• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் பார்வையில் கரைந்தேனடி -29

gomathi nagarajan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
36
5
8
chennai
மனிஷ் அவளிடம் வந்ததிலிருந்து,
மீராவின் வாழ்க்கை ஒரு புதிய அர்த்தம் பெற்றது.அவனது சிறிய கைகளும், கோபக்கண்களும், கேள்விகளும், குறும்புகளும்மீராவின் நாளை மெல்ல பூக்கும் பூங்காவாக மாற்றின.

அவளுக்குள் பிறந்த ஒரு புதிய தாய்மை…

உடலால் பிறந்த குழந்தையில்லை என்றாலும்,
இதயத்தால் பெற்ற பிள்ளை என்ற உணர்வில்
மனிஷ், அவளுடைய கண்ணில் ஒளியும், வாழ்வில் உயிருமாய் ஆனான்.

அர்ஜுனும் அதே அளவுக்கு மனிஷை நன்கு கவனித்தான்.முதலில் சிறு குழப்பத்தில் இருந்தாலும்,
மனிஷின் அழகு திறமை, நேர்மையான விழிகள்,அவனது சிரிப்பு,
அர்ஜுனின் கண்ணில் "மகன்" என்ற ஒற்றை சொல்லை எழுத்தாகக் காணத் தொடங்கியது.

அவன் பள்ளிக்கு சென்று வீட்டுப்பாடம் பண்ணும் போது கூட அர்ஜுன் அருகில் அமர்ந்து,அவனை ஊக்குவிப்பான்.
மீரா கிச்சனில் இருந்தால்,
அர்ஜுன் மனிஷுடன் விளையாட
இடையில் "அப்பா நீ பக்கத்துல இருக்கணும்!" என்ற மனிஷின் வேண்டுகோளில் அர்ஜுனின் கண்களில் காணும் நிம்மதியை மீரா மௌனமாக ரசிப்பாள்.

அர்ஜுன் வீட்டில் முதலில் ம
மனிசை ஏற்க மறுத்தாலும் அதன் பின் “தன் மகனுக்கு குறை என்று இருக்கும்போது இப்படி ஒரு சிறுவனை வளர்ப்பது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா பரவால்ல அர்ஜுன் சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்” என்று அர்ஜுன் அம்மா யாழினி இடம் சொல்லி மனதை தேற்றி கொள்வாள்

அவள் சொல்லும்போது யாழினிக்கு தன் மனதில் தங்கை பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் என்று துடிப்பாள் ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள்..

மீரா பள்ளிக்கு போகும் போது மனிஷை அழைத்துச் செல்வாள்.பயணத்தில் அவனது பேச்சு, பள்ளியில் நடக்கும் சம்பவங்களை கூறும் விதம்,
"அந்த மிஸ் அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?"
"இன்று நான் பெஸ்ட் ஸ்டுடென்ட் ஆனேன்!"என்ற பெருமிதப் பார்வையில்,
மீராவின் கண்ணீர் எல்லாம் ஆனந்த கண்ணீர் ஆக மாற

பள்ளி முடிந்தவுடன்,அவனுடன் சேர்ந்து வீடு வரும் வழி,அவள் வாழ்க்கையின் மிகவும் சந்தோஷமான நேரம்.

மூவரும் சேர்ந்து டைமிங் பார்த்து உணவருந்துவது,

அந்த மாலையில் "மீரா அம்மா நம்ம மூவி போகலாமா?" என அவன் கேட்க

மூன்று பேரும் கிளம்பி அடிக்கடி வெளியே செல்வதும் சந்தோஷமாக சுற்றி பார்ப்பதும் என வாழ்க்கைய அழகாக போய்க் கொண்டிருந்த நேரம்..


அவர்கள் வீட்டில் குழந்தையின் சிரிப்பு இடைவெளிகளைக் களைந்து,
அவர்களது இருதயங்களை பூரணமாக்கியது.

அன்று காலை மீரா பசுமை நிற புடவை அணிந்து கொண்டு, கிச்சனில் மனிஷ்க்காக ஸ்பெஷல் ஆக காலை உணவு செய்து கொண்டு இருந்தாள்

அர்ஜுன் டைனிங் டேபிளை கைக்குட்டைகளால் துடைத்து, டெக்கரேஷனுக்கான கலர்ஃபுல் ரிப்பன் கட்ட..

இடை இடையே மனிஷ் “எதுக்கு இதெல்லாம் பண்றீங்க அப்பா என்னன்னு சொல்றீங்களா?” என அவன் கேட்க

சின்னச் சிரிப்புகளுடன் மீரா அவனை தழுவி, "நீ வந்ததாலதான் எங்கள வாழ்க்கை வண்ணமாயிருக்கு. இன்று எல்லாம் உன்னோட தினம் தான்!"
என்று சொல்ல

“எனக்கு ஒன்னும் புரியலையே மீராமா” என்று அவன் தலையை சொரிந்தபடி சொல்லவும்..

“இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் தங்கம்” என்று அவள் சொல்ல

“ஓ அப்படியா அம்மா” என்று அவன் கேட்கவும்

“ஆமா வா நம்ம மூணு பேரும் சேர்ந்து கோவில் போய் சாமி கும்பிட்டு வந்து அதுக்கப்புறம் உன் பர்த்டேக்கு எல்லாரும் நம்ம வீட்டுக்கு வருவாங்க. நல்லா கேக் வெட்டி சந்தோஷமா இருக்கலாம்” என்று மீரா சொல்லவும்

மீரா சொல்வதை பார்த்துக் கொண்டிருந்த யாழினி கணவன் “அனாதை குழந்தைக்கு இதெல்லாம் அதிகம்” என சொல்ல

அதைக் கேட்டு அர்ஜுன் “அண்ணா அவன் ஒன்னும் அனாதை இல்லை என்னோட குழந்தை” என்று சொல்லும்போது மீராவின் கண்களில் கண்ணீர் வடிய

“என்னமோ பண்ணி தொலைங்கடா உங்க ரெண்டு பேர் இஷ்டத்துக்கு தான் ஆடுறீங்க” என்று அவன் சொல்ல

யாழினி அதற்குள் அவன் கையைப் பிடித்தாள்..

“எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்” என்று அவள் சொல்ல

பச் என்று உதட்டை சுழித்தபடி “என்னையவே சொல்லு” என்ன சொல்லி அவன் கோபமாக அவள் கையை உதறி விட்டு வெளியே சென்றான் ..

அவன் சென்றதும் மூன்று பேரும் கோவிலுக்கு போய் மனதார அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்..

அர்ஜுனின் நன்பர்கள், மீராவின் பள்ளி ஆசிரியர்கள், மனிஷின் கிளாஸ் நண்பர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பார்ட்டி.

வீடு வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கேக் அவன் முன் வைக்கவும் அதில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே”..என்று எழுதியிருக்க

மனிஷ் மெழுகுவர்த்திகளை ஊத,சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அர்ஜுனுக்காகவும் மீராவுக்காகவும் வந்திருந்ததால் மனிஷை யாரும் கஷ்டப்படுத்தாமல் அவன் ஆசைப்படியே கைதட்டி வாழ்த்துக்கள் சொல்லி கொண்டு வந்த கிப்டை அவனிடம் கொடுத்தார்கள்…

மீராவின் கண்களில் நீர் திரண்டது,
அர்ஜுனின் முகத்தில் பெருமை சிரிப்பு பொங்கியது ..

அர்ஜுன், மனிஷுக்கு ஒரு வேலை செய்யும் ரோபோ டாயைப் பரிசளிக்க,
அதில் அவன் குரலில் பதிவு செய்யப்பட்ட மெசேஜ் "மனிஷ்! என் மகனாக இருப்பது எனக்கு தான் பெருமை!" என இருக்க

மனிஷ் அதைக் கேட்டு
"நீங்க மட்டும் என்னைய அந்த ஆசிரமத்துல இருந்து கூப்பிட்டு வராமல் இருந்திருந்தால் நான் என்ன ஆயிருப்பேன்” என்று தயங்கிக் கேட்க

மீரா அவனை அணைத்து
"நீ எங்க பையனே, இதயம் தந்த பையன்" என கூற

அந்த தருணத்தில் வீடு முழுக்க அமைதியும் உணர்ச்சியும் தோன்ற

மனிஷின் பிறந்த நாளானது,
அர்ஜுனும் மீராவும் இழந்ததைக் கண்டுகொள்வதற்கான நாள் இல்லை.
அது அவர்கள் பெற்ற அன்பை கொண்டாடும் நாள்.
பிறர் இருதயத்தில் சிறு இடம் கொடுத்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாக மாறும் என்பதை உணர்த்தும் நாள்.

தனக்கான அர்ஜுன் இவ்வளவு செய்கிறான் என்று மீராவின் பார்வையில் அர்ஜுன் கடவுளாக தெரிந்தான்..

அந்த நாட்கள் அப்படியே முடிய அடுத்த நாள் பள்ளி வளாகத்தில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதால் அனைத்து குழந்தைகளும் தன் பெற்றோர்களுடன் நிற்க

மனிஷ் மீராவின் கையை இறுக்கிப்பிடித்து” இவங்க தான் என் அம்மா” என்று அங்கு இருக்கும் ஒருவரிடம் சொல்ல

உனக்கு தான் அம்மா அப்பாவே கிடையாதே என்று அதில் ஒருத்தி கேட்கவும்

“இல்ல இவங்க தான் என் அம்மா அதோ கார்ல ஒக்காந்து இருக்காங்களே அவங்க தான் என் அப்பா” என்று அவன் சொல்லவும்

“என்ன சொல்றான் இந்த பையன்?” என்று அவள் மீண்டும் புரியாதவளாய் கேட்க

“அம்மா இவன அந்த ஆசிரமத்தில் இருந்து இவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சிருக்காங்க.. அதனால இவங்க தான் அம்மா சொல்றான்” என்று இரண்டு, மூன்று நண்பர்களாய் சேர்ந்து அவனை பார்த்து சிரிக்கவும்

அவனுக்கு அழுகை வந்துவிட்டது..

தேம்பி தேம்பி அழுதபடியே “அம்மா நான் உங்க பையன் இல்லையா?” என்று மனிஷ் கேட்கவும்

அர்ஜுன் வேகமாக வந்து “இங்க பாருங்க இவன் என்னோட பையன்.. எங்களோட பையன் இவனை யாராவது ஏதாவது பேசினீங்க” என்று விரலை நீட்டி கோபமாக சொல்லவும்

அவன் சொன்ன வார்த்தையில் அர்ஜுனனுக்கு மனிஷ் மீது எவ்வளவு பாசம் இருக்கிறது என்பதை மீரா புரிந்து கொண்டாள்..

அர்ஜுன் அவன் கண்ணீரை துடைத்தபடி “இவங்க சொன்னாங்கன்னு நீ அழக்கூடாது டா சிரிங்க அப்பா சொல்றேன்ல” என்று சொல்லவும்

மனிஷ் சிரித்தபடி இரண்டு பேரையும் கட்டிக் கொள்ள..

மீராவும் அவனை அணைத்தபடி இருக்க, கொஞ்ச நேரத்தில் மீட்டிங் முடிந்ததும் அவனை தன்னுடன் அழைத்து செல்லும் போது

அர்ஜுன் “நம்ம வேற ஸ்கூல் மாத்திரலாம், இந்த ஸ்கூல் வேண்டாம் இந்த ஸ்கூல்ல எல்லாரும் இவனை இப்படி பேசி அழ வைக்கிறாங்க” என்று அவள் சொல்லவும்

“சரி மீரா எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம் ”என்று அவன் சொல்லிக்கொண்டே காரை ஒரு திருப்பத்தில் திருப்ப,

அவன் நேரே வந்து ஒரு கார் இடிப்பது போல் வந்து கொஞ்சம் தள்ளி நிற்க

“ஹே இடியட்” என்று அவன் கோபமாக காரை நிறுத்தியபடி கதவைத் திறந்து வெளியே செல்ல

அவன் எதிர்புறத்தில் இருக்கும் காரில் இருந்து ஒரு பெண் இறங்கி வர

முட்டி தெரியும் அளவுக்கு ஒரு ட்ரவுசரும், இடுப்பு தெரியும் அளவுக்கு ஒரு டி-ஷர்ட்டும் போட்டு தலைக்கு மேல் கூலிங் கிளாஸை போட்டபடி தலையை விரித்து போட்டு ஒரு பெண் “சாரி” என்று சொல்ல

“ஹே அர்ஜுன்” என்று அவள் சொல்லவும்

அவனும் தன் புருவத்தை சுருக்கி அவளை பார்க்க

“ஹே என்ன மறந்துட்டியா?” என்று அவள் கேட்கவும்

அதற்குள் மீராவும்,அந்த சிறுவனும் வெளியே வந்து பார்க்க

“யார் அம்மா இவங்க?” என்று மனிஷ் மீராவை பார்த்து கேட்க

“தெரியல டா உங்க அப்பாக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க” என்று மீரா சொல்லி சிரிக்க

“மனிஷ் அமைதியாக இருடா”என அர்ஜுன் சொன்னபடி அந்த பெண்ணின் அருகே சென்று “மேடம் நீங்க யாரு?” என்று கேட்க

“டேய் மனிஷ் நீ எப்படிடா எங்க?” என்று அவனை பார்த்து கேட்கவும்

அவனுக்கும் எதுவும் புரியாமல் திரு திரு என்று என்று விழித்துக் கொண்டு இருக்க

“அர்ஜுன் தேங்க்யூ சோ மச் டா”.

“எப்படியோ நம்ம குழந்தையை உங்க வீட்டில சேர்த்துட்ட.. லவ் யூ டா” என்று அவள் சொல்லி வேகமாக அர்ஜுனை அணைக்க

மீராவிற்கு இந்த உலகமே இடிந்து அவள் தலை மேல் விழுவது போல் இருந்தது

“ஏய் என்ன சொல்ற நீ” என்று அர்ஜுன் அவளை வேகமாக பிடித்து தள்ளினான்..

“உன்னோட நிவேதா..

யூ ஃபர்கெட் மீ” என்று அவள் கேட்டதும் மீராவின் முகமே மாறி அவளின் கண்கள் அர்ஜுனை சந்தேகப்பார்வையில் பார்த்தது..

 

Attachments

  • Picsart_25-06-19_14-14-37-984.jpg
    Picsart_25-06-19_14-14-37-984.jpg
    195.3 KB · Views: 6