அத்தியாயம் 5
"இப்ப நீ என்ன தான் டா பண்ணனும்னு சொல்ற?"
சத்யா பேசியதை கேட்ட அனைவர்க்கும் அது உண்மையாய் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றினாலும் அதற்கு மேல் யாரும் யோசிக்க தயாராய் இல்லை.
ஸ்ரீதர் என்ற ஒருவனை எதிர்த்து நிற்பதை பற்றி அவர்கள் மறந்தும் கூட நினைக்க தயாராய் இல்லை.
இந்நிலையில் இருப்பவர்களிடம் தான் தன் உயிரைக் கொடுத்து கத்திக் கொண்டிருந்தான் சத்யா.
சங்கர் மட்டுமே "என்ன தான் பண்ணனும்னு சொல்ற?" என்று கேட்க,
"என்ன பண்ண முடியும்? சத்யா சொல்றது உண்மையாவே இருந்தாலும் அந்த ஸ்ரீதர்க்கு முன்னாடி ஒன்னும் செய்ய முடியாது" என்றான் வகுப்பில் இருந்த ஒருவன்.
"சோ? அவ்ளோ தான் இல்லை? ஒரு உயிர் போனாலும் எனக்கென்னனு தான் இருப்பிங்க இல்ல?" சத்யா கேட்க,
"சத்யா!" என்று அவனை ஆற்றுப்படுத்த வந்த சங்கர் கைகளை தட்டி விட்டான் சத்யா.
"நாம எல்லாம் காலேஜ் ஸ்டுடென்ட்! போங்க! வெளில போய் பெருமையா சொல்லிக்கோங்க.. இன்னைக்கு காலேஜ்ல.. நாளைக்கு உங்க வீட்ல.. அப்பவும் இப்படி தான் நிப்பிங்க இல்ல?" என்று கேட்க, யாருமே அவனை நிமிர்ந்து பார்த்தனர் இல்லை.
"டேய்! நீ கோபத்துல பேசுற!" சங்கர் கூற,
"இல்ல டா.. இல்ல!" என்று கத்திய சத்யா,
"ஆதங்கத்துல பேசுறேன்.. கண்ணு முன்னாடி அதுவும் சந்தேகம் வந்தும் விட்டுட்டேன் பார்த்தியா! அந்த ஆதங்கத்துல பேசுறேன்.. இப்ப அந்த உயிர் போனதுல எனக்கும் பங்கு இருக்கு தானே?" என்று கேட்க, நந்தினியும் சத்யாவின் இந்த கதறலில் விக்கித்து தான் நின்றாள்.
"யாரும் வர வேண்டாம் சாமிங்களா!" என்று கையெடுத்து கும்பிட்டவன்,
"நானே பார்த்துக்குறேன்!" என்று வகுப்பறையை விட்டு வெளியேறவும் ஆசிரியர் வர, அப்படி ஒரு அமைதி வகுப்பறை.
"என்ன இன்னைக்கு எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க.. எனக்கே ஆச்சர்யமா இருக்கு.." ப்ரோபசர் கேள்விக்கும் அமைதி தான்.
"சந்தியாக்காக பீல் பண்றிங்களா?" அவரே நினைத்து கேட்டுக் கொண்டவர்,
"சில விஷயங்களை கடந்து தான் ஆகணும்" என்று முடித்துக் கொண்டார்.
"எங்க டா போற?" சத்யாவுடன் வெளி வந்த சங்கர் கேட்க,
"தெரிஞ்சிக்கணும் டா.. இல்லைனா எனக்கு தூக்கம் வராது.." சொல்லியவனை நினைத்து பாவமாய் இருந்தது சங்கருக்கு.
"சரி நானும் வர்றேன்!" என்று உடன் செல்ல, இருவரும் சந்தியாவின் வகுப்பறை முன் சென்றனர்.
"என்னனு சொல்ல போற?" சங்கர் கேட்க,
"சொல்லிக்கலாம்!" என்று உள்ளே நுழைந்தான்.
வகுப்பில் சிலரே இருந்தனர். விசாரித்த பொழுது சந்தியாவின் நண்பர்கள் என சிலரை மேனேஜ்மென்ட்டில் அழைத்து சென்றதாய் கூற,
"உன் பிளான் என்னனு சொல்லு டா.. என்ன செய்ய போறன்னு ஆச்சும் சொல்லு" என்று சங்கர் கேட்க,
"எனக்கும் தெரில.. ஆனா எதாவது செய்வேன்.. எனக்கு தோணுது டா.. நிச்சயமா இது அவனால தான்னு தோணுது" என்றான் சத்யா.
"சத்யா அவசரப்படாத! கொஞ்சம் நிதானமா யோசி!"
"அதான் டா முடியல.. அன்னைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தேன்னா என்னால முடிஞ்சிருக்குமோன்னு தோணிட்டே இருக்கு டா.. எப்படி சும்மா இருக்க முடியும்?"
"முடிஞ்ச எதுக்கும் நாம பொறுப்பாக முடியாது டா.. நீ ரொம்ப எமோஷனலா இருக்க.."
"ம்ம்ஹ்ம்ம் இல்ல.. நான் தெளிவா இருக்கேன்.. மானேஜ்மென்ட் இப்ப அந்த சந்தியா பிரண்ட்ஸ்ஸை கூட்டிட்டு போய் மிரட்டி விட்ருப்பாங்க" சத்யா கூற,
"என்ன டா சொல்ற?"
"ம்ம் ஆமா! இதெல்லாம் நான் பிரேடிக்ட் பண்ணல.. அதான் உண்மை.. நிச்சயமா உண்மையை மறைக்க பாக்குறாங்க டா"
"சத்யா! என்னென்னவோ சொல்ற.. முதல்ல விசாரிக்கலாம்" சங்கர்.
"ம்ம்! நான் சந்தியா பிரண்ட்ஸை தான் பாக்கணும் முதல்ல" என்றவன் வகுப்பறை செல்லாமல் சந்தியா வகுப்பறை பக்கத்தில் தான் நின்றான்.
மதிய உணவு இடைவேளையிலும் கூட வந்திருக்கவில்லை அவர்கள்.
சங்கர் எவ்வளவு வற்புறுத்தியும் சத்யாவை அங்கிருந்து அசைக்க முடியவில்லை.
உணவு இடைவெளியில் நந்தினி தான்யா இருவரும் வந்தனர்.
"சத்யா! எனக்கு புரியுது.. ஆனா நம்மாள எதுவும் செய்ய முடியாதுன்றது தான் உண்மை" நந்தினி கூற,
"அப்படி நினச்சு தான் நாம எதுவும் முயற்சி கூட பண்ண மாட்றோம் நந்து" என்றான்.
"சத்யா! ப்ளீஸ் இதுல அரசியல் இருக்கு.. காலேஜ் கூட அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணும்.." தான்யா கூற,
"நேத்து நீ அந்த பொண்ணை பாக்கல தனு.. உன்னை விட ரெண்டு வயசு கூட இருக்குமா? சாதாரணமா அழுறதுக்கும் அவமானத்துல அழுறதுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க நம்மால முடியும்.. முடியும் தானே? என்னால முடிஞ்சது.. ஆனா.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. ரெண்டு வார்த்தை அன்னைக்கு அந்த பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தை பேசி இருந்தா இப்ப உயிரோட இருந்திருக்க வாய்ப்பு இருக்கு இல்ல?"
"சத்யா! காம் டவுன்.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியல" நந்தினி.
"எனக்கும் உங்களுக்கு எப்படி சொல்றது இதுக்கு மேலன்னு தெரியல" என்று கூறும் நேரம் ஐந்து பெண்கள் அந்த பக்கமாய் வர, உடன் ஒரு ஆசிரியையும்.
"சங்கர்! நீ அங்கே..." என்று கூற வந்தவன்,
"இல்ல... வேண்டாம்.. நானே பார்த்துக்குறேன்" என்று கூறி கல்லூரிக்கு வெளி பக்கமாக சென்றான்.
"என்ன டா இவன் புரிஞ்சிக்கவே மாட்டுறான்.." தான்யா கூற,
"நீ சொல்லி பார்த்தியா சங்கர்?" என்றாள் நந்தினி.
"அவன் ரொம்ப புலம்புறான் நந்தினி.. எப்பவுமே இப்படி தான்.. ஆனா இவ்வளவு எமோஷனல்னு எனக்கே இன்னைக்கு தான் தெரியுது.. என்னாலையும் அவனை கண்ட்ரோல் பண்ண முடியல" என்றான் சங்கர்.
"எனக்கு பயமா இருக்கு.. அந்த ஸ்ரீதர் என்ன வேணா பண்ணுவான்.. இந்த பொண்ணு எதுக்காக எப்படி இறந்திருந்தாலும்... சத்யாக்கு இது தேவை இல்லைனு தான் எனக்கு தோணுது.." நந்தினி கூற,
"நாம மறுபடியும் மறுபடியும் இப்படி சொல்றதால அவன் மாறுற மாதிரி தெரியல நந்தினி.. ரொம்ப டீப்பா இறங்குற மாதிரி தெரியுது..நான் அவன் கூட இருக்கனும்.. அப்புறம் பேசிக்கலாம்" என்று சென்றான் சங்கர்.
விடுதியில் மேல் மாடியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான் சத்யா.
"எங்க டா போய்ட்டு வர்ற?" சங்கர் கேட்க,
"ஸ்ரீதர் ரூம்க்கு" என்றதும் சங்கர்க்கு இன்னும் திடுக்கிட்டது.
"அங்கே எதுக்கு?" என்று சங்கர் கேட்க, பதில் கூற வில்லை அவன்.
மீண்டும் வெளியே கிளம்பியவன் கைகளைப் பிடித்துக் கொண்டான் சங்கர்.
"என்ன பண்ணனும் சொல்லு!" என்று சங்கர் கேட்க, சத்யா எதுவும் கூறாமல் பார்க்கவும்,
"எனக்கு அந்த பொண்ணு முக்கியம் இல்லை தான்.. ஆனா நீ முக்கியம்.. உனக்காக என்ன வேணா செய்வேன்.. சொல்லு!" என்று கேட்கவும், அவனை அணைத்துக் கொண்டவனுக்கு அது தேவையாய் இருந்தது.
கல்லூரி முடிந்ததும் நந்தினி, தான்யா இவர்களைத் தேட, சத்யா சங்கர் இருவரும் சந்தியாவின் அறையில் இருந்தனர்.
அனைவரும் கிளம்பி சென்றிருக்க, ஐந்து பெண்கள் மட்டும் அழுகையை விழுங்கிக் கொண்டு ஒருவருக்குள் ஒருவர் பேசியபடி இருந்தனர்.
சத்யா வருவதைக் கண்ட பெண்கள் எழுந்து வெளியேற முயல,
"ஒரு நிமிஷம்! நான் உங்ககிட்ட பேசணும்" என்றான் சத்யா.
"நீங்க?" ஒரு பெண் கேட்க,
"நானும் இங்க தான் படிக்குறேன்.. மாஸ்டர் டிகிரி" என்றதும் அவர்கள் அமைதியாய் என்னவென்று பார்க்க,
"சந்தியா உங்க எல்லாருக்குமே பிரண்ட்டா?" என்றான்.
"நீங்க ஏன் கேட்குறீங்க?" என்ற கேள்வி வர,
"நிஜமாவே அந்த பொண்ணு உங்களுக்கு பிரண்ட்டா இருந்தா அவளுக்கு நீதி கிடைக்கணும்னு நினைப்பிங்க இல்ல? அதுக்காக கேட்குறேன்" என்றதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"சொல்லுங்க! நிஜமாவே சந்தியாக்கு உடம்பு சரி இல்லையா?" என்று கேட்டவன் கூர்மையாய் ஒவ்வொருவரையும் கவனித்தான்.
"உங்க கண்ணுக்குள்ள நிக்குற கண்ணீர் சந்தியாக்கானதுன்னு எனக்கு புரியுது.. சத்தியமா உங்க யார் பேரும் வெளில வராது.. ப்ளீஸ் சொல்லுங்க" என்று கேட்க,
"உங்களால என்ன பண்ண முடியும்? இது எழுதப்படாத சட்டம் இங்க" என்று வெறுமையாய் ஒருத்தி கூற,
"சோ! ஒதுங்கி தான் போவீங்க? உங்க பிரண்ட்னாலுமே?" என்றான்.
"எங்களுக்கு குடும்பம் இருக்கு.. மிரட்டினது வேற யாரும் இல்ல.. காலேஜ் பிரின்சிபால் எச்ஓடி னு நமக்கு சொல்லி தர்ற எல்லாரும்.. இவங்கள மீறி என்ன செய்ய முடியும்?"
"நீங்க உண்மையை மட்டும் சொல்லுங்க.. நான் பார்த்துக்கறேன்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. ஜஸ்ட்.. ஜஸ்ட் நேத்தைக்கு முந்தின நாள் என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லுங்க.." என்றவன்,
"ப்ளீஸ்!" என்று கையெடுத்து கும்பிட்டு விட,
"நான் சொல்றேன் ண்ணா!" என்றாள் ஒரு பெண்.
"சொல்லுங்க!" அவன் வேகமாய் கேட்க,
"இல்ல டா வேண்டாம்" என்று வேகமாய் தடுத்து வந்திருந்தான் சங்கர்.
"என்ன டா!" பல்லைக் கடித்து தன் கோபத்தைக் காட்டி இருந்தான் சத்யா.
பெண்களின் கையில் இருந்த நோட்டில் ஒன்றை பறித்த சங்கர் அதில் இருவரின் மொபைல் எண்களையும் எழுதி ஒரு பெண்ணின் கையில் திணித்து விட்டு வகுப்பறை உள்ளேயே ஒளிந்து கொள்ளவும், புரியாமல் பார்த்து நின்ற பெண்களிடம்
"இன்னும் வீட்டுக்கு போகாம என்ன பண்றீங்க?" என்று வந்திருந்தார் ஆசிரியர் ஒருவர்.
"அது.." என சிலர் தடுமாற,
"கிளம்பிட்டோம் சார்!" என்ற ஒரு பெண்ணின் குரலுக்கு பின் அவர் அப்படியே நிற்க,
"வா போலாம்" என்ற குரலோடு பெண்கள் அனைவரும் வெளியேறிய பின் பார்த்தபடி சென்றுவிட்டார் அந்த ஆசிரியர்.
"தேங்க்ஸ் டா!" சத்யா சங்கரிடம்.
"ஆனா போன் பண்ணுவாங்களானு டவுட் தான் இல்ல?" சங்கர்.
"பாக்கலாம்!" என்றவன்,
"வா ஹாஸ்டல் போலாம்" என்று கூற,
"அங்க என்ன டா பண்ணி வச்சிருக்க?" என்றான் சத்யா குரலில் இருந்த மாற்றத்தில்.
"போய் தான் நிறைய தெரிஞ்சிக்கணும்.. போலாம்" என்றவன்,
"அந்த நாய் தான்னு கன்ஃபார்ம் மட்டும் ஆகட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு" என்று கூறியபடி செல்ல,
என்னவோ செய்திருக்கிறான் என்று புரிந்த அளவுக்கு என்னவாய் இருக்கும் என்று புரியவில்லை.
தொடரும்..