அத்தியாயம் 18
"என்ன இப்பல்லாம் காலேஜ்ல பார்க்கவே முடியல உங்களை.. டிகிரி வாங்குற பிளான் இருக்கா இல்லையா?" தான்யா கேட்க, அருகில் நந்தினி.
"நல்ல கேள்வி! ஒழுங்கா டிகிரிய வாங்கிட்டு எதாவது ஒரு கம்பெனி போய் குப்பை கொட்டிருப்பேன்.. போலீஸ் ஆக்குதேன் வானு ஆசைய காட்டி கூட்டிட்டு போய் ஓடுன்றான் தாவுன்றான்.. ஷாப்பா! இவ்வளவு கஷ்டப்படனும்னு தெரிஞ்சிருந்தா இவன் கூட எக்ஸாம் எழுத போயிருக்கவே மாட்டேன்.. அப்படியே எழுதி இருந்தாலும் பாஸ் ஆகி இருக்க மாட்டேன்" என்று அவ்வளவு சலித்துக் கொண்டான் சங்கர்.
தேர்வு முடிவுகள் வந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது.. இருவருமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.. எந்த அளவுக்கு தன் முடிவில் சத்யா உறுதியாய் நின்றானோ அதே அளவில் சங்கரையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தான்.
"சத்யா நிஜமாவே கிரேட் தான்.. சும்மா பேச்சுக்கு சொல்லாம ரொம்ப டீப்பா இறங்கி இருக்கீங்களே ரெண்டு பேரும்" என்றாள் தான்யா.
"ஒன்னு வேணும்னு முடிவு பண்ணிட்டா அது கையில வந்த அப்புறம் தான் அடுத்த வேலையை பார்க்கணும்.. அதுக்காக என்ன ரிஸ்க் வேணா எடுக்கலாம்.. அது தான் என் பாலிசினு கூட வச்சுக்கலாம்" சத்யா தான்யாவிடம் கூறினாலும் அர்த்தம் புரியாமல் இல்லை அங்கிருந்த மூவருக்கும்.
"பிஸிக்கல் டெஸ்ட் எப்போனு ஒருத்தங்க என்கிட்ட கேட்டாங்க!" தான்யா கூற, பின் நின்று அவள் இடுப்பில் பலமாய் கிள்ளி வைத்தாள் நந்தினி.
"யாரு மா அது? எங்க மேல அவ்வளவு அக்கறை வச்சு கேட்டது?" புரியாமல் சங்கர் கேட்க,
"யாரா இருந்தாலும் நேர்ல கேட்க சொல்லு!" என்றுவிட்டான் சத்யா. முகம் சுருங்கிவிட்டாள் நந்தினி.
"தனு! அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்!" தான்யா நந்தினி இருவரையும் கிராஸ் செய்து சென்று பின் மீண்டும் அவர்கள் முன் வந்து நின்ற சத்யா சொல்ல,
"என்ன?" என்றாள் அவள்.
"ஒன்னும் இல்ல.. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு கேன்டீன்ல வெயிட் பண்ணுவேன்.. உன் பிரண்ட்டை வர சொல்லு.. ஷார்ப் ஃபைவ் பிஎம்!" என்றவன் நிற்காமல் சென்றுவிட அதிர்ந்தது என்னவோ அனைவரும் தான்.
முதலில் புரியாமல் நின்ற நந்தினி பின் இமைக்க மறந்து நின்றுவிட்டாள் சில நொடிகள்.
"யாரை சொல்லிட்டு போறான்?" அதிர்ச்சி விலகி நந்தினி கேட்க,
"எனக்கு இந்த காலேஜ்ல ஒரே ஒரு பிரண்ட் தான்.. அப்ப யாரைனு நீயே டிசைட் பண்ணிக்கோ!" என்று கிண்டலாய் சொல்லிவிட்டு தான்யா செல்ல, இதயம் பலமாய் அடித்துக் கொண்டது நந்தினிக்கு.
"எதற்கு? ஏன்? எப்படி?" இந்த கேள்விகளெல்லாம் தலைக்கு மேல் வலம் வந்து கொண்டே இருக்க, அன்று முழுதுமே இயல்பை தொலைத்து நின்றாள் நந்தினி.
வகுப்பில் அவனைப் பார்ப்பதும் மணியைப் பார்ப்பதும் வகுப்பை கவனமே இல்லாமல் கவனிப்பதும் என நேரத்தை பார்த்து பார்த்து அவள் நகம் கடிக்க, அதனை யாரும் அறியா கள்ளப் புன்னகையோடு ரசித்திருந்தான் அவன்..
'எவ்வளவு தவிக்க விட்ட நீ? இப்ப தெரியுதா?' என்று நினைத்துக் கொள்ளவும் மறக்கவில்லை சத்யா.
அவள் பார்வைகள் சில மாதங்கள் முதல் தன்னை சுற்றி வட்டமிடுவதை கவனித்து இருந்தாலும் மூளை மனம் என இரண்டும் காதலோடும் தன் அடையாளத்தை தேடும் பணியோடும் போராடி இருக்க, அவளிடம் பேசிடவே முடியவில்லை.. முயலவும் இல்லை.
இன்றுமே அவளிடம் பேச எல்லாம் நினைக்கவில்லை. அந்த நொடி தோன்றியதை உடனே சொல்லியும் விட்டவன் இப்பொழுது அவள் படும் பாட்டை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான்.
"என்ன டா பேச்சும் ஒரு மாதிரி இருக்கு.. ஆளும் வேற மாதிரி இருக்க.. இப்ப என்ன பேச போற அங்க?" சங்கர் நண்பனிடம் கேட்க,
"எங்க ஃபியூச்சர் பத்தி பேச எவ்வளவோ இருக்கு.. உனக்கு எதுக்கு டா சொல்லனும்?" என்றான் அசால்ட்டாய்.
"ஃபியுச்சரா? டேய்! அவ அண்ணனுக்கு தெரிஞ்சா அத இல்லாம பண்ணிடுவான்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீ லவ் மூட்ல பினாத்துற?"
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. ஃபியுச்சர் கூடவே ஃபியுச்சர்ல வர்றவங்களும் ரொம்ப முக்கியம்.."
"ஆரம்பிச்சுட்டான்.. கொஞ்ச நாளா தான் நல்லா இருந்தான்.. மறுபடியும் காதல் பைத்தியம் முத்தி போச்சு.. இனி சகவாசம் வச்சுக்க கூடாது" சங்கர் பேச்சுக்கு,
"தெரிஞ்சா சரி!" என்ற ஒற்றை பதில்.
மாலை மணி ஐந்தை தொட சில நிமிடங்களே இருக்க, இங்கே நந்தினிக்குள் அத்தனை அத்தனையாய் போராட்டம்.
ஒரு புறம் துளிர்விட்ட காதல் மனம் என்றாலும் மறுபுறம் அவள் குடும்பமும் கண்முன் தோன்றிவிட, ஒரு நொடி 'இல்லை வேண்டாம்.. நான் போக மாட்டேன்' என நினைப்பவள், மறுநொடியே சத்யாவிற்கு ஆதரவாய் போர்க் கொடி பிடிக்க, மனம் என்னவோ துவண்டு போனது இறுதியில்.
மனதை மறைக்கவும் முடியாமல் வீட்டினருக்கு துரோகம் செய்வதாய் தோன்றும் எண்ணத்தை மறைக்கவும் முடியாமல் இறுதியில் வகுப்பில் தலை சாய்ந்தபடி அமர்ந்துவிட்டாள் சில நிமிடம்.
வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பிவிட, தான்யாவும் தன் அருகில் இல்லை என்பதை கூட பாராமல் தலை சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு அருகில் சில அடி இடைவெளியில் அமர்ந்தான் சத்யா.
"இப்ப எதுக்கு இவ்வளவு மூட்டவுட்? பேசணும்னு தான சொன்னேன்? அதுக்கேவா?" என்ற சத்யாவின் குரலில் துள்ளி எழ, அங்கே இருவர் மட்டுமே.
"எல்லாரும் போனது கூட தெரில இல்ல.. சுத்தம்.. இதுல உன்ன நம்பி நான் கேன்டீன்ல போய் உட்காரல நல்லவேளைக்கு!" நேராய் சத்யா கூறினான் நந்தினியிடம்.
அவனும் பார்க்கிறான் என்பதெல்லாம் அந்த நேரம் மறந்து போக, இமைக்க மறந்து தான் பார்த்தாள் அவனை நேருக்கு நேராய்.
சத்யாவிற்கு தான் திண்டாட்டமாய் போனது. அந்த நேரம் தோன்றியதை பேச வேண்டும் என முடிவெடுத்து கூறிவிட்டாலும் என்ன பேச என எதுவும் இல்லாமல் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என வந்திருக்க, இப்படி பார்த்து வைப்பவளிடம் என்ன பேசிவிட முடியும்?
விஷயம் இருந்தலாவது சரி.. இங்கே எதுவும் இல்லாமல் அவள் பார்வையின் தாக்கத்தில் தானுமாய் நின்றவன் சில நொடிகளில் சுதாரித்து விட்டான்.
"ம்ம்க்கும்ம்!" என்று குரல் கொடுத்தவன், "இது கிளாஸ் ரூம்.. நான் நல்ல பையன்!" என்று சொல்லி வைக்க, இன்னும் அதே பார்வை என்றாலும் அவளிடமும் சுதாரிப்பு.
"சரியாய் கூற வேண்டும் என்றால் ஒரு வருடம் வர போகிறது அவளிடம் அவன் நேருக்கு நேராய் நின்று பேசி.. கோபமாய் இருக்கிறான் என இவள் நினைத்து அந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை விட்டு விலகி என நெருங்கி வர வருடங்கள் எடுத்திருந்தது.
அதை தான் அவள் நினைத்திருக்க, பார்வை மட்டும் அவன் முகத்தினில் விழி அகற்றாமல்.
"போதும் லுக்கு! ப்ரொபோஸ் பண்ணினதுக்கே பதில் வரலையாம்.. இதுல அடிமனச எடுத்துட்டு போற மாதிரி லுக்கு வேற!" என்றவன் கையிலிருந்த நோட்டை சட்டென வைக்க, அந்த சத்தத்தில் மீண்டுமாய் ஒரு தெளிதல் நந்தினியிடம்.
"என்ன சொன்ன?" என்னவோ பேசினானே என கேட்டு வைத்தாள்.
"ம்ம்! உட்காருன்னு சொன்னேன்.." என்றவனுக்கு இன்னும் சில அடி தூரம் சென்று அமர்ந்தவள் சுற்றிலும் பார்க்க,
"அதே நம்ம கிளாஸ் தான்!" என்றான்.
"ம்ம்ம்!" என்றவளுக்கு பேச்சே வரவில்லை.
"காலேஜ் சேருறதுக்கு முன்னாடி இருந்த உனக்கும் இப்ப இருக்குற உனக்கும் என்னால நிறைய டிஃபரன்ஸ் சொல்ல முடியும்.. உண்மை தான?" என்று சுற்றி வளைக்காமல் நேராய் விஷயத்திற்கு வந்தான்.
மறுக்க முடியாதே! ஆம் என தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.
"ம்ம்! சோ?" அவன் கேட்க,
"ப்ளீஸ்! வேண்டாம்.. எதுவும் பேச வேண்டாம்.. எதுவா வேணா இருக்கட்டும்.. ஆனா பேச வேண்டாம்.. நான் மாறி இருக்கேன் தான்.. ஆனா அது எந்தளவுன்னு எனக்கு தெரியல.. என் பேமிலிக்கு தெரியாம.." என நினைத்து மூச்சொன்றை பலமாய் விட்டவள்,
"என்னால நினச்சுக் கூட பார்க்க முடியல.. அவங்க தான் எனக்கு எப்பவும் முதல்ல.. தப்பு சரி எல்லாம் அப்புறம் தான்" என்று மொத்தமாய் கூறிவிட்டாள் குழப்பதை மனதில் கொண்டு.
"ஹப்பா! தெளிவு தான்.. அது சரி.." என்றவன் கைகளால் தாளமிட, நந்தினியிடம் அமைதி.
"ஓகே! நீ கிளம்பு! என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
புன்னகையுடன் அவன் விடைக்கொடுப்பதாய் தலையசைக்க, மீண்டும் ஒரு ஆயாச உணர்வு நந்தினியிடம்.
அவனை விடவும் முடியவில்லை.. பேசிடவும் முடியவில்லை என அங்கேயே தாளாமல் நின்றவள் மனம் புரிந்து கொண்டான்.
அதில் சிறு புன்னகையோடு எழுந்து கொண்டவன், "இது முதல் ஸ்டேஜ்.. அப்படி தான் இருக்கும்.. எனக்கு புரியுது" என்றவன் "போலாம்" என்று கூறி வெளியே கைகாட்டி அவனும் நடக்க, பின்னோடே வந்தாள் அவளும்.
எவ்வளவு கணிக்கிறான் அவளை.. பேச்சச்சு தான் போனாள் நந்தினி அவனின் புரிதலில்.. அது தான் அவளை பெரிதாய் பாதித்ததும் கூட.
தொலைவில் இருந்து அவன் பார்த்து மட்டும் கொண்டிருந்த போது புரியாதது அருகில் நின்று நான் இருக்கிறேன் உனக்காய் என ஒவ்வொரு அசைவிற்கும் அவன் பதிலுரைக்க, அங்கேயே சாய்ந்து விட்டாள் அவன் புறம்..
ஆனால் ஏற்று கொள்ளவும் அதை பகிர்ந்து கொள்ளவும் விடாமல் பாய், பதட்டம் என மொத்த குடும்பமும் கண் முன் நிற்க அதை மீறி வெளிவந்து அவனிடம் பேசிடும் தைரியம் மட்டும் சுத்தமாய் இல்லை.
அந்த நேரம் மட்டும் இல்லாது அவள் எல்லா நேரங்களிலும் அறியாத ஒன்று அவன் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவளையும் தன்னோடு வைத்தே என்பது தான்.
தன் காலம் மொத்தத்திற்கும் என அவன் நந்தினியையும் சேர்த்து யோசித்து ஒவ்வொன்றயும் செய்ய, ஏற்க என ஆரம்பித்து இருக்க, அது அறியாமல் அவனை ஒதுங்கி நின்று காதல் கொண்டாள் கண்களால்.
ஆறு மணிக்கெல்லாம் இதே சிந்தனையோடு விடுதியில் எதுவும் செய்ய விருப்பம் இல்லாமல் அமர்ந்திருக்க,
"பொண்ணு பிறந்திருக்கா நந்து! நீ அத்தையாகிட்ட!" என்று அன்னை அலைபேசியில் அத்தனை மகிழ்ச்சியோடு உற்சாகமாய் பேச அந்த தினம் மற்றது அனைத்தும் மறந்து தன் அண்ணன் மகளை காண ஊரை நோக்கி பயணித்தாள் அந்த இரவு நேரத்தில் நந்தினி.
தொடரும்..