• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 10

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -10





விடிகாலை பொழுது கதிரவன் மெல்ல தன் சிறகினை விரிக்க இங்க ஒரு மலர் மயிலாக மாறி இளநீல பச்சை வண்ணத்தில் சுடிதார் அணிந்து ஓயிலாக நடந்து வர பார்த்த காவேரி அத்தையோ திகைத்து போய் நின்றார்.

அவர் அருகில் வந்தவள் “எப்படி அத்தை இருக்கிறது என சிறு குழந்தை போல் சுற்றி காட்ட அவரோ உனகென்னடி ராஜாத்தி....என் மருமகள் எப்பவும் அழகுதான் என நெட்டி முறித்தவர் இவ்வளவு சீக்கிரம் போகனுமா ரோஜா ,,,வெளியே ஒரே குளிரா இருக்கே” என கவலையாக கேட்டார்.

“ஆமாம் அத்தை....சார் சீக்கிரம் வர சொன்னார்......தாமதமாக சென்றால் அந்த பிதாமகன் வேறு பினாத்த ஆரம்பிச்சுடுவார்” என அந்த நேரத்திலும் தேவாவை பற்றி குறை சொல்லி கொண்டே கிளம்பினாள்.

“நீ எப்படி செல்வாய் ரோஜா நான் வேண்டுமானால் கூட வரட்டுமா “என காவேரி சொல்லும்போதே

“சார் கார் அனுப்புகிறேன் என்று சொன்னார் அத்தை......இதோ வந்திடுச்சு என்றவள்...நான் வர நேரமாகும்....எனக்காக காத்திருக்க வேண்டாம் அத்தை....இந்த காரிலே வந்து விடுவேன்” அவரிடம் சொல்லி கொண்டே காரில் ஏறினாள். அவள் செல்வதை பார்த்து கொண்டு இருந்த காவேரி முன்பு இருந்த நிலைக்கு இப்போது ரொம்பவும் மாறிவிட்டாள் என மனதில் நினைத்து நிம்மதி அடைந்தார்.

காரில் செல்லும்போது இரண்டு நாட்களாக பார்த்து பார்த்து எல்லா வேலைகளையும் ரோஜாவும் பட்டாபியும் செய்ய தேவாவும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டான்.அப்போது நடந்த வாக்குவாதங்கள் ரோஜாவிற்கு இப்போது நினைத்த போதும் சிரிப்பு வந்தது.

பல நேரத்தில் தேவாவின் ரசனையும் ரோஜாவின் ரசனையும் ஒத்து வராமல் இரே சண்டையாக இருக்கும்.இடையில் மாட்டிக்கொண்டு பட்டாபி தான் படாதபாடு படுவான்.

அதில் முதல் தளம் மட்டும் அன்னை இலவச சட்ட ஆலோசனை மையம் இருக்க மற்ற இரண்டு தளமும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு இருந்தது. முதல் தலத்தில் தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.....ஒரு சமயம் உணவு இடைவேளையில் அனைவரும் சென்றுவிட ரோஜாவும் பட்டாபியும் மட்டுமே இருந்தனர்.....அப்போது ரோஜா “ஏன் பட்டாபி இந்த இடம் தான் அந்த மாறன் கேஸ்ல நம்ம சார் ஜெயிச்சு அப்படி சொல்ல முடியாது நியாத்தை விற்று கூலியாகா வாங்கியதா” என கேட்டாள்.

ஆமாம் ரோஜா...அதே இடம் தான்....ஆனால் அதை நம்ம சார் பொது காரரியத்திற்குதானே பயன்படுத்துகிறார்......அவர் நினைத்தால் சொந்தமாக இங்கு பெரிய வணிக வளாகமே கட்டலாம்.....ஆனால் அவர் அது போல் செய்யவில்லை......இலவசமாக மக்களுக்கு சேவைதானே செய்கிறார் ...அவரை குறை சொல்லாதே ரோஜா “என்றான் பட்டாபி.

“ஆமாம் இவரு பெரிய ராபின் ஹூட்டு....கொள்ளையடிச்சு மத்தவங்களுக்கு தானம் செய்கிறாராம். ....ஏன் பட்டாபி நீயும்இப்படி ஏமாந்து போகிறாய்.....அன்னை தெரசாவும் தான் மத்தவங்களுக்கு உதவி செய்தாங்க...அவங்க அநியாயம் செய்தா சம்பாரித்தார்கள்.....ஒருவர் காரிஉமிழ்ந்த போது கூட துடைத்து கொண்டு எனக்கு கொடுத்த சன்மானம் இது........இப்போது ஆதரவற்றோர்களுக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று அல்லவா கேட்டார். அதற்கு பெயர் சமூக சேவை ........இவர் செய்வது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என அவள் கோபமாக சொன்னாள்.நீயே பார் இன்னும் இரண்டு தளங்கள் எல்லாம் அதிக வாடகைக்கு விட்டு இவர் பணம் சம்பாரிப்பார் ” என்றாள்.

பட்டாபி எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

“ஏன் பட்டாபி அப்படி பார்க்கிறாய் என கேட்க ....அவன் ஒன்றும் இல்லை என தலை அசைத்தவன் நீ இன்னும் சாரை பற்றி புரிந்து கொள்ளாமல் பேசுகிறாய்.....ம்ம்ம் அவரை பற்றி என்ன தெரியும் உனக்கு......அவர் எப்படி பட்டவர் என தெரியுமா” என அவன் கேட்க

“எல்லாம் எனக்கு தெரியும் பட்டாபி.பணத்திற்காக எதுவும் செய்யும் ஒரு மனிதர்...... எப்போது பார்த்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்து கொண்டு சிரிப்பு என்ன விலை என்று கேட்பார்......மற்றபடி குறை சொல்லுவது போல் எதுவும் இல்லை என்றவள் உனக்கு இது தப்பாவே தெரியலையா “ என கேட்டாள்.

“அவரை பற்றி தெரியாமல் பேசுகிறாய் ரோஜா ...அவர் “என அவன் ஆரம்பிக்க

“உங்களை வேலை செய்ய அனுப்பினால் இங்கு அரட்டை அடித்துக்கொண்டு இருக்குறீர்கள்.......இந்த தோரணம் எல்லாம் யார் கட்டுவது......உங்கள் வீட்டில் இருந்து யாரவது வருவார்களா” என வேகமாக கேட்டுகொண்டே தேவா உள்ளே வர

“வந்திட்டாருப்பா பிதாமகன்.......கொஞ்சம் ப்ரீயா பேசிட்டு இருக்க கூடாதே மூக்கு வேர்த்திருமே” என அவள் முனக

“இதோ இப்போ முடிச்சிட்றோம் சார்” என்றான் பட்டாபி.

“ம்ம்ம் இங்க பாரு ரோஜா நாளைக்கு சித்தி வரும்போது இப்படி டேபிள் மேல எல்லாம் ஏறி உட்காரா கூடாது....அவங்களுக்கு அது பிடிக்காது.உன்னோட சேட்டை எல்லாம் நாளை ஒரு நாள் மூட்டை கட்டி வை.......அவங்க எனக்கு குரு....என் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருகிறார்கள......உன் துடுக்குதனத்தால் ஏதாவது மரியாதை குறைவாக நடந்தால் அப்புறம் நடப்பதே வேறு ” என அவன் மிரட்ட

“அவள் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னது சித்தியாயாயயாய என இழுத்தவள் சார் நீங்க விஐபி ஒரு நீதிபதி என்றுதானே சொன்னீங்க .....இப்போ சித்தின்னு சொல்றிங்க....சித்திக்கா இவ்ளோ ஆர்பாட்டம்” என கேட்க

அவளை முறைத்தவன் “அந்த நீதிபதி தான் என் சித்தி.சரி சரி நீ வேலையும் செய்ய மாட்டாய் ....மற்றவர்களையும் வேலை செய்ய விடமாட்டாய்.....போ ...போய் வேலைய பார் என சொல்லிவிட்டு நகர்ந்தான்.ஆமாம் எப்போ பார்த்தாலும் இந்த அதட்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை” என முனகிகொண்டே அவள் நகர பட்டாபி அவளை இழுத்து சென்றான்.

அதை நினைக்கும்போது காரில் இருந்தவளுக்கு தானாக சிரிப்பு வர அதற்குள் அவள் இறங்கும் இடமும் வந்தது.

காரில் இருந்து இறங்கியவள் அங்கு பெரிய மனிதர்கள் என்று யாரும் இல்லை......மாணவர்கள் கூட்டம் கொஞ்சம் பின்னர் நீதி மன்றத்தில் பார்த்த வக்கீல்கள் முகமாக இருந்தது.....நல்லவேளை இன்னும் யாரும் வரவில்லை என நினைத்துகொண்டே வேகமாக உள்ளே சென்றவள்

அந்த அறையில் அப்போது தான் தேவா தனது சிகையை சரி செய்து கொண்டு இருந்தான்.....வேகமாக உள்ளே நுழைந்த ரோஜா அப்படியே திகைத்து நிற்க

கண்ணாடின் வழியே அவளை பார்த்தவன் வேகமாக திரும்ப வண்ணமயில் தோகை விரித்து நிற்ப்பது போல் ரோஜா நிற்க..... ,சர்வாணி உடையில் கம்பிரமாக தேவா நிற்க இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

முதன் முதலில் அவனை பட்டு வேஷ்ட்டியில் பார்த்த போது என்ன உணர்வு தோன்றியதோ அதே போன்றே இன்றும் இந்த உடையில் பார்த்ததும் அவள் மனம் சற்று தடுமாற

அவனோ அப்படியே இமைகளை இமைக்க மறந்து அப்படியே பார்த்து கொண்டிருந்தான்.அதற்குள் பட்டாபி சார் என அழைத்து கொண்டே உள்ளே வர சட்டென்று இருவரும் தன் நிலைக்கு திரும்பினர்.

உடனே தேவா “என்ன பட்டாபி என்ன வேண்டும் என கேட்க....உங்களை வெளியே கூபிட்றாங்க சார்” என்றான். .

.ரோஜாவோ தன் நிலை குறித்து தனக்கே கோபம் வர....இனி இது போல் இருக்க கூடாது என மனதில் முடிவு செய்தவள் விழா முடிந்த உடன் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்

அதற்குள் தேவாவின் சித்தி நீதிபதி mrs ஜெயந்தி ரிப்பன் கட் செய்து உள்ளே நுழைந்தார். அனைவரும் வாழ்த்து தெரிவிக்க பின்னர் சிறப்பு விருந்தினரை வந்திருந்தவர்கள் சில வார்த்தைகள் பேச சொல்ல தேவாவை பற்றி மற்றும் சட்டத்தின் முக்கியத்துவம் அதை வக்கீல்கள் எந்த அளவு உயிராக நேசிக்க வேண்டும் என பேசினார். பின்னர் தேவா அவரை அழைத்து சென்று எல்லா இடங்களையும் சுற்றி காட்டினான்.

அவள் அறையை விட்டு வெளியே வரவும் ...தேவாவும் சிறப்பு விருந்தினரும் அந்த அறைக்குள் உள்ளே நுழைய “ஹே பஞ்சுமிட்டாய் என குரல் அருகில் இருந்து வர வேகமாக திரும்பியவள் அங்கு ஜெயந்தியை பார்த்ததும் ஹே ஜேவி நீங்க எங்க இங்க....அச்சோ பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.....எப்படி இருக்கீங்க “என முகத்தில் உற்சாகம் போங்க அவள் ஜெயந்தின் அருகே ஓடி சென்று அவரை அணைத்து கொள்ள

அவளது சத்ததை கேட்டு சுற்றி இருந்தவர்கள் திரும்பி பார்க்க ....அதை பார்த்த தேவா ரோஜா எல்லாரும் பார்கிறாங்க.....இவங்க நம்ம கெஸ்ட் அப்புறம் ஒரு நீதிபதி ....அதற்குரிய மரியாதைய கொடுக்கணும்...கொஞ்சம் அவங்களை விட்டு விலகுகிறாயா” என வார்த்தைகளை மெதுவாக கடித்து துப்ப.....உடனே வேகமாக அவரிடம் இருந்து அவள் நகர்ந்தாள்.

அதற்குள் ஜேவி...... “ஹே தேவா நீ ஏண்டா அவளை திட்டுற ....அவ என் செல்லம் என்றவர் நீ வாடி ராஜாத்தி” என அவளை இழுத்து தன்னிடம் நிறுத்தி கொண்டார்.

தேவா ரோஜாவை முறைக்க......அவளோ அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்து கொண்டு ஜேவியின் அருகில் நின்றாள். ....”உடனே தேவா சித்தி ரோஜாவை உங்களுக்கு எப்படி தெரியும்” என கேட்டான்.

“தானே புயல் நிவாரண முகம் போயிருந்தோம் இல்லயா ....அதுல இவங்க கல்லூரியில் இருந்தும் வந்திருந்தாங்க....அதன் மூலமாக தெரியும்.......என்னோட பிரண்டு அங்க இவள்தான்.......ரொம்ப நல்ல பொண்ணு ரோஜா ......அங்க இருக்கிற எல்லாரிடமும் எவ்ளோ அன்பா பழகினா தெரியுமா ?அவ இருக்கிற இடத்தில் எப்பவும் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்....... .....எப்படி உன்கிட்ட வந்து சேர்ந்தா..........நீ சிரிக்கவே கூலி கேட்பாய்” என அவர் தேவாவை வாற ரோஜாவோ சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அதை கவனித்த தேவாவின் முகம் கடுமையாக “சரி சரி சித்தி நீங்க வாங்க ....அங்க முக்கியமான நபர்கள் எல்லாம் உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க” என அவரை அங்கிருந்து நகர்த்தும் முயற்சில் அவன் இறங்கினான்.

அவரோ “அடபோடா ...எப்பவும் அவங்களோடதான பேசிட்டு இருக்கேன்.......கொஞ்ச நேரம் ரோஜாவோட பேசிட்டு வரேன்......அப்புறம் நீ சொல்லு ரோஜா எப்படி இருக்க....உன்கூட வால் மாதிரி ஒருத்தி சுத்திட்டு இருப்பாளே அவ பேரு என அவர் யோசிக்க ...தரணிய சொல்றிங்களா என அவள் கேட்க ....ம்ம்ம் அவள் தான் எப்படி இருக்கிறாள்” என்றார் .

“அவள் நன்றாக இருக்கிறாள் ஆண்ட்டி ......நான் எதிர்பார்க்கவே இல்லை உங்களை சந்திப்பேன் என்று.......ரொம்ப சந்தோசமாக இருக்கு” என உற்சாகத்தில் அவள் குதுகலிக்க

“எனக்கும் தான் ரோஜா....அங்கு உங்களுடன் இருந்த நாட்கள் என் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள்” என அவர்கள் அந்த கதை பேசிகொண்டிருக்க இனி அவர் அங்கிருந்து நகரபோவதில்லை என நினைத்து அவன் நகர ....தேவா அப்படியே அந்த நாற்காலியை கொஞ்சம் இங்கே எடுத்து வாயேன் என அவர் சொல்ல ரோஜாவோ அப்போது தேவாவின் முகத்தை பார்த்து இருந்தாள் பஸ்பமாகி இருப்பாள்.அது தெரிந்து அவள் அவன் பக்கம் திரும்பவில்லை.....பதில் ஏதும் சொல்லாமல் சென்ற தேவா பின்னர் யாரோ ஒருவன் இரண்டு நாற்காலிகள் எடுத்து வந்து போட்டான். ...

“அப்புறம் ஜேவி சொல்லுங்க .....நீங்க இணையத்தில் ஒரு சமூக வலை தளத்தில் எழுதுற கட்டுரை எல்லாம் சூப்பர் ஜேவி....அப்புறம் அது என்ன எப்போ பார்த்தாலும் மாமியார் மருமகள் சமாளிப்பது எப்படி....குடும்பம்,மனைவி ,கொழுந்தனார் நாத்தனார் எல்லாம் எப்படி சமாளிப்பது அப்படினே எழுதறிங்க.......அப்புறம் சமையல் பக்கம் போய்ட்ரிங்க...என்ன ஜேவி நீங்க உங்க லெவலுக்கு இதெல்லாமா எழுதறது. அதெல்லாம் வயசானவங்க பண்றது.......

நம்மளை மாதிரி இளவயதினருக்கு பயன்படுவது போல் செல்போனில் ரீசார்ஜ் பண்ணாமல் பேசிகொண்டே இருப்பது எப்படி?.......வகுப்புக்கே செல்லாமல் முழு அட்டன்டன்ஸ் எப்படி வாங்குவது ?......பரிட்சைக்கே செல்லாமல் பாஸாவது எப்படி ? இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் கொடுத்தா எல்லாருக்கும் பயன்படும்.கொஞ்சம் யோசிங்க ஜேவி யோசிங்க.......உங்களுக்கு எப்போதும் இளையதலைமுறை சப்போர்ட் இருக்கு......அதை சரியா பயன்படுத்திக்குங்க ஜேவி” என பெரிய மனுசி போல் அவள் சொல்லி கொண்டிருக்க

“அடிபாவி நான் எவ்ளோ உபயோகமான தகவல்களை எல்லாம் தருகிறேன்....உன்னை எல்லாம் என செல்லமாக அவள் தலையில் தட்டியவர் இதோட அருமை உனக்கு திருமணம் ஆனதிற்கு பின்னால் தெரியும்” என்றார்.

உடனே அவள் சிரித்து கொண்டே “இல்ல ஜேவி இது உங்க ரசிகர்கள் விருப்பம் அதான் சொன்னேன் என சொல்லிவிட்டு ஆனால் இது ரசிகர்களுக்கு தெரியவேண்டாம்” என ரகசியம் போல் சொல்லி கண்ணடிக்க

“ஜேவியோ அப்படியா.......இன்னும் உனக்கு அந்த குறும்பு போகலை என அவளை தன தோளோடு அணைத்தவர் இந்த மாதிரி நான் யோசிக்கவே இல்லயே என்றவர் சரி ரோஜா இனி பார்.....நீ சொன்ன மாத்ரி டிப்ஸ் கொடுத்து அசத்திறேன் என சொல்ல ...... சூப்பர் ஜேவி நீங்க கலக்குங்க” என்றாள்..

அதற்குள் பட்டாபி அங்கு வர அவனை அழைத்து ஜேவிக்கு ரோஜா அறிமுகம் செய்து வைத்தாள். உடனே பட்டாபி “என்ன ரோஜா..... மேடம் பேரு ஜெயந்தின்னு சார் சொன்னார் ...நீ ஜேவினு சொல்ற என கேட்க ...ரோஜாவோ இல்லை பட்டாபி அங்கிள் பேரும் சேர்த்து சொல்கிறேன் நான் என விளக்கம் சொன்னவள் இதுல எல்லாம் கேள்வி கேளு....அங்கு பிதாமகன் எது சொன்னாலும் ஜால்ரா போடு” என அந்த நேரத்திலும் அவனை கிண்டல் செய்தால் ரோஜா.

பின்னர் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு தனது அலைபேசி எண்ணை ரோஜாவிடம் தந்தவர் எந்த உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணவேண்டும் என சொல்லிவிட்டு தேவாவிடம் தனியாக சிறிது நேரம் பேசியவர் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார்.

அதற்க்கு பின்பு அனைவரும் கிளம்ப ஒரு சிலர் மட்டும் காத்து இருந்தனர்.தேவாவும் ரோஜாவை புறப்பட சொன்னவன் ஒரு அவசர வேலை இருப்பதாக கூறி மாடிக்கு சென்றான்.

அதற்குள் அந்த கார் டிரைவர் வெளியே சென்று விட சிறிது நேரம் அங்கிருந்த நாற்காலியில் அவள் அமர்ந்திருக்க அவள் அருகில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் ஏதோ கொலை குற்றம் செய்தவர்கள் போல் கொஞ்சம் முரட்டு மனிதர்களாக தெரிந்தனர்..

நேரத்தை போக்குவதற்காக அவர்களிடம் அவள் பேச்சு கொடுக்க ஆனால் யாரும் அவளிடம் பேசவில்லை. ஏன் என அவள் யோசித்து கொண்டிருக்கம் போதே மாடியில் இருந்து பட்டாபி கீழே வந்தவன் சங்கிலி சோமு உன்னை சார் மேலே வர சொன்னார் என்றான்.உடனே ஆஜானுபாவனா உடலுடன் ஒருவன் மாடிக்கு செல்ல அதற்குள் ரோஜாவிடம் வந்த பட்டாபி “நீ கிளம்பாமல் இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்” என கேட்டான்.

“இன்னும் டிரைவர் வரலை பட்டாபி என்றவள் ஆமாம் இவர்கள் எல்லாம் யார்...எதோ அடியாட்கள் போலவே இருக்கங்களே ......இவங்களுக்கு இங்கு என்ன வேலை .....நம்ம சார் எதாவது இவர்களை வைத்து மாஸ்டர் பிளான் போடர்றாரா” அவள் கண்களை உருட்டி கேட்க

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் “ரோஜா இவர்கள் எல்லாம் யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசமாட்டாய்” என நிதானமாக அவன் சொல்ல

அவள் கிண்டலாக “ஏன் பட்டாபி இவங்க எல்லாம் கொலைகாரனுகளா” என சிரித்து கொண்டே கேட்க

“ஆமாம்” என அவன் தலை ஆட்ட

“ஹே என்ன இது பட்டாபி...விளையாடுவதற்கு ஒரு அளவு இல்லயா ......கொலைகாரனுக எதுக்கு நம்ம சார பார்க்க வரனும் ...ஒரு வேலை அவங்க சார்பா வாதடனும்னா...அப்படி என்றாலும் இருபது பேருக்கு மேல இருக்காங்க .....அதனை பேருக்கும் எப்படி” என அவள் அவனை பார்க்க

“ரோஜா இவங்க எல்லாம் சிறை தண்டனை முடிஞ்சு வெளியே வந்தவங்க ......ஆனா இவங்களுக்கான மறுவாழ்வு என்ன?அதான் இப்போ சார் பண்றார் “என்றான்.

“எனக்கு புரியல பட்டாபி......நீ இப்போ என்ன சொல்ற” என அவள் புரியாமல் கேட்க

“ரோஜா நம் நாட்டில் சட்டங்கள் அனைத்தும் குற்றம் சாட்டபட்டவனுக்கு தண்டனை வழங்குகிறதே தவிர அவன் விடுதலை கிடைத்து வெளியே வந்தும் இந்த உலகில் மரியாதையாக வாழ எந்த உதவியும் செய்வது இல்லை.....எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போது கெட்டவனாக பிறப்பதில்லை......சூழ்நிலைகள் அவனை அப்படி மாற்றி விடுகிறது......அதற்க்கான தண்டனை பெற்று அவன் திருந்தி வாழ நினைத்தாலும் இங்கு வாழ வழி இல்லை.....இதுதான் உண்மை.ஒருவனை குற்றவாளியாக பார்த்துவிட்டால் மீண்டும் அவனை நல்ல மனிதனாக ஏற்று கொள்ள இந்த சமுதாயம் மறுக்கிறது.அதனால் அவன் தவறான வழிக்கே மீண்டும் மீண்டும் செல்கிறான்.”

“அதே தவறை அரசியலில் இருப்பவர்கள் செய்தால் அவர்களை உயர் பதவியில் வைத்து பார்க்கும் இம் மக்கள் ஏன் சாதாரண மனிதன் உணர்ச்சிவேகத்தில் செய்யும் தவறை அவன் தண்டனை பெற்ற பின்பும் அவனை அவர்கள் சராசரி மனிதனாக ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்”.

உடனே ரோஜா “சரி பட்டாபி...இது எல்லாருக்கும் தெரிஞ்சது தானே......இதற்கு நாம் என்ன செய்வது? அவர்கள் தவறு செய்வதற்கு முன்பு யோசித்து இருக்க வேண்டும்.....அவர்களை எல்லாம் மன்னித்து ஏற்றுகொண்டால் பின்னர் எல்லாரும் இப்போது குற்றம் செய்தாலும் அப்புறம் நல்லவர்கலாக மாறிவிடலாம் என நினைக்க மாட்டார்களா ...அது எல்லாம் தப்பு பட்டாபி ....குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்...அது சிறை தண்டனையாக இருந்தாலும் சரி....சமுதயாத்தில் மக்கள் கொடுக்கும் தண்டனையாக இருந்தாலும் சரி......அவன் ஏற்று கொள்ளவேண்டும்...அப்போது தான் அதை பார்த்து மற்றவர் குற்றம் செய்ய யோசிப்பார்கள்” என்றாள்.

அவன் சிரித்து கொண்டே “நீ பேசுவது எல்லாம் படித்ததும் கேட்டதும் வைத்து பேசுகிறாய் ரோஜா.....ஆனால் நான் பேசுவது அனுபவம் ....ஒருவன் ஒருமுறை தவறு செய்தால் அதற்க்கு அவன் ஆயுள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும்மா? அவன் மனம் மாறினால்” என அவன் நிறுத்த

“சரி விடு பட்டாபி..........நான் சொல்வது உனக்கு புரியவில்லை........இப்போது இவர்கள் இங்க வந்து இருப்பதற்கு என்ன காரணம்......நம்ம சார் எதாவது வேலை கொடுக்கிறாரா? அப்படியே இருந்தாலும் எல்லாருக்கும் கொடுக்க முடியாது இல்லயா ....ஒருத்தர் இருவருக்கு கொடுக்கலாம்” என அவள் யோசிக்க

அவன் சிரித்து கொண்டே “இல்லை ரோஜா மேல் தளத்தில் இருக்கும் இருபது கடைகளும் இவர்களுக்கு சார் வாடகைக்கு விடபோகிறார்.....இதில் இவர்கள் எதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம்.....அதற்க்கான நேர்காணல் தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது...... யாருக்கு உண்மையாகவே திருந்தி வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அவர்களுக்கு இங்கு கடை உண்டு” என்றான்.

“அப்படியா” என அவள் வாய் பிளக்க

“அதும் மட்டும் இல்லை ரோஜா.......இந்த மாறன் கேஸ் இருக்குல்ல.....அவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள்.......இந்த முறை இவர்கள் பொறுபில் இல்லாததால மற்றவர்களை காட்டிகொடுகிறார்கள்....அடுத்த முறை அவர்கள் வந்துவிட்டால் இதே வேலையை அவர்கள் செய்வார்கள்......அவர்களை எல்லாம் திருத்துவது ,தண்டிப்பது விட......... இது போன்ற குற்றவாளிகளை திருத்துவது எவ்ளோவோ மேல் அதான் நம்ம சார் செய்கிறார்” என்றான் பட்டாபி.

“ஏன் பட்டாபி இவர்கள் எல்லாம் திருந்துவார்களா? .......ஒரு முறை கொலைசெய்தவன் மறுமுறை அதற்கு அஞ்சமாட்டனே...இவர் தேவை இல்லாமல் சமூகத்தை திருத்துகிறேன் என்று குளறுபடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்.........இங்கு கீழே இலவச சட்ட ஆலோசனை மையம்...மேலே கொலைகாரர்கள் கடை....இங்கு வரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு...இவர்களை எப்படி நம்புவது ?மேலும் இது எப்படி சாத்தியம்” என அவள் சொல்லிகொண்டிருக்கும்போதே

“ஸ்டாப்பிட் ரோஜா என பட்டாபி கத்த அவன் முகம் ரௌத்திரமாக இருக்க ,உன்னை போன்ற ஆட்களினால தான் நாங்க இப்படி இருக்கிறோம்......உங்களுக்கு நல்லவிதமான குடும்பம் அமைந்ததால் நீங்கள் நல்ல வழியில் செல்கிறீர்கள் .....இவ்ளோ படித்து இருந்தும் நீயும் இப்படிதானே இருக்கிறாய்....உன்னை எல்லாம் யார் வக்கீல் தொழில் எடுத்து படிக்க சொன்னது” என கோபத்தில் அவன் ஏதோ ஏதோ பேச

அவனது இந்த கோபத்தை எதிர்பார்க்காத ரோஜா ..”ஹே பட்டாபி என்ன இது....நான் ஒரு பேச்சுகாகதான் இது சொன்னேன்......மற்றபடி என்றவள் அவன் கைகளை பிடித்து அமரவைத்து அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க அதை வாங்கி குடித்தவன் சாரி ...சாரி ரோஜா என்றவன் ஏன் ரோஜா தப்பு செய்தவர்கள் திருந்தவே மாட்டர்களா...அவர்களும் சாதாரண மனிதர்களாக வாழவே முடியாதா” என கண்களில் ஏக்கத்துடன் குரலில் வருத்தத்துடன் அவன் கேட்க

ரோஜா ஏதும் சொல்லாமல் அவனயே பார்க்க

அவனும் அவளயே பார்க்க

“நீ என்ன சொல்ல வருகிறாய் பட்டாபி” என அவள் அழுத்தமாக கேட்க

“நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாய் ரோஜா” என்றான் திடீரென்று

“ஏன் பட்டாபி...நீ ரொம்ப நல்லவன்......பாசமானவன் ......நல்ல அறிவாளி”.....என அவள் சொல்ல

“பதிமூன்று வயதில் கஞ்சா வாங்க கூட பிறந்த தங்கையை கட்டையால் அடித்து போட்டுவிட்டு பணத்தை எடுத்துகொண்டு ஓடிவந்தவன் நான்” என அவன் சொல்ல

அவள் சிரித்துகொன்டே “யாரு நீயா என்றவள் முதலில் கட்டையை தூக்கிற அளவு தெம்பு உனக்கு இருக்கா......அம்மாஞ்சி மாதிரி இருந்துகிட்டு எதுக்கு அந்நியன் மாதிரி செஞ்சேன்னு சொல்லிட்டு இருக்க” என அவள் பேசிக்கொண்டு இருக்க

“ஆனா என் தங்கை இறந்து போகலை...அதுநாள எனக்கு தண்டனை குறைவாக தந்து என்னை சீர்த்திருத்த பள்ளியில சேர்ர்த்துவிட்டங்க என்றவன் ......எங்க அப்பா நல்ல குடிகாரர்...அவரை பார்த்து எனக்கும் குடிபழக்கம், கஞ்சா பழகிடுச்சு.....ஒரு முறை வீட்டில் பணம் அம்மாவிற்கு தெரியாமல் திருட அதை என் தங்கை பார்த்து விட்டு அம்மாவிடம் சொல்லி விடுவேன் என சொல்லி அம்மா என கத்த...எங்கே அம்மா வந்தால் அடித்து விடுவாரோ என பயந்து அருகில் இருக்கும் கட்டையை எடுத்து அவளை அடித்து விட்டு நான் ஓடிவிட்டேன்” ........என்று நிறுத்தியவன்

தீர்ப்பு சொன்ன அந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள் அவன் தொடர ரோஜா பேச்சை நிறுத்திவிட்டு அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

“அன்று நீதிமன்றத்தில் என் தங்கையை அழைத்து வந்திருந்தாங்க......எங்க அம்மா உறவினர்கள் எல்லாரும் என்னை கண்டபடி திட்டினார்கள், ஏசினார்கள்...........என் அம்மா நீ இனி என் முகத்தில் முழிக்காதே என்று சொல்லிவிட்டார்கள்.தீர்ப்பு முடிந்து நான் வெளியே வர வேகமாக ஓடிவந்த என் பத்து வயது தங்கை அண்ணா நீ அன்னைக்கு காசு வேணும்னு சொன்னிங்கில ...இந்தாங்க ......அது அம்மா காசு அதான் தரலை.......அதுக்குள்ள நீங்க என்னை அடிசுட்டிங்க......நான் கீழே விழுந்திட்டேன்.....அப்புறம் உங்களை பார்க்கவே முடியல......இத வச்சுக்குங்க இது என் காசுனா.........அப்படியே வரும்போது எனக்கு மிட்டாய் வாங்கிட்டு வாங்க என கையில் அவள் ஐம்பது பைசாவாக சில சில்லறை காசுகளை தந்தாள்.பின்னர் மெதுவாக அவள் அருகில் என்னை இழுத்து என் காதுக்குள் அண்ணா நீங்க கவலைபடாதிங்க...இனி அம்மா எனக்கு தினமும் திண்பண்டம் வாங்க காசு தரேன்னு சொல்லுச்சு....அதை அப்படியே வச்சிருக்கேன் உங்களுக்கு என சொல்ல அந்த நிமிடம் நிஜாமாக சொல்கிறேன் ரோஜா மனசுக்குள் செத்து போனேன் தெரியுமா......நான் செய்தது எவ்ளோ பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது....ஆனால் என்ன பிரயோஜனம்.......

சீர்திருத்தபள்ளியில் என் நன் நடத்தையால் நல்ல பெயருடன் வெளியே வந்தேன்......எங்கு செல்வது....வெளியே சென்று வேலை தேடியபோது நீ ஜெயிலில் இருந்தவனா என கேட்டு என்னை ஒதுக்கினர்........அந்த சூழ்நிலை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நடுங்குகிறது.......மறுபடியும் பழைய நிலைக்கே சென்று விடுவோமா என திகைத்து நின்றபோதுதான் எனக்கு சாரின் அறிமுகம் கிடைத்தது....பின்னர் அவர் தான் என்ன படிக்க வைத்தது எல்லாம்என்றவன் இப்போது சொல் ரோஜா தவறு செய்தவன் திருந்த மாட்டானா......அவர்களும் மனிதர்கள் தானே...... நான் மட்டும் இல்லை ரோஜா ...என்னை போல் சீர்திருத்தபள்ளியில் படித்து வெளியே வரும் சில மாணவர்களை அவர் படிக்க வைத்து கொண்டு இருக்கிறார் “ என அவன் சொல்லிமுடித்து அவள் முகம் பார்க்க

அவ்ளோ அப்படியே அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தாள்......அதற்குள் கார் டிரைவர் வந்துவிட அவள் பட்டாபியிடம் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி சென்றுவிட்டாள்.



காற்று நுழையாத இடமும் இல்லை

தவறு செய்யாத மனிதனும் இல்லை

குற்றத்திற்கு தண்டனை அளிப்பதில்

காட்டும் ஆர்வம்

மேலும் அந்த குற்றம் நடக்காமல் இருக்க

யாரும் முனைவது இல்லை....

பணம் படைத்தவன் ஊழல் என்ற பெயரில்

தனது முகத்தை மறைத்து கொள்கிறான்.

பணம் இல்லாதவனோ கொள்ளைக்காரன்

என்ற முத்திரை குத்தபட்டு தண்டிக்கபடுகிறான்.

தவறுகளை மன்னிப்பதில் மாகாத்மாவாக

நாம் மாறவேண்டாம்....

மனம் திருந்தி வருபவர்களை

ஒரு சராசரி மனிதனாக

நாம் ஏன் ஏற்றுகொள்ள கூடாது.

இனியாவது யோசிப்போமா ??????????????

 
  • Like
Reactions: Kajol Gajol