அத்தியாயம் 30
நேரம் காலை பதினோரு மணி.. அப்பொழுது தான் எழுந்த சத்யா அன்னை தந்த காபியை பருகியபடி பேப்பரைப் படித்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த மொபைலில் அழைப்பு வரும் சத்தம்.
"ஹெலோ!" பேப்பரில் இருந்த கவனத்தை எடுக்காமலே யார் என பாராமல் சத்யா கூற,
"ஹெலோ!" என்ற எதிர்புற குரலில் மொத்த கவனமும் திசை மாறியது சத்யாவிற்கு.
மொபைலை காதில் இருந்து எடுத்து பார்த்து உறுதி செய்தவன் இதழ்கள் புன்னகை செய்ய, நொடியில் தோன்றியவனாய்,
"சொல்லுங்க! யாரு?" என்று கேட்க, கண்களை உருட்டி விழித்தவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
'உனக்கு எமனே இந்த வாய் தான் டா!' என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், காபியையும் பேப்பரையும் அப்படியே வைத்துவிட்டு மொபைலில் மீண்டும் நந்தினிக்கு அழைத்தபடி அறைக்குள் சென்றான்.
'இந்த லூசு தனு தான் சொன்னான்னா உனக்கு எங்க டி போச்சு புத்தி.. ஏன் டி போன் பண்ணின.. அவன் உன்னை யாருன்னு கேட்டுட்டான்.. ச்ச! நானா போன் பண்ணி... அய்யோ!' என சத்யா அழைப்பதற்குள் அத்தனை புலம்பல்கள் தனியே நந்தினியிடம்.
மீண்டும் அவன் அழைப்பை பார்த்தபின் தான் கொஞ்சமாய் மீண்டாள் எனலாம்..
'யாருனு கேட்டா ராங் நம்பர்னு சொல்லிடு நந்து.. அப்படி ஒன்னும் அவன்கிட்ட பேச தேவை இல்ல' தன்னோடு ஒரு முறை சொல்லிக் கொண்டவள், அழைப்பை ஏற்று காதில் வைக்க,
"செம்ம கோபம் போலயே!" என்றான் எடுத்ததும்.
அவனுக்கு தன்னை தன் எண்ணை தெரிந்திருக்கிறது என்று தெரிந்து மகிழ்ச்சி கொள்வதற்கு பதில் தெரிந்து தான் விளையாடினானா என கோபம் தான் வந்தது.
"சும்மா! நீ என்ன சொல்றனு பார்க்க தான் நினச்சேன்.. அதுக்குள்ள கட் பண்ணிட்ட.." என்று பேசிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது.
இதுவரை தானும் அழைத்தது இல்லை அவளுக்கு.. செய்தி அனுப்ப மனம் கெஞ்சினாலும் நாள் வரட்டும் என காத்திருக்க, முதல்முறை அவளாய் அழைத்திருக்கிறாள் என்றால்? என்று நினைத்தவன் முகமே மாறிப் போக, கூடவே அவளின் அமைதி வேறு வேறு விதமாய் பயமுறுத்தியது.
"நந்து! இஸ் எவரிதிங் ஆல்ரைட்?" என்று கேட்டவனுக்கு புரியாமல் இவள் விழிக்க,
"எதாவது பிரச்சனையா மா?" என்றதும் அவன் எண்ணம் புரிந்து சிறு மென்னகை அவளுக்கு.
"நந்தினி! ஹெலோ!" என்று அவன் பதட்டம் கொள்ள,
"எதுவும் இல்ல.. சும்மா தான் கால் பண்ணினேன்!" என்ற பதிலில் தான் பெருமூச்சுடன் தன்னை சமன்செய்தான்.
"பயந்தே போய்ட்டேன்.. ஷப்பா!" என்றவன்,
"ஆட்டி வைக்குற நீ!" என்று கூற, அதற்கும் புன்னகை தான் அமைதியாய் அவளிடம்.
"சொல்லு! என்ன திடீர்னு அதிசயமா போன் எல்லாம்?" என்று சட்டென பூத்த சந்தோசத்துடன் அவன் கேட்க, கேட்க வந்தது நினைவில் வந்தது நந்தினிக்கு.
"சொல்லு மா!" என மீண்டும் கேட்க, அண்ணன் கூறியதை கூறினாள்.
"உன் அண்ணன் என்ன போட்டு வாங்க ட்ரை பன்றார்?" என்றான் நக்கல் புன்னகையோடு.
"என்ன?" புரியாமல் அவள் கேட்க,
"அவ்ளோ தெளிவா சொல்லியும் உன்னை செக் பண்ணறாரே! பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது?" என்று கேட்க,
"ஹெலோ! அது என் அண்ணா!" என்றவள் கோபத்தில்,
"அடேங்கப்பா! பயந்துட்டேன்!" என்றவன்,
"இப்ப என்ன? நான் வரவா உங்க வீட்டுக்கு?" என்று கேட்க,
"எனக்கு என்ன பண்ணனு தெரியல" என்றாள் பாவமாய்.
"நீ சொல்லு! நான் வரேன்!" என்று கூற, சட்டென சொல்லி விடவும் முடியவில்லை.
யார் பக்கம் தான் நிற்க முடியும் என இரண்டாம் முறையாய் தடுமாற வைத்துவிட்டான் அவள் அண்ணன். முதலில் சத்யா.
அவள் அமைதி அவள் நிம்மதியின்மையை கூற,
"ஏன் டென்ஷன் ஆகுற? நான் வரல போதுமா?" என அவனே கூற, அதுவும் தாள முடியவில்லை.
"எனக்கு கஷ்டமா இருக்கு.. நான் இன்னைக்கு என்னலாம் அனுபவிக்கனுமோ!" கவலையாய் நந்தினி கூற,
"அதெல்லாம் எக்கசக்கமா இருக்கு.. இப்ப கேட்காத!" என்றவன் பேச்சு கருத்து எதுவும் புரியாமல் கவனிக்கும் நிலையில் இல்லாமல் இருந்தாள்.
"ப்ச்! நந்து! இப்ப என்ன? கிளாஸ்ல எல்லாரையும் இன்வைட் பண்ணு.. இல்ல வேண்டாம்னு நினச்சா தனு கூட சங்கரை இன்வைட் பண்ணு.. கண்டிப்பா அவன் வருவான்.. நான் சொல்றேன் அவன்கிட்ட!" என்று அவளை புரிந்து கூற,
"கோச்சிக்கல தான?" என்றாள் உறுதிப்படுத்த,
"நான் ஏன் கோச்சிக்க போறேன்" என்றவன்,
"நான் ஒன்னும் உன் பிரண்ட் இல்லையே!" என்றும் கூற, அர்த்தம் சட்டென புரிந்து அமைதி கொண்டது பெண்.
"சில விஷயங்கள்ல தான் ட்யூப்லைட் போல!" என அதற்கும் அவன் கிண்டல் பேச,
"நான் வைக்குறேன்!" என்று கூற,
"ஏன்? சரி நான் ஒன்னும் சொல்லல.. ஆமா காலேஜ்லையா இருக்க?" என்றவன் சில நிமிடங்கள் பேச்சை தொடர, ஆம் இல்லை என்ற பதில்களே அவளிடம்.
'இவளை எப்ப பேச வச்சு... கல்யாணம் பண்ணி...' என சத்யா நினைக்கும் போதே,
"காதல் பண்ண முதல்ல நீ கத்துக்கோ டா.. எப்ப பாரு படிச்சியா, ப்ராஜெக்ட் முடிச்சியான்னா அவளும் தான் என்ன பண்ணுவா?" என்றொரு அசரீரி.
"மனசாட்சி..." என்று முறைக்க,
"நான் வைக்கட்டுமா?" என நந்தினி அந்த பக்க அமைதியில் கேட்கவும்,
"ம்ம்ம்! வைக்கலாம்.. அப்பப்ப கால் பண்ணலாம்.. ரீசன் இல்லனாலும்" என்று கூற,
"முதல்ல வேலைல ஜாயின் பண்ணு!" என்றவள் சிரிப்புடன் வைத்துவிட,
"என்ன டக்குன்னு கலாய்ச்சுட்டா.. ம்ம்ம் இந்த சைலன்ட் பார்ட்டிஸ் எல்லாம் நம்பவே கூடாது!" என நினைத்து சிரித்து வெளியில் வந்தான்.
சத்யா கூறியபின் எந்த குழப்பமும் இன்றி செயல்பட முடிந்தது நந்தினிக்கு.
சங்கர் மற்றும் தான்வை அழைத்து கொள்ள முடிவு செய்து அதை பின்பற்றியும் இருந்தாள்.
"போலாமா?" என்று ஜீவன் வந்து ஜெயாவிடம் கேட்க,
"என்னிடமா?" என்பதை போல பார்த்து நின்றாள் ஜெயா.
"உன்கிட்ட தான் கேட்குறேன்.. கிளம்பிட்டியா? பாப்பா ரெடி பண்ணிட்டியா?" என அப்போது தான் ஜெயாவின் தாய் வீட்டிற்குள் வந்தவன் வேகமாய் கேட்க, அவன் பேசியதிலேயே மகிழ்ந்து நின்றவளை வேகவேகமாய் கிளம்ப வைத்தான் வேறு யோசிக்க விடாமல்.
நந்தினி, விஜயலக்ஷ்மி வேறு சில சொந்தங்கள் என சிலர் பின்னோடே வந்திருந்தனர் ஜெயாவோடு குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து செல்ல.
"அங்க நீங்க தான் மாப்பிள்ள ஜெயாவை நல்லா பாத்துக்கணும்" என்று குதர்க்கமாய் பேசிய ஜெயாவின் தாய்க்கு,
"என்னை விட, உங்களை விட, என் அம்மாவும் தங்கையும் நல்லாவே பாத்துப்பாங்க" என்று பதில் கொடுத்தே அழைத்து வந்தான்.
மாலை இவர்களை வந்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் ஜீவனின் நெருங்கிய நண்பர்கள் இருவர் காவல் துறையில் உள்ளவர்கள் குடும்பமாய் வந்திருக்க, அடுத்து சில நிமிடங்களில் தான்யாவும் அடுத்ததாய் சங்கரும் சத்யாவிடம் கூறிவிட்டே வந்திருந்தான்.
"டேய்! அய்யோ அம்மா! என்னை காப்பாத்துங்கனு எதாவது சத்தம் காத்துல உன் வீட்டு பக்கமா வந்தா யோசிக்காம என்னை காப்பாத்த அந்த போலீஸ்காரன் வீட்டுக்கு வந்துரு டா.. எமகாதகன்.. உன் மேல இருக்க கோவத்துல என்னை பிழிஞ்சுற போறான்!" என்று புலம்பிவிட்டு தான் வந்து சேர்ந்திருந்தான்.
நல்லபடியாய் விழா நடந்தேறி முடிய,ஜெயாவும் ஜீவன் பேசிவிட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாய் தான் இருந்தாள்.
"அண்ணிகிட்ட ஏதோ டஃப்பறேன்ட் தெரியுது இல்லம்மா?" என்று நந்தினி கேட்க,
"இது நிலைக்கணும்னு வேண்டிக்கோ!" என்று ஒற்றை வார்த்தையில் தன் வேண்டுதலை கூறிவிட்டார்.
சங்கர் தான்யாவுடன் தான் நந்தினி முழுவதும் இருக்க, தனியாய் தெரியவில்லை அவர்களுக்கும்.
"உன் பிரண்ட் வரலையாப்பா?" என விஜயலக்ஷ்மி கேட்டார்.
"யாரு ம்மா?" நல்ல பிள்ளையாய் சங்கர் கேட்டான்.
"உனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருப்பாங்க போலயே!" என்று ஜீவனும் வந்து நிற்க, 'கூடிட்டாங்கலா?' என்றது மைண்ட்வாய்ஸ்.
"சத்யாவை கேட்குறீங்கனு நினைக்குறேன்.. அவனை நந்தினி கூப்பிடல.. அதான்..." என்று இழுத்தவன்,
"அப்பா கால் பண்ணிட்டு இருக்கார்.. வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. வரேன் ம்மா.. வரேன் ண்ணா!" என ஓடியே விட்டான்.
ஜீவனும் அதன்பின் ஏன் எதற்கு என எதுவும் தங்கையிடம் கேட்காமல் இருக்க, கேட்டாலும் கஷ்டம் கேட்கவில்லை என்றாலும் கஷ்டம் என்ற நிலை தான் நந்தினிக்கு.
அதன்பின் அவ்வப்போது எதாவது சத்யாவே குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாய் வைக்க, நந்தினி பதில் அனுப்புவது இல்லை.
மேலும் இரண்டு மதங்களின் முடிவில் சத்யாவிற்கு வந்து சேர்ந்தது தபால் இன்னும் ஒரு மாத காலத்தில் வேலையில் வந்து சேர சொல்லி.
தொடரும்..