“அது ஒன்னும் இல்ல, இங்க எம் கே பி நகர் பாலத்துக்கு கீழ ஒரு பர்ஷ் கிடைச்சுச்சு,அதுல இருக்கிற டீடைல்ஸ் பார்த்து தான் உங்களுக்கு போன் பண்றோம்” என்று அவர் சொல்ல
“அப்ப என் ஒய்ப் கிடைச்சுட்டாங்களா?” என்று அவன் கேட்க
“இல்ல சார் கொஞ்சம் நீங்க நேர்ல வரீங்களா?” என்று சொல்ல
“ஒரு நிமிஷம் மீராவை என்கிட்ட பேச சொல்லுங்களேன்” என்று அர்ஜுன் சொல்லவும்
“சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. இங்க ஒரு பொண்ணு பாலத்திலிருந்து கீழ குதிச்சு இருக்காங்க, அவங்க பக்கத்துல தான் இந்த பர்ஸ் இருந்துச்சு. அதனால தான் உங்கள கூப்பிடுறோம்” என்று அவர் சொல்ல
அர்ஜுனனுக்கு அந்த உலகமே இருண்டு விட, அவனின் உயிரை வேரோடு பிடுங்கி எறிவது போல் ஒரு வலி ..அதை அவனால் வார்த்தையால் சொல்ல முடியவில்லை
“என்னாச்சு” என்று நடுங்கி போய் அவன் கேட்க
“ப்ளீஸ் சார் கொஞ்சம் சீக்கிரமா வாங்க லேட் பண்ணாம”என அவர் சொல்லிவிட்டு போனை வைக்கவும்
அவனுக்கு யாரிடமும் சொல்ல தோன்றவில்லை வேகமாக வண்டியை எடுத்தான்..
“அப்பா” என்று மனிஷ் அவனைப் பார்த்து பயந்து போய் இருக்க
“மனிஷ் நான் சொன்னா நீ கேட்பியா,நீ வீட்டுக்குள்ள போய் யாழினி பெரியம்மா கூட இரு .. அப்பா வந்துருவேன்”என்று அவனை தூக்கி இறக்கிவிட
“சீக்கிரமா வாங்க அப்பா” என்று சொல்லவும்
“இப்ப கொஞ்ச நேரத்துல வந்துருவேன் நீ வீட்டுக்குள்ள மட்டும் போ” என்று அர்ஜுன் சொல்ல
“ஏன்பா அழுகுறீங்க, என்ன ஆச்சு” என்று அவன் கேட்க
“ ஒன்னும் இல்லடா நீ போ” என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி கூட பார்க்காமல் காரை எடுத்து வேகமாக சென்றான்..
அது ஒரு ஆபத்தான பகுதி.. அந்த பாலத்தில் இருந்து கீழே விழுந்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை.. அந்த பாலத்திற்கு மீரா ஏன் சென்றாள். கடவுளே அது அவளாக இருக்கக்கூடாது என்று அவனின் மனம் துடிக்க
’ஒருவேளை என் மேல இருக்குற கோவத்துல அப்படி முடிவு எடுத்துட்டாளா?’ என்று இன்னொரு புறம் யோசித்தபடி காரை ஓட்டினான்
அவனுக்கு வீட்டில் சொல்ல கூட தோன்றவில்லை..
“மீரா நீ தான் என் உயிர் நினைச்சேன், எப்படி டி உன்னால என்ன விட்டுட்டு போக முடிஞ்சது.. நான் உனக்கு தேவை இல்லைன்னு முடிவு பண்ணிட்டியா?
நான் தப்பானவன் நினைச்சிட்டியா?
அது மட்டும் நீயா இருந்தா அதே பாலத்தில் இருந்து குதிச்சு நானும் உயிரை விடுவேன்..இங்கதான் சேர்ந்து வாழ முடியல செத்தாவது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம்” என்று என்னென்னமோ அவன் மனதில் தோன்றியதை அவன் அந்த காரில் இருக்கும் கண்ணாடியை பார்த்து புலம்பிக்கொண்டே வந்தான்..
(மீரா என்றால் அவ்வளவு பிடிக்கும்..தான் ரசித்து ரசித்து உருகி காதலித்த காதலி, அவள் இன்னொருவனுக்கு மனைவியான பின்னும் மீண்டும் தன்னுடன் வந்து சேர்ந்தவளை அப்போதும் அதேபோல் காதலித்தான்..
அவனால் எப்படி விட முடியும்..
காதலுக்கு எல்லை என்பதே கிடையாதே, எல்லை இருந்தால் தானே இவ்வளவு தான் காதல் இருக்கிறதே என்று அவனால் சொல்ல முடியும்)..
எல்லை இல்லாததுனாலோ என்னவோ அவனுக்கு சொல்ல தோன்றவில்லை, அப்படி சொல்ல முடியாத அளவு என்னவோ மீரா சென்றுவிட்டாலோ”என யோசித்துக்கொண்டே இருந்தவனின் கார் சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி வந்தது..
அதிலிருந்து இறங்கியவன் கால்கள் செயலற்று போய் அப்படியே உறைந்து போய் நின்றான்
“அர்ஜுன் சார் ஒரு நிமிஷம் வாங்க” என்று ஒரு போலீஸ் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல
“சார் அது என்னோட மீராவா இருக்காது” என அவன் சொல்ல
“சார் நீங்க வந்து பார்த்து சொல்லுங்க, முகம் கூட சரியா அடையாளம் தெரியல.. நாங்க அதுல இருக்கிற டீடைல்ஸ் பார்த்து தான் உங்களுக்கு போன் பண்ணன” என்று அவர் சொல்ல
“கண்டிப்பா என்னோட மீராவா இருக்காது” என அவன் மனதில் நினைத்துக் கொண்டே அருகே செல்ல
அவன் உயிரும் உள்ளே துடித்துக் கொண்டிருந்தது, மீராவாக இருந்தால் அந்த இடத்திலேயே அவன் உயிர் விடவும் துணிந்தான்..
கூட்டத்தை விலக்கி அர்ஜுன் உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண்ணின் முகம் முழுமையும் சிதைந்து இருந்தது..
அவன் அருகே செல்லவும் கைகள் நடுங்கத் தொடங்கியது.. முகத்தில் வியர்வை துளிகள் கண்கள் அந்தப் பெண்ணின் உடலை பார்க்க
“கொஞ்சம் நல்லா பாத்து சொல்லுங்க சார்” என்று பின்னாடி இருந்து போலீஸ் சொல்ல
சிதறிக் கிடந்த உடலின் அருகே அவன் அமர்ந்தபடி மெதுவாக பார்க்க,
இப்போது தான் அவனுக்கு மூச்சை வந்தது.. “இது என்னோட மீரா இல்ல சார்” என்று அவன் சொல்ல
சிசார் நல்லா பாருங்க” என்று அவர் சொல்லவும்
“இல்ல சார் இது என்னோட மீரா இல்ல, என்னோட மீரா இல்ல “என்று அவன் இரண்டு கைகளையும் உதறியபடி பின்னோக்கி சென்றான்..
“என்னோட மீரா கண்டிப்பா இல்ல.. அவ அப்ப எங்கேயோ இருக்கா” என்று அவன் தன்னைத்தானே சொல்லிக்கொண்டு காரில் ஏற
“சார் இந்த பர்ஸ் “என்று அந்த போலிஸ் அவனிடம் அந்த பர்சை கொடுக்க
“என் மீரா இது தான்.. ஆனா அந்த பொண்ணு என் மீரா இல்ல சார் “என கண்ணில் வடியும் கண்ணீரைத் துடைத்தபடி அவன் சொல்ல
“சரிங்க சார் பார்த்து போங்க” என்று அவரும் சொல்லிவிட்டு அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்க விரும்பவில்லை..
அவனின் கால்கள் வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வர,
இப்பொழுது அவனின் சிந்தனையில் “மீரா என்ன ஆனாள்.. எங்கே சென்றாய்,அவளது பர்ஸ் மட்டும் எப்படி அங்கே கிடைக்கும் ..ஆனால் கண்டிப்பாக அங்கு சிதைந்து கிடந்த உடல் மீரா இல்லை என்று மட்டும் தீர்க்கமான முடிவில் இருந்தான்..
அவன் வீட்டு வாசலில் அருகே வந்ததும் மனிஷ் அங்கேயே அமர்ந்து கொண்டு இருக்க
அவனைப் பார்த்ததும் இன்னும் அவனின் மனம் படபடத்தது..
காரை நிறுத்தியவன் வேகமாக அவன் அருகில் வர” ஏன்டா இங்க உக்காந்திருக்க உன்ன வீட்டுக்குள்ள போக சொன்னேன் இல்ல” என்று சொல்ல
“இல்லப்பா யாருமே என்கிட்ட பேச மாட்டாங்க, பாட்டி என்ன வீட்டுக்குள் வராதுன்னு சொல்லிட்டாங்க” என்று அவன் சொல்ல
அவனின் கோபம் இன்னும் அதிகமானது இப்போது அவன் அனலாய் கொதித்தான்.. யாரிடம் கோபப்படுவது என்று தெரியாமல் வாசலிலே மனிஷ் கையை பிடித்து “அம்மா வெளிய வாங்க முதல்ல” என்று அவன் சொல்ல
அவனின் குரலைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் வெளியே வந்து நின்றது
“எதுக்குடா இப்ப இப்படி கத்திட்டு இருக்க?” என்று அவன் அம்மா கேட்க
“எதுக்குமா இப்படி இந்த சின்ன பையன வெளியே நீ உட்கார வச்சிருக்கீங்க” என்று கேட்கவும்
“உனக்கு வேணும்னா உன்கூட கூட்டிட்டு போய் இருக்கணும் ,இல்ல உன்னோட ரூம்ல வச்சிருக்கணும்.. அதை விட்டுட்டு இவன விட்டுட்டு நீ எங்க போயிட்டு வரே” என்று அப்பா கேட்க
“நான் எங்கேயோ போயிட்டு வரேன்”என்று அவன் கலங்கியபடி சொல்லிவிட்டு, இனிமேல் இந்த வீட்டில் நானும் என் பையனும் இருக்க மாட்டோம் என்று சொல்ல
“டேய் என்னடா பேசுற நீ” என்று அம்மா கேட்க
“ஆமா என்னோட மீராவும் போயிட்டா, இப்போ நீங்க இந்த பையன நான் இல்லாத போது பார்த்துக்க மாட்டீங்க..அதனால என் கூடவே வச்சு நான் வளர்த்துக்கிறேன்.. இனிமேல் உங்களுக்கு நான் தேவையில்லம்மா,விட்டுருங்க..
ஒரு குழந்தைகிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட எல்லாம் உங்களுக்கு தெரியல” என்று தன் அம்மாவை அவன் எதிர்த்து பேச
“அர்ஜுன் நீ பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லடா.. நீ இந்த பையன கொண்டு போய் எங்கேயாவது விட்டுட்டு வா” என்று அம்மா சொல்ல வாய் எடுத்ததும்
“அம்மா கொஞ்சம் வாய மூடுகிறீர்களா?” என்று கோபத்தில் கொந்தளித்தான் அர்ஜுன்
அவ்வளவுதான் அதற்கு மேல் அவன் முன் யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள்
அர்ஜுன் மனிஷ் கையை பிடித்ததும்” நீ வா உனக்கு அப்பா நான் இருக்கேன்..உன்ன நல்லா பாத்துப்பேன்” என்று சொல்லி இரண்டு பேரும் பின்னாடி திரும்பி நடக்க
அவர்கள் இரண்டு பேரும் திரும்ப,அங்கே ஒரு உருவம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது
“யார்?”என்று அவன் உற்றுப் பார்க்க
இத்தனை பிரச்சனைக்கும் காரணமான அந்த நிவேதா தான்..
கோபத்தில் அவளின் கழுத்தைப் பிடித்து நெரிக்க சென்றான்
அவள் பின்னால் மீரா நின்று கொண்டு இருக்க
“மீரா உனக்கு ஒன்னும் இல்லலா, இவளால தான் நமக்குள்ள பிரச்சனையை..இவள் உயிரோடயே இருக்க கூடாது “என்று அப்பவும் அவன் நிவேதாவை விடுவதாக தெரியவில்லை..
“ப்ளீஸ் அர்ஜூன் விடு.. அவள இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.. இல்லை நான் தான்” என்று மீரா சொல்ல
எதுவும் புரியாமல் ஒட்டுமொத்த குடும்பமும் விழித்தது
“ஆமா அவ அப்படி சொன்னதும் நான் நம்பியிருக்கக் கூடாது இல்ல.. நான் நம்பிட்டேன், நீ நெனச்சி இல்ல”என மீரா புரியாத புதிராக என்னென்னமோ சொல்ல
“என்ன சொல்ற மீரா” என்று அவன் கேட்கவும்
“மீராமா எங்க போயிட்டீங்க” என்று மனிஷ் அவளை ஓடி வந்து அணைத்தான்
“நான் அவ சொன்னதும் நம்பின மாதிரி நடிச்சேன்.. ஏய் வாய தொறடி வாய தொறந்து எல்லாம் உண்மையை சொல்லு” என்று மீராவே கையில் ஒரு கத்தியை வைத்து அவளின் வயிற்றில் குத்துவது போல் மிரட்ட
“வெயிட் வெயிட் நானே எல்லாத்தையும் சொல்லிடுறே, என்ன எதுவும் பண்ணிராத”என நிவேதா சொல்ல
“என் பேரு நிவேதாவே இல்ல.. என்ன இப்படி எல்லாம் நடிக்க சொன்னாங்க, நடிச்சா காசு தரேன்னு சொன்னாங்க நான் ஒரு சீரியல் ஆர்ட்டிஸ்ட்” என்று அவள் சொல்லவும்
“வாட்” என்று அர்ஜுன் அவளைப் பார்த்து கேட்க
“ஆமா இந்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போது சொல்லி உங்களை பிரிக்க சொன்னாங்க” என்று அவள் சொல்லவும்
“யார் சொன்னாங்க” என்று அர்ஜுன் கோபமாக கேட்க
“இதோ நிக்கிறாங்களே மீரா.. அவங்களோட முதல் கணவர் தான்”என்று கையை நீட்டி சொல்ல
“என்ன சொல்ற நீ?” என்று அர்ஜுன் கேட்கவும்
“ஆமா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறது பொறுக்காமல் அவங்க தான் இந்த மாதிரி பண்ண சொன்னாங்க.. என்கிட்ட நிறைய காசு கொடுத்தாங்க,அவங்க ரெண்டு பேருக்கும் இடையில சண்டை வரணும்னு இப்படி செய்ய சொன்னாங்க. என்னை மன்னிச்சிருங்க” என்று அந்த பெண் சொல்ல
“நிவேதா என்கிற பேரு உனக்கு எப்படி தெரியும்” என்று அவன் கேட்க
“நீங்களும் மீராவும் ஏதோ ஷாப்பிங் மால்ல இருக்கும்போது அவங்களோட முதல் கணவருக்கும் உங்களுக்கும் ஏதோ சண்டை வந்துச்சு.. அப்போ நீங்க அவரை அடிச்சிட்டீங்க ,அதனால அவரு கூட்டத்துல எல்லாரும் முன்னாடி அசிங்கப்பட்டார். அதனால தான் இப்படி பண்ண சொன்னாங்க”என அவள் சொல்லவும்
“இப்ப நான் உன்கிட்ட என்ன கேட்டேன் இந்த பேர் உனக்கு எப்படி தெரியும்னு” என்று அர்ஜுன் கேட்கவும்
“சொல்றேன் என்ன எதுவும் பண்ணிராத மீரா” என்று அவள் பயத்தில் அன்னைக்கு மீரா போன்ல பேசிட்டு இருந்தாங்க.. உங்களுக்கும் அந்த ஆளுக்கும் சண்டை வரும்போது, அப்ப யார்கிட்டயும் போன்ல உங்களுக்கு ஒரு எக்ஸ் லவ்வர் இருக்காங்க..அவங்க பேரு நிவேதா என்று சொன்னாங்க
அத வச்சு தான் இந்த மாதிரி எல்லாம் பண்ண சொன்னா அது மட்டும் இல்லை, உங்களுக்கு லோன் வேணுமான்னு நிவேதா அப்படி பேர்ல அடிக்கடி போன் பண்ணதும் நான் தான்.. மீராக்கு உங்க மேல சந்தேகம் வரணும்னா அதெல்லாம் பண்ண என்று அவள் சொல்ல
“இவ்வளவுக்கும் காரணமான அவன சும்மாவா விட்ட மீரா” என்று அர்ஜுன் கேட்கவும்
அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கிறதுக்கு எல்லாம் எவிடன்ஸும் நான் ரெடி பண்ணிட்டேன்.. இந்த பொண்ணு பேசுனதெல்லாமே வீடியோ எடுத்து வச்சிட்டு போலீஸ்க்கு போகும் போது அவன் என் பர்சை புடுங்கி தூக்கி எறிஞ்சிட்டான்..நல்ல வேலை என்னையும் கொலை பண்ண பாத்தா அதுக்குள்ள போலீஸ் வந்ததனால் அவனை புடிச்சுட்டு போய்ட்டாங்க..
இந்த பொண்ணு தான் ரொம்ப கெஞ்சுச்சு, என்ன போலீஸ்ல படிச்சு கொடுத்துறாதீங்க ப்ளீஸ் அப்படின்னு.. ஆனா கூட நான் விடல,உன்கிட்ட எல்லா விஷயத்தையும் வந்து சொல்லணும் தான் இங்க வந்தோம்..
உன்னை விட்டு நான் போயிட்டேன் நினைச்சயா அர்ஜுன்..
“உன்ன விட்டு நான் எப்படி போவேன்,இந்த பிரச்சனைக்கெல்லாம் யாரு காரணம் கண்டுபிடிக்க தாண்டா நான் போனேன்
உன்ன சந்தேகப்பட்டு நான் போகல..ஏதோ எனக்கு பின்னாடி சரியில்லாத மாதிரி தோணுச்சு, இந்த பொண்ணு பேசினது நடந்துக்கிட்டது இவ பின்னாடி யாரு இருக்கா இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நான் உன்னை விட்டு போற மாதிரி நடிச்சா மட்டும்தான் எல்லாம் கண்டுபிடிக்க முடியும் புரிஞ்சுகிட்டன், அதனால தான் அப்படி பண்ணேன்”என்று அவள் சொல்லவும்
“ஐயையோ ப்ளீஸ் மேடம் என்ன மட்டும் விட்ருங்க” என்று நடிக்க வந்த நிவேதா சொல்ல
“போய் தொல” என்று மீரா அவளை கோபமாக சொல்ல,
“அம்மா என்னோட மீரா வந்துட்டா பாருங்க” என்று அவன் சந்தோஷத்தில் அவன் அம்மாவை பார்த்து சொல்ல
“எங்க எல்லாருக்குமே நடந்தது தெரியும்டா ..மீரா நம்ம வீட்டை விட்டு போகும்போது என்கிட்டயும் அப்பாகிட்டயும் சொல்லிட்டு தான் போனா..
எனக்கும் அர்ஜுனுக்கும் நடுவுல யாரோ பிரச்சனை பண்றாங்க,அது எல்லாத்தையும் தீத்துட்டு நான் வருவேன் ஒருவேளை தீர்க்க முடியலன்னா நான் வராமயே போயிடுவேன்..பிரச்சனையோடு அர்ஜுன் கூட நான் வாழ மாட்டேன் என்று சொன்னா…
அப்ப நான் சொன்னேன் “அர்ஜுனுக்கு உன்ன தவிர வேற யாரும் இந்த ஜென்மத்துல மனைவியா இருக்க முடியாதுன்னு, அதனாலதான் நாங்க எல்லாரும் சேர்ந்து மீராவா தப்பா சொன்னா உன்னோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு வீடியோ கூட எடுத்து வச்சிருக்கோம்.. மீரா கிட்ட காட்டுறதுக்கு” என்று யாழினியும் பின்னால் இருந்து சொல்ல
“அண்ணி நீங்களுமா” என்று அர்ஜுன் சிரித்தபடி கேட்க
மீரா அவனை ஓடி வந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
“இனிமேல் நமக்கு நடுவுல யாருமே இல்ல” என்று அவள் சொல்ல
“மீரா அம்மா” என்ற சிறுவன் குரல் கேட்க
மனிஷையும் தன்னுடன் அழைத்தபடி மூன்று பேரும் சிரித்துக்கொண்டிருக்க
“குடும்பத்தோட சேர்ந்து எல்லாரும் நடிச்சிருக்கீங்க” என்று அர்ஜுன் அவர்களைப் பார்த்து கேட்க
“எப்படியோ இனிமேல் எந்த சண்டையுமே வராதுடா. இப்ப மீராக்கு நல்லா புரிஞ்சு போயிருக்கும்..நீ இல்லாம அவ இல்ல அவா இல்லாம நீ இல்லைன்னு,
இப்படித்தான் கணவன் மனைவி என்றால் ஒற்றுமையா வாழனும.. குழந்தை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லடா, அந்த பையன் நம்ம ரித்விக் மாதிரி தான் எங்களுக்கு” என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல
அதற்குள் அவர்களின் பின்னால் “ஏ மீரா உன்னைய காணோம்னு உங்க அக்கா எனக்கு போன் பண்ணி பயமுறுத்திட்டு இருக்கா, நீ என்னடி வெளியே நின்னு மாப்பிள்ளையை கட்டிப்பிடிச்சு நிக்க” என்று அம்மா கேட்க
“ஹான் அது ஒரு புது வேண்டுதல்சி என்று யாழினி சொல்லி சிரிக்கவும்
“இவளை காணோம்னு நான் பதறி போய் வந்து இருக்கேன், நீ சிரிச்சிட்டா இருக்க”என்று அம்மா கேட்க
“அம்மா நான் எங்க போக போறேன் இதான் என் வீடு ,என் அர்ஜுன் இருக்குற இடம் தான் இனிமேல் எனக்கு சொர்க்கம்”என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்தாள்..
“அம்மா நீங்க இங்க வாங்க உங்களுக்கு நடந்தது எல்லாத்தையும் நான் அப்புறமா சொல்றேன்”.. என்று யாழினி அம்மாவின் தோலை படித்தபடி சொன்னால்
மீராவின் முகத்தில் இந்த சந்தோஷத்தை காணத்தான் அவள் அம்மா ஆசைப்பட்டாள்..இப்போது அந்த சந்தோஷம் கொட்டி கிடக்கிறது அவள் கையில் ஒரு குழந்தையும் கூட..
“இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கணும் மீரா” என்று அம்மா சொல்ல
“எப்பவும் நம்ம பசங்க சந்தோசமா இருப்பாங்க சம்மந்தி” என்று அர்ஜுனனின் அம்மாவும் சொல்லி முடித்தாள்.
அர்ஜுனின் கைக்குள் அவன் அன்பான மனைவியும்,அழகிய குழந்தையும் இருக்க..
மீரா அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க
இந்த பார்வை தாண்டி என்னை என்னமோ பண்ணிருச்சு..”உன் பார்வையில் கரைந்தேனடி”என்
சொல்லி முடித்தான்..
அவன் சொன்னதைக் கேட்டு மீரா புன்னகை சிந்தினாள்..
கணவன் மனைவி வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அர்ஜுனன் மீராவும் புரிந்து கொண்டார்கள்..
அவ்வளவு தான் மீரா ஹாப்பி… அர்ஜுன் ஹாப்பி.. ஒரு வழியா இந்த கதையை முடித்து நானும் ஹாப்பி..படிச்ச நீங்களும் ஹேப்பியா சொல்லிவிட்டு போங்கள்…
சுபம்…