.அத்தியாயம் 36
"பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் தனியா பேசலாமா?" என்ற சத்யாவின் குரலில் சட்டென நிமிர்ந்துப் பார்த்த நந்தினி இமைக்க மறந்து பார்க்க, புருவம் உயர்த்தியவன் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
எதிர்பாராத அவன் வரவில் அதிர்ந்து நின்றவள் பார்வை மட்டும் அவனிடம் இருந்து விலகவே இல்லை.
"பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லு நந்து!" ஜெயா அவள் காதில் கூறியதில் தெளிந்து வீரபாகு வைதேகியைப் பார்த்து வணக்கம் சொல்ல,
"ரொம்ப படுத்திட்டானோ?" என்றார் வைதேகி.
என்ன சொல்ல என அவள் விழிக்க, "முதல்ல கேட்டது நான்.. அதுக்கு பதில் வரட்டும்" என சத்யா சண்டைக்கு நிற்க,
"கொஞ்சம் ஜாஸ்தி தான் போலயே வாய்!" என்று ஜீவன் நெற்றியை நீவிவிட,
"பை பர்த்!" என அதற்கும் அலட்டாமல் பதில் கொடுத்தான் சத்யா.
"முன்னாடி தோட்டத்தில பேசுங்க!" என்று விஜயா கூற,
"நீங்க எல்லாம் போவீங்கனு எக்ஸ்பேக்ட் பண்ணினேன்!" என்றவனை அடிக்காத குறையாய் தள்ளிவிட்டார் வைதேகி.
நந்தினியுடன் வெளியே வந்த ஜெயா, "நாங்க பாத்துட்டு தான் இருப்போம்!" என்று கூறி திரும்ப,
"யார் வேணாம்னா?" என்ற பதில் சத்யாவிடம்.
"எப்பவுமே இப்படி தானா?" ஜெயா வைதேகியிடம் கேட்க,
"எல்லாம் இவளால தான்.. பேசவிட்டு வேடிக்கை பார்த்தே அவனை இப்படி ஆக்கிட்டா!" என்றார் வீரபாகு.
"இவருக்கு அவனை எதாவது சொல்லலைனா பொழுது அடையாது!" என்றார் வைதேகி.
"கதை கதையா வச்சுருப்பீங்க போலயே!" என ஜெயா சிரிக்க,
"கையோட நல்லா நாள் பார்த்துடலாம் பா.." என்றார் விஜயா.
காலண்டரை கொண்டு வந்து வீரபாகுவிடம் கொடுத்து அவரையே நிச்சயத்திற்கு நாள் பார்க்க சொல்ல, பூரித்து பார்த்தார்.
"இன்னும் ஒரு பத்து நாள்ல அவனுக்கு ரெண்டு நாள் லீவு வரும்.. அவனா தான் போட்டுட்டு வருவான்.. அதுக்கு எத்தா போல ஒரு நாள் நல்லா நாள் வருது.. அன்னைக்கே நிச்சயம் வச்சுக்கலாம்.. கல்யாணத்துக்கு ஜோசியர பார்த்து தேதி குறிச்சுருவோம்!" என்று பேச,
"அப்போ நீயும் மாமாவும் போய் ஜோசியர நாளைக்கே பாத்துட்டு வந்துடுங்க!" என்றார் விஜயலக்ஷ்மி மகனிடம்.
"சத்தியமா சொல்றேன்.. இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா ஹார்ட் அட்டாக்ல போயே சேர்ந்துருப்பேன்.. என்னை அவ்வளவு பீபி ஏற வச்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க குடும்பமா?" என்றான் அப்போது இருந்த மனநிலையை நந்தினியிடம் சத்யா.
"என்ன பீபி? யார் என்ன சொன்னாங்க?" மிக சாதாரணமாய் அவள் கேட்க,
"அதான் உன்ன பொண்ணு பாக்க வந்தானாமே எவனோ ஒரு பொறம்போக்கு!" பல்லைக் கடித்து சத்யா கூற,
"இப்ப கூட வந்துருக்காங்க!" என்றாள் உதட்டை வளைத்து கிண்டலாய்.
"அடிப்பாவி! என்னையே பொறம்போக்குன்னு சொல்றியா? அவ்வளவு தைரியம் ஆகி போச்சு உன் வீடுன்னதும் ம்ம்?" என்றவனும் புன்னகை தான் புரிந்தான்.
"எனக்கே என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு புரியல.. சொந்தகாரங்க எப்படி திடிர்னு வந்தாங்கனு பயந்துட்டு நிக்கிறதுக்குள்ள, அவங்க போகவும் சுத்தமா எதிர்பார்க்காம உன்னோட பேமிலி.. அங்கேயே எனக்கு பாதி உயிர் போச்சு.. அண்ணா என்கிட்ட வந்து உன் முடிவு தான் எங்களுக்கும் முடிவுன்னு கேட்கவும் மொத்தமா நொந்துட்டேன்.. பேசவே முடியாம.. ஒஹ் காட்! எதிரிக்கு கூட வர கூடாத நிலைமை.. அண்ணா சம்மதம் சொல்லி அம்மா கல்யாணம்னு சொன்னதையே நம்ப முடியாம வெளில வந்தா நீயும் வந்து உட்காந்து இருக்க.. ஒரே நாள்ல எவ்ளோ ஷாக் எனக்கு?" என்றவள் முகம் நிலவின் பிரகாசத்தை ஒத்திருக்க, பேச்சிலும் குரலிலும் அவளின் மகிழ்ச்சி அப்பட்டமாய் வெளிவந்து கொண்டிருந்ததை அணு அணுவாய் ரசித்து நின்றிருந்தான்.
"ஆமா! நீ எப்ப வந்த?" என்றாள் சந்தேகமாய்.
"நீ ரெண்டு மாசமா எங்க போன? உன் போன் எங்க?" என்றான் பதிலாய்.
"அண்ணி போன் தண்ணில விழுந்துடுச்சு.. அவங்களுக்கு தேவைபடும்ணு நான் தான் என் மொபைலை குடுத்தேன்.."
"அப்ப உனக்கு?"
"எனக்கு யார் கால் பண்ண போறாங்க?" எனும்பொழுதே அவன் முறைக்க,
"இப்படிலாம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ணு தெரியாதே! எப்படியும் வருவ மீட் பண்ணுவோம்ணு தான் நினச்சேன்!" என்று இழுத்தாள்.
"சரி தான்.. மனுசன நல்லா புலம்பவிட்டு காரணம் வேற சொல்ற நீ? நீ போன் எடுக்கல.. என் அம்மா அப்பா என்கிட்ட சொல்லாம கிளம்பி நிக்குறாங்க.. தான்யாவை அனுப்பினா எவனோ வந்திருக்கான்னு சொல்றா.. இங்க வர்ற வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்ல.."
"அப்ப இப்போ?" என்றாள் தலை சாய்த்து.
"இப்போ என்ன? டோட்டலா நான் காலி! அதுவும் உன் வீட்டுல பெர்மிஸ்ஸன் குடுத்துட்டாங்கனதும் நீ இப்ப குடுக்குற ஒவ்வொரு எக்ஸ்பிரஸ்ஸனும்... ஷ்ஷ்.. வேணாம்.. நானே என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கிறன்.. சீண்டாத!" என்றான் நிஜமாய்.
"அவ்ளோ ஏன் கண்ட்ரோல் பண்ணனும்? அண்ணாவை வர சொல்லவா?" என்றாள் இன்னும் சீண்டி.
"முழுசா வீட்டுக்குள்ள போணுமா இல்ல இப்படியே தூக்கிட்டு போய்டவா? மனுசன் நிலைமை புரியாம விளையாடுற.." என்றான் ஒற்றை விரல் நீட்டி.
"அவ்வா! எவ்ளோ பேசுற!" நந்தினி கண்களை பெரிதாய் உருட்டி கூற,
"சத்தியமா நீ தான் பேச வைக்குற.. இதென்ன புதுசா ஓவரா பண்ணுது உன் கண்ணு.." என்றவன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
"சரி சொல்லு.. என்ன பேசனும்?" நந்தினி பேச்சை மாற்ற.
"அது கிடக்கு நிறைய.. ஆனா இப்ப கூப்பிட்டது சும்மா உன்னை தனியா பாக்க தான்.."
"அடி விழும்.. அண்ணா இருக்காங்க.."
"எனக்கு கூட தான் அம்மாவும் அப்பாவும் இருக்காங்க.. ஷாப்பா உன் அண்ணன் புராணம் தாங்கல.. கல்யாணம் முடியட்டும் மிஸ்டர் ஜீவனை நாடு கடத்துறேனா இல்லையா பாரு.."
"யாரையாவது கடத்திட்டே இருக்கணுமா போலீஸ் மாதிரி பேச சொன்னா கடத்தல் பண்ற வில்லன் மாதிரி பேசுற.."
"நான் வேணா ஹீரோ மாதிரி பேசட்டா.."
"நிறைய பேசியாச்சு.. அண்ணா கூப்பிடறதுக்குள்ள உள்ள போலாம்.." என்றவள் திரும்ப,
"ஒரு நிமிஷம் நந்து!" என்றான்.
"சொல்லு!" என கைகட்டி அவள் திரும்ப,
"உனக்கு எல்லாம் ஓகே தான?"
"என்ன?"
"இல்ல.. இன்னும் உன் வாய் திறந்து எதுவும் சொல்லல.. புரியுது.. ஆனாலும் சொல்லிடேன்.. இந்த மொமெண்ட்ல இதை கேட்டா இன்னும் சந்தோசப்படுவேன்.. அவ்ளோ ட்ராவெல் பண்ணி வந்திருக்கேன்!" என்றான்.
"என்ன சொல்ல? சொன்னா தான் புரியுமா? இல்ல சொல்லி தான் புரிய வைக்கணுமா?"
"ஷப்பா! ஏய்! இன்னைக்கு நீ சரியே இல்ல.. உன் கண்ணு ஓவரா டிஸ்டர்ப் பண்ணுது"
"அதை நீ சொல்றியா?"
"நான் வேற.. ஆனா நீ இன்னைக்கு டொடல்லா வேற.. பட் சொல்லு.. உனக்கு எல்லாம் ஓகே தான?" என கேள்வி கேட்க,
"நீ கல்யாணமே முடிஞ்சாலும் இதை தான் கேட்க போற.. போ நான் போறேன்!" என நடக்கவே ஆரம்பித்துவிட்டாள்.
"இங்க பாரு நந்து.. இவ்வளவு நாள் எனக்கு தெரியல.. ஆனா இனி நீ பேக் அடிக்க முடியாது.. மீன்ஸ் எல்லா விஷயத்திலும்!" என்றவன் பேச்சில் அவள் திரும்ப,
"எனக்கு எல்லாமா நீ தான் இருக்கனும்.. அந்த சந்தியா.. ப்ச் அந்த டாபிக் இப்ப வேணாம்.. ஆனா அன்னைக்கு.. நீ.. ப்ச் எப்படி சொல்ல.. அன்னைக்கு மத்தவங்கள விட நீ சுயநலமா யோசிச்சது இப்ப வர என்னால டாலரேட் பண்ண முடியல.. ஒரு சின்ன வருத்தம்.." என்றவன் முன் உச்சியை கோதி கொடுத்து,
"ஓகே! ரிலாக்ஸ்! இனி அது வேண்டாம்.. பட் இனி எனக்கு பேக்போன் நீ தான்.. புரியுது தானே?" என அருகில் வந்தவன் புன்னகைக்க, அன்றைய தாக்கத்தில் நின்றவள்,
"இன்னைக்கு புரியுறது எனக்கு அன்னைக்கு புரியல.. உனக்கு எதுவும் ஆகிடுமோனு மட்டும் தான் என்னால யோசிக்க முடிஞ்சது.. அண்ணா மோஸ்ட்லி ஸ்டேஷன் விஷயம் எதையும் வீட்டுல ஷேர் பண்ணிக்க மாட்டாங்க.. அது நாங்க பயந்துட கூடாதுன்னு தான்னு அம்மா ஒருநாள் சொன்னாங்க.. இப்படி என் முன்னால எப்பவும் நடந்தது இல்ல.. அதுல கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. இனி என்னால எந்த கஷ்டமும் வராத மாதிரி பாத்துக்க முடியும்.. அண்ட் அப்போ நடந்ததுக்கு..... சாரி! வேற என்ன சொல்லனு தெரியல" என கூறினாள்.
"ஹ்ம்ம்ம்! போ!" என மெல்லிய புன்னகையுடன் கூறியவன், தங்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையில் நிற்க, அவன் வருந்துகிறானோ என நந்தினி பார்த்து நிற்பதைக் கண்டு,
"போ மா!" என அவளின் கன்னம் தட்டி கூறவும் புன்னகையுடன் உள்ளே சென்றுவிட, சில நிமிடங்களில் மீண்டவன் தானுமாய் உள்ளே சென்றான்.
பத்து நாளில் நிச்சயம் அடுத்து வரும் மூன்று மாதங்களில் திருமணம் என பெரியவர்கள் பேசி இருக்க, நிச்சயத்திற்கு சம்மதித்தவன், திருமணத்திற்கு ஒரு வருடம் நிச்சயம் வேண்டும் என கூறிவிட்டான்.
"அவன் இஷ்டத்துக்கு விடாதன்னு சொன்னா கேட்டியா?" என அங்கே வைத்தே வீரபாகு கோபம் கொள்ள,
"ப்பா!" என்றான் சத்யா.
"என்ன சத்யா எதனால ஒரு வருஷம்?" என ஜீவன் கேட்க,
"ட்ரைனிங் தான் போய்ட்டு இருக்கு.. இப்ப கல்யாணம் பண்ணி நந்துவை இங்க விட்டுட்டு போனும்.. ஒன் இயர் டைம் குடுத்தா எங்க போஸ்டிங்னு பாத்து நானும் ரெடி ஆகிப்பேன் இல்ல.. இங்கயும் அங்கேயுமா இருக்க வேண்டாம்" என்றவன் பதிலும் சரியாy இருந்தது.
ஜீவனும் அவனுக்கு ஆதரவாய் பேச, "பேசியே கவுத்துடுறான் யாரனாலும்!" என்று வீரபாகுவும் விட்டுவிட்டார்.
தொடரும்..