அத்தியாயம் 38
"சென்னையில் பிரபல தொழிலதிபர் மகன் மர்ம முறையில் இறப்பு!" காலை செய்தி தாளை புரட்டிய ஜீவன் கண்களில் இந்த செய்தி விழ, தொடர்ந்து அந்த செய்தியைப் படித்தவன்,
"இவனை!" என பல்லைக் கடித்துக் கொண்டே சத்யாவிற்கு அழைத்தான்.
"மச்சா!" என்றவனின் உற்சாக அழைப்பில் ஜீவன் அமைதி காக்க,
"நியூஸ் பேப்பர் படிக்குற பழக்கம் எல்லாம் இருக்குதா உங்களுக்கு?" என்று கேட்டான் சத்யா.
"அமைதியா இருனு சொன்னேன் சத்யா உன்னை.. ஒரு மாசத்துல கல்யாணம்.. நியாபகம் இருக்கா இல்லையா?" ஜீவன் கேட்க,
"நான் ஊருக்கு வந்துட்டு வந்தும் ஒரு மாசம் ஆச்சு.. இவனுங்களை நினச்சா மூளை அடுத்த வேலைக்கு நகர மாட்டுது மச்சா.. நான் என்ன செய்ய?"
"ப்ச்! சத்யா! எனக்கு புரியுது.. பட் இது ரிஸ்க்.." என்று நெற்றியை நீவிய ஜீவன்,
"ம்ம்ஹும்ம்! இது சரி வராது.. நான் உன் ட்ரான்ஸ்பெர்க்கு ஏதாச்சும் வாய்ப்பு இருக்கான்னு பாக்கறேன்!" என்று கூற,
"அட சும்மா இருங்க மச்சா.. நேத்து தான் வீடு பாத்து அட்வான்ஸ் குடுத்துட்டு வந்திருக்கேன்.."
"ம்ம்ம்ம்!" என்ற ஜீவன் சிந்தனையில் இருக்க,
"யோவ் மச்சா! நீ போலீஸ்காரன்.. ஆனா நந்தினி அண்ணனா இப்ப என்கிட்ட பேசிட்டு இருக்க!" என்று நியாபகப்படுத்த, அதில் பெருமூச்சு எறிந்தவன்,
"ம்ம் ரைட்! சரி விடு பார்த்துக்கலாம்!" என்றவன் கை செய்தித் தாளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
"அது!" என்ற சத்யா,
"கல்யாண ஜவுளி வாங்க சண்டே போகலாம் சொன்னேனே பேசலையா?" என கேட்க,
"எப்படி பேச்சை மாத்தற.. இப்படி தான் எல்லார் வாயையும் அடைக்குற டா.."
"அன்ஸர் மீ மேன்!" சத்யா.
"எங்க? உன் அப்பா தான் கேட்க மாட்றார்.. வெள்ளி கிழமை தான் நல்ல நாளாம்" ஜீவன் கூற,
"அப்ப அவருக்கு வெள்ளி கிழமை எடுத்துக்கட்டும்..நான் சண்டே வர்றேன்.. நானும் என் நந்துவும் சன்டே போய் எங்களுக்கு எடுத்துக்குறோம்!" என்று கூறிக் கொண்டு இருக்க,
"ண்ணா காபி!" என கொடுத்து விட்டு நந்தினி செல்ல போக, ஒரு நிமிஷம் என அவளிடம் சைகையில் காட்டியவன்,
"உன் அலம்பல் தாங்கல டா.. என்னனு நீயும் உன் அப்பாவும் ஒரே வீட்டுல இருந்திங்க?" என்று ஜீவன் கேட்க, யாரோ என பார்த்து நின்றாள் நந்தினியும்.
"அதெல்லாம் பெரிய கதை.. சாவகாசமா பேசலாம்.. ட்ரெஸ் எடுக்க நானும் வருவேன்.. என் பொண்டாட்டிக்கு நான் செலக்ட் பண்ணனும்னு ஆசை இருக்கும்ல?" என்று சத்யா கேட்க,
"நந்துமா! கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க எப்ப போலாம்? சத்யா வரேன்னு எதுவும் சொல்லி இருக்கானா?" என சத்யாவை அழைப்பில் வைத்துக் கொண்டே நந்தினியிடம் ஜீவன் கேட்க,
"அதெல்லாம் இல்ல ண்ணா.. நீங்க எப்ப சொல்றிங்களோ அப்பவே போலாம்!" என்றவளை எண்ணி இங்கே பல்லைக் கடித்த சத்யா தலையில் அடித்துக் கொண்டான்.
"சரி நீ போ டா!" என்று அனுப்பியவன்,
"கேட்டுச்சா சென்னைகாரரே!" என்று கேட்க,
"அவமானம் அவமானம்! அண்ணே சொன்னா கிணத்துல கூட குதிப்பா.. இவளை வச்சுட்டு!" என சத்யா புலம்ப,
"முடிஞ்சவரை உன் அப்பாவை சமாளிக்க பாக்குறேன்.. இல்லனா நோ ஆப்ஷன்.. எங்க செலக்ஷன் தான்!" என்று கூறி வைத்துவிட்டான் ஜீவன்.
"அண்ணன் பைத்தியமே! வர்றேன் டி.. உனக்கு இருக்கு!" என புலம்பிய சத்யா உடனர் நியாபகம் வந்தவனாய் சங்கருக்கு அழைத்தான்.
"சொல்லு டா மாப்பிள்ளை!" சங்கர்.
"இன்னுமா தூங்குற.. சோம்பேறி! மணி என்ன டா!" என்று சத்யா கேட்க,
"டேய்! வந்ததே நைட்டு ஒரு மணிக்கு தான் டா.. மதியம் தான் போகணும்.." என்றான் சங்கர்.
திருச்சியில் இருக்கும் சங்கருக்கு பணி மாற்றம் செய்ய எல்லா ஏற்பாடும் அவன் தந்தை செய்து கொண்டு தான் இருக்கிறான்.
சத்யா தான் வேண்டாம் என மறுத்துவிட்டது
"அங்க கலவரம்னு சொன்னாங்க.. ஆமா டா ஜாதி கலவரம் தான்.. அதான் பாதுகாப்புக்கு ஆயிரம் பேர போட்ருக்காங்க.. மெய்ன்ல வேற.. மதியம் நானும் அங்க தான் போகணும்!" என பேச்சுக்கள் தொடர,
"லீவ் அப்ளை பண்ணிரு டா.. ஒரு வாரம் முன்னாடி வந்துரனும்.. கடைசி நேரத்துல காரணம் சொல்லிட்டு இருந்த..." என்று சத்யா மிரட்ட,
"சொல்லனுமா டா.. சும்மா நந்தினி பின்ன நீ சுத்தினதுக்கே துணைக்கு வந்தேன்.. இப்ப துணை மாப்பிள்ளை வேற.. வராம இருப்பேனா?" என்று கேட்க, சத்யா புன்னகைத்தவன்,
"சரி டா நீ தூங்கு.. அப்புறமா கூப்பிடுறேன்!" என்று கூறி வைத்தான்.
இல்லாத சேட்டைகள் எல்லாம் செய்த சத்யா வீரபாகு வலையில் மாட்டிக் கொள்ள, துணிக் கடைக்கு செல்ல வெள்ளி கிழமை ஏற்பாடு ஆகி இருந்தது.
யாருமே சத்யா வரவை எதிர்பார்க்கவில்லை.. நந்தினியுமே எதிர்பார்க்கவில்லை என்பதில் தான் கடுப்பானான் சத்யா.
"நீ என்ன சின்ன குழந்தையா? சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆகுற?" நந்தினி கேட்க,
"இது சின்ன விஷயமா?" என்று கோபம்.
"பின்ன? கல்யாணத்துக்கே ஒத்துப்பாங்களா இல்லையானு எவ்வளவு பயந்தோம்? அவங்க நமக்காக ஒத்துகிட்டாங்க தான? அவங்க குடுக்குற ட்ரெஸ் போட்டுக்க உனக்கு கசக்குதா? காலம் முழுக்க எனக்கு நீயும் உனக்கு நானும் தான் செலக்ட் பண்ணிக்கலாமே!" என்றவளின் சிந்தனையில் அசந்து போனான் சத்யா.
"இப்போல்லாம் வாய் கொஞ்சம் அதிகமா பேசுற என்கிட்ட.. என்னையே அதட்டுற..ம்ம் பாத்துக்குறேன்!" சத்யா கூற,
"அதட்டாம! எப்ப பாரு எல்லாரையும் ரூல் பண்ணிக்கிட்டு.. கல்யாணத்துக்கு முந்தின நாள் வா போதும்.. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் வேலைக்கு போயிடணும்!" நந்தினி கூற,
"அதுக்கு நான் சாமியாரா போகலாம்.. பேசாம வச்சுடு டி.. கொலவெறி ஆகிருவேன்!" என்றவன் கோவத்தில் சத்தம் இல்லாமல் சிரித்தவள் வைத்துவிட்டாள்.
நந்தினி சொன்னது புரிந்த போதும் வெள்ளி கிழமை சரியாய் கடையை கண்டுபிடித்து வந்து சேர்ந்துவிட்டான் சத்யா.
அவன் விருப்பப்படி தான் நந்தினியின் உடையும் அமைந்தது.
"அடம் அடம்!" நந்தினி கூற,
"இதுக்கே சொன்னா எப்படி?" என்றான் தனிமையில். சத்தமில்லாமல் இடத்தை காலி செய்தவளை பார்த்து சிரித்துக் கொண்டான் சத்யா.
இப்படி சத்யாவின் கலாட்டாக்களோடு திருமண நாளும் வர, சங்கர் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்துவிட்டான் நண்பன் திருமணத்திற்கு.
"வரவேற்பு வேண்டாம்னு சொல்லிட்டனு நந்தினி அம்மா கவலைபடுதாக டா.." மகனிடம் வைதேகி கூற,
"அவப்பிட்டு தான் பெரிய ஆள் ஆகிட்டாரே! நம்ம பேச்சை கேட்பாரா?" என்றார் வீரபாகு உடனே.
"எங்க சந்துல சிந்து பாடலாம்னே இருப்பாரா உன் வீட்டுக்காரர்?" என்ற சத்யா,
"ம்மா! நம்ம ஊர் சைடுல கல்யாணத்துக்கு எல்லாருமே வந்துடுவாங்க தானே? ரிசெப்ஷன் வச்சா அதுக்கும் அவங்க தான் வர போறாங்க.. அதனால தான் வேண்டாம் சொன்னேன்.. அது மட்டும் இல்ல.. வேலைக்கு சேர்ந்தாச்சு.. நமக்கு மேல இருக்கவங்கள ஊருக்கு கல்யாணத்துக்கு வர சொல்ல முடியாது.. ஆனா சின்னதா கெட் டு கெதர் அதான் விருந்து அவங்களுக்கு மட்டும் சென்னைல வச்சு நந்தினியை இன்ட்ரொ பண்ணலாம்னு பாத்தேன். ஜீவா மச்சானுக்கு தெரிஞ்சவங்க சென்னைல இருக்காங்க.. அவங்களும் கலந்துக்குவாங்க.. நம்ம பேமிலிக்குள்ள வச்சுக்கலாம்.. பெரிய ஆளுங்களையும் தெரிஞ்சு வச்சுக்கணும்.. செலவும் மிச்சமாகும்ல?" என்று சத்யா தெளிவாய் எடுத்துக் கூற,
ஒருவித பிரம்மிப்புடன் நின்றுவிட்டார் வீரபாகு.. ' எத்தனை யோசிக்கிறான் என் மகன்?' என பெருமையாய் நினைத்து நிற்க,
"அவன் சொல்லுததும் சரியா தான இருக்கு?" என்றார் பம்மியபடி வைதேகி.. என்ன சொல்வாரோ கணவர் என்ற நினைப்பில்.
"தெரியுது இல்ல? அப்போ சென்னைக்கு போக நாலு துணிமணிய இப்பவே எடுத்து வையி.. கல்யாண வேலைல கடைசி நேரத்துல அது ஒரு வேலையா போயிரும்!" என்று மிடுக்காய் கூறி சென்றார்.
************
பின் நின்ற சங்கர் காலை சத்யா சுரண்ட, "மனமேடைல கூட சும்மா இருக்காம என்னை ஏன் டா சுரண்டுற?" என்றான் சங்கர்.
"நீ சின்ன பையன் உனக்கு விவரம் பத்தாது.. என் அம்மாவை கூப்பிடு!" என்று சத்யா கூற,
"உன்னோட!" என்றவன் அன்னையை அழைக்க செல்லவும்,
"என்னாச்சு?" என்றாள் மெதுவாய் அருகில் மணமகளாய் அமர்ந்திருந்தவள்.
"ஷ்ஷ்! நீ மந்திரத்தை கவனி!" என்றவன், அன்னை வருகிறாரா என பார்க்க,
"இவனை என்ன தான் பண்ண.. இப்ப என்ன கேட்க போறானோ?" என்றப்படி மேடை ஏறி வந்தார் அன்னை வைதேகி.
அத்தனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஒவ்வொரு சடங்கிலும்.
"என்ன டா?" என ஜீவன் சங்கரிடம் கேட்க,
"அலம்பல் பன்றான் ண்ணா!" என்றான் சங்கர்.
"உனக்கு கல்யாணம் வேணுமா வேண்டாமா டா? சொல்றதை கேட்டு அப்படியே பண்ணு.. சும்மா ஒவ்வொரு விஷயத்துக்கும் அர்த்தம் கேட்டுகிட்டு!" என வைதேகி மிரட்ட,
"கல்யாணம் ம்மா.. கல்யாணம்ன்றது ஆயிரம் காலத்து பயிர்.. என்னனு தெரியாம பெரியவங்க சொல்றிங்கனு செய்யணுமா?" என்றவன் குரல் உயர,
"எம்மாடி நந்து!" என்றதும் அவர்கள் பேச்சை கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்த நந்தினி சிறிதாய் அவர்கள் புறம் திரும்ப,
"உனக்கு நிச்சயமா இவன் தான் வேணுமா?" என்ற கேள்வியில் நன்றாய் சிரித்துவிட்டாள்.
"ம்மோவ்!" என்று முறைத்தவனை,
"என்னனு சொல்லு டா!" என்று வைதேகி சீற,
"இல்ல! தாலினா மஞ்சக் கயித்துல தான கட்டணும்.. இங்க தங்கத்துல இருக்கு.. அப்ப எப்படி மூணு முடிச்சு போடுறது?" என்று கேட்கும் நேரம் ஜீவனும் அவன் புறம் குனிந்திருந்தவன் அவன் கேட்ட கேள்வியை கேட்டுவிட்டான்.
"பாத்தியா தம்பி! என்னை என்ன பாடு படுத்துறான் தெரியுமா? அங்க இவனை பெத்தவரு.. என் பிள்ளைக்கு தான் கல்யாணம்னு பெருமை பேசிகிட்டு நிக்குதாரு!" என்று ஜீவனிடமே குறைபட,
"ஏன் டா?" என்றான் அவன் சத்யாவிடம்.
"ஜெனரல் நாலேஜ்!" என்று சத்யா கூறவும்,
"கெட்டி மேளம்! கெட்டி மேளம்!" என்ற ஐயரின் சத்தத்தை தொடர்ந்து, நாதஸ்வர சத்தமும் மேளச் சத்தமும் காதை நிறைக்க, நந்தினியின் முகத்தைப் பார்த்தவாறு அவள் கழுத்தினில் தங்கத் தாலியை அணிவித்தான் சத்யா.
"மிஸ்ஸஸ் நந்தினி சத்யபிரியன்.. வெல்கம் டு மை லைஃப்!" சத்யா கூற, அழகான புன்னகை அவளிடம்.
சுற்றம் சூழ, பெரியவர்களின் ஆசியும் ஆதரவும் என நிறைந்து தங்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்தனர் தம்பதியினர்.
சுபம்..