• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 15

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -15



ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறாயா என சேகர் கேட்க இதை சற்றும் எதிர்பார்க்காத ராம் அவனோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் ....”எதற்காக திடீரென்று இந்த திருமண பேச்சு வந்தது” என்று கேட்டான்.

“இல்லை ராம் பார்வதியிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள் .........இந்த மாதிரி மனநிலையில் உள்ளவர்கள் வேறு சூழ்நிலைக்கு மாறினால் அவர்கள் விரைவில் சரியாகிவிடுவார்கள் என்றும்....மேலும் சென்ற முறை மருத்துவரும் அதை தான் கூறினார்.......அவள் சிந்தனையை மாற்றுங்கள்.......அவள் அன்று நடந்த நிகழ்ச்சியை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறாள்...எனவே அவளது சிந்தனை வேறுபக்கம் திசை திருப்புங்கள் என சொல்லி இருக்கிறார்.இதை எல்லாம் யோசித்துதான் அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் அவளது கவனம் கண்டிப்பாக மாறும்..... என உனது அத்தை நினைக்கிறாள்.மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து” என சொல்ல அவர் தயங்க



“சொல்லுங்கள் மாமா ...என்ன சொல்ல வருகிறீர்கள்” என அவன் கேட்க



“இல்லை ராம் ..வெளி இடத்தில் மாப்பிள்ளை பார்த்தல் இவளை பற்றி சொல்லவேண்டியது வரும்....அது யாருக்கும் நல்லது கிடையாது...மேலும் பிரச்சனைதான் வரும்....அதனால் நீ என்றால் அவளை பற்றி நன்கு புரிந்தவன் ...நன்றாக பார்த்துகொள்வாய் என்கிறாள்” என சொல்லிவிட்டு அவனின் முகத்தையே சேகர் பார்த்து கொண்டிருக்க



அவனோ மீண்டும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “இந்த விஷயம் பாட்டிக்கு தெரியுமா” என கேட்டான்.



“அச்சோ அம்மாவுக்கு தெரியாது ராம்....மேலும் உனக்குத்தான் அவரை பற்றி தெரியுமே......பார்வதி குடும்பம் என்றாலே அவருக்கு ஆகாது.......ஆனால் உன்மேல் பாசம் இருக்கு” என வேகமாக சொல்ல



மாமா என அவர் கைகளை பிடித்தவன் “நாங்கள் எப்போதும் பாட்டியை தவறாக நினைத்தது இல்லை......மேலும் அவரின் நிலையில் யாராக இருந்தாலும் இப்படிதான் இருப்பார்கள் என்றவன் பின்னர் மாமா நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம்.......இந்த திருமண விஷயம் இப்படியே இருக்கட்டும்...... அவளது நல்வாழ்விற்கு நான் பொறுப்பு.......ஆனால் அது மட்டும்தான் இதற்க்கு தீர்வா......யோசித்து பாருங்கள் ....அவள் சிறு பெண் மாமா .....பதினெட்டுவயதுதான் ஆகிறது...அவளுக்கு போய்” என சொன்னவன்

“மாமா முதலில் அவள் வெளி உலகத்திற்கு வரவேண்டும்...அதற்கு அவள் மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டும்...பெண்களுக்கு கல்வி அவசியம் மாமா....... ரோஜா மாதிரி திறமையான பெண்களுக்கு அது மிகவும் முக்கியம்” என்றான்.

“மறுபடியும் அந்த கல்லூரிக்கா?” என சேகர் அதிர

“மாமா அது அவள் விருப்பபட்டு எடுத்த படிப்பு....அதனால் அங்கே செல்லட்டும்.....நான் நாளை கல்லூரி முதல்வரிடம் பேசுகிறேன்......பின்னர் வந்து ரோஜாவிடம் பேசுகிறேன் ...அதுவரை நீங்கள் இந்த திருமணம் போன்ற பேச்சு எதுவும் எடுக்க வேண்டாம்” என சொன்னான்.

“சேகரும் சரி என்றவர் ஆனால் அவள் மீண்டும் படிப்பது என்பது மிகவும் கடினம்” என்றார்.

அவனோ “இவ்வளவு துன்பங்களை தாண்டி வந்து விட்டோம்.......இதையும் பார்த்து விடுவோம் என்றவன் அப்புறம் மாமா எனக்கு பயிற்சி காலம் முடிந்து விட்டது........ அடுத்த வாரம் நான் டெல்லி செல்ல வேண்டும் ......அங்கு சென்று வந்த உடன் IPS போஸ்ட்டிங் எனக்கு கொடுத்துடுவாங்க” என சொன்னான்.

“ரொம்ப சந்தோசம் ராம்......நீ மேலும் மேலும் புகழ் பெற எனது வாழ்த்துக்கள்” என அவனை மனதார வாழ்த்தினார் சேகர்.

பின்னர் ராம் வீட்டிற்கு வந்தவன் முதலில் மரகதத்திடம் இது பற்றி பேச....அவரும் திருமணம் வேண்டாம் படிக்கட்டும் என்று சொல்ல அதை அவர்கள் ரோஜாவிடம் சொன்னதும் அவள் அதற்கு ஒத்து கொள்ளவில்லை.“ என்னை இப்படியே இருக்க விடுங்கள் ....நான் அந்த கல்லூரிக்கு போகமாட்டேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டாள்.

மேலும் கல்லூரி தொடங்க நாட்கள் இருந்ததால் ராம் இப்போது வற்புறுத்தவேண்டாம்......இன்னும் கொஞ்ச நாள் பொறுமையாக இருக்கலாம்......கல்லூரி ஆரம்பிக்கும்போது பார்த்து கொள்ளலாம் என சொல்லிவிட்டான்.

ரோஜாவும் சில நாட்கள் நன்றாக இருப்பாள்....சில நாட்களில் அறையில் சென்று கதவை அடைத்து கொண்டு வெளியே வரமாட்டாள்.மரகதம் தான் அவளை சமாளித்து வந்தார்.....அதற்குள் ராமுவும் டெல்லி சென்றுவிட்டதால் மேலும் சிறிது நாள் எப்போதும் போல் நகர்ந்து கொண்டிருந்தது.

ஒரு வருடம் ஓடிவிட்டது.......அவளது தாத்தாவின் நினைவு நாள்......அன்று மருத்துவர் அவளுக்கு அது தெரியாமல் பார்த்துகொள்ளுங்கள் என சொன்னாலும் வருடத்தின் முதல் நாள் யாரால் மறைக்க முடியும்......

அதற்கு முதல் நாளில் இருந்தே ரோஜா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.......எல்லாரும் வற்புறுத்தியும் அவள் வர மறுத்துவிட்டாள்......பின்னர் மரகதம் வேகமாக கதவை தட்டியவர் “ரோஜா உன் பாட்டி சொல்றேன் நீ இப்போ கதவை திறக்கிறாய் என ஆணையிடும் குரலில் கர்ஜிக்க கேட்ட சேகருக்கும் பார்வதிக்குமே உடல் நடுங்க ரோஜாவோ வேகமாக கதவை திறந்தவள்...... அய்யோ பாட்டி என சொல்லிகொண்டே அவர் முகத்தை பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள்..

கோபத்தில் அவர் முகம் அக்னி குன்று போல் சிவந்திருக்க, அவளை முறைத்தவர் “முதலில் வெளியே வா...வந்து உட்கார்” என சொன்னதும் சுத்தி விட்ட பம்பரம் போல அவள் வந்து அமர்ந்தாள்.. 1

பார்வதி அந்த சாப்பாட்டை எடுத்திட்டு வா என்றவர் அவரே பிசைந்து அவளுக்கு ஊட்ட ஆனால் ரோஜாவோ “வேண்டாம் பாட்டி ...என்னால் சாப்பிடமுடியாது...என்னை விட்டு விடுங்க என கண்களில் கண்ணீருடன் அவரை கைகூப்பி கெஞ்ச அவரோ அப்படி என்றால் இன்று உன் தாத்தா திவசம் அன்று எனக்கும் திவசம் செய்ய போகிறாயா?” என கேட்டார்.

அய்யோ பாட்டி என அவள் அலறுவதற்கு முன்னாள் அய்யோ அம்ம்மா,அத்தை என்ன சொல்றிங்க என பார்வதியும் சேகரும் அலற

“இல்லை சேகர் நான் உண்மைதான் சொல்கிறேன்....இனியும் ரோஜா இப்படியே இருந்தாள் நானும் சீக்கிரம் உன் அப்பாவிடம் சென்று விடுவேன் என்றவர் அதற்கு மேல் அவருடைய கட்டுபாட்டை இழந்து அப்படியே ரோஜா மேல் சரிந்தவர் என்னால் முடியவில்லைடா.....ரோஜா இப்படி இருப்பதை என்னால் பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை......இவள் பிறந்த போது உன்னை பெற்றதைவிட அதிக மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது........அவளது ஒவ்வொறு அசைவும் என் கண்ணிற்குள் இன்னும் இருக்கிறது.......எனது வீட்டு மகாலட்சுமி இவள்.......அவளை இப்படி முடங்கி போய் பார்க்க என்னால் முடியவில்லை......அவளுக்கும் இது புரியவில்லை...அவள் நினைத்ததை செய்து கொண்டு இருக்கிறாள்.அதனால் நானும் இனி அவளை வற்புறுத்த போவதில்லை.....நான் இனி இருந்தும் என்ன செய்யபோகிறேன்....அதான் உன் அப்பாவிடமே சென்றுவிடலாமே என யோசித்து கொண்டிருக்கிறேன்” என அவர் தீர்க்கமாக சொல்ல



“அய்யோ பாட்டி என அவர் வாயை பொத்தியவள் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன்....நீங்களும் என்னை விட்டு போய்விடாதீர்கள் என அவரின் மடியில் விழுந்து அழுதவள் ....இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்” என்றாள்..

மருத்துவர் சொன்னது நடந்து விட்டது என மரகதம் மனதிற்குள் மகிழ்ந்தவர் ...ஏனெனில் சென்ற முறை அவர்தான் ரோஜாவை மருத்துவரிடம் அழைத்து சென்று இருந்தார்....அப்போது அவர்” மன நோய் என்பது நிரந்திர நோய் அல்ல ....ஆனால் அது குணமாக கண்டிப்பாக நோயாளிகளின் ஒத்துழைப்பும் தேவை...ரோஜாவை பொறுத்தவரை எங்கள் வேலை முடிந்து விட்டது...அவள் தான் அதில் இருந்து வெளியே வர மறுக்கிறாள்....அதற்கான முயற்சிகளை அவள் எடுக்க மறுக்கிறாள்......அவள் சிந்தனைகள் மாறினால் சீக்கிரம் குணமடைந்துவிடுவாள்” என கூறினார்.அதனால்தான் மரகதம் இந்த அதிரடி நாடகத்தை நடத்தினார்.

அதற்க்கு பின்பு நடப்பவை எல்லாம் வேகமாக நடேந்தேறியது.......அவள் மருத்துவகல்லூரி செல்ல மறுத்து விட்டதால் வேறு கல்லூரி பார்க்க முடிவு செய்யபட்டது.....அருகில் சட்ட கல்லூரி மட்டும் இருக்க ராம் அதை சிபாரிசு பண்ண ஆனால் மரகதம் மறுத்துவிட்டார்.அவள் வக்கீலுக்கு படிக்கவேண்டாம் என சொன்னார்..

ஆனால் வேறு வழி இல்லை....ரோஜாவோ விடுதியில் தங்கி படிக்க மறுத்துவிட்டாள்....வீட்டில் இருந்து தான் செல்வேன் என்று கூறிவிட்டாள்.......அதுவும் தந்தையுடன் தான் செல்வேன் என கூறிவிட்டாள்........அப்போது சட்ட கல்லூரி மட்டுமே அதற்கு சாத்தியமாக இருந்தது........அவளுக்கும் சட்டக்கல்லூரி பிடிக்கவில்லைதான்....பின்னர் ராம் தான் அவளை சமாதனபடுத்தி அதில் சேர்த்து விட்டான்......

நாட்கள் செல்ல செல்ல அவளும் கொஞ்சம் மாறினாள்....ஆனால் மருத்துவரோ “அந்த நினனவு நீறு பூத்த நெருப்பு போல் இன்னும் அவளிடம் உள்ளது..... இன்னும் சில வருடத்திற்கு அது தொடர்பான நிகழ்சிகள் அவளுக்கு நியாபகம் வராமல் பார்த்து கொள்ளுங்கள்” என்றார்......

“நாங்களும் இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன.... அவளும் கொஞ்சம் பழைய ரோஜாவாக மாறியது போல் இருந்தது. அதனால் இனி பிரச்சனை இல்லை என்றுதான் நினைத்து இருந்தோம்.......ஆனால் இப்படி ஆகுமென்று நினைக்கவில்லை.......இவள் எப்போதுதான் இந்த நினைவில் இருந்து வெளியே வருவாள் என்று தெரியவில்லை என சொல்லி முடித்தவர் .....மன்னிக்கனும் தம்பி எங்கள் குடும்ப சோகத்தை உங்களிடம் சொல்லி உங்கள் தூக்கதையும் கெடுத்து விட்டேன் ....நீங்கள் சென்று உறங்குங்கள்” என சொல்ல தேவாவோ நடந்த நிகழ்வுகளில் இருந்து மீளாமல் அவரிடம் தலையாட்டிவிட்டு பொம்மை போல் நடந்து தனது அறைக்கு வந்தான்.

உள்ளே வந்தவன் அப்படியே தனது படுகையில் அமர்ந்தவன் நினைவுகளை பின்னோக்கி செலுத்த மேலும் அவனது உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது..........”அய்யோ ரோஜா அங்கு இருந்தது நீயா “என அவனை அறியாமல் அலற .......தூங்கி கொண்டிருந்த நாதன் அலறி அடித்து கொண்டு எழுந்தவன் ...தேவா என்னடா ஆச்சு......ஏதாவது கனவு கண்டாயா என அவனை உலுக்க...தேவாவோ அவனை வெறித்து பார்க்க ....அடபாவி இப்படி பாதி ராத்திரியிலே பேய் முழி முழிக்கிறானே....ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருச்சா என சொல்லிகொண்டே அவனை மீண்டும் உலுக்க ........தேவாவோ ...ம்ம்ம்ம்....என்னது...அது வந்து இல்லை என உளற......ஏண்டா இப்டி பண்ற..... டேய் தூங்குடா” என சொல்லிவிட்டு மீண்டும் அவன் உறங்க தேவாவோ இரவு முழுவதும் உறங்க வில்லை.



விடிகாலையில் ஐந்து மணிக்கே தேவா நாதனை எழுப்ப......”மணி என்ன ஆச்சு “என அவன் தூக்கத்திலே கேட்க ....”எல்லாம் கோழிகூவுற நேரம்தான் எழுந்திரு “என அவன் காலை பிடித்து பெட்சீடோடு இழுத்தவன் அப்படியே அவனை குளியல் அறைக்குள் தள்ளினான்...... “டேய் டேய்” என கத்திகொண்டே உள்ளே சென்ற நாதன் புலம்பி கொண்டே குளித்து விட்டு வெளியே வந்தான்.”இப்போ எதுக்குடா இவ்ளோ நேரமே என்னை புறப்பட சொல்ற” என கேட்டும் முடிக்கும் முன் காருக்கு அவனை இழுத்து சென்ற தேவா கார் மருத்துவமனை நோக்கி சென்றது.......

“டேய் தேவா அவனவன் இந்த வயசுல பிகர பார்க்கத்தான் இந்த மாதிரி நேரமே போவான்......ஆனால் முதன் முறையா ஒரு பேசன்ட் பார்க்கிறதுக்கு ஆறுமணிக்கு வந்த ஆளுங்க நம்ம தான்” என புலம்பி கொண்டே வந்தான் நாதான்.

மருத்துவமனைக்குள் உள்ளே சென்ற தேவா ரோஜாவின் அறைக்கு செல்லாமல் அங்கு இருக்கும் நர்ஸிடம் ரோஜாவின் மருத்துவர் முகவரி என்ன என்று கேட்டுக்கொண்டு ஏழு மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்தான்.

“டேய் எதுக்குடா இங்க எல்லாம் வர” என நாதன் கேட்க

“உனக்கு பிறகு எல்லாம் விவரமாக சொல்கிறேன்....இப்போது அமைதியாக வா” என சொல்லிவிட்டு அவரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். 2

மருத்துவரே வந்து கதவை திறக்க ...”குட்மார்னிங் சார்.... நான் இராகதேவன் என சொல்ல ....அவரோ “வாங்க நியாபகம் இருக்கிறது” என்றார்.”தொந்தரவுக்கு மன்னிக்கணும்.......கொஞ்சம் அவசரமாக பேசணும் அதான்” என்றவன் அவரிடம் ரோஜாவின் உடல்நிலையை விசாரித்தவன் ,ரோஜாவின் பாட்டி தன்னிடம் அனைத்தும் சொல்லிவிட்டதாக அவன் சொல்ல அவரும் சரி என்று அவனிடம் ரோஜாவை பற்றி அனைத்து விபரங்களையும் சொன்னார்.

“ரோஜா பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாள்.இது உடனே சரி ஆகிவிடாது.....கொஞ்ச வருடங்கள் ஆகும்......ஆனால் அதற்க்கு அவளது ஒத்துழைப்பும் வேண்டும்...ரோஜாவை பொறுத்தவரை அந்த ஹோட்டல் நிகழ்ச்சி அவளுக்கு பேரதிர்ச்சி....எந்த ஒரு பெண்ணிற்க்கும் அது கண்டிப்பாக அதிர்ச்சிதான்......அடுத்தது தாத்தாவின் மறைவு.......அவளுக்கு எல்லாமுமாக இருந்த தாத்தா அவளால் தான் இறந்து போனதாக அவள் நினைக்கிறாள்.அதை நினைத்து நினைத்து தன்னை வருத்திகொள்வதே அவருக்கு செய்யும் பிராயசித்தமாக அவள் நினைக்கிறாள்.அதனால் அந்த நினைவுகளை விட்டு அவள் வெளியே வர மறுக்கிறாள்.

நானும் மற்றவர்களும் எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தோம் ஒன்றும் முடியவில்லை.......உங்களிடம் ஜூனியராக அனுப்பியதற்கு காரணமும் அதான்....... அதற்கான பலனும் இருந்தது....... உங்களிடம் வந்த பிறகு அவளிடம் நிறைய மாற்றங்கள் வந்தது...... நான் கூட சீக்கிரம் பழையநிலமைக்கு வந்து விடுவாள் என்று நினைத்தேன்...ஆனால் இப்போது முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை” என அவர் சொல்லி முடித்தார்.

“ஏன் டாக்டர் இதற்க்கு வேற வழியே இல்லயா” என தேவா மீண்டும் கேட்க....

மருத்துவரோ “நான் தான் சொன்னேன் இல்லயா ...அவளது கவனம் திசை திருப்ப படவேண்டும்...இந்த நினைவுகளை மறந்து வேறு நினைவுகள் அவளை ஆக்கிரமிக்கவேண்டும்.....அப்போதுதான் அவள் இதில் இருந்து வெளிவர முடியும் என்றார்.அதற்கும் நான் பாட்டியிடம் ஒரு யோசனை சொல்லி இருக்கிறேன்......இனி ராம்சரண் இல்லை சேகர் வரட்டும் பேசி முடிவு செய்யவேண்டும் என்றவர் ஆனாலும் இந்த சின்ன வயதில் அந்த பெண்ணுக்கு இவ்ளோ துன்பம் வந்திருக்கவேண்டாம்......ரொம்பவும் கஷ்டபட்டுவிட்டாள் “என சொல்ல தேவாவின் முகமே அப்படியே சுருங்கி போனது.

“சரிப்பா எனக்கு மருத்துவமனைக்கு நேரமாகிவிட்டது ...நான் கிளம்புகிறேன்” என அவர் எழ தேவாவும் நாதனும் எழுந்து வெளியே வந்தனர்.

காரில் ஏறி அமர்ந்ததும் “என்னடா தேவா ......என்னடா பிரச்சனை...இவர் சொல்வதை பார்த்தால் எதோ பெரிய ஆபத்து ரோஜாவிற்கு வந்திர்ப்பது போல் தெரிகிறது ....என்னடா...உனக்கு இது முன்பே தெரியுமா?” என அவனை கேள்வி மேல் கேள்வி கேட்க

அவனோ “நாதன் உனக்கு நான் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்....இப்போது வா ரோஜாவை சென்று பாப்போம்” என சொல்லிகொண்டே காரை எடுத்தான்.

அவர்கள் சென்று ரோஜாவை பார்க்க அவளோ உறக்கத்தில் இருக்க பட்டாபியிடம் விளக்கம் கேட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தான் தேவா.

பாட்டி கிளம்பி இருந்தவர் அவர்களை பார்த்ததும் “எங்கு சென்று இருந்தீர்கள் ......... ராம்சரண் போன் செய்தான்....இன்னும் அரைமணிநேரத்தில் வந்து விடுகிறனாம்.....நேராக மருத்துவமனைக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னான்....நாமும் அங்கே செல்லாம் வாருங்கள் என்றவர் முதலில் சாப்பிடுங்கள்” என அவர்களை சாப்பிட அழைத்தார்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
“தேவாவோ பாட்டி உங்களிடம் நான் ஒன்று கேட்கவேண்டும் என்றவன் கொஞ்சம் வாருங்கள்” என சொல்லி அவரது அறைக்கு அழைத்து சென்றான்.

“பாட்டி மருத்துவர் உங்களிடம் நேற்று என்ன சொன்னார்” என அவன் கேட்க

“ஏன் தம்பி...எதுக்கு கேட்கிறீங்க” என்றார்.

“சொல்லுங்கள் பாட்டி” என அவன் மீண்டும் கேட்க

“ரோஜாவிற்கு திருமணம் செய்து வையுங்கள்...அவளுக்கு பிடித்தவனாக பார்த்து செய்து வையுங்கள்...ஆப்போது அவளது மனநிலை மாற வாய்ப்பு இருக்கிறது என சொன்னார்.......அதான் ராம் சரண் வரட்டும் பேசி கொள்ளலாம் என இருக்கிறேன்” என்றார்.

சிறிது நேரம் அமைதியாக நின்றவன் பின்னர் பாட்டியை கையை பிடித்து அழைத்து தாத்தா படத்தின் முன்பு நிற்க வைத்தவன் “பாட்டி நான் இப்போது உங்களிடம் கேட்பேன்...நீங்கள் மறுக்க கூடாது” என சொல்ல

“என்ன தம்பி நீங்கள் கேட்டு நான் மறுக்க என்ன இருக்கிறது....தயங்காமல் கேளுங்கள் “என சொன்னார் மரகதம்.

அவனோ அதை கேட்க......பாட்டியோ இதை எதிர்பார்கவே இல்லை........”என்ன தம்பி இப்படி சொல்றிங்க......அது எப்படி முடியும்” என சொல்லி அங்கிருந்து நகர ......”கண்டிப்பாக உங்களால் முடியும் என்றவன்......நான் சொல்வதை கேட்டால்” என மீண்டும் அவரிடம் சிறிது நேரம் பேச அவரோ அதிர்ச்சியில் வாயடைத்து போனார்.

“பாட்டி என் மனதில் உள்ளதை நான் சொல்லிவிட்டேன்.......இனி முடிவு உங்கள் கையில்.......ஆனால் தெரிந்து கொள்ளுங்கள்...அவள் ஏற்கனவே மனதளவில் பதிக்க பட்டு இருக்கிறாள்......மேலும் அவளுக்கு துன்பத்தை கொடுத்து விடாதீர்கள்.....எது செய்தாலும் யோசனை பண்ணி செய்யுங்கள் என சொல்லிவிட்டு உங்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு நாங்கள் கிளம்புகிறோம் பாட்டி......அதான் இனி ராம்சரண் பார்த்து கொள்வான் என்றவன் எது செய்தாலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் செய்து விடுங்கள்” என சொல்லிவிட்டு அவன் கார் நிற்கும் இடத்திற்கு வந்தான்.

வேகமாக அவன் பின்னால் வந்த நாதன் ...”நல்லவேளைடா...நீ இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சுதான் நான் முன்னாடியே சாப்பிட்டேன்” என சொல்லிகொண்டே காரில் அமர தேவாவின் முகமோ யோசனையில் இருக்க.......பாட்டியும் யோசனையுடனே காரில் வந்து ஏறினார்.

பின்னர் மருத்துவமனையில் பாட்டியை விட்டுவிட்டு பட்டாபியை அழைத்து “ராம்சரண் வந்ததும் விபரங்கள் அனைத்தும் சொல்லிவிட்டு நீ கிளம்பி வந்து விடு” என்றான் தேவா.பட்டாபியும் சரி என்று சொல்ல அலைபேசியில் ராம்சரனுக்கு தகவல் தெரிவித்தவன் பின்னர் ஊருக்கு கிளம்பினான். 3

சிறிது தூரம் சென்றது நாதன் மீண்டும் “ரோஜாவிற்கு என்ன நடந்தது.... மருத்துவர் சொன்னதை வைத்து பார்த்தால்ல் பாதி புரிகிறது ........நீ என்னிடம் எதோ மறைகிறாய்.......உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லவேண்டாம்” என சொல்ல

உடனே தேவா “என்னடா நீ....உன்னை விட்டால் நான் வேறு யாரிடம் சொல்லபோகிறேன்” என்றவன் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

பின்னர் “நாதன் உனக்கு நியாபகம் இருக்கிறதா...நான் படிப்பை முடித்து விட்டு வக்கீல் ராமராஜனிடம் ஜூனியராக வேலை பார்த்து கொண்டிருந்தோம் அல்லவா “ என கேட்க

“ஆமாம் மச்சான் .....அப்பதானே நம்ம ரொம்ப நெருங்கிய நண்பரகள் ஆனோம்” என்றான்.

“ம்ம்ம்ம் அதான் நாதன்....அப்போது ஒரு கேஸ் விஷியமாக நானும், நீயும், முரளி, ராஜ் எல்லாரும் சேலம் வந்திருந்தோம் இல்லயா ....அன்று கூட புத்தாண்டு .....நீ கூட எனக்கு பிடித்த பாடகர் ஒரு ஓட்டலில் பாடுகிறார் என சொன்னாய் இல்லயா” என கேட்க

“அட ஆமா மச்சான் என்றவன் .... சட்டென்று அட அங்க...அன்னைக்கு என சொன்னவன் ...டேய் தேவா அப்போ என அதிர்ச்சியுடன் அங்கே பிடிபட்டதுல ரோஜாவாஆஆஆஆஆ வும் இருந்தாங்களா ”என அவன் அதிர

தேவாவின் முகம் அதைகேட்டதும் அப்படியே இறுக ஏதும் சொல்லாமல் ஆமாம் என தலையை மட்டும் ஆடடினான்.

“அய்யோ என்ன கொடுமடா இது” என நாதனும் அப்படியே நின்றுவிட்டான்.சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.பின்னர் முதலில் சுதாரித்த நாதன்....”டேய் தேவா இப்போ என்னடா பண்றது “என கேட்க

“நான் முடிவு பண்ணிவிட்டேன் நாதன்.......அவள் இழந்த வாழ்க்கையை அவளுக்கு மீட்டு கொடுக்கணும்.....அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கேன்......அதை பத்தி பாட்டிகிட்ட பேசிட்டும் வந்து விட்டேன்” என சொன்னவன்.......

அதற்குள் நாதன் “என்னடா பண்ணபோற” என கேட்க

“கொஞ்சம் பொறு நாதன் முடிவு தெரிந்ததும் நானே சொல்கிறேன் என சொல்லிவிட்டு ....இனி பேசியது போதும்...செயலில் காட்டுவோம் வா” என சொல்லியவன் மீண்டும் காரினில் அமர்ந்தவன் ஒரு தெளிவான முடிவோடு சென்னை நோக்கி பயணமானான்.



காரணம் இன்றி காரியம் இல்லை!

சில நிகழ்வுகள் வாழ்வில் தவிர்க்க முடியாது.

ஏன் எதற்கு இப்படி என புலம்புவதை விட

அதற்கு விடை தேட முயற்சிப்பது,

அல்லது அதை அப்படியே ஏற்றுகொள்வது

அனைவர்க்கும் நல்லது .

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

.பூவில் இருந்து விழுந்த காம்பை

மீண்டும் அதில் வைக்க முயற்சித்தால்

அது முடியுமா ??????????

முடியும் என்கிறான் அவன் .

இது சாத்தியமா ???????