• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 25

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் - 25​

மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில்:​

அன்று நயனி சக்கரவர்த்தி குறித்து பேசியதில் அவள் வலியையும் வேதனையையும் மதித்து அதன் பின் எந்த கேள்வியும் கேட்காது அபய் அவள் முடிவை முழுமனதாக ஏற்றுக்கொண்டான்.​

இந்த ஒரு மாதத்தில் சொன்ன சொல் தவறாதவனாக அபய் தன் வரையில் அவர்களின் உறவை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சி செய்தான். அதை கண்ட நயனிக்கே பெரும் ஆச்சர்யம்!!​

பின்னே சஞ்சு அபய்யின் காதலை அருகில் இருந்து பார்த்தவள் அல்லவா அதனால் தன்னை தினமும் கல்லூரிக்கு அழைத்து செல்வது அவன் பொறுப்பு என்று அபய் சொன்னதில் வியக்காமல் என்ன செய்வாள்?!​

அன்று காலை கல்லூரிக்கு கிளம்பி தயாராக இருந்தவளிடம் அபய் ஸ்ரீவத்ஸன் விஷயத்தை சொன்ன பிறகும் பதிலளிக்காமல் நின்றிருந்தவளிடம், "இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் நயனி? உனக்கு என்னோட வர விருப்பமா? இல்லை இன்னும் கோபமிருக்கா எப்போ குறையும்?! ஏதாவது சொல்லு?" என்றான்.​

"என்ன பாஸ் இது நீங்க வச்சா குடுமி சரைச்சா மொட்டைன்னு இருக்கீங்க?! இப்படி ஒரு சேன்ஜ் ஓவர் உங்க கிட்ட இருந்து இவ்ளோ சீக்கிரம் எதிர்பார்க்கலை... என்ன ஏதாவது காத்து கருப்பு அடிச்சுடுச்சா இல்லை சஞ்சு கனவுல வந்து என் பிரெண்டை ஒழுங்கா பார்த்துக்கணும்னு மிரட்டினாளா?"​

"ஏன் இதை தவிர வேற காரணம் இருந்தா ஏத்துக்க மாட்டியா?"​

"வேற காரணமா?! ஆர் யூ ஸீரியஸ் அபய்?"​

"அஃப்கோர்ஸ்!!" என்றவனின் பதிலில் உண்டான ஆர்வத்தோடு,​

"அப்படி என்ன காரணம்?! அதை நான் தெரிஞ்சுக்கலாமா?! என்றதும் சம்மதமாக தலையசைத்தவன், "மனுஷனை அழிக்க கூடிய மிகவும் வல்லமை பெற்ற ஆயுதம் எதுன்னு உனக்கு தெரியுமா நயனி? என்றான்.​

"நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம திரும்ப என்னையே கேட்கறீங்க?!"​

"உன்னோட கேள்விக்கான பதிலை தான் இப்போ சொல்லிட்டு இருக்கேன். உனக்கு பதில் தெரியுமா தெரியாதா?"​

"கோபமா?!"​

"இல்லை அதைவிடவும் வல்லமை பெற்றது.."​

"எனக்கு ஐடியா இல்லை அபய்.."​

"மனுஷனோட மனசு!!"​

"வாட்?"​

"ஆமா எப்படி இரும்பை அதனுடைய Rust (துரு பிடித்தல்) தவிர்த்து வேறு எதனாலும் அழிக்க முடியாதோ அதுபோல கஷ்டமான சூழல்ல இருந்து மீளமுடியாம இருக்கிறவங்களை அழிக்க அவங்களோட மனசு போதும். தினம் தினம் வேதனையை சுமந்து கழிவிரக்கம் கொண்டு அதிலேயே உழன்று கொண்டிருக்கும் மனங்கள் தான் விரைவில் மனிதனை அழிக்க கூடிய கூர்மையான ஆயுதம்!​

"எப்போ அதிலிருந்து வெளி வரணும்னு நினைக்கிறாங்களோ அப்போ அவங்க தன்னோட அழிவை ஜெயிச்சுட்டாங்கன்னு அர்த்தம். உனக்கு நல்ல கணவனா இருக்கேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் நயனி அதுக்கு முதல்ல நான் என்னை அந்த அழிவில் இருந்து காப்பாத்திக்கணும்.."​

"எத்தனை பேர் சுத்தி இருந்தாலும் அதற்கான முயற்சியை நான் மட்டும் தான் எடுக்க முடியும்..."​

"நிஜமாவா?! எனக்காகவா?" என்றவளின் மனம் ஆர்பரித்தது.​

"ஆமா! உனக்காக தான். என்னோட பொறுப்பில் இருந்து நான் தவறினதால் நீ அனுபவிச்ச கஷ்டத்தை பார்த்ததில் இருந்தே என் மனசு ஒருநிலையில் இல்லை. என்னை அறியாமல் உன்னை தேட தொடங்கிட்டேன். ஆனாலும் அப்போ என்னைக்கு இருந்தாலும் சஞ்சு திரும்ப கிடைச்சுடுவா அவளுக்கு துரோகம் செய்யக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு உன் நினைப்பை ஒதுக்க பார்ப்பேன் ஆனா என்னால முடியலை..."​

"இந்த அவஸ்த்தையை தாள முடியாமல் தான் உன்னை தேடி வந்தேன்.. ஒருவேளை எல்லாரும் சொல்ற மாதிரி மஞ்சள் கயிறு மேஜிக்கோ என்னமோ தெரியாது ஆனால் நீ சுதர்ஷன் வீட்ல இருந்த போது என்னையும் அறியாமல் ஒருவிதமான உரிமை உணர்வு எனக்கு அதிகரிச்சது..."​

"அதை மேலும் வளரவிடக்கூடாதுன்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிற மாதிரி தான் உன்னை விலகி போக சொன்னது.. இப்போ நான் விலகி இருந்தா தான் தப்பாகி போகும்.." என்றவனின் பேச்சில் மெய் மறந்து நின்றிருந்தாள் நயனிகா வர்ஷி.​

"நயனி என்ன யோசனை?" என்று அபய் அவளை உலுக்கவும் சிறு தலை குலுக்கலோடு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவள், "நீங்க எவ்ளோ பொறுப்பானவர்னு காலேஜ்ல நடக்கிற ஒவ்வொரு ப்ரோக்ராம்லயும் தூரத்துல இருந்து பார்த்து வியந்திருக்கேன். பட் இப்போ பக்கத்துல இருந்து பார்க்கிறப்போ பேச்சு வரலை.." என்றாள் புன்னகையோடு.​

"உன்னோட இன்டராகேட்டிவ் செஷன் முடிஞ்சதுன்னா இப்போ காலேஜ் கிளம்பலாமா?!" என்றவனுக்கு சம்மதிக்க அன்றும் முதல் தினமும் நயனியை தன்னோடு கல்லூரிக்கு அழைத்து சென்று வீட்டிற்கு அவளோடு திரும்புவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருந்தான்.​

அவனுக்கு முக்கிய வேலைகள், மீட்டின் என்று இருக்கும் போது டிரைவரை கொண்டு அவளை வீட்டிற்கு அனுப்பி வைப்பான்.​

அன்று முக்கிய வேலையாக அபய் ஸ்ரீவத்ஸன் வெளியில் சென்றிருக்க வீட்டிற்கு திரும்பிய நயனிகா நிர்மலா கொடுத்த காபியை பருகிவிட்டு பேப்பர் திருத்தும் பணியில் அமர்ந்துவிட்டாள்.​

நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விடைத்தாள்களை திருத்தி முடித்து நிமிர்கையில் அபய் ஸ்ரீவத்ஸன் அறையினுள் நுழைந்தான்.​

"நீங்க சொன்னதை வச்சு நேரமாகும்னு நினைச்சேன் ஆனா இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?" என்றவளுக்கு பதிலளிக்காமல் அவளிடம் ஒரு பாக்ஸை நீட்டினான்.​

"என்ன இது?"​

"பிரிச்சு பார்..." என்றதும் பிரிக்க அதில் ஸ்வீட் கார்ன் இருந்தது.​

ஆச்சர்யத்தோடு அபய் ஸ்ரீவத்ஸனை பார்க்க, "உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்கும் தானே?!" என்றான்.​

"ஆமா, பட் உங்களுக்கு எப்படி தெரியும்? சஞ்சு சொல்லி இருக்காளா?"​

"ஹ்ம்ம் அவளும் சொல்லி இருக்கா வெளியில போறப்போ நீ அதிகமாக விரும்பி சாப்பிடுவன்னு சொல்லி சஞ்சு உனக்காக வாங்குவதை பார்த்திருக்கேன்.. இன்னைக்கு ஸ்வீட்கார்ன் பார்க்கவும் உன் ஞாபகம் வந்தது அதுதான் வாங்கிட்டு வந்தேன்.." என்றவன் அவளை பார்த்தபடி தயக்கத்தோடு நின்றிருந்தான்.​

பாக்ஸை பிரித்தவள் அப்போது தான் அவன் அங்கேயே நிர்ப்பதியா கண்டு, "ஒஹ் ஐம் ஸாரி தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்... தேங்க்ஸ் அபய்" என்றிட அவனோட 'ஸாரி' என்றான்.​

"ஸாரியா? எதுக்கு?"​

"இல்லை இப்போ நான் வேணும்னு சஞ்சு பேர் எடுக்கலை பட் என்னையும் மீறி வந்துடுச்சு அத்டுஹான் ஐ'ம் ரியலி ஸாரி..." என்றான்.​

"ப்ச் அபய் எதுக்கு நீங்க இவ்ளோ கான்ஷியஸ் ஆகறீங்க?! நம்ம ரெண்டு பேரோட லைஃப்ல சஞ்சு ரொம்பவே முக்கியமான நபர். அவளுடனான நம்மோட நியாபகங்கள் நாமளே மறக்க நினைச்சாலும் மறக்க முடியாதது..."​

"இல்லை இந்நேரத்துக்கு உன் இடத்துல வேற யாராவது இருந்தா என்னை விட அவ முக்கியமா இன்னும் மறக்கலையேன்னு கேட்டு சண்டை போடுவாங்க ஆனா நீ ஏன் இப்படி இருக்க?"​

"அப்படின்னு யார் சொன்னா?!"​

"இன்னைக்கு விஜயகுமாரை மீட் பண்ணேன்.. அன்னைக்கு ராஜன் விஷயத்துல மும்முரமா இருந்ததால எதையும் டீட்டெயிலா பேசிக்க முடியலை இன்னைக்கு மீட் பண்ணின போது ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்.. அப்போ அவன் தான் இப்படி சொன்னான்.."​

"உங்க ஃப்ரெண்ட் சொன்னா ஆச்சா?! அபய் சஞ்சு இந்த உலகத்துலயே இல்லை.. அப்படியே இருந்திருந்தாலும் எனக்கு நீங்க உங்களுக்கு நான் என்று முடிவு செய்து நம்மளை சேர வச்ச பிறகு எனக்கு இன்செக்யூர் ஃபீல் வர விட்டிருக்க மாட்டா.."​

"அவருக்கு என்னையும் எங்களோட நட்போட ஆழத்தையும் தெரியாது அதனால பேசி இருக்கலாம்.. பட் நீங்க ஏன் அதையெல்லாம் பெருசு படுத்துறீங்க?!"​

"சஞ்சுவோட பேரை நமக்கு இடையில் எடுக்க கூடாதுன்னு நான் என்ன தடை உத்தரவா பிறப்பிச்சு இருக்கேன். நான் ஹர்ட் ஆவேனோன்னு நீங்க இவ்ளோ தூரம் தயங்கவும், பயப்படவும் தேவையில்லை அபய்!"​

"இதையே தான் நானும் விஜயகுமார் கிட்ட சொன்னேன்.." என்றான் புன்னகையோடு..​

"வாட்?!"​

"ஆமா. நீ சொல்றதெல்லாம் மற்ற மனைவிகளுக்கு பொருந்தலாம் ஆனால் என்னோட நயனி வித்யாசமானவள்னு சொன்னேன்.."​

"பார்றா! என்னோட நயனியா?! பாஸ் செம முன்னேற்றம் உங்ககிட்ட... இப்படியே இருந்தா நீங்க எங்கேயோ போயிடுவீங்க, ஆனா ஒரு நாளைக்கு ஒரு ஷாக் கொடுங்க போதும் நிறைய கொடுத்தா என் பாடி தாங்காது..." என்றிட உரக்க சிரித்துவிட்டான் அபய்.​

சிரிப்புடனே அபய் உடை மாற்ற செல்ல தனக்கான கணவனின் சிறு செய்கையில் உண்டான புன்னகையோடு சாப்பிட தொடங்கினாள்.​

ஜீன்ஸ் டீஷர்ட்டில் மீண்டும் தயாராகி வந்தவன், "இன்னைக்கு உனக்கு ஏதாவது வொர்க் இருக்கா நயனி இல்லை நீ ஃப்ரீயா?" என்றான்.​

"ஏன் கேட்கறீங்க?"​

"இல்ல உனக்கு வேலை எதுவும் இல்லைன்னா நாம டின்னர் போகலாமா?" என்று அவளுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க ஸ்பூனை நழுவவிட்டது நயனியின் கரம்.​

"என்ன சொன்னீங்க?!"​

"டின்னர்க்கு வெளியே போகலாமான்னு கேட்டேன்.."​

"கண்டிப்பா போகனுமா?!"​

"நமக்கு கல்யாணமாகி இரண்டு வருஷத்துக்கு மேலாச்சு நயனி. இதுவரை தனியா எங்கேயும் போனதில்லை.."​

"அதுதான் தினமும் காலேஜ்க்கு போய் வரோமே.." என்று அவள் கண்சிமிட்ட,​

"வர வர உனக்கு சேட்டை அதிகமாகிடுச்சு.. முதல்முதலா புருஷன் சர்ப்ரைஸ் டின்னருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் மற்ற பொண்ணுங்களா இருந்தா இந்நேரத்துக்கு எவ்ளோ எக்ஸைட்டாகி பரபரப்பா ரெடியாகி இருப்பாங்க..." என்றவன் முடிக்கும் முன்னமே,​

"என்ன இதையும் உங்க ஃபிரெண்ட் விஜயகுமார் சொன்னாரா?!" என்றாள் சிரிப்போடு...​

"ஆமா. உனக்கு எப்படி தெரியும்?!" என்றதில் நயனியின் சிரிப்பு இரட்டிப்பாகி போனது.​

"ஆக மொத்ததுல இன்னைக்கு உருப்படியா எந்த வேலையும் செய்யாம காலேஜை கட் அடிச்சுட்டு உங்க ஃபிரெண்ட் கிட்ட என்னை கவுக்க ஐடியா கேட்க போயிருக்கீங்க?! அப்படி தானே?!" என்று உரக்க சிரிக்க அபய் என்ன பதிலளிப்பது என்று புரியாது திருதிருத்தான்.​

"உங்க முழியே சரியில்லையே.. அப்போ அதுதான் உண்மை போல? என்ன பாஸ் இது? என்னை கேட்டிருந்தா நாலு ஒரு நாலு ஸ்கொயர் நோட்ல எழுதி கொடுத்திருப்பேனே இதுக்கு ஏன் ஒரு போலீஸ் ஆஃபிஸரை தொந்தரவு செய்யறீங்க?" என்று சிரிப்போடு கேட்க அபய் முகத்தில் அசடு வழிந்தது.​

நயனி சிரித்து முடிக்கவும், "நிஜமாவே நான் டின்னர் கூப்பிட்டது உனக்கு சர்ப்ரைஸா இல்லையா நயனி?"​

"அபய் நான் என்ன 18 வயது பெண்ணா உடனே எக்ஸைட் ஆகறதுக்கு? 27 வயது முடியப்போகுது. சின்ன வயசுல நிறைய விஷயத்துக்கு ஏங்கி இருந்தாலும் வாழ்க்கை நமக்கு விதிச்சது இதுதான்னு அதிக சந்தோஷம், கோபம், அழுகைன்னு இல்லாம எல்லாத்தையும் நான் நியூட்ரலா எடுத்துக்கும் பக்குவத்துக்கு வந்துட்டேன்.."​

"என்ன நீ சன்யாசி மாதிரி பேசிட்டு இருக்க? விஜயகுமார் மட்டுமில்லை சுதர்சன் வைஃப் கூட சர்ப்ரைஸ் எல்லாம் எதிர்பார்பாங்க உனக்கு அந்த மாதிரி எல்லாம் கிடையாதா"?​

"இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்ல?! பொதுவாவே குழந்தைகளுக்கான சர்ப்ரைஸ் வீட்ல அப்பா அம்மா மூலமாக தானே தொடங்கும் எனக்கு அப்படி சர்ப்ரைஸ் கொடுக்க அப்பாவும் இல்லை அம்மா இருந்தும் இல்லை. மத்தவங்க பர்த்டேக்கு புது ட்ரெஸ் ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸ்னு கொண்டாடுறப்போ எனக்கு அதிகபட்சம் சில பிறந்த நாளுக்கு எங்கம்மா என் பேர்ல அர்ச்சனை பண்ணி வச்சுவிடற விபூதி குங்குமம் மட்டும் தான்!"​

"அதுகூட சில வருஷம் கிடைக்காது. ஸோ காலப்போக்குல எதையும் எதிர்பார்க்கிறதை விட்டுட்டேன். அதையும் மீறி எனக்கு சர்ப்ரைஸ் பண்ற ஒரே ஜீவன் என்னோட சஞ்சு! இப்போ அவளும் இல்.." என்றவளுக்கு உணர்வின் மிகுதியில் தொண்டை அடைத்துக்கொண்டது.​

"நயனி.."​

"பாருங்க இப்பவும் நாம பேசும் போது சஞ்சு பற்றின பேச்சு நம்மை அறியாம வந்துடுது., அது தவிர்க்கவே முடியாதது, சஞ்சு இப்படியாவது நம்மோடு இருக்கட்டுமே.. ஒன்னும் தப்பில்லை.." என்று கண்ணீரை துடைத்தவள்,​

"ப்ச் விடுங்க அபய், இப்போ எதுக்கு இதெல்லாம்?! இதுதான் லைஃப்! என்னோட லைஃப் எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்"​

"எப்படி இருக்கும்?" என்று புரியாமல் அவளை பார்த்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.​

"எப்படியும் நீங்க என்னை டிவோர்ஸ் பண்ண போறதில்லை, இன்னொரு கல்யாணமும் பண்ணிக்க போறதில்லை.. கடைசி வரை நாம தான் புருஷன் பொண்டாட்டி, இதுல புதுசா நான் எக்ஸைட்டாக என்ன இருக்கு?" என்றதில் அவனுக்கு மனம் முள்ளாக குத்தியது.​

"ஏன் நயனி இப்படி பிடி கொடுக்காம பேசற? நீ தான் என்னோட நிகழ்காலமும், எதிர்காலமும்! உன்னை நான் டின்னர் கூட்டிட்டு போக கூடாதா?!"​

"அச்சோ நான் அப்படி சொல்லலை அபய். பட் டின்னர் கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு சர்ப்ரைஸ் ஆகலையா., அதுக்கு உடனே எக்ஸைட்டாகி குதிக்கலையான்னு கேட்டா நான் என்ன சொல்ல?!"​

"ஹப்பா உன்னோடு கொஞ்ச நேரம் சேர்ந்த மாதிரி பேச முடியுதா? இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.., ஆனா நீ சிறந்த பேச்சாளர்னு அடிக்கடி நிருப்பிக்கிற..." என்றான் சிரிப்போடு.​

அதில் நயனி முகத்திலும் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் வேதனை மறைந்து புன்னகை உதயமாகியது.​

"இப்போவாவது டின்னர் போகலாமா?" என்றவனுக்கு புன்னகையோடு தலையசைத்து வேறு உடை மாற்றி நேரமெடுத்து தன்னை அலங்கரித்து கொண்டு கிளம்பினாள்.​

 
Last edited: