காஃபியோடு மாடிக்கு சென்ற நயனிகா அறையில் அபய் இல்லாததை கண்டு விழிகளை சுழற்றியவள் அவர்கள் அறையின் பால்கனியில் அவன் நின்றிருப்பதை கண்டு அவனிடம் சென்றாள்.
“குட் மார்னிங் அபய்” என்றிட தோட்டத்தில் பார்வை பதித்திருந்தவனிடம் அசைவில்லை.
“அபய் காஃபி” ஸ்ரீவத்சனிடம் கொடுக்க அவனோ அதை வாங்காமல் “எனக்கு ஒரே ஒரு உண்மை மட்டும் சொல்லு” என்றான் எங்கோ வெறித்துக்கொண்டு.
நயனியோ அவனுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் “முதல்ல காஃபி சாப்பிடுங்க அபய் என்றிட சட்டென திரும்பியவன் அவளிடம் இருந்த கப்பை பெற்று ஓங்கி தரையில் அடித்தான்.
நயனி திகைத்து போய் அவனை பார்த்திருக்க, “எனக்கு ஒரு உண்மை தெரியணும். அதுக்கு பதில் சொல்ல மட்டும் நீ பேசினா போதும் மீறி தேவையில்லாம பேசின நடக்கிறதே வேற..” என்றான் கண்டிப்பான குரலில்.
ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள், “சொல்லுங்க உங்களுக்கு என்ன தெரியனும்?”
“அன்னைக்கு எதுக்காக சஞ்சு உன்னை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்தா?”
“ஏன் கூட்டிட்டு வந்த உங்களுக்கு தெரியாதா?”
“இல்லை எங்கப்பா சஞ்சுகிட்ட பேசினதை பற்றி சொல்லிட்டு இருந்ததுல எதுக்காக உன்னை தேடி வந்தாள் என்று நான் கேட்கலை”
“சொல்லு எதுக்காக உன்னை தேடி வந்தா, எவ்வளவு நேரம் உன் கூட இருந்தா? அதுக்கு அப்புறம் எப்போ கிளம்பி போனா? எதுல போனா? இதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு..”
“அவ வழக்கம் போல தான் என்ன பார்க்க வந்திருக்கிறதா எனக்கு மெசஜ் பண்ணினா. அன்னைக்கு சஞ்சு வந்த போது நான் லைப்ரரிக்கு போயிருந்ததால ரூம்ல வெயிட் பண்ண சொன்னேன் ஒரு மணி நேரம் கழிச்சு நான் ரூமுக்கு வந்த போது அவ அங்க இல்ல...”
“பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டதுக்கு இப்ப தான் கிளம்பி போனான்னு சொன்னாங்க சரி நானும் வெளியில போய் பார்த்தேன் ஆனா எங்கேயுமே அவளை காணலை உடனே கால் பண்ணினால் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது”
“அவளோட அப்பா அம்மாவுக்கு பேசலையா”
“இல்லை. எப்படியும் நாளைக்கு திரும்ப காலேஜ்ல மீட் பண்ண தானே போறோம்னு நான் சாதாரணமா எடுத்துகிட்டேன் ஆனா அடுத்த நாள் அவ காலேஜுக்கு வராததுலயும் அதுக்கு அடுத்து தொடர்ந்து அவளை பார்க்க முடியாததாலயும் நான் அவ வீட்டுக்கு போனேன்..”
“ஆனா வீடு பூட்டி இருந்தது. அவளோட அப்பா அம்மாவுக்கும் ட்ரை பண்ணினேன் என்னால யாரையும் பிடிக்க முடியல. அப்பதான் நீங்களும் என்னை தேடி வந்தீங்க..”
“அப்போ சஞ்சு உன்கிட்ட எதுவுமே பேசலையா? எங்கேயாவது வெளில போறேன்னு சொன்னாளா?”
“இல்ல என்கிட்ட அவ ஏதாவது சொல்லி இருந்தா அதை உங்க கிட்ட சொல்லாம நான் ஏன் மறைக்கணும்” என்று எதிர் கேள்வி கேட்க “சரி போ” என்றான்.
“அபய் நேத்து நைட் நீங்க வெளியில போயிருந்தீங்களா? எங்கே?”
“தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்..” என்றான் முகத்தில் அடித்தார் போல..,
“அபய் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் தி ரியாலிட்டி.. எனக்கும் சஞ்சு காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நீங்க ஏன் தேவை இல்லாமல் என் மேல வெறுப்பை காட்டுறீங்க?”
“நம்முடைய அந்தரங்கம் அடுத்தவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் போது அதனால வரக்கூடிய விளைவுகள் எனக்கு மட்டுமானது கிடையாது உங்களுக்கும் தான் என்று ஏன் உங்களுக்கு புரியலை? நீங்க இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வதா..” என்று அவள் முடிக்கும் முன்னமே அவள் கழுத்தை பிடித்திருந்தான் அபய்.
“அப..ய்”
“ஷட் யுவர் மவுத்!! என்ன தாலி கழுத்துல இருக்கு என்கிற தைரியத்துல என்னை என்னானாலும் பேசிடலாம்னு நினைச்சுட்டியா? உன் இடம் என்னன்னு தெரிஞ்சு நடந்துக்கிறது உனக்கு நல்லது”
“அபய்...”
“என் அப்பாவுக்கு வேண்டுமானால் நீ அவர் கௌரவத்தை காப்பாற்ற வந்த வெற்றி சின்னமா இருக்கலாம் மத்தவங்களுக்கு மருமகளா இருக்கலாம் பட் எனக்கு யூ மீன் நத்திங்! காட் இட்!!”
“நான் இப்படி இருக்க காரணமே நீ தான்டி!! இதே உன் இடத்துல வேற பொண்ணு இருந்தால் கூட நான் கொஞ்சம் சாதராணமா இருப்பேன் ஆனா நீ! என் சஞ்சுவோட இடத்துல இருக்கிறதை தான் தாங்கிக்க முடியலை. நீ பேசறது நடந்துக்கிறது பார்த்தா இந்த நாளுக்காக நீ காத்திருந்த மாதிரி தான் எனக்கு தோணுது”
“ஸோ யூ பெட்டர் ஸ்டே அவே ப்ரம் மீ” என்று மூச்சுக்கு தவித்தவளின் கழுத்தில் இருந்து கையை அகற்றினான்.
கண்களை திரண்டு விட்ட நீரோடு அவனை பார்த்தவள் “உங்களுக்கு நான் ஒன்னுமில்லாமலே இருந்துக்கிறேன் ஆனா நீங்க செய்யற விஷயத்தால உங்களுடைய மதிப்பும் மரியாதையும் குறையும் ப்ளீஸ் கீப் தட் இன் மைண்ட்..” என்றாள் இறுதி முயற்சியாக.
“உன்கிட்ட நான் எந்த அட்வைஸும் கேட்கல வெளிய போ..” என்றவன் அவள் செல்லவும் கதவை அடைத்து குளிக்க சென்றான்.
குளித்து முடித்து வந்தவன் தன் ட்ராலியில் உடைகளை அடுக்கி விட்டு பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.
அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க அங்கு வந்து மகனைக் கண்டதும் “சாப்பிட வா அபய் இன்னும் கொஞ்ச நேரத்துல நயனியோட அப்பா அம்மா வந்துருவாங்க மறு வீட்டுக்கு போகணும்..” என்று நிர்மலா சொல்லி முடிக்கும் முன் “நான் கிளம்புறேன்” என்று அவை. என்றான்.
“என்னப்பா சொல்ற, இவ்வளவு காலையில் எங்கே கிளம்பற?”
“என் சஞ்சுவை தேடி!!”
“இது என்ன முட்டாள்தனமான பேச்சு அபய்?” என்று அது நேரம் வரை மகனை பார்த்திருந்த சக்கரவர்த்தி கேட்க
“உங்க கௌரவத்தை காப்பாற்ற தாலி கட்டி நீங்க ஆசைப்பட்ட மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு. இதுக்கு மேல என் சஞ்சுவை நான் தேடிப் போக எந்த தடையும் இருக்காதுன்னு நினைக்கிறேன் அப்படி இருந்தா அதை பற்றி எனக்கு கவலை இல்லை” என்றான் உறுதியான குரலில்.
“டேய் என்னடா அறிவுகெட்டதனமா பேசுற?” என்றான் வினோதன் எரிச்சலோடு.
“ஏன் தமிழ்ல தானே சொன்னேன் புரியலையா உனக்கு?”
“உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா பொண்டாட்டியை வீட்டுல வச்சிக்கிட்டு இன்னொருத்தியை தேடி போறேன்னு சொல்ற?!” என்று வினோதன் கேட்க நயனி அமைதியாக அவர்களை பார்த்திருந்தாள்.
“...”
“வேண்டாம் அபய் நான் ஏற்கனவே சொன்னதுதான் எனக்கு என்னோட கௌரவம் ரொம்ப முக்கியம். நயனியை உன் மனசு மாறின பிறகு கூட ஏத்துக்கோ நிச்சயம் நான் இனி உன்னை எதற்காகவும் கார்னர் பண்ண மாட்டேன். அமைதியா உள்ள போ...” என்றார் கட்டுபடுத்தப்பட்ட கோபத்தோடு.
பின்னே நேற்று இரவு நடந்ததை காலையில் அவரிடம் பகிர்ந்த நிர்மலா “என் மகன் அந்த பொண்ணு கூட ஒரே ரூம்ல இருக்க தயாரா இல்லை. உங்க கௌரவத்துக்காக அவன் வாழ்க்கையை மொத்தமா அழிச்சுட்டீங்க. ஏன் இப்படி அபய்யை சின்ன வயசுல இருந்தே உங்க கட்டுபாட்டுக்குல் வச்சிருக்க நினைக்கறீங்க? இதனால என்ன பெருசா சாதிச்சுட்டீங்க?” என்று கணவரை உலுக்கி எடுத்து விட்டார்.
“நீங்க சொல்றதை நான் கேட்பேன்னு எப்படி நம்புறீங்க?! ஏற்கனவே சொன்னது தான் ட்ரஸ்ட் விஷயத்துல நீங்க மூக்கை நுழைச்சா உங்க மருமக பேர் தான் கெடும் உங்க குடும்ப கவுரவமும் போகும்..”
“நிச்சயம் சொன்னதை நான் நடத்திக் காட்டுவேன்” என்றதில் ஆடிப் போனார் சக்கரவர்த்தி.
“தேவை இல்லாம என்ன லாக் பண்றதா நினைச்சு இவ அசிங்கப்பட நீங்களே காரணமா ஆகிடாதீங்க..”
அபய் யாருடைய பேச்சையும் மதிக்காமல் வீட்டிலிருந்து கிளம்பி செல்ல, “இதுக்கு தானே கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்ச இப்ப சந்தோஷமா உனக்கு?”
“என்ன பேசறீங்க?” என்று நயனி தொடங்கவும்,
“போதும் நிறுத்து மா, நீ இந்த வீட்டுக்குள்ள வந்த அன்னைக்கே அப்பா மகனுக்கு சண்டை மூட்டிவிட்ட அடுத்த நாளே என் மாப்பிள்ளை வீட்டை விட்டு துரத்திட்ட இன்னும் என்ன செய்ய போற?” என்றார் முரளிதரன் வெறுப்போடு.
“மாமா அவன் பண்ற கிறுக்குத்தனத்துக்கு எதுக்கு இந்த பொண்ணு பேசுறீங்க? அப்படி பாக்க போனா இந்த கல்யாணத்தை அவன் மிரட்டி நடத்தி வச்சது அப்பா தானே?!” என்று வினோதன் நயனிக்காக பேச அவளோ விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரோடு அபி ஸ்ரீவத்ஸண் சென்ற திசையை பார்த்து நின்றாள்.
“டேய் நீங்க சண்டை போட்டுக்காம அபய்யை தடுத்து நிறுத்துங்க” என்ற நிர்மலா வெளியில் செல்ல ஸ்மரன் பெற்ற நயனி கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் செல்ல அங்கே துப்பாக்கியில் இருந்து சீறி பாயும் தோட்டாவாக ஸ்ரீவத்சனின் கரங்களின் அவன் கார் பறந்து கொண்டிருந்தது
இப்போது நிர்மலாவுக்குமே நயனி மீது சொல்லில் வடிக்கவியலா ஆற்றாமை பெருகியது.
“இதுக்காக தானா இந்த கல்யாணம்?” என்பது போல அவளை பார்த்துவிட்டு நகர்ந்திட “இனி இங்கே நிற்க வ்நேடாம் உள்ள வாம்மா” என்று சக்கரவர்த்தி அழைக்க மௌனமாக வீட்டினுள் நுழைந்தாள்.
ஆலைக்கு நயனியை கேள்வி கேட்க, “இதுக்கு மேல நயனியை யாரும் எதுவும் பேசக்கூடாது. யார் தடுத்தாலும் நயனி தான் இந்த வீட்டு மருமகள் ! சீக்கிரமே எல்லாம் சரியாகும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க” என்றவர் சாப்பிடாமலே தன்னறைக்கு சென்று விட்டார்.
தனித்து விடப்பட்டது போல உணர்ந்த நயனிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அறைக்கு சென்றவள் அதன் பிறகு கீழே வரவே இல்லை. யாரும் அவளை கண்டுகொள்ளவும் இல்லை சாப்பிட அழைக்கவும் இல்லை. இரவு சக்கரவர்த்தி அவளை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வர வினோதன் ராகவி தவிர்த்து அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர்.
ராகவிக்கு முதலில் நயனி மீது பரிதாபம் எழுந்தாலும் இரவாகியும் அபய் வீடு வராததில் அவள் மீது எரிச்சல் அதிகரித்தது ஆனாலும் கணவனுக்காக அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அடுத்த நாளே நயனி காலேஜுக்கு வந்ததை பார்த்தவர்கள் பார்வை ஆச்சரியத்தோடு அவள் மீது படிந்தது.
“மேம் கல்யாணமாகி ஒரு நாள் தான் ஆகியிருக்கு எப்படியும் ஒன் மன்த்கு வர மாட்டீங்கன்னு நினைச்சோம் இப்படி ஒரே நாளில் இருந்து வந்துட்டீங்க?” என்று ஆச்சரியத்தோடு கேட்டவர்களுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தவள் அமைதியாக தன் வேலையை தொடங்கி விட்டாள்.
அன்று மாலை அவனுக்கு அழைக்க அவன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது அன்று மட்டும் கிடையாது அதை தொடர்ந்த நாட்களிலும் அவன் எண் உபயோகத்தில் இல்லை அவன் எங்கு இருக்கிறான் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தமாக அனைவருடனான தொடர்பையும் துண்டித்துவிட்டிருந்தான்.
மேலும் இரண்டு வருடங்கள் கழித்து..
அன்று அபய் இரண்டு வருடங்கள் கழித்து வீடு திரும்பிய போது நயனிகா அந்த வீட்டில் இருக்கவில்லை.
பலநாள் மழிக்கபடாத தாடி, சோர்ந்து சிவந்து போயிருந்த விழிகள் பொலிவிழந்த முகத்துடன் நின்றிருந்த மகனை கண்டு நிர்மலா திகைத்து போய் நிற்க, “எப்படி இருக்கீங்க ம்மா?” என்றான்.
“உனக்கு யார் மேல என்ன வருத்தம் இருந்தாலும் இப்படி ரெண்டு வருஷமாவா எங்களை நினைச்சு பார்க்காம இருப்ப? எங்க ப்பா போன? சஞ்சு கிடைச்சாளா?” என்றிட இல்லை என்று தலையசைத்தான்.
“இது என்னப்பா கோலம் போ போய் முதல்ல குளிச்சுட்டு வா சாப்பிடுவா” என்றிட தளர்ந்த நடையுடன் தன் அறையை சென்று திறந்தவனுக்கு அதில் இருந்த வித்யாசம் நன்கு புலப்பட்டது.
நயனியின் பொருட்கள் எதுவும் அங்கே இல்லை. அவள் இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லாமல் போயிருந்தாலும் அதை பற்றி அபய் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
எப்படியாவது அவள் தன் வாழ்வை விட்டு விலக வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கும் இது தானே வேண்டும்!! அதனால் சந்தோஷமாக குளிக்க சென்றான்.