• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 40

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 40


இன்று ஏனோ ஆதவிடம் பேசியதிலிருந்து விதுவின் உள்ளம் தவித்துக் கொண்டிருந்தது.

....


"நீ தீக்ஷனை லவ் பண்ணுற...ஏம் ஐ ரைட்..?" என ஆதவ் நேரடியாக விசாரணைக்கு வர விதுர்ஷன ப்ரியாவிற்கு மனது தட தட என அடித்துக் கொண்டது.

அதிர்ந்து போய் அவனை பார்த்து நின்றவளின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் இது தான் "இவருக்கு எப்படி இது...?"

அவன் தான் ஆதவ் க்ரிஷ் ஆச்சே. ஒரு விடயத்தை அக்குவேர் ஆணிவேராக ஆராயாமல் விடமாட்டானே...

எப்போது தன் நண்பனின் காதல் தூக்கி எறியப்பட்டதாக அவன் கேள்விப் பட்டானோ அன்றிலிருந்து தன் நண்பனை கண்ணுக்குள் வைத்து கவனித்து வந்தான் ஆதவ்.

அதில் அவனுக்கு கிடைத்த தகவல் தான் தீக்ஷன் ப்ரியா என்ற பெண்ணை காதலித்தது. அவனின் ஹாஸ்பிடலில் ருத்ரனை வைத்து விசாரித்ததில் ப்ரியா என்பவள் வேறு யாருமில்லை தன் மனைவி தான் என உருவகிப்பட்டிருந்தது.

அன்று தன் மனைவியின் மேல் காதல் வயப்படாத சமயம் எனினும் அவனுக்கு அக்ஷய ப்ரியாவின் நடத்தையை வைத்து தப்பாக நினைக்க முடியவில்லை.

எங்கோ ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு ஆணித்தரமாக புரிந்தது.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தான் அக்ஷய ப்ரியாவை பின் தொடர்ந்தது. அதிலும் அவள் இந்த ஹாஸ்பிடல் பக்கம் வந்ததாக எந்த தடயங்களும் இருக்கவில்லை.

முதன் முறையாக அன்று தான் (அத்தியாயம் 29 இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது...) ஏ.கே ஹாஸ்பிட்டலுக்கே வந்திருந்தாள் அக்ஷு.

அவள் தன் வேலை முடிந்து கிளம்பிய பின் அங்கே வந்தான் ருத்ரன். அவன் விசாரித்த மட்டில் அனைத்தையும் ஆதவிடம் கூற அவனுக்கு சந்தேகமாகியது.

ருத்ரன் கூறியதிலிருந்து விதுவை தீக்ஷன் அறைந்தது பின் அவளின் தாயார் மயங்கியது வரை அறிந்து கொண்டவனுக்கு அக்ஷய ப்ரியாவே விதுர்ஷன ப்ரியாவாக கூறப்பட்டிருந்தாள்.

தங்களுக்கு இருந்த வேலைகள் அதிகமாகிப் போக தீக்ஷனின் மேட்டரை தற்காலிகமாக மறந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.

அதற்குப் பிறகு தான் அக்ஷய ப்ரியா பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டான் ஆதவ்.

ஏற்கனவே உருவ ஒற்றுமையில் இருந்த இருவரினாலும் குழம்பிப் போய் இருந்த தாதி தப்புத் தப்பாக தகவல் தர ருத்ரனுக்குமே கடுப்பாகிப் போனது.

தான் குழம்பியது மட்டுமில்லாமல் அவனையும் அல்லவா அந்த தாதி குழப்பி விட்டிருந்தாள்.

அன்றிரவு தனிமையில் இருந்தவனுள்ளே பல கேள்விகள் முளைத்தன.

"அன்று தீக்ஷன் அறைந்தான் என்றால் அக்ஷுவின் முகத்தில் அதன் தடயம் இருக்கவில்லையே...!?" முதலாவது டவுட்.

"அக்ஷு தான் யாரும் இல்லாத பெண் ஆச்சே... அப்படி இருக்க அம்மா என்பவர் எங்கிருந்து வந்தார்...!?"

"ஓகே..அந்த ஆன்டிய (கமலாம்மா) தான் அம்மானு அந்த நேர்ஸ் நினைத்தாலும் அவருக்கு இருதய நோய் இல்லையே...!!?"(அவன் விசாரித்த மட்டில்)

இவ்வாறு பல கேள்விச் சிக்கலினுள் தள்ளப்பட்டவனுக்கு அடுத்த கணமே விடையும் கிடைத்திருந்தது.

"அப்படியானால் அக்ஷு மாதிரி யாரோ இருக்காங்க...மே பி ஏன் அது அக்ஷுட இழந்த குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்க கூடாது...!?"

சிறிது நேர ஆழ்ந்த சிந்தனையின் பின் "எஸ்... கன்ஃபோம் அது அக்ஷுட ஃபேமிலி மெம்பர்ஸ் தான்" என்று ஊகித்தவன் சர்வநிச்சயமாக அவள் இரட்டை சகோதரி என நினைத்திருக்கவில்லை.

இந்த புதிர்களே அவனை அக்ஷய ப்ரியா பற்றி மேலும் மேலும் ஆராய தூண்டியது. ஒரு கெட்டதிலும் நன்மை இருக்கும் என்பது இது தான் போல...

அதன் பின்னே ருத்ரனுக்கும் தெளிவுபடுத்தியவன், தன் இன்வெஸ்டிகேஷனை ஆரம்பித்திருந்தான்.

தீக்ஷனை இந்த நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும் என உயிர் நண்பனாக பல வேலைகளை செய்து இருந்தான் ஆதவ்.

அப்படியே அக்ஷய ப்ரியாவின் குடும்பம் பற்றி அவனது தேடல் தொடர்ந்து கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது அன்றைய காட்சி. விக்ரம், விது, சங்கவி என அனைவரும் காரில் சென்றது...

ஆக தன் நண்பன் நேசித்தவள் விது தான் என்ற முடிவுக்கு வந்தவனே இதோ இன்று அவளிடம் தன் கேள்விக் கணைகளை தொடுத்து நிற்கிறான்.

...


"தீக்ஷன் உன்னைய லவ் பண்ணி இருக்கான். ஆனால் இடையில ஏதோ நடந்திருக்கு...டெல் மீ வட் ஹெப்பன்ட்..?"

ஏதோ புரிபடுவது போல இருக்க "அ..அவர எப்படி உங்களுக்கு..?" என்று கேட்டவளின் விழியிலிருந்து கண்ணீர் வடிந்தது..

அவளின் கண்ணீர் ஆதவை சிந்திக்க வைத்தது...

"ஹீ இஸ் மை ஃப்ரெண்ட்" என்றதுடன் அவன் பதில் முடிந்திருந்தது.

ஆதவ் தீக்ஷனின் நண்பன் என்பது விதுவிற்கு புதிதல்லவா... இருந்தும் தன் அத்தானின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் அனைத்தையும் கடகட என ஒப்புவித்தாள்.

இவள் கூறிய மட்டில் இவளின் தப்பு எதுவுமே இல்லை. தீக்ஷன் தான் குழம்பிப் போய் தப்பு செய்து விட்டான் என்று தோன்ற தீக்ஷனின் நிலையை விளக்கினான் ஆதவ்.

"ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட்... ஃபொகெட் இட். அவன் ஏதோ குழப்பத்துல நீ தான் அக்ஷு என்று நினைச்சிட்டு இருந்திருக்கான். அதனால தான் அவன் தப்பா பேசி இருக்கிறான்" என்று கூற விது அந்த நாள் தாக்கத்தில் கண்ணீருடன் தலைகுனிந்தாள்.

அவளிடம் கேவல் வெளிப்பட தன் மனைவி சாயலில் இருப்பவள் அவளைப் போலவே அழவும் உண்மையாகவே ஆதவுக்கும் வருத்தமாகிப் போனது.

"அவன் செய்தது தப்பு தான். இருந்தும் அவன்ட நிலைல இருந்து யோசிச்சு பாரு. இங்க பாரும்மா. உருவத்துல ஒரே மாதிரி நீங்க ரெண்டு பேரும் இருந்ததால தான் அவன் கன்பியூஸ் ஆனானே தவிர உனக்கான அவனின் காதல் உண்மையானது. தன்னை விட்டு நீ போய்டா என்ற ஆதங்கத்துல தான் அவன் அப்படி பேசி இருக்கான். தென் கம் டு மை பொயின்ட்... இப்போ உன்னைய விட்டுட்டு அவன் வேற பொண்ண கல்யாணம் செய்து கொண்டா நீ அப்படியே விட்டுடுவியா...?"

சடாரென அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஏதோ அப்படியே நடந்தது போல முகத்தில் அத்தனை துன்பத்தையும் தேக்கிக் கொண்டு "நோ...நோ..நோ அத்தான்...எ..எனக்கு அவர் வேணும்.." என சிறுபிள்ளை போல ஆதவின் கையை பிடித்து உலுக்கி அழ, அவளின் நிலை ஆதவுக்கு கனிவையும் சிரிப்பையும் வர வைத்தது.

அவனின் புன்னகையில் அவளுக்குமே தன் நிலை பிடிபட கண்ணீரை துடைத்துக் கொண்டவள் உதட்டை பிதுக்கிக் கொண்டு மீண்டும் அழத் தயாராக

"ஹேய்... மறுபடியும் டேம்ம திறந்து விட்டுறாத..." என்ற ஆதவின் கிண்டலில் அழுகை போய் புன்னகைக்க இப்போது தான் அவன் அவளை அழைத்ததற்கான காரணம் கூறினான்.

"இது தான் மேட்டர்..." என்கவும்

"அ..அத்தான் வேர்க் அவுட் ஆகுமா...?"

"வேர்க் அவுட் ஆக வைக்க வேண்டியது உன் பொறுப்புமா. இப்போ நான் போகனும்.." என்றவன் அவளுக்கு ஆறுதலாக தலையசைத்துவிட்டு சென்று விட்டான்.

...


இதைத்தான் இப்போது விது சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிறிது நேரத்தில் ஆதவின் ப்ளேன் படி அனைத்தும் நடந்தேற இருக்கிறது.
தீக்ஷனை எப்படி எதிர்கொள்வதென சிந்தித்தவளின் முகம் செம்மை பூசிக் கொண்டது..

அவள் தனியே சிரித்துக் கொண்டிருக்க,
"உன்னைய நான் ஹாஃப் மெண்டல் என்றில்ல நினைச்சிட்டு இருந்தேன்... நீ எப்போ முழு லூசு ஆன...?" என ருத்ரன் சீரியஸாக அவளை பார்த்து வினவ,
அப்படியே தன் ரியேக்ஷனை உல்டாவாக மாற்றியவள், கண்கள் சிறுக்க மூக்குநுனி விடைக்க முசு முசுவென மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே திரும்ப,
இதுவரை அவளின் ரியெக்ஷன் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்து நின்றவனுக்குள் மணி அடிக்க,
"வன்..டூ..த்ரீ" என ரிவேர்ஸிலே ஓட்டம் பிடித்தான் ருத்ரன்.

"எங்கடா ஓடுட கொரங்கு...? நில்லுடா.." என இவளும் துரத்தி சென்று சட்டென ஒருவரில் மோதி நின்றாள்.

நிமிர்ந்து பார்க்க அங்கே விக்ரம் வேற்றுக் கிரக வாசிகளைப் பார்ப்பது போல இவர்களை பார்த்து வைக்க

"நெட்ட கொக்கு...தடிமாடு மாதிரி வழிய மறச்சு நிக்குற" என்கவும்

"யார பார்த்து தடிமாடுனு சொன்ன...? நானாடி தடிமாடு..."என்றவன் சேர்ட் கையை மேலே மடித்து விட்டுக் கொண்டே அவளின் கையை பற்றி பின்னால் முறுக்க

"ஆஆஆஆ...விடுடா பக்கி..." என வலியில் அவள் அலற

"வலிக்குதில்லை..இதுக்கு தான் சொல்லுறது வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோனு. இனி இப்படி பேசுவ...?"

"ஆஆஆ...ஆம்மான்டா இனி தான் இத விட ஜாஸ்தியாக பேசுவேன்..." என அப்போதும் அடங்காமல் வாயடிக்க அவ்விடம் வந்து சேர்ந்தாள் அக்ஷயா.

"அண்ணா என்னண்ணா...?" என இருவரினதும் போர் புரியாமல் கேட்க

"இவளுக்கு வாய் முதுகு வரை நீண்டு கிடக்குமா...அது தான் கொஞ்சம் தச்சு விடுவோம்னு பார்க்குறேன்..." என அவன் கூறிய விதத்தில் அக்ஷய ப்ரியாவிற்கு சிரிப்பு வர..

"ஆஆஆஆஆஆஆ"என அலறிவிட்டாள் விது.

விக்ரமும் அக்ஷுவும் ஒன்று சேர காதைப் பொத்திக் கொண்டு நிற்க அலறுவதை நிறுத்திவிட்டு விரல் நீட்டி இருவரையும் எச்சரித்துவிட்டு ருத்ரனை அடிக்க சென்றுவிட்டாள் விது.

மழை பெய்து ஓய்ந்தது போல அவ்விடமே நிசப்தம் ஆகிப் போக, விழி பிதுங்கிய அக்ஷய ப்ரியா காதிலிருந்து கையை எடுக்க அவளின் முழியில் சிரித்துவிட்ட விக்ரம் "இது ஜஸ்ட் ட்ரயிலர் தான் மா. இன்னும் நீ நிறைய பார்க்க வேண்டி இருக்கு" என கூற

"பாவம் தீக்ஷன் அண்ணா" என புது அண்ணனுக்காக அவள் பரிந்து பேசினாள்.

விக்ரமும் தீக்ஷனின் நிலையை எண்ணி சிரித்துக் கொண்டான்.


தொடரும்...


தீரா.