• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 7

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் – 7​

அபய் நயனிகாவை பார்த்திருக்க அவளோ பேச்சு முடிந்தது போல படுத்துவிட்டாள்.​

அவன் அத்தனை மோசமாக பேசிய போதும் எத்தனை சாதாரணமாக இருக்கிறாள்.. அவன் அறிந்த வரையில் அவள் பணத்திற்கு ஆசைபடுபவள் கிடையாது, மற்றவரின் உணர்வுகளை மதித்து நடக்க கூடியவள் அதுவும் தன் உயிரானவளின் உயிர் இவள் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும்.​

படுத்த அடுத்த சில நிமிடங்களில் நயனிகா உறங்கி விட்டாளே தவிர்த்து ஸ்ரீவத்ஸனால் அந்த படுக்கையில் அமர கூட முடியவில்லை.​

சற்று நேரம் நயனிகாவை வெறித்திருந்தவன் பின் ஒரு முடிவோடு தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.​

உறக்கம் வராமல் அறையினுள் நடந்து கொண்டிருந்த நிர்மலா இக்காட்சியை கண்டு கண்ணீரோடு நின்றிருந்தார்.​

என்ன தான் ஸ்ரீவத்ஸன் உறங்காமல் போயிருந்தாலும் மனம் கொண்டிருந்த அசதியில் இரவு நன்றாகவே உறங்கி இருந்தாள் நயனிகா.​

காலை அவள் விழித்த போது அபய் அவளருகில் இல்லை. மணியை பார்க்க அது ஐந்தரை என்று காட்டியது.​

பொதுவாகவே இது அவன் ஜாக்கிங் செல்லும் நேரம் என்பதை அறிந்திருந்தவள் எழுந்து குளியல் அறைக்கு சென்றாள்.​

ஓரளவிற்கு அபய்யின் அன்றாட வழக்கம் நயனிகா அறிந்தது தான்.​

எப்படி அவனோடு செலவிடும் நேரங்களில் சஞ்சனா நயனிகா புகழ் பாடுவாளோ அது போலவே நயனியோடு இருக்கும் நேரங்களில் பெரும்பாலான அவள் பேச்சுக்கள் அபய் ஸ்ரீவத்ஸன் பற்றியதாக தான் இருக்கும்.​

இருவருமே உயிர் தோழிகள் என்பதால் அவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது.​

இருவரிடமும் என்று சொல்வதை விட நயனிடம் சஞ்சனா எதையும் மறைத்தது கிடையாது. ஆனால் நயனி அபய் மீதான தன் காதலை அவளிடம் மறைத்திருக்கிறாள்..​

மறைத்தால் என்பதை விட பதினான்கு வயதில் அவளுக்கு தோன்றியதற்கு பேர் காதல் என்றே புரியாமல் இருந்தவளுக்கு அதை சஞ்சுவிடம் பகிர அச்சம்.​

பின்னே! அவளுக்கு காதல் என்றாலே வேப்பங்காய்!! அப்படி பட்டவர்களிடம் இருந்து எட்ட நிற்பவள். பெற்றோர் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடாது அவர்கள் விருப்படி நடக்க வேண்டும் என்று சொல்பவளே அறியவில்லை பின்னாளில் அபய் மீதான காதல் அவளை முழுதாக மாற்றும் என்று!!​

அதனால் சஞ்சுவிடம் எதையும் பகிராதவள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஜன்னல் வழியே அபய்யை பார்ப்பதை தடுக்க முடியாமல் தவித்து போனாள்.​

ஆனால் அவர்கள் இடையே இருந்த ஏற்றத்தாழ்வு அவளால் இதை அவனிடமே பகிரவில்லை முடியவில்லை.​

அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கிரவுண்டில் தான் அபய் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம்..​

பள்ளியில் இருந்து திரும்புபவள் ஐந்தரை மணியில் இருந்து கிட்டத்தட்ட ஏழரை மணி வரை அவள் அறையின் ஜன்னல் அருகே தான் அவள் வாசம்!​

ஆம் ஜன்னலில் இருந்து பார்த்தால் அபய் விளையாடுவது தெரியும். ஆனால் பள்ளி முடிந்து அவனை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தவள்​

கல்லூரியில் சேர்ந்த பின்னர் வேறு ஹாஸ்டலில் சேர்ந்து விட்டவளுக்கு அபய்யை பார்க்க முடியாத நாட்கள் கொடுமையிலும் கொடுமையாக தான் இருந்தது.​

வார இறுதி நாட்களில் ஏதாவது சாக்கிட்டு அபய் விளையாடும் இடத்திற்கு சென்றவளுக்கு அபய்யை தொடரும் தன் பார்வையிலும் தேடலிலும் அது காதல் தான் என்று உறுதியானது.​

கல்லூரி சேர்ந்த பிறகும் அடிக்கடி ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டு அவன் விளையாடும் நேரத்தில் அங்கு இருப்பது போல பார்த்துக் கொள்வாள் ஆனால் அவளிடம் சென்று பேசும் தைரியம்தான் அவளுக்கு என்றுமே இருந்ததில்லை.​

அதன் பின் முழுதாக இரண்டு வருடங்களுக்கு அவனை நயனியால் சந்திக்க முடியவில்லை. அது அவன் வெளிநாட்டிற்கு சென்றிருந்த நேரம் ஆனால் அடுத்து அவனை அவள் சந்தித்தது அவன் கல்லூரியில் மேற்படிப்பிற்காக சென்ற போது தான்.​

கல்லூரியில் அவனை கண்ட முதல் தினம் நயனி கொண்ட மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இரு ஆண்டுகள் கழித்து பார்ப்பதால் சட்டென ஒரு பரவசம் பரவியதில் அவளுக்கு சுற்றுபுறம் மறந்து போனது.​

“என்னடி ஆச்சு?! ஏன் இப்படி படபடன்னு இருக்க. ஆனா முகம் சிவந்து போயிருக்கு” என்று சஞ்சனாவே கேட்கும் அளவுக்கு அதீத மகிழ்ச்சியில் நயனி!​

சரி இப்போது ஓரளவுக்கு அவள் கையில் படிப்பு உண்டு நாளை சேதுராமன் அவளை வீட்டில் சேர்க்காமல் போனாலும் சொந்தமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற தைரியமும் பிறந்ததில் அபய் ஸ்ரீவத்ஸனிடம் தன் காதலை தெரிவிக்க முடிவு செய்தாள்.​

ஆனால் சொல்லாத காதல் செல்லாமல் போகும் என்பதற்கு அபய் ஸ்ரீவத்ஸன் மீது அவள் கொண்ட காதலே சாட்சி!!​

அவள் நேரம் அபய் மீதான காதலை அவனிடம் தெரிவிக்க நினைத்த போது தான் நயனி முன்னிலையில் சஞ்சனா மீதான தன் காதலை தெரிவித்திருந்தான் அபய்.​

உலகே தட்டா மாலையாக சுழன்று போனது நயனிகா வர்ஷிக்கு.​

அவர்கள் எதிரே கலங்கி விடக்கூடாது என்று திடமாக நின்றுவிட்டவள் ஹாஸ்டல் சென்று சேர்ந்த நொடி மொத்தமாக உடைந்து போனாள். இரவு முழுக்க அழுது தீர்த்தவள் விடியும் வேளையில் ஓரளவு தெளிந்து திடம் பெற்றிருந்தாள்.​

தனக்கான அதிர்ஷ்டம் அவ்வளவுதான்! என்று முடிவு செய்து தன் காதலை தனக்குள் பூட்டி வைத்து விட்டாள்.​

இத்தனைக்கும் சஞ்சு “கரெஸ் ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு ஆனா என்னடி ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற” என்று இவளிடம் தான் கேட்டாள்.​

“நான் என்ன சொல்ல சஞ்சு?! அவருக்கு உன்னை பிடிச்சிருக்கு நீதான் பதில் சொல்லணும்”​

“இல்லடி எனக்கு லவ் என்றாலே அலர்ஜின்னு உனக்கே தெரியும். என்னை பற்றி தெரிஞ்ச எந்த பையனும் ஸ்கூல் காலேஜ்ல எனக்கு ப்ரொபோஸ் பண்ணினது கிடையாது ஆனா இவர் பேசினதுல...” என்று நிறுத்தியவள்,​

“இதை நான் எதிர்பார்க்கலை, எனக்கு கொஞ்சம் படபடன்னு இருக்கு இன்ஃபாக்ட் அவர் மேல எனக்கு கிரஷ் இருக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா இப்படி லவ் என்றெல்லாம் நான் யோசிக்கவே இல்ல நயனி..”​

“அவருக்கு என்னடி பதில் சொல்லட்டும் நீயே சொல்லு” என்றவள் விழிகளில் அபய் மீதான நேசம் கொட்டி கிடப்பதை கண்டவள், “இதுல யோசிக்க என்ன இருக்கு அவரே உனக்கு தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்கார் நீ அதிர்ஷ்டசாலி சஞ்சு யோசிக்காம ஓகே சொல்லு” என்று பெருகிய கண்ணீரை உள்ளிழுத்து முயன்று புன்னகைத்தாள்.​

“என்னடி இவ்ளோ சிம்பிளா சொல்லிட்ட அவங்க வேற கேஸ்ட் நான் வேற கேஸ்ட்! இது எப்படி ஒத்து வரும்?”​

“காதல் என்ன ஜாதியை பார்த்தா வரும்? காதலுக்கு கண் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க?! அதுக்கு கண், ஜாதி மட்டுமில்லை அந்தஸ்து, பேதம் என்று எதுவுமே கிடையாது. மனசுக்கு பிடிச்சா பிடிச்சது தான். அது அவ்வளவு சீக்கிரம் மாறிடாது..”​

“என்னடி ஏதோ முன்னாடியே உனக்கு அனுபவம் இருக்கிற மாதிரி பேசற?!”​

“ஏன் எதையும் தெரிஞ்சுக்க சொந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் இருக்கனுமா? நம்மை சுற்றி எவ்ளோ நடக்குது, அதையெல்லாம் பார்க்கிறோம் கேட்கிறோம் அதுல இருந்து கத்துக்கிறது தான். உனக்கு அவரை பிடிச்சிருந்தா தைரியமா சம்மதம் சொல்லு, மத்ததெல்லாம் கரெஸ் பார்த்துப்பார்” என்றவள் அதன் பிறகு ஸ்ரீவத்ஸனை தன் தோழியின் காதலனாக மட்டுமே பார்க்க முயற்சி செய்தாள்.​

ஆம் முயற்சிக்க மட்டுமே அவளால் முடிந்தது ஆனால் முடியவில்லை.​

பழைய நினைவுகளின் மூழ்கியபடி குளித்து முடித்தவள் வெளியில் வந்து தயாராகி கீழே சென்றாள்.​

அவளுக்கு ஹாஸ்டலில் காலை காபி, டீ குடித்து பழக்கம் என்பதால் கீழே சமையல் அறைக்கு வந்தாள்.​

அங்கே வழக்கம் போல நிர்மலா அனைவருக்குமான தேநீர் தயாரித்து கொண்டிருந்தார். தன் பின்னே அரவம் கேட்டு திரும்பியவர் அவளை கண்டதுமே மௌனமாக வெளியேற முயன்றார்.​

“அத்தை ப்ளீஸ் ஒரு நிமிஷம்..” என்று அவள் அழைக்க அவர் நடை தடைபட்டது.​

“நீங்க என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ்” என்றவளை இடையிட்டவர்,​

“எதுவும் பேசாத மா. நீ நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் ஆனால் செய்யல உன்னால என் மகன் வாழ்க்கையில் நிம்மதி மொத்தமாக போயிடுச்சு தூக்கம் இல்லாம..”​

“த்தை எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் என்னை நம்புங்க”​

“எது?! என் மகன் ராத்திரி வீட்டை விட்டு வெளியில போறதா?”​

“என்ன சொல்றீங்க?”​

“ஏன் நேத்து நைட் அபய் வெளியில போனது உனக்கு தெரியாதா?” என்றிட நயனி அதிர்வோடு வரை பார்த்தாள்.​

“இந்த மாதிரி என்னைக்குமே அவன் ராத்திரி வெளியில போனது கிடையாது. இதுக்கு காரணம் நீதான்!!”​

“அத்தை..”​

“சஞ்சனாவா நினைச்சு ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறவனுக்கு இந்த கல்யானத்தை நடத்தி இன்னும் ஏன்மா மேலும் கஷ்டம் கொடுக்கிற? இதை யாரோ செஞ்சா கூட நானஏத்துப்பேன் ஆனா நீ சஞ்சனாவோட ஃப்ரெண்டா இருந்துட்டு எப்படிம்மா உன்னால அவளோட வாழ்க்கையை தட்டி பறிக்க முடிஞ்சது?” என்றார் ஆற்றாமையோடு.​

“இந்த ஆறு மாசமாவே என் மகன் முகத்தில நான் சிரிப்பை பார்க்கவே இல்லம்மா இப்போ உன்னால அவனோட நிம்மதியு போச்சு” என்றதில் பதிலின்றி பார்த்த நயனிகா,​

“அத்தை...”​

“வேண்டாமா தயவு செஞ்சு என்னை இனி இப்படி கூப்பிடாத..”​

“...”​

“என்னைக்கு என் பிள்ளை சந்தோஷமா வாழ ஆரம்பிக்கிறானோ அப்ப கூப்பிடு” என்றவர் தன் போக்கில் வேலையை தொடர்ந்தார்.​

அவரையே பார்த்திருந்தவளிடம் மெளனமாக டீயை கொடுத்துவிட்டு கிளம்பிட நயனி முகம் கசங்கி போனது. ஒருசில முறை கல்லூரி விழாக்களில் அவரை நயனி சந்தித்திருக்கிறாள்.​

இவ்வளவு ஏன் சஞ்சுவை அபய் நிர்மலாவிடம் அறிமுகபடுத்திய போது கூட நயனி அவளுடன் தான் இருந்தாள். அப்போது அவளிடம் அத்தனை இனிமையாக பேசி அவர்களை ஆசிர்வதித்தவர் தான் நிர்மலா.​

இப்போது அவளை முற்றிலுமாக ஒதுக்குவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.​

அங்கே அவள் வீட்டில் அதிகாலை எழுந்தது முதலே தனலட்சுமியை நச்சரிக்க தொடங்கி விட்டார் சேதுராமன்.​

“என்ன வேணும் உங்களுக்கு? என்னை வேலை செய்ய விடுங்க”​

“ஏன்டி இன்னைக்கு பொண்ணு மாப்பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் அவங்களுக்கு விருந்து கொடுக்கணும் இதெல்லாம் உனக்கு நான் சொல்லனுமா?! உனக்கே தெரியாதா?!”​

“என்ன பேசறீங்க? மாப்பிள்ளை இருக்கிற கோபத்துக்கு அவர் இங்க வருவார்ன்னு உங்களுக்கு தோணுதா?”​

“என்னைக்கு இருந்தாலும் இதுதானே அவருக்கு மாமியார் வீடு இங்க வராம இருந்திட முடியுமா? சரி அவரை விடு உன் பொண்ணு மேல உனக்கே அக்கறை கிடையாதா?”​

“எனக்கு இருக்கு ஆனா உங்களுக்கு என்ன இப்ப புதுசா அவ மேல அக்கறை?!”​

“உன் பொண்ணு அதிர்ஷ்ட தேவதைடி! அதனால் தான் இப்பேற்பட்ட சம்பந்தம் கிடைச்சிருக்கு, என்னோட கடனெல்லாம் அடைஞ்சிருக்கு அதுக்காகவாது சம்மந்திக்கு மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தானே ஆகணும்”​

“அதுவும் இன்னைக்கு இடம் ரெஜிஸ்டர் ஆக போகுது அதையும் கொண்டாடனுமே?! என்றதில் தனாவின் முகத்தில் கசந்த புன்னகை.​

“சரி சரி, நான் போய் கறி, மீனெல்லாம் வாங்கிட்டு வரேன் நீ தேவையானதை தயார் பண்ணு. நல்ல நேரத்துல அவங்களை அழைச்சுட்டு வந்துடலாம்” என்றவர் வெளியில் செல்ல தனலட்சுமி ஆயாசமாக கணவனை பார்த்திருந்தார்.​

“என்னம்மா இது?! அப்பா இப்படி சொல்ற ஆளே கிடையாது. இப்ப என்ன திடீர்னு இப்படி பேசறார்...”​

“அதுதான்டி எனக்கும் புரியல. எப்படியோ ஒரு வழியா என் மகளை நல்லபடியா கட்டி கொடுத்து இருக்கேன்னு சந்தோஷப்படுறதா? இல்லை இந்த ஆள் நடத்துகிற விதத்தை பார்த்து திரும்ப ஏதாவது அவளுக்கு பிரச்சனை வரும் போது கவலைப்படறதா என்று தெரியல” என்று சோர்வோடு சுவரில் தலை சாய்த்தார்.​

ஜாக்கிங் முடித்துவிட்டு அபய் வீட்டிற்கு நுழைவதை கண்ட நிர்மலா, “என் மகனுக்கு காபி கொண்டு போய் கொடு” என்று நயனியிடம் காஃபி கோப்பையை கொடுக்க ஆச்சரியமாக அவரை பார்த்தாள்.​

“நீதான் இந்த வீட்டு மருமகள் என்று ஆயிடுச்சு இனி அதை மாற்ற முடியாது. என் மகனும் உன்னை விட்டுட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது கிடையாது. ஒருவேளை சஞ்சுவை கண்டு பிடிச்சுட்டாலும் அத்தனை லேசுல கல்யாணம் பண்ண விட்டுருவாங்களான்னு எனக்கே தெரியல..”​

“அந்த பொண்ணும் இருக்கிற இடமே தெரியல. என் மகனுக்கு நீதான்னு விதிச்சிருக்கு எப்படியாவது சரி பண்ண பாத்துக்கோ” என்றதில் சிறு புன்னகையோடு மாடியில் இருந்த கணவனை தேடி சென்றாள்.​


ஆனால் அடுத்த ஒரே மணி நேரத்தில் “உங்க கௌரவத்தை காப்பாற்ற உங்க மருமகளை கொண்டு வந்துட்டேன் இனி என் சஞ்சுவை தேடி கிளம்பறேன் என்னை தடுக்க நினைச்சா இவ தான் அசிங்கபடுவா..” என்று சக்கரவர்த்தியிடம் சொன்னவன் தன் பெட்டியோடு கிளம்பிவிட்டான்.​

 

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
சஞ்சுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல இதுல இவன் வேற இப்படி பண்றானே 😰😰😰😰 இத்தனை மாசம் இல்லாம இப்போ எங்கே போய் கண்டுபிடிக்க போறான் 🙄🙄🙄
 
  • Love
Reactions: Rampriya and kkp11

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
சஞ்சு தான் காதலை சொன்னானு முதலில் சொன்னீங்க இப்போ அபய் தான் சொன்னானு சொல்லுரூங்க? எது சரி? முரணா இருக்கே சிஸ்
 
Last edited: