அத்தியாயம் 9
"இவன் ஆளே சரி இல்ல ஸ்ரீ! ஒரு போடு போட்டு வைக்குறது தான் நல்லதுனு தோணுது" சாப்பிட அமர்ந்திருந்த சத்யாவைப் பார்த்து ஸ்ரீதர் நண்பன் கூற, ஸ்ரீதர் பார்வையும் அவனிடம் தான் இருந்தது.
"இவனெல்லாம் ஒரு ஆளு! சும்மா பொண்ணுங்கள உஷார் பண்ண சீனா இருக்கான்" என்றான் ஸ்ரீதர் அவனைப் பார்த்தபடி.
"போலாம் டா!" சங்கர் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருப்பவனை அழைக்க,
"இன்னொரு சப்பாத்தி வாங்கிட்டு வா!" என்றான் சத்யா.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.
வா போலாம்!" இரண்டிற்கு மேல் சாப்பிடாதவன் ஐந்தாவதாய் கேட்கவும் எதாவது செய்து வைத்து விடக் கூடாதே என இழுத்து தான் வந்திருந்தான் சங்கர்.
"என்ன தான் நினைச்சுட்டு இருக்கன்னே புரியல டா.. மதியம் தான் அவ்ளோ பேசின.. எல்லாரும் கையை விரிச்சிட்டாங்க.. நீ என்ன இவ்வளவு நார்மலா இருக்க.. அது தான் எனக்கு பயமா வேற இருக்கு" என்று தன் பயத்தை சங்கர் ஒத்துக்
கொள்ள,
"இன்னைக்கு வெள்ளி கிழமை!" என்றான் சம்மந்தம் இல்லாமல் சத்யா.
"ஆமா! இன்னைக்கு வெள்ளி கிழமை.. நாளைக்கு சனி கிழமை.. நான் கேட்டேனா உன்கிட்ட?" என்ற சங்கர், தோண்டி துருவ எல்லாம் இல்லை சத்யாவை.
மதியம் சந்தியா தோழியிடம் பேசிவிட்டு வந்தது முதல் அவ்வளவு அமைதியாய் ஆழ்ந்த சிந்தனையோடு தனியாய் தனிமையில் இருப்பவனைப் பார்த்து பயந்து வந்தது.
என்ன செய்ய முடியும்? எதாவது வழி இருக்கிறதா என சிந்திப்பான் என நினைத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை சங்கர்.
இரவு உணவு எடுத்து வருவதாய் கூறிய சங்கரை தடுத்து தானும் அவனுடன் மெஸ் உள்ளே நுழைய, அவன் எதிர்பார்த்தது போல அங்கே தான் ஒவ்வொருவரையாய் கிண்டல் செய்த படியும் சாப்பாட்டை வீண் அடித்த படியும் இருந்தது ஸ்ரீதர் குழு.
வேண்டும் என்றே அவர்களுக்கு எதிரே அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான் சத்யா.
ஸ்ரீதர் அவன் நண்பர்கள் என அனைவரின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் அவன் பார்வை தீர்க்கமாய் இருந்தது.
அடுத்த சப்பாத்தி கேட்டவனை சங்கர் இழுத்து வர, அப்போது,
"சாப்பாடே சரி இல்ல டா.. வெளில போய் சாப்பிடலனா எனக்கு தூக்கம் வராது" ஸ்ரீதர் சொல்லியபடி செல்ல,
"ஒரு கட்டிங் போட்ற வேண்டியது தான்" என்றான் அவன் நண்பன்.
தனக்குள் எழுந்த இதழ் வளைத்த புன்னகையை யாருக்கும் காட்டாமல் தன் அறைக்கு சென்றான் சத்யா.
அடுத்த நாள் காலை நல்ல உறக்கத்தில் இருந்த சத்யாவைப் பிடித்து உலுக்கி எழுப்பினான் சங்கர்.
"சத்யா எந்திரி டா!" என்று ஒரு அடியும் வைக்க,
"ப்ச்! தூக்கம் வருது டா.. கிளாஸ் தானே மெதுவா போலாம்" என்றான் சத்யா.
"அய்யோ! சத்யா எழுந்துக்கோ! வெளில வந்து பாரு.. ஸ்ரீ.. ஸ்ரீதர் இஸ் நோ மோர்!" என்றதும் போர்வையை முகத்தில் இருந்து விலக்கியவன்,
"காலங்காத்தாலே இழவு நியூஸ் தான் கிடைச்சுத்தா உனக்கு என்னை எழுப்ப?" என்று கேட்க,
"சத்யா உனக்கு புரியலையா.. ஸ்ரீத..." என்று மறுபடியும் கூற வந்த சங்கர்,
"டேய்!" என்று குரல் வராமல் அழைக்க, சத்யா போர்வையை தலைக்கு மூடி இருந்தான்.
"டேய் உன்னை தான்!" என்றான் மீண்டும் சங்கர்.
"என்ன டா?" என்று சோம்பலோடு அவன் கேட்க,
"என்ன பண்ணின?" என்றவன் முகம் வெளிரி இருந்தது.
"என்ன என்ன பண்ணின?" என்றான் எழுந்தமர்ந்து நெட்டி முறித்து.
"நீ தான் எதுவோ பண்ணி இருக்க ... உண்மையை சொல்லு" சங்கர் குரல் நடுங்க கேட்க,
"ஏய்! ச்சி! எனக்கு வேற வேலை இல்ல?" என்றவன் எழுந்து குளிக்க சென்றான்.
குளித்து முடித்து சத்யா தயாராக, "எங்க டா கிளம்புற?" என்றான் சங்கர்.
"காலேஜ் தான்.. வேற எங்க?" என்று கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவியபடி கூற,
"ஹாஸ்டல் முழுக்க போலீஸ்.. யாரையும் வெளில விடல" என்று கூறவும், சீவுவதை நிறுத்தியவன்,
"ப்ச்! இவன் இருந்தாலும் பிரச்சனை.. இல்லைனாலும் பிரச்சனை" என்று கூற,
"நேத்து தான் காலேஜ் வர மாட்டேன்னு தான்யா, நந்தினிகிட்ட சொல்லிட்டு வந்திருக்க.. இன்னைக்கு கிளாஸ்க்கு ஆளுக்கு முன்ன கிளம்புற?" கண்களை சுருக்கி கேள்வியாய் கேட்டவனுக்கு நன்றாய் தெரிந்தது.. நிச்சயம் இவன் வேலை தான் என்று.
அதுவே பயத்தை உண்டு பண்ணியது. சத்யா வாழ்க்கை? என்ற பயம்.
இறந்தவன் ஒன்றும் நல்லவன் அல்ல தான்.. ஆனால் இவன் வாழ்க்கை முக்கியமே! என்ன செய்து வைத்தானோ என பதறியது.
"சொன்னா செஞ்சிடணுமா? ஒரு கோவத்துல வார்த்தை வர்றது தான்.." என்றவன்,
"அது சரி வெளில நிலவரம் என்ன?" என்று கேட்க,
"அமைச்சர் வந்துட்டு இருக்காராம்.. யாரையும் வெளில போக கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.." என்றதும்,
இரு கண் புருவங்களையும் மேல் நோக்கி தூக்கி உதடு வளைத்தான் சத்யா.
"சத்யா விளையாடாத! எனக்கு பயமா இருக்கு.. ஒவ்வொரு ரூம்க்கு வெளிலயும் கேமரா இருக்கு.. என்னனு சொல்லு டா" என்று சங்கர் கெஞ்ச,
"அட சும்மா இரு டா! விட்டா நீயே போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவ போல.. எனக்கென்ன அவசியமா? அவனெல்லாம் ஒரு ஆளு!" என்றவன் சட்டை கைகளை மடித்தபடி ஜன்னலை திறக்க, சலசலவென சத்தமும் கூட்டமும்.
"சுத்தம்! என்ன டா இவ்வளவு கூட்டம் இந்த பரதேசிக்கு!" என்று கூறும் நேரம் உள்ளே அமைச்சர் வந்து கொண்டிருந்தார்.
"இவன் தான் அவன் அப்பனா?" என்று பார்த்தபடி சத்யா கூறிய எதற்கும் பதில் கூறாமல் அவனையே பார்த்தபடி இருந்தான் சங்கர்.
"உன் லுக்கெல்லாம் போதும்.. வா வெளில போய் பாராக்கு பாக்கலாம்" சத்யா.
"சத்யா! உண்மைய சொல்லு!" என்று பிடித்து நிறுத்திய சங்கர்,
"இதெல்லாம் சின்ன விஷயம் இல்ல.. நீ கோபத்துல பண்ணிட்ட தானே? ஆனா அப்படி இருந்தா தப்பிக்க முடியாது டா" என்றவனைப் பார்த்த சத்யா,
"விட்டா அழுதுடுவ போல" என்று சிரித்தவன்,
"தெய்வம் நின்றெல்லாம் கொல்லாது.. நன்றே செய்.. அதையும் இன்றே செய்.. நீயும் பார்த்துட்டு தானே இருந்த? எத்தனை படி ஏறி இறங்கினோம்? எங்க போச்சு சட்டம், நேர்மை, நியாயம் எல்லாம்? இப்ப பாரு.. அயோக்கிய நாய்க்கு வந்து நிக்குது.." என்றவன் வாயை மூடினான் சங்கர்.
சுவற்றைக் கூட சத்யா விஷயத்தில் நம்ப தயாராய் இல்லை சங்கர். இவன் மூலம் ஸ்ரீதர் இறந்திருந்தால்? அதை அவனே கூறி மாட்டிக் கொள்ளவா? என்று வாயை மூடியவன், தலையை இட வலமாய் ஆட்ட,
"ஏன் டா இவ்வளவு பயம்? நாம என்ன தப்பு பண்ணினோம்? குடிச்சு குடிச்சு குடல் அழுகி செத்தா அதுக்கு யார் பொறுப்பாம்?" என்றவன்,
"நீ வா என் கூட!" என்று அழைத்துக் கொண்டு அதாவது சங்கரை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல,
"நல்லா ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்காங்க போல.. ரெண்டு பேருக்கு இன்னும் போதை தெளியல.. எந்த கடையில ட்ரிங்க்ஸ் வாங்கினாங்கனு கேட்டு அங்கே ஆள் அனுப்பியாச்சு.. சிசிடிவி செக் பண்ணிட்டோம்.. ஒரு கால் மணி நேரம் கரண்டு போயிருக்கு.. அப்பவும் எதுவும் நடந்தா மாதிரி எல்லாம் இல்லை.. என்னவோ ட்ரிங்க்ஸ்னால தான்..." என்று முந்தைய நாள் சத்யா சந்தித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மொபைலில் பேசிக் கொண்டு இருக்க,
"சார் சத்தியமா எல்லாரும் ஒன்னா தான் சார் குடிச்சுட்டு வந்து படுத்தோம்.. எங்களுக்கு ஒன்னும் தெரியாது சார்!" என்று அழுதான் அமைச்சரின் அடியில் ஸ்ரீதரின் நண்பன்.
"சார்! சார்! நாங்க விசாரிக்குறோம்" இன்ஸ்பெக்டர் வேகமாய் வந்து அமைச்சரிடம் கூற,
"நீ எப்ப விசாரிச்சு? நான் எப்ப கண்டுபிடிக்க? ஒருத்தன் ஒருத்தன விட மாட்டேன்.. எனக்கு என் மகன் வேணும்!" என்று அவர் கத்த,
"அவ்ளோ பாசம்னா கூடவே போக வேண்டியது தானே?" என சங்கரிடம் கூறினான் சத்யா.
"கொஞ்ச நேரம் சும்மா இரு டா.. உயிர கையில புடிச்சுகிட்டு நிக்குறேன் நான்" என்றான் சங்கர்.
கண்டு கொள்ளவில்லை சத்யா. அமைச்சரின் துடிப்பை உள்ளுக்குள் ரசித்து ஆனந்தமாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதர் நண்பர்கள் இருவரை அடித்து நொறுக்கி மேலெல்லாம் ரத்தம் அவர்களுக்கு. இன்னும் இருவர் போதையில் உளறிக் கொண்டு கண்ணம் வீங்கியபடி என அனைத்தும் விடுதி வராண்டாவில்.
"சத்யா!" என்று பதறி அழைத்த சங்கருக்கு அப்போது தான் நியாபகம் வர,
"உன் நோக்கியா அவன் ரூம்ல தானே இருக்கு" என்றான் கண்களை விரித்து பயத்தை தேக்கி. அதற்குமே ஒரு புன்னகை தான் சத்யாவிடம்.
காவல் துறைக்கும் அமைச்சருக்குமாய் பேச்சுக்கள் வளர தான் செய்தது.
அமைச்சர் மகன் மரணம் எதிர்பாராத விதமாய் நடந்தது.. மதுபாணத்தில் இருந்த கலவை தான் காரணம் என கூறியதை நம்ப மறுத்து அமைச்சர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, வெளியே அமைச்சர் தொண்டர்கள் என சத்தமும் அதிகமானது.
"ஒருத்தனை விடாத.. இந்த ஹாஸ்டல்ல இருக்குற அவ்வளவு பேரையும் புடி.. அடிச்சி துவைச்சு உண்மையை சொல்ல வை.. எனக்கு தெரிஞ்சி ஆகணும்" என அமைச்சர் ஆக்ரோஷமாய் கூற,
"கண்டிப்பா விசாரிப்போம் சார்.. விசாரிச்சுட்டு உங்ககிட்ட வர்றோம்.." என்று கூறினார் இன்ஸ்பெக்டர்.
ஒவ்வொரு மாணவனுக்கும் என விசாரணை நடக்க,
"எனக்கு பயமா இருக்கு டா!" என்ற சங்கரை,
"கேட்குறதுக்கு பதில் சொல்ல என்ன கஷ்டம் உனக்கு? போ!" என்ற சத்யா சங்கருக்கு அடுத்ததாய் உள்ளே செல்ல, அவனை மறந்திருந்தது போலவே சாதாரணமாய் இருந்தது அந்த இன்ஸ்பெக்டரின் கேள்விகள் அனைத்தும்.
"லாஸ்ட்டா எப்ப நீங்க ஸ்ரீதரைப் பார்த்திங்க?" என்று இன்ஸ்பெக்டர் கேட்கவும்,
"மெஸ்ல சாப்பிடுற நேரம்!" என்று கூறினான்.
"வெளில எங்கேயாவது போனீங்களா அதுக்கு அப்புறம்?" என்று கேட்க,
"இல்ல! நானும் என் பிரண்ட்டும் தூங்கிட்டோம்" என்றான்.
"ஸ்ரீதர் இங்க யார் கூடவாச்சும் சண்டை, இல்ல தகராறு பண்ணி இருக்காரா?"
"அமைச்சர் பையன்.. அதை காட்ட சின்ன சின்னதா டீசிங் இருக்கும்.. அதை தவிர நான் வந்து ஒரு மாசம் கூட ஆகல.. சோ எனக்கு தெரியல" என்றான்.
"ஓகே! நீங்க போகலாம்" என்றதும் சத்யா எழுந்து கொள்ள, டேப்பை ஆஃப் செய்த இன்ஸ்பெக்டர்,
"ஆல் தி வெரி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபியூச்சர்!" என்றதும் நின்று ஒரு நொடி பின்பு திரும்பிப் பார்த்தான் சத்யா.
அர்த்தமாய் புன்னகைத்தாரோ காவலர்?.
தொடரும்..