அத்தியாயம் 41
அன்று மாலை ஆதவ், அக்ஷு தங்கள் காரிலும், தர்மலிங்கம் என்ட் கோ ஒரு காரிலும் விக்ரமும் ருத்ரனும் ஜீப் இலும் சென்று கொண்டிருந்தனர்.
அனைவரும் திட்டமிட்டவாறே சரியாக அவ்விடம் வந்திறங்க, பெண்கள் தான் அவ்விடத்தை வியந்து போய் பார்த்திருந்தனர்.
கடற்கரை ஓரமாக அமைக்கப்பட்டிருந்தது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தற்காலிகமான கூடார வீடொன்று.
வரவேற்பு தளம் செங்கம்பளம் விரிக்கப்பட்டு மின்குமிழ் வேலைப்பாடுடன் அத்தனை அழகாக இருந்தது.
நீண்ட அந்த பாதையின் முடிவில் மேசையொன்று அழங்கரிக்கப்பட்டிருந்தது.
கடற்கரை மாலை மங்கும் இயற்கை காட்சியுடன் அவ்விடமே அலங்காரங்களுடன் இரம்மியமாக இருந்தது.
ஜில்லென்ற காற்று அனைவரையும் இதமாக தழுவிச் செல்ல விதுர்ஷனப் ப்ரியா மட்டும் மனது தடதடக்க நின்றிருந்தாள்.
அவளின் பதற்றம் புரிந்து அக்காவாக அக்ஷய ப்ரியா அவளை ஆறுதலாக அணைத்து விடுவிக்க சிறிது இதழை விரித்தாள் விது.
"அடடே இவளுக்கு இந்த ரியக்ஷன் எல்லாம் தெரியுமா..?" என அவளை இயல்பாக்க ருத்ரன் கலாய்த்தாலும் இந்தப் பயம் தேவையில்லாதது எனத் தோன்றியது அவனுக்கும்.
அருகில் நின்ற விக்ரமை பாவமாக இவள் பார்க்க அவளை சுற்றி வந்தவன் தோள் மேல் கை போட்டு "விதும்மா இந்தம் பயம் தேவையில்லாதது. நீ போல்ட் ஆன பொண்ணு... சட்டப்படி பார்த்தா தீக்ஷன் அத்தான் தான் இப்படி இருக்கனும்..." என கிண்டலடிக்க நாணத்தில் தலை குனிந்தாள் விது.
"வாரே வா.....இவ என்னடா இன்டைக்கு நவரச நாடகம் ஆடுறா. இது நல்லதுக்கில்லையே.." என ருத்ரன் யோசிப்பது போல பாவனை செய்ய "அண்ணா..." என்று காலை தரையில் உதைந்து சிணுங்கியவள் "பே...." என அவனை பார்த்து கூறி விட்டு ஆதவ் அக்ஷய ப்ரியாவின் பக்கம் போய்விட்டாள்.
இங்கே சிரிப்பது விக்ரமினதும் ருத்ரனினதும் முறையாகிப் போனது.
...
"என்னங்க சொன்னாங்க...?" என அக்ஷு ஆதவிடம் கேட்க
"தோ...பக்கத்துல வந்துட்டாங்கலாம்..." என கூறி முடிப்பதற்குள் அவ்விடம் வந்து சேர்ந்தனர் தீக்ஷனின் குடும்பத்தினர்.
தூரத்தில் இருந்து வரும் போதே அக்ஷய ப்ரியாவை கண்டு கொண்ட தீக்ஷனுக்கு இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து போன உணர்வு...
அருகில் வர வர தீக்ஷனின் நிலை அனைவருக்குள் சிரிப்பை தந்தாலும் அவனுக்கு மட்டும் ரணங்களாகிப் போன பொழுதுகள் அவை...!
அதுவரை அங்கிருந்த விது, தீக்ஷன் வந்திறங்கிய நொடி மாயமாக மறைந்திருந்தாள்.
பெரியவர்களை மீரா சங்கர் புரியாமல் பார்த்திருந்தனர்.
தீக்ஷனுக்கும் அதே நிலையே...
அவர்களை வரவேற்கும் முகமாக அக்ஷயாவினதும் விதுவினதும் தாய் தந்தை சிரிக்க, பதிலுக்கு அவர்களும் புன்னகைத்தனர்.
நண்பர்கள் ஆரத் தழுவி ஒருவரை ஒருவர் வரவேற்றாலும் இன்னும் தீக்ஷனின் முகம் தெளிவில்லை.
"என்ன மச்சி இப்போவே மாப்பிள்ளை முகம் கலைகட்டுது...?" இப்போது ருத்ரன்.
தீக்ஷன் முறைக்க ஆதவும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
இவர்களின் தில்லாலங்கடி வேலை தெரியாத மீரா சங்கரும் விழிக்க அவர்களை பார்த்து ருத்ரன் கண்ணடித்தான்.
வழமையாக நடக்கும் கூத்து என அவர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
அவர்களருகில் வந்த தர்மலிங்கமும் சங்கவியும் நலம் விசாரிக்க மாறி மாறி அங்கே பெரியவர்களுக்கான பேச்சு ஆரம்பம் ஆகிவிட்டது.
"எப்படி அண்ணா இருக்குறீங்க...?" என அக்ஷய ப்ரியா வினவ
அவளின் அண்ணா என்ற விளிப்பில் துடித்துப் போய்விட்டான் தீக்ஷன்.
அவள் அழைத்ததும் சரி தானே. இப்போது அவள் என் நண்பனின் மனைவி அல்லவா..!? இருந்தும் அவளுக்கு பதிலளிக்க தீக்ஷன் விரும்பவில்லை.
அங்கே நின்றிருந்தவர்களுக்கு அக்ஷய ப்ரியாவின் முகம் வாடுவது சகிக்க முடியாமல் இருக்க ருத்ரனே "டேய்..தங்கச்சி தான் பாசமா கேக்குறாள்ல..வாயில என்னத்த வச்சு அடச்சு வச்சிருக்க..?"என கேட்டான்.
இவர்களின் பேச்சில் கடுப்பாகிவிட்டான் தீக்ஷன்.
"யாருக்கு என்ன பதில் எப்ப சொல்லனும்னு எனக்கு தெரியும்... நீங்க எனக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை.." என ஆதங்கத்துடன் கூறியவன் திரும்பி போக எத்தணிக்க தீக்ஷனின் இந்த முகம் அவனின் தாய் தந்தை உட்பட அனைவருக்கும் புதிதானது.
ஆதவுக்கும் ருத்ரனுக்கும் நண்பனின் இந்த நிலைக்கும் இந்தப் பேச்சிற்கும் காரணம் நன்கு புரிந்தே இருந்தது.
தான் அவளை இழந்துவிட்டேன் என்பதே தீக்ஷனை இப்படி பேச வைத்திருந்தது.
"ஒரு நிமிஷம் அண்ணா..." என அக்ஷய ப்ரியா தீக்ஷனை தடுக்க ஆதவ் உட்பட அனைவரும் அவள் முகம் பார்த்து நின்றனர்.
"என் கூட தான் உங்களுக்கு பேச பிடிக்கல...பட் இவ கூட பேசுவிங்களா...?" என்றவளின் பேச்சில் விடயம் தெரிந்தவர்கள் மறைமுகமாக சத்தம் வராமல் சிரிக்க தீக்ஷனோ "என்ன பேசுறா இவ...?" என்ற வண்ணம் திரும்ப அங்கே அழகாக நேர்த்தியாக பட்டுப் புடவை உடுத்தி தளர விட்ட கூந்தலுடன் கையில் வளையலுடன் முகத்தில் மென்மையுடன் ஆளை அசத்தும் அழகில் நின்றிருந்தாள் விதுர்ஷன ப்ரியா.
அவளுக்கு குறையாத அதே அழகுடன் தான் அருகில் நின்றிருந்தாள் அக்ஷய ப்ரியாவும்.
இருவரும் ஒரே போலவே அழங்கரித்திருந்தனர்.
உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான் தீக்ஷன்.
தான் பார்ப்பது நிஜம் தானா...!? இல்லை தன்னுடைய பிரம்பையா!? என ஊகிக்க கூட முடியாதவாறு நிதர்சனம் அவன் கண்ணை மறைத்தது.
அதே அதிர்வுடன் தான் மீராவும் சங்கரும் நின்றிருந்தனர்.
அவனே சுயத்தை அடையட்டும் என சூழ்ந்திருந்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
திடீரென அடித்த பலத்த காற்றில் கண்களை மூடித் திறந்த தீக்ஷனின் கண் முன் தொடர்ந்தும் அதே காட்சி.
விழி நீர் விழவா வேண்டாமா என நினைத்திருந்த தருணம் அந்தோ பரிதாபம் அடித்த காற்றில் அநியாயமாக கண்ணிலிருந்து வழிந்து கன்னம் தொட்டுச் சென்றது.
"ஷீ...??ஷீ...??"என தன்னுள்ளே கேட்டுக் கொண்டவனுக்கு இத்தனை நாட்களும் நடந்த அத்தனையும் படம் போல விரிந்தன.
"இ..இவ என் ப்ரியாவா...?????" என பார்த்தவன் திரும்பி அக்ஷயாவை பார்க்க புன்னகை முகமாக நின்றிருந்தாள் அவள்.
மீண்டும் விதுவின் பக்கம் பார்வையை செலுத்தியவனுக்கு தெரிந்து போய்விட்டது இது தான் அவனின் ப்ரியா என...
எப்படி...எப்படி...??
அது தான் அவளது கன்னத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறதே இது காலும் அவன் இரசித்துப் பழகிய ஒரு சோடி மச்சம்...
இரட்டை சகோதரிகளிடம் இருந்த ஒரே ஒரு ஜாடை வேறுபாடு அந்த மச்சம் தான்.
அவனின் தவிப்பு காதலியின் மனதில் இத்தனை நாட்களும் இருந்த காயத்தை அழிக்க அவன் படும்பாடு அவளை வலிக்கச் செய்தது. அவளது கண்களும் அவனின் வேதனையில் கலங்க மனம் துடித்தது தீக்ஷனுக்கு.
என் தவறான எண்ணத்தில் எத்தனை பெரிய பாவம் செய்து விட்டேன்... என அன்று அவளை அறைந்ததை நினைக்க தவறவுமில்லை அவன்.
கண்ணீர் உதட்டை சஞ்சரித்த வேளையிலே முழுவதும் தன்னை மீட்டிக் கொண்டவன் வேதனையுடன் திரும்பி அக்ஷய ப்ரியாவை பார்க்க திக் என்றிருந்தது ஆதவிற்கு... அதுவும் போலியாக...
தீக்ஷன் அக்ஷய ப்ரியாவை நோக்கி தளர்ந்து நடக்க, முந்திக் கொண்ட ஆதவ் "டேய்..டேய்...நீ இன்னும் தெளியலயா...? ஷீ இஸ் மை கேல் டா...நீ லவ் பண்ணின பொண்ணு அங்க இருக்காடா..." என விதுவை கை காட்ட அக்ஷய ப்ரியா "அட..என்னங்க நீங்க...? அவர் வேற எதுக்கோ வராரு" என அவன் காதில் மெல்லப் பேச
"நீ வேற அக்ஷும்மா.. அவன் இருக்க எமோஷனல் கலவைல மறுபடியும் கன்பியூஸ் ஆகி விதுனு நினைச்சு உன்ன்ன்..." என்பதற்குள் ருத்ரன் அடக்க மாட்டாமல் சிரிப்பதை பார்த்தவள் பாய்ந்து ஆதவின் வாயை சட்டென மூட பாவமாக பார்த்து வைத்தான் ஆதவ்...
"அச்சோ.." என்றவள் தலையில் அடித்துக் கொள்ள அதற்குள் அவளருகில் வந்த தீக்ஷன் "சா...சாரிமா..." என சற்று முன் அவளிடம் பேசாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கேட்க
"என்ன அண்ணா நீங்க வேற...? அத நான் அப்பவே மறந்துட்டேன். இப்போ போய் அவள கவனிங்க..." என விதுவை காட்ட திரும்பி வேதனையுடன் அவளை பார்த்தான்.
அதற்கிடையில் அவர்களுக்கு தனிமையை கொடுக்க நாடி தனியே விட்டுச் சென்றவர்கள் இன்னும் நடப்பவை புரியாமல் நிற்கும் சங்கர் மீராவிடம் அனைத்தையும் கூறி தெளிவுபடுத்தினர்.
இவ்வளவு கஷ்டத்தையும் தங்கள் மகன் தங்களிடம் கூறவில்லையே என ஆதங்கம் கொண்டாலும் குழப்பமே ஆனாலும் அவன் அனுபவித்த வேதனையை நினைத்து பெற்றவர்கள் உள்ளம் தவித்துப் போனது. எப்படியோ இனி சந்தோஷமாக இருந்தால் அது போதும் என்றவர்கள் ஆதவிற்கு நன்றி கூறவும் மறக்கவில்லை.
அதன் பின்னர் அக்ஷய ப்ரியாவை நலம் விசாரித்தவர்களுக்கு அவள் அநாதையாக வாழ்ந்துள்ளாள் என்பதே பெரிய அதிர்ச்சி.
எனினும் இப்போது பெற்றவர்களை கண்டுவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் அவர்களும் தங்கள் சம்பந்தியுடன் பேச்சில் இறங்கி விட்டனர்.
ஆதவும் ருத்ரனும் முக்கியமான விடயத்தை பற்றி பேச யாருமற்ற இடம் நோக்கி ஒதுங்கிக் கொண்டனர்.
...
கண்களில் அழுததற்கான தடயம்...!
யார் தன் வாழ்க்கையை வசந்தமாக்கி சென்றாளோ அதே பெண்ணே அவன் வளர்த்த காதல் செடியை கசக்கி கருக செய்துவிட்டாள் என்றல்லவா அவன் நினைத்திருந்தான்.
ஆனால் இன்றைய உண்மை...!!!? அவனை சரியாக தாக்கியது.
அவளை எதிர்கொள்ள முடியாமல் அவள் முன் நின்று கண்ணீர் வடிக்க, பேசாமல் நின்றிருந்தாள் விது...
நா வறண்டு போய் வார்த்தை வராமல் சிக்கிக் கொண்டது தீக்ஷனுக்கு...
பேச நினைத்து நிமிர அவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
தாங்கமாட்டாது அவளை இறுக அணைத்திருந்தான் தீக்ஷன்.
ஆடவன் முதன் முதலாக தன்னை தழுவும் முதல் தொடுகை..
ஒரு நடுக்கம் அவளில் வந்து போக என்னவோ ஏதோ என பதறி விலகிய டாக்டர்..."சா..சாரி..." என்றவாறு அழ, அவன் அழுவது பொறுக்கமாட்டாது தலையை இடம் வலம் ஆட்டியவள் அவனுள்ளே புதைந்து போனாள்.
அவளிடம் அழுகை கூடிக் கொண்டே போய் கேவல் வெளிவர மனதில் சொல்லொன்னா துயரம் வந்து அமர்ந்து கொண்டது தீக்ஷனினுள்.
அதே வலியுடன் அவளை அணைத்தவன் "சாரி ஃபோர் எவ்ரிதிங் டா...என்னைய மன்னிச்சிடு...நா..நான் தெரியாம..ஏதோ...என்னை..நீ..நான்..." என்றவாறு அவன் பிதற்ற இன்னும் அவளின் அணைப்பு இறுகியது.
"எ..என்னைய விட்டு இதுக்கு பிறகு போய்றாத ப்ரியா...எ..என்னால அந்த வலிய தாங்க முடியாது..." என்ற தீக்ஷன், ஆடவன் என்பதை மறந்து வாய்விட்டு அழ அவனின் வலியை தன் வலியா நினைத்தவள் "நா..நான் எங்க போக போறேன்...உங்களுக்காக நான் எப்போதும் இருப்பங்க..." என்றவள் ஏங்க, காதலனாக அவள் முகம் கசங்குவது பிடிக்காமல் கன்னம் தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவனின் முகம் தான் இப்போது கசங்கி இருந்தது.
இத்தனை நாட்களும் அவளில்லாமல் தான் பட்ட துயரங்கள் அவனை மீள விடாமல் தடுத்தது...
"நான் செத்துட்டன்டா..." என்றவனின் கண்ணீர் மறுபடியும் பூமியின் பாதத்தை தழுவியது.
அழுகையில் உதட்டை பிதுக்கியள் அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க அன்று இது போல அவள் செய்ததற்கு தான் வார்த்தையால் அவளை காயப்படுத்தியை நினைத்து மறுபடியும் கலங்கி நின்றான்.
அவனின் மன சுணக்கம் எதுக்கானது என்பதை புரிந்து கொண்டவள் "அ..அன்னைக்கு நா..நானும் செத்துப் போய்டேங்க உங்கட வார்த்தைகள்ல..." என்றவள் தலை குனிந்து மௌனமாக கண்ணீர் சிந்தி பின் நிமிர்ந்து "ஆ
.ஆனால் அது ஏதோ மிஸ் அன்டஸ்டேன்டிங்ல தான ப்ளேம் பண்ணுனிங்க.. அதெல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துறலாம்...இப்போ இங்கே இது தான் நம்முடைய நிஜ வாழ்க்கை...அத அனுபவிச்சு வாழுவோம்... " என உணர்ந்து அவள் பேச...
தன் வயதை விட சின்னவள் எப்படி அனைத்தையும் புரிந்து கொண்டு பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுகிறாள். இந்த நிதானம் தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று தனக்குள் மருகியவன் அவளை காதலுடன் பார்த்து வைத்தான்.
அவனின் பார்வை வீச்சை தாங்கமாட்டாது விது என்ற சுட்டிப் பெண் தலை கவிழ அவளை தன் கைகளால் நிமிர்த்தியவன் மெல்லக்குனிந்து அவள் இதழில் தன் இதழ் பதித்தான்...
அனடொமியில் ஆதி முதல் அந்தம் வரை படித்தவனே முத்த அத்தியாயத்தில் புது பாடம் படித்துக் கொண்டிருக்கிறான்...
தொடரும்...
தீரா.