அத்தியாயம் 37
ஆதவினதும் அக்ஷய ப்ரியாவினதும் இரவுகள் காதல் மோகம் என போட்டிப் போட்டுக் கொண்டு வந்து அதன் உச்சத்தில் கூடலுடனும் ஒருதருக்கொருத்தருக்கான பாசத்துடனும் பிண்ணிப் பிணைந்த அழகான நீண்ட இரவுகள் ஆகின.
விக்ரமும் அமர்த்திகாவும் அன்று போலவே காரசாரமான காதலுடன் தங்கள் பொழுதுகளை கடத்தினர்.
இணையா காதல் ஜோடிகள் தங்களுக்கிடையிலான பிரிவில் என்றும் போலவே தூக்கமில்லாமல் தங்கள் இரவுகளை சுருக்கிக் கொண்டனர்.
இடைக்கிடையே விக்ரமின் தன் மற்றைய சகோதரிக்கான தேடல்கள் தொடரும்...
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அன்றைய நாள் பொழுது விடிந்தது...
.....
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவருக்கும் பொதுவாக விடுமுறை நாள்.
ஆதவ் ஏதோ முக்கியமான அலுவல் போலும் ருத்ரனுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
இடைக்கிடையே அக்ஷய ப்ரியா அவனின் கவனத்தை ஈர்க்க அங்கும் இங்கும் செல்வது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.
இருந்தும் என்ன பயன் அவன் திரும்பினான் இல்லை... ஆனால் அவளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
காலையிலிருந்தே இப்படி தான் இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனோ அவன் அவளை தவிர்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் பாரா முகம் வழக்கத்துக்கு மாறானதாக இருக்க அவளுக்கு கவலையாகியது.
கொஞ்ச நேரத்தில் அவளின் நடமாட்டமே இல்லை. மேலே அறையிற்குள் சென்றுவிட்டாள் போலும்.
அவனோ புருவமுடிச்சுடன் சமயலறையை எட்டிப் பார்க்க..
"என்னாச்சுடா மச்சி..?" இப்போது ருத்ரன்.
ஏதோ யோசனையில் "ம்ம்..நத்திங்" என்றவன் வரவழைத்து புன்னகைக்க மீண்டும் நண்பர்கள் இருவரும் தங்கள் வேலைக்குள் மூழ்கிப் போயினர்.
சிறிது நேரத்தில் தங்கள் அலுவல்களை முடித்தவர்களில்..
ருத்ரன் "என்னடா இன்னும் காணவில்லை "
"வருவாங்கடா..." என்று முடிப்பதற்குள் வீட்டின் ஹாலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்க ருத்ரன் மகிழ்ந்தான் என்றாள் ஆதவ் உணர்வற்று நின்றிருந்தான்.
"மச்சி.." என்ற ருத்ரன் சந்தோஷத்துடன் ஆதவை திரும்பி பார்த்து விட்டு கதவை திறக்க சென்றுவிட்டான்.
ஆதவோ மேலே தங்கள் அறையை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் திரும்பிவிட்டான்.
"வாங்க.. வாங்க..." என்ற ருத்ரனின் ஆர்பாட்டத்தில் கலைந்த ஆதவும் தன் பங்கிற்கு வந்தவர்களை வரவேற்றான்.
"எப்படிப்பா இருக்க ?" என்றவரின் கேள்விக்கு தலையசைப்புடன் புன்னகைத்தான்.
அவனின் சிரிப்பில் மயங்கியது அனைவரும் தான் எனினும் ஒருத்தி எக்ஸ்ராவாக மயங்கிவிட்டாள்.
பின்ன..!? அவளின் க்ரஷ் அல்லவா ஆதவ் க்ரிஷ்..
வந்தவர்கள் யாரென்று பார்க்கிறீங்களா நட்ப்ஸ்...? அவங்க வேறு யாருமில்லை.. நம்ம தர்மலிங்கம் என்ட் கோ தான்.
அந்த பெண் வேறு யாராகத்தான் இருக்க முடியும். நம்ம விதுவே தான்.
"ஹாய்..." என தன் பங்கிற்கு அவளும் வாழ்த்த
"ஹாய் டா..." என்றவன் மென்னகைத்தான்.
அவனுக்கு அவள் மச்சினிச்சி என்ற உறவிருந்தாலும் அதனையும் மீறி சகோதரத்துவமே தோன்றியது...
தன் மனைவி சாயலில் இருப்பவளை குழந்தையாகவே பார்த்தான் ஆதவ்.
அவளுக்கு யாரென்று தெரியாவிட்டாலும் அவனை பற்றி தந்தை வாயிலாக கேள்விப்பட்டவளுக்கு க்ரிஷ் க்ரஷ் ஆகிப் போனான்....ஹா..ஹா...
அவனின் நேர்மையிலும் நேர்த்தியிலும் அவளுக்கு ஓர் பிடித்தம் அவ்வளவு தான்.
"குட் மார்னிங் சார்.." என விக்ரம் கூற
"அட இனி என்ன சாரு மோரு..மச்சான்னே கூப்புடுங்க" என ருத்ரன் உலறிக் கொட்ட..ஆதவ் முறைக்க மற்றவர்கள் குழம்பிப் போய் ருத்ரனை ஏறிட்டனர்.
திருதிருத்தவன் "அவசரப்பட்டுடமோ..." என மனதில் எண்ணியவன் வெளியில் இளித்து வைத்தான்.
நிலைமையை சரி செய்யும் பொருட்டு "அவன் அப்படி தான்...வாங்க உள்ளே" என்ற ஆதவ் உள்ளே அழைத்து சென்று பின் பேண்ட் பாக்கெட்டில் கையை இட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
விதூர்ஷன ப்ரியாவோ "ஏதோ மெனுபங்சரிங் டிஃபோல்ட் போல" என போகிற போக்கில் ருத்ரனை கலாய்க்க
அவனோ இமேஜ் டேமேஜ் ஆகிறிச்சே என்ற ரீதியில் "அது வேற ஒன்னுமில்லமா..ப்ரேக் ஃபஸ்ட் இன்னும் சாப்பிடலயா..அது தான் தங்குகுகு சிலிப் ஆகிறிச்சு...அவ்வ்..." என்றவன் போய் அமர்ந்து கொண்டான்.
அவனை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து வைத்தாள் விது.
அவளின் வாயை பொத்தி நல்ல அண்ணனாக அழைத்து சென்று அமர வைத்தான் விக்ரம்.
கையினால் கும்பிடு போட்டுக் காட்டிய ருத்ரன் "வாய மூடிட்டு இருமா" என்று கண்களினால் இறைஞ்சினான்.
பின்ன அவன் ஓர் போலிஸ் அல்லவா.. பார்க்கிற நேரம் எல்லாம் இதை வைத்து இவள் கலாய்த்தால்..? அதற்கு தான்...
அவளோ மீண்டும் சிரிக்க ருத்ரன் தலையில் அடித்துக் கொண்டான்.
அவர்களை குடும்பமே வேடிக்கை பார்ப்பதை பாவம் கவனிக்கவில்லை இரண்டும்.
ஆதவோ அக்ஷய ப்ரியாவையும் விதூர்க்ஷன ப்ரியாவையும் ஒப்பிட்டுப் பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
.....
முக்கியமான விடயம் பற்றி பேச வேண்டும் என விக்ரமை அழைத்தவன் தன் திருமணத்திற்கான சிறிய பார்ட்டி என தர்மலிங்கத்தையும் குடும்பத்துடன் அழைத்திருந்தான் ஆதவ்.
ஆனால் அவன் அழைத்ததற்கான காரணம் வேறு....
ஆதவின் இல்லத்தின் அழகை கண்குளிர பார்த்திருந்தனர் அனைவரும்.
அனைத்து கட்டுமஸ்தான வேலைப்பாடுகளும் பண்டையகால அரண்மனையை நினைவு கூர்ந்தன. ஆனால் என்ன இவனுடைய இல்லம் நவீன அரண்மனை போல வீற்றிருந்தது.
சிறிது நேரம் இருந்த அமைதியை கலைத்தவன் விக்ரமே..
"சார்..ஏதோ முக்கியமான விடயம்?" என்று கூற வருவதற்குள்
ருத்ரன் "என்ன விக்ரம் சார் நீங்கள்...? கொஞ்சம் பொறுமையாக இருங்க" என்கவும் அவனும் அமைதியாகிவிட்டான்.
பின்னர் தர்மலிங்கமும் ஆதவும் தங்கள் நண்பனின், அதாவது ஆதவின் அப்பாவின் பேச்சில் தொடங்கி தங்களின் தொழில் விடயத்திற்கு வந்திருந்தனர்.
விக்ரமும் ருத்ரனும் மாறி மாறி கலாய்தலில் நேரத்தை ஓட்டினர்.
சங்கவியோ சோர்வில் அமைதியாக இருந்துவிட்டார்.
விதுவிற்கோ ஓரிடத்தில் இருப்பது கஷ்டமாகிப் போக கொஞ்சம் வீட்டை சுற்றிப் பார்க்கலாம் என எழ எத்தனிக்க விக்ரமோ அவளின் கையை பிடித்து தடுத்து "எங்க போற?" என்கவும்
"டேய் நெட்ட கொக்கு..நீ தான் க்ளூ ஒட்டின மாதிரி ஒரெடத்துலயே இருக்கிறாய்னா நானும் அப்படியே இருக்கனுமா என்ன..? எனக்கு போரா இருக்கு" என்று கொட்டாவி விடுவது போல பாசாங்கு செய்தவள்..."அது தான் வீட்ட சுற்றி பாத்துட்டு வரலாம்னு போறேன்" என்றவள் செல்லப் போக விக்ரம் பேச்சுவாக்கில் அவள் கையை விடுவிக்க மறந்துவிட்டான்.
"டேய் விக்ரா கைய விடுடா" என்ற போதே அவனுக்கு தன் செயல் புரிந்தது. உடனே விட்டவன் "ராட்சசி" என்கவும் அவளோ மல்லுக்கு நின்றாள்.
"என்னடா சொன்ன தடிமாடு?" என்கவும் மீண்டும் திட்ட வந்தவன் அனைவரும் இருப்பதை பார்த்துவிட்டு "ஒன்னுமில்லமா..போமா..போ..." என்றான்.
அதில் அவளோ "அது " என்றுவிட்டு திரும்ப ருத்ரனோ பே..என அவளின் வாயாடித் தனத்தில் விழித்திருந்தான்.
"யோ..என்னயா பேய பார்த்த மாதிரி இருக்க..." என்கவும்
"உன்ன விட பேய் பரவாயில்லை" என மனதில் நினைப்பதாக வெளியில் சொல்லி விட
"என்ன...என்னயா சொன்ன...?" என அவனையும் விடாமல் சண்டைக்கு வர
"அம்மாடியோ...நான் ஒன்னும் சொல்லலமா" என்றவனின் கண் பயத்தில் அகல விரிய
கொஞ்சம் இரங்கியவள் "போனா போகுதேனு விடுறேன். ஆமா வரிங்களா என் கூட சின்ன ரவுன்ஸ்" என்று போலிஸ்காரனயே ரவுன்ஸிற்கு அழைத்தாள் விது.
"உன் பாடு திண்டாட்டம் தான்" என்ற ரீதியில் ஆதவும் விக்ரமும் ஒன்று சேர அவனை பார்க்க
"டேய்..இப்படி பரிதாபமா என்னைய பாக்காதிங்கடா...வேலைய பாருங்கடா" என்றவன் திரும்பி விதுவிடம் "நான் வரலமா தங்கம்...நீயே போய்ட்டு வா.." என்றவன் அச்சா பிள்ளையாக அமர்ந்து கொண்டான்.
எனக்கென்ன வந்தது என அவள் தன் பாட்டிற்கு சென்றுவிட்டாள்.
அவளின் குறும்புத் தனத்தை இதுவரையில் அறிந்திறாத ஆதவிற்கும் ருத்ரனுக்கும் அவளை பார்க்க தவறாக தோன்றவில்லை..மாறாக குழந்தையாகவே தோன்றினாள்...
ஒவ்வொரு இடமாக கீழே பார்த்து ரசித்து வந்தவள் அடுத்து படியேறி மேலே சென்றாள்.
அவள் போவதையே ஆதவும் ருத்ரனும் கவனித்து இருந்தனர்.
மேலே சென்று அதன் அழகை பார்த்துக் கொண்டே சென்றவளுக்கு கண்ணில் பட்டது ஆதவின் அறை...
ஒரே துள்ளளில் அறையை அடைந்தவள் கதவு திறந்திருக்க தலையை மட்டும் நீட்டி பார்த்தவளை அதன் கொள்ளை அழகு சுண்டி இழுக்க கண்ணில் வியப்புடன் உள்ளே சென்றாள் அங்கிருப்பவள் அறியாது...
உள்ளே சென்றவள் மயங்கி நின்றது ஒரு கணமே...அடுத்த கணம் அதிர்ச்சியில் விக்கித்து நின்றாள் பேதை...
கண்களை தேய்த்துவிட்டு மறுபடியும் பார்க்க மீண்டும் அது தான் இருந்தது. அப்படி எதை பார்த்தாள்...?
அவள் பார்த்தது அக்ஷய ப்ரியாவின் புகைப்படங்கள் ஃப்ரேம் அத்தனையையுமே...
"தன் புகைப்படம் இங்கே எப்படி...?"அவளுக்கு ஒரே குழப்பமாகிப் போனது.
"இதுவரையில் தான் சீலை கட்டியதே இல்லையே...அப்படி இருக்க இவை...?" விடை தெரியா புதிருக்குள் தள்ளப்பட்டாள் விதூர்ஷன ப்ரியா.
சுற்றும் முற்றும் அதிர்ச்சியுடன் கண்ணை சுழல விட்டவளுக்கு தென்பட்டாள் மாது ஒன்று.
பளிச்சென்ற இளம் சிவப்பு நிற சீலை கட்டி தன் நீண்ட கூந்தலை க்ளிப் இட்டு விட்டிருந்தவள் பின்னாலிருந்து பார்க்கவே சிலை போல அப்படி அழகாக இருந்தாள்.
பால்கனியில் அவள் திரும்பி நின்றிருந்ததால் விதுவிற்கு அவள் யாரென்று விளங்கவில்லை.
"யாரிவங்க...?"
ஆதவின் அறையில் இருப்பது வேறு யாராகத்தான் இருக்க முடியும். குழப்பத்தில் இருந்தவளுக்கு அது ஆதவின் மனைவியாக இருக்கும் என்பது புரிபடவே இல்லை.
ஒருவரின் நிழல் அக்ஷய ப்ரியாவை கலைக்க ஆதவோ என திரும்ப அங்கே நின்றவளின் தோற்றத்தில் அப்படியே கல்லாய் சமைத்து போய் நின்றுவிட்டாள்.
விதுவின் நிலையும் அதுவே...
இப்படி ஒரு நிலையை இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லையே.....
அதிர்ந்து போய் உணர்வு மறத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
சிந்திக்கக் கூட மறந்து இருவரும் அசையாது நின்றிருந்தனர்.
ஆனால் இருவரினதும் மனநிலை வேறாக இருந்தது.
விதூர்ஷன ப்ரியாவிற்கு அக்ஷய ப்ரியா என சகோதரி இருந்தாள் என்று தெரியும் என்பதால் "அவள் தான் இவள்" என மனம் அடித்துக் கூற அதிர்ந்து நின்றாள் என்றால் அக்ஷய ப்ரியாவோ அச்சு அசல் தன் உருவத்தை ஒத்து தன் முன்னே நிற்பவளை "யாரிவள்?" என்ற வண்ணம் பார்த்து வைத்தாள்.
"அ..அக்கா...என் அக்கா..அதுவும் உ..உ..உயிருடன்..?"அதிர்ந்தாள் விது.
முதலில் சுயத்தை அடைந்த அக்ஷயா "யா..யாரு நீங்க...?அதுவும் என்னைப் போ..போல" என இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க, விதுர்க்ஷன ப்ரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தன.
எத்தனை எத்தனை இரவுகள் தன் சகோதரியை நினைத்து தூங்காமல் புழுகென துடித்திருப்பாள். பெற்றவர்கள் வாயிலாக தன்னைப் போல இன்னொருவள் இருந்திருக்கிறாள் என்பதை கேட்டிருந்தவள் சிறு வயது புகைப்படத்தை அணைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் கதறி இருப்பாள்.
ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்தவள் இன்னொருவள் இருந்தும் இல்லாமல் எவ்வளவு துயரத்தை அனுபவித்தாள். இனி அவளில்லையே என்றிருந்தவள் கண் முன்னே இன்று...!!!???
அதிர்ச்சி ஆனந்தம் ஆகி கதறினாள் விது...
இனி தூரத்தில் வைத்து பார்க்க திராணியற்று "அக்கா....." என்று ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் அந்த இரட்டை தங்கச்சி.
"அக்காவா...?" என்று மீண்டும் அதிர்ந்தவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
இருந்தும் தன்னை கட்டிக் கொண்டு அழுபவளை கைகட்டிப் பார்க்க அவளுக்கு மனது இடம் கொடுக்கவில்லை.
ஆறுதலாக அவளை அணைத்தவள் பேசாமல் இருந்தாள்.
மூச்சுக்கு முந்நூறு தடவை அக்கா..அக்கா என்றவள் புகைப்படமாய் சிறுவயதில் பார்த்தவளை முழு மனுசியாய் உணரத் துடித்தாள்.
அவளை விட்டு நீங்கியவள் "அ..அக்ஷயா...இவ்வளவு நாளும் எங்க இருந்த...?" என்றவள் முகம் சிவந்து வீங்கி இருந்தது.
"என்னுடைய பெயர் எப்படி...?" என்றவள் அவளை குழப்பத்தில் பார்க்க...தன் இரட்டை சகோதரியின் நிலை அவளுக்கு வலியை தந்தது.
அக்ஷய ப்ரியாவின் முகத்தை தன் கையால் தடவிய மற்றையவள் "உன்ன மாதிரி இருக்க என்னைய பார்த்துமா உனக்கு இன்னும் புரியல...?".
இன்னும் அக்ஷயா ப்ரியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கு இப்படி ஒரு குடும்பம் இருந்தது என்று கேள்விபட்டிருந்தால் சரி புரிந்து கொண்டிருப்பாள். இவளுக்கு தான்...தான் ஒரு இரட்டை பிறவி என்றே தெரியாதே...
"அக்கா.." என மீண்டும் அழைத்தவளின் ஒற்றை விழி நீர் கன்னம் தொட்டுச் செல்ல "உன்னைய பிரிஞ்சு நாங்க எல்லாம் செத்துட்டோம்கா..." என மறுபடியும் அழுதாள்.
"எல்லோருமா...?" மீண்டும் மீண்டும் குழம்பினாள் பெண்ணவள்.
இவ்வளவு நேரமும் இவை அனைத்தையும் வாசலில் நின்று கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் அக்ஷூவின் ஆதவ்.
தன் மனைவியின் முகத்தில் வந்து சென்ற மாற்றங்கள் அத்தனையும் அவன் மனதை ரணப்படுத்தியது. அவளின் நிலை அவனை கொல்லாமல் கொன்றது. இவை அனைத்தையும் விட, இவர்களை பற்றி அறிந்து கொண்டால் தன் மனைவி தாங்கிக் கொள்வாளா...? என்பதே அவன் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்து.
.....
திடீரென திரும்பியவள் ஆதவை கண்டு கொண்டாள்.
அவனை கண்டவளின் மதி முகம் குழப்பத்திலும் பிரகாசமானது.
விதுவை விட்டு ஆதவிடம் விரைந்தவள் அவன் கையை பிடித்து "என்னங்க...இ..இவங்க என்னமோ சொ..சொல்லுறாங்க...எ..என்னையைப் போல இ...இவங்க...?"என்று சற்று இடைவெளி விட்டவள் "எனக்கு ஒ..ஒன்னுமே புரியலங்க..." என்றவள் பாவம் போல நின்றிருந்தாள்.
அவளின் உணர்வுகளை படித்தவன் போல அவனின் முகம் கசங்கி சிவந்திருந்தது...
அப்படியே பக்கவாடாக அவளை அணைத்தவன் தலையில் முத்தம் வைத்து பேண்ட் பாக்கெட்டினுள் இருந்த மற்றைய கையை எடுத்து அவளின் கன்னம் தாங்கி "அக்ஷும்மா...அவங்க என்ன சொல்ல வராங்கனு உனக்கு புரியலயாடா...?" என்கவும் அவள் "ம்ஹூம்" என மண்டையை ஆட்டி வைத்தாள்.
அவர்களின் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் பார்த்த விதுவிற்கு கண்களில் குளம் கட்டியது. அதில் ஒரு சொட்டு, விழி தாண்டி வடிய அதனை துடைத்துவிட்டவள் அவர்களை பார்த்து புன்னகைத்து நின்றாள்.
தன் சகோதரி எங்கோ சந்தோசமாக அதுவும் ஆதவின் மனைவியாக வாழ்ந்துள்ளாள் என்பதே அவள் மனதுக்கு இதம் கொடுத்தது.
"அ..அத்தான்.." என்ற விது வலியிலும் குறும்பாய் ஆதவை பார்த்து சிரிக்க அப்போது தான் அவளை இருவரும் கவனித்தனர்.
ஆதவோ கனிவுடன் விதுவை பார்த்துவிட்டு அக்ஷய ப்ரியாவை பார்த்தான். ஆனால் அவள் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் விழித்து நின்றாள்.
"அக்ஷு..." என்றவன் அவளை முதலில் தன் பக்கம் திசை திருப்பி அவளுக்கு தான் இருக்கிறேன் என்று உணர வைத்த பின்னே ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறி முடித்தான்.
அவளின் பிறப்பு பற்றி தான் கண்டுபிடித்த எல்லாவற்றையும் கூறியவன் அவளை பார்க்க அவளோ திக் பிரம்மை பிடித்தவள் போல அசையாதிருந்தாள்.
அவளின் எண்ணவோட்டங்களை கணித்தவன் போல அவனும் பேசாது இருந்தான். அவளுக்கு அவன் கூறியதை உணர காலம் தேவைப்பட்டது.
"அக்ஷும்மா..." என்றவன் அவளின் கன்னம் தாங்க கசந்த புன்னகை ஒன்றை சிந்தினாள். சிறிது நேரம் அப்படியே அவளை பார்த்து நின்றவன் "வா.." என்று கையோடு அவளையும் விதுவையும் அழைத்துவிட்டு கீழே படியிறங்கி செல்ல முதலில் நிமிர்ந்த விக்ரம், ஆதவ் சார்,அதுவும் விதுவுடன் இப்படி நெருக்கமாக என குழம்பிப் போனான்.
"என்ன..இ..இது...?" என்றவன் ருத்ரனை பார்க்க, அவனோ "என்ன விக்ரம்...எது.. ?" என அவனை போலவே கேட்டு வைத்தான்.
அவனை ஒரு மாதிரியாக பார்த்த விக்ரம் மறுபடியும் திரும்ப அங்கே அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தாள் விது...
"அப்போ இது..?" என்றவன் அதிர்ந்து முன்னால் பார்க்க அங்கே ஆதவுடன் இருந்தது அக்ஷய ப்ரியா...
முதலில் குழம்பியவன் நிதர்சனம் புரிந்த நேரம் உயர் மின்சாரம் தாக்கியது போல சமைத்து நின்றான்...
"பே..பேபி ஆஆஆஆஆ???" என்றெண்ணியவனின் விழிகளில் கண்ணீரின் தடம்.
எவ்வளவு பெரிய ஆனந்தம்...! தாங்க முடியாமல் எழுந்தே விட்டான் விக்ரம்.
அவன் எழவே தர்மலிங்கமும் சங்கவியும் அவனின் பார்வை சென்ற இடத்தை பார்க்க அவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்...
இறந்துவிட்டாள் என நினைத்திருந்த தன் குழந்தை உயிருடன்...!
நடப்புக்கு வர முடியாமல் நடப்பவைகள் அவர்களை சிலையாக்கியது...!
சங்கவிக்கோ பூமி தன் பாதத்தை விட்டு நழுவுவது போல் இருந்தது.
உயரழுத்தத்தில் பேச்சு கூட வராமல் நா சிக்கிக் கொண்டது.
அவர் மூச்சு வாங்கவே அனைவரும் நடப்புக்கு வந்தனர்.
"அம்மா..." விதுவே ஓடி வந்தாள் முதலில்.
அவரை கலக்கத்துடன் தாங்கியவள் "அம்மா..அம்மா.." என்கவும்..
"இ..இது...?" என்றவர் அக்ஷயாவை கண்கொட்டாமல் பார்க்க
விது "ஆமாம்மா..இது உங்க மகள் தான்...நம்ம அக்ஷயா ம்மா..." என்கவும் கண்களை அகழ விரித்தார்.
தர்மலிங்கத்திற்கும் அதே நிலையாகிப் போனது...
"என் பேபி..." என்ற விக்ரமின் பேச்சு அவளின் செவியை தீண்டவே அவன் பக்கம் தன் பார்வையை செலுத்தினாள் அக்ஷயா...
உடனே மின்வெட்டியது போல இத்தனை நாட்களும் தன்னை தொடர்ந்த கனவு நினைவுக்கு வர "அ..அண்ணா..." என மெல்ல முனங்கினாள்.
அவளின் அந்த முனங்கள் கூட விக்ரமிற்கு தெட்டத் தெளிவாக கேட்க அந்த வார்த்தை அவனின் மனதை ஏதோ செய்தது. என்னவென்று உணர முடியாத நிலையிற்கு தள்ளப்பட்டான்.
சந்தோஷமும் அதிர்ச்சியும் அனைவரையும் ஆட்கொள்ள நிசப்தம் நிலவியது அங்கே...
"அம்மா..என்னமா ஆச்சு?" என சங்கவியின் அமைதியில் விது கலங்க, மெதுவாக எழுந்த சங்கவி தான் தொலைத்த குழந்தையை நோக்கி சென்றார்.
அனைவரும் அவருக்கு வழிவிட்டு நிற்க கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் அக்ஷயாவை மெதுவாக தடவியவரை பார்த்தும் அக்ஷய ப்ரியா வெளியில் கலங்கவில்லை...
அவள் மனம் முழுக்க ஒருவன் பற்றி எண்ணமே. அசையாது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அழுத்தத்துடன் சிலையாகி நின்றாள் அக்ஷய ப்ரியா...
ஆதவின் மனைவி அல்லவா...!? அவனின் அழுத்தம் அவளையும் ஒட்டிக் கொண்டது போலும்.
"அ..அம்மாடி..." என்றவர் இத்தனை வருடங்களாக தான் தொலைத்த சந்தோஷம் கிடைத்ததில் அக்ஷய ப்ரியாவை கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுதே தீர்த்து விட்டார்.
அந்த சமயம் தன் தோள் மேலிருந்த ஆதவின் கை நழுவியதை உணர்ந்தவளின் முகம் இன்னும் உணர்வை தொலைத்தது.
.....
அவன் அறையில் அவன் மட்டுமாய் தனித்து நின்றான்.
தன் மனைவியின் மொத்த சந்தோஷத்தை கொடுத்துவிட்டு தன் சந்தோஷத்தை இழந்து நின்றான் பால்கனியில்...
ஆதவ்...!!
கம்பியை இரு கைகளாலும் பிடித்து நின்றவனின் கையின் அழுத்தம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே சென்றது.
அவன் மனம்முழுக்க அவனவளே வியாபித்திருந்தாள்.
அதனை கலைப்பது போல க்ளாஸ் விழுந்து நொருங்கும் சத்தம் கேட்டது.
சடாரென திரும்பியவன் அங்கே அப்படி ஒரு கோலத்தில் தன் மனைவியை எதிர்பார்க்கவில்லை.
கண்கள் சிவந்து மூக்கு நுனி விடைத்து கலையிழந்து நின்றிருந்தாள் அக்ஷய ப்ரியா.
அவளருகில் தவிப்புடன் வந்தவன் "என்னம்மா...எங்க எல்லோரும்...?" என்றவன் அவளுக்குப் பின்னே பார்க்க அங்கே யாருமிருக்கவில்லை.
குழம்பிப் போய் அவன் மீண்டும் தன் மனைவியை பார்த்து அவளின் தோளை தொட தொடவிடாமல் பின்னே நகர்ந்தாள் பெண்ணவள்.
புரியாமல் அவளை ஏறிட்டவன் "ஹேய்...எ..என்னாச்சுடா?"
அவளது விலகல் இப்போது அவனை வலிக்கச் செய்தது.
"என்னைய தொடாதிங்க..." என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் வந்து விழுந்தது கன்னத்தில். ஆனால் முகத்தில் அதே அழுத்தம்.
"அக்ஷு..." என்றவன் முதன் முதலாக அவளின் பேச்சில் அதிர்ந்தான்.
"முதல்ல வா..." என்றவன் அவள் கையை பிடித்து கீழே அழைத்து செல்ல முற்பட அவனின் கையை தட்டிவிட்டவள் வார்த்தை தீயாய் வீசினாள்.
"ஏன் அப்படியே அவங்களோட என்னையும் வழி அனுப்பி வைக்கவா..?"
"ஏய்..அதில்லடா.."
"பின்ன எப்படி...? நான் உங்களுக்கு தேவை இல்லைல...?" முகத்தில் சிறிய வலி.
அதனை பார்க்க முடியாமல் அவன் அவளை அணைக்கப் போக
"கிட்ட வந்திங்க இப்படியே எங்கயாச்சும் போய்ருவன்..." என்று விம்ப
"என்னடா பேசுற...? ப்ச்" என்று மீண்டும் நெருங்க அவள் விடவேயில்லை.
அவள் மறுக்க மறுக்க இழுத்து அணைத்தவன் எதுவும் பேசாமல் தன் அணைப்பில் இறுக்கத்தை கூட்டினான்.
அவன் நெஞ்சில் அடித்துக்கொண்டு "வி..விடுங்க...விடுங்க... அப்படியே போனு விட்டுட்டு வ..வந்துடிங்கல்ல..நானும் போவனு நெனச்சிட்டிங்கல்ல...?" என்றவளின் கண்ணீர் அவன் டீ சேடை நனைக்க அவன் அப்போதும் பேசவில்லை.
அவளின் கோபம் தணிந்து போகும் மட்டும் அமைதியாக இருந்தான்.
அவள் அடியை தடுக்கவுமில்லை அவன். அடித்து ஓய்ந்தவள் அவன் மேலே சரிய அவளின் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.
கொஞ்ச நேரத்தில் அடங்கியவள் அதே கோபத்துடன் அவனை தள்ளிவிட்டாள்.
முகத்தை அழுந்த துடைத்தவள் "இதற்காக தான் என்னைய காலைல இருந்து அவொய்ட் பண்ணுனிங்கல்ல..? நானே போறேனு சொன்னாலும் நீங்க என்னைய போக விட்டிருக்க மாட்டீங்க... இருந்தும் ஏன் என்னைய அவொயிட் பண்ணுனிங்க...?" இறுதி வசனத்தில் அழுதே விட்டாள் பேதை.
இவ்வளவு ஆழமாக தன்னை புரிந்து வைத்திருப்பவளை சிரிப்புடன் பார்த்து நின்றான் ஆதவ்.
அது தானே உண்மை...
அவளை அவளுடைய குடும்பத்திடம் ஒப்படைப்பதே அவனுக்கு முழு மூச்சாக இருந்ததே தவிர அவனை விட்டு செல்ல நிச்சயம் அவளை அனுமதித்திருக்க மாட்டான்.
இருந்தாலும் அவள் தன் தாய் தந்தை கிடைத்த சந்தோஷத்தில் போகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதுவும் சில நாட்களுக்கு என்றிருந்தாலும் அவளின் சந்தோஷத்திற்கு அவன் ஒரு போதும் தடையாக இருந்திருக்க மாட்டான்.
அவள் சில நாட்கள் தன் தாய் தந்தையுடன் இருந்து வருகிறேன் என்று கூறினால் அதனை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகவே அவன் அவளை கண்டுக்காமல் திரிந்தது. அது இவளை இந்த விதத்தில் தாக்கும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
அவனுக்கு அவளுடைய சந்தோஷம் முக்கியம்.
...
அவளை சுட்டி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் "நீ போறனு சொன்னாலும் நான் உன்னை தடுத்திருக்க மாட்டேன்" என்று கூற அவளுக்கு சுருக் என கோபம் வந்து விட்டது. அதில் வார்த்தைகளை தவற விட்டாள் அவனுக்கு வலிக்கும் என்பதை அறியாமல்.
"உங்கள விட்டுட்டு போறதுனா அது தான் என்னுடைய கடைசி நாளாக இருக்கும்" என்று கூற அவனோ ஆவேசத்துடன் அடிக்க கையை ஓங்கிவிட்டான்.
அதிர்ந்தவள் அதன் பின்னே தன் வார்த்தையின் விபரீதத்தை உணர்ந்தாள். அதில் கண்கள் கலங்கிப் போய் ஆதவை பார்க்க அவனோ நீட்டிய கையை இறக்கிவிட்டு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தலையை கோதிவிட்டவன் விறுவிறுவென பால்கனி சென்று நின்று கொண்டான்.
பயத்தில் அங்கேயே நின்றவள் பின் அவனருகில் சென்று பின்னாலிருந்து அணைத்தபடி "சாரி.." என்கவும் அவனது உடல் இறுகியது.
அப்படியே நிமிர்ந்து பார்த்துவிட்டு முன்னால் வந்தவள் அவன் முகத்தை தன் பக்கம் திருப்ப அவன் சலித்துக் கொண்டே மறுபக்கம் திரும்பினான்.
அதில் அவள் மனம் அடிபட்டுப் போனது...பின் கலங்கிய விழிகளுடன் "அ..அப்போ நான் போறேன் அவங்க கூட" என்றவள் மறந்து கூட அம்மா அப்பா என்று கூறவில்லை.
அதில் மனதுக்குள் சிரித்தவன் வெளியில் முகத்தை உற்றென வைத்துக் கொண்டு "போய்டுவியாடி...ஆங்...போவியா...?" என்றவன் முன்னேறிக் கொண்டே "இந்த வாய் தான அப்படி சொல்லுச்சு..." என்றவன் கீழுதட்டை இழுத்து அதனை கவ்விக் கொண்டான்.
அவளும் சுகமாக அதில் கரைந்து போனாள்.
தொடரும்...
தீரா.