• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 36

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 36

ஹாஸ்பிட்டல் செல்ல தயாராகிக் கொண்டு நின்றவனின் மனம் முழுக்க அவளே வியாபித்திருந்தாள்.

எப்படியெல்லாம் அவளுடன் வாழ வேண்டும் என கனவு கண்டிருந்தேன். அனைத்தும் கலைந்து போய் விட்டதே.. கலங்கினான் தீக்ஷன்.

மறக்க நினைத்தாலும் அவனால் முடியாமல் போய்விடுகிறது.

மீரா வந்து அவனின் தோளைத் தொட நடப்புக்கு வந்தவன் தாயை பார்த்து முயன்று புன்னகைத்தான்.

"கஷ்டப்பட்டு சிரிக்க வேணாம்ப்பா"

தன்னை கண்டு கொண்ட தாயை இயலாமையுடன் பார்த்து வைத்தான்.

"உன்னுடைய மனசுல எத வச்சு இப்படி கவலை படுறேனு எனக்கு தெரியலப்பா..ஆனால் ஒன்னு..உனக்கு எப்ப என்ன சொல்லனும்னு தோனுதோ அதை இந்த அம்மா கிட்ட சொல்லுப்பா..உன்ன இப்படி பார்க்க என்னால முடியல" என்று வருந்தியவர் சென்று விட அவரை எப்படி கையாள்வது என தெரியாமல் அவனும் வருந்தினான்.

எத்தனையோ தடவை தன் அம்மாவிடம் சொல்ல முயற்சி செய்தும் அவனால் ஒரு வார்த்தை கூட கூற முடியவில்லை.

அவரிடம் கூறினால் அடுத்த கணம் அது ஆதவின் காதிற்கு சென்று விடும். அவனுடைய உயிர் தோழன் அல்லவா அவன்.. இவனின் இந்த சோக நிலைக்கு காரணம் கேட்டுக் கொண்டு இருப்பவனும் அல்லவா... அதனாலேயே தீக்ஷன் சொல்ல மறுப்பது.

ஆனால் தீக்ஷன் அறியவில்லை அவனுக்காக உயிர் நண்பன் வைத்திருக்கும் பரிசை...


...



வெள்ளை முழு நீளக்கை சேர்ட்டும் அதற்கு இளம் கபில நிற பேன்ட் அணிந்து கண்ணாடியின் முன் தன்னை சரி செய்து கொண்டிருந்தான் ஆதவ்.

என்றுமில்லாமல் இன்று கேசுவலாகவே தயாராகிக் கொண்டிருந்தான். அவனின் கட்டுமஸ்தான தேகத்திற்கு அந்த சாதாரண உடையும் அதன் நிறமும் பாந்தமாக பொருந்தி இருந்தது...

இவற்றை விட முக்கியமான விடயம் என்னவென்றால் அக்ஷய ப்ரியாவும் அங்கே தான் இருக்கிறாள்.

அவன் நின்று கொண்டிருந்த ட்ரசிங் டேபிலிலே அவள் சாய்ந்து கொண்டு தன்னவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

"எவ்வளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்கப் போற?" டக்கின் செய்து கொண்டே அவன் கேட்க

எழுந்து அவனருகில் வந்து சேர்ட் பட்டனை பூட்டிவிட்டுக் கொண்டே "என்னை விட்டா ஆயிசுக்கும் இப்படி பார்த்துட்டு இருப்பேன்" நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவள் பேச்சில் கவனம் வைத்துக் கொண்டு தன் சிகையை சரி செய்து கொண்டிருந்தவனின் கண்ணின் சிரிப்பின் சாயல்.

முழுவதுமாக தயாராகியவன் அவளை கவனியாதது போல செல்ல எத்தனிக்க திரும்பி பார்த்தவளுக்கு அவன் அப்படியே பாராமல் செல்ல கோபம் வந்தது.

"ஆதவ்..." என்று அவள் அழைத்தும் அவன் அப்படியே அடியெடுத்து வைக்க பற்களை கடித்தவள் "மாமா.." என்றழைக்கவும் அவன் நடையில் ஓர் தடுமாற்றம்.

அதனை பார்த்தவள் தொனியில் நக்கலுடன் "ஓய்..மாம்ஸ் என்னாச்சு...?"

அவள் கிண்டல் செய்கிறாள் என்பதை அவள் தொனியிலே கண்டு கொண்டவன் மீண்டும் முன்னேறினான் நடையில்.

"இவர.." என்று கோபத்துடன் ஓடிச் சென்று அவன் முன் நின்று அவனின் சேர்டை இழுத்து "டேய்...மாமா" என்கவும்

"என்னது டேயா...?" என்றவன் ஆச்சர்யத்துடன் அவளை பார்க்க

"ஆமா..டேய் தான்...அதென்ன கண்டுக்காத மாதிரி போறது" என்றவள் முகத்தை உற்றென்று வைத்திருந்தாள்.

"சேர்ட் கசங்குதுடி இந்த மாமன் பொண்டாட்டியே..." அவன் பேச்சில் மயக்கம்.

"கசங்கட்டும் எனக்கென்ன?" என்றவள் இன்னும் தன்னை நோக்கி இழுக்க, அவள் எதிர்பார்த்ததை எதிர்பாராத நேரத்தில் கொடுக்க நாடி இதழில் இதழ் பதித்தான்.

அவளோ சற்றும் எதிர்பாராத நேரத்தில் கிடைத்த முத்தத்தில் முதலில் அதிர்ந்தாலும் பின் வாகாக தன்னை இசைந்து கொடுக்கலானாள்.

சிறிது நேரம் தொடர்ந்த முத்தப் பயணத்தை அவளே முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள்.

"மாமா ஆஃபிஸ்க்கு லேடாச்சு " என்று அதிர

"ப்ச் ஏன்டி?" என மீண்டும் இதழ் நோக்கி குனிந்தான் ஆதவ்.

தன்னிலிருந்து அவனை நீக்கி "மாமா ஆஆஆஆ....டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்புங்க" என அவனின் தில்லாலங்கடி வேலைகள் பற்றி அறிந்தவளாக சிரிப்புடனே அவனை ஆபிஸ் அனுப்புவதிலே அவள் குறியாக பேச

"வர வர உன்னுடைய போக்கே சரி இல்லடி...இரு வந்து வச்சிகிறேன்" என்றவன் அவளை ஒரு மார்க்கமாக லுக் விட்டுக் கொண்டே நடக்க..

"ம்ம்...வச்சிகலாம் வச்சிகலாம்.." என்றவள் அவனை பார்த்து மீண்டும் சிரிக்க முறைத்துக் கொண்டே வெளியேறினான் ஆதவ்; முத்தம் பறி போன கடுப்பில்....ஹா..ஹா


.....


"ஆமா ஏன் மூஞ்சிய இவ்வளவு கேவலமா வச்சிருக்க?" ருத்ரன்.

ஆதவிடம் மெல்லிய புன்னகை அதையும் அவன் மீசை மறைத்து விட்டது.

தீக்ஷனோ ருத்ரனை தீப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இப்படி தான் மூவரும் இருக்கின்றனர்.

ருத்ரன் தீக்ஷனை கலாய்க்க ஆதவோ தன் வேலையிலும் அவ்வப்போது அவர்களின் பேச்சிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, தீக்ஷன் இதோ இப்படியே முறைத்துக் கொண்டிருக்கிறான்.

தீக்ஷனோ ஆதவை கண்டு ஒரு வாரம் ஆகிவிட்டது என பார்க்க வந்திருக்க அதே சமயம் ருத்ரனும் அந்தப் பக்கம் சைட் விசிட் வந்தவன் அப்படியே ஆதவை சந்தித்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறான்.

"உனக்கென்ன கவர்மெண்ட் சம்பளமா தரமாட்டிக்கு...ட்ரிம் மிசின் கூட வாங்க துப்பில்லாதவன் மாதிரி இப்படி காடு மாதிரி தாடி வளர்த்து வச்சிருக்க..." இதுவும் ருத்ரனே கேட்டது.

"வாய மூடிட்டு இரு என் கையால அடி வாங்கி சாவாம" என கடுப்படித்தான் தீக்ஷன்.

"அட என்னடா இவனோட பெரிய போராட்டமா இருக்கு...ஒரு மணி நேரமாக தேஞ்ச ரெகாட் மாதிரி இத தான் சொல்லிட்டு இருக்கான்...வாய தொறந்தா ஏதோ முத்து கொட்டிட போற மாதிரி நீ அமைதியாக இருந்தா நானும் அத மாதிரி இருக்கனுமா என்ன?" கூறிவிட்டு ஆதவை பார்த்து கண்ணடிக்க ஆதவோ கிண்டலாக சிரித்து வைத்தான்.

"இவன் எதுக்கு இப்போ இப்படி சிரிக்கிறான்... சரியில்லையே குமாருருரு..." என தனக்குள்ளே கவுண்டர் கொடுத்தவன் ஸ்லோ மோஷனில் திரும்ப

அங்கே பொறுமையிழந்த தீக்ஷன் அருகில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து ருத்ரனின் முகத்தில் ஊற்ற தொப்பாகி விட்டான் வாயடித்துக் கொண்டிருந்த ருத்ரன்.

இதனை எதிர்பாராத ருத்ரன் "அட பரதேசி..." என்ற வண்ணம் எழுந்து நிற்க ஆதவும் தீக்ஷனும் ஹை ஃபை போட்டு சிரித்துத் கொண்டனர்.

ஏற்கெனவே தீக்ஷன் செய்யப் போவதை அவன் க்ளாஸின் மீது கொடுத்த அழுத்தத்திலே ஆதவ் அறிந்திருந்தான்.

"பக்கி நீயுமாடா...ஓஓஓ இதுக்காக தான் இப்போ ஒரு மார்க்கமாக சிரிச்சியோ..." என ஆதங்கத்துடன் ருத்ரன் ஆதவிடம் கேட்க..

ஆதவ் "அவன தேஞ்ச ரெகாட் மாதிரினு சொல்லிட்டு நாரா கிழிஞ்ச தகர டப்பா மாதிரி நீ தான்டா பேசிட்டு இருந்த" என்கவும்

"உன் வேலைக்கு டிஸ்டர்ப் ஆ இருக்குனு சொல்லு...அத விட்டுட்டு ஏன் அதிகமா பேசுற?" என்றுவிட்டு "நல்லா இருங்கடா நான் போறேன்" என்றவன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று மீண்டும் வந்து ஒரு முறை தீக்ஷனை முறைத்து விட்டே சென்றான்.

ஆதவோ போகும் அவனைக் கூட கணக்கில் எடுக்காமல் தான் விட்ட வேலையை தொடர்ந்தான். அவனுக்கு அவ்வளவு வேலை கிடந்தன செய்வதற்கு...

சிறிது நேரம் இருந்த தீக்ஷனும் விடை பெற்று செல்ல, போகும் அவனையே உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ் க்ரிஷ்...


தொடரும்...


தீரா.