• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 6

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் – 6​

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் உள்ளே அலங்காரத்தோடு நயனிகா அமர்ந்திருப்பதையும் கண்டு கொதித்து போனான்.​

“உன்னை யாருடி இங்க வர சொன்னா?” என்று வேகமாக அவளை நெருங்க சட்டென எழுந்து நின்றாள்.​

“யூ!! உன் மூஞ்சியை பார்க்க கூட பிடிக்கலை முதல்ல வெளியே போடி” என்று இறைந்தான்.​

“அபய் என்ன பேசுறீங்க? நான் உங்க வைஃப் !!”​

“என் கையால தாலி வாங்கிட்டா நீ வைஃப் ஆகிட முடியுமா ? எங்கப்பாவோட கௌரவத்தை காப்பாற்ற வந்தவளுக்கு என்னைக்குமே அந்த இடம் கிடையாது..”​

“எனக்கு வைஃப் என்றால் அது என் சஞ்சு மட்டும்தான்”​

“ஸ்டாப் இட் அபய்!! எத்தனை முறை தான் நான் உங்களுக்கு சொல்றது சஞ்சு உங்களோட இறந்த காலம் உங்களை விட அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அவளுக்கு ஒன்னு தேவைன்னு முடிவு பண்ணிட்டா என்றால் அதுல இருந்து என்னைக்குமே பின்வாங்க மாட்டா ..”​

“எஸ் யூ ஆர் கரெக்ட் சஞ்சு இந்த தேதி வர வரலைன்னா அவ அந்த நிலைமையில் இல்லைன்னு தானே அர்த்தம்?!”​

“ஷ்ஷோ அபய் நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க?! அதுதான் மாமாவே அவளை எதுவும் செய்யலைன்னு சொல்லிட்டாரே இன்னும் ஏன் சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க?!” என்றவளை ஆவேசத்தோடு பார்த்திருந்தான்.​

பின்னே! அபய் ஸ்ரீவத்சனின் ஆறு மாத தேடல் தமிழகத்தின் ஒரு பகுதியை விட்டு வைக்காமல் அத்தனையையும் அலசி இருந்தது. தனக்கு இருந்த தொடர்புகள் காவல்துறையின் நட்புகள் என்று அனைவரின் உதவியையும் நாடியவன் சோஷியல் மீடியாவிலும் சஞ்சனா புகைப்படத்தை பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தான்.​

ஆனால் எந்த வழியிலும் அவளை சென்று சேர முடியாத வலி மனம் எங்கும் நிறைந்திருக்க அதை மேலும் அதிகப்படுத்துவது போல தான் இருந்தது சக்கரவர்த்தியின் திருமண பேச்சு வார்த்தை.​

தான் மறுக்க முடியாத நிலையில் நிறுத்தி பெண் பார்க்க அழைத்ததில் அவனுக்கு முழுதாக தந்தையை வெறுத்துப் போனது.​

“அதுதான் ஆறு மாசம் தேடிட்டியே?! உன்னை உண்மையா விரும்பியிருந்தா எந்த நிலமையில இருந்தாலும் இந்நேரத்துக்கு தேடி வந்திருக்கணும் வராத போதே தெரியலையா? இனியும் உன்னோட தாளத்துக்கு நான் ஆட முடியாது அபய்” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.​

ஆனால் பெண் பார்க்க அவர் அழைத்து செல்வது நயனிகாவின் வீடு என்று தெரியாமலே அங்கு சென்றவனுக்கு மணப்பெண்ணாக அவளைப் பார்த்ததில் அத்தனை அதிர்ச்சி. ஆனால் அவளிடம் அப்படி எதுவும் தென்படவில்லை.., இந்த நாளுக்காக காத்திருந்தது போல தான் இருந்தது அவள் நடவடிக்கைகள்.​

கொஞ்சம் கூட சஞ்சனாவுக்கான வேதனை அவளிடம் தென்படவில்லை.​

“அப்படி அவளுக்கு என்ன தான் தேவை? தன்னை விட்டால் வேறு மாப்பிள்ளையா கிடைக்காது?!” என்ற எரிச்சலும் ஆற்றாமையும் அதிகரித்தது.​

ஆனாலும் பொறுமையாகவே அவளிடம் பேசினான். "எங்க காதலை பற்றி உன்னை விட வேற யாருக்கும் நல்லா தெரியாது நயனி. நான் இங்க வந்தது எங்கப்பா கட்டாயத்துக்காக தான். உன்னால முடியாதுன்னு சொல்லு" என்று அவன் அத்தனை தூரம் தன்மையாக எடுத்து சொல்லி கேட்காதவளிடம் தன் கோபத்தை காட்டிய போதும் நயனிகா அசரவில்லை.​

இப்போது தன் தாலியை சுமந்து கொண்டு தன் அறையிலேயே இருப்பதை கண்டவனின் கோபம் பல மடங்கு பெருகியது.​

“நான் உங்க வைஃப்! இனி என் கூட தான் உங்களுடைய லைஃப் அதை மறந்துடாதீங்க..” என்றவளின் பேச்சு அபய் கொடுத்த அறையில் நின்றுபோனது.​

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்! இன்னொரு முறை லைஃப் வைஃப்னு ஏதாவது பேசின உனக்கு பேச வாய் இருக்காது முதல்ல வெளியே போடி உன் பேச்சு எதையும் கேட்க நான் தயாராகவே இல்லை”​

“எங்க போக சொல்றீங்க?! இதுதான் என்னோட ரூம்!! இன்னைக்கு...” என்றவளே அபய் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.​

“இன்னிக்கு என்ன? ஓ! கல்யாணம் ஆயிடுச்சு ஸோ மேடம் ஃபர்ஸ்ட் நைட் செலிபரேட் பண்ண வந்திருக்கீங்களா?!” என்றவன் அப்போது தான் தலை முதல் கால் வரையிலான அவள் அலங்காரத்தை கவனித்தான்.​

“ச்சை உன் மேல ரொம்பவே மரியாதை இருந்ததுடி ஆனா இப்போதான் புரியுது. ஹவ் சீப் யூ ஆர்!!”​

“மைன்ட் யுவர் டங் அபய்!! நீங்க எல்லை மீறி போறீங்க”​

“ஹே கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் என்னை செட்யூஸ் பண்ண இத்தனை அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்க உனக்கெல்லாம் என்னடி மரியாதை?”​

“அபய்!!”​

“என்னை என்ன உன்னை மாதிரி கீழ்த்தரமானவன்னு நினைச்சியா?! என் சஞ்சுவை தவிர வேற யார் மேலயும் என் சுண்டு விரல் கூட படாது...”​

“அபய் ஹாவ் யூ லாஸ்ட் யுவர் மைன்ட்? இல்லாத ஒருத்திக்காக ஏன் நீங்களும் கஷ்டபட்டு என்னையும் கஷ்டபடுத்துறீங்க” என்று பொறுக்க முடியாது நயனிகா வெடித்துவிட்டாள்.​

“என்ன சொன்ன, இல்லாத ஒருத்தியா?! வாட் டூ யூ மீன்?” என்றவனின் கேள்வியிலேயே தன் பேச்சை உணர்ந்தவள்,​

“இதோ பாருங்க இப்போ வரை அவ எங்க இருக்கான்னு நமக்கு தெரியாது அப்படி இருக்கப்போ இங்கே இல்லாதவளை கொண்டு வந்து நம்மோட ரிலேஷன்ஷிப்பை ஸ்பாயில் பண்ணாதீங்கன்னு தான் சொல்றேன்”​

“ரிலேஷன்ஷிப்பா!! இதோபார் கட்டாயப்படுத்தி என் கையில் இருந்து நீ தாலிய வாங்கி இருக்கலாம் ஆனா என்னைக்கு இருந்தாலும் உன்னால தாய் ஆக முடியாது அதுக்கு நான் விடவும் மாட்டேன்..” என்று சீறினான்.​

“காட்!! அபய் ப்ளீஸ் கொஞ்சம் சஞ்சுவை தள்ளி வச்சுட்டு நீங்க என்ன பண்றீங்க பேசுறீங்கன்னு பாருங்க உங்களோட தப்பு உங்களுக்கே புரியும்” என்று நயனிகா அவன் கரங்களை பிடிக்க அதை உதறியவன்,​

“ஸ்டே அவே ஃப்ரம் மீ!! தாலி கட்டிக்கிட்டது மட்டும் இல்லாம குழந்தையை பெத்துகிட்டு இந்த வீட்டில் உரிமையோடு வலம் வரலாம்னு நினைச்சா அதுக்கு நான் விட மாட்டேன்டி..” என்றதில் சோர்ந்து போனாள் நயனிகா.​

“அபய் கண்ட்ரோல் யுவர்செல்ஃப் ஏன் இப்படி கத்துறீங்க?”​

“இத பாருங்க உங்களோடது கூட்டு குடும்பம். உங்க அண்ணன் அண்ணி மட்டுமல்ல உங்க மாமா குடும்பமே இங்க தான் இருக்காங்க நமக்குள்ள இருக்கிற பிரச்சினை இந்த நாலு சுவத்துக்குள்ள முடியட்டும்..”​

“என்னை அவமான படுத்துறதா நினைச்சு செய்யற உங்களுக்கு இதனால உங்களுக்கும்தான் அவமானம்னு ஏன் புரியல?”​

“ஏய் என்னை பத்தி உனக்கு என்னடி கவலை?! இதெல்லாம் நீ மணமேடையில் வந்து உட்காரதற்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் இப்போ நான் ஒன்னும் பண்ண முடியாது, கெட் அவுட்” என்றான் இன்னும் சப்தமாக.​

அவன் சத்தம் கேட்டு அப்போது தான் தன் அறைக்கு சென்று கொண்டிருந்த வினோதனும் ராகவியும் ஒரு கணம் தயங்கி நின்றனர்.​

வினோதன் அபய் மற்றும் சக்கரவர்த்தி மூவரின் அறையும் மேல் தளத்தில் அமைந்திருக்கும்.​

முரளிதரன் இளங்கொடி குடும்பத்தினர் கீழ் தளத்தில் இருக்கும் அறைகளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.​

இன்றைய அலைச்சலில் சோர்ந்து போயிருந்த சக்கரவர்த்தி இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மாத்திரையை எடுத்துக் கொண்டு உறங்கி விட்டிருந்தார்.​

ஆனால் நிர்மலாவிற்கு மகனின் வாழ்க்கை இப்படி ஆகியதில் சுத்தமாக உறக்கம் பிடிபடவில்லை.​

அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தவர் எண்ணங்கள் மகனை சுற்றி தான் இருந்தது இப்போது அவன் சத்தம் கேட்டு வெளியில் வர அபய் நயனிகாவின் கையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து விட்டிருந்தான்.​

“என்னப்பா பண்ற?” என்று பதறிக்கொண்டு நிர்மலா ஓடிவர வினோதனும் ராகவியும் அங்கே வந்து சேர்ந்தனர்.​

“ம்மா இவ இனி எப்பவும் என் ரூமுக்கு உள்ள வரக்கூடாது” என்றிட,​

“அப்படி சொல்லு மாப்பிள்ளை” என்றபடி வந்தார் முரளிதரன்.​

“என் மாப்பிள்ளை மனசை கொன்னு இந்த கல்யாணம் நடத்தினது இல்லாம யார் இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணது?”​

“அபய் எதுவா இருந்தாலும் நம்ம ரூம்ல போய் பேசிக்கலாம் ப்ளீஸ் இங்கிருக்க வேண்டாம் வாங்க” என்றழைத்தாள்.​

ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் இறுக்கத்தோடு நின்றிருந்தான்.​

“அபய் உன் கோபம் புரியுது, ஆனா இது முறையில்லை உள்ள போடா” என்றார் வினோதன்.​

“என் ரூமை டெக்கரேட் பண்ணது யாரு?”​

“ஏன்? நான் தான்!”​

“என்ன மாப்பிள்ளை இது வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி பண்ணி இருக்கீங்க” என்று மீண்டும் முரளிதரன் சொல்ல,​

“மாமா நீங்க கொஞ்சம் அவனை ஏத்திவிடாம இருந்தாலே போதும் அவன் சரியாகிடுவான்” என்று பல்லை கடித்தான் வினோதன்.​

"யார் ஏத்தி விடுறா?! நியாயத்தை பேசினா அதுக்கு இப்படி ஒரு பழியா? என் மாப்பிள்ளை மனசை புரிஞ்சுக்கவும் யாரும்மில்லை அவனுக்காக யோசிக்கவும் இந்த வீட்ல யாருமே இல்லை..."​

"நீ போ மாப்பிள்ளை. போய் தூங்கு" என்றிட அபய் தன் அறைக்கு சென்றான். அவனை பின்தொடர்ந்த நயனியை சொடக்கிட்டு நிறுத்திய முரளிதரன்,​

"உனக்கெல்லாம் கொஞ்சமும் சூடு சொரணை கிடையாதா?!" என்றார் எள்ளலாக.​

"அதை கேட்க நீங்க யார்?" என்று அசராமல் அவள் பார்க்க திகைத்து போனார் முரளிதரன்.​

"ஏய் யாரை என்ன பேசற?!" என்று அவர் எகிறிக்கொண்டு வரவும் அவருக்கு முன்பாக வேக எட்டு வைத்து முரளியின் முன்னே சென்றவள்,​

"நீங்க யார் கிட்ட எப்படி பேசணும்னு முதல்ல தெரிஞ்சுட்டு வந்து அப்புறம் என்னை கேள்வி கேளுங்க" என்று சொல்ல நிர்மலா இருவருக்கும் இடையில் வந்தார்.​

"பார்த்தியாக்கா, இன்னைக்கு வந்தவ என்னை என்ன பேசறான்னு"​

"வாயை மூடு! உன் பொண்ணு மாதிரி அவ ஆனா நீயா போய் உன் மரியாதையை கெடுத்துகிட்ட. புருஷன் பொண்டாட்டி பிரச்சனையில நீ தலையிடாத அவங்களே பார்த்துப்பாங்க" என்றவர், "நீ உள்ள போ மா" என்றார்.​

அபய்யின் அறைக்கதவை திறந்தவள் கதவை தாளிட்டு திரும்பினாள்.​

மனதில் கொண்டிருந்த அலைப்புறுதலோடு கண்கள் மீது கையை வைத்து படுத்திருந்தவன் மீண்டும் நயனி உள்ளே வந்ததை கண்டு கோபத்தோடு எழுந்து கொள்ளவும், "ஹலோ எதுக்கு என்னை பார்த்து பயப்படறீங்க? உட்காருங்க" என்றபடி அவனை நெருங்கினாள்.​

"பயமா நானா?! இன் யுவர் ட்ரீம்ஸ்" என்றான் கடுப்போடு..​

"பயமில்லைன்னா என்னோடு ஒரே ரூம்ல இருக்க மாட்டேன்னு நீங்க சொல்றதுக்கு வேற என்ன அர்த்தம்?"​

"நயனி நீ நல்ல பேச்சாளர்னு எனக்கு தெரியும் ஆனா உன் பேச்சு திறமையை இங்கே வச்சுக்காத"​

"லுக் அபய் நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் உங்களை செட்யூஸ் பண்ண நினைக்கலை அதேநேரம் உங்க மேல பாயுற எண்ணமும் எனக்கு இல்லை" என்றதில் அவன் அதிர்ந்து நிற்க,​

"என்ன புரியலையா?! உங்க கற்புக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் இந்த ரூம்ல என்னோடு நீங்க சேஃப்பா இருக்கலாம் உங்க சேஃப்ட்டிக்கு நான் பொறுப்பு!!"​

"நயனி!!!" என்று அபய் அடிக்குரலில் சீற,​

"இப்போ நீங்க தான் சொல்லணும்..." என்றாள் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு.​

"என்ன சொல்லணும்?"​

"உங்களை நம்பி இந்த ரூம்ல இருக்க போகிற என்னோட கற்புக்கு எந்த பங்கமும் வராதுன்னு நீங்க தான் உறுதி கொடுக்கணும்"​

"என்னடி பேசுற?!"​

"அப்போ உங்களுக்கே உங்க மேல நம்பிக்கை இல்லையா?!" என்று பொறுமையாக கேட்க அபய்க்கு பற்றிக்கொண்டு வந்தது.​

"என்னை என்னனு நினைச்ச?! நான் எப்பவும் என்னோட கண்ட்ரோல்ல இருக்கிறவன்.."​

"அப்புறம் என்ன பிரச்சனை உங்களுக்கு?!"​

"நீ தான்டி பிரச்சனை!!"​

"அதாவது இதே ரூம்ல உங்களோடு நான் ஒண்ணா இருந்தா உங்களையும் அறியாம என் மேலா காதல் வயப்பட வாய்ப்பு இருக்கு அதை தவிர்க்க தான் வெளியில போக சொல்றீங்க அப்படி தானே?!"​

"நான் உன்னை காதலிக்கிறதா?!" என்று நக்கலாக பார்த்தவன்,​

"கனவுல கூட அப்படி ஒரு அபத்தத்தை செய்ய மாட்டேன்"​

"அப்போ ஏன் என்னை இங்கிருந்து துரத்த பார்க்கறீங்க? உங்களை பொறுத்த வரை சஞ்சு தான் உங்க வைஃப்ன்னு இருக்கபோ என்னோடு ஒன்றாக ஒரே அறையில் ஒரே பெட்ல இருந்தாலும் நீங்க சலனப்பட கூடாது..."​

"நயனி!!"​

"சும்மா கத்தாதீங்க. நீங்க தானே கனவுல கூட சலனப்பட மாட்டேன்னு சொன்னீங்க?! தென் டேக் இட் ஆஸ் எ செலேஞ்.."​

"என்னடி சேலஞ்?!" என்றான் எரிச்சலாக.​

"உங்க மேல நம்பிக்கை இருந்தா சஞ்சு கிடைக்கிற வரை என்னோடு இதே ரூம்ல இதே பெட்ல இருந்து கட்டுப்பாட்டோடு இருந்து காட்டுங்க"​

"அவ்ளோ தானே?! என்னால முடியும் ஆனா நீ சீப்பா இறங்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?!"​

"ஏற்கனவே உங்க கற்புக்கு நான் கேரண்டி கொடுத்ததா நியாபகம். அப்படியே இருந்தாலும் என் புருஷன் தானே நீங்க?!" என்றாள் அசராமல்.​

"வாட்?!"​

"நீங்க என்னை வைஃப்பா நினைக்க வேண்டாம் நானும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் ஆனா எனக்கு ஹஸ்பன்ட் என்றால் அது நீங்க மட்டும் தான்" என்றவள் மெத்தையை சுற்றி கொண்டு வந்து நின்றாள்.​

"இது என்னோட சைட்! அது உங்களோடது ஓகே" என்றவள் அபய் தன்னை முறைத்து கொண்டு நிற்பதையும் கண்டுகொள்ளாமல் "ஆல் தி பெஸ்ட்" என்று விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.​

 
Last edited:

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
ஸ்ரீ ரொம்ப பாவம் தான்....☹️
உண்மையா லவ் பண்ண பொண்ணை காணலை கல்யாணத்தை தடுக்க எவ்வளவு முயற்சி பண்ணியும் அதுவும் நடக்கல.... இவங்க காதலிச்சப்போ கூடவே இருந்த பொண்ணு இப்போ பொண்டாட்டி.... இதுல first நைட்க்கு ஏற்பாடு பண்ணினா அவன் மனநிலை எப்படி இருக்கும்.....🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

அவன் டிரஸ்ட்டை நம்பி இருக்குற ஏழை மாணவர்களோட படிப்பு கனவு கெட்டுடக் கூடாதுனு அவங்க அப்பாக்கு பணிஞ்சு போயிட்டான்.... நல்லவனா இருந்தாலும் கஷ்டம் தான் 😔😔😔

நயனி லைப் ஒய்ப் ன்னு ரைமிங்கா பேசி அடி வாங்கிட்டா 🤣🤣🤣 ஆனாலும் அசராம நிக்கிறா 😆

முரளி... இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இந்த வேஸ்ட் லக்கேஜை வீட்டோட வேற வச்சுருக்காங்க....
 
  • Love
Reactions: Rampriya and kkp11

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
அருமையான பதிவு 🤩🤩🤩
சஞ்சனா உயிரோடு இருக்காளா இல்லையா 😨😨😨

சக்ரவர்த்தி..... கல்யாணம் முடிந்த நிம்மதியில் தூங்க போயாச்சு 😕😕😕 இதுங்க இரண்டும் மத்தவங்கள தூங்க விடாமல் அடிச்சுக்குதுங்க 😟😟😟

இவங்க இரண்டு பேர் சண்டையில் எப்போ டா சான்ஸ் கிடைக்கும் உள்ளே புகுந்து விடலாம் என்று அபய் மாமன் காத்திருக்கான் 😮😮😮

சாலன்ஜில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம் 😊😊😊
 
  • Love
Reactions: Indhumathy

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
ஸ்ரீ ippadi adi vaangitu asarama nikuriay