அத்தியாயம் 23
அந்த செமஸ்டரின் இறுதி தேர்வு முடிந்து அனைவரும் வெளியே வர, சத்யாவை தேடி வந்தாள் நந்தினி.
"ஷப்பா! இனி எக்ஸாம் தொல்லை இல்ல டா.. ப்ராஜெக்ட்ட மட்டும் முடிச்சமா போனமானு இருந்தா போதும்.." என்ற சங்கர் விரல்களை நெட்டி முறித்தான்.
"ம்ம்! ஆமா அந்த ஆளை பாக்க சொன்னேனே! எதாவது கேட்டியா? மார்னிங் லேட்டா கிளம்பினதால அதை பேசவே முடியல.. ஊருக்கு போனல்ல! பாத்தியா?" என்றான் சத்யா தீவிரமாய்.
"அம்மாக்கு இன்னும் சரியாகல டா.. நேத்தும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு வரவே நேரமாகிட்டு.. அப்படியே கிளம்பி வந்துட்டேன்.. ஆனா பக்கத்து வீட்டு ரமேஷ்கிட்ட சொல்லி வச்சேன்.. அவன் கேட்டுட்டு கூப்பிடுவான்.. இரு நானே கேட்டு சொல்றேன்!" என்ற சங்கர் மொபைலை எடுத்து அழைத்தபடி சற்று தள்ளி போக, சத்யா அருகினில் வந்திருந்தாள் நந்தினி.
அவளைப் பார்த்ததும் சத்யா புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தவள் "எக்ஸாம் எப்படி பண்ணின?" என்று கேட்க,
"ம்ம்! ஓகே தான்!" என்றவன், "நீ?" என்றான்.
"நானும் தான்.."
"ம்ம்! ஊருக்கு கிளம்பியாச்சா? பஸ்ஸா அண்ணன் வர்றாங்களா?" என்று சத்யா கேட்க,
"ஆமா மூணு மணிக்கு பஸ்.. அண்ணா பிஸி.. நானும் தனுவும் கிளம்புறோம்.. நீங்க ரெண்டு பேரும்?" என்றாள் சங்கரையும் சேர்த்து.
"எங்க? அசைன்மெண்ட் முடிக்காம விட்டத முடிச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க.. அதுவும் அன்னைக்கு பிசிக்கல் டெஸ்ட்னு சொன்னதனால தான் எக்ஸ்க்யூஸ் கிடைச்சதே! இன்னைக்கு முடிச்சு நாளைக்கு மார்னிங் குடுத்துட்டு அப்புறம் தான் கிளம்பனும்"
"ஓஹ்!"
"ம்ம்! அப்புறம்!" சத்யா கேட்க,
"ம்ம்ஹும்ம்.. போய்ட்டு கிளம்பனும்.." என்றவள் கிளம்பவா என்பதை போல நிற்க,
"லஞ்ச் போலாமா?" என்றான் சத்யா சட்டென.
"என்ன?" என்று அதிர்ந்து விழித்தவள் பார்வையில் தோள்கள் குலுங்க சிரித்தவன்,
"பதற வேணாம்.. சங்கர்,தான்யா எல்லாரும்!" என்று கூற, சங்கரும் வந்தான்.
சத்யா கேட்கவும் "ஓஹ் போலாமே!" என்று கூற, தான்யாவும் சரி என்று கூற, பேசியபடி கிளம்பினர் நால்வரும்.
"வாங்கிக்கலாம்னு சொல்றான் ரமேஷ்.. ஆனா கண்டிப்பா இந்த வழி தானா?" என்றான் சங்கர் இன்னும் அதில் உடன்பாடில்லாமல்.
"வேற வழி இல்ல சங்கர்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. நிச்சயம் கால் லெட்டர் வரும்.. எல்லாம் ஓகே.. எங்க போஸ்ட்டிங்னாலும் நமக்கு ஓகே தான்.. இந்த பணம் ஒரு சேப்ட்டிக்கு தான்.. தேவை இல்லைனா அப்படியே குடுத்துடலாம்" என்றான் சத்யா.
அவன் தெளிவாய் இருக்கவே சங்கரும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
"ஆனா ஒன்னு மச்சி! அப்பாக்கு இத பத்தி எந்த நியூஸ்ம் போக வேண்டாம்.. அத மட்டும் பார்த்துக்கோ!" சத்யா கூற, சரி என தலையசைத்தான் சங்கர்.
"சாப்பிட எல்லாரும் போகலாம்னு சொல்லிட்டு என்ன நீங்க மட்டும் தனியா பேசிட்டு வர்றிங்க? எதுவும் சீக்ரெட்டா?" தான்யா கேட்க,
"இங்க வாயேன்!" என்றான் சங்கர் தான்யாவை.
"என்ன?" என்ன அவனருகே வர,
"கூப்பிட்டா பொசுக்குன்னு வந்துடுவீங்களா? எங்களுக்குள்ள பேசிக்க ஆயிரம் இருக்கும்.. உங்களுக்கு டீஸன்சீனா என்னனு தெரியாதானு கிழி கிழினு கிழிக்குறான்.. போதுமா?" என நந்தினி கேட்காத விதமாய் சொல்ல, தான்யா முகம் விளக்கெண்ணெய் குடித்ததை போல மாறியது.
சங்கர் தான்யா இருவரும் பேசியபடி பின்தங்கிவிட, சத்யா அருகில் நடந்து கொண்டிருந்தாள் அதை கவனிக்காத நந்தினி.
"என்னவோ தொண்டைக்குள்ள சிக்கிகிட்டு நிக்குது.. என்னனு சொல்லிடு.. எதுக்கு இவ்வளவு முழுங்குற?" என்றான் சத்யாவே அவளைப் பாராமல்.
"ம்ம்ஹும்! ஒன்னும் இல்ல!" உடனே அவள் மறுக்க,
"சூர்?" என்றான் அவளைப் பார்த்து குனிந்து.
"ஆமானு சொல்லிடாத.. ஏதோ இருக்கு.. அப்புறம் உன் இஷ்டம்!" என்றான் அவனே!
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. என்னவோ ரொம்ப சீரியஸா பேசிட்டு வந்திங்க ரெண்டு பேரும்.. அதான் என்னனு கேட்கலாம்னு வந்தேன்.. அப்புறம் அது அதிகப்பிரசங்கித் தனமோன்னு தோணுச்சு.. அதான்!" என்றாள்.
"கேட்க தோணினது ஓகே.. அது என்ன கூடவே நீயே அதிகப்பிரசங்கித்தனம்னு நினைச்சுகுறது? என்கிட்ட அவ்வளவு டிஸ்டன்ஸ் உனக்கு?" என்று கேட்க, அதற்கு உடனே பதில் கூற முடியவில்லை நந்தினிக்கு.
"நீ என்கிட்ட என்னவேணா கேட்கலாம்.. அது தான் எனக்கு வேணும்.." என்றவன் குரல் இன்னும் வாயடைக்க செய்தது.
"எனிவே கேக்கணும்னாச்சும் தோணிச்சே!" என்றான் அவனே.
"எல்லாம் வேலை சம்மந்தமா தான்!" என்றவன் பணம் ஒருவரிடம் கேட்டிருப்பதாய் கூற,
"எக்ஸாம் எல்லாம் கிளீயர் பண்ணினாலும் பணம் குடுக்கணுமா? அண்ணாலாம் குடுக்கலைய" என்றாள் உடனே!
"ஆமா! இவங்க பெரிய மனுஷி! இவங்ககிட்ட சொல்லிட்டு தான் இவங்க அண்ணன் போய் பணம் குடுப்பாங்க!" சத்யா கிண்டல் பேச, முறைத்தாள் நந்தினி.
"நைஸ்!" என்றவன் முகம் ரசனையை வெளிப்படுத்த, முன்னே திரும்பிம் கொண்டாள்.
"நிச்சயம் தேவை இருக்கும்னு சொல்ல முடியாது.. தேவை இருந்தா.." என்றான்.
"ஏன் உங்க வீட்டுல கேட்கலாம் தானே?"
"கேட்கலாம் தான்.. என்னவோ கேட்க தோணல.. இத்தனை வயசு வர செஞ்சுட்டாங்க.. இனியும் ஏன் அந்த கஷ்டத்தை குடுத்துட்டு.. பாக்கலாம்.. எப்படியும் இன்னும் ஆறு ஏழு மாசம் ஆகும்.." என்றான்.
"ம்ம்ம்!" என்றவள் அமைதியாகிவிட,
"நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் மட்டும் தான்! அதுவும் எல்லாரும் ஒரே டைம் வர்ற மாதிரி இருக்காது இல்ல?" சத்யா கேட்க,
"ம்ம்ம்!" என்றவள் எண்ணமும் அது தான்.
"இந்த ஆறு மாசத்துல எனக்கும் நிறைய வேலை இருக்கு" என்றான். கேள்வியாய் அவள் பார்க்க, கல்லூரி அருகே இருந்த ரெஸ்டாரன்ட் வந்திருந்தனர்.
அவர்களுக்கு வெகு முன்னவே வந்து காத்திருந்தனர் சங்கர் தான்யா இருவரும்.
"இதுக்கு நீங்க தனியாவே வந்திருக்கலாம்" தான்யா முறைப்புடன் கூற,
"கூப்பிட்டா மேடம் வரணுமே!" என உடனே சத்யா கூற, நந்தினி விழிக்க,
"இந்த அசிங்கம் நமக்கு தேவையா?" என கேட்டபடி உள்ளே சென்றான் சங்கர்.
உணவுகள் பிடித்து உள்ளே இறங்கியதா தெரியவில்லை.. ஆனால் அந்த நேரம் நால்வருக்குமே பிடித்திருந்தது.வெகு இயல்பாய் நட்பாய் என அனைவரும் கலந்து சாப்பிட, என்ன இருந்தாலும் கல்லூரி நாட்களின் நினைவுகள் என்றும் பொக்கிஷம் தானே! அப்படி ஒரு நாள் தான் அவர்களுக்கு இன்று.
நந்தினி எழுந்து கை கழுவ செல்ல, உடன் சென்றான் சத்யாவும்.
"ரொம்பத்தான் பன்றான் டா உன் பிரண்ட்!" தான்யா கிண்டல் செய்ய,
"விடு விடு! மனசுல இருக்கறதை இன்னைக்காச்சும் பேசிக்கட்டும்.. இன்னும் எவ்வளவு கடந்து வரனும் அவங்க!" என்று சங்கர் கூற, அது உண்மை தான் என தலையசைத்தாள் தான்யாவும்.
"அன்னைக்கு சொன்னேன்! உனக்கு நியாபகம் இருக்கா தெரியல.. எனக்கு இப்பவும் கன்ஃபார்மா சொல்ல முடியல.. நமக்கான நாள் எப்ப வேணா எப்படி வேணா வரலாம்.. அதுக்கு இந்த செமஸ்டர் காலேஜ் எல்லாம் தெரியாது.. ஆனா வீட்டுல எதுவும் பிரச்சனைனா டென்ஷன் ஆகாத! நான் இருக்கேன்.. நான் இருப்பேன்.. அதை நியாபகத்துல வச்சுக்கோ!" என்றான் தெளிவாய் ஹோட்டலின் முன்பு நின்று நந்தினியிடம் சத்யா.
"இனி டெய்லி நாம பாத்துக்க முடியாது!" என்று சத்யா கூறவும் நந்தினி பதில் கூறாது இருக்க,
"எல்லா இடத்துலயும் இப்படி பேசாம இருக்க முடியாது நந்து.." என்றவனின் அழைப்பில் மனது நிரம்பி இருந்தது நந்தினிக்கு.
"பாக்கலாம்.. எப்ப எப்படினு.. முடிஞ்சா அப்பப்ப மெசேஜ் பண்ணு.. தப்பில்ல!" என்றவன் அவள் விழிவிரித்து பார்க்கவும்,
"எல்லாத்துக்கும் ஷாக் ஆக கூடாது.. இதெல்லாம் சாதாரணம்.. அனுப்பலைனா பரவால்ல.. நான் அனுப்புறேன்.." என்று கூற,
"வேண்டாம் வேண்டாம்!" என்றாள் வேகமாய்.
"சுத்தம்! இதுக்கே பெர்மிஸ்ஸன் இல்லைனா நான் அடுத்தடுத்து..." என்றவன் முணுமுணுப்பில்,
"என்னது?" என்று வேகமாய் அவள் கேட்க,
"இது மட்டும் கேட்குதா இல்ல புரியுதா?" என மீண்டும் மீண்டும் வாயடைக்க வைத்தான்.
"ஓகே! பார்த்து போய்ட்டு வா.. பத்திரம்.." என்றவன் புன்னகையுடன் விடைகொடுக்க, தான்யாவுடன் கிளம்பி இருந்தாள் நந்தினி அவன் நினைவுகளோடும்.
"என்ன நினைச்சுட்டு சுத்துதான் உன் மவன்? எவன் எவன்ட்டயோ கடனுக்கு அலையுதானாம்.. படிக்கவனுக்கு எதுக்கு அம்புட்டு பணம்.. நல்லவன் நல்லதுக்குண்ணா அவன் வீட்டுல தான பணத்த கேட்ருக்கணும்.. உன் மவன் சரி இல்ல டி.. என் மானம் மரியாதை எல்லாம் போச்சு.." இன்னும் என்ன என்னவோ சொல்லி வீரபாகு வீட்டில் குதிக்க, மகனுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் வைதேகி.
சங்கர் வீட்டின் அருகே இருக்கும் ரமேஷ் தனது மொபைல் கடைக்கு வந்திருந்த வீரபாகுவிடம் சங்கர் கூறியதை எல்லாம் சொல்லி இருக்க, அப்போது கொதிக்க ஆரம்பித்த உள்ளம் இன்னும் அடங்கவில்லை.
தான் அவனை என்னவெல்லாம் நினைத்திருக்க, அவன் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறானா என நினைக்க நினைக்க ஆறவில்லை அவருக்கு.
நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அன்னை அழைக்க, அவனும் பிறகு பேசிக் கொள்ளலாம் என எடுக்காமல் விட்டிருந்தான்.
நந்தினி கிளம்பவும் மீண்டும் அன்னை அழைக்க, "சொல்லு ம்மா!" என சத்யா கேட்க,
"என்ன டா நினைச்சுட்டு இருக்க நீ?" என ஆரம்பித்தவர் ரமேஷ் கூறியதாய் அனைத்தையும் கூற, தலையில் அடித்துக் கொண்டவன் பக்கத்தில் நின்ற சங்கர் கழுத்தை பிடித்தபடி பேசினான்.
"ம்மா! நான் நாளைக்கு வந்துருவேன்.. வந்து சொல்றேன்.. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.. சும்மா வாங்குற அளவுக்கு எனக்கு விவரம் தெரியாம இல்ல.. அந்த ஆளுகிட்டயும் சொல்லுங்க!" என்று கூறி வைத்துவிட, கேட்டுக் கொண்டிருந்த வீரபாகுவும் எதுவும் கூறாமல் முறைத்தபடி சென்றுவிட்டார்.
"போயும் போயும் உன்கிட்ட கேட்டேன் பாரு.. எம் புத்திய.." என கழுத்தோடு சங்கரை இழுக்க,
"என்னனு சொல்லிட்டு அடி டா!" என அலறினான் சங்கர்.
"நீ பேசுனவன் அடுத்த அஞ்சு நிமிஷத்துல அந்த வீரபாகு முன்னாடி போய் சாட்சி நான் தான்னு நின்னுருக்கான்.. நல்ல ஆளு போ!" என்று கூற,
"ஆத்தி! அப்ப வீரபாகு அடுத்ததா என் அப்பாவைல்ல பாக்க போவாரு!" என கதறினான் சங்கர்.
தொடரும்..