அத்தியாயம் 6
"நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ என்ன டா பண்ணிட்டு இருக்க?" என்று சங்கர் கேட்க,
"அதான் எதுவும் பண்ண முடியலையே!" என்றான் கட்டிலில் படுத்து கால் காலை போட்டுக் கொண்டு.
அலைபேசி எண்ணைக் அந்த பெண்களின் நோட்டில் எழுதி கொடுத்து அனுப்பி விட்டு வந்து இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தது.
அங்கும் இங்குமாய் சிறிது நேரம் அறைக்குள் உலாத்தினான் சத்யா.
சங்கரும் என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே தான் இருந்தான்.
"அந்த பொண்ணுங்க போன் பண்ணணுமே டா!" சத்யா என்ன நினைக்கின்றான் என தெரியாமல் சங்கர் கேட்க,
"பண்ணுவாங்கன்னு நினைக்குற?" என்றான் சத்யா.
"எனக்கும் சான்ஸ் இல்லைனு தான் தோணுது.. அங்கேயே ப்ரோபசர் வரலைனா கூட பேசி மேட்டர வாங்கி இருக்கலாம்.. ஆனா இப்போ..." என்று யோசித்தான் சங்கர்.
"போலீஸ் ஸ்டேஷன் போலாம்!" சத்யா கூற,
"ப்ச்! லூசா டா நீ? காலேஜ்ஜே அவன் பக்கமா இருக்கு.. ப்ரூப் ஒன்னும் இல்லாம அங்கேயே போய் என்ன பண்ண போற?" என்றான் சங்கர்.
"அப்ப அந்த பொண்ணு வீட்டுக்கு போகலாம்" என்று சத்யா கூற,
"போயி?" என்றான்.
"போலாம்.. போய் பார்க்கலாம்.. டே ஸ்காலர்.. வேற எதுவும் தெரியாது.. சோ போய் பார்க்கலாம்" என்று கூறவும், சங்கருமே சரி என்று தான் நினைத்தான்.
அது வரையுமே யாரும் அழைக்கவில்லை சத்யாவிற்கு. ஒரு ஹெட் செட்டை எடுத்து சத்யா மாட்டிக் கொண்டு அறையில் இருந்து வெளி வர, அவனை புதிதாய் பார்த்தபடி உடன் வந்தான் சங்கர்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த சந்தியாவின் வீட்டிற்குள் சென்ற பொழுது அங்கே உறவினர்கள் என சிலர் இருக்க, சாங்கியங்கள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
சந்தியாவின் அன்னையைக் கேட்டு அவர் அருகே சென்ற பொழுது அவரிடம் எதுவும் கேட்க முடியாது என்று தெரிந்தது.
முழுதாய் உடைந்து போய் அமர்ந்திருந்த அந்த பெண்மணியைப் பார்க்கும் பொழுது இன்னும் அதிகமாய் வலித்தது சத்யாவிற்கு.
சந்தியாவின் தந்தையும் தளர்ந்து போய் அமர்ந்திருக்க, அவர் கைகளைப் பிடித்து அழுத்திக் கொடுப்பதற்கு மேல் என்ன செய்ய என தெரியவில்லை அவனுக்கு.
"டேய்!" என்று சங்கர் காட்டிய பக்கம், ஒரு சிறு பெண்.. பார்த்ததும் ரத்தம் கொதித்தது ஸ்ரீதரை நினைத்து.
சந்தியாவின் தங்கையாய் இருக்க கூடும். பள்ளி பருவத்தில் கலைந்த முடியுடன் நலுங்கிய உடையுமாய் சந்தியாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அழுது கண்கள் கண்ணீர் வற்றி சிவந்து போய் அந்த பெண் அமர்ந்து இருக்க, தலையைக் கோதியவன் அழுத்தமாய் முகத்தை துடைத்துக் கொண்டான்.
"போலாம் டா!" என்று வெளியே வர,
"அவ அம்மாவும் அப்பாவுமே வாய திறக்க மாட்டுக்காங்க.. என்ன சொல்லி என்ன ஆக போகுது?" என்ற பெரியவரின் பேச்சில் நின்றிருந்தான் சத்யா.
அந்த பெரியவர் அருகே சத்யா செல்லவும், "என்ன பா?" என்று அவர் கேட்க,
"இல்ல என்னவோ சொல்லிட்டு இருந்திங்க?" என்றான்.
"அதான் பா.. அந்த புள்ள நேத்து வரும் போதெல்லாம் நல்லா தான் இருந்துது.. காலங்காத்தால தான் அழுவுற சத்தம் கேட்டு பக்கத்துல இருக்க நாங்க எல்லாம் வந்தோம்.." என்று கூற,
"அப்போ அந்த பொண்ணு இறந்தது காலையில தான் எல்லாருக்கும் தெரியுமா?" என்றான் சத்யா.
"அப்படி தான் சொல்லுதாங்க.. அவ அம்மா அப்பா என்னனா வாய திறந்து அழ கூட இல்ல.. எதுவும் பேசாம இருக்கத பாக்கும் போது சந்தேகமாவும் இருக்கு" என்றார்.
"என்னனு?"
"மர்மமா தான் இருக்கு.. நல்லா இருந்த புள்ள திடிர்னு இறந்து போச்சு.. என்னத்த சொல்ல" என்று கூற, கேட்டபடி இருவரும் திரும்பினர்.
"என்ன டா இது?" என்று சங்கர் கேட்க, கைகாட்டியவன் ஹெட்செட்டில் கவனம் ஆக, அங்கே ஸ்ரீதர் அவன் நண்பர்களுடன் அறையில் பேசுவது தெளிவாய் கேட்டது சத்யாவிற்கு.
சங்கர் மொபைலிற்கு அழைப்பு வர, எடுத்து பார்த்த போது நந்தினி தான் அழைய்திருந்தாள்.
"சொல்லு நந்தினி!" சங்கர் கேட்க,
"சத்யா என்ன பன்றான்?" என்றாள் அவள்.
தாங்கள் வந்ததையும் வந்த விஷயத்தையும் சங்கர் கூற,
"ஏன் டா இவ்வளவு பிடிவாதம் அவனுக்கு?" என்றாள் ஆற்றாமையாய்
"இது என்னவோ விஷயம் பெருசா இருக்கு போல.. நான் அவன்கூட தானே இருக்கேன்.. பார்த்துக்குறேன்" என்றான் சங்கர்.
"சத்யாகிட்ட போனக் குடு" நந்தினி கூறவும் சங்கர் நீட்ட, வேண்டாம் என்பதாய் தலையசைத்தான் சத்யா.
"நந்தினி டா!" சங்கர் கூற, சத்யா கவனம் முழுதும் காதில் கேட்டுக் கொண்டிருந்ததில்.
"சரி நான் ஹாஸ்டல் போய்ட்டு பேச சொல்றேன் நந்தினி" என்று கூறவும் நந்தினியும் அமைதியாய் வைத்து விட்டாள்.
ஹாஸ்டல் வரும் வரை அமைதியாய் இருந்தான் சத்யா. அவன் அங்கே ஸ்ரீதர் அவன் நண்பர்கள் என அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான் ஏன அறியவில்லை சங்கர்.
சத்யா அறையை விட்டு வெளிவரவே இல்லை. சங்கர் கொண்டு வந்திருந்த உணவையும் தொடவில்லை.
"நீ கேட்ட ஆதாரம் கிடைச்சிருச்சு.. இப்போ போலீஸ்டேஷன் போலாம்" சத்யா அந்த இரவில் கூற,
" என்ன ஆதாரம்? நீ என்ன உலர்றனே எனக்கு புரிய மாட்டுது" சங்கர் கூறிக் கொண்டிருக்கும் போதே தன் மொபைலில் சேமித்து வைத்திருந்த அந்த ஆடியோவை ஓட விட்டான் சத்யா...
"இது எப்படி டா?" என்ற சங்கருக்கு தான் வரும் போது சத்யா ஸ்ரீதர் அறையில் இருந்து வந்த காரணம் புரிந்தது.
"உன் நோக்கியா அங்கே இருக்குதா?" சங்கர் கேட்க,
"ஹ்ம்!" என்றவன்,
"நந்தினி எதுக்கு கால் பண்ணினா?" என்று கேட்க,
"உன்கிட்ட பேசணும்னு சொன்னா.." என்று கூற,
"நாம எல்லாருமே சுயநலவாதிகள் தான்.. நம்மள சொல்லி தப்பு இல்ல.. அடுத்தவன் பிரச்சனைல தலையிடாதன்னு சொல்லி சொல்லி இல்ல வளத்துருக்காங்க.." என்றவன்,
"நந்தினி மட்டும் விதிவிலக்கா என்ன?" என்றவனுக்கு,
'நந்தினிக்கு கூட புரியவில்லையே' என்ற ஆதங்கம் இருக்க தான் செய்தது.
"டேய்! என்ன டா நீ? அவ உனக்காக யோசிக்குறா.. உனக்கு அது புரியலையா?" சங்கர் கேட்க,
"ப்ச்! சாரி விடு! வா போலாம்" என்று சத்யா கூற,
"இந்த நேரத்துல போய் ஒன்னும் பண்ண முடியாது.. விடியட்டும்.." என்ற போது மணி பத்து.
"இல்ல! இப்பவே!" என்றவன் கிளம்பியதற்கு அடையாளமாய் எழுந்து நிற்க,
"சொல்றதை கேட்க கூடாதுன்ற முடிவோட இருக்க!" என்று கூற,
"அந்த பொண்ணுக்கு நீதி வேணும்னு நினைக்குறேன்" என்றவன் செல்ல, பின்னால் சென்றான் சங்கர்.
"இவனுக்கு என்ன டா வந்தது.. மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்?" ஒரு குரல் கேட்க,
"அந்த சந்தியா இறந்துட்டான்னு கேட்டதுல இருந்து அவன் அப்படி தான் இருக்கான்.. என்னவோ அவனே கொன்ன மாதிரி.. அவ்வளவு நல்லவனா நீ?" என்ற குரல் ஸ்ரீதர் உடையது.
"எனக்கு என்னவோ பயமா இருக்கு மச்சா.. இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல" ஒருவன் கூற,
"அட போனா போறானு விடுவியா.. வேற பொண்ணா இல்ல.." இன்னொருவன்,
"டேய்! டேய்! இருங்க.. இப்ப தானே செத்து தொலஞ்சிருக்கா.. உடனே எல்லாம் வேண்டாம்.. நான் சொல்றேன்" என்றான் ஸ்ரீதர்.
"நம்மகிட்ட மாட்டுனது எல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கு.. இது என்ன டா செத்து போச்சி?"
"அதான் டா நானும் நினச்சேன்.. தம்மா துண்டு பிட்டு படம்.. அதை வெளில விட்ருவேன்னு சொன்னதுக்கே போய் சேர்ந்துட்டா.. அதான் அப்பா காலேஜ்ல பேசிட்டாரு இல்ல.. வெளில தெரிஞ்சா காலேஜ் பேரும் போயிரும்.. அதனால வெளில வர விட மாட்டானுங்க" என்ற ஸ்ரீதர் குரலுக்கு சங்கருக்கே அதிர்ச்சியோடு ஆத்திரமும்.
"ஆமா ஆமா! இந்த வருசத்தோட காலேஜ் வேற முடியுது.. என்ன பண்ண போறோமோ.."
"என்ன டா வாழ்க்கைனு புதுசா கவலை எல்லாம்?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.. நல்லா பொண்ணுங்கள பாத்து மிரட்டி அடுத்துன்னு பழகிட்டு வெளில போய் என்னனு இருக்கனு சொல்றேன்" என்று சிரிக்க, நண்பர்களும் சிரிக்க நாராசமாய் அந்த ஒலி கேட்டது.
சத்யா ல, சங்கரோடு இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்ட இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
"அந்த காலேஜ்ல தான் நீங்க ரெண்டு பேரும் படிக்கிறிங்களா?" என்று இவர்களை விசாரிக்க,
"ஆமா சார்!" என்றவன் அனைத்தையும் விவரித்தான்.
"இதுக்கு வேற காப்பி வச்சிருக்கீங்களா?" என்று கேட்க,
"இல்ல சார்!" என்றவனை,
"ரொம்ப நல்லது.. அதை இங்கேயே டெலிட் பண்ணிட்டு ஒழுங்கா போய் படிக்குற வேலைய பாருங்க.." என்று கூறவும்,
எதிர்பார்த்தேன் என்பதை போல சத்யா பார்க்க, சங்கர் சத்யாவைப் பார்த்தான்.
"ஏன் டா எனக்குன்னு வருவீங்களா? அவன் அப்பன் எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? கிழிச்சு தொங்க விட்ருவானுங்க என்னையவே.. அப்போ உங்க நிலைமையை யோசிச்சு பாருங்க" என இன்ஸ்பெக்டர் கூற,
"அந்த பொண்ணு பாவம் இல்லையா சார்? இவங்க பேசுறத கேட்ட அப்புறம் தான் நிறைய பொண்ணுங்க பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு தெரியுது.. அதுக்கெல்லாம் என்ன சார் பதில்?" என்றான் சங்கர் கோபமாய்.
"பாதிக்கப்பட்ட பொண்ணுங்களே வந்து கம்பளைண்ட் குடுத்தாலும் ஒன்னும் இல்லாம ஆகிடுவாங்க டா..அந்த பொண்ணுங்களையும் சேர்த்து.. சொன்னா புரிஞ்சிக்கோங்க.. எனக்கும் கோபம் வர தான் செய்யுது.. என்னால முடிஞ்சது அந்த காலேஜ்ல அட்மிஷன்னு வர்ற பொண்ணுங்களை தடுக்குறது தான்.. அது கூட சீக்ரெட்டா தான் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கும் குடும்பம் குழந்தைனு இருக்கு.. உங்களுக்கும் பியூச்சர் இருக்கு.. சொன்னா கேளுங்க டா" என்று கூறும் பொழுதே அவர் நிலை புரிய,
"சார்!" என்று கூற வந்த சங்கரை, கைபிடித்து தடுத்து அழைத்து வந்திருந்தான் சத்யா.
"என்ன டா அநியாயம் இது? போலீஸே இப்படினா அப்போ யார் தான் டா எதிர்த்து கேட்குறது? நான் கூட நீ தப்பா அந்த ஸ்ரீதரை நினைச்சுட்டு பேசிட்டு இருப்பியோன்னு நினச்சேன்.. ஆனா இவனுங்க என்ன டா பன்றானுங்க?" என்ற சங்கர்,
"நம்ம காலேஜ் பொண்ணுங்க.. கடவுளே!" என்று தலையில் கைவைக்க,
"என் கூட வா!" என்ற சத்யா, சங்கரை அழைத்துக் கொண்டு நடு இரவு ஒரு மணிக்கு சென்று நின்ற இடம் சந்தியாவின் வீடு.
தொடரும்..