"சொல்லு மா.." என்று கல்லூரிக்கு கிளம்பும் பரபரப்பில் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
"நயனி நாளைக்கு நிதிஷாவுக்கு புடவை எடுக்க போறோம் நீயும் வா.." என்றார்.
"நாளைக்கா?!"
"ஆமாடா.."
"பார்க்கிறேன் மா முடிஞ்சா லீவ் போடறேன்.."
"மாப்பிள்ளை காலேஜ்ல உனக்கு லீவ் இல்லைன்னு சொல்லிடுவாங்களா? நீ கண்டதையும் யோசிக்காம கிளம்பி வா, நாளைக்கு அந்த ஆள் அவன் தோஸ்த் யாரோட பையன் நிச்சயத்துக்கு போயிடுவான் கடையில ரொம்ப நேரம் கூட இருக்க மாட்டான். எனக்கு உன்னோடு இருக்கணும் ப்ளீஸ்..." என்ற தாயின் ஏக்கம் அவளை உருக்கியதில் அடுத்தநாள் அபய் ஸ்ரீவத்ஸனோடு கிளம்பிவிட்டாள்.
அதுவும் அருகே இருந்த வேறொரு கடையில் அவளுக்கு புடவை பார்த்திருந்தவள் சேதுராமன் புடவை கடையில் இருந்து கிளம்பிய பின்னரே அங்கு சென்றாள்.
"போகலாம் அபய்.." என்று தம்பியிடம் இருந்து தகவல் கிடைத்ததும் புடவையில் இருந்த கணவனின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.
"ஹே இரு மா.. புடவையை பேக் பண்ணி பே பண்ணிட்டு வரேன்.."
"அதெல்லாம் வேண்டாம்..."
"வேண்டாமா?! நீதானே இந்த புடவை பிடிச்சிருக்குன்னு சொன்ன?!"
"ஆமா அனா இப்போ பிடிக்கலை வாங்க நிதுக்கு ஸாரி எடுக்க போகலாம்.." என்று பரபரத்தவளை இழுத்து நிறுத்தியவன்.,
"அவன் கிளம்பறதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்தன்னு எனக்கு புரியாமல் இல்லை ஆனா எனக்கு உனக்கு ஸாரி கிப்ட் பண்ண தோணுது. ஸோ லெட்ஸ் பினிஷ் திஸ்" என்று சொல்ல அதற்கு மேல அவளால மறுக்க முடியவில்லை.
புதுரக பட்டுப்புடவைகளை அவர்கள் முன் பரப்பியிருக்க அதில் ஐந்து புடவையை தேர்ந்தெடுத்து அவளிடம் நீட்டினான்.
நயனிகாவும் அதில் இருந்து ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்க, "எல்லாமே உனக்கு தான் நயனி.." என்றான்.
"வாட்?! இவ்வளவுமா?" என்று முதலில் அதிர்ந்தாலும் பின் அனைத்தையும் பெற்றுக்கொண்டவள், தங்கைக்கும் புடவை எடுத்துவிட்டு வீடு திரும்ப மாலையாகி போயிருந்தது.
அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவள் பூஜையறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு நிர்மலாவிற்கு உதவ சமையலறைக்கு சென்றாள்.
"நீ போய் ரெஸ்ட் எடு நயனி!!"
"இருக்கட்டும் த்தை கொடுங்க நான் கட் பண்றேன்.. என்று வாங்கிக்கொள்ள அபய் ஸ்ரீவத்ஸன் அங்கு வந்து சேர்ந்தான்.
"ம்மா எங்க ரெண்டு பேருக்கும் நைட் டின்னர் வேண்டாம் வெளியில போறோம்.." என்றான்.
"என்ன மா இது வெளியில கூட்டிட்டு போறேன்னு சொன்னா இத்தனை கேள்வி கேட்கிறி?"
"இல்லத்தை எப்பவும் அவரோட ஸ்கெட்யூல் என்கிட்டே முன்னாடியே சொல்லிடுவாரு.. நாளைக்கு அவர் சென்னை கிளம்ப வேண்டியது, இப்போ வெளியே கிளம்பறோம்னு சொன்னதால கேட்டேன்..."
"ஓஒ அப்படியா?! சரி.." என்று நிர்மலா சொல்லி கொண்டிருக்க மனைவியின் கையை பிடித்து தங்கள் அறைக்கு வந்தான்.
"என்ன இது சின்ன குழந்தையை இழுத்துட்டு வர மாதிரி கூட்டிட்டு வரீங்க?" என்று புரியாமல் அவளை பார்க்க "இதுல எந்த டீஷர்ட் நான் போடட்டும்.." என்றதில் நயனி அசந்து போய் அவனை பார்த்தாள்.
"என்ன என்னக்கும் இல்லாத திருநாளாக என்னை கேட்டு ட்ரெஸ்ஸப் பண்றீங்க?!"
"டேட் நைட்ல நம்ம பார்ட்னருக்கு பிடிச்ச மாதிரி இருக்கிறதுல தப்பில்லையே?!"
"டேட்டா!!"
"ஆமா, இன்னைக்கு நைட் அவுட் போறோம். கிளம்பு.. அதுக்கு முதல்ல எனக்கு செலெக்ட் பண்ணு.." என்றதில் "வேற லெவல் பாஸ் நீங்க!! என்னால நம்பவே முடியலை..." என்றவளின் கன்னங்களை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் மனைவியை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அதில் நயனியின் நயனங்கள் இன்னுமே பெரிதாக விரிய "இப்போ நம்ப முடியுதா?" என்றான் இன்னுமே மனைவியை தன் அணைப்பில் இருந்து விடுவிக்காது.
"அபய்.." என்றவளின் முகம் பரந்து விரிந்த அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்திருந்தது.
"உனக்கு பிடிக்கும் தானே?!"
"ஹ்ம்ம்!"
"அப்போ சீக்கிரம் கிளம்பு.." என்றவள் அவள் தேர்ந்தெடுத்த டிஷர்ட்டை அணிந்து கொண்டு தயாராக நயனியும் ஜீன்ஸ் டாப்ஸ்ஸில் கிளம்பி வந்தாள்.
நிர்மலாவிடம் கிளம்பி வெளியில் வர அபய் கார் எடுக்க சென்றான்.
"பாஸ் நைட் அவுட் போறதுன்னு முடிவு பண்ணியாச்சு அது எதுக்கு கார்ல போகணும்..?"
"கார் வேண்டாமா?"
"அது சுத்த போர் அபய். பொண்டாட்டியை ரொமான்டிக் டேட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க ஆனா இப்படி கார்ல ஒருத்தருக்கு ஒருத்தர் இடையில நாலு அடி டிஸ்டன்ஸ்லயா கூட்டிட்டு போவீங்க? சரியான பூமரா இருக்கீங்களே"
"இப்பதான் காதலிக்க கத்துகிறேன், கூட குறைய இருந்தாலும் காப்பாத்தி கரையேற்றி விட்டிடுடி இப்படி காலை வாரி விடாத.." என்றான் சிரிப்போடு.
"என்னது புதுசா காதலிக்கிறீர்களா? பாஸ் இப்படி எல்லாம் டக்குனு உருட்டாதிங்க பிஞ்சு மனசு சட்டுன்னு பதறிப் போச்சு எனக்கு!" என்றவளின் தலையில் செல்லமாக தட்டியவன்,
"ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்கும் கட்டின பொண்டாட்டியை காதலிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. அப்படி பார்க்க போனா என் பொண்டாட்டிய காதலிக்க கத்துகிறது புது விஷயம் இல்லையா?!" என்று அபய் ஒற்றை கண் சிமிட்டிய அழகில் சொக்கி நின்றவள்,
"பார்றா! லாஜிக்கல் ரீசனிங்ல பட்டைய கிளப்புறீங்க போங்க... நிஜமாவே நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்.." என்று அவன் தோளில் தட்டி கொடுத்தாள்.
"அதுக்கு முன்னாடி நைட் அவுட் போகணும் நிறைய பிளான் வச்சிருக்கேன் கிளம்பலாமா?"
"அஃப்கோர்ஸ்!! உங்ககிட்ட டூ வீலர் இருக்கு தானே அதை எடுத்துட்டு வாங்க.." என்றதும் அபய் தன் டூவீலரோடு அவள் முன்னே நிற்க, "சிங்கிள் சைடா டபுள் சைடா..." என்றாள்.
"உன்னோட விருப்பம்!" என்றதும் அவனுக்கு இருப்புறமாக காலிட்டு அமர்ந்தவள் கணவன் தோள்களை பிடித்துக் கொண்டாள்.
"போகலாமா?"
"ஹ்ம்ம்..."
"எனக்கு சின்ன வயசுல இருந்தே டூவீலரில் போக ரொம்ப பிடிக்கும் ஆனா வாய்ப்பு கிடைத்தது இல்ல பட் என்னோட ஆசையை சொன்னதுமே அடுத்த நாள் சஞ்சு என்னை அவளோடு டூவீலரில் கூட்டிட்டு போனா.." என்று நயனி சொல்லிக்கொண்டு வர அபய் தலையசைத்து அவள் பேச்சை கேட்டுக்கொண்டான்.
அன்று நயனி சொன்னது போல அவர்களே நினைத்தாலும் சஞ்சுவின் பெயரை அவளுடனான நிகழ்வுகளை அவர்களாலேயே தவிர்க்க முடியாது என்ற புரிதலுக்கு வந்திருந்த அபய் இப்போதெல்லாம் அவள் குறித்த செய்திகளை இயல்பாக ஏற்று கடக்க கற்றுக்கொண்டிருந்தான்.
மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தவன் முக்கிய சாலை வரவும் சற்று வேகமெடுக்க, "முதல்ல எங்கே அபய்?" என்றாள்.
இருவரும் சென்று அமர படம் தொடங்கியது. யாரிடம் கேட்டிருப்பான் என்று தெரியாது ஆனால் இப்போதும் நயனிக்கு பிடித்த கதாநாயகனின் படத்திற்கு தான் அழைத்து வந்திருந்தான்.
இடைவெளியில் அவளை அழைக்க, "நீங்க போயிட்டு வாங்க எனக்கு ஒரு கால் பேசணும்" என்றிட தான் மட்டுமே சென்று கைநிறைய ஸ்நேக்ஸ்சோடு திரும்பினான் அபய்.
அவன் கையில் இருப்பதை பார்த்தவள், "என்ன ஐஸ்கிரீம் மட்டும் ஒன்னே ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க?" என்றாள்.
"ஏன்டி இப்பதான் நானே என் பொண்டாட்டியை லவ் பண்ற பிராசஸ்ல இறங்கி இருக்கேன்.. தப்பும் தவறுமா தான் கத்துக்க முடியும் அதுக்குள்ள கலாய்க்கிற பாத்தியா?!"
"ஓகே ஓகே சில் நான் ஒன்னும் கலாய்க்கல.. பட் என்னையும் மீறி சிரிப்பு வருதே நான் என்ன செய்ய.."
"நீ ஒன்னும் செய்ய வேண்டாம் முதல்ல என் கையில் இருக்கிறது எல்லாம் வாங்கிக்கோ.." என்றதும் அவன் கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வாங்கி மடியில் வைத்தவள்,
"சரி ஐஸ்கிரீம் எடுங்க மெல்ட் ஆகுறதுக்குள்ள சாப்பிடுவோம்.." என்றதும் ஐஸ்க்ரீமை இருவருமே பகிர்ந்து கொள்ள அபய்க்கு எப்படியோ ஆனால் நயனிக்கு மனமெங்கும் அத்தனை குளுமையை விதைத்தது ஒற்றை ஐஸ்க்ரீம்!!
மீண்டும் படம் தொடங்கிய சில நிமிடங்களில் அபய் புறமாக சரிந்த நயனிகா, "என்ன அமைதியா இருக்கீங்க?" என்றாள்.
"படம் பார்த்துட்டு இருக்கேனே வேற என்ன செய்யணும்?"
"பாஸ் தியேட்டர்க்கு வந்து இருக்கோம் ஒரே ஐஸ்கிரீம், கார்னர் சீட், லைட்ஸ் ஆஃப், ஹ்ம்ம் ஜமாய்க்கிறீங்க போங்க.., என்ன ஒன்னு என் மேல கை போடுவீங்க நினைச்சேன் கொஞ்சம் டிஸப்பாயின்ட் பண்ணிட்டீங்க.."
"என்ன சொல்ற நீ?!"
"என்ன சொல்லிட்டேனாம்?" என்றாள் புன்னகையோடு..
"எனக்கு பப்ளிக் டிஸ்ப்ளே ஆப் அபெக்ஷன்ல உடன்பாடு இல்லை நயனி... நாம இருக்கிறது இந்தியா பீ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம் இல்லையா?" என்றவனின் பேச்சில் நயனியின் முகத்தில் மென்னகை.
"ஐ லவ் திஸ் அபய்!!"
"பட் நீ நிஜமாதான் கேக்குறியா?" என்றதில் அவளிடம் கனத்த மௌனம்.
"உன்னை தான் கேட்கிறேன் நயனி.. நிஜமாவே தான் கேட்டியா?"
"இல்லை ஆனா நீ இப்படி கேட்பன்னு நான் எதிர்பார்க்கலை.."
"உங்ககிட்ட எதுவும் நான் எதிர்பார்க்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் முடியலை. இத்தனைக்கும் ஹாஸ்டல் சேர்ந்த ஒரு வயசுக்கு பிறகு யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்கிறதே விட்டுவிட்டேன்... அதனால தான் எங்க அம்மாவை விட்டுட்டு இருக்க முடிந்தது.."
"இப்பவும் எதிர்பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனாலும் நீங்க என்னை தேட வைக்கிறீங்க அபய்.." என்ற மனைவியை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்..."
நான் உங்களை தேட வைக்கிறேனா?" என்று எதிர்பார்ப்போடு கணவனின் முகம் பார்க்க அவள் முகத்தை தன் மார்பில் அழுத்திக்கொண்டவன், "முதல்ல படத்தை பாருடி.." என்றான் அபய் ஸ்ரீவத்ஸன்.
திரைப்படம் முடிந்த பின்னர் இருவரும் உணவகத்திற்கு சென்று வீடு திரும்ப நள்ளிரவு இரண்டை தாண்டி விட்டிருந்தது.
உடை மாற்றிக்கொண்டு நயனிகா தன் இடத்தில் வந்து படுக்க அடுத்த சில நிமிடங்களில் அவள் பின்னிருந்து நயனியை மென்மையாக அணைத்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
"இன்னைக்கு நீ என்னை தேடலை.. உன் அப்பாவை தான் என் மூலமா தேடினன்னு புரிஞ்சது நயனி..."
"இன்னைக்கு அப்பாவோட பிறந்தநாள்! அவருக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம், எனக்குமே அப்படி தானாம். என்னோட இரண்டு வயசு வரை தான் அவர் என்னோடு இருந்தார் அதுக்கப்புறம் தான் அசம்பாவிதம் நடந்தது..."
"நீங்க நம்ப மாட்டீங்க அது வரைக்குமே நான் என் அம்மாவோடு தூங்கின நாள் ரொம்ப கம்மியாம். பசிக்காக அம்மாவை தேடுவேனே தவிர்த்து மற்றபடி அப்பாவோட தோளில் தான் என்னோட வாசம்னு அம்மா சொல்லுவாங்க.."
கணவனை பார்த்தபடி இருந்தவளின் விழிகள் கண்ணீரில் நனைந்திருந்த போதும் அன்றைய இரவை அத்தனை அழகானதாக, மறக்க முடியாததாக மாற்றி இருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
அன்று புகழ்பெற்ற நகைக்கடைக்கு அபய் ஸ்ரீவத்ஸனை அழைத்து வந்திருந்தாள் நயனிகா வர்ஷி.
"நகை எடுக்கணும் என்று சொல்லி கூட்டிட்டு வந்து இப்படி ஃபோனை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் நயனி?! உனக்கு என்ன மாதிரி வேணும் சொல்லு எடுக்க சொல்றேன்.." என்றான்.
"ஒரு நிமிஷம் இருங்க.." என்றவள் தங்கையை வீடியோ காலில் இணைத்துவிட்டு நகைகளை எடுக்க சொன்னாள்.
முதலில் அவளுக்கு பிடித்தது போல வளையல் எடுக்க, "க்கா உன் கையில் போட்டு காட்டு அப்போ தான் நான் சரியா எடுக்க முடியும்.." என்றதும் வளையல் கம்மலை போட்டு காண்பித்தவள் அடுத்து அட்டிகையை எடுத்து போட முயல அவளால் சரியாக கொக்கியை மாட்ட முடியவில்லை.
"அபய் இதை கொஞ்சம் மாட்டிவிட முடியுமா?" என்றதும் அபய் அவளுக்கு உதவிட அடுத்த ஒருமணி நேரத்தில் தங்கைக்கான நகைகளை அவளுக்கு பிடித்தவிதத்தில் தேர்வு செய்திருந்தாள்.
தேர்ந்தெடுத்தவற்றை பில் போட அனுப்பியவள் பணம் செலுத்துவதற்காக தன் காட்டை எடுத்துக் கொடுக்க, "என்ன நயனி நான் பே பண்ண மாட்டேனா? அப்போ உனக்கு இன்னும் கோபம் குறையலை அதுதான் என்னை நீ அக்செப்ட் பண்ணாம ஒதுக்கி வைக்கிற" என்றான்.
"என்ன பேசறீங்க அபய்? நான் எப்போ உங்களை ஒதுக்கி வச்சேன்?"
"இதோ இப்போ, இப்படி.." என்று அவளுடைய கார்டை எடுத்துக் காண்பித்தான்.
"அபய் இது என் தங்கச்சிக்கு வாங்கக்கூடிய நகை. இதுக்கும் நான் உங்களை அக்செப்ட் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்? இதை என் புருஷன் கிட்ட தன்மானம் பார்த்து செஞ்சுக்கிற விஷயமா நீங்க எடுத்துக்கிட்டாலும் அதுல தப்பு ஒன்னும் இல்லைங்கறதுதான் என்னுடைய அபிப்பிராயம்.."
"நயனி..."
"எஸ் அபய்! பொண்ணுங்களுக்கு ஃபினான்ஷியல் டிபெண்டன்ஸி ரொம்ப ஆபத்தானது. அது புருஷனாவே இருந்தாலும்..."
"நயனி நான் அப்படியில்லை.."
"குறிப்பிட்டு உங்களை சொல்லலை அபய். பட் ஸ்டில் நாம சம்பாதிக்கிற பணத்தின் மேல நமக்கு இருக்கிற உரிமை புருஷனோட சம்பாத்தியத்தில் கிடைக்கிறது இல்லை. நீங்க ஏத்துக்காம போனாலும் எத்தனை அன்னியோன்யமான தம்பதியா இருந்தாலும் இது தான் நிதர்சனமான உண்மை..."
"அதுக்காக என் புருஷனோட பணத்தை தொட மாட்டேன்னு சொல்லை பட் இப்போ இந்த நகைகளை நான் என்னோட பணத்துல எடுக்க காரணம் என் தங்கச்சிக்கு என்னால முடிஞ்சதை நான் செய்யணும் நினைக்கிறேன் அவ்வளவுதான்! இதுல உங்களை ஒதுக்கி வைக்கிறது என்னோட நோக்கம் சத்தியமா கிடையாது அபய்..."
"..."
"இப்ப என்ன உங்களுக்கு நகை வாங்கி கொடுக்கணும் அவ்வளவுதானே! வேணும்னா மொத்த கடையையும் வாங்கி கொடுங்க நான் எடுத்துக்கிறேன் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..." என்றாள் தீவிரக்குரலில்.
"வாட்! அடிப்பாவி அதுக்காக மொத்த கடையுமா?"
"அட ஷாக்கை குறைங்க பாஸ். நம்ம பர்ஸ் நிறைஞ்சு இருந்தாலும் புருஷனோட பர்ஸை காலி பண்றதே தனி சுகம்னு சொல்லி கேள்வி பட்டிருக்கேன்.. இன்னைக்கு அது நிஜம் தானான்னு பார்த்துடலாம்.." என்று இரு கைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டவள்,
"எங்க உங்க பர்ஸ் கார்ட் எல்லாம் கொடுங்க பார்க்கலாம் முதல்ல ஒரு நூறு சவரன் தேத்த முடியுதான்னு பார்க்கலாம் அப்புறம் சொத்து வீடெல்லாம் அடமானம் போட்டுக்கலாம்.." என்றதில் அரண்டு போனான் அபய்.
"நயனி ஆர் யூ சீரியஸ்?"
"ஹண்ட்ரட் பர்சென்ட் அபய்! என் புருஷன் வாங்கி கொடுக்கிறது எனக்கு கசக்குமா என்ன? அதுவும் நீங்க அவ்வளவு சென்டிமென்ட்லா ஃபீல் பண்ணின பிறகு எப்படி சும்மா இருக்க?! சரி கடையை விடுங்க அட்லீஸ்ட் ஒரு நூறு சவரன் எனக்காக வாங்கி போட மாட்டீங்க.." என்று கண்சிமிட்டியவள் இதழ்களை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
"கொஞ்ச நேரத்துல எப்படி பயமுறுத்திட்ட.. சேட்டை கூடிப்போச்சுடி உனக்கு!!" என்று அவள் காதை பிடித்து திருகியவன், அடுத்து மனைவிக்கான நகைகளை தேர்ந்தெடுக்க தொடங்கினான்.
"பிடிச்சிருக்கா நயனி..."
"யூ ஆர் ஸோ ஸ்வீட் அபய்! ரொம்ப பிடிச்சிருக்கு" என்றிட மேலும் அவளுக்கு பிடித்த நகைகளை பரிசளித்தான்.
மேலும் பத்து நாட்கள் கடந்த நிலையில், "தங்கச்சிக்கு கல்யாணம் என்றால் நாங்கெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே அம்மா வீட்டுக்கு போயிடுவோம் ஆனா நயனி என்னன்னா கல்யாணத்துக்கு முதல் நாள் தான் கிளம்பிட்டு இருக்கா.. நீயாவது சொல்லக்கூடாதா அபய்?" என்றபடி தட்டு வரிசை வைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் நிர்மலா.
"ம்மா இதுல நான் சொல்ல என்ன இருக்கு? எங்க எப்படி நடந்துக்கணும்ன்னு நயனிக்கு தெரியும் அவளோட விருப்படி செய்யட்டும்" என்றவன் நிதிஷாவின் திருமணத்திற்காக அனைவரும் தயாராகி "அபய் கொஞ்சம் ரூமுக்கு வாங்க" என்று அழைத்தாள் நயனிகா வர்ஷி.
"என்னங்க கொஞ்சம் இந்த ஃப்ளீட்ஸ் அட்ஜஸ்ட் பண்றீங்களா? நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் முடியலை.."
"நானா?" என்று திகைத்து நின்றுவிட்டான்.
"ஆமா நீங்க தான். நீங்க தானே பாஸ் என் புருஷன், உங்களை பொண்டாட்டியை கரெக்ட் பண்ண நைட் அவுட், டின்னர், கிஃப்ட்ஸ் மட்டும் போதாது அப்பப்போ இந்த மாதிரி ஹெல்ப் பண்ணனும் அதுவும் நான் கேட்காமலே!!"
"கேட்காமலே எப்படிடி பண்ண முடியும்?"
"அதுதான் இப்ப சொல்றேனே! பட்டு சேரி தனியா கட்டறது ரொம்ப கஷ்டம். ஒவ்வொரு முறையும் நான் கூப்பிடனும்னு எதிர்பார்க்க கூடாது.."
"அது சரி ஆனா எனக்கு ப்ளீட்ஸ் எல்லாம் எடுக்க தெரியாதே நயனி..."
"ஸோ வாட்?! இப்போதைக்கு நீங்க எடுக்க வேண்டாம் நான் எடுத்திருக்கிறதை கரெக்ட் பண்ணீங்கன்னா போதும். போகப்போக நான் ஒவ்வொன்னா கத்துக் கொடுக்கிறேன்" என்றதும் அவள் முன் மண்டியிட்டவன் புடவை மடிப்புகளை அவள் சொன்னது போல நேர்த்தியாக எடுத்து விட்டான்.
"பரவாலயே பாஸ் கற்பூரம் நீங்க டக்குன்னு பண்ணிட்டீங்க... இதேபோல நெக்ஸ்ட் டைம் நான் கூப்பிடாமலே செய்யணும் அப்பதான் நீங்க பக்காவான ஹஸ்பண்ட் மெட்டீரியலா மாற முடியும்.." என்று தன் முன்னே மண்டியிட்டு இருந்தவனின் முன்னுச்சி முடிகளை கலைத்துவிட்ட படி சொன்னாள்.
"இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்குடி..." என்று நயனியை கட்டிக்கொண்டு சொல்லவும் அவளையும் அறியாது சிறுவெட்கக்கீற்று முகத்தில் படர்ந்தது.
"அவ்வளவுதானா இல்ல வேற ஏதாவது ஹெல்ப் செய்யணுமா?" என்றதும் நெற்றியை சுருக்கியவள்,
"நீங்க எடுத்து கொடுத்த ஜூவல் முதல் முறையா போடப் போறதால அது நீங்களே போட்டுவிட்டால் இன்னும் ரொமான்டிக்கா இருக்கும்..."
"நிஜமாவா? உனக்கு பிரச்சனை ஒன்னும் இல்லையே?!"
"ஹான் என்ன கேட்டீங்க?"
"இல்ல நான் ஜூவல் போட்டு விடுவதில் உனக்கு அப்ஜெக்ஷன் இல்லையான்னு கேட்டேன்.."
"பாஸ் நீங்க இப்பதான் என்னை லவ் பண்ற ப்ராசஸ்ல இருக்கீங்க ஆனால் நான் உங்களை எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு தெரியும் தானே அப்புறம் எப்படி எனக்கு அப்ஜெக்ஷன் இருக்கும்னு நினைக்கறீங்க?!"
"ஒருவேளை உங்க சேலஞ்ல தோத்துடுவீங்கன்னு பயமோ?!"
"என்ன சேலஞ்?" என்றவனுக்கு சுத்தமாக நினைவில் இல்லை.
"என்ன பாஸ் இது., இந்த ரூம்ல முதல் நாள் பேசினதெல்லாம் மறந்துட்டீங்களா?" என்றதும் தான் அவர்களின் முதல் இரவின் போதான பேச்சுக்கள் நினைவில் எழவும் சட்டென சிரித்துவிட்டான்.
"இனி என்னை உன் கண்ட்ரோல்ல எடுத்துக்கோ.." என்றதில் முதலில் அதிர்ந்த நயனி மெல்ல தன்னை மீட்டுக்கொண்டு,
"பாஸ்.. அப்போ உங்க சபதம் என்னாச்சு? நான் கூட அன்னைக்கு நீங்க பேசினதை வச்சு நீங்க பெரிய ஆன்ட்டி ஹீரோவா வரப்போறீங்க உங்களுக்கு சில்லறையை சிதறவிட நினைச்சிருந்தேன்.." என்று சிரிப்போடு கணவனை கட்டிக்கொள்ள, "அது போன மாசம்!!" என்று கண் சிமிட்டினான்.
"ஓஓ!! அப்போ இது?" என்று அவர்களின் நிலையை கண்களால் சுட்டி காண்பித்தவளின் நெற்றியில் தன் உதடுகளை பொருத்தியவன்,
"இது இந்த மாசம்.. இப்போ நான் என் பொண்டாட்டி கிட்ட தோற்க தயாரா இருக்கேன்.."
"ரியலி?!"
"ஆமா.." என்று அவள் நெற்றி முட்டி சொன்னவனை இன்னும் இன்னும் பிடித்தது நயனிகா வர்ஷிக்கு..
"என்கிட்டே தோற்கிறது உங்களுக்கு பெருமையா இருக்கலாம் ஆனா என் புருஷனை யார்கிட்டயும் என்னைக்கும் நான் தோற்க விட மாட்டேன்" என்றவளின் உரிமை உணர்வில் சுகமாக வீழ்ந்தவன் நயனிகாவை அமர்த்தி ஒவ்வொரு நகையையும் பொறுமையாக அணிவித்து திருமணத்திற்கு கிளம்பினான்.