• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 10

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 10

"என்ன டா! என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?" உள்ளே வந்தவனை பதட்டத்துடன் கேட்டான் சங்கர்.

"உன்கிட்ட என்ன கேட்டாங்க? நேத்து ஸ்டேஷன் போனோமே! அது பத்தி எதாவது கேட்டாங்களா?" என்று சத்யா திருப்பி கேட்க,

"அந்த ஆளு என் மூஞ்சை தெரிஞ்ச மாதிரியே பார்க்கல.. நேத்து எப்போ சாப்பிட்ட, எப்போ தூங்கினனு தான் கேட்டான்" என்றான்.

"பரவால்ல டா.. நாட்ல கொஞ்சம்னாலும் நல்லவங்க இருக்காங்க போல.. அதான் அப்பப்போ மழையெல்லாம் வருது" சத்யா.

"கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு டா" சங்கர் இன்னும் பதட்டம் அடங்காமல் கேட்டான்.

"என்கிட்ட மட்டும் வேற என்ன கேட்பாங்க? அதே தான்.." என்றான் காலாட்டிய படி கட்டிலில் அமர்ந்து.

"சத்யா!" என்று அழைக்கவும் சத்யாவின் மொபைல் அழைக்கவும் சரியாய் இருந்தது.

"நந்தினி கூப்பிடுறா!" சத்யா கூறி மொபைலை சங்கரிடம் தூக்கி ஏறிய,

"பேசி தான் தொலையேன் டா.. காலையில இருந்து நூறு போன் பண்ணிட்டா" என்றபடி அட்டன் செய்தான்.

"சத்யா இல்ல?" சங்கர் குரல் கேட்கவும் நந்தினி கேட்க,

"அவன் இப்ப தான் வந்தான் நந்தினி.. சொல்லு" என்றான் சங்கர்.

"என்னாச்சு? அங்கே பெரிய பிரச்சனையா? காலேஜ் கூட மூணு நாள் லீவாம்" என்றாள் நந்தினி.

"ஓஹ்!" என்று கேட்டுக் கொண்டவன்,

"இங்கயும் கூட்டம் அதிகமா இருக்கு.. வெளில கூட போக முடியாது போல" என்றான்.

"ஆனா எப்படி நடந்திருக்கும்? நம்பவே முடியல" என்றாள் நந்தினி.. அவளுக்கு சத்யா மேல் சந்தேகம் எல்லாம் இல்லை.

"எங்களுக்கும்..." என்றவன் பின் மாற்றி,

"எனக்கும் தெரியல நந்தினி!" என்றான்.

"சரி கொஞ்சம் சேஃபா இருங்க.." என்ற நந்தினி தயங்கி,

"சத்யா இனி காலேஜ் வர மாட்டேன்னு சொன்னான்.. நீ கொஞ்சம் பேசி பாரு" என்று கூறிவிட்டு வைத்து விட்டாள்.

"உனக்கு உன் பிரச்சனை?" என கூறி வைத்து விட்டான்.

மூன்று நாட்கள் பித்து பிடித்தவன் போல சுற்றி வந்த சத்யா நான் இல்லை என்பதை போல அவ்வளவு இலகுவாய் அவன் இருக்க,

கேட்கவும் பயம், கேட்காமல் இருக்கவும் முடியவில்லை சங்கருக்கு.

"நைட்டு நான் தூங்கின அப்புறம் வெளில போனியா?" சங்கர் கேட்க,

"இல்லையே!" என்றதும் சங்கர் குழம்ப,

"இந்த ஹாஸ்டல் காம்போண்ட் விட்டு எங்கேயும் போகல" என்றவனை முறைத்தான்.

"இன்ஸ்பெக்டருக்கு உன்னையும் தெரிலையா?" அடுத்த கேள்வி.

"ம்ம்! தெரிஞ்சா மாதிரி காட்டிக்கல.. இன்னொன்னு தெரியுமா? எனக்கு ஆல் தி பெஸ்ட் எல்லாம் சொன்னார் அவர்" பெருமையாய் சத்யா கூற,

"ஆல் தி பெஸ்ட்டா? ஏன் டா?" சங்கர் புரியாமல் கேட்க,

"தெரில! ஆனா அவர் முகத்துல ஒரு தேஜஸ்! என்னவோ அவரால முடியாததை நான் செஞ்ச மாதிரி" சத்யா கிண்டல் போல கூற,

"சத்யா! உண்மையை சொல்லு! ஒருவேளை மாட்டினா அதுக்கு எதாவது பண்ணனும்.. ப்ளீஸ் டா.." சங்கர் கேட்க,

"கொலைய மறைக்குற அளவுக்கு வந்திட்டியா நீ?" என்ற சத்யா கேள்வியில் ஆடிப் போனான்.

"கொலைனு சொல்லாத டா பயமா இருக்கு" சங்கர்.

"லூசு தான் நீ.. நான் எவ்வளவு ரிலாக்ஸ்டா இருக்கேன் தெரியுமா? எங்க இது போயிட்டே இருக்குமோன்னு நினச்சேன்"

"ஸ்டாப் இட் சத்யா.. என்ன பண்ணினன்னு சொல்லு.. எனக்கு பைத்தியம் புடிச்சிடும் போல" என்றான் கோபமாய் சங்கர்.

"நான் ஒன்னும் பண்ணல டா.. சரக்கு கேட்டான் எடுத்து குடுத்தேன்.." என்று சத்யா கூற,

"சரக்கா? உன்கிட்டயா?" என்றான் புரியாமல்.

"ஆமா! என்கிட்ட தான் கேட்டான்.. சும்மா அவனை பாக்கணும் போல இருந்துச்சி அதான் அவன் ரூம்க்கு போனேன்.." என்றதுமே சங்கருக்கு கண்ணை கட்டியது.

"கதவை கூட லாக் பண்ணல டா அவனுங்க.. அவ்வளவு குடிச்சிட்டு மட்டையாகி கிடந்தாங்க.. இவனை எழுப்பி வேணுமான்னு தான் கேட்டேன்.. மொத்தமா சரிச்சுட்டு சாஞ்சுட்டன்" என்றான் கதை போல.

"அப்போ சரக்கு?"

"நான் தான் வாங்கிட்டு போனேன்.. கூடவே கொஞ்சமே கொஞ்சமா ஒரே ஒரு டப்பா பாய்சன்.. உர மருந்து கடைல பூச்சிக்கு வாங்கினதை இந்த விஷப்பூச்சிக்கு சேர்த்து கொடுத்தேன்"

"இவ்ளோ சாதாரணமா சொல்ற?" என்ற சங்கர் குரல் உள்ளே சென்றிருந்தது.

"வேற என்ன பண்ண சொல்ற? பிளான் பண்ணி எல்லாம் பண்ணல.. ஆனா அவன் சாகனும்.. அவன் எதுக்கு பூமிக்கு பாரமா? வெட்டி கொல்றது குத்தி கொல்றதுலாம் இவனுக்கு அதிகம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்க ஒர்த்தும் இல்ல.. அதான் சிம்பிளா முடிச்சிட்டேன்.." சத்யா சொல்லிய விஷயத்தோடு சொல்லிய விதமும் என சங்கர் விழிக்க,

"என்னால நிம்மதியா தூங்க முடியல, சாப்பிட முடியல.. எங்கேயும் கான்சென்ரேட் பண்ண முடியல.. இப்படியே எத்தனை நாள் டா சுத்தணும் நான்? தப்பு பண்ணினவன் ஊர் சுத்துறதை தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க என்னால முடியல.. பொண்ணுங்க பாவம் டா.. பொண்ணுன்னாலே பிரச்சனையோட தான் வாழணுமா? எல்லார்கிட்ட இருந்தும் காப்பாத்த முடியுமான்னு எனக்கு தெரியாது.. ஆனா இவன்கிட்ட இருந்து காப்பாத்தினதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.. ரொம்ப ரொம்ப சந்தோசம்"

சில நொடிகள் அங்கே அமைதியில் கழிய, ஒருவன் கதவை தட்டி வந்து அனைவரையும் வரவேற்பு அறைக்கு அழைப்பதாக கூறி சென்றான்.

"டேய்! நீ தான் பண்ணினன்னு தெரிஞ்சுச்சுன்னா?" சங்கர் கேட்க,

"கடவுள் கேட்டவங்களுக்கு நல்லதும் பண்ணுவார் நல்லவர்களுக்கு கெட்டதும் பண்ணுவார்.. ஆனா எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.. இந்த மாதிரி ஒரு பொறம்போக்குக்காக அதை இழந்துடக் கூடாதுன்னு தான் கரெண்ட் கட் பண்ணேன்.. அதையும் மீறி நடக்குறது கடவுள் கையில தான்.. அவங்களுக்கு முதல் சந்தேகம் டாஸ்மாக் மேல.. அண்ட் நெக்ஸ்ட் அவனோட பிரண்ட்ஸ்.." என்ற சத்யா,

"இன்ஸ்பெக்டர் முடிவு தான்.. பாக்கலாம்... அதுக்கு மேல எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணி தான் ஆகணும்" என நினைத்ததை கூறி இருந்தான்.

"என்னாச்சு?" வெளியே வந்து சத்யா அங்கே நின்ற ஒருவனிடம் கேட்க,

"போஸ்ட்மாட்டம் கொண்டு போயிருக்காங்க..ஸ்ரீதர் பிரண்ட்ஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய்ட்டாங்க.." என்று கூற,

"யாரும் ஹாஸ்டல் விட்டு வெளில போக கூடாது.. ரிப்போர்ட் வரவும் இன்ஃபார்ம் பண்றோம்.." என்று கூறி சென்றார் இன்ஸ்பெக்டர்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மதுபானத்தில் கலக்கப்பட்ட விஷத்தினால் தான் என முடிவு தெரிந்திருக்க, அது யார் மூலம் என்னவென்ற விசாரணை தொடங்கி இருந்தது.

ஸ்ரீதர், ஸ்ரீதர் நண்பர்கள் என யாரும் விடுதியில் வேறு யாருடனும் நட்பாய் இருந்ததில்லை. எனவே கணிக்க முடியாமல் இருக்க, நண்பர்களே எதற்காகவேணும் இதை செய்திருக்கலமோ என்றவொரு கோணத்தில் செய்தி திரும்பி இருந்தது.

சத்யாவிடம் மட்டும் ஸ்ரீதர் அவன் நண்பர்கள் என விரோதத்தை வளர்க்காமல் விடுதி முழுவதுமே அப்படி இருக்க, பெரிதாய் சத்யா இதில் சிக்கிவிட முடியாது தான்.

இது போகவும் கல்லூரியில் இருந்து ஐந்தே கிலோ மீட்டர் தூரத்தில் வீடு இருக்க ஸ்ரீதர் ஏன் விடுதியில் தங்கி இருந்தார் என்றும் பேச்சுக்கள் அதிகமாய் எழ அமைச்சருக்கு அனைத்தும் சிக்கலாகி போனது.

மகன் விருப்பத்திற்காக என செய்த அனைத்தும் அமைச்சர் தன் சொந்த விஷயத்திற்காக மறைக்கப்பட்டதை போன்ற பிரம்மை உருவாக்கப்பட, இங்கும் அரசியல் கலந்தது.

அடுத்த நாளே அமைச்சருக்கு பதவி பிரச்சனை எழ ஆரம்பிக்க மகனைப் பற்றிய எண்ணம் கீழே இறங்கி பதவி மேலோங்கி இருந்தது.

அது அடுத்த கட்டத்தை நோக்கி ஸ்ரீதர் கொலை வழக்கை முடுக்கி விட முடியாத படி இருக்க, தலைமை அதிகாரி உத்தரவுடன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடையது நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டையினால் என கொண்டு வந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு வந்திருந்தது.

"என்ன டா யோசிச்சுட்டு இருக்க?" சங்கர் கேள்வியில் சத்யா அவன்புறம் திரும்ப, தான்யாவும் நந்தினியும் அருகில் இருந்தனர்.

நாளை கல்லூரி திறப்பு. சத்யா வர மாட்டேன் என்றதிலேயே நந்தினியின் முழு எண்ணமும் இருந்தது.

அவன் அவ்வளவு கோபமாய் அன்று கூறி இருக்க, அதை மாற்றிக் கொள்வான் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவே இல்லை.

ஏற்கனவே அவன் அன்று பார்த்த பார்வையில் வேறு இவள் அதிகமாய் காயம்பட்டிருக்க இப்பொழுது அவனிடம் கேட்கவும் தயக்கமாய் இருந்தது.

சங்கர் தான் மூவரையும் வெளியே அழைத்து வந்திருந்தான். கடற்கரையில் கூட்டம் அதிகமாய் இருக்க இவர்கள் நால்வரும் அமைதியாய் இருந்தனர் சில நிமிடங்கள்.

சங்கர் எதையும் நந்தினியிடம் கூட கூறி இருக்கவில்லை. அவளுக்கு சந்தேகம் இல்லாமல் போனது எப்படி என்று என்ற எண்ணம் இருந்தாலும் கூடவே இருக்கும் தனக்கே சத்யாவின் இந்த குணம் புதிதாய் இருக்க, நந்தினியை என்னை சொல்வதென விட்டுவிட்டான்.

சங்கர் கேள்வியில் திரும்பினான் சத்யா.

"என்ன முடிவு பண்ணி இருக்க?" என்று சங்கர் கேட்கவும்,

"எதை பத்தி?" என்றான் தெரியாதவனாய்.

"அதான்! சொன்னியே! காலேஜ் வர மாட்டேன்னு" என்று கேட்க, சத்யா நந்தினி புறம் திரும்பியவன் அவள் குனிந்து கொள்ளவும் கடலைப் பார்த்தான்.

"சொல்லு டா!"

"என்ன சொல்ல? அதான் பிரச்சனை எதுவும் இல்லையே? அதுபோக வீட்டுப் பக்கம் காலேஜ் முடிக்காம போனா வீரபாகு கட்டைய தூக்கிட்டு வருவார்" என்றதும் நந்தினி சிரித்துவிட, இன்னும் சரியாய் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் வந்திருக்கவில்லை.

"அதானே! நல்லவேளை என்ன சொல்ல போறியோன்னு நினச்சுட்டே இருந்தேன்" என்று கூறவும்,

"இப்ப கூட யோசிச்சு பார்த்தா நாம ஏன் போகணும்னு தோணுச்சு.. அதான்! எப்படியும் முடிச்ச படிப்பை வச்சு என்ன செய்ய போறேன்னு தெரில.. சோ! இதை வச்சுட்டு அப்படியே போலீஸ் எக்ஸாம்ஸ்க்கு ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்" என்று கூறி நந்தினியைப் பார்க்க, அவளும் போலீசா என்று பார்த்தாள்.

"உன் அண்ணா போலீஸ் தானே? ஏதாச்சும் ஹெல்ப் வாங்கி குடு" என்றதும் அவள் சரி என தலையாட்ட,

"அவன் கேட்டா என்னன்னே கேட்காம தலை ஆட்டுவியா? என்ன டா திடிர்னு?" என்றான் சங்கர்.

"இதுல மறைக்க ஒன்னும் இல்ல.. எவனாச்சும் தப்பு பண்ணினா யோசிக்காம கன் எடுத்து பொட்டுன்னு போட்டுட்டு போயிட்டே இருக்கலாம்ல?" என்று சத்யா கூறவும் பே என நந்தினி விழிக்க,

சத்யா சத்தமில்லாமல் சிரித்தான் அவள் விழித்த விதத்தில்.


தொடரும்..