• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 38

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 38

நீண்ட ஆழமான இதழ் அணைப்பிலிருந்து இருவரும் விலக அங்கே அவர்களுக்காக குடும்பமே காத்திருந்தது.

"போதும்..போதும்..பச்சக்குழந்தைங்க முன்னாடி இப்படிலாம் ரொமேன்ஸ் பண்ணக் கூடாது..." என்ற பேச்சில் கலைந்தனர் இருவரும்.

அக்ஷய ப்ரியா வெட்கத்தில் தலை குனிய ஆதவ் தலை கோதி இதழ்கடையோர புன்னகையுடன் நின்றிருந்தான்.

"நீ குழந்தை...? அத நாங்க நம்பனும்...?" என்ற வண்ணம் ருத்ரன் விதுவை மேலும் கீழும் பார்க்க

"என்னயா??? நக்கலா...???" என்று தன் கை முஷ்டியை இறுக்க

அதில் அலேட்டான ருத்ரன் "தெரியாம வாய கொடுத்துட்டன் மா. நீ குழந்தை இல்லை, பஜா.......ரி" என்றவன் தன் எட்டுகளை பின்னோக்கி வைத்துக் கொண்டே போக விது தான் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள்.

"டேடே....ய்ய்ய்..." என்றவள் அவனை துரத்த ஓட குடும்பமே சிரித்தனர்.

அக்ஷய ப்ரியாவிற்கு விதுர்ஷன ப்ரியாவை மிகவும் பிடித்துப் போனது. அது தன்னைப் போல உருவத்தில் அடாவடித்தனமாக இருந்தததால் இயற்கையாக வந்த பாசம்.

அவளின் முகத்தில் கனிவை பார்த்த ஆதவின் உள்ளம் நிறைந்து போய் இருந்தது.

தர்மலிங்கமும் சங்கவியும் அவளை ஏக்கத்துடன் பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அமைதியாக தலைகுனிந்து கொண்டாள்.

ஆதவோ காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்களுக்கு பார்வையாலே நம்பிக்கை ஊட்டினான் என்றால், அவர்களும் அவனுக்கு நன்றியை தெரிவிக்கும் முகமாக கண்களை மூடித் திறந்தனர்.

விக்ரம் அவளை கலங்கிப் போய் பார்த்து நின்றான்.

பின் அனைவருமாக கீழே செல்ல அங்கே இன்னும் சண்டை சச்சரவு நீங்கியதாக இல்லை.

விது ருத்ரனை போலிஸ் என்றும் பாராமல் செய்த தப்பிற்கு காலில் விழச் சொல்ல, அவனோ தன் கெத்தை விடாமல் கையை காலாக நினைத்து கெஞ்சிக் கொண்டிருந்தான். ஹா..ஹா..

"நான் ஒரு போலிஸ் மா...பிலீச் இந்த அண்ணன மன்னிச்சி விட்டுடுடா..."

"ஹா..ஹா..." என வில்லி போல இடுப்பில் கைவைத்து சிரித்தவள் "இந்த பாசமலர் படமெல்லாம் இங்க ஓடாது... மரியாதையாக மன்னிப்பு கேளு"

"வர வர மரியாதை தேஞ்சி அறுந்து குட்டிச் சுவரா போச்சு...ச்சே..." என்றவன் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாதது போல கையை பிடித்து இன்னும் மன்னிப்பு யாசித்தான்.

"யோவ்... எவ்வளவு நேரந்தான் இப்படி கெஞ்சிட்டு கிடப்ப...அதுக்கு பதிலாக மன்னிப்பை கேட்டுட்டு போவியா...அத விட்டுட்டு அண்ணனாம் தங்கச்சியாம்..."

"அத தான் நானும் சொல்லுறேன்...இப்படி ஒரு போலிஸ்காரனும் பார்க்காம கால பிடிக்க சொல்லுறது எல்லாம் ரொம்ப பெரிய தப்புமா..." என பாவம் போல நிற்க

"அடச்சீ விடு. போலிஸாம் போலிஸ்...வெளில சொல்லிறாத காரி...." என்பதற்குள்

"ப்ளீஸ்..இதுக்கு மேலே வேண்டாம்...அழுதுறுவன்..." என்று வடிவேல் பாணியில் டயலாக் அடித்தவனை முறைக்க நினைத்து தோற்றுப் போனவள் சிரித்து வைத்தாள்.

விக்ரமிடம் ருத்ரன் நண்பனாக பழகுவதால் இவளுக்கும் இயல்பாகவே ருத்ரனிடம் இந்தப் பேச்சு முளைத்திருந்தது.

ருத்ரனும் அதனை பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை .அவனும் சகோதரிக்கு மேலாக நண்பியாக எண்ணத் தொடங்கி இருந்தான் விதுவை...

இப்படி பார்த்துப் பழகிய அந்தக்கணமே அனைவரினதும் மனதில் இடம்பிடித்து விட்டாள் விதுர்ஷன ப்ரியா.

இவளுக்கு எதிர்மாறாக இவளின் இரட்டை விம்பம் இருந்தது. அக்ஷயா அமைதியால் அனைவரையும் சுண்டி இழுப்பவள். அதில் தடுக்கி விழுந்தவன் தான் எம் நாயாகனும்.
இன்னும் எழவே இல்லை...

ஆனால் விதுவிடம் தடுக்கி விழுந்தவன் தடம் மாறி எழுந்து விட்டான். அவனையும் எழாதபடி விழ வைப்போம்....ஹா..ஹா..


.....


ஆதவ் அனைவரையும் அவனுடைய இல்லத்திலே தங்க சொல்லிவிட அவர்களும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர். அவர்கள் ஒத்துக் கொள்ளக் காரணம் தன் குழந்தையை இனி அருகில் வைத்து பார்க்கவோ என்னவோ...!?

விக்ரம் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன் என எழுந்து சென்று விட்டான்.

அவனது மனம் தவித்துக் கொண்டிருந்தது. அக்ஷய ப்ரியா அவனிடம் சரிவர எதுவும் பேசவில்லை. அப்போது அண்ணன் என்றதுடன் சரி..அவளின் பேச்சு தடைப்பட்டு போனது.


.....


சங்கவி அக்ஷய ப்ரியாவை அணைத்துக் கொண்டு அழ அவள் தன் கணவனின் நினைவில் கல்லாய் நின்றாள்.

அவரின் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நினைவுக்கு கொண்டுவர தன் தாயை குனிந்து பார்த்தாளே தவிர பேசவில்லை.

அவளிடம் தன்னிடம் உள்ளது போல உணர்வுகள் இல்லாது இருக்கவே நிமிர்ந்த சங்கவி... "அம்மாடி...ஏதாச்சும் பே..பேசுமா...நா..நான் தான்டா உன்னுடைய அம்மா...உன்னை பெத்தவடா...இத்தனை நாளும் நீ இல்லை என்றத ஏற்க முடியாமல் மனசுக்குள்ள வச்சுகிட்டு புழுங்கி புழுங்கி செத்துண்டன்டா...இனி அது எனக்கு வேணாம்மா...அம்மா கூட வந்து விடுமா..." என்றவரின் கடைசி வசனத்தில் விலுக்கென அவரை பார்த்தவளின் முகத்தில் மருந்துக்கு கூட கவலையின் சாயல் இல்லை...

"என்ன வார்த்தை கேட்டுவிட்டார்...?" என்றெண்ணியவள் அவரிடமிருந்து அடி நகரவே அங்கிருந்தவர்கள் அவளின் முகம் பார்த்தனர்.

அவளோ கசந்த புன்னகை ஒன்றை வெளிவிட அனைவருக்கும் ஏதோ போல் இருந்தது...

இவ்வளவு நேரமும் அமைதியின் மொத்த உருவமாய் நின்றவள் முதல் தடவையாக வாயை திறந்து பேசினாள்..."என்ன சொன்னிங்க...உங்க கூட வரவா...?" அவளின் பேச்சில் தடுமாற்றம் இல்லை, திக்கல் இல்லை, மாறாக தெளிவாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவளின் கேள்வியில் தாயுள்ளம் அவள் சொல்ல வருவதறியாது மேலும் கீழும் தலையை ஆட்ட மீண்டும் உதட்டை வளைத்தவள் "இத்தனை நாளும் இல்லாம இப்ப மட்டும் எங்கிருந்து வந்தீங்க நீங்க எல்லாம்...?"

அக்ஷய ப்ரியாவின் இந்த அவதாரத்தில் அதிர்ந்தது மொத்த குடும்பமும்...

"என்னைய தொலைச்சது உங்க தப்பா? இல்லை என் தப்பா...?" என்கவும் அவள் சொல்ல வருவது யாருக்கும் புரியவேயில்லை ருத்ரன் உட்பட...

"தப்பு செய்தது நீங்க...செத்து போய்டேனு சொன்னத சரிவர ஆராய தவறிட்டிங்க நீங்க...அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்க கூட வரது...? மறுபடியும் என்னைய தொலைக்கமாட்டிங்கனு என்ன நிச்சயம்...?" என்று தான் இவ்வளவு காலமாக அனுபவித்த துன்பங்களின் ஆதங்கத்தில் பெற்றவர்களுக்கு வலிக்கும் என்பதையும் பாராமல் வார்த்தை கணைகளை தொடுத்தாள் அக்ஷய ப்ரியா.

"ஏ..ஏன்மா இப்படி எல்லாம் பேசுற...?" என்றவர் துடித்துப் போய்விட்டார்.

இயற்கையாகவே மென்மையான உள்ளம் கொண்டவளை அது சரியாக தாக்கினாலும் அவர்களுக்கு தான் கூற வந்ததை தெளிவுபடுத்தவே நாடினாள் அக்ஷய ப்ரியா.

"ஓகே...ஏதோ தெரியாமல் தப்பு பண்ணிட்டிங்கனு வச்சிக்கலாம்...ஆனால் அதற்கான தண்டனைய நீங்க அனுபவிச்சு தான் ஆகனும்..."

அனைவரும் அவள் பேச்சில் கலங்கி விட்டனர். விது ஏதோ பேச வர அதை தடுத்தவள் "ப்ளீஸ் இங்க இருந்து போங்க...தயவு செய்து இனி என்னைய உங்க கூட அழைக்காதிங்க.." என்றவளது விழி நீர் கன்னத்தை தழுவிச் சென்றது.

"நீ..நீ...நான் பெத்த புள்ளடா.." இப்போது தர்மலிங்கம்.

"நான் நீங்க பெத்த புள்ள தான்...அத யாராலும் மாற்ற முடியாது... இருந்தாலும் உங்க கூட என்னால வர முடியாது.."

"இவ்வளவு நாளும் இந்த தாய் தந்தை பாசம் இல்லாம வளர்ந்துட்ட..இனியும் நாங்க வேணாமாடா...?" என அவரும் ஆதங்கத்துடன் கூறினார்.

தாங்கள் இல்லாமல் வளர்ந்தவள் என கூறினால், அப்போது சரி தங்களுடன் அவள் வர மாட்டாளா என பரிதவித்தார் அந்தப் பெற்றவர்.

ஏனென்றால் ஆதவே அவள் விரும்பினால் அவர்கள் அழைத்து செல்லட்டும் என்று இருந்தான்.

அது அவள் மேல் அவன் வைத்த நம்பிக்கையாலே... நிச்சயம் அவள் போக ஒத்துக்கொள்ள மாட்டாள் என கட்சிதமாக புரிந்து வைத்திருந்தான் அவளை. அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லையே...இதோ மறுத்து கூறுகிறேளே...

"ஹ்ம்.....யார் சொன்னா நான் தாய் தந்தை பாசம் இல்லாம வளர்ந்தேனு...? என் அம்மா அப்பா ரெண்டு பேரும் இங்க இருக்கும் போது நான் ஏன் உங்க கூட வரனும்...?" என்கவும் அனைவரும் அவள் யாரை கூறுகிறாள் என்று திகைத்திருக்க, அவள் கூறி பதிலில் அவர்களும் தான் "இப்படியும் காதலிப்பார்களா?" என்று சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

"எனக்கு என் அப்பா என்ட் அம்மா எல்லாமே என் ஆதவ் தான். அவரிடம் தான் முதல் தடவையா தாயின் அரவணைப்பையும் தந்தையின் பாதுகாப்பையும் உணர்ந்தேன்... என்னுடைய அடிமனசுல அவர் தான் என் அம்மா அப்பானு பதிஞ்சு போச்சு. இனியும் அத யாராலும் அசைக்கமுடியாது...அப்படி இருக்கும் போது எப்படி என் ஆதவை தனியே விட்டுட்டு வர முடியும்..?" என்று மூச்சுக்கு மூச்சு ஆதவ் ஆதவ் என்றவளின் பாசத்தின் ஆழம் அங்குள்ள அனைவருக்கும் புரிவதாவது...

ருத்ரனோ தன் நண்பனின் மனைவியை நினைத்து ஆனந்தமடைந்தான். இப்படி ஒரு மனைவி கிடைக்க தான் ஆதவின் மற்றைய உறவுகள் அனைத்தும் அவனை விட்டு சென்றதோ என்று தோன்றியது. அவனுக்கு இறைவனாக பார்த்து தேவதையை வரம் அளித்துள்ளான் போலும் என்று கூட நொடி நேரத்தில் நினைக்கத் தோன்றியது.

தன் நண்பனின் வாழ்வு சிறப்பாய் அமைந்ததில் கண் கலங்கிப் போனது அவனுக்கும்...

விக்ரமிற்கும் அதே நிலை தான். அவனுக்கும் தெரியுமே தன் சாரின் வரலாறு பற்றி...

"இதுக்குப் பிறகு என்னுடைய ஆதவை விட்டு வர சொல்லி என்னை கூப்பிடாதீங்க...இதுவும் உங்க வீடு மாதிரி தான்..எப்ப வேண்டுமானாலும் உங்க மகள் மருகனுடைய வீடுன்ற உரிமையில் நீங்க வர முடியும்..." என்றவள் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்ற ரீதியில் ஆதவிற்கு வேட்டு வைக்க கிளம்பிவிட்டாள்.

அவளின் பேச்சில் பதில் பேச முடியாமல் நின்றது என்னவோ தர்மலிங்கம் என்ட் கோ தான்...


.....


தன் சிந்தனையில் இருந்து நீங்கிய விக்ரமிற்கு கண்கள் சிவந்திருந்தன.

அவனை யாரோ அழைப்பது போல இருக்க கண்களை துடைத்துவிட்டு திரும்பி பார்க்க அங்கே நின்றவளை கண்டு இன்பமாக அதிர்ந்தான் விக்ரம்.

அவள் அக்ஷய ப்ரியா...

"வா..வாம்மா..." என்றவன் அவளும் அமைதியாக நிற்க மீண்டும் "எ..என்னவாச்சும் வேணுமாடா...?" என பரிவாக கேட்க சிறிது நேரம் அமைதியாக நின்றவள்...

"உ..உங்கள ஹக் பண்ணிக்கட்டுமாண்ணா..?" என்றவளின் கேள்வியில் விக்ரம் விக்கித்து நின்றிருந்தான்.

உணர்வுகள் மரத்துப் போய் பேச்சுகளற்று நின்றிருந்தவனை "அ..அண்ணா" என்ற கலங்கிய குரல் கலைத்திருக்க அடுத்த கணம் அண்ணனின் அணைப்பில் சுகமாக கரைந்தாள் அக்ஷய ப்ரியா.

"ஐ..ஐ மிஸ் யூ ண்ணா" என்றாளே பார்க்க விக்ரம் கண்களை சாரஸ் போல விழித்துக் கொண்டான்.

அவளோ கண்கள் கலங்க உதடு துடிக்க நின்றிருக்க விக்ரமிற்கு நா எழவில்லை.

"இ..இது தாண்ணா நான் சொல்ல வந்தது..." இலேசாக அவள் குரல் நடுங்கியதோ.

விக்ரமின் கண்கள் சந்தோஷத்தில் நீர் திரையிட்டிருந்தன.

அவனது அணைப்பில் இருந்து கொண்டே "எனக்கு சின்ன வயசில் இருந்து எதுவுமே தெ.. தெரியாது...அம்மா யாரு அப்பா யாருனே தெரியாது. கமலாம்மா தான் எல்லாமுமா இருந்தாங்க..."

அவள் யாரை கூற வருகிறாள் என புரிந்தது விக்ரமிற்கு அதன் விளைவாக கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

"வயசாக வயசாக தான்...நா..நான் அ..அநாதைனு தெரிஞ்சது..." என்றவளும் அந்த நாட்களின் சிந்தனையில் கலங்க அதே நிலையை அனுபவித்த விக்ரமும் மனதுக்குள் துடித்துக் கொண்டு நின்றிருந்தான். அவனது கைகள் நடுங்க தங்கையை இன்னும் தன் சிறகுக்குள் பொத்திக் கொண்டான்.

"அப்..அப்போ எல்லாம் ஏதோ கனவு என்னைய துரத்தும்ணா. அதுல வேறு யாருமில்லை..நீ..நீங்க மட்டுந்தாண்ணா இருப்பிங்க...எல்லாரும் என்னைய அ..அநாதைனு சொல்லும் போது மனசளவுல செத்துப் போய்ருவண்ணா...ஆனால் ஏதோ ஒரு மூலையில நீங்க இருக்கிங்கனு தோனும். நான் அ..அநாதையில்லைனு நினைப்பேன்...அப்போ எல்லாம் உங்கள மட்டுந்தாண்ணா நான் மிஸ் பண்ணினேன். இப்போ கூட" என்கவும் விக்ரம் மனதளவில் மரித்துப் போனான்.

அவளிடம் சிறு கேவல் வெளிப்பட விக்ரம் தான் துடித்துப் போய்விட்டான்.

அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. என்ன மாதிரியான பந்தம் இது...? புரிபடவில்லை...

"யார் தனக்காக வருவாள் என்று நம்பி இருந்தானோ அவளே அவன் கண் முன் அவனைப்போல தன் வரவிற்காக ஏங்கி இருந்திருக்கிறாள்..." என்பதை நினைக்க அவளை விட அவனுக்கு மனம் வரவில்லை...

அவளும் இவ்வளவு நாளும் தன்னிடம் இருந்த சுமை நீங்கியது போல இலேசான மனதுடன் அண்ணனின் மார்பில் அடைக்கலம் ஆகி இருந்தாள்.

"ஐ...டூ மிஸ் யூ டா பேபி..." என்றவனின் ஒற்றையழைப்பில் அவனிடமிருந்து விலகியவள் "இது போல தாண்ணா கனவுலயும் கூப்பிடுவீங்க" என்று சிறுபிள்ளை போல தலையாட்டி பேச விழிகளில் கண்ணீருடன் சிரிக்க நாடினான் விக்ரம்.

கனவு எனும் கயிறு இருவரையும் இறைவனின் அருளால் இணைத்து வைத்திருந்தது என்பதே இங்கு உண்மையாகிப் போனது.

இருவரும் தாங்கள் இழந்த சந்தோஷங்களை இனி பெற்றுக் கொள்ள நினைத்தனர்.

அவர்களை கலைக்கும் முகமாக அங்கு வந்து சேர்ந்தனர் ஆதவும் விதுவும் ஒன்று சேர.


தொடரும்...


தீரா.