• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ! - 2

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் - 2​

"ஏதோ சத்தம் வந்ததா சொன்னாங்களே நயனி பிரச்சனை எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு மா" என்று மகனை பார்த்தபடி சொன்னார் சக்கரவர்த்தி.​

"பிரச்சனை எதுவும் இல்ல மாமா சும்மா தான் பேசிட்டு இருந்தோம்" என்றதில்,​

"இத்தனை நாள் பேசாததையா இப்போ பேச போற அபய்?" என்றவரின் பின்னே குழுமி இருந்த கூட்டத்தை கண்டவன்,​

"இப்போ நான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கிறேன் உங்க கௌரவத்துக்காக இவளை பலி கொடுத்துறாதீங்க டாட்... ஜஸ்ட் கால் ஆஃப் திஸ் மேரேஜ் ஐ கான்ட்" என்றதில் மற்றவர்கள் அதிர்ந்து நிற்க புன்னகையோடு மருமகனை பார்த்த முரளிதரன்,​

"அப்படி சொல்லு மாப்ள! ஏன் மாமா மாப்பிள்ளைக்கு தான் விருப்பம் இல்லையே அப்புறம் கட்டாய படுத்துறீங்க கொஞ்ச நாள் ஆற போடுங்க அப்புறமா அவர் மனசுக்கு பிடிச்ச வேற பொண்ணு கட்டி வைப்பீங்க இப்ப என்ன அவசரம்?" என்றார் சக்கரவத்தியிடம்.​

"நீ வாயை மூடுடா!! எப்போ எப்போன்னு நீ காத்திருக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியே?" என்று மச்சானை அடக்கியவர்,​

"உன்னோட மறுப்பு எத்தனை பேரோட வாழ்க்கையை தலை கீழ புரட்டி போதும்ன்னு மறந்துட்டு பேசாத அபய்"​

"உங்களால ப்ளாக்மெயில் பண்ணி கல்யாணம் மட்டும் தான் செய்து வைக்க முடியும் டாட்.." என்று எள்ளலாக தந்தையை பார்க்க, "அதை அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல கல்யாணம் முடியட்டும் வா" என்றவர்,​

"இன்னும் என்ன எல்லாம் இங்கே கூட்டம் போட்டுட்டு?! கிளம்புங்க போய் நிச்சய வேலையை பாருங்க" என்றதில் கூட்டம் கலைந்து போனது.​

அனைவரும் வெளியேற அபய் நயனிகாவை கொலை வெறியோடு பார்த்து நின்றான்.​

"மச்சான் ஸ்டாப்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க டா.. ஸ்டூடெண்ட்ஸ் சிலர் ஆல்ரெடி வந்தாச்சு இந்த நிலையில் கல்யாணம் நின்று போனா நல்லா இருக்காது. மற்றவங்களுக்கு எக்ஸாம்பிலா இருக்கிற நீயே தப்பான முன்னுதாரனமா மாறிடாத"​

"மச்சான்" என்று அபய் சுதர்ஷனை கட்டிக்கொள்ள,​

"நானும் இந்த நிமிஷம் வரை சோஷியல் மீடியாவை கண்காணிச்சுட்டு தான் வரேன் டில் திஸ் மொமென்ட் எங்கேயுமே சஞ்சு ஆக்டிவா இல்லை. நீ மட்டும் காதலிக்கலையே அவளும் தான் உயிருக்கு உயிரா உன்னை காதலிச்சா அவளுக்கு நீ தேவை என்றால் இந்நேரம் தேடி வந்திருக்கணுமே ஏன் வரலை.."​

"இதோ இவ தான்டா அதுக்கு காரணம்" என்று தன் எதிரே இருந்த நயனியை வேகமாக நெருங்கினான் அபய் ஸ்ரீவத்சன்.​

"மச்சான் கண்ட்ரோல் யுவர்செல்ப். காலேஜ் கர்ஸ்பான்டென்ட் மாதிரி பிஹேவ் பண்ணுடா..." என்று அவனை பிடித்துக்கொண்டான்.​

"விடுடா என்னை.." என்று திமிறியவன், "நீ போ எனக்கு இவ கிட்ட பேசணும் பேசிட்டு வரேன்"​

"லெட் ஹிம் ஸ்பீக்! ஐ கேன் மேனேஜ் நீங்க போங்க சுதர்ஷன்" என்று நயனிகா வர்ஷி சொல்லவும் தான் வெளியேறினான்.​

"சொல்லுங்க ஸ்ரீ என்ன பேசணும்"​

"ஏய் என்னை ஸ்ரீன்னு கூப்பிடாதடி அந்த உரிமை என் சஞ்சுவுக்கு மட்டும் தான் கால் மீ அபய்" என்றான் சீற்றத்தோடு.​

"ஸ்ரீ சஞ்சு உங்க இறந்தகாலம்! நான் தான் உங்களோட நிகழ்காலமும் வருங்காலமும். அதை புரிஞ்சுகிட்டா உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே கஷ்டம் இருக்காது. யூ பெட்டர் அண்டரஸ்டான்ட்!!"​

"லுக் நயனி, நீ நினைக்கிற மாதிரி நான் கிடையாது. என் வாழ்க்கை முழுமைக்கும் சஞ்சு மட்டும் தான்னு இருக்கிறவன் நான் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி மஞ்சள் கயிறு மேஜிக் எல்லாம் என்கிட்ட எடுபடாது..."​

"ஐ க்நொவ்!!"​

"அப்புறம் என்ன தைரியத்துலடி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச?! படிச்சவ தானே நீ! தெரிஞ்சே வாழ்க்கையை வீணடிக்க போற உன்னை மாதிரி முட்டாளை நான் பார்த்ததில்லை..."​

"எனக்கே அதுல பிரச்சனை இல்லை எனும் போது உங்களுக்கு ஏன் என் மேல இவ்ளோ கரிசனம் ஸ்ரீ.." என்றவளின் தாடையை அழுத்தி பிடித்தவன், "இடியட் என்னை அப்படி கூப்பிடாதன்னு சொன்னேன் இன்னொருமுறை சொன்ன வாயை உடைச்சுடுவேன்"​

"உங்களால முடிஞ்சா பண்ணுங்க ஸ்ரீ" என்று அவன் மூர்கதனத்தை வர்ஷி வெளிக்கொணற சட்டென நயனியை ஓங்கி அறைந்திருந்தான்.​

கன்னத்தை பிடித்தபடி அவள் திகைத்து நிற்க, "இவ்ளோ வாய்ப்பு கொடுத்தும் நீயா வந்து உன்னை பலி கொடுக்கறப்போ ஐ ஆம் ஹெல்ப்லெஸ்!! இனி தான் இந்த அபய் ஸ்ரீவத்ஸன் யாருன்னு நீ பார்க்க போற.. கெட் ரெடி!!" என்றவன் கதவை அறைந்து சாற்றிவிட்டு கிளம்பினான்.​

அபய் ஸ்ரீவத்ஸன் இருபத்தி ஒன்பது வயது ஆண்மகன். சக்கரவர்த்தி நிர்மலா தம்பதியரின் இளைய மகன்.. எம்பிஏ முடித்துவிட்டு அண்ணனை போலவே குடும்ப தொழிலில் கால் பதித்தவனின் பொறுப்பில் வந்து சேர்ந்தது அவர்கள் தாத்தா காலத்தில் தொடங்கிய கலை அறிவியல் கல்லூரி.​

மிகவும் பொறுப்பானவன்! இருபத்தி நான்கு வயதில் கல்லூரியின் பொறுப்பை ஏற்று கொண்டவன் இன்று வரையிலும் சிறப்பாக செய்து வருகிறான். என்ன தான் அவன் பொறுப்பு என்றால் முக்கிய தீர்மானங்கள் அதன் பங்குதாரர்களான அவன் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி தனியாக முடிவெடுத்து விட முடியாது.​

அப்படி தான் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ட்ரஸ்ட்டை அவன் தொடங்கிய போது மற்றவர்களின் ஒப்புதலும் பங்களிப்பும் அத்யாவசியமாகி இருந்தது. தாய் தந்தை இல்லாத, பெரிதான பொருளாதார பின்னணி அற்ற நன்றாக படிக்க கூடிய குழந்தைகளுக்கு தான் அதில் முன்னுரிமை.​

அபய் ஸ்ரீவத்ஸன் சஞ்சுனா காதலுக்கு சக்கரவர்த்தி பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் நிர்மலா மகனுக்கு துணையாக தான் நின்றார். இதனால் வீட்டில் பிரச்சனை வெடிக்க 'அப்படி அவளை திருமணம் செய்வதாக இருந்தால் தன் சொத்தில் இருந்து ஒரு குண்டூசி கூட கிடைக்காது" என்று கறாராக சொல்லி விட்டார்.​

சொத்தை விட சஞ்சனா தான் முக்கியம் என்று சொல்லிவிட்டவன் அவர்களை எதிர்த்து திருமணம் செய்ய என்றுமே நினைக்கவில்லை. நிர்மலா மீது உயிரையே வைத்திருப்பவனுக்கு தாய் தந்தையரின் ஆசியோடு அவர்கள் முன்னிலையில் சஞ்சனாவை கரம் பிடிப்பது தான் விருப்பமாக இருந்தது.​

அபய் கல்லூரியின் பொறுப்பை எடுத்துக்கொண்ட அதே வருடம் அவர்கள் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பிற்காக வந்து சேர்ந்தவர்கள் தான் சஞ்சனாவும், நயனிகாவும். சிறு வயது முதலே நெருங்கிய தோழிகள் பள்ளி கல்லூரி படிப்பை முடித்து இங்கே வந்து சேர்ந்தவர்கள் படிப்பை முடித்து அபய் கல்லூரியிலேயே பேராசியர்களாக பணியாற்ற தொடங்கிவிட்டனர்.​

சஞ்சனா மிகவும் துடிப்பான அலைகடலென ஆர்பரிக்கும் குணம் கொண்டவள் என்றாள் நயனி அதற்கு நேரமாராக எந்த விஷயத்திலும் அசாத்திய நிதானத்துடன் பொறுமையாக கையாளக்கூடியவள்.​

அபய்க்கு படபட பட்டாசென பேசும் சஞ்சனாவின் பேச்சும் குணமும் பெரிதும் கவர்ந்துவிட்டது. பேச்சில் வேகமிருந்தாலும் அவள் செய்யும் செயல்களில் விவேகமும் சேர்ந்திருப்பது தான் சஞ்சனாவின் சிறப்பு.​

சக்கரவர்த்திக்கும் ஸ்ரீவத்ஸனுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சரியாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த நிலையில் நிர்மலா தான் இருவருக்கும் பாலமாக இருந்ததோடு கணவனின் மனதையும் கரைக்க முயன்றார்.​

எதுவுமே எடுபடாத நிலையில் தான் சட்டென்று ஒருநாள் சஞ்சனா காணாமல் போனது. அவள் மட்டுமல்ல அவள் குடும்பமே ஊரை விட்டு மாயமாக மறைந்து போயிருந்தது முதலில் தந்தை தான் இதற்கு காரணமாக இருப்பார் என்று அவரிடம் சென்று கேட்டான்.​

அவரோ தனக்கு நேருக்கு நேராக எதிர்த்து தான் பழக்கமே தவிர்த்து முதுகில் குத்தி பழக்கம் கிடையாது என்றுவிட்டார்.​

அதன்பின் சஞ்சனாவின் தோழிகள், கல்லூரி மாணவர்கள், சொந்தங்கள், தெரிந்தவர்கள் தொடங்கி சமூக வலைத்தளம் வரை அனைத்திலும் வலை வீசி கடந்த ஆறு மாதங்களாக அவளை தேடி கொண்டிருந்தவன் கோலமே முற்றிலுமாக மாறி போயிருந்தது.​

எப்போதும் கிளீன் ஷேவ், நேர்த்தியான உடை என்று இருப்பவனின் பித்து பிடித்த கோலம் நிர்மலாவை விட சக்கரவர்த்தியை மிகவும் வருத்தியது. ஈகோவை விட்டு மகனிடம் பேசிய போதும் அவன் பிடி கொடுக்காமல் போனதில் இப்படியே போனால் எங்கே மகனை இழந்து விடுவோமோ என்று உடனே அவனுக்கான பெண் தேடலில் இறங்கினார்.​

அப்படி பெண்ணை உறுதி செய்து பெண் பார்க்கும் வைபவத்திற்கு மகனை அழைக்க அவன் வர முடியாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.​

"உனக்கு சொத்து வேண்டாம் அபய் ஆனால் உன்னை நம்பி இருக்கக்கூடிய பிள்ளைகளோட எதிர்காலத்தை பற்றி யோசித்து பார்..."​

"என்ன டாட் பேசறீங்க? எதுக்காக அவங்களை இதுல கொண்டு வரீங்க"​

"நான் பக்கா பிஸ்னஸ்மேன்!! எந்த தொழில் தொடங்கும் முன்னாடியும் அதுல எனக்கு எந்தளவு ஆதாயம் இருக்குன்னு தான் பார்ப்பேன் அப்படி இருந்தும் இந்த ட்ரஸ்ட் ஆரம்பிக்க ஒத்துகிட்டது எதனாலன்னு நினைக்கிற?" என்றதில் அதிர்வோடு தந்தையை பார்த்தான்.​

அவன் பொறுப்பேற்ற அந்த வருடத்தின் இறுதியில் தான் இந்த ட்ரஸ்ட் ஆரம்பிக்க பட்டது ஆனால் அப்போதே சஞ்சனாவுடனான அவன் காதலுக்கு வயது ஆறு மாதங்கள்.​

"கரெக்ட்டா கெஸ் பண்ணிட்ட மை சன்! பசங்களுக்கான ஸ்கூல் எஜுகேஷன், காலேஜ் எஜுகேஷனுக்கு டொனேஷன் வந்தாலும் அது எந்த மூலைக்கு?! அதிலும் சில பசங்க டாக்டர் சீட் கிடைக்க அவங்களோட மற்ற எக்ஸ்பென்ஸ்ஸும் நம்ம தலையில.. இப்போ நான் நினைச்சா அதை ஒன்றுமில்லாமல் செய்ய முடியும்"​

"டாட்! நீங்களா இப்படி? உங்க கிட்ட இதை எதிர்பார்க்கலை, டிப்பிகல் வில்லன் மாதிரி பேசறீங்க..."​

"அப்படியா தெரியுது உனக்கு?! சரி விடு உன் ஆசைப்படியே இருந்துட்டு போறேன் நீயும் என் ஆசைப்படி அந்த பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கோ" என்றார்.​

"முடியாது.."​

"அப்போ பலவித கனவோடு இருக்கிற நூற்றுக்கணக்கான பசங்களோட எதிர்காலமும் ஆஸ்த்தமனம் ஆக போறதை பார்க்க தயாரா இரு" என்றதில் இருவருக்குமான வாக்குவாதம் முற்றிட இறுதியில் சக்கரவர்த்தி தான் ஜெயித்தார்.​

ஆனால் பெண் பார்க்க போன இடத்தில் நயனிகாவை எதிர்பாராதவன் அவளிடமே திருமணத்தை நிறுத்த சொன்ன போதும் அவள் செய்யாமல் போனதில் தந்தை மீதான கோபத்தையும் நயனி மீது காண்பித்து கொண்டிருக்கிறான்.​

அறைக்கு திரும்பியவன் சட்டையை களைந்துவிட்டு புது உடையை அணிந்து கொள்ள சுதர்ஷன் ஆச்சர்யமாக நண்பனை பார்த்திருந்தான்.​

"மச்சி மாறிட்டியா டா.." என்றதற்கு வெறும் தலையசைப்பு.​

"அதுதான்டா உன்னோட வாழ்க்கைக்கு நல்லது. நயனி யாரோ இல்லை சஞ்சுவோட ஃபிரெண்ட்! இப்போலாம் பாஸ்ட் இல்லாத ஆட்களே கிடையாது பெரும்பாலான பார்ட்னர்ஸ் அதை புரிஞ்சுக்காம போறதால் தான் ஒன்னு கல்யாணத்துக்கு பின்னாடி அதை மறைச்சுடுறாங்க தெரிஞ்சா உடனே டிவோர்ஸ்கு போயிடுறாங்க"​

"ஆனா நீ ரொம்ப லக்கி! உன்னை உன் காதலை புரிஞ்சுகிட்ட பெண் மனைவியா கிடைச்சிருக்காங்க இதுக்கு மேலயும் கோபத்தை இழுத்து பிடிச்சு எந்த சிக்கலையும் இழுத்து விட்டுக்காத! சந்தோஷமா இரு" என்றிட அவனோ எதையும் காதில் வான்காதவனாக மணமேடைக்கு சென்றான்.​

"அபய் ஒரு நிமிஷம் பா" என்ற நிர்மலாவின் குரலில் அவன் நடை தடைபட்டது.​

மகன் நெற்றியில் விபூதியை வைத்தவர், "நல்ல முடிவோடு தான் இங்க வந்திருக்கான்னு நம்புறேன் ஸ்ரீப்பா. இனியாவது என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்க முருகன் துணை இருப்பாருன்னு நம்புறேன்" என்று கலங்கிய விழிகளுடன் சொல்ல தாயின் கண்ணீரை துடைத்தவன் இறுகிய முகத்துடன் மேடையில் அமர்ந்தான்.​

நிச்சயதார்த்த சடங்குகள் தொடங்க "பெண்ணை கூட்டிட்டு வாங்க" என்று ஐயர் சொல்ல, நயனிகாவும் மேடைக்கு அழைத்து வரப்பட்டாள். சக்கரவர்த்தியும் நிர்மலாவும் அவளை ஆசிர்வதித்து புடவை நகை அடங்கிய தாம்பூலத்தை கொடுக்க வாங்கி சென்றவள் புடவை மாற்றி வர நலங்கிட தொடங்கினர்.​

அவளருகே அமர்ந்திருந்த அபய்யின் பார்வை நயனி புறம் திரும்பவே இல்லை.​

நலங்கு முடியவும், "அபய் நயனிக்கு ரிங் போட்டுவிடு" என்று சக்கரவர்த்தி சொல்ல நயனிகா தன் வெண்டைபிஞ்சு விரல்களை அவன் முன் நீட்டினாள்.​

இறுகிய முகத்தோடு அவள் கையை பிடித்தவனுக்கு அதை இப்போதே நொறுக்கும் எண்ணம் எழ அவன் பிடி இறுகியது. அப்படியே அதை முறுக்கி போடும் வேகம் எழுந்ததில் நயனிக்கு வலி கூடியது.​

"ஸ்ரீ" என்று உதட்டை கடித்தபடி நயனிகா வலி பொறுக்க நண்பன் அருகே இருந்த சுதர்ஷன் தான் நிலையை உணர்ந்து சட்டென சுதாரித்து அபய்யை உலுக்கவும் தான் நிதானித்தவன் வெறுப்போடு அவளுக்கு மோதிரத்தை அணிவித்தான்.​

 

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
அடேய் அபய்....நீ உன் அப்பாவிடம் காட்ட முடியாத கோபத்தை நயனியிடம் பொங்கினா ஆச்சா 😏😏😏
 

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
நயனி ஏன் இவ்வளவு பிடிவாதமா வேணாம்ன்னு சொல்றவனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறா.... லவ் ஆ 🤨🤨🤨

சஞ்சனா எங்க போனா 🧐🧐🧐
 
  • Love
Reactions: kkp11

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
கொஞ்சம் பயமாதான் இருக்கு இவனை பார்க்க