• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 22

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

"ஏன் உனக்கு இப்படி வியர்க்குது? ரிலாக்ஸ் நயனி.. அங்க தானே நீ என்னை சந்திச்சதா சொன்ன?" என்றதற்கு ஆம் என்ற தலையசைப்பு அவளிடம்.​

"அப்போ சென்னையில அப்படி என்ன நடந்தது? சொல்லு.."​

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அன்னைக்கு சென்னை போய் சேர மிட்நைட் ஆகிடுச்சு... சென்னை நெருங்க நெருங்க தான் அடுத்து என்ன செய்யப்போறோம் என்ற பயம் எனக்கு அதிகமாச்சு.. அதேநேரம் பஸ்ல இருந்த எல்லாரும் கீழ இறங்கிட்டாங்க எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.."​

"கடைசியா இறங்க இருந்தவர் வரைக்கும் பார்த்துட்டு இருந்தேன்.. வெளியே ஆங்காங்கே பஸ் நின்னுட்டு இருந்தது கொஞ்சம் வெளிச்சமும் இருந்தது ஆனா இவங்க நிறுத்தியிருந்த இடத்துல அதிக வெளிச்சம் இல்லை அதோடு மற்ற பஸ்க்கும் இந்த பஸ்க்கும் இடையில ரொம்ப தூரமிருந்தது.."​

"எனக்கு இறங்கி போகவும் பயமா இருந்ததனால இதே பஸ்ல வீட்டுக்கு திரும்ப போயிடலாம்னு முடிவு பண்ணேன்... ஆனா இந்த பஸ் திரும்ப எப்போ கிளம்பும் என்று தெரியலைஅப்போ தான் அந்த கண்டக்டர் என்கிட்டே வந்தான்.."​

"என்ன பாப்பா இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க இறங்கலையான்னு கேட்டவன் ரொம்ப நேரமா என்னை வாட்ச் பண்ணி இருக்கான் என்று அப்போ எனக்கு தெரியலை ஆனா ரொம்ப தன்மையா பேசினான்.. "​

"நான் எனக்கு திரும்ப ஊருக்கு போகணும்னு சொல்லவும்.. ஏன் தனியா வந்த எதுக்கு இப்போ திரும்ப போகணும்னு கேட்டாங்க, நானும் எனக்கு அவங்களை விட்டா ஹெல்ப் பண்ண வேற யாரு இருக்கான்னு நடந்ததை சொல்லவும் இங்க உட்காராத பாப்பா ரொம்ப குளிரும் கடைசி சீட்ல போய் உட்காரு நான் வரேன்னு சொல்லி போயிட்டான்.."​

"திரும்ப அந்த டிரைவரோடு வந்தவன் எங்க பஸ் காலையில் தான் கிளம்பும் அதோடு இந்நேரத்துக்கு வேற எந்த பஸ்ஸும் இல்லம்மா விடியும் போது தான் போக முடியும்" என்று சொன்னவங்க ரெண்டு பேருக்கும் எப்படியும் 45 50 வயசு இருக்கும்..."​

"கிட்டத்தட்ட அப்பா வயசு என்பதால் எனக்கு சந்தேகம் வரலை.. அதோடு ரொம்ப அன்பா பேசினாங்க எனக்காக அந்நேரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்தவங்க.."​

"முன்ன பின்ன தெரியாதவங்க கொடுத்ததை எதுக்கு சாப்பிட்ட?"​

"இல்லை அவங்களும் சாப்பிடலைன்னு சொல்லி அங்கிருந்த ஹோட்டல்ல மூணு பேருக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்ததுல எனக்கு சந்தேகம் வரலை அதோடு எனக்கு அப்போ சரியான பசி அதனால் அவங்களோடு சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டேன்.."​

"அடுத்து நீ படுத்துக்கோம்மா காலையில் எழுப்புறோம் என்று சொல்லி எல்லா ஜன்னல் கதவையும் அடைச்சாங்க.. கேட்டதுக்கு ரொம்ப குளிரும்னு சொன்னதால அவங்களோட வார்த்தையை நம்பி பின்னாடி படுத்துகிட்டேன், ஆனா..." என்றவளின் குரல் உடைய கண்களில் நீர் ததும்பியது.​

"ஆனா.. என்ன நயனி சொல்லு" என்றவனுக்கு அவளுக்கு என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பு..​

"கொஞ்ச நேரத்திலேயே பஸ் எடுத்து ஒதுக்கு புறமான இடத்துக்கு கொண்டு போனவங்க கத்தி முனையில என்னை கீழ படுக்க சொல்லி பலவந்தப்படுத்த ஆரம்பிச்சாங்க.. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை வெளியே பார்க்கவும் முடியாத சூழல் எங்கே கத்தினா என்னை சாகடிச்சுடுவாங்களோன்னு பயம்.."​

"வாணலிக்கு பாய்ந்து அடுப்புல விழுந்த கதையாகி போச்சு.. வீட்ல இருந்த மிருகத்துக்கு பயந்து ஓடி ஒளிய நினைச்சா இப்போ ஒன்னுக்கு ரெண்டு பேர் கிட்ட மாட்டிகிட்டேன்.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்கன்னு கெஞ்சவும் என் வாயில டேப் போட்டு துணியால கையையும் கட்டிட்டாங்க..." என்றவளுக்கு அன்றைய நாளின் தாக்கத்தை இன்னுமே கடக்க முடியாதளவு வலி பரவி நெஞ்சை அழுத்தியது.​

"ஆளுக்கு ஒருபக்கம் உட்கார்ந்துட்டு என்னை தப்பா தொட ஆரம்பிச்சாங்க ஆனா அப்பதான் அங்க நீங்க வந்தீங்க, என்னை பொறுத்த வரையில் கடவுளா என்னை காப்பற்ற உங்களை அனுப்பி வச்சதா தான் நினைச்சேன்.."​

"பஸ் கதவை லாக் பண்ணி இருந்ததால வெளியே இருந்து தட்டுற சத்தத்துல அதுல ஒருத்தன் மட்டும் இறங்கி போனான். இன்னொருத்தன் கிட்ட இருந்து நான் திமிர ஆரம்பிக்கவும் கத்தியை எடுத்து என் கழுத்துல வச்சு அசையக்கூடாதுன்னு சொல்லிட்டான்.."​

"எனக்கு அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கன்னு தெரியலை அப்போ தான் வெளியே இருந்தவன் கிட்ட இருந்து இவனுக்கு போன் வந்தது.. என்ன சொன்னானோ தெரியலை உடனே என் கட்டெல்லாம் கழட்டி விட்டுட்டு இப்போ சிலர் உள்ள வருவாங்க அவங்க திரும்பி போற வரைக்கும் சத்தம் போடாம இங்கேயே இருக்கணும்னு கடைசி சீட்டுக்கு கீழ என்னை உட்கார வச்சுட்டான்.."​

"எனக்கு என்ன நடக்குதுன்னு புரியலை ஆனா அவன் அப்படி சொல்லிட்டு போன சில நிமிஷத்துல நீங்களும் இன்னும் ரெண்டு பெரும் பஸ் உள்ள வந்தீங்க?"​

"எனக்கு ஞாபகம் இருக்கு நயனி. நான் சுதர்ஷன் அப்புறம் விவேக் மூணு பேரும் காலேஜ் லெவல் டோர்னமென்ட்ல பார்ட்டிசிபேட் பண்றதுக்காக சென்னைக்கு நீ சொல்ற அதே பஸ் தான் வந்தோம். ஆனா சுதர்ஷன் ஸ்போர்ட்ஸ் பேக்கை மறந்துட்டு விட்டுட்டு வந்துட்டான் நாங்க ரூமுக்கு போன பிறகு தான் தெரிஞ்சது.. உடனே அந்த பஸ்ஸை தேடி வந்தோம்.."​

"அப்போ அங்கிருந்த பொண்ணு நீதானா?!"​

"ஆமா! அவன் என்னை வெளியே வரக்கூடாதுன்னு சொன்னான் ஆனா எனக்கு அவன் சொல் பேச்சை கேட்கிறது எனக்கு தான் ஆபத்துன்னு புரியவும் உடனே சீட்ல இருந்து எழுந்து காப்பாத்துங்கன்னு சொன்னேன்.. பேக் தேடிட்டு இருந்த நீங்க எல்லாரும் ஒன்னும் புரியாம என்னை பார்த்தீங்க..."​

"ஆனா நான் இப்படி செய்வேன்னு எதிர்பார்க்காத அவங்க ரெண்டு பேருக்கும் தூக்கி வாரி போட்டுடுச்சு உங்ககிட்ட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு கண்ணாலயே என்னை மிரட்டினாங்க.."​

"யார் இந்த பொண்ணுன்னு அவங்க கிட்ட கேட்ட நீங்க, உனக்கு தெரிஞ்சவங்களா" என்று என்கிட்டயும் கேட்டீங்க..,​

"அப்போ நான் அவங்க பண்ணின எதையும் சொல்லாம இல்லை எனக்கு தெரியாதுன்னு மட்டும் சொன்னேன்.."​

"ஏன் நயனி அப்போவே அந்த அய்யோக்கியங்களை காட்டி கொடுத்திருக்கலாமே.."​

"செய்திருக்கலாம் ஆனா அப்போ எனக்கிருந்த பயத்துலயும் பதட்டத்துலயும் முதல்ல அங்கிருந்து போனா போதும் என்று தான் தோனுச்சு..."​

"ஒருவேளை அன்னைக்கு நாங்க இல்லாம வேற எவனாவது இவங்களை விட மோசமானவங்க வந்திருந்தா என்ன செய்திருப்ப.."​

"நீங்களும் நானும் ஒரே பஸ்ல தான் திருப்பூர்ல இருந்து சென்னை வரை வந்திருக்கோம் ஆனா எனக்கு அதுகூட தெரியாது.. சென்னை வந்தது தப்போ என்ன செய்யறதுன்னு புரியமா இறங்கி போயிட்டு இருந்த எல்லாரையும் பார்த்தேனே தவிர எதுவுமே என் கருத்துல பதியலை..."​

"ஒருவேளை உங்களை நான் அப்போவே பார்த்திருந்தா ஹெல்ப் கேட்டிருப்பேனோ என்னவோ ஆனா அன்னைக்கு நிலையில் நீங்க இல்லாம வேற யார் வந்திருந்தாலும் அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு ஆராயும் அவகாசம் கூட எனக்கு இல்லாம போனது.. அதனால் எனக்கு திருப்பூர் போகணும் இந்நேரத்துக்கு பஸ் இல்லைன்னு சொன்னங்கன்னு மட்டும் சொன்னேன்.."​

"அப்போ தான் என்னை பார்த்த நீங்க ஏன் கண்ணு சிவந்திருக்கு முகம் ஒருமாதிரி இருக்குன்னு கேட்டுட்டு.. ஏன் இந்த பொண்ணை இங்க வச்சிருக்கீங்கன்னு டிரைவர் கண்டக்ட்டரை கேட்டவர் அவங்க சரியா பதில் சொல்லாமல் போகவும், எங்க ஊர் பொண்ணு நான் கூட்டிட்டு போறேன் சொன்னீங்க.."​

"அப்போதான் எனக்கு என் உயிரே திரும்ப கிடைச்சதுன்னு சொல்லணும். ஆனாலும் அவனுங்க வயசு பொண்ணை பசங்க கூட எப்படி அனுப்பறது?! எங்க வீட்ல தங்க வைக்கிறோம்னு சொல்லவும் நீங்க அதுக்கு ஒத்துக்கலை.. நானும் உங்களோடு வரேன்னு சொல்லவும் அவனுங்க திரும்ப என்னை மிரட்ட பார்த்தாங்க.."​

"ஆனா நான் அவங்க பக்கமே திரும்பாமல் என்னை கூட்டிட்டு போயிடுங்கன்னு சொன்னேன்.. நீங்களும் சூழல் தப்பா இருக்குன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கிட்ட என்னை கூட்டிட்டு போறதை பற்றி சொல்லி முடியாதுன்னு சொன்னா போலீசை கூப்பிடுறேன் பேசிக்கலாம்னு சொல்லிட்டீங்க.."​

"அதோடு நிற்காம நீங்க உடனே போன் எடுத்ததை பார்த்ததும் பயந்தவங்க நீ கூட்டிட்டு போப்பா என்று சொல்லிட்டாங்க.."​

"வெளியில வந்ததும் சுதர்ஷன் என்னை பற்றி விசாரிச்சுட்டு போலீஸ்ல கொண்டு போய் விட்டுடலாம்னு சொன்னார்.. உங்க இன்னொரு ஃபிரெண்ட் பஸ்ல அனுப்பி விட்டுடலாம்ன்னு சொன்னார்.. ஆனா உங்களுக்கு இது இரண்டிலும் உடன்பாடு இல்லை..."​

"இந்த பெண்ணை நம்மோடு எப்படிடா ஸ்டே பண்ண வைக்க முடியும்ன்னு சுதர்ஷன் கேட்கவும், "இவளை பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடலாம்னு சொன்னீங்க.. நாளைக்கு மேட்ச் வச்சுட்டு எப்படின்னு திரும்ப உங்களுக்குள்ள பேசிக்கிட்டீங்க.."​

"நீங்க தான் மெயின் ப்ளேயர் என்பதால் சப்ஸ்டிட்யூட் பண்ண வந்த இன்னொருத்தரோடு என்னை பத்திரமா பஸ்ல அனுப்பி வச்சீங்க.."​

"ஹ்ம்ம் நியாபகமிருக்கு. விவேக் உன்னை ஊருக்கு கூட்டிட்டு போனப்போ வீட்டு அட்ரெஸ் கேட்டதுக்கு கொடுக்காமல் உன்னை ஹாஸ்டல்ல விட சொன்னியாமே ஏன்?"​

"எனக்கு திரும்ப வீட்டுக்கு போக விருப்பம் இல்லை. அதோடு அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்க மாட்டங்க..."​

"ஆனா நீ இல்லைன்னு உன்னை தேடி இருப்பாங்களே?!"​

"ஆமா தேடினாங்க, அந்த ஆள் கிட்ட கேட்டதுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லியிருக்கான். என் அம்மா என்னை தேடாத இடமில்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு போற முடிவோடு இருந்தவங்க காலையில ஹாஸ்டல்ல இன்னொருமுறை பார்த்துட்டு போகலாம்னு இருந்திருக்காங்க.."​

"ஆனா அதுக்குள்ள நான் ஹாஸ்டல் போயிட்டேன், ஏன் சொல்லாம கொள்ளாம போன நைட்டெல்லாம் எங்கிருந்தன்னு கேட்டு அழுதவங்க நான் சொல்லலைனாலும் அவன் தான் காரணம்னு கண்டுபிடிச்சுட்டாங்க.."​

"நீ என்ன சொன்ன?!"​

"ஒத்துக்கிட்டேன்.. அதுல அவங்க அழுகை நிற்கவே இல்லை உடனே வீட்டுக்கு போய் அவன் சட்டையை பிடிச்சு கேட்டிருக்காங்க ஆனா அவன் அதுக்கும் அம்மாவை அடிச்சு உதைச்சு அவங்க கையை உடைச்சு விட்டான்..."​

"ராஸ்கல்!! அவன் ஏன் நயனி சும்மா விட்ட போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தள்ள வேண்டியது தானே?!"​

"சொல்றது ஈஸி அபய் பட் பிராக்டிகலா ரொம்ப கஷ்டம். அதுவும் என் தம்பி தங்கச்சிங்க இருக்கிறப்போ.. இதனால இன்னுமே மனக்கசப்பும் குழப்பமும் தான் அதிகரிக்கும்.."​

"அதுக்காக அவனை..." என்றவனை இடையிட்ட நயனி,​

"ஒருநிமிஷம் அவனை யார் சும்மா விட்டான்னு நினைக்கறீங்க?!" என்று கேள்வியாக பார்க்க அபய்க்கு புரியவில்லை.​

"அவனுக்கான தண்டனையை நான் கொடுத்துட்டேன்..."​

"நிஜமாவா எப்படி?"​

"அன்னைக்கு இன்சிடென்ட்க்கு அப்புறம் கொஞ்சம் அடக்கி வாசிச்சவன் நான் பிளஸ் டூ முடிச்சு காலேஜ் சேர இருந்த சமயத்துல திரும்ப ஒருமுறை வேலையை காண்பிச்சான்.."​

"நீ தனியா இருந்த போதா?! இவ்ளோ நடந்தும் உன் அம்மா எப்படி தனியா விட்டாங்க?"​

"அவங்க விடலை நானே தான் அன்னைக்கு தனியா இருக்க முடிவு செய்து அவங்களை அனுப்பி வச்சேன்.."​

"வாட்?!"​

"ஆமா அவங்க கிளம்பிய கொஞ்ச நேரத்துலையே கதவை சாத்திட்டு அந்த நாய் என்னை தேடி வந்துச்சு. அதுக்கு தயாரா நானும் கிட்சன்ல காத்திருந்தேன்.. ஏதோ பேச்சு கொடுத்துட்டே உள்ள வந்தவன் என்மேல கை வைச்ச மறுநிமிஷமே கொதிக்கிற தண்ணியை எடுத்து அவன் அடிவயித்துலயே ஊத்தினேன்.." என்றதில் அபய் திகைத்து போனான்.​

"என்ன சொல்ற? நிஜமாவா?!"​

"ஆமா. இதை அவன் சத்தியமா என்கிட்ட இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டான். அன்னைக்கு அந்த நாயால வீட்டை விட்டு போய் நான் பட்ட கஷ்டம் எனக்கு சொல்லி கொடுத்த பாடத்துல இருந்து அவன் தொல்லைக்கான தீர்வையும் கண்டுபிடிச்சேன்..."​

"துடிதுடிச்சு போய் அப்படியே கீழ உட்கார்ந்தவன் கதறல் அரை மணி நேரத்துக்கும் மேல நீடிச்சது..."​

"நீ என்ன பண்ணின? ஐ மீன் அவன் உன்னை எதுவும் செய்துடலையே.."​

"நான் அவனுக்கு கொடுத்த வலியை மீறி அவனால என்னை என்ன செய்துட முடியும்?! அவனால எந்திரிச்சு கூட நிற்க முடியலை.. காப்பாத்த சொல்லி என் காலுல விழுந்தான் ஆனா நான் அசராம அவனை பார்த்துட்டு இருந்தேன்.."​

"இதை நீ டென்த்ல இருந்தப்போவே செய்திருக்கலாமே நயனி?!"​

"ஆனா எனக்கு அப்போ அது தெரியலை. தெரியலை என்பதை விட அப்போ தைரியம் இல்லைன்னு தான் சொல்லணும். அப்புறம் அக்கம் பக்கம் இருக்கிறவங்க சத்தம் கேட்டு வரவும் நானும் பாத்ரூம்ல இருந்தேன் அப்போதான் வந்தேன்னு சொல்லி அவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன்.."​

"எப்படி ஆச்சுன்னு அங்கே கேட்ட போதும் தண்ணீர் சுட வச்சவன் கை தவறி தன் மேல தானே ஊத்திக்கிட்டான்னு நான் சொன்னதை ஆமோதிப்பதை தவிர அவனுக்கு வேற வழியில்லை..."​

"திருடனுக்கு தேள் கொட்டின நிலை, இல்லையா?!"​

"ஆமா. வீடு திரும்பின அம்மாவுக்கும் நான் ஏன் தனியா இருந்தேன் என்ற காரணம் புரிஞ்சுடுச்சு.. என்னை விட்டுட்டு போனவங்களுக்கு வழி எல்லாம் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சாம்.. அவனை பார்த்தப்போ என் அம்மா முகத்துல என்னைக்கும் இல்லாத நிம்மதியை அன்னைக்கு நான் பார்த்தேன்.."​

"கிரேட் ஜாப் நயனி!! வேறென்ன சொல்லன்னு தெரியல. இதுக்கு அப்புறம் அவனுக்கு உன்னை திரும்பி பார்க்கிற தைரியம் கூட இருந்திருக்காதே.."​

"ஆமா, ஆனா சமயம் கிடைக்கிறப்போ மத்தவங்க எதிரில் 'அப்பா' என்ற போர்வையில் என்னை திட்டுவதை, அடிப்பதை வாடிக்கையா வச்சிருந்தான். ஆனா நான் தனியா இருக்கிற இடத்துல அவன் இருக்க மாட்டான் அந்த பயம் இப்போ வரை இருக்கு.."​

"சரி நம்ம கதைக்கு வருவோம். நீ ரெண்டு முறை என்னை பார்த்ததா சொல்லி இருந்தியே இன்னொரு முறை எங்கே எப்போ?" என்றான்.​

 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
அடபாவி அவள் அவளோட கஷ்டத்தை சொல்லீட்டு இருக்கா ஆனால் உனக்கு உன் கதைதான் முக்கியமா??
 

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
நயனி சூப்பர் 😍 அவனுக்கெல்லாம் இது கம்மி... 🤬