• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 2

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 2

"சரி சரி அழாத நந்து! உனக்கு தெரியாதா ஜெயாவை? பேசினா பேசிட்டு போகட்டும்னு விடு.." என்று போனில் சமாதானம் செய்து கொண்டிருந்தார் விஜலட்சுமி.

"ஏன் ம்மா அண்ணி இப்படி இருக்காங்க?" என்று ஏங்கியபடி கேட்க,

"அவளை தெரியாதா உனக்கு? மருமகன்னு வந்துட்டா சில விஷயங்களை கண்டும் காணாம இருந்துடனும்.. அண்ணா நல்லா தானே பேசுறான்.. அப்புறம் என்ன உனக்கு?" என்றார்.

"அண்ணா நைட்டு போன் பண்ணும் போது நான் தூங்கிட்டேன் ம்மா.. அதான் கால் பண்ணினேன்.. இல்லைனா அண்ணாக்கு கால் பண்ணிருக்கவே மாட்டேன்" என்றாள்.

"விடு நந்து.. உனக்கு காலேஜ் எல்லாம் புடிச்சிருக்கா?" என்று விஜயலட்சுமி பேச்சை திசை திருப்ப, நந்தினியும் கொஞ்சம் கொஞ்சமாய் அதை விட்டு வெளியே வந்தாள்.

"அப்புறம் அந்த சத்யாவும் உன் காலேஜ்ல தான் ஜோயின் பண்ணிருக்கானாம்.. உன் கிளாஸ் தான்.. உனக்கு தெரியுமா? இப்ப தான் கோவில்ல வச்சு அந்த சங்கர் அம்மா சொன்னாங்க.." என்று அன்னை கூறவும்,

"என்னம்மா சொல்றிங்க?" என அதிர்ச்சியானாள் நந்தினி.

"ஆமா நந்து! அவன் எதுக்கு வர்றான்னு தான் நமக்கு தெரியுமே! என்ன பண்றது?"

"ம்மா! என்னம்மா இப்படி சொல்றிங்க.. அவனுக்கு வேற காலேஜே கிடைக்கலையா!" என்று புலம்ப ஆரம்பித்தவளுக்கு அண்ணி கவலை எல்லாம் இரண்டாம்பட்சம் ஆனது.

"என்னவோ ம்மா.. நீ பார்த்து இருந்துக்கோ.. உன் அண்ணன்கிட்ட எதுவும் சொல்லல.."என்றவர் பேசி முடித்து வைத்திருக்க, எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல வந்தது நந்தினிக்கு.

நந்தினியிடம் பேசி முடித்து வெளியில் வரும் பொழுது ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயா.

மகன் வீட்டில் இல்லை என்பதை அதை வைத்தே கண்டு கொண்டவர் சமையல் செய்ய ஆரம்பிக்க, பார்த்தும் நகராமல் அமர்ந்திருந்தாள் ஜெயா.

இதுவே ஜீவன் வீட்டில் இருக்கும் நேரமாய் இருந்திருந்தால் விஜயலட்சுமியை இப்படி அமர வைத்துவிட்டு அவள் வேலையை செய்து கொண்டிருப்பாள்.

திருமணம் ஆன புதிதில் எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு உரிமை உணர்வு என நினைத்து மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க, அதை பற்றிக் கொண்ட ஜெயா தொடர்ந்து ஜீவனின் அன்னை, தங்கையை ஒதுக்க ஆரம்பித்தவள் தான் நாள் போக்கில் அவர்கள் குணம் பிடிப்படவே அதையே தனக்கு சாதகமாகவும் உபயோகிக்க கற்றுக் கொண்டாள்.

"என்ன டி அழுது முடிச்சிட்டியா? அம்மாகிட்ட பேசியாச்சா?" என்று நந்தினியின் தோழி தான்யா வர,

"ம்ம்!" என்றவள் சத்யாவின் சிந்தனையில் இருந்தாள்.

"அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்குற? வீட்டு நியாபகமா?" என்று கேட்கவும்,

"ப்ச்! இல்ல தனு.. அந்த சத்யா இருக்கான்ல..." என்று கூறவுமே,

"அவனுக்கென்ன.. இப்ப யார் பின்னாடி சுத்துறானோ!" என்று கிண்டல் செய்தாள்.

"சொல்றதை கேளு டி.. அவன் ரொம்ப டேஞ்சர்.. நம்ம காலேஜ்ல சீட்டு வாங்கிட்டானாம்" என்றாள்.

"எது? இங்கேயா? உனக்கு எப்படி தெரியும்? நிஜமாவா சொல்ற?" என்று கேட்டவளுக்கே கண்ணை கட்டியது.

"அப்பவே அண்ணாகிட்ட சொல்லிடனும் நினச்சேன்.. போச்சு.. இனி சொன்னா ஏன் இவ்வளவு நாள் சொல்லலன்னு கோபம் வரும்" என்று கூற,

"ஏன் டி நீ என்ன அவ்வளவு அழகாவா இருக்க?" என்றாள் நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்து தான்யா.

"சும்மா இரு டி.. நீ வேற!" என்றவள் நகத்தை கடிக்க,

"கோவில் திருவிழால பார்த்தாலும் பார்த்தான்.. ஷப்பா!.. ஓவரா தான் போறான்.. வரட்டும் என்னனு கேட்ருவோம்" என்றாள் தான்யா.

"என்ன டா ஆயிரம் தான் மொத்தமே தேறுது?" சங்கர் கேட்க,

"அடி பிச்சுடுவேன்.. என் அம்மாகிட்ட அவ்வளவு தான் வாங்க முடிஞ்சது.. அதுக்கே ஏகப்பட்ட பேச்சு.. ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு பேசிட்டாங்க.." என்றவன் பேருந்தில் ஏறி அமர, அவனருகில் அமர்ந்தான் சங்கர்.

"உன் அப்பா கிளம்பும் போது ஒன்னும் சொல்லல?" சங்கர் கேட்க,

"சொல்லாம இருப்பாரா? அவ அண்ணன்காரன் போலீஸ்.. நியாபகம் இருக்கட்டும்.. படிச்சு முன்னேற வழியப் பாருன்னாரு"

"அதுவும் சரி தான்.. போலீஸ்காரன் வீட்டுக்கு மாப்பிள்ளையா போகணும்னா நம்மளும் சும்மா வேற லெவல் இருக்கனும் டா.. அப்போ தான் கெத்தா வெளில சொல்லிக்கலாம்" என்று சங்கர் கூற,

"எனக்கு அதுலாம் பிரச்சனையே இல்லை டா.. நந்து என்னை புரிஞ்சிக்கனும்.. என் லவ்வை அக்ஸப்ட் பண்ணனும் அவ்வளவு தான்.. அது மட்டும் நடந்துட்டா போதும்.. கேம்பஸ்ல செலக்ட் ஆன மாதிரி ஆயிரம் இருக்கு வெளில" என்றான்.

"ஆமா கேட்க மறந்துட்டேன் பாரு! கேம்பஸ்ல செலக்ட் ஆனதை வீட்டுல சொல்லவே இல்லையா?"

"அம்மாக்கு தெரியும் டா.. அப்பாகிட்ட சொல்லல.. சொல்லி இருந்தாலும் என் விருப்பம் தான்.. பெருசா பயப்பட ஒன்னும் இல்ல" என்றவன்,

"எல்லாம் நல்லதா நடக்கணும்" என்று நினைத்துக் கண்களை மூட, நந்தினி கண்களுக்குள் நின்று கொண்டாள்.

ஒரு வருடம் முன்பு நடந்த திருவிழாவில் தான் நந்தினியை பார்த்தான் சத்யா.

முதன்முதலில் பார்த்தான் என்றெல்லாம் கூற முடியாது.. ஒரே ஊர், பக்கத்து பக்கத்து தெரு தான்.. ஏற்கனவே தெரியும் தான் என்றாலும் அன்றைய தினம் தான் அவனுள் காதல் பிரவாகம் ஊற்றெடுத்த நாள்.

அவளை கொஞ்சம் அதிகமாய் கவனித்த நாள்.

"போலிஸ்காரன் தங்கச்சி டா!" என அவன் பார்வைக்கே சங்கர் காதில் கூற,

"போலீஸ்காரன் தங்கச்சிக்கெல்லாம் கல்யாணமே பண்ண மாட்டாங்களா?" என்றிருந்தான்..

விளையாட்டாய் ஆரம்பித்ததா என்று கேட்டாலும் இல்லை தான். அன்றே அவன் முடிவு செய்துவிட்டான் இவன் வாழ்க்கை இனி நந்தினியோடு தான் என்று.

சில நாட்களிலேயே ஆங்காங்கே தான் கல்லூரி செல்லும் வழியில் நிற்கும் சத்யாவை கண்டு கொண்டவள் அன்னையிடம் கூறி இருந்தாள்.

"வீரபாகு அண்ணன் பையனா? அவன் அப்படிப்பட்ட பையனெல்லாம் இல்லையே!" என்ற விஜயலட்சுமியே,

"அந்த பக்கி இன்னைக்கும் நின்னானா?" என கேட்கும் அளவுக்கு கொண்டு வந்திருந்தான்.

"அண்ணன்கிட்ட சொல்லலாம்.. ஆனா சொந்தக்காரங்க சொக்காரங்கன்னு கூட உன் அண்ணன் பார்க்காம பேசிடுவான்.. குடும்பதுக்குள்ள அது பிரச்சனை ஆகிடும்.. உன் அண்ணி வேற உன்னை எதாவது சொல்லுவா" என கூறி பேச விடாமல் செய்திருந்தார்.

"நந்தினி ஒரு நிமிஷம்!" நந்தினி வீட்டுக்கு வெகு அருகில் நின்று ஒரு நாள் சத்யா அழைக்க, பயந்து வேகமாய் ஓடியவளை இவன் விரட்டி செல்லவெல்லாம் இல்லை.

ஆனால் விடாமல் அடுத்தடுத்த நாட்களும் தொடர, அடுத்த சில நாட்களில்,

"என்ன தான் வேணும் உங்களுக்கு? எதுக்காக டெய்லி இங்கே வந்து நிக்கிறீங்க?" என கேட்டுவிட,

"தேங்க்ஸ் நந்தினி! உன்கிட்ட பேச தான் வந்தேன்.." என்றான்.

"சரி சொல்லுங்க.. என்ன பேசணும்?".

"உனக்கே தெரியும் நான் வர்றது.." என்றதும் அவள் முறைக்க,

"ரொம்ப கேவலமா ஸ்டார்ட் பன்றேனோ?" என்று வாய்விட்டே கூறியவன்,

"இது ப்ரொபோஸ்னு சின்ன பசங்க லவ் மாதிரி எல்லாம் நினைச்சுடாத.. நம்ம லவ் கொஞ்சம் பெருசு.. லவ்க்காக சூர்யா அமெரிக்கா போவாருல்ல.. அந்த மாதிரி கொஞ்சம் ஹைகிளாஸா கெத்தா நினைச்சுக்கோ" என்றவனை,

'பைத்தியமா நீ?' என்பதைப் போல அவள் பார்க்க,

"ம்ம் என்ன சொல்ல.. எனக்கு உன்னை புடிச்சிருக்கு நந்தினி" என்றான்.

அவள் எதுவும் கூறாமல் நகரவும்,

"ஒரு நிமிஷம்!" என நிறுத்தியவன்,

"இப்ப இது எல்லாம் தேவை இல்லை தான்.. ஆனா புடிச்சிருச்சே! என்ன பண்றது?" என்றவன்,

"ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு.. அவ்வளவு தான்.. உன்கிட்ட எதுவும் நான் கேட்க மாட்டேன்" என்றவன்,

"காலேஜ் முடிய போகுதே.. என்ன பண்ண போற?" என்று கேட்டான்.

இவ்வளவு தான் இருவரும் பேசி இருந்தது. நந்தினியிடம் இந்த ஒரு வருடத்தில் அவன் பேசியது இவ்வளவே தான்.

பதில் கூறாதவள் அவனை ஒரு பார்வை பார்த்து செல்ல, அடுத்த சில நாட்களில் அவள் அடுத்து படிக்க போகும் செய்தியுடன் விடுதியில் தங்கி படிக்கும் செய்தியும் வர, யோசிக்காமல் தானும் சேர்வதென்று முடிவு செய்துவிட்டான்.

இவன் படித்த கல்லூரியின் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும் அதை எல்லாம் விட்டு அவன் வந்து சேர்ந்த இடம் தான் நந்தினி சேர்ந்திருக்கும் கல்லூரி.

நந்தினி வந்து சேர்ந்து நான்கு நாட்கள் கடந்திருக்க, சத்யா அனைத்தையும் ஏற்பாடு செய்து வர தாமதமாகி இருந்தது.

வைதேகியிடமும் அவனே தான் கூறி இருந்தான்.

"எனக்கு நந்தினியைப் புடிச்சிருக்கு ம்மா!" என்றதும், துரத்தி துரத்தி வீட்டிற்குள் ஓட விட்டு அடித்த அன்னையை நினைத்து சிரித்தான் சத்யா.

"நீ அவனை அடிச்ச? இதை நான் நம்பனும்?" என்று வீரபாகு கேட்க,

"அறிவு இருக்கா உனக்கு? உனக்கு என்ன இருக்குன்னு இப்ப காதல் எல்லாம்?" என்று கேட்கவும்,

"ம்மா! அதெல்லாம் சொல்லிட்டு வராது ம்மா!" என்றவனை,

"என் வாயில நல்லா வரும்.. அவனை பேச வேண்டாம்னு சொல்லு!" என்றிருந்தார் தந்தை.

"ம்மா! நான் என்ன கல்யாணம் பண்ணி வைங்கன்னா கேட்டேன்.. ஜஸ்ட் லவ் பண்றேன் அவ்வளவு தான். எனக்கும் தெரியும் இதை எப்ப நெக்ஸ்ட் ஸ்டேப்க்கு கொண்டு போகணும்ன்னு" என்று மெதுவாய் அன்னை அருகே சென்று கூற,

"நல்லா படிக்கன்னு உன் காலேஜ்ல ஒவ்வொருத்தனும் சொல்லவும் எங்க என் புள்ள உருப்பட்ருவானோனு நினைச்சேன்.. இந்தா வந்துட்ட இல்ல எனக்கும் கிறுக்கு புடிச்சிருக்குன்னு!" என்ற அன்னையிடம்,

"ம்மா! கல்யாணம் பண்ணி வைங்கன்னா கேட்டேன்.. எனக்கு புடிச்சிருக்கு அதை உங்ககிட்ட சொன்னேன்.. அவ்வளவு தான்.. பிரீயா விடுங்க" என்றவன்,

அடுத்தடுத்த நாட்கள் தினமும் அவளுக்காக நிற்பது முதல் அவளிடம் பேசியது வரை அனைத்தையும் வீட்டில் வந்து கூறி விடுவான்.

திட்டினாலுமே எதையும் மறைக்காமல் இருப்பவனை மனதில் குறித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார் வைதேகி.

கல்லூரி விடுதி வந்து சேர்ந்ததும் குளித்து கிளம்பி தாயாரானவனை சங்கர் ஆ என பார்த்திருக்க,

"என்ன டா பாக்குற?" என்றான் சத்யா.

"இல்ல! லவ் பண்ற பொண்ணு உனக்கு வெயிட் பண்ற மாதிரி இவ்வளவு வேகமா கிளம்புறியே! அதான் பார்த்தேன்" என்றவனை பார்த்து சிரித்துவிட்டு தனியாய் கிளம்பிவிட்டான் சத்யா.

இவன் காதலை யார் என்ன நினைத்தாலும் சரி. அவன் அன்பும் நேசமும் அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

நந்தினியிடம் அவன் பதிலை எதிரிபார்க்கிறான் என்றாலும், அதற்கான நேரம் எது என்பதிலும் அவன் தெளிவாய் தான் இருக்கிறான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
நான் உன்னை காதலிக்கிறேன்
என்னை காதலி என்று தொந்தரவு செய்ய வில்லை... தள்ளி நின்று ரசித்து கொள்ளும் காதலன் சத்யா....
கண்டதும் காதல்
கேட்டதும் காதல் எல்லாம் இல்லை...அவன்
சொன்னதும் காதல் வரவில்லை...
தள்ளி நின்று தவிர்த்து கொண்டு இருக்கிறாள் நந்தினி....
🤩🤩🤩🤩🤩