• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 2

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 2

போட்டோவுடன் தன் அறைக்கு சென்ற ராம் காதில் கீழிருந்து அன்னை கூறியது காதில் கேட்டு போட்டோவை திருப்பி பார்த்தான்.

நிவிதா MA சோசியாலஜி என்ற பெயரை படித்தவன் “வயசு 23 ஆஹ்? ஆனால் நமக்கு 30 வயசு ஆச்சே!” என யோசித்துக் கொண்டிருக்க உள்ளே வந்தான் கௌதம்.

"என்ன டா, போட்டோ திருடுற அளவுக்கு பொண்ணை புடிச்சி போச்சா?" என்றவாரே அந்த போட்டோவை வாங்கி பார்த்தான்.

"ஹ்ம் ஓகே தான். ஆனால்... " என ராம் இழுக்க,

"ஓகே தானா! என்ன போனா போகுதுன்ற ரேஞ்சுக்கு சொல்ற! உன் மூஞ்சிலயே தெரியுது. நடிக்காத டா"

"ப்ச் அதை விடு டா.. இங்க பாரு! பொண்ணுக்கு 23 வயசு தான் ஆகுதாம்" என போட்டோ பின்புறம் காட்ட,

"ஆமா அதுக்கென்ன?" என்றான் கெளதம்.

"டேய்! 7 வயசு வித்யாசம் வருதே! பொண்ணுக்கு என்னை புடிக்கலைன்னா?"

"ஓஹ் அதான் உன் கவலையா? ஹாஹாஹா குட் ஜோக்"

"என்னடா?" என்றான் ராம் எரிச்சலான குரலில்.

"ராம் உனக்கு என்னவோ வயசாகி முடி எல்லாம் நரைச்ச மாதிரி பேசுற? உன் டிமன்ட் உனக்கே தெரியல. நீ ஹீரோ டா"

"ஆனால் அந்த பொண்ணுக்கு அது தெரியாதே?"

"எதே நீ ஹீரோன்னா?"

"டேய்!..."

"சரி சரி காண்டாகாதே! இப்பல்லாம் பொண்ணு கிடைக்குறது மட்டும் இல்ல டா, மாப்பிள்ளை கிடைக்குறதும் கஷ்டம் தான். அதுவும் 90ஸ் கிட்ஸ்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆகாதவன் தான் அதுஇதுன்னு சும்மா புரளிய கிளப்புறானுங்க! அதுவும் உன்னை எல்லாம் யாராவது பிடிக்கலைனு சொல்வாங்களா? உளறாதே ராம்!"

"ஹ்ம் என்னவோ சொல்ற பார்க்கலாம்" என்றவன் போட்டோவை வாங்கி திருப்பி அந்த முகத்தை பார்த்தான். பார்த்ததும் அந்த முகம் மனதில் பதிந்து போன மாயம் தான் அவனுக்கு விளங்கவில்லை.

அடுத்து பெரியவர்கள் பேசி திருமணமும் உறுதியாகும் நிலையில் இருந்தது. நந்தினியையும் ராமையும் கௌதம் விடாமல் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அன்று காலை ஆஃபிஸியல் வேலையாக கௌதம் உடன் ராம் காரில் சென்று கொண்டிருக்க, தொலைவில் சிக்னல் அருகே மொத்த கூட்டமும் நின்றது.

"என்னடா டிராபிக் இருக்காதுன்னு தான் இந்த ரோட்ல வந்தேன். ச்ச!" என கௌதம் சலித்து கொள்ள, ராம் சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் கூட்டத்தை நோக்கி இறங்கி நடந்தான். அவன் பின்னே கௌதமும்.

"ஏன்மா! பொம்பள புள்ள வண்டி ஒட்ற மாதிரியா போற? ஏரோபிளேன் ஓட்ராப்ல நினைப்பு. இதுல சும்மா நின்ன பையனை அடிக்குது பாரேன் ரொம்பத் திமிரு தான்" என ஒருவன் யாரையோ திட்டும் குரல் கேட்க, கூட்டத்தை கடந்து உள்ளே சென்றனர் இருவரும்.

முகத்தை துப்பட்டாவால் மூடி இரு பெண்கள் நிற்க, ஒருத்தி பயத்தில் கைகளை பிசைந்து கொண்டும் இன்னொருத்தி கைகளை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டும் இருந்தாள்.

அங்கு இருக்கும் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்திருப்பது போல பார்த்துக் கொண்டிருக்க, கௌதம் சென்று அந்த பெண்கள் முன் நின்றான்.

"என்னமா என்ன பிரச்சனை?" என அவர்களிடம் கௌதம் கேட்க ராம் அமைதியாக அவன் அருகே நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

"பொண்ணுங்களுக்கு பிரச்சனைன்னா ஓடி வருவானுங்க கோர்ட் சூட் போட்டுக்கிட்டு" என ஒருவன் பேச கௌதம் கோபம் வந்தாலும் அமைதியாக அந்த பெண்ணின் பதிலுக்காக நின்றான்.

"யோவ்! உனக்கு அவ்ளோ தான் மரியாதை. உனக்கு முதல்ல என்ன பிரச்சனைனு தெரியுமா? வந்துட்டான் பேச!" என கோபத்தில் இருவரில் ஒரு பெண் கத்த,

ராம் 'யம்மாடி! ஓவர் தைரியம் தான் இவ்வளவு கூட்டத்தில் ஆம்பளையை எதிர்த்து பேச! இவன் ஏன் போய் தலையை குடுக்குறான்? அந்த பொண்ணே சமாளிச்சுடும் போலயே' என கௌதமை நினைத்துக் கொண்டிருக்க, பெண்கள் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் கௌதம்.

கௌதமை பார்த்த அந்த பெண் ஒருமுறை மேலிருந்து கீழாக அளவீடும் பார்வை பார்த்து, "சார்! இந்த பொறுக்கி என் பிரண்டை பைக்ல வந்திட்டு இருக்கும் போது தப்பா பேசினான் அதான் ஸ்கூட்டியை சிக்னலில் அவன் நிற்கும் போது வேகமா அவன் பைக் மேலே விட்டேன். கீழ விழுந்தாலும் அவனுக்கு ஒன்னும் ஆகல.. கோபத்துல ஓங்கி ஒரு அறை விட்டேன்" என சொல்லி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கௌதம் கண் புருவம் ஒருமுறை ஏறி இறங்கியது.

"அதுக்காக ஆம்பள பையன கை நீட்டுவியா? இப்ப உன் வண்டியும் தான உடைஞ்சு கிடக்கு?" என ஒருவர் கேட்க, அவருக்கு பதில் சொல்லாமல்

"சார், இது நான் வேலை பார்க்குற பத்திரிக்கை ஆபீஸ் கார்டு. எந்த கேஸ் வந்தாலும் நான் பாத்துக்குறேன். இங்க இருக்குறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. இன்கேஸ் இவங்க என் மேல கம்ப்ளைண்ட் குடுத்தா.. என்னை இந்த அட்ரஸ்ல காண்டாக்ட் பண்ண சொல்லுங்க" என்றவள், வாடி என்று அந்த இன்னொரு பெண்ணை இழுத்துக் கொண்டு வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் சென்று நின்று கொண்டனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு விதமாக அந்த பெண்ணை திட்டிக் கொண்டே அனைவரும் நகர, அடி வாங்கியவன் எதுவும் பேசாமல் நகர்ந்ததிலேயே அவன்மேல் தான் தவறு என புரிய, கார் நோக்கி சென்றனர் கௌதம் மற்றும் ராம்.

ராம் காரை நகர்த்த தொடங்கியதும் கௌதம் அந்த பெண்கள் அருகில் நிறுத்துமாறு கூறினான்.

ராமிற்கு கோபம் அதிகமாக வரும்தான் என்றாலும் கொஞ்சம் அவனிடம் தாழ்ந்து பேசினாலும் அவன் மனம் இளகி விடுவான். இது போன்ற பொது பிரச்சனைகளில் கூட அவ்வளவாக தலையிட விரும்பமாட்டான். கௌதம் ராம் இருவரும் எல்லா விஷயத்திலும் ஒத்து போனாலும் இதில் என்றும் நாணையத்தின் பக்கங்கள் போல எதிரெதிர் தான்.

இப்போது கௌதம் அந்த பெண்கள் அருகே காரை நிறுத்த சொல்ல அதன் காரணம் அவர்களுக்கு உதவிட என புரிந்தாலும் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ராமிற்கு இல்லாமல் இல்லை. ஆனாலும் கௌதமிற்காக அவர்கள் அருகில் சென்று நின்றான்.

தங்கள் அருகே கார் நிற்பது உணர்ந்து இரு பெண்களும் கேள்வியாய் அதை நோக்க, உள்ளிருந்து இறங்கிய கௌதம் இவ்வளவு நேரம் பேசிய பெண் முன் சென்று நின்றான்.

"ஹலோ! தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் உங்க ஆபீஸ் வழியா தான் போறேன்.. ஷல் ஐ ட்ராப் யூ?" என கேட்க, இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"ஹெலோ ஹலோ தப்பா நினச்சுக்காதீங்க! ஐ லைக் யூர் ப்ரேவ்நெஸ்! உங்களை சிஸ்டரா நினச்சு தான் ஹெல்ப் பண்ண வந்தேன். அப்புறம் உங்கள் இஷ்டம்" என்று சொல்ல, ஏற்கனவே அவன்மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததால் தான் அவனிடம் விளக்கம் கொடுத்தது. எனவே அவளும் தலையசைத்து அந்த இன்னொரு பெண்ணின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் அவளுடன் காரில் ஏறினாள்.

காரில் ஏறியதும் ராம் காரை ஸ்டார்ட் செய்ய, அந்த பெண் கொடுத்த கார்டை பார்த்தான் கௌதம். நிவிதா ஜர்னலிஸ்ட் என்ற பெயரை பார்த்ததும் சடாரென திரும்பிப் பார்க்க அங்கே நிவி முகத்தில் இருந்து தன் துப்பட்டாவை எடுத்திருந்தாள்.

அதிர்ந்த கௌதம் நிவியை பார்த்துவிட்டு சிரிப்புடன் ராமை பார்க்க அவன் கருமமே கண்ணாக கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

"ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்"

திடீரெனெ வரும் சத்தத்தில் குழம்பி ராம் காரை ஓட்டிக் கொண்டே சுற்றிலும் செக் செய்ய தலையில் அடித்து கொண்ட கௌதம் மீண்டும் ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ் என்றான்.

இப்போது தான் கௌதம் என அறிந்து அவனை திரும்பி பார்த்த ராம் அவனை முறைக்க, கௌதம் கண்களால் பின்னால் பார்க்கும்படி சைகை செய்தான். அதை புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை செய்ய, காரின் முன் இருந்த கண்ணாடியை அவன்புறம் காட்டி அதை பார்க்குமாறு கை நீட்டினான் கௌதம்.

'இவனுக்கு என்ன ஆச்சு?' என்ற நினைப்பில் ராம் அந்த கண்ணாடியை பார்க்க, பார்த்தவன் அப்படியே அதிர்ந்து வண்டியை நிறுத்தினான்.

“நிவிஈஈஈ”.

கௌதம் திரும்பி நிவியை பார்த்ததில் இருந்து ராமிடம் சைகை காட்டியது இப்போது ராம் காரை நிறுத்தி நிவியை பார்ப்பது வரை நிவி கவனிக்காவிட்டாலும் நிவி உடன் இருந்த இன்னொரு பெண் கவனித்து கொண்டுதான் இருந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ எனி ப்ரோப்லேம்?" நிவியுடன் இருந்த பெண் கேட்க,

"நத்.. நத்திங்" என்ற ராம் இன்ப அதிர்ச்சி விலகாமல் நிவியை கண்ணாடியில் பார்த்தவாறு வண்டி ஓட்ட, கௌதமிற்கு தான் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

கௌதம் ராம் இருவரும் அழகில் இருந்து படிப்பு வரை எதிலும் வித்யாசம் இல்லை என்றாலும் கௌதமிடம் ஒரு துணிவும் எதையும் இறங்கி செய்யும் குணமும் உண்டு.

ராம் மற்றவர்கள், தெரியாதவர்கள் என எதிலுமே தலையிட விரும்பமாட்டான். இப்போது பார்த்த நிவியின் குணத்திற்கு எதிர் குணம் என்று கூட சொல்லலாம். அதனால் தான் கௌதமின் சந்தோசமே.

இருவரும் ஒரே போல இருப்பதை விட, ராமிற்கு நிவி போல ஒரு பெண் தான் சரி என்று நினைத்து சிரித்து கொண்டான். அதன் பின்னும் பேசாமல் வந்தால் அது கௌதம் தானா என்ன!

ராம் முதலில் அதிர்ந்தாலும் போட்டோ பார்த்ததும் தன்னவள் என நினைத்தவளை இப்போது மட்டும் மாற்றி கொள்வானா என்ன! அப்புறம் என்ன சைட் அடிச்சுட்டு தான் வந்தாரு சாரு!.

"இவ நம்ம போட்டோ பார்க்கலையா இல்ல பார்த்து மறந்துருப்பாளா?" ராம் நினைத்து கொண்டிருக்க, அவர்களுக்கு தங்களை தெரியவில்லை என்று தெளிவானான் கௌதம்.

"ஏங்க, உங்க பிரண்ட் துப்பட்டாவை முகத்தில் இருந்து எடுக்க மாட்டாங்களா?" விளையாட்டாக மட்டுமே கேட்டான் கௌதம்.

"ஹலோ ஜீ! அண்ணானு சொல்லி தானே கார்ல எற சொன்னிங்க? இப்ப கேட்குற கேள்வியே சரி இல்லையே!" நிவியே தான்.

"ஹாஹா சூப்பர் டா! கோபம் மட்டும் தான் வரும் நினச்சேன். காமெடியும் நல்லா வருதே உனக்கு. ஆனால் பாரு! உன்னை தானே அண்ணனா நினைச்சுக்க சொன்னேன்.. உன் பிரண்ட்டை சொல்லலையே!" என அவள் கேள்வியை அவளுக்கே திருப்ப, கேட்டுக் கொண்டிருந்த மற்றவள் முகம் கோபத்தில் சிவந்து இருந்ததை இருவரும் அறியவில்லை.

ராம் மட்டும் நிவி பேசும் அழகை ரசித்து கொண்டு வந்தானே தவிர பேசவில்லை.

"ஹ்ம்ம் வேலிட் பாயிண்ட்!" என நிவி முடித்து கொள்ள, "அப்போ பிரண்ட்ஸ்! நான் கௌதம்" என கை நீட்டினான் கௌதம்.

"ஹ்ம்ம்" என ஒருநொடி யோசித்த நிவியும் "பிரண்ட்ஸ். நான் நிவி" என்று சிரித்து கொண்டே அவனுடன் கைகுலுக்க ராம் கௌதமை முறைத்தான்.

அதை பார்த்து "இவன் ராம்! நம்ம பிரண்டு தான்" என்று சொல்ல, "ஓஹ் ஹாய்! இது வாசமிகா, மை பிரண்ட்" என்று மற்றவளை அறிமுகப்படுத்தினாள்.

"என்ன உங்க பிரண்ட் ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டாங்களா?"

"வாசு கொஞ்சம் ரிசெர்வ்டு டைப். ஆமா நீங்க ஏன் அவளை பத்தியே கேக்குறீங்க?" நிவி கேட்க,

"என்ன நிவி! நீ புத்திசாலி நினச்சேன். நீயும் ராம் மாதிரி தானா?" என கேட்க, ராம், நிவி இருவரும் முறைக்க, "அதில்ல டா! உன்னை சிஸ்டர்னு சொல்லிட்டேன். அப்புறம் எப்படி நான் உன்னை கலாய்க்க முடியும்? அதான்..." என இழுக்க, நிவி ராம் இருவரும் சிரிக்க "நிவிஈஈஈ" என பல்லைக் கடித்தாள் வாசு.

"ஹேய் சும்மா தான் சொன்னேன் கூல். பல்லு வெளில வந்துடபோது" கௌதம்.

"ஹெல்ல்ல்லோ.." என சண்டைக்கு வாசு தயாராக,

"அய்ய! என்ன நிவி உன் பிரண்ட்க்கு சிரிக்கவே தெரியாதா?" என்றதும்,

"ஆமா அண்ணா! அப்டியே உங்க பிரண்ட் மாதிரி" என ராமை சுட்டிக் காட்டினாள் நிவி.

"அவனை நீ கலாய்க்கலாம். அதுக்கெல்லாம் நான் கேள்வி கேட்க முடியாது" என கௌதம் சொல்ல,

"என்ன ண்ணா சொல்றிங்க?"

"ம்ம்! அவனுக்கு இப்ப கட்டம் சரி இல்லனு சொல்றான்" என ராம் கூற, "ஹப்பா உங்க பிரண்ட்க்கு பேச்சு வந்துடுச்சு" என நிவி சொல்ல இப்போது சிரிப்பது கௌதம், வாசு முறையானது.

"தேங்க் யூ அண்ணா! ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கிங்க. கண்டிப்பா இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்று சொல்லி விடைபெரும் நிவியை ராம் வைத்தகண் வாங்காமல் பார்த்தான்.

"நிவி உன் பிரண்ட்க்கும் இது மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லி குடு டா. எதுவுமே சொல்லாமல் போறாங்க?" மீண்டும் போய்க் கொண்டிருந்த வாசுவை கௌதம் வம்பிழுக்க,

"வேண்டாம் ஜீ! அவ வேற மாதிரி" என்று பொடி வைத்து பேசிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றாள் நிவி.

“அய்யயோ! இப்படி சொல்லி எனக்கு இன்னும் இன்ட்ரெஸ்ட் கொடுக்காத டா. அப்புறம் நானே உன் பிரண்ட்டை லவ் பண்ணிட போறேன்” என கௌதம் கத்தி சொல்ல, ஆட்காட்டி விரலை பத்திரம் என காட்டி மிரட்டி சென்றாள் நிவி.

“ராம் சூப்பர் டா! நிவி செம்மல? ஆனால் உனக்கு இந்த மாதிரி பொண்ணு தான் டா கரெக்ட்டு. எனக்கு சிஸ்டரை ரொம்ப பிடிச்சு போச்சு டா. பியூச்சர்ல உன்னை கண் கலங்காமல் பத்துக்குவா” நிவி சென்ற பின் கௌதம் ராமிடம் பேசிக் கொண்டே வர, ராம் புன்னகையோடு வந்தான்.

“சரியான அழுத்தம் டா நீ! எதையாவது வெளில சொல்றியா” என்றதற்கும் சிரிப்பு மட்டுமே!

“ஏண்டி அறிவிருக்கா உனக்கு? யார் கூப்பிட்டாலும் கார்ல ஏறிடுவியா? இதுல என்னை வேற அவன் கலாய்க்கிறான்! நீயும் பல்ல பல்ல காட்டுற?” வாசு முகத்தில் இருந்த துப்பட்டாவை விலக்கிக் கொண்டே கேட்டாள்.

“வாசு, அந்த அண்ணா பாக்குறதுக்கு மட்டும் இல்ல பேசி பார்த்தாலும் நல்லவரா தான் இருக்காங்க”

“உன் அண்ணன் தங்கச்சி பாசத்தை எல்லாம் உன்னோட வச்சிக்கோ. என்கிட்ட இனி அவன் வாலாட்டுனா அவ்ளோதான். சொல்லிவை!” வாசு சீரியஸ்சாக பேசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் காதில் வாங்காமல் வேலையில் ஆழ்ந்தாள் நிவி.

“நிவி உன்னை எடிட்டர் கூப்பிடுறாங்க” என ஒருவன் சொல்ல, தன் கேபின்னில் இருந்து எழுந்து எடிட்டர் அறைக்கு சென்றாள்.

தொடரும்..