீலைகளை காட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.
"ஹாய் டி அமர்த்திக்கா " என்ற பெண்ணின் பேச்சில் சட்டென திரும்பினான் விக்ரம்.
அங்கே வெள்ளை நிற ஸ்கேட்டிற்கு இளம் பச்சை நிற டோப் அணிந்து பக்கமாக தன் கைப்பையுடன் அழகி போல வந்து நின்றாள் அமர்த்திக்கா..
"ஹாய் டி..." என அவளும் வாழ்த்த அப்போது தான் கனவிலிருந்த மீண்ட விக்ரம் "ஹாய் டி அமர்த்தி..." என மற்றைய பெண்ணைப் போல கூற காரசாரமாக முறைத்து வைத்தாள் அமர்த்திக்கா. அவனோ பயந்து போய் திருதிருத்தான்.
"ஹேய்.. என்னைய டி போட்டு பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்..சொல்லிடு இவர்கிட்ட..." என்று நண்பியிடம் பேசுவது போல விக்ரமிற்கு கொட்டு வைத்தாள் அமர்த்திக்கா.
அதில் அவளை கலாய்க்க எண்ணி "இத எனக்கிட்ட சொன்னா நல்ல கோபம் வருகிற மாதிரி நாலு நல்லா சொல்லுவேன்ல" என்கவும்
"காலங்காத்தாலயே ஏன்ட வாயால வாங்கி கட்டாம இருக்க சொல்லு... இல்ல பதிலுக்கு நானும் டா போட்டு பேசிடுவேன்"
"எங்க பேசு பார்ப்போம்...டி..டி..டி...டி..டி..." என்று விக்ரம் வாயடிக்க
கோபம் எல்லைகடந்து சென்ற அமர்த்திக்காவோ "என்னடா சொன்ன டி யா..போடா டுபுக்கு.." என்று விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றாள்.
டா போடுவாள் என எதிர்பாராதவனுக்கு எக்ஸ்ரா காரத்துடன் டுபுக்கு என்ற ஏச்சு வேற வந்து விழ நெஞ்சு வலி வராத குறைதான்.
தன் ஒருகையால் வாயை பொத்திக் கொண்டவன் "அடப்பாவி.." என்கவும் அவள் விரல் நீட்டி அவனை திட்ட வர
அதற்குள் விக்ரம் "உன்ன போய் அமைதியான தங்க சொரூபினினு நெனச்சன் பாரு.. என்னைய சொல்லனும்" என்கவும்..
"உன்னைய யாரு.. " என்று அவள் பேச வருவதற்குள் பக்கத்தில் இவ்வளவு நேரமும் வாய்பார்த்துக் கொண்டு நின்ற நண்பி "அதென்ன சொரூபினி... " என்று தனக்கிருந்த முக்கியமான டவுட் கேட்க
விக்ரம் ஓரக்கண்ணால் அவளை பார்த்து "கேக்குறா பாரு டவுட்டு..." என்று தலையில் அடித்துவிட்டு "அது சொரூபம்க்கு பெண் பால்" என்கவும் அமர்த்திக்கா சிரித்துவிட்டாள்.
இப்போது அவளை ஓரக் கண்ணால் முறைத்தான் விக்ரம்.
அவளோ தன் சிரிப்பை நிறுத்தி விட்டு பதிலுக்கு மீண்டும் முறைத்தாள்.
"இது என்னடா..எக்ஸ்ட்ரா ஸ்பைசியா இருக்கு" என்றவன் மண்டையை சொரிய
அருகில் நின்ற பெண் "அதென்ன பெண் பா..." என்று கேட்க வர
"அம்மா தாயே..வாய மூடுறியா கொஞ்சம்...தோ அவன் ஃப்ரீயா தான் இருக்கிறான்..போமா...போயி அவன்கிட்ட கேளு உன்ட டவுட்ட" என்று கும்பிடு போட்டு அவளுக்கு வழி காட்ட..
அவளுக்கு டவுட் க்ளியர் ஆகனும் என்பதற்காக மற்றவனை நோக்கி நடையை கட்டினாள்.
அதில் விக்ரம்.."அடியே பைத்தியமே..." என தலையில் கைகளை தூக்கி வைத்துக் கொண்டே திரும்ப இன்னும் அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அமர்த்திக்கா.
"இவளுக்கு இப்போ என்னாச்சு...? ஆமா எதுக்கு இப்போ என்னமோ பத்து பச்சைமிளகாயை கடிச்ச மாதிரி நிக்கிற." என அவளிடம் கேட்க அவளோ இன்னும் அதே ஃபோசில் நின்றிருந்தாள்.
அவளை ஒருமார்க்கமாக பார்த்தவன் "யார்ரா இவ...இவள பார்த்தா நமக்கு செட்டாகுற மாதிரி தோனல..." என முனுமுனுக்க அது அவளுக்கு நன்றாக கேட்டது.
"ஆமா..நான் மட்டும் செட்டாகவே மாட்டேன் உங்களுக்கு.. ஆனால் அவ மட்டும் செட்டாகுவா.."
"எவ...?" என அவன் விழிக்க
"ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடிக்காதீங்க"
"அவனு சொல்லுறியே..அவளுக்கு பேரு வைக்கலயா என்ன?"
இது நாள் வரையில் தன்னுடன் ஒரு வார்த்தை கூட பேசாதவள் இன்று வாயடிக்கவும் அதனை முற்றுப்புள்ளி வைத்து முடிக்க விக்ரம் விரும்பவில்லை...
"அது சரி...ஒருத்தி பின்னால திரிஞ்சா பரவாயில்லை. நீங்க தான் எல்லா பொண்ணுக்கு பின்னாடியும் ஜொல்லு விட்டுட்டு திரிற ஆளாச்சே.." என வாயை கோணலாக்கி நக்கல் செய்ய...
அவளின் கிண்டல் அவனை சீண்டிப் பார்க்க "நான் எந்தப் பொண்ண பார்த்தா அம்மணிக்கு என்ன?" அதே கிண்டலுடன் அவளை அடிக்கண்ணால் பார்த்து வைத்தான் விக்ரம்.
அவளோ எதனையும் வெளிக்காட்டாமல் "எனக்கென்ன வந்தது...எக்கேடோ கெட்டுப் போங்க.." என முன்னே நடக்க அவளின் பொறாமை குணத்தை கண்டு கொண்டான் விக்ரம்.
அவனுக்கு இதுவே போதும் என்றிருந்தாலும் அவளை அப்படியே விட்டானில்லை... அவள் முன்னே வந்து "ஆமா ஏதோ பேரில்லா பொண்ண பத்தி கேட்ட... எவ அவ?...அழகான பொண்ணா? "என கண்ணில் தௌசன்ட் வோல்ட் பவர் பல்ப் வந்து ஒட்டிக் கொண்டது போல வழிந்து கொண்டு கேட்க அமர்த்திக்காவிற்கோ பத்திக் கொண்டு வந்தது.
அவளின் கோபத்தில் குளிர் காய்ந்தவன் "டெல் மீ..எப்படி இருப்பா...எனக்கு செட்டாவாளா?..."என விடாமல் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டிருந்தான்.
"வாயில நல்லா வருது..போடா எரும.." என அவனை தள்ளி விட்டு கோபத்தில் தன்னிடம் சென்றமர்ந்து கொண்டாள் அமர்த்திக்கா.
வட போச்சே என்ற ரீதியில் விக்ரம் நிற்க விக்ரமை சைட்டடிக்கும் சைட் டிஷ் ஒன்று அந்த பக்கம் வந்தது...
"ஹேய் மேன்...யூ லுக்கிங் ஹேன்சம் டுடே" என வழிய
"தெங்க் யூ" என்ற ஒற்றை வார்த்தையில் யாரென்றும் பாராமல் விக்ரம் முடித்து விட்டான் அமர்த்திக்காவின் மேலிருந்த மயக்கத்தினால்...
இவள் ஒரு மாடன் மங்கை. இந்த பெண் வந்தால் மட்டும் விக்ரம் ஓடி ஒழிந்து விடுவான்.
இல்லாவிட்டால் தான் "மேன்..ஹேன்சம்..பட்டர்..ஜேம்" என அள்ளி விட்டுக் கொண்டு இருப்பாளே...
அந்தப் பயம் தான் பயலுக்கு..
இருக்கப் போன அமர்த்திக்காவிற்கு இவளின் குரலில் புசு புசுவென மறுபடியும் கோபம் வந்து விட்டது. திரும்பிப் பார்க்க அங்கே அந்தப் பெண் ஏதோ தன் சொத்தைப் போல விக்ரமின் சேட் காலரை நோண்டிக் கொண்டிருந்தாள்.
விக்ரமை பார்த்து இன்னும் இன்னும் முறைக்க அவனோ அவளை பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான்.
தட தட வென அருகில் வந்தவள் மறுபடியும் விக்ரமை முறைத்து விட்டு அவனின் கோலரில் இருந்த அந்தப் பெண்ணின் கையை இழுத்து தட்டி விட்டாள்.
அப்போது தான் அவனும் அந்தப் பெண்ணையும் அவள் செய்து கொண்டு இருந்த காரியத்தையும் உணர்ந்தான்...
"அம்மோய் பேய்.." என அமர்த்திக்காவின் பின்னே போய் அவன் ஒழிந்து கொள்ள
"ஹேய் மேன்..இட்ஸ் மீ யா... சாரு" என்றாள் சாரு என்கின்ற சாருமதி.
"ஏய்..என்னடி...? வந்துட்டா சாரு மோருனு...ஓடுடி...இனி இவன்ட பக்கம் உன்ன பார்த்தேன்" என்று ஏற்ற இறக்கத்துடன் கூறிவிட்டு "சங்க அறுத்துடுவன்" என விரலால் கழுத்தில் கத்தி கொண்டு செய்கை செய்து காட்ட அவளோ துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடோடி விட்டாள்.
அவள் சென்று மறைந்த பின் அமர்த்திக்காவோ திரும்ப எத்தனிக்க விக்ரமோ அவளின் பேச்சிலும் செயலிலும் அதிர்ந்து போய் இன்னும் அவள் பின்னே ஒழிந்து நின்றான்.
அவனை இழுத்து தன்னிலிருந்து தள்ளிவிட்டவளை பார்த்து "பே..பேய்.." என உண்மையாகவே அவன் சுய நினைவிக்கு வராமல் பேச
"அடச்சீ போ அங்கால" என்று அவனை விரட்டியவள் மீண்டும் தன்னிடம் செல்ல அப்போது தான் விக்ரம் சுயத்தை அடைந்தான்.
தான் பேசியதில் தானே திரு திருவென முழித்தவன் தலையில் தட்டி விட்டு அவள் பின்னே சென்றான்.
"ஏன் பின்னால வர்றீங்க..?"
"சும்மா தான் வரேன்...ஏன் உன் பின்னால வரக்கூடாதா என்ன?" என்கவும் திரும்பிப் பார்த்தாளே தவிர பதில் பேசவில்லை.
"என்ன பதில காணோம்?"
"ஏன் உங்க கூட பேசனும்னு சட்டமா என்ன?"
"ஆமா..விக்ரம் சட்டப்படி பேசனும்..."
"ஐயே...அந்த அளவுக்கெல்லாம் நீங்க வேர்த் இல்ல. நகர்ரீங்களா..?" என்கவும்
"ஏன் வேர்த் இல்லை..இந்த விக்ரம் கூட பேச மாட்டோமானு அவ அவ க்யூல நிக்கிறா..."
"எங்க பார்ப்போம்" என அவனின் பின்னாடி பார்க்க அவளின் நக்கலை புரிந்து கொண்டவன் "என்ன கிண்டலா?" என்றவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவனின் பதில் வராமல் போக திரும்பியவளுக்கு அவனின் முக பாவனை சிரிப்பூட்டியது..
"ஏன் இப்போ பல்ல காட்டுற...?"என்று விக்ரம் கடுப்பாகி கேட்க
"ஆமா..ஆமா..நாங்க பல்ல காட்டினா மட்டும் சார் கடுப்பாகுவீங்க...ஆனால் அவ கூட மட்டும் நல்லா கெக்கபெக்கேனு பல்ல காட்டி பேசுங்க.." என அவள் அவனை தன் வட்டத்துக்குள் இழுக்க
"அம்மாடி காரப் பொடி..யார பற்றி பேசுறனு சொல்லிட்டு பேசுமா..." என்றான்.
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள் "அது தான் அந்த பார்க் பார்ட்டி அவ தான்" என முகத்தை திருப்பினாள்.
"அடடே..மகா ராணி நம்ப விதுவ சொல்லுறாளோ...ஹா..ஹா..இவள வச்சி செய்வோம்" என மனதில் நினைத்தவன்
"ஓ அவளா...பார்த்துட்டியா எங்க ரெண்டு பேரையும் ஒன்னா... இட்ஸ் ஓகே, பட் வெளில சொல்லிறாத..அவ தான் என் லவ்வர்.." என நகத்தை கடித்துக் கொண்டு விரலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்.
அவள் மனதை காயப்படுத்துகிறோம் என்றறியாத விக்ரம் விதுவை பற்றி "அவ அப்படி...அவ இப்படி" என பேசிக் கொண்டு நின்றான்...
அவன் பேச்சில் சட்டென கண்கள் கலங்க அவ்விடம் விட்டு வாஷ் ரூம் நோக்கி ஓடினாள் அமர்த்திக்கா.
தன் ரியக்க்ஷன் எல்லாம் முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே அவளில்லை..
"அதுகுள்ள எங்க போய்ட்டா மின்னல் மாதிரி?" என அங்குமிங்கும் தேட அவள் வாஷ் ரூம் கதவை அடைப்பதை கண்டுவிட்டான்.
அவள் வரும் வரை காத்திருக்க சற்று நேரத்தில் ரீப்ரெஷ் ஆகி வெளியே வந்தாள் அமர்த்திக்கா.
அவளருகில் சென்று "வாமா மின்னலு "என விபரம் தெரியாமல் அவன் கலாய்க்க அவளுக்கோ இன்னும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது..
தலை குனிந்து கொண்டே அவள் தன் கண்களை துடைக்க அப்போது தான் அவனுக்கு அழுகிறாள் என்பதே உறைத்தது.
"ஹேய் என்னாச்சு?" என கேட்க அவளோ திரும்பி நடக்க முற்பட்டாள்.
அவள் போக முடியாதவாறு கையை பிடிக்க அவளோ விதுவையும் அவனையும் தவறாக நினைத்து "ச்சீ கைய விடு" என உதற விக்ரமிற்கு சுருக்கென கோபம் வந்துவிட்டது.
"ஏய்..மைன்ட் யுவர் வேர்ட்ஸ்" என்றவன் கையை தானாக விட அவளுக்கு தான் இன்னும் வலித்தது..
"என்னைய தொடக் கூட உனக்கு பிடிக்கலைல?" என கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்க, ஸ்டாப்ஸ் முன் அவள் அழுவது பிடிக்காமல் மறைவான இடமொன்றுக்கு அழைத்துச் சென்றான் விக்ரம்.
அவ்விடம் வந்ததும் கையை விட்டவன் "நீ தான ஏதோ நான் தொட்டா தீட்டு மாதிரி தட்டிவிட்ட..இப்போ நீயே இப்படி பேசுற"
"ஆமா நான் அப்படி தான் செய்வேன். அதுக்குனு நீங்க விட்டுடுவிங்களா என்னைய?" என தன் மனதை திறக்க ஆரம்பித்திருந்தாள்.
விக்ரமோ அவள் பேச்சில் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாகினான்.
"அப்போ ஏதோ இருக்கு?" என அவன் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அவளிடம் கேட்க,
கண்ணீரை துடைத்தவள் "ஒரு மண்ணும் இல்லை..உங்களுக்கு தான் உங்கட லவர் இருக்குறாளே அவ கூட போய் என்ஜோய் பண்ணுங்க...என்ட் வன் மோர் திங், நீங்க ஜொல்லு விட வேற ஆளப்பாருங்க" என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
போகும் அவளையே திரும்பிப் பார்த்தவன் "அவ என் சிஸ்டர்" என்கவும் அவள் நடை தடைப்பட்டுப் போனது.
சிரித்துக் கொண்டே அவளருகில் வந்தவன் அவள் காதினருகே குனிந்து "என்ட் மை பெஸ்ட் பிரண்ட்" என்கவும் திரும்பி அவனை பார்த்தவள் அவனருகாமை ஏதோ செய்ய தள்ளிவிட்டு "நீ..நீங்க பொய் சொல்லுறீங்க" என்கவும்
"வேணும்னா அவளுக்கு கால் போட்டு தரேன் பேசு " என்று ஃபோனினை கையில் எடுக்கப் போக
"ஓகே கொடுங்க "என கையை நீட்ட, இதை எதிர்பாரதவன் "அடப்பாவி...அப்போ நான் சொல்லுறதுல நம்பிக்கை இல்லை" என்கவும்
"உங்க மூஞ்சிய பார்த்தா நம்ப தோனைல" அவளும் காலைவாரி விட்டு நடக்க
அங்கேயே நின்றவன் "நம்பிக்கை இல்லைல.. போடி போ... எனக்கு ஒரு சமர்த்தியோ விமர்த்தியோ கிடைக்காமலா போவா...உனக்கு முன்னாலயே அவளை கல்யாணம் பண்ணி பத்து குழந்தை பெத்துக்கல்ல நான் விக்ரம் ஜெயசந்திரன் இல்லை பார்த்துகோ..." என்றவன் "அச்சச்சோ..இப்ப அந்த விமர்த்திய எங்க போய் கண்டுபிடிப்பேன்..." என்று புலம்பிக் கொண்டே அவளுக்கு எதிரான திசையில் நடக்க
திடீரென அவனின் சேட் காலரை ஒரு கரம் இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்தது...
"என்னைய தவிர எவளயாச்சும் இனி பார்த்த..மவனே மர்கயதான்...உனக்கு இந்த அமர்த்தி மட்டுந்தான் இனி" என்ற, அமர்த்திக்கா திமிருடன் திரும்பி நடக்க ஒரு வேகத்தில் தான் செய்த செயலால் வெட்கம் வர வேகமாக சென்றுவிட்டாள்.
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான் விக்ரம்..
தொடரும்...
தீரா.