அத்தியாயம் 17
"என்ன டி சொல்ற நிஜமாவா?" தான்யா ஆச்சர்யமாய் கேட்க,
"ஹ்ம் ஆமா! அம்மா இப்ப அதை தான் சொன்னாங்க.." என்றாள் கவலையாய் நந்தினி.
"அதுக்கு ஏன் உன் மூஞ்சி இப்படி போகுது.. நல்லதுனு நினைச்சுட்டு போவியா"
"ப்ச்! என்னவோ டி! அண்ணா பாவம்ல.. பத்தாததுக்கு இப்பவே அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம் அண்ணிய.. என்னலாம் நினைச்சுட்டு பீல் பன்றாங்களோ.. அண்ணிக்கு குழந்தை பிறந்த அப்புறம் பார்த்துக்குறேன்னு வேற சொல்லி இருக்காங்க அண்ணா.. என்ன பிரச்சனை வர போதோ!" என்றாள்.
"இவ ஒருத்தி! உனக்கு உங்க அண்ணி தான் சரி டி.. சும்மா அடுத்தவங்களுக்காக பார்த்துகிட்டு.. அந்த டைம்ல தான் நமக்கு எக்ஸாமும் இருக்கு.. ஒழுங்கா அதுல கான்சேன்ரேட் பண்ணு.. அண்ணிய அண்ணா பார்த்துக்கட்டும்" என்று கூற, அதை தானே செய்ய முடியும் என தலையாட்டினாள் நந்தினி.
இப்படியே நாட்கள் செல்ல இன்னும் ஒரு வாரம் இருந்தது ஜெயாவின் வளைகாப்பிற்கு.. இன்னுமும் அவள் அன்னை வீட்டில் தான் இருந்தாள் ஜெயா.. எவ்வளவோ கேட்டும் ஜீவன் அழைத்து வரவில்லை.
இன்று தான் அழைத்து வருவதாக சொல்லி இருக்க, விஜயலக்ஷ்மியை என்னென்ன கேள்வி கேட்க வேண்டும் என அத்தனை கோபமாய் இருந்தாள் ஜெயா தன் அத்தை மீது.
ஆனால் கேட்க தான் வாய்ப்பு இல்லை.. தன் இருப்பு அதிகமாய் இருக்க ஜீவன் காட்டிக் கொண்டான் என்றால் ஜீவன் இல்லாத நேரம் வெளிவருவதே இல்லை விஜயலக்ஷ்மி.
பயந்து செல்கிறார் என ஜெயா நினைக்க, இல்லவே இல்லை.. மகன் எப்படியும் கண்காணிப்பான் என அறிந்தவர் தெரியாமல் கூட மருமகள் அகப்பட்டு விடாதபடி அவள் கண்களில் படாமல் இருந்தார்.
நந்தினியும் விடுமுறை என வந்திருந்த சமையம் வளைகாப்பும் உறுதியாகி இருக்க, சொந்த பந்தங்கள் அனைவருக்குமான அழைப்பில் வீரபாகு வீட்டிற்கும் அழைப்பு இருந்தது.
"நான் போகவா வேண்டாமா டா?" என சத்யாவிடம் அன்னை வைதேகி கேட்க,
"இதென்ன புதுசா என்கிட்ட கேட்டுகிட்டு.. பத்திரிக்கை வச்சா போறது தான?" என்றான் சாதாரணமாய்.
"அது சரிதான்.. ஆனா அந்த புள்ள அங்க இருக்குமே!" என்றதும் அவரை பார்த்தவன்,
"எந்த புள்ள?" என்றான் கிண்டலாய்..
"விளையாடாத டா.. நிசமா தான் கேட்குறேன்.. பாத்துட்டு எப்படி பேசாம வர?" என்றதும் இன்னுமாய் சிரித்தான்.
"ஒரு வழியா ஃபிக்ஸ் ஆகியாச்சு போல.. இல்ல ம்மா?" என்றான்.
"நீ தான டா சொன்ன... முடிவானத மாத்த முடியாது.. படிச்சு போலீஸ் ஆகி அவளை தான் கட்டுவேன்னு.. கட்டுவ தான?" என்று கேட்க,
"பேச்சு மாற மாட்டேன்.. இப்ப எப்பவும் போற வீடு மாதிரி போய்ட்டு வாங்க.. அவகிட்ட எதுவும் பேச வேண்டாம்.. நடுங்கி அவளே காட்டி குடுத்துருவா..." என்றான் புன்னகைத்து.
"எத?"
"ம்ம்! எனக்கு என்ன இருக்கோ அத.. அவளுக்கும் இருக்கு.. இப்ப தான் கொஞ்சமா எட்டி பாக்குது.. கலைச்சு விட்டுடாம போனோமா வந்தோமானு இருக்கனும்" சத்யா கூற,
"எங்க போனோமா வந்தோமானு இருக்க நமக்கே அறிவுர சொல்லறாரு துரை?" என வந்தார் வீரபாகு.
"ராங் டைமிங்!" என்ற சத்யா தன்னறைக்குள் திரும்பிக் கொள்ள,
"என்ன டி சொல்லிட்டு போறான் உன் மகன்?"
"அவனை விடுங்க! நம்ம விஜயா மருமகளுக்கு வளைகாப்பு.. அதான் கிளம்பிட்டு இருந்தேன்.. நீங்க வாரீங்களா இல்ல நான் மட்டும் போய்ட்டு வரட்டுமா?"
"அதான் துரை அங்க போய் பொண்ணு கேட்க சொல்லுதாரோ! இங்க பாரு! போனோமா வந்தோமானு இரு.. நீயும் எதாவது ஏழரைய இழுத்து விட்ட" என்று மிரட்டினார் வீரபாகு.
"இதுக்கு அவனே தேவல.. அவனே அந்த பொண்ணுட்ட எதுவும் பேச்சு வச்சுக்க வேண்டாம்னு தான் சொல்லிட்டு போறான்.. நீங்க வேற.. தள்ளுங்க நான் கிளம்புறேன்"
"ம்ம் போ போ! என்னவோ பண்ணிக்கிட்டு இருக்கான்.. இப்படி அமைதியா இருக்கவனா உன் மவன்.." என்று புலம்பலோடு உள்ளே சென்றார் வீரபாகு.
அவர் அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அறையில் இருந்து வெளி வந்தவன் வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிட்டான்.
சங்கரையும் போனில் அழைத்து வர சொல்லியவன் நந்தினி பொங்கல் வைத்த கோவிலில் இருக்க, அங்கே வந்து சேர்ந்தான் சங்கர்.
"என்ன டா விழாவ சாக்கா வச்சு நீயும் நந்தினியை பாக்க போயிருப்பன்னு நினச்சேன்.. என்னைய கூப்பிட்டு இங்க வந்து உட்காந்து இருக்க" என்றான் சங்கர்.
"என்னவோ மாப்பிள்ளை மறுவீடு போகாம வந்த மாதிரி என்ன டா கேள்வி இது? எங்களுக்கு என்ன கல்யாணமா ஆகி போச்சு?"
"அந்த அளவுல சரியா இருந்தா சரி தான்.. ஆமா ரிசல்ட்டு நாளைக்கு வருதாமே!" என்றான்.
"ம்ம்! ஆமா.. நெக்ஸ்ட் பிஸிக்கல் டெஸ்ட் இருக்கும்.. ஒன் வீக் லீவ் போடணும் அதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்!" என்றான் சத்யா.
"பிஸிக்கள் டெஸ்ட்டா! அப்ப பாஸ்னு கன்ஃபார்ம் பண்ணிட்டியா?"
"ஏன் இல்லாம? நான் மட்டும் இல்ல.. நீயும் பாஸ் தான்.. நீ இன்னும் கொஞ்சம் பாடிய டெவெலப் பண்ணனும்" என்றான் தீவிரமாய் பார்த்து வைத்து.
"ம்ம்க்கும்.. அதுக்கு தான் பாடியா தான் போவணும்.. ஏன் டா? உன்ன மாதிரி ஃபிட்நெஸ் எல்லாம் நமக்கு ஆகாது.. நான் இப்படியே இருந்துக்கிறேன்" என்று பேச்சுக்கள் தொடர்ந்தது.
மனையில் அமர வைத்து சந்தனத்தை நெற்றி கன்னத்திலும் கைகளிலுமாய் தடவி இருக்க, அதன் ஜொலிப்போடு முகத்தில் பெருமையையும் தாங்கி அமர்ந்திருந்தாள் ஜெயா.
சொந்த பந்தங்கள் அனைவரும் வளையளுடன் சந்தனம் வைத்து பூத்தூவி வாழ்த்து கூறி சென்றனர்.
கூட்டத்தோடு அமர்ந்து இருந்த வைதேகி ஜெயாவின் பின்னால் புன்னகை முகமாய் நின்ற நந்தினியையும் நன்றாய் பார்த்து வைத்துக் கொண்டார்.
அனைவரும் வந்தவர்கள் கிளம்பி இருந்த நேரத்தில் வீட்டினருடன் ஜெயா வீட்டினர் மட்டும் இருக்க, "ம்மா! கேளு!" என்று தன் தாயை பிறர் அறியா வண்ணம் தூண்டி விட, அவளுக்கு தலையசைத்தவர்,
"மாப்பிள்ளை!" என்று அழைத்தார்.
"சொல்லுங்க அத்தை.. மாமா எங்க?" என்று கேட்க,
"இங்க தான் இருந்தாங்க.. வெளில நிப்பாங்கனு நினைக்குறேன்.." என்றவர்,
"அப்புறம்! ஜெயா..." என்று தயங்க,
"ஜெயாக்கு என்ன?" என்றான் அவளைப் பார்த்தபடி.
"இல்ல ஜெயாக்கு இங்க தான் உங்களோட இருக்கனும்னு ஆசையா இருக்காம்.. மாசமா இருக்கும் போது..." என்று தயங்கி தயங்கி கூற,
"என்ன த்த நீங்க.. மாசமா இருக்கும் போது சாப்பிட ஏதாவது ஆசைப்பட்டா வாங்கி குடுக்கலாம்.. இதெல்லாம் முறை.. உங்களுக்கு தெரியாததா? நீங்க சொல்லுங்க புரிஞ்சிப்பா.." என்றவன்,
"தளச்சன் புள்ள வேற.. உங்களுக்கு மாமாக்கு எல்லாம் கூட இருந்து பேரப் பிள்ளைய பாக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல.. நான் தான் அடிக்கடி வந்து அவளை பாத்துக்குவேனே! குழந்தை பொறந்து ஆறு ஏழு மாசம் ஆகட்டும்... அவளே எல்லாம் தெரிஞ்சிக்கட்டும்.. அப்புறம் வந்தா போதும்.. நீங்க எடுத்து சொல்லுங்க" என புத்தியில் உறைப்பது போல தாய்க்கும் மகளுக்கும் சேர்த்து பதிலடி கொடுத்து ஜீவன் செல்ல,
'ஆறு ஏழு மாசமா?' என அவன் எண்ணத்தில் அதிர்ந்து அமர்ந்திருந்தாள் ஜெயா.
ஒரு முறை என்றாலும் அழுத்தம் திருத்தமாய் கூறி விட்டவனிடம் திரும்ப பேசிவிட முடியுமா என்ன?
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இப்பொது தான் எழுந்தது ஜெயாவிற்கு. சில நாட்களாய் கணவன் தன்னிடம் காட்டும் முகம்.
தன் உபாதைகளில் அவன் நடத்தையை சரியாய் கவனிக்காமல் இருந்திருக்க, இது என்றிலிருந்து என சிந்தித்துப் பார்க்க எதுவும் பிடிப்படவில்லை.
விஜயலக்ஷ்மியிடம் கேட்கலாம் என்றால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவளருகில் தாயை நிற்க விடவில்லை ஜீவன்.
குழப்பமும் கோபமுமாய் தாய் வீடு வந்து சேர்ந்தாள் ஜெயா.
இரவு தனக்கு தானே என்னவோ நினைத்தபடி சிறிய வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தார் வைதேகி. கூடவே முகத்தில் சிறிதாய் ஒரு புன்னகை எதையோ நினைத்தபடி வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என காட்ட, அவரருகில் சென்றான் சத்யா.
"எம்மோவ்!" என்று சத்தமாய் அழைக்க,
"ஏன் டா கத்துற?" என்றான் மகனை அப்பொழுது தான் பார்த்து.
"தனியா சிரிச்சுட்டு இருந்தியே.. அதான் தெளிவா தான் இருக்கியானு பார்த்தேன்" என்றவன்,
"எங்க அவரை?" என்றான்.
"ஏன் பாக்காம சோறு இறங்காதோ?" என கேட்க,
"கேட்டேன்!" என்றவன் தானாய் கூறுவார் என எதிர்பார்க்க வாயே திறக்கவில்லை வைதேகி.
"இருந்தாலும் நீ அவருக்கு ஒரு பாடி மேல தான் ம்மா.. எவ்வளவு வீம்பு!" என்று சத்யா கூறவும் உடனே காரணத்தை அன்னையும் கண்டு கொண்டார்.
"உனக்கு மேலயா? உனக்கே என்கிட்ட இருந்து வந்தது தான்.. பின்ன எனக்கு யாரும் சொல்லி தரணுமாக்கும்?" என்றார் கிண்டலாய்.
"சரி சரி சொல்லு! என்ன ஆச்சு காலையில?" என்ன அவனே ஆரம்பித்து வைத்தான்.
"அப்படி கேளு! பூணைக்கு சமயக்கட்டுல என்ன வேலைனு எனக்கு தெரியாதாக்கும்"
"பாத்தேன் பாத்தேன்.. ஏற்கனவே அந்த புள்ளைய திருவிழா, எதாவது கல்யாண வீடுனு முன்னாடி பாத்துருக்கேன் தான்.. ஆனா இன்னைக்கு என்னமோ என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா.. வயசாகுது இல்ல.. கண்ணு சரி இல்ல போல"
வைதேகி பேச பேச குறுநகை மின்ன பார்திருந்தவன் அவர் இறுதி சொல் பிடிப்பட சில நொடிகள் பிடிக்க, "ம்மோவ்!" என்றான் புரிந்ததும்.
"ஆமா டா! அத தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்பவும்.. வீரபாகு மவனுக்கு இப்படி ஒரு பொண்ணானு.." என்று கேட்டதும் இன்னும் அவன் முறைக்க,
"உனக்கென்ன! நீயும் நல்லா தான் இருக்க.. பெத்தவ! அப்படி தான சொல்லி ஆவனும்.." என வார்த்தைக்கு வார்த்தை அவனை வெறுப்பேற்ற,
"போதும்! நான் கிளம்புதேன்!" என திரும்பிவிட்டான்.
"நில்லு டா.. சும்மா சொன்னா கோச்சுக்குவான்... எல்லாம் சரி தான் டா.. நீயும் போலீஸ் ஆயிட்டன்னு வச்சுக்கோயேன்.. நானும் அவரும் கொஞ்சம் தைரியமா போய் கேட்கலாம்.. ஆனா இப்ப அந்த புள்ள இருக்க அழகுக்கும் அவங்க வீடு இருக்க பவுசுக்கும் நீ சும்மா இருந்தன்னு வையி... ம்ம்ஹும்ம் நானே வேண்டாம் மாட்டேன்னு சொல்லுவேன் டா" என்றார் நிஜத்தை.
"ப்ச்! அதெல்லாம் சும்மா உங்களை அப்படி போய் நிக்க சொல்லிற மாட்டேன்.. பாரு அய்யா என்ன மாதிரி வர போறேன்னு.. நான் ஒரு விஷயத்துல தெளிவில்லாம இறங்குவேனா? சும்மா அப்படி போய் நின்னு கெத்தா கேட்கணும் என் மவனுக்கு உங்க பொண்ணை தாங்கன்னு!" அப்படி இருக்கும் நம்ம பொசிஸன்" என்றான் கைகளை ஆட்டிக் காட்டி.
"கேட்க நல்லா தான் இருக்கு.. செஞ்சும் காமிச்சுட்டன்னு வையேன்.. என்னை விடு உன் அப்பாவையே கையில புடிக்க முடியாது போ!" என்று கூறி சிரிக்க,
"அது சரி!" என சிரித்தான் சத்யாவும்.
தொடரும்..