அமுதம் - 21
"உன்னை தான் நயனி கேட்கிறேன்.. நீ என்னை காதலிச்சதா சஞ்சு சொல்லியிருந்தா அது உண்மையா?" என்றதில் தன் வேலையை ஒருகணம் நிறுத்தியவள் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு,
"இப்போ அது தெரிஞ்சு நீங்க என்ன செய்ய போறீங்க?!" என்றாள் இருகரங்களையும் மார்பின் குறுக்கே கோர்த்தபடி..
"..."
"சொல்லுங்க அபய் என் காதல் கதை தெரிஞ்சதும் மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளை தொட்டுக்கடி என்றா சொல்ல போறீங்க?" என்றதில் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
"ஹே என்ன.. என்ன பேச... ப்ச் பாடுற நீ?!"
"நான் என்ன பாடினா உங்களுக்கு என்ன?! எப்படியும் நீங்க எதையும் செய்ய போறதில்லை அப்புறம் எதுக்கு உங்களுக்கு என்னோட காதல் கதை?" என்று கேட்க அவனிடம் பதிலில்லை.
நயனி தன் வேலையை மீண்டும் தொடர மேலும் சில நிமிடங்கள் கடந்த நிலையில், "உனக்கு என் மேல கோபம் இல்லையா நயனி?" என்றான்.
"என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி?"
"இல்ல நீ என்னை லவ் பண்ணி இருக்க ஆனா உன் எதிரிலேயே நான் உன்னோட ஃபிரண்டுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருந்தேனே அப்போ நிச்சயமா உனக்கு அது கஷ்டம் கொடுத்திருக்கும் என் மேல கோபமும் வந்திருக்கணுமே அதுதான் கேட்டேன்.."
"நீங்க ஒன்னும் நான் உங்களை விரும்புறது தெரிஞ்சும் போய் இன்னொரு பொண்ணு கிட்ட உங்களோட காதலை சொல்லலையே அப்புறம் எதுக்கு எனக்கு உங்க மேல கோபம் வரணும்? அதைவிட அந்த பொண்ணு சஞ்சுவா இருக்கப்போ அன்னைக்கு நீங்க அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணின அதிர்ச்சியில என்னால எதுவுமே பேச முடியலையே தவிர்த்து எனக்கு கோபமெல்லாம் இல்லை.."
"அப்போ இப்பவும் உனக்கு என்மேல கோபம் இல்லையா?"
"எதுக்கு?" என்றாள் புன்னகையோடு..
"நிறைய முறை லஞ்ச், அவுட்டிங்ன்னு உன்னை கூட்டிட்டு போயிருக்கோம்.. அப்போ எங்களை சேர்த்து பார்க்கிற உனக்கு எந்தளவு கஷ்டமா இருந்திருக்கும்.. அப்போ மட்டுமில்லை இப்பவும் என் மனசுல சஞ்சு இருக்கிறது தெரிஞ்சும் ரொம்ப கேஷுவலா இருக்க, உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை நயனி.."
"அப்படியா?!" என்றவளின் புன்னகை இன்னுமே பெரிதாக விரிந்திட, "பரவாலயே இவ்ளோ சீக்கிரம் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்றீங்க.. எல்லாம் சஞ்சு செய்யும் மாயம் இல்லையா?!"
"கண்டிப்பா! இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா நீ நினைக்கிற மாதிரியான்னு எனக்கு தெரியலை பட் இவ்ளோ நாளா என் சஞ்சு எங்கேன்னு தெரியாம இருந்ததுல நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாவே இல்லாமல் போயிருந்த.. அடுத்து சஞ்சு இல்லை என்ற நிதர்சனம் கொடுத்த வலி அதை கடக்க முடியாமல் தத்தளிச்ச போதும் நீ என் நினைவில் இல்லை.."
"ஆனா இப்போ என் சஞ்சுவோட வார்த்தையால மட்டுமில்லை, ப்ராக்டிகல் ரியாலிட்டிக்கு வர சொல்லியிருந்த உன் வார்த்தைகள் உன்னை அதிகமாகவே புரிஞ்சுக்க முயற்சி பண்ண சொல்லுது நயனி.." என்று தன் மனதில் இருந்ததை சொல்ல அவள் முகத்தில் ஆச்சர்யம்.
"நிஜமாவே உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அபய்! சஞ்சுவுக்கும் உங்க நேர்மை ரொம்ப பிடிக்கும் அடிக்கடி சொல்லிட்டு இருப்பா.. " என்றாள் மீண்டுமான மந்தகாச புன்னகையோடு.
"எப்படி உன்னால ஸ்மைல் பண்ண முடியுதுன்னு எனக்கு தெரியலை நயனி.."
"ஏன்?"
"நீ மட்டுமில்லை நானுமே எதிர்பாராமல் எவ்வளவோ நடந்துடுச்சு.. இந்நேரத்துக்கு உன் இடத்துல வேறொரு பெண் இருந்திருந்தால் எத்தனை பேச்சு, கத்தல், அழுகை, ஆர்பாட்டம்னு இருந்திருக்கும் ஆனா நீ ரொம்ப காம் அண்ட் கம்போஸ்ட்டா இருக்க..."
"எந்த விஷயத்தையும் எமோஷனலா இல்லாம ரொம்ப ப்ராக்டிகலா டீல் பண்ற.. அதைவிட முக்கியமா பசங்க நாங்கெல்லாம் சுனாமியிலயே ஸ்விம்மிங் பண்றவங்கன்னு ஃபன்னா சொல்லுவாங்களே அப்படி ரொம்ப கூலா ஹெட்டடா இருக்க.. எப்படி உன்னால முடியுது?!"
"இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல? முதல்ல இதை நீங்க எனக்கு கொடுக்கிற காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கவா? இல்லை யார்ரா இவ? பிரெண்ட் இல்லைங்கிற கவலை கூட இல்லாம பாட்டு பாடி சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்கான்னு வருத்ததோடு குற்றம் சாட்டுவதா எடுத்துக்கவா?"
"ச்சை ச்சை எனக்கும் உங்களோட ஃபிரென்ட்ஷிப் எவ்ளோ ஸ்ட்ராங்கானது என்று தெரியும். அப்படியிருந்தும் இரண்டு வருஷம் சஞ்சுவோட இழப்பை தாங்கிகிட்டு என்னோடவும் போராடிகிட்டு இருந்திருக்கியே ரியலி யூ ஆர் சச் எ ஸ்ட்ராங் லேடி! ஐ அட்மையர் யூ"
"நிச்சயமா இது காம்ப்ளிமென்ட் தான். தாராளமா நம்பலாம், இன்ஃபாக்ட் என்னால உன்னை போல இருக்க முடியலையேன்னு லைட்டா பொறாமையா கூட இருக்கு.. இத்தனைக்கும் தாலி கட்டின பிறகும் சஞ்சு சஞ்சுன்னு சொல்லி உனக்கு எவ்வளவோ மெண்டல் ப்ரெஷர் கொடுத்திருக்கேன் ஆனாலும் நீ வேற மாதிரி இருக்க நயனி.." என்றான் உளமாற..
"உன்னோட பொறுமை நிதானத்தை பற்றி அடிக்கடி சஞ்சு சொல்லி கேட்டிருக்கேன் ஆனா நேரில் இப்போ தான் பார்க்கிறேன்.. நிஜமா பிரமிப்பா இருக்கு.."
"போதும் போதும் ஒரே நாளுல இப்படி ஐஸ் பாரையே தூக்கி தலையில வச்சா நான் தாங்க மாட்டேன்.." என்று சிரிக்க அபய் முகத்திலும் புன்னகை.
"நான் உங்களை விரும்பினால் போதுமா அபய்? உங்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது தப்பு கிடையாதே?! அதை புரிஞ்சுகிட்டு நானே மதிக்காம போனா பிறகு நான் உங்களை காதலிச்சதே அர்த்தம் இல்லாம போயிடாதா?!"
"நமக்கு பிடிச்சவங்களை நம்மோடு தக்க வச்சுக்கணும் என்று நினைப்பது ஒரு வகையான காதல் என்றால் நமக்கு பிடிச்சவங்களுக்கு நம்மை விட சந்தோஷம் கொடுக்கக்கூடிய இன்னொரு விஷயம் இருக்கு என்று தெரிய வரும் போது அதை அவர்களுக்கு கிடைக்க செய்வதும் காதல் தானே?!"
"இதுல நான் இரண்டாவது ரகம்! அதுவும் உங்களுக்கு என்னோட விருப்பம் பற்றி தெரியாத போது உங்களை எப்படி நான் கஷ்டபடுத்த முடியும் இல்ல கோபப்படுத்த முடியும் சொல்லுங்க?!" என்றவளின் கேள்வியில் அசந்து தான் போனான்.
"அதுவும் காதலே பிடிக்காத என் சஞ்சுவுக்கு உங்களை பிடிச்சிருக்கப்போ அதில் எப்படி நான் கோபப்பட முடியும்?! நீங்க எனக்கு கிடைக்கலை என்கிற வலி ஒரு மூலையில நிரந்தரமா இருக்கும் தான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் அதுக்காக என் வாழ்க்கையில் முக்கியமான ரெண்டு பேரோட சந்தோஷம் நிச்சயம் எனக்கு சந்தோஷத்தை கொடுக்காமல் போகுமா என்ன?!"
"யூ ஆர் அன்பிலீவபில் நயனி!! இப்போ புரியுது என்னோட சஞ்சு ஏன் என்னை உன்னோடு சேர்த்து வைக்க நினைச்சிருக்கான்னு" என்றான் அகலாத பிரமிப்போடு.
"ரொம்ப நேரம் பேசிட்டீங்க டையார்டா இருக்கும் ஏதாவது வேணுமா இல்லை படுக்கறீ=ங்களா?!"
"ப்ச் அதுதான் ஹாஸ்பிட்டல்ல போதுமான ரெஸ்ட் எடுத்துட்டேனே இப்போ தூக்கம் வரல.. பட் உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா சொல்லலாமே!"
"எதை பற்றி?"
"உனக்கு என்னை எப்போ இருந்து தெரியும்? பிடிக்கும் இந்த மாதிரி.."
"என்ன திடீர்னு?"
"என் வைஃப் பற்றி தெரிஞ்சுக்க தோணுது.. தெரிஞ்சுக்கலாமா?!" என்றதில் அவள் ஆச்சர்யத்துடன் பார்க்க,
"இப்படி கேட்கிறதால சஞ்சுவை மறந்துட்டேன் என்றோ உன்னை காதலிக்கிறதாவோ அர்த்தம் இல்லை. எனக்கும் என் சஞ்சுவோட வார்த்தை ரொம்ப முக்கியம். அதோடு உன்மேல எந்த தப்பும் இல்லை எனும் போது எதுக்கு கோபத்தை இழுத்து பிடிக்கணும்?!"
"என்னால உன்னை காதலிக்க முடியுமான்னு தெரியலை குறைந்த பட்சம் உன் காதலையாவது தெரிஞ்சுக்க, புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.."
"அது எதுக்கு?"
"அதுதான் சொன்னேனே என் வைஃப் பற்றி தெரிஞ்சுக்க தோணுது. நீ எதிர்பார்க்கிற காதலை கொடுக்க முடியலை என்றாலும் ஒரு நல்ல ஹஸ்பன்ட்டா இருக்க முயற்சி பண்றேன்.. இன்ஃபாக்ட் நீ என்கிட்டே என்ன.. ஐ மீன் காதலை எதிர்பார்க்கறியா? என்று கூட எனக்கு தெரியலை.."
"பட் ஸ்டில் நானும் நம்மோட ரிலேஷன்ஷிப் உடையாம பார்த்துக்க என்னால முடிந்ததை செய்வேன்.. ஐ ப்ராமிஸ் யூ ! இப்போ சொல்லலாமே" என்றதும் ஒரு பெருமூச்சோடு அவன் எதிரில் அமர்ந்தவள்,
"சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன தெரியனும்?"
"நீ என்னை எங்க எப்போ முதன்முதலா பார்த்த?"
"எங்க ஹாஸ்டல் எதிர்ல இருக்கிற ப்ளேகிரவுண்டில் தான் நீங்க தினமும் சாயந்திரத்துல விளையாடுவீங்க. என் ரூம் ஜன்னல் வழியா உங்களை பார்ப்பதை வாடிக்கையா வச்சிருந்தேன் பட் நான் உங்களை முதல்முதலா பக்கத்துல பார்த்தது சென்னையில் தான்.."
"சென்னையிலா? எப்போ?" என்றதும் ஆழ்ந்த மூச்சை எடுத்தவள்,
"உங்களுக்கு எந்த அளவுக்கு என் அம்மாவோட புருஷனை பற்றி தெரியும் என்று எனக்கு தெரியலை.. ஆனா என்னை பொருத்தவரையில் அவன் மனுஷனே கிடையாது.."
"என்னோட அப்பா நான் சின்ன வயசா இருக்கும் போது அதாவது அவரோட முகம் கூட என் நினைவில் இல்லாத போதே இறந்துட்டார். அதுக்கப்புறம் எங்க தாத்தா சொத்தை கட்டி காப்பாற்றுவதற்காக இந்த ஆளுக்கு என் அம்மாவை கட்டி வைத்தார்.."
"ஆனால் அந்த ஆளை பற்றி முழுசா விசாரிக்காம அவசரமா கல்யாணம் பண்ணி வச்சுட்டார். என் அம்மாவுக்கு ரொம்ப காலம் கழிச்சு தான் அவனோட உண்மையான குணம் தெரிய வந்தது ஆனா அப்போ காலம் கடந்து போயிருந்தது.."
"இத்தனை வருஷத்துல அவன் என்னை தன்னோட சொந்த பொண்ணா ஒருநாளும் பார்த்தது கிடையாது. சின்ன வயசுல இருந்தே சின்ன சின்ன சீண்டல்கள் என்று தொடங்கின அவனோட அட்டூழியத்தை என் அம்மா சீக்கிரமே கண்டுபிடிச்சுட்டதால என்னை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க"
"எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே என்னோட சந்தோஷம், அழுகை, கோபம், எதிர்பார்ப்பு எல்லாமே அம்மா கிட்ட மட்டும் தான்! ஆனா ஒருநாள் என்னை ஹாஸ்டல்ல போடுறேன்னு சொன்னப்போ முதல்ல அழுது, ஆர்பாட்டம் பண்ணி ரொம்ப அடம் பிடிச்சேன்..."
"அம்மா என்னோட நல்லதுக்காக தான்னு சொல்லி வாராவாரம் பார்க்க வருவேன்னு சமாதானம் செய்து தான் விட்டுட்டு வந்தாங்க.. ஆனாலும் என்னால அவங்களோட பிரிவை தாங்க முடியலை.."
"அவ்ளோ சின்ன வயசுலயா? அதுவும் பெண் குழந்தையை சேர்க்க எப்படி முன் வந்தாங்க?"
"பெண் குழந்தைக்கு வீட்டை விட ஹாஸ்டல் பாதுகாப்பானதுன்னு அந்தாளு அவங்களுக்கு தோணும் அளவிற்கு என்கிட்டே நடந்திருக்கான்னு இன்னுமா உங்களுக்கு புரியலை?"
"நயனி.. சின்ன குழந்தை கிட்டயா?!"
"ஆமா அபய்! அவனை மாதிரி ஜந்துக்களுக்கு எல்லாம் குழந்தை கிழவி எல்லோருமே ஒன்னு தான். அதுதான் கூடுமான வரை அவன் கண்ணுல நான் படக்கூடாது என்பதில் அவங்க உறுதியா இருந்தாங்க. முதல்ல பிரிவு தாங்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்த நான் போக போக புரிஞ்சுகிட்டு ஹாஸ்டல் வாழ்க்கைக்கு பழகிட்டேன.."
"ஆனாலும் மொத்தமாக அங்கேயே இருந்திட முடியாதே?! விசேஷ நாட்கள் விடுமுறை நாட்களுக்கு வீட்டுக்கு போய் தானே ஆகணும். அந்த மாதிரி நாட்களில் முடிஞ்ச வரை நிதிஷா இல்லை அம்மாவோட இருக்கிற மாதிரி அவங்க பாத்துப்பாங்க.."
"..."
"எனக்கு நான் வளர வளர அவனோட தொடுகை வித்தியாசமாக தெரியவும் நானே விலகி இருக்க கத்துக்கிட்டேன்..".
"உங்கம்மா ஏன் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருந்தாங்க? அவங்க விவாகரத்து வாங்கிட்டு போய் இருக்கலாமே?!"
"சொல்றது சுலபம், ஆனா என் அம்மாவால அப்படி ஈஸியா செஞ்சுட முடியாது. அவங்க அந்த காலத்து மனுஷி ஒரு வாழ்க்கை முடிஞ்சு அடுத்த வாழ்க்கைக்குள்ள வந்திருக்காங்க.. இப்ப இதையும் விட்டுட்டு போனா சொந்த பந்தம் எல்லாம் என்ன பேசுமோன்னு பயப்படுறவங்க.."
"அதைவிட அப்படி போனா மற்ற இரண்டு குழந்தைகளை அவங்க கிட்ட கொடுக்க மாட்டான். இதனால நான், என் தம்பி தங்கச்சிங்க வாழ்க்கை பாதிக்கப்பட கூடாதுன்னு நினைக்கிறவங்க.."
"ஆனா அம்மாவை இழந்து உன் வாழ்க்கை பாதிக்கப்படலாமா?"
"வெளியில் இருந்து எவ்ளோ கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் அபய் ஆனா அந்த சூழல்ல எங்கம்மாவுக்கு தெரிஞ்ச ஒரே தீர்வு என்னோட ஹாஸ்டல் வாசம் தான்! அதுவே அவங்க என் வாழ்க்கை பாதிக்க படகூடாது என்பதற்காக எடுத்த மிக கடினமான முடிவு.."
"என்ன சொல்ற?"
"நிச்சயமா அவங்க வரையில் இது ரொம்பவே கடினமான முடிவு தான்! என் அம்மாவுக்கு என்மேல பாசம் அதிகம் ஆனா என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு போன பிறகு என்னை விட அவங்க அதிகமா அழுதிருப்பாங்க, துடிச்சிருப்பாங்க.. ஆனாலும் என்னை காப்பாற்ற அவங்ககிட்ட வேற வழியில்லை.."
"அதோடு எங்க மூணு பேருக்காகவும் அவனோட அடியையும் அட்டூழியத்தையும் வருஷகணக்கா தாங்கிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு ஆறுதலா இருக்ககூடிய குழந்தைகளில் ஒருத்தியை ஹாஸ்டல்ல விடறது கொடுமை இல்லையா?!"
"நான் எப்படி இருக்கேனோ, சாப்டேனா, தூங்கினேனான்னு தினம் தினம் அவங்க அனுபவிச்சதை மத்தவங்களால சுலபமா புரிஞ்சுக்க முடியாது அபய்.. நான் லீவுக்கு வந்து போற நாட்களெல்லாம் கண்கொத்தி பாம்பு மாதிரி என் பக்கத்துலயே இருப்பாங்க இல்லையா நான் பாதுகாப்பா இருப்பதை உறுதி செய்துட்டு தான் வெளியில கிளம்புவாங்க.."
"அப்படி ஒரு முறை டென்த் படிச்சிட்டு இருந்த நான் லீவுக்கு வீட்டுக்கு போயிருந்தப்போ அவன் என்கிட்ட தப்பா நடக்க பார்த்ததுல பயந்து பக்கத்து வீட்டுக்கு போயிட்டேன்.."
"ஏன் உன் அம்மா தம்பி தங்கை எல்லாம் எங்க போயிருந்தாங்க?"
"நிதிஷாவுக்கு அன்னைக்கு உடம்பு முடியல அதனால அம்மா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. தம்பி எப்பவுமே அம்மாவோட ஒட்டிக்கிட்டே இருப்பான் அதனால அவனும் கிளம்பிட்டான்"
"அம்மா என்னையும் கூப்பிட்டாங்க. ஆனா எனக்கு படிக்கிறது நிறைய இருந்தது அதனால என்னால அவங்களோட போக முடியல.. பகல் நேரத்துல ஆள் நடமாட்டம் இருக்கிறப்போ என்னவாகிடும் எப்படியும் ஒரு மணி நேரத்துல வந்துருவோமே என்று அவங்க கிளம்பிட்டாங்க.."
"அப்போவே மணி சாயந்திரம் அஞ்சு இருந்திருக்க நானும் ஹோம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்"
"ஏன் அவன் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக மாட்டானா?"
"செய்ய மாட்டான் அபய். பேருக்கு தான் புருஷனா இருந்தான் மற்றபடி வீட்டு வேலை குழந்தைங்க கவனிப்பு தொடங்கி ரேஷன், பால், காய்கறின்னு எல்லாமே அவங்க தான் பார்த்துக்கணும்.."
"...."
"அன்னைக்கு படிக்கிறியா வர்ஷின்னு கேட்டு என் பக்கத்துல உக்கார்ந்த ஆள் என்ன படிக்கிறேன்னு பாக்குற மாதிரி என்னை உரசிட்டு உட்கார்ந்தவன் ஒரு கட்டத்துல புக்கை திருப்பும் சாக்கில் தப்பா இடிச்சான்.. பதறி போன நான் என்ன செய்யறதுன்னு புரியாமல் உடனே வெளியில போயிட்டேன்.."
"முதல்ல என்ன பண்றதுன்னு புரியாம நின்னுட்டு இருந்த நான் அவன் என்னை தேடி வருவது தெரிஞ்சதும் பக்கத்து வீட்டுக்கு போயிட்டேன் ஆனா பக்கத்து வீட்ல இருந்தப்பவும் என்னால சகஜமா இருக்க முடியலை கண்ணுல இருந்து தண்ணி கொட்டிட்டே இருந்தது..."
" என்னாச்சுன்னு எல்லாரும் கேட்டுட்டே இருந்தாங்க, எனக்கு அதை பற்றி சொல்ல பயம் அதனால வயிறு வலின்னு ஏதேதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிச்சேன்.."
" ஆனா அங்க மட்டும் எவ்ளோ நேரம் இருந்திட முடியும்? திரும்ப வீட்டுக்கு வந்த போது பக்கத்து வீட்டு அக்காவையும் கூட்டிட்டு வந்த நான் என்னோட பேக் எடுத்துக்கிட்டு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லி பஸ் ஸ்டாப்புக்கு போயிட்டேன்.."
"எதுக்கு?"
"இத்தனை நாள் இல்லாத விதமா அந்த ஆள் இப்படி நடந்துக்கவும் எனக்கு அதுக்கு மேல அங்கிருக்க ரொம்ப பயமா இருந்தது. நான் ஊர்ல இருந்தா தானே வீட்டுக்கு வரணும்னு சொல்லுவாங்க?!"
"எங்கேயாவது கண் காணாத தூரத்துக்கு போயிட்டா இவனுடைய தொடுகை இல்லாமல் இருக்கலாமே என்று நினைத்தேன்.. அதனால எதை பற்றியும் யோசிக்காமல் சென்னை போற பஸ்ஸில் ஏறி உக்காந்துட்டேன்..
"சென்னையில யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"
"இல்ல, எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் ஊர்ல இருக்க கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணி கிளம்பிட்டேன்..."
"உன் அம்மா வர வரைக்கும் பொறுமையா இருந்திருக்கலாமே நயனி.. இல்லை தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்டிருக்கலாம் அதை விட்டுட்டு இப்படி ஒரு முடிவு தப்புன்னு உனக்கு தோணலையா?"
"இல்லை அபய் முதல்ல எதுவும் தெரியலை ஆனா பாதி தூரம் போகும் போது தான் நாம் எடுத்த முடிவு தப்புன்னு தோணுச்சு ஆனாலும் அந்த வண்டி அதுக்கப்புறம் இடையில எங்கேயும் நிக்காது இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னை போயிடும்னு சொன்னாங்க அதனால அமைதியா உட்கார்ந்து இருந்தேன்..."
"சென்னைல நான் போய் இறங்கும்போது மிட் நைட் ஆகிடுச்சு.. அப்போதான் நானே எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துடுச்சு.." என்றவளின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவ முகத்திலும் வியர்வை முத்துக்கள் அரும்பியது.
Last edited: