அத்தியாயம் 22
முன் வளாகத்தில் அங்கேயும் இங்கேயுமாய் நடந்து கொண்டிருந்த வீரபாகு முகத்தில் ஏகத்திற்கும் தீவிரம்.
'இந்த ஆளு என்ன குறுக்க மறுக்க நடந்துட்டு இருக்காரு ஒரு மணி நேரமா?' என்ன பார்த்த வைதேகி அருகில் வர, அதை கூட கவனிக்காத தீவிர யோசனை வீரபாகுவிடம்.
"வயல்ல நாத்து நடுதாங்க தான? இங்க என்ன பண்ணுதிங்க? ரொம்ப நேரமா உலாத்துறீங்க?" வைதேகி கேட்க,
"போவனும் போவணும்!" என்றாலும் நடையை நிறுத்தவில்லை.
"என்னவா இருக்கும்?" என்ன நினைத்துக் கொண்டே திரும்ப,
கேட்கவா வேண்டாமா என தயக்கத்தில் இருந்த வீரபாகு ஒருவழியாய் மனைவியை அழைத்துவிட்டார்.
"இந்தா நில்லு டி!" என்ற அழைப்பில்,
"நிக்க தான் செஞ்சேன்.. நீங்க தான் என்னனு சொல்லல?" என மீண்டும் நிற்க,
"அவன் போன் போட்டானா?" என்ன கேட்க,
"எவன்?" என்றார் அவரை போலவே.
"அதான் உன் மவன்!" என்று கூற,
"அவன் எங்க பண்ணினான்.. நேத்து ராத்திரி... " என்று கூற வந்த வைதேகிக்கு அப்போது தான் நியாபகமே வந்தது.
"இத எப்படி மறந்து போனேன்.. ஏங்க இன்னைக்கு அவனுக்கு டெஸ்ட்டுன்னு சொன்னான்.. நான் தான் மறந்துட்டேன்" என்று பாவமாய்.
"தேவை இல்லாதது எல்லாம் நியாபகத்துல இருக்கும்.. இது நியாபகம் இருக்காது.. முடிஞ்சிட்டான்னு போன் போடு.. ராத்திரி தூக்கமும் வரல.. இப்பவும் வேலை ஓடுவேனாங்கு!" என்று கூற,
"ஓஹ்!" என்ன மனதுக்குள் வியந்தவர் மணியை பார்த்துக் கொண்டு மகனுக்கு அழைத்தார்.
"ம்மா!" என்றவன் அழைப்பில் களைப்பு தெரியவில்லை ஏகத்திற்கும் உற்சாகம் தான்.
"காலையில ஒரு போன் போட மாட்டியா நீ? நான் வேற எந்த உலகத்துல இருந்தேனோ.. நீ அங்க இருக்கன்றதையே மறந்து உலாத்திருக்கேன் இவ்வளவு நேரமும்" என்றார்.
"முடிச்சிட்டு பண்ணலாம்னு தான் பண்ணல ம்மா.. அப்பா எங்க? தோட்டதுக்கு போயாச்சா?"
"அதெல்லாம் ஒன்னும்..." என்று வைதேகி பேச வர, வீரபாகுவிற்கு இருப்பு கொள்ளவில்லை முடிவு தெரியாமல்.
"இந்தா இங்க கொண்டா.. என்னத்த பேச சொன்னா நீட்டி முழங்குத!" என்றவர் போனை பறித்து காதில் வைத்தபின் தான் தன் செயல் தனக்கே புரிய, மீண்டும் மனைவியிடம் கொடுத்து பாஸ் ஆயிட்டானா கேளு.. வழவழனு இழுக்காத" என்றார் சிறியதாகிவிட்ட குரலில்.
"என்னவாம்?" என்றான் எல்லாம் தெரிந்து கொண்டே சத்யாவும்.
"என்னவோ இன்னைக்கு ஒரு மாதிரி தான் சுத்தி வராரு!" என்ற வைதேகி கணவர் முறைப்பில்,
"நீ தான் சொல்லேன் டா.. பாஸ் பண்ணிட்டியா இல்லையா?" என்றார் வேகமாய்.
"எப்படி தெரியுது நான் பேசுறத பார்த்தா?" என்றவன் காலரை தூக்கி விட்டுக் கொண்டது இவர்கள் அறியாதது.
"இந்த கொம்பு சீவுத வேலைய விடு.. என்ன சொன்னாங்க சொல்லு டா.. உன் அப்பா முறைக்காரு" என்று கூற,
"ம்மா! அவருக்கு என்னவாம்? நீ போனை குடு!" என்றான் புன்னகையை மறைத்து கோபம் போல காட்டி.
"எனக்குன்னு எங்கருந்து தான் வந்து சேர்ந்தாங்களோ! முதலைக்கும் பாம்புக்கும் வாக்கப்பட்டு!" என்றவர்,
"நீ வையி.. நான் சங்கருக்கு பேசுதேன்!" என்று கூற,
"அவனுக்கு இன்னும் முடியல!" என்று பொய் சொல்ல அதையும் நம்பிக் கொண்டார் வைதேகி.
"இவனுக்கு இதான் வேலை.. பாத்தியா.. எம்புட்டு ஆவலா கிடக்கோம்னு தெரிஞ்சும் அங்க விளாண்டுட்டு இருக்கான்.. இதுல மவனுக்கு சப்போர்ட்டு வேற நீ!"
சத்யா காக்க வைத்துக் கொண்டே இருந்ததில் கடுப்பாகி வீரபாகு எப்போதும் போல பேச ஆரம்பித்துவிட, கேட்டபடியே இருந்தான் சத்யா.
"அட இருங்க! உங்க விருப்பம் என் விருப்பத்துக்கு எல்லாம் அங்க உடனே பதில சொல்லுவாங்களா? அது அதுக்குன்னு ஒரு நேரம் வேண்டாம்.. சொல்லாம அவனே என்னத்த சொல்லுவான்.. சும்மா அவனை போட்டு படுத்திக்கிட்டு.." என்றவர்,
"அடேய்!" என்று பல்லைக் கடித்து மகனை போனில் அழைக்க, வாய்விட்டு சிரித்தான்.
"ஏத்தம் தான் உனக்கு!" என அதையும் கணவனுக்கு கேட்காமல் மெதுவாய் போனில் கூற, குறுகுறுவென்று பார்த்தாலும் மனைவி பேச்சில் இருந்த நியாயம் புரிந்து அமைதியாய் பதில் வேண்டி நின்றார் வீரபாகு.
"ம்மா! நீங்க சொன்னது தான்! இப்ப எதுவும் சொல்ல மாட்டாங்க.. குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும்.. அதுக்கு மேலயும் கூட ஆகலாம்.." என்றதும்,
"என்னது?" என்று அதிர்ந்து வைதேகி கேட்க,
"என்னாச்சு? என்னாச்சு?" என அவருக்கு மேல் பதறினார் வீரபாகு.
"இல்ல இல்ல.. இருங்க பேசிகிட்டு இருக்கான்!" என்றவர்,
"என்ன டா சொல்லுத?" என்று கேட்டு ஸ்பீக்கர் ஆன் செய்ய,
"நிஜம் தான் ம்மா.. இங்கயும் நிறைய பாலிடிக்ஸ் இருக்கு.. பாலிடிக்ஸ்னா.." என்று எப்படி சொல்வது என அவன் யோசிக்க,
"எனக்கு புரியுது!" என்றார் புரிந்தவராய் வைதேகி. வீரபாகுவிற்கும் அது புரிய அமைதியாய் அவன் பேசுவதை கேட்டு நின்றார்.
"அது தான்! எல்லாம் முடிஞ்சு ரிசல்ட் வர கண்டிப்பா குறைஞ்சது ஆறு மாசம் ஆகும்!" என்றதும் வீரபாகு திகைக்க,
"ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. கொஞ்சம் இல்ல நிறையவே நம்பிக் இருக்கு ம்மா.." என்றதும் பெருமையாய் ஒரு நொடி பார்க்க, அடுத்த நொடி,
"அதுவரைக்கும் அந்த மீசைக்காரர சும்மா இருக்க சொல்லு.. அப்படியே நான் இந்த வழியா காலேஜ் போறேன்.. ரெண்டு மாசத்துல லீவு வரும்.. அப்ப ஊருக்கு வர்றேன்.." என்றவன் பதிலை கேளாமல் வைத்துவிட,
"பாத்தியா உன் மவன் என்ன பேரு எனக்கு வச்சுருக்கானு.. உனட்ட தான சொன்னான்.. அப்போ ரெண்டு பேரும் தான் வச்சீங்களா இல்ல சொன்னதே நீ தானா?" என மனைவியை பிடிபிடி என பிடிக்க, தலை சுத்தி போய் நின்றார் வைதேகி.
அனைத்திற்கும் மூலதனம் என ஒன்று இருக்கிறது. இதற்கு தான் என்று இல்லாமல் உலகமே இப்பொழுது அதை சாதாரணமாய் பார்க்க, சத்யாவிற்குமே தற்போதைய எண்ணம் அதில் தான்.
வேலை கிடைக்கும் என்றாலும் அதற்கு என்று சில நெறிமுறைகள் இருக்க, கூடவே பணத் தேவையும்.
சங்கர் வீட்டில் பிரச்சனை இல்லை தான்.. அவ்வளவு வசதி இல்லை என்றாலும் மகனுக்காக அவன் பெருமையடைய செய்திருக்கும் இந்த நிலைக்கு வந்ததற்காக நிச்சயம் உதவி செய்வார்.
ஆனால் சத்யாவால் அப்படி நிச்சயம் தந்தை முன் நின்று கேட்க முடியாது.. அதற்கு அவனுக்கு சுத்தமாய் மனமில்லை.
முக்கால் சதவீதம் நம்பிக்கை உண்டு அவன் வெற்றி பெருவான் என.. ஆனாலும் இந்த பணம் தான் கண்ணில் விழுந்த தூசியாய் விரட்ட, பதில் வீட்டில் கேட்க கூடாது என்பதே!.
கேட்டால் வீரபாகு நிச்சயம் மறுக்க போவதில்லை.. ஆனால் கேட்க கூடாது என மட்டும் இல்லாமல் அதைப் பற்றி வீட்டில் கூறவே கூடாது என்றும் பிடிவாதமாய் இருந்தான் சத்யா.
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் அரசு தரப்பில் வரும் தகவல்கள் வந்து கொண்டிருக்க, அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர் சத்யாவும் சங்கரும்..
ஒரு மாதத்தில் இந்த அரை வருடம் படிப்பு முடிகிறது.. இன்னும் ஆறே மாதங்கள்.. ஒரே ஒரு செமஸ்டர்.. அதற்குள் அரசு காவல் துறை முடிவுகள், கூடவே பணம் என மனதுக்குள் ஓட்டம் எடுக்க துவங்க, அதே நேரத்தில் பாதி நேரத்தை இப்பொழுது நந்தினி பெற்றிருந்தாள்.
வெகு இயல்பாய் அவனிடம் அவள் வார்த்தையாடல்கள் வர, அதை வெகுவாய் ரசித்து காத்திருந்தான் அந்த நேரங்களுக்கு.
இன்னுமே காதல் பற்றிய பேச்சுக்கள் இல்லவே இல்லை.. ஆனாலும் அவள் கண்கள் காட்டும் உணர்வுகளில் தொலைந்து போய்க் கொண்டிருந்தான்.
அன்று சத்யாவின் பேச்சைக் கேட்ட நந்தினிக்கு அவன் கொடுத்த வார்த்தைகளே நம்பிக்கையாய் இருக்க, அதைப் பிடித்துக் கொண்டே அடுத்தடுத்த நாட்களை கடக்க பழகிக் கொண்டாள்.
அன்னையும் அடுத்து திருமணம் பற்றியோ சத்யாவைப் பற்றியோ கேட்காமல் இருக்க அதுவே போதுமானதாய் இருந்தது நந்தினிக்கு.
இடையில் இரு முறை சென்று அண்ணனின் குழந்தையைப் பார்த்து வந்தாள்.
பெயர் சூட்டும் விழாவின் போது நந்தினியையே பெயர் வைக்க கூறி ஜீவன் கூற, தானாய் கண்கள் ஜெயாவின் பக்கம் சென்றது நந்தினிக்கு.
மறுக்க நினைத்தாலும் ஆசையும் விடவில்லை.. கூடவே ஜெயாவும் அமைதியாய் இருக்க,
"அண்ணா அண்ணி ரெண்டு பேர் பேரும் ஜே லெட்டர் தானே? அதனால ஜாஸ்மின்! எப்படி இருக்கு?" என்று கேட்க, அழகாய் பொருந்தியது குழந்தைக்கு.
தொடரும்..