• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 42

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 42

அங்கேயே தீக்ஷனுக்கும் விதுவிற்கும் நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ப்ளேன் பண்ணியிருந்ததால் இதர தேவைக்களுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏதுமின்றி அனைத்தும் தயாராக இருந்தன.

தன் கண்ணனின் வாழ்க்கையை வளமாக்க வந்தவளை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தார் மீரா.

தனக்கும் இப்படியொரு மாமியார் இல்லாததை நினைத்து சிறு வருத்தம் அக்ஷய ப்ரியாவின் முகத்தில் வந்து போனது.

அதனை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் கவனிக்க வேண்டியவன் நன்கு கவனித்து இருந்தான்.

அழங்கரிக்கப்பட்ட மேசையில் அழகாக வீற்றிருந்தது சாக்லெட் ப்ளேவர் கேக் ஒன்று.

அதன் அருகில் ரிங் பாக்ஸ் இருக்க விதுவிற்கு குஷியாகிப் போனது.

இவ்வளவு சீக்கிரம் அனைத்தும் நடந்து முடியும் என விதுவும் சரி தீக்ஷனும் சரி கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

அனைத்தையும் சாத்தியமாக்கி தந்த ஆதவை இருவரும் நன்றியுணர்ச்சி பெருகிட பார்த்து வைத்தனர்.

வழக்கம் போலவே தலையை மட்டும் அசைத்து கண் மூடித்திறந்தான் ஆதவ்.

மெல்லிய இசை, ருத்ரனின் தயவால் அவ்விடத்தை ஒரு வித்தியாசமான சூழலுக்குள் தள்ளிவிட ஆனந்தத்துடனே ரிங்கை கையில் எடுத்த தீக்ஷன் அக்ஷய ப்ரியாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த தன்னவளுக்கு அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். விது நாணத்தில் நிற்க எட் த சேம் டைம், ஆதவும் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ரிங்குடன் தன் மனம் கவர்ந்த தேவதையின் முன் அழகாக காலை மடக்கி அமர்ந்து கொண்டான்.

இப்படி ஒரு தரமான சம்பவத்தை ஆதவை ஒட்டிக்கொண்டு திரிந்த ருத்ரன் கூட எதிர்பார்க்கவில்லை. தாங்கள் ப்ளேன் பண்ணியது வேறு அல்லவா என்று நினைத்தவன் திரும்பி விக்ரமை பார்த்தான்.

ஆதவை தீக்ஷன் உட்பட அனைவரும் மெச்சுதலாக பார்க்க அக்ஷய ப்ரியா தான் அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் கலங்கிப் போக

"ஹேய் பொண்டாட்டி!!! நீ சந்தோஷப்படுவனு நான் பார்த்து பார்த்து இத செஞ்சா இப்படி அழுறியடி...? இது நியாயமா...?" என்றவனை அக்ஷய ப்ரியா கண்ணீருடனே சிரித்து பார்த்தாள் என்றால் அங்கிருந்த மற்றவர்களுக்கு தான் ஆதவ் புதுவிதமாக தோன்றினான்.

அவர்களை பொருத்தமட்டில் ஆதவ் ஒரு கோபக்காரன். உணர்வுகளை வெளிக்காட்டாதவன். கர்வம் கொண்டவன்..மற்றவர்களுடன் தேவைக்கு மட்டுமே பேசுபவன் அதுவும் ம்ம், ஓகே, இஸ் இட்...என்பதோடு சரி.

ஆனால் இன்று இருப்பவன் முற்றிலும் மாறுபட்டவனல்லவா...

ஆனாலும் பிறவிக் குணம் மாறாது என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படித்தான் அவனும். தன்னவளிடம் மட்டுமே இப்படி பேசுகின்றான். மற்றவர்களிடம் என்றும் பழைய ஆதவ் தான்..

"இதுக்கே கண்ணை கசக்கினால் எப்படி பேபி...? உனக்காக இன்னொரு சப்ரைசும் வச்சிருக்கேன்" என்றவனை இன்னும் என்னவெல்லாம் செய்து தன்னை குற்றவுணர்வுக்குள் ஆளாக்கப் போகிறான் என்று தெரியாமல் மேலும் கலங்கி ஊமையாகிப் போனாள் அக்ஷு.

இவனின் காதலுக்கு தான் தகுதி தானா என ஏற்கனவே தன்னுள் மருகிக் கொண்டிருப்பவள் எங்கே அறியப் போகிறாள் அவள் அவன் மேல் வைத்துள்ள காதலின் ஆழத்தினை புரிந்து கொண்டதால் தான் அவன் இப்படியெல்லாம் அவளை தாங்குகிறான் என்று...

அனைத்தையும் மண்டியிட்டுக் கொண்டே தான் ஆதவ் பேசுகிறான். பின் "ஆன்டி கம் இன் சைட் " என்கவும் மறைந்திருந்து வெளிபட்டார் கமலாம்மா...

"அ..அம்மா..." என்றவள் அவரை மகிழ்ச்சியுடன் பார்க்க அவளின் அழைப்பில் துடித்தவர் என்னவோ சங்கவி தான்.

தன்னை இதுவரை தன் மகள் அம்மா என்றழைக்காதது அவரை பாதித்தே இருந்தது.

அதற்கெல்லாம் காரணம் தன்னை இத்தனை வருடங்களாக தனியாக்கிவிட்டனரே என்ற வருத்தம் மட்டும் தான் அக்ஷுவிடம். ஆனால் தன் பெற்றவர்களை கண்ட பொழுது அவளடைந்த ஆனந்தத்தை வெறும் வார்தையால் வடித்திட முடியாது.

சங்கவி சோர்ந்து போய் தர்மலிங்கத்தை பார்க்க அவரோ அவரை தோளோடு அணைத்து ஆறுதல்படுத்தினார்.

இருந்தும் கமலாம்மாவை கண்டு கைசேதப்பட்ட நிலையில் அவர்கள் பார்க்க அவரோ மெல்லச் சிரித்து வைத்தார்.

ருத்ரனை வைத்தே சற்று நேரத்தின் முன் அவரை அழைத்து வந்தான் ஆதவ்.

தன் மனைவி இன்று முழுமனிசியாக நிற்க காரணம் அவரல்லவா... அவளின் சந்தோஷத்தினை அவரும் அனுபவிக்க விடமாட்டானா என்ன..?

அவர் அவளருகில் வந்து வாஞ்சையாக தலையை தடவ அவரை மென்மையாக பார்த்து வைத்தாள் அக்ஷு.

இதற்கெல்லாம் இவருக்கு நான் என்ன செய்யப் போகிறேனோ என்று அவள் ஆதவை குனிந்து பார்க்க அந்த பார்வையில் இருந்த ஆயிரம் வினாக்களுக்கு பதிலளிக்க நாடிய ஆதவ் "ஜெஸ்ட் ஸ்டே வித் மீ ஒன்லி...தட்ஸ் இனாஃப் டு மீ " என்றவனை அடுத்த நொடி அதிரடியாக முத்தத்தில் நனைய வைத்துக் கொண்டிருந்தாள் ஆதவின் இல்லத்தரசி.

அவள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து ஆதவ் எதிர்வினையின்றி அவளது தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்தான்.

சுற்றம் மறந்து அவனின் முகம் முழுக்க முத்தமிட்டவள் அவனின் சேட்டை பிடித்து எழுப்பி விட்டு அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தாள்.

"அக்ஷும்மா காம் டவுன்" என்றதெல்லாம் அவளின் கருத்தில் படவில்லை. அவளுக்குள் கலந்திருந்தது எல்லாம் ஆதவ்...ஆதவ்...ஆதவ்...

அனைவரும் அவர்களை மனதளவில் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் மனைவி தன்னுள் பாதியாய் இருக்க, ஆதவிற்கு மட்டும் அவனவள் தன்னுள் முழுவதுமாகிப் போனாள்.

தன்னிலிருந்து அவளை விலக்கியவன் அவளின் முகம் தாங்கி நெற்றியில் முத்தம் வைத்து அவளது தளிர் விரலை பற்றி மோதிரத்தை அணிவித்திருந்தான்.

அவளால் தான் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

இன்னும் அவன் தனக்காக வைத்திருப்பவற்றை அவள் அறிந்து கொண்டால்..!?

தன் மனைவியுடனே திரும்பி தீக்ஷன் விதுவை பார்த்து கண்காட்ட இவ்வளவு நேரமும் ஆதவ் அக்ஷய ப்ரியாவின் காதலில் மெய்மறந்து இருந்தவர்கள் நிகழ்காலத்துக்கு வந்தனர்.

பின்னர் தீக்ஷன் விதுவின் கையை பற்றி மோதிரம் அணிய முற்பட ருத்ரன் ஆதவின் பார்வையில் "ஜஸ்ட் வெயிட்..." என கூற மொத்தப்பேரும் ருத்ரனை என்ன என்பது போல பார்க்க "இப்போ இங்கே உங்களுக்கு மட்டும் இல்லை நிச்சயதார்த்தம், இன்னொரு கப்பிலும் எவைலபில்ல இருக்காங்க" என்றவன் திரும்பி விக்ரமின் பக்கம் பார்க்க விக்ரமோ புரியாமல் தன் பின்னே பார்த்தான்.

யாருமில்லாமல் இருக்க திரும்ப அவனை பார்த்து ஆதவ், அக்ஷு, மற்றும் ருத்ரன் சிரித்து வைத்தனர்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனருகில் வந்த ருத்ரன் "அட பக்கி, உன்னய தான்டா நான் சொல்லுறேன். நீ என்னடான்னா பின்னால பாக்குற..." என கிண்டலடிக்க "மீ....?" என்றவனை பார்த்து மீண்டும் மண்டையை ஆட்டினான் ருத்ரன்.

பின் அவனுக்கு புரிய வைக்கும் முகமாக "அம்மாடி தங்கச்சி வெளிய வாம்மா..." என்றழைக்க இவ்வளவு நேரமும் ஒழிந்து கொண்டிருந்த அமர்த்திக்கா குழந்தை சிரிப்புடன் வெளியே வந்தாள். அவள் வந்த அந்தக் கணம் தான் அவளது தாய் தந்தையும் வந்திறங்கினர்.

அனைவரும் ஆதவை பார்க்க "நோ நோ...எக்சுவலி அமர்த்திக்காவ அழைச்சிட்டு வர்ரது மட்டுந்தான் என் ப்ளேன். அவட பேரெண்ச கன்வின்ஸ் பண்றதெல்லாம் ருத்ரன்ஸ் வேர்க்...இந்தப் ப்ளேன் என் ஸ்க்ரிப்ட்ல இல்லை" என கண்ணடிக்க குடும்பமே ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இளம் சிவப்பு நிற ப்ராக் சகிதம் நின்றிருந்தவளை விட்டு பார்வையை அகற்ற முடியாமல் நின்றிருந்தான் விக்ரம்.

அவளுக்கோ பெண்களுக்கே உரித்தான நாணம் தலை தூக்க உதடுகடித்து நின்றிருந்தாள்.

"ஓஹோ..." என கோரஸாக அனைவரும் கத்த விக்ரமிற்குமே வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஆண்கள் வெட்கப்பட்டுவதும் அழகல்லவா...

பின் நேரம் ஆவதை வழியுறுத்திய ருத்ரனின் பேச்சினால் அங்கே இரு ஜோடிகளும் மோதிரம் அணிவித்து தங்கள் உள்ளம் ஈர்த்த பெண்களை தங்களுள் சரிபாதி ஆக்கிக் கொண்டனர்.

இப்படியே இவர்கள் பொழுது கழிந்தது

.....

இரவின் நடுப்பகுதி வரை அங்கே தான் அனைவரும் அந்த பீச் ஹவுஸில் தங்கி இருந்தனர்.

தன் மனைவியின் ரசனைப் பார்வையில் அந்த இடத்தில் நிரந்தரமான பீச் ஹவுஸ் ஒன்றை நிறுவ வேண்டும் என ஆதவ் முடிவெடுத்திருந்தான்.

யாருமற்ற அமைதியான சூழல் அது...

புது ஜோடிகள் தங்களது இன்பத்தில் திளைத்திருக்க அங்கே தான் நிலாவை ரசித்த வண்ணம் கடலை கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதவின் மதி...

நிலவொளியில் மின்னி, தங்க நிறத்தில் காட்சியளித்த தன் நிலவை ரசித்த படியே அரவமே எழுப்பாது அவள் பின் வந்து நின்று கொண்டான் அந்தச் சூரியன்.

சிறிது நேரம் நின்றவன் அப்படியே கையால் அவளிடையை சிறை செய்து பின்னாலிருந்து அவளை அணைத்தான்.

திடுமென்ற அவனின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள் தலையை திருப்பி பார்க்க அங்கே புன்னகையுடன் நின்றிருந்தான் அவளவன்...

பின் அப்படியே முன்னால் திரும்பி அமைதியாக நின்றாள் அக்ஷய ப்ரியா.

"அக்ஷு..." கிறக்கத்தில் அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட அவளிடம் "ம்ம்..." மட்டுமே மங்கி ஒலித்தது..

"அக்ஷு.." என அவளின் காதினுள் மூக்கு நுனி நுழைத்து அவன் மீண்டும் அழைக்க ஒரு தடவை சிலிர்த்து அடங்கியது அவளது மேனி. அதில் இதழை விரித்த ஆதவ் இடையில் அழுத்தத்தை கூட்டினான்.

அதை உணர்ந்தாலும் அமைதியாக அவனுக்கு வழிவிட்டு நின்றிருந்தாள் ஆதவின் வரமாய் வந்தவள்.

சுக போதையில் அவன் அவளை தழுவ அப்போதும் அதே நிலை அவளுள்.

"இந்த நிமிடம் இப்படியே உறையாதானு இருக்கு அக்ஷு..." என ஆதவே மீண்டும் ஆரம்பித்திருந்தான்.

அவளும் அதை தானே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதில் அழகாக அவள் இதழ் விரிக்க இத்தனை அருகில் தன் மனைவியை வைத்து நின்றவனின் பார்வையில் இரசனை குடியேறி இருந்தது...

இருந்த இதமான மிதமான காற்றில் அவளின் சந்தோஷமும் அதிகமாகி கண்ணீராகி வெளியேற அது அவன் கையில் விழ சட்டென அவளை திருப்பியனுக்கு தெரியும் அவளினது ஆனந்தக் கண்ணீர் என. இருந்தும் "பேபி அடிக்கடி நீ அழுறடி. மிசிஸ்.ஆதவ் க்ரிஷ் அக்ஷய ப்ரியா இப்படி அழலாமா...?" என்றவனது கை அதன் வேலையை கட்சிதமாக செய்து கொண்டிருந்தது.

அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அவளும் சுகமாக அடங்கிப் போனாள் அவனுள்.

"எ..எனக்கு எப்பவும் நீ..நீங்க வேணும்..." என்றழ,
ஏன் இப்படி திடீரென பேசுகிறாள் என்றெண்ணியவன் "நான் எப்பவும் உன் கூட தானடா இருக்கேன்" என்றவாறு சிரசில் முத்தமிட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளை கேள்வியாய் நோக்கியவனிடம் "ந..நமக்கு குழந்தை வந்தாலும் நீ..நீங்க என் கூட தான் பாசமா இருக்கனும்" என்று மூக்கை உறிஞ்சினாள்.

அவளின் சிறுபிள்ளை தனமான பேச்சிலும் செயலிலும் ஆதவ் வாய்விட்டே சிரிக்க "சிரிக்காதிங்க...சொல்லுங்க..." என்கவும் மீண்டும் சிரித்தவன் அவளது மூக்கை செல்லமாக பிடித்தாட்டி "நீ என்ன எனக்கு சொல்லுறது...? ஆயிரம் குழந்தை பெத்தாலும் நீ தான் என் முதல் குழந்தை...உன்னைய போய் நான் எப்டிடி விடுவேன்...?" என்றவனின் பேச்சில் முழுவதுமாக கரைந்து போனாள் அக்ஷயா...

எக்கி அவன் உதட்டில் பசக் என இதழ் ஒட்டி அடுத்த கணமே விலகியும் இருந்தாள். அது காதலுடனான சைவமுத்தம்...

அந்த ஒற்றை முத்தமே ஆதவின் உடலில் இரசாயன தாக்கத்தை உண்டு பண்ணினாலும் கடினப்பட்டு அடக்கியவன் "இதெல்லாம் சீட்டிங்...இப்படி பசக்னு ஒட்டிட்டு எடுக்குறது எல்லாம் ரொம்ப தப்பு" என அவளின் குறுகிய நேர முத்தத்தில் ஏமாந்தவனின் கை தாபத்துடன் அவளது உதட்டை தடவியது.

அதில் அவளது உதடுதுடிக்க தன்னை அறியாமலே ஆதவின் சேட் காலரை பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தாள்.

அவனை கேட்கவும் தான் வேண்டுமா...அவள் இழுத்த வேகத்தை விட அவன் அதி வேகமாக அவள் பக்கம் போய் நின்றிருந்தான்.

தன் கையை உயர்த்தி மணிக்கட்டை பார்த்தவன் மெல்ல தன் கையால் அவள் மேனியில் கோலம் போட்டு கொண்டே வந்தான். இறுதியாக கையை இடையில் தவழ விட்டுக்கொண்டே தன்னை நோக்கி முழுவதுமாக அவளை இழுக்க அவளது உடல் அவனில் மோதி நின்றது.

கண்களை நேருக்கு நேராக சந்தித்தவன்

பலவந்தமாக உன்னை என் வாழ்வில் நுழைவித்தேன்...!!
பல பழி சொல்லி உன்னை வலிக்கச் செய்தேன்...!!
பேசாமல் என்னை கொன்றவளது ஒரு நாள் பேச்சில் விக்கித்துப் போனேன்...!!
பேதை மனமும் பேசா பல கதைகளை உன் விழிகளில் படித்தேன்...!!
மொழியறிந்தும் மௌனமாய் இருந்த உன்னில் என்னைத் தொலைத்தேன்...!!
இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்னை நான் உன்னில்...!!
மரிப்பேனா...!!?
இல்லை உன்னால் உயிர்ப்பேனா...!!?
பதில் சொல்லடி என் உயிரே...!!


என இத்தனை நாளும் தான் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை கவியாய் அவன் மொழிய விக்கித்து நின்றாள் பேதை...எத்தனை அழகான வார்த்தைகள்...

இன்னும் முடியவில்லை என்று தன் அக்மார்க் புன்னகையை சிந்தியவன்

கல்லாய் நின்ற என்னை கூட கரைய வைத்து கவி மொழிய வைத்த என் வாழ்வின் வரமாய் வந்தவளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!!

அழகான ஆழமான அர்த்தமுள்ள இதழ் முத்தத்துடன் முடித்திருந்தான் ஆதவ் க்ரிஷ்.

இதழில் அவளது கண்ணீரின் சுவை ருசித்தவன் மெல்ல அவளை விடுவிக்க எங்கே கண்ணை மூடினால் அவன் விம்பம் மறைந்து போய் விடுமே என்று அந்தக்கணப் பொழுதில் கூட தன்னவன் தன் கண்ணில் நிறைந்திருக்க வேண்டும் என இமை அசைக்காமல் நின்றிருந்தாள்.

ஆனால் கண்ணீர் வற்றவில்லை...
முகத்தில் வலி...வலி...
அதனை மீறியும் மனம் நிறைந்திருந்தது...

இப்படியே இறந்தால் கூட அந்த மரணத்தை சுகமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாள் அந்த பாசத்துக்கு ஏங்கும் பெண் பறவை...

கண்ணீரில் நிறைந்திருந்த விழியில் இதழ் ஒற்றி எடுத்தவன் "மை கேர்ள்..." என ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி வைத்துக் கொண்டு கூற அப்போது தான் அவளிடம் ஓர் அசைவு...

நடுங்கும் கைகளால் அவனின் முகத்தை தடவியவள் என்னவென்று சொல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள்...

"எ..எப்படி...?" இது மட்டும் தான் அவள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தை...

அதே புன்னகையுடன் அக்ஷய ப்ரியாவின் குடும்பம் பற்றி எப்போது அறிந்து கொண்டானோ அன்று அவன் செய்த முதல் வேலையே விதுவிடம் பிறந்த நாளை கேட்டு அறிந்து கொண்டது தான்.

அந்த கதையை சுருக்கமாக கூறி முடித்து அவளை பார்க்க அவள் முகம் அழுது சிவந்திருந்தது...

"இனாப்...இது தான் நீ அழுற கடைசி அழுகையாக இருக்கனும்...இனி அழுது பார்த்தேன்...!?" என அழுத்தமாக கூறினான்.

அதில் இனி அழுதால் நான் மனுசனாக இருக்க மாட்டேன் என்ற கோபம் மறைந்திருந்தது.

அவனுக்கு அவள் சிரிப்புடன் என்றும் வலம் வர வேண்டும். அவள் பட்ட துன்பம் போதும் என்றிருந்தது.

உதடு நடுங்க அழுகையை அடக்கியவள் அவனைப் போலவே அவனுக்கு தன்னை உணர்த்த நினைத்து

முதல் பார்வையிலே காதலில் வீழ்ந்தேன் உன்னில்...!!
இன்னும் எழ முடியாமல் தவிக்கிறேன்...!!
என் நிலை எண்ணி உன்னை மறக்கத் துணிந்தேன்...!!
மறக்க நினைத்து மரணித்துப் போனேன்...!!


கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் ஓடியது...அவனுமே கலங்கி நின்றான்.

உன் வார்த்தைகளில் காயப்பட்டேன்...!!

அவன் கண்களிலிருந்து சொட்டு விழி நீர் கன்னத்தை முத்தமிட்டது..

ஆனால் காதலால் காயத்தை மறக்கச் செய்தாய்...!!
தந்தையாய் பாதுகாத்து நண்பனாய் ஆறுதல் அழித்த என்னவனே...!!
இன்று உன்னில் தாயை கண்டு உன்னால் தாயும் ஆனேன்...!!


என அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைக்க அதிர்ந்தான் ஆதவ்...

என்ன கூறினாள் இப்போது...!?
இப்போது அவனால் மீள முடியவில்லை...ஏதோ புரிபடுவது போல இருந்தது அவனுக்கு..

"ஆ..ஆர் யூ சீரியஸ்...?" என வார்த்தைகள் தந்தியடித்தன...

"ம்ம்..." என தலையை மேலும் கீழும் ஆட்டியவள் அவன் கன்னத்தில் கை வைத்து "யூ ஆர் எ டாட் நவ்" என தாயாகிய சந்தோஷத்தில் அவள் கூற

அவனுக்கு கை கால் ஒன்றும் புரியவில்லை..."பே..பேபி...அ..அக்ஷு ஆர் யூ சுவர்" என எப்படியாவது அவள் ஆம் என்று கூற வேண்டும் என அவன் ஆசைப்பட அது போலவே புன்னகையுடன் ஆம் என்றாள் ஆதவின் மனைவி.

தாங்க மாட்டாது தலையை கோதி விட்டவன் அக்ஷய ப்ரியாவின் முகம் முழுக்க ஒரு இடம் விடாமல் முத்தமிட்டான்..

கண்களிலிருந்து கண்ணீர் தரையை தழுவ அப்போதும் அவளை விட்டானில்லை...

இறுதியாக அவளுக்கொரு அழுத்தமான முத்தம் கன்னத்தில் வைத்தவன் மண்டியிட்டு அமர்ந்தான்.

மெல்ல அவளின் சாரியை விலக்கியவன் அவளை நிமிர்ந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்ட குரலில் உடைந்து போய் "அக்ஷு...மை..மை பேபி..." என்றவனின் குரல் தழுதழுத்திருக்க அவன் தலையை தடவிவிட்டாள்.

அவனோ இன்னுமே பெரிதாகாத அவளின் வயிற்றில் மூச்சை இழுத்துக் கொண்டு முத்தமிட்டான்.

தன் மூச்சுக் காற்று கூட குழந்தைக்கு வலித்து விடுமோ என பயந்து போனான் அந்தத் தந்தை...

நீண்ட நேரம் அப்படியே தான் இருந்தான்.

அவனால் உருவாகியிருக்கும் பிஞ்சல்லவா...

தான் தந்தையாகி விட்டேன் என்பதே புது மாதிரியாக அவனை உணர வைத்தது..

தங்கள் காதலின் முதல் அடையாளம். ஆதவ் வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான்.

அவளும் அவனின் நிலையுணர்ந்து தன்னுள் புதைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் எழுந்தவன் "நான் உனக்கு கிப்ட் தரனும்னு நினைச்சிட்டு இருந்தேன்...ஆ..ஆனால் நீ எனக்கு உலக்கத்துலயே மிகப் பெரிய கிப்ட் தந்துட்ட...தெங்க் யூ...தெங்க் யூ சோ மச் அக்ஷு மா...லவ் யூ..." என மீண்டும் தன் லீலையில் இறங்கி விட்டான்.


தொடரும்...


தீரா.