அத்தியாயம் -20
மறுநாள் காலை எழுந்து வெளியே வரவேற்பறைக்கு வந்தவள் கண்ணை தேய்த்து கொண்டே அத்தை காபி என கேட்க
“ அத்தை எல்லாம் இங்கு இல்லை....உன் அத்தான் தான் இருக்கேன்......கொஞ்சம் கண்ணை திறந்து பார்” என சிரித்துகொண்டே சொன்னான் தேவா.
திடுகென்று கண்ணை திறந்தவள் ஜாக்கிங் முடித்து விட்டு பேப்பரும் கையுமாக அவன் சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்த உடன் முகத்தை திருப்பி கொண்டு சமையல் அறைக்குள் சென்றவள் அங்கு யாரும் இல்லாததை கண்டு “என்ன இது.......இந்த வீட்ல காபி கொடுக்க கூட ஆள் இல்லை” என முனகி கொண்டே வேகமாக திரும்ப அவள் என்ன செய்கிறாள் என பார்க்க வந்த தேவாவின் மேல் இடிப்பது போல் தடுமாறி நின்றாள்....
தூக்க கலக்கத்தில் அவளது களங்கமில்லாத முகமும்,கலைந்த கேசமும்,இரவு உடையும் அவளை அழகாக காட்ட அருகில் அவளது முகத்தை பார்த்தவன் தன்னை மறந்து நின்றான்.
அவன் நகர்வான் என எதிர்பார்த்த ரோஜா அவன் தன்னையே விழுங்குவது போல் பார்த்து கொண்டு நிற்க ........அவளோ என்ன சொல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் நகர முயற்சிக்க ....அதற்குள் சுதாரித்த தேவா “என்ன வேண்டும் ரோஜா” என்றான்.
“உடனே அவள் டெல்லில இருக்க தாஜ்மகாலும்,சென்னைல இருக்க மெரினா பீச்சும் வேணும் உங்களால் தரமுடியுமா” என தலையை சாய்த்து சிரித்து கொண்டே அவள் கேட்க ...... ஆஹா காலையிலே ஆரம்பச்சிட்டாடா என மனதிற்குள் நினைத்தவன் “அதனால் என்ன ரோஜா..... நீ மட்டும் நான் சொல்வதை கேட்டால் தாஜ்மகாலை விட அழகான பரிசு இன்று தருகிறேன் கேட்கிறாயா” என அவளை ஒரு மாதிரி மேலும் கீழும் அளந்து கொண்டே தேவா சொல்ல
அவனது பார்வையின் பொருள் புரிந்தவள் சட்டென்று “எனக்கு காபி வேண்டும்” என குனிந்து கொண்டே சொன்னாள்.
அப்படி வா வழிக்கு ........நேற்று எங்களை என்ன பாடு படுத்திட்ட ......இன்னைக்கு இது போதும் என நினைத்தவன் “சரி நான் போட்டு தருகிறேன் .....நீ பிரஷ் பண்ணிவிட்டாய் அல்லவா” என கேட்டான்.....
“ம்ம்ம்...பண்ணிட்டனே” என வேகமாக அவள் தலை ஆட்ட
அவனோ சந்தேகம் வர “எப்போ” என காபி ஆற்றி கொண்டே கேட்டான்
“நேற்று இரவே பண்ணிட்டேன்” என அவள் புருவங்கள் இரண்டியும் தூக்கி கொண்டு கண்களை விரித்து கொண்டு அவள் சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பு வர அதை அடக்கியவன்
“அப்போ நீ எப்போதும் ப்ரஷ் பண்ணிட்டு காபி குடிக்க மாட்டியா” என அவன் கேட்க .....அவளோ “அதான் சொன்னேன் இல்லை....காலையில பண்றதுக்கு பதிலா இரவே விலக்கிடுவேணு...சும்மா அதையே கேட்டுட்டு இருக்கீங்க காபி குடிச்சுட்டு பல்லு விலக்கினா போதும்” என சலித்து கொண்டே சொன்னாள்.
“இங்கு அப்படி கிடையாது.......முதலில் போய் பிரஷ் பண்ணிட்டு வா....அப்புறம் தான் காபி” என அவன் அழுத்தமாக சொல்ல
“கொடுக்கிற ஒரு டம்ளர் காபிக்கு எத்தன ரூல்ஸ்” என வாய்க்குள் முனகி கொண்டே “எனக்கு காபியே வேண்டாம்” என சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள்..
காலை எப்போதும் போல் தேவா கிளம்ப ரதியும் கிளம்ப ரோஜா மட்டும் தனியாக வீட்டில் இருந்தாள்.வேலை செய்யும் ஒரு பெண் துணைக்கு இருந்தார்.காலை அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு என்ன செய்வது என அவளுக்கு தெரியாமல் வீடு முழுவதும் சுற்றி பார்த்தாள்..வீட்டின் பல இடங்களில் அவனது கலாரசனை வெளிபாடு நன்றாக தெரிந்தது.......வண்ண ஓவியங்கள் சுவற்றினை அலங்கரிக்க...... அழகிய சிற்பங்கள் வீட்டின் ஒவொவொரு இடத்திலும் அதன் அழகை மேலும் மெருகூட்ட......அவனது ரசனை அவளை திகைப்பு அடைய செய்தது....
சில அறைகளை திறந்து பார்க்க ஒரு அறை முழுவதும் புத்தகங்களாக இருந்தன......”அடபாவி ஆபிஸ்ல தான் புத்தகபுளுவா இருக்கானா இங்குமா? ....ரொம்ப குஷ்டம் என முனகிகொன்டே அடுத்த அறைக்கு வந்தவள் அங்கு அனைத்து இசைக்கருவிகளும் இருக்க அதை பார்த்த ரோஜாவிற்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.......கல்லுக்குள் ஈரம் இருக்கலாம் ....கடப்பாரைக்குள் கண்ணாடி துண்டு இருக்க முடியுமா? ....இவனிடம் எப்படி இத்தனை இசைக்கருவிகள்?.......இவன் குணத்திற்கு இசைக்கும் ரொம்ப தூரம்......பின் எப்படி என யோசித்தவள் ....எவனாது பீஸ் கொடுக்காம இருந்திருப்பான்.....அதான் இதை தூக்கிட்டு வந்திருப்பான் என அவளே அதற்கு ஒரு விளக்கம் கண்டு பிடித்து கொண்டாள்..
பிறகு அடுத்த அறைக்கு செல்ல அது தேவாவின் அறை...மிகவும் விசாலமாக இரண்டு அறைகளை கொண்டு இருந்தது......உள்ளே செல்லலாமா வேண்டாமா என அவள் யோசித்து கொண்டு இருக்க ...அதற்குள் அவளது அலைபேசி ஒலிக்க எடுத்தவள் தேவா தான் அழைத்திருந்தான்.
அவள் “ஹலோ” என்றதும் “என்ன அம்லு பண்ணிட்டு இருக்க” என எதிர்புறத்தில் இருந்து தேவா கேட்க
ஒரு நிமிடம் யோசித்தவள் “உங்களுக்கு என்ன வேணும்...நான் ரோஜா”
என அவள் சொல்ல
அவனோ சட்டென்று நாக்கை கடித்து மனதிற்குள் சொல்லும் பெயரே சொல்லிவிட்டானே என நினைத்தவன் உடனே ...”என்ன பண்ற ரோஜா ...உனக்கு எதவது புக்ஸ் வேணுமா...இல்லை அங்கே சிடி இருக்கு....எடுத்து போட்டு படம் பாரு” என சொன்னான்.அவனது இந்த அக்கறை அவளுக்கு ஏதோ எரிச்சலை ஏற்படுத்த “நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்ல வேண்டாம்.......அதான் எல்லாரும் போய்ட்டிங்கள என்னை விட்டுட்டு.......எனக்கு என் வேலையை பார்த்துக்க தெரியும்” என அவள் சிறுபிள்ளை போல் கோபத்துடன் சொல்ல ...ஆஹா என்ன அம்மணி மலைஎறிட்டாங்கலாட்டா இருக்கே என நினைத்தவன் “சரி ரோஜா”....என சொல்லி அலைபேசியை அனைத்தவன் அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்தான்.
வீட்டில் தனியாக மொட்டு மொட்டுவென டிவி பார்த்து கொண்டு அமர்ந்துருந்தாள் ரோஜா ......அவளின் அருகில் அமர்ந்தவன் “என்ன குட்டிம்மா ....என்ன கோபம் என் புது பொண்டாட்டிக்கு “ செல்லாமாக கொஞ்சுவது போல் பேச ...அவளோ அவனை ஒரு மாதிரி பார்த்து கொண்டே வேகமாக எழுந்தாள்.
“ஏன் ரோஜா” என அவன் அதிர்ந்து கேட்க
“நீங்க mr .ராகதேவன் தான” என அவள் சந்தேகமாக திருப்பி கேட்டாள்.
அவனோ “ஏன் ரோஜா .....என்னை தெரியலையா ...என்னாச்சு உனக்கு.....ஏதாவது பயந்திட்டியா ” என அவன் குழப்பமாக கேட்க
“அச்சோ நான் நல்லாத்தான் இருக்கேன்.......நீங்க ஏன் இப்படி பேசறிங்க......இப்படி எல்லாம் பேச தெரியுமா உங்களுக்கு” என சொல்லிவிட்டு அவள் அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்..
அவளது கேள்வியில் சிரித்தவன்.......”அப்படி எல்லாம் சந்தேகமாக பார்க்காதே ரோஜா......உன் பிதாமகன் தான் நான்......பார் இந்த கோணத்தில் நின்றால் ராகு காலம் போல் தெரிவேன்.......இப்படி நின்றால் கிங்காக் போல் தெரிகிறனா “என அவள் அவனுக்கு வைத்த பெயர்களை அவன் பட்டியலிட்டு சொல்ல அவளோ திரு திருவென முழித்து கொண்டு நின்றாள்..
அவளது தோற்றத்தில் அவனுக்கு சிரிப்பு வர “சரி சரி ரொம்ப போர் அடிக்குதா ...நம்ம வேண்டுமானால் வெளியே போயிட்டு வரலாமா ” என்றான்.
உடனே அவள் வேகமாக “வாங்க போகலாம்” என கிளம்பினாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “இப்பவா சாப்பிட்டு விட்டு சாயந்திரம் போகலாமே ரோஜா” என அவன் சொல்ல
“அவளும் சரி....நீங்க எல்லாம் சாப்பிட்ரதுக்கு எடுத்து வைங்க.....நான் இதோ வந்திடறேன்” என அவள் சொல்லிவிட்டு உள்ளே போக இப்போது முழிப்பது தேவாவின் முறையாகி போனது....இதுவரை அவன் தான் மற்றவர்களை இந்த வார்த்தை சொல்லி இருக்கிறான்........இப்போது அவனுகே அதை திருப்பி சொன்னாள் ரோஜா ....”இவள் தெரிந்து இது போல் செய்கிறாளா ....இல்லை இன்னும் வளராமலே இருக்கிறாளா” என குழம்பி போனான் தேவா .
இருவரும் மதியம் உணவு உண்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.....பொதுவாக அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என கேட்டு கொண்டு இருந்தான் தேவா.....ரோஜாவிற்கு பேசுவதற்கு சொல்லியா தரவேண்டும்...மடை திறந்த வெல்லம் போல் அவள் பாட்டிற்க்கு பேசிகொண்டே இருந்தாள்.ஒரு லெவலுக்கு மேல் தேவாவோ போதும் என்று நினைத்தவன் “சரி ரோஜா ......ரதி இரண்டு நாளைக்கு வரமாட்டாள்......கேம்ப் சென்று இருக்கிறாள்...... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்துவிட்டு வந்து உன்னை அழைத்து செல்கிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
ரோஜாவும் அவனுடன் பேசியே களைத்து போனதால் உறங்க சென்றுவிட்டாள்.அலுவலகத்தில் தேவா நுழையவும் நாதன் அவனை அழைக்கவும் சரியாக இருந்தது......நாதனிடம் தொழில் சம்பந்தமாக பேசிவிட்டு அலைபேசி வைக்கும் நேரத்தில் நாதன் அவனிடம் “தேவா ரோஜாவிடம் உண்மை சொல்லிவிட்டாயா’ என கேட்டான்.
சட்டென்று அமைதியான தேவா “இன்னும் இல்லை நாதன் என்றவன் ....நான் முதலில் ரோஜாவின் மனதில் கணவனாக இடம் பிடிக்க வேண்டும் நாதன்......என்னை அவள் எனக்காக ஏற்க வேண்டும்......அதற்க்கு பின்பே நான் இதை பற்றி அவளிடம் சொல்லுவேன்” என்றான்.
“இல்லை தேவா அது தப்பு.....நீ முதலில் சொல்லிவிடு......பிறகு வேறு யார் மூலமாக அது தெரிந்தாலும் பிரச்சனைதான்” என நாதன் எச்சரிக்கை பண்ண .......”இல்லடா நான் பார்த்து கொள்கிறேன்....ஏதும் ஆகாது ...சரி நாளை பேசலாம்” என சொல்லிவிட்டு அலைபேசியை அனைத்தான் தேவா....
நாதன் சொல்ல வந்தது தேவாவிற்கு புரியாமல் இல்லை....இரவு முழுவதும் அதை பற்றி மட்டும் தானே யோசித்து கொண்டு இருந்தான்......ஆனால் உண்மை சொல்லி அதனால் ரோஜா தன்னை விட்டு பிரிந்தால் அதை தன்னால் தாங்கி கொள்ளமுடியாது என்பதை அவன் நன்கு உணர்ந்து இருந்தான்......ரோஜா இல்லாமல் இனி வாழ்வு இல்லை என்பதில் அவன் தெளிவாக இருந்தான்......அதனால் முதலில் ரோஜாவின் மனதில் நிரந்தரமாக அவன் இடம்பிடிக்க வேண்டும்....அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் அவள் தன்னை விட்டு பிரிய மாட்டாள் என அவன் நினைத்தான்.....இது ஒரு வகையில் சுயநலமாக தோன்றினாலும் ரோஜாவுடன் மட்டுமே தனது வாழ்க்கை என்று முடிவு செய்த பின் அதற்காக அவன் எந்த செயலும் செய்ய தயாராக இருந்தான்.
இது தான் தேவா......தன் மனதிற்கு சரி என்று தோன்றிவிட்டால் வேறு எதை பற்றியும் அவன் கவலைப்படமாட்டான்......அந்த செயலை செய்து விடுவான்......இது வரை அவன் இப்படி முடிவு எடுத்த செயல்களால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்பட்டது இல்லை......ஏனெனில் அவன் எல்லா பக்கமும் யோசித்து தான் முடிவு எடுப்பான்.....அதே போல் தான் இப்போதும் யோசித்து ரோஜாவுடன் தனது வாழ்வு என்பதில் உறுதியாக இருந்தான்....அதை தடுப்பது போல் யார் வந்தாலும் ...எது நடந்தாலும் தன் முடிவில் இருந்து பின் வாங்கபோவதில்லை என மனதில் உறுதி பூண்டான்......அதற்க்குப் பின் தான் தேவாவிடம் இவளவ்வு மாற்றம்.....அதனால் தான் நாதன் சொன்ன போதும் அவன் விரைவாக பேச்சை முடித்து கொண்டான்.ஆனால் இது வரை எடுத்த முடிவுகள் போல் இதுவும் சுபமாக இருக்குமா ?
மாலை வீட்டிற்கு வந்தவன் ரோஜாவை அழைத்து கொண்டு வெளியில் கிளம்பினான்......காரின் அருகில் சென்றவன் “ரோஜா எங்கு செல்லலாம் நீயே சொல்” என்றான்......
அவள் உடனே “நானா ..ம்ம்ம்ம்......எனக்கு இங்கு எந்த இடமும் தெரியாது......அண்ணா நகரில் ஒரு பானிபூரி கடைதான் தெரியும்.......அப்புறம் ஐஸ்கிரீம் பார்லர் தெரியும்...அப்புறம்” என அவள் யோசிப்பது போல் நெற்றியை சுருக்க
அவளது பதிலில் அவனுக்கு சிரிப்பு வர “ஆக நீ இங்க வந்து சாப்பிடற வேலையை தான் பார்த்திருக்க அப்படித்தான என்றவன் சரி திருமணத்திற்கு பிறகு முதன் முதலாக உன்னை வெளியே அழைத்து செல்கிறேன்...அதனால் கோவில் செல்லலாம்” என சொல்ல கணவன் மனைவி இருவரும் கோயிலுக்கு சென்றனர்.முதன் முதலாக ரோஜாவோடு அவன் கோயிலுக்கு வருகிறான்.மனதில் சந்தோசம் பொங்க கார்ல இருந்து இறங்கிய இருவரும் பூ வாங்கி கொண்டு இணைந்து நடந்தனர்.....ரோஜாவோ வேடிக்கை பார்த்து கொண்டு வர அவளோடு நடந்தவன் மெதுவாக ரோஜாவின் கைகளை தன் கைகளோடு இணைத்து கொண்டான்.
ரோஜா சட்டென்று திரும்பி அவன் முகம் பார்க்க அவனோ சாதாரணமாக நடக்க ,அவனிடம் இருந்து தன் கைகளை பிரிக்க அவள் முயற்சிக்க அவனது மனதின் உறுதி அவனது பிடியில் தெரிந்தது. எல்லாரும் பிரகாரத்தை சுற்றி கொண்டிருக்க ...”கையை விடுங்க” என அவள் மெதுவாக வார்த்தையை கடித்து துப்ப அவனோ அதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை.பிரகாரத்திற்கு உள்ளே நுழைந்ததும் அந்த கும்பலில் அவள் சிக்காதவாறு தன் கை வளைவிலே அவளை வைத்து இருந்தான்.....ரோஜா தான் தடுமாறி போனாள்.சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் “ரோஜா இங்கு என்னை பார்” என்றான்......அவள் அவன் முகம் பார்த்ததும் கையில் இருக்கும் திருநூறு குங்குமத்தை அவளுக்கு வைத்து விட்டு அதை கண்ணில் படாதவாறு ஊதி விட ரோஜாவின் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டு இருந்தது.....
அதை பார்த்ததும் அதிர்ந்த தேவா “என்னாச்சு ரோஜா” என பதற ...அவளோ “எனக்கு எங்க தாத்தா நியாபகம் வந்திடுச்சு சார்......அவரும் இப்படிதான் எனக்கு பண்ணுவாரு” என சொல்ல ....அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன் “என்னையும் அப்படி நினச்சுக்கோ ரோஜா.......உன் தாத்தவிற்கு நீ எப்படி உயிரோ அதே போல் தான் நீ எனக்கும் ரோஜா ......எப்போதும் அதை மனதில் வைத்து கொள்” என அவன் உணர்ச்சி பெருக்கோடு சொல்ல ...அவளோ “சரி சார்.....இனி என் தாத்தா மாதிரி உங்களை நினைச்சுகிறேன்.....சரி போலாமா தாத்தா” என குரலில் லேசாக கிண்டல் தெனிக்க அவள்ஒருபுறமாக தலை சாய்த்து சொல்ல ....நின்று அவளை ஒரு பார்வை பார்த்தவன் “ரோஜா நீ எப்பவும் இப்படியா.....இல்லை என்கிட்டதான் இப்படி பண்றியா.......உன்னை புரிஞ்சுக்கவே முடியல “ என அவன் கெஞ்சுவது போல் பேச ரோஜாவோ மனம் விட்டு சிரித்தாள்.அவள் சிரிப்பில் மயங்கியவன் “அம்லு உன்னோட ஒவொவொரு அசைவும் உன் மேல இருக்கிற அன்பை இன்னும் அதிகமாக்குதுடி “ என மனதில் நினைத்தவன் அந்த சந்தோசத்தின் ஊடே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.
உள்ளே நுழைந்ததும் “எனக்கு தூக்கமா வருது” என சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றவள்.....”பார்த்து ரோஜா ரதி இல்லை...பத்திரம்” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான் தேவா .......உடனே அப்படியே கதவின் ஓரம் நின்று விட்டாள் ரோஜா ...மாடிக்கு சென்ற தேவா திரும்பி பார்க்க அவள் யோசனையுடனே நின்று கொண்டு இருப்பதை பார்த்தவன் ....”ஏன் ரோஜா என்ன வேண்டும்” என்றான்.....
அவன் முகத்தை பார்த்தவள்” ரதி இரவு வரமாட்டாங்களா” என மெதுவாக கேட்க
அவனோ “இல்லை அதான் சொன்னானே கேம்ப் போயிருக்கான்னு...ஏன் உனக்கு என்ன வேணும்” என கேட்டு கொண்டே கீழே இறங்கி வந்தான்.
“இல்லை ஒன்னும் இல்லை” என வாய்க்குள் முனகியவள் தயங்கி நிற்க ...அவனோ அவள் அருகில் வந்தவன் “ரோஜா என்ன வேண்டும்...சொல்லு” என அழுத்தி கேட்க
“இல்லை...எனக்கு...எனக்கு அது வந்து பக்கத்து அறையில ரதி எப்பவும் படுத்திருப்பாங்க ....அதுனால நான் பயம் இல்லாம தூங்குவேன்...இப்போ அவங்களும் இல்லை...கீழே யாருமே இல்லை....அதான்” என அவள் இழுக்க
“சரி மேலே வந்து என்னுடன் படுத்துக் கொள்” என அவன் சாதாரணமாக சொன்னான்.
அவளோ வேகமாக நிமிர்ந்து “உங்கள் அறையில் எப்படி நான்” என சொல்லி முடிக்கும்போதே அவன் முகத்தின் மாறுதல் அவளின் பேச்சை தடை செய்தது.....
சிறிது நேரம் அவளை தேவா பார்த்து கொண்டு இருக்க
“இல்லை...நீங்க போங்க...நான் படுத்துகிறேன்” என சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று கதவை மூடி கொண்டாள் ரோஜா .
அறைக்குள் அனைத்து விளக்குகளையும் எரியவிட்டு விடிய விடிய சற்று பயத்துடனே உறங்கினால் ரோஜா......உறக்கம் வராததால் நேராமாக எழுந்து வெளியே வந்தவள் அங்கு சோபாவில் கை கால்களை மடக்கி கொண்டு ஒரு உருவம் படுத்திருக்க அருகில் வந்து பார்த்தவள் அதிர்ந்து போய் நின்றாள்.. அங்கு தேவா தான் அப்படி படுத்து இருந்தான்.சில நிமிடம் அவனை வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தவள் பின்னர் ஏதும் பேசாமல் தனது அறைக்குள் மறுபடியும் சென்று படுத்தவள் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல,அப்படியே உறங்கிவிட்டாள்.சிறிது நேரத்தில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்க வாரி சுருட்டி கொண்டு எழுந்தவள் அங்கு ஆபிஸ்க்கு கிளம்பி கையில் காபியோடு,வாய் நிறைய புன்னகையோடு நின்று கொண்டு இருந்தான் தேவா ....அவனை பார்த்ததும் அவள் என்ன சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருக்க .....அவனோ “குட்மார்னிங் ரோஜா ....யாரோ எனக்கு தூக்கம் வராது....பயமா இருக்குனு சொன்னாங்க....இப்போ என்னடானா ஒன்பது மணி வரைக்கும் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருக்காங்க” என கிண்டலாக அவன் சொல்ல
“ம்ம்ம்ம் ....அது வந்து ...ஆமா நீங்க நல்லா தூங்குனிங்களா” என அவள் கேட்க
“எனக்கு என்ன ரோஜா.....நிம்மதியா ஏசில படுத்து குறட்டை விட்டு தூங்கினேன்” என சிரித்து கொண்டே சொன்னவன் அதற்க்கு மாறாக அவன் கண்கள் எல்லாம் சிவந்து இருக்க அவன் முகத்தையே அவள் பார்த்து கொண்டு இருக்க ...தேவாவோ “அம்மையார் இந்த காபியை எடுத்து கொண்டால் ஒரு அவசர வேலை ...நீதி மன்றம் செல்ல வேண்டும்...... இல்லை என்றால் என் கட்சிகாரரை நான் காப்பற்றுவதற்கு பதிலாக அவனிடம் இருந்து என்னைத்தான் யாராவது காப்பாற்ற வேண்டும்” என அவன் நாடக பானியில் முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொல்ல சட்டென்று சிரித்து விட்டாள் ரோஜா......”ஹப்பா இப்போது தான் திருப்தியாக இருக்குது.....ஆனால் பல்லு விளக்கிட்டு குடிக்கணும்....இட்லி டேபிளே இருக்கு......சமையல் செய்யற அம்மா வந்திட்டாங்க ......நீ கிளம்பி வந்து சாப்பிடு ரோஜா.....நான் மதியம் சீக்கிரம் வந்திடறேன்” என சிறுபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி விட்டு அவன் கிளம்ப அவளோ ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தாள்.
அலுவலகத்திற்கு வந்தவன் வேலை பணியில் மூழ்கிவிட மதியம் உணவு வேலையை மறந்து போனான்......வெகு நேரம் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்த ரோஜா வரவேற்ப்பு அறையிலே அப்படியே உறங்கி போனாள்.
பட்டாபி உணவு வேலை முடித்து விட்டு வந்தவன் “சார் நீங்கள் இன்னும் சாப்பிட செல்லவில்லையா ....... ரோஜா எப்படி இருக்காங்க சார்” என கேட்க
அப்போது தான் அவனுக்கு வீட்டு நியாபகம் வந்தது. “இல்லை பட்டாபி......இந்த கேஸ் கொஞ்சம் இழுத்து கொண்டு இருக்கிறது....அதை முடித்து விடலாம் என பார்த்து கொண்டு இருந்தேன்......இதோ இப்பது கிளம்பி விடுகிறேன்.....ரோஜா நன்றாக இருக்கிறாள்” என அவன் சொல்ல
“சார் இனி ரோஜா ஆபிஸ் வருவாங்களா “என அவன் கேட்ட பட்டாபி “கொஞ்ச நாள் பழகினாலும் அவங்க இருந்தா வேலை செய்யற களைப்பே தெரியாது அதான் கேட்டேன்” என தயங்கி தயங்கி அவன் விளக்கம் சொல்ல....”பரவாயில்லை பட்டாபி......அவளை பற்றி எனக்கு தெரியாதா......நாளை அழைத்து வருகிறேன் என சொல்லி விட்டு சரி...சரி நான் கிளம்புகிறேன்......அம்மணி இந்நேரம் சாப்பிட்டு நன்றாக தூங்கி கொண்டு இருப்பாள்” கிண்டலாக சொன்னவன் ...”சரி பட்டாபி இன்றும் மாலை நான் வரமாட்டேன் ...நீ பார்த்து கொள்” என கூறிவிட்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவன் அவள் வரவேற்பு அறையிலே தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் ....”அதான பார்த்தேன்...... ரோஜா ...ரோஜா என அவளை எழுப்ப ...அவளோ கண்ணை திறக்க முடியாமல் திறந்தவள் மணி என்ன ஆகிறது...இவ்ளோ நேரமா” என அவள் கோபமாக கேட்க ......... “ஒரு மனுஷன் இங்க கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சுட்டு வந்தா மகாராணி சாப்பிட்டு இப்படி தூங்கிட்டு என்னை கேள்வி கேட்கிறாங்க பாரு” என கிண்டலாக சொல்லி கொண்டே நேராக சாப்பிடும் இடத்திற்கு சென்றவன் அங்கு அனைத்தும் அப்படியே இருக்க சமையல் அம்மா இன்னும் ரோஜாவும் சாப்பிடவில்லை என சொல்ல வேகமாக வந்து அவளிடம் நின்றான்.
அவன் தன்னை எழுப்பி நக்கல் அடித்துவிட்டு சென்றதில் கோபத்தில் இருந்த ரோஜா .....அவனை முறைத்து பார்க்க ....... “ஆஹா தேவா சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுகிட்டியேடா......இன்னைக்கு நீ மாட்னடி” என மனதிற்குள் சொல்லிகொண்டே மெதுவாக அருகில் அமர்ந்தவன் ...”இல்லை ரோஜா நீ பசி தாங்க மாட்டியா ...அதான் சாப்பிட்டு இருப்பேன்னு நினைச்சு” என அவன் வார்த்தை மென்னு முழுங்க
“அப்படிதான் நினச்சேன்...சரி காலையிலும் நீங்க தனியா சாப்பிட்டிங்க ...இப்போவாவது உங்களோடு சாப்பிடலாம்னு காத்திருந்தேன் பாருங்க என்ன சொல்லணும்” என கோபமாக சொல்லிவிட்டு வேகமாக உணவு மேடைக்கு சென்றவள் சாப்பாடு எடுத்து அவளுக்கு மட்டும் போட்டு அமர்ந்து சாப்பிட்டாள்......... அவள் தனக்காக காத்திருந்தாள் என்ற பேச்சில் மனம் சிறகடிக்க ....அவளது கோபத்தை ரசித்து கொண்டே அவள் பின்னே வந்த அவள் மணாளன் அவள் சாப்பிடுவதை ரசித்து கொண்டு இருந்தவன் ...அவளது அந்த செல்ல கோபத்தில் மேலும் மேலும் அவளிடம் தன்னை தொலைத்து கொண்டு இருந்தான்.
அவன் தன்னையே பார்த்து கொண்டு இருந்ததை உணர்ந்த ரோஜா ஏதும் சொல்லாமல் அவன் அருகில் ஒரு தட்டை வைத்து சாப்பாடு பரிமாறியவள் “சாப்பிடுங்க...அப்புறம் எனக்குதான் வயிறு வலிக்கும்” என அதே ரோசத்துடன் சொல்லி விட்டு முட்டை பொரியல் எல்லாம் நானே சாப்பிட்டேன்............இந்த ஊறுகாய் வச்சுக்குங்க என அவன் அருகில் எடுத்து வைத்து விட்டு அவள் தன் அதிமுக்கியமான சாப்பாட்டு பணியை தொடர்ந்தாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவன் அவள் தன கடமையே கண்ணாக இருக்க .......இதற்கெல்லாம் அசரகூடாது தேவா என தனக்கு தானே சொல்லிக்கொண்டு மெதுவாக அவளிடம் “சாரி ரோஜா.....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.....இனி இப்படி வரமாட்டேன் சரியா” என அவன் கெஞ்சுவது போல் சொல்ல அவளோ “இங்க பாருங்க நீங்க இரவும் சரியா தூங்கலை....மதியம் நேரமே வந்தா கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்...இப்பவே மணி மூன்று......இனி நீங்கள் மறுபடியும் ஆபிஸ் கிளம்ப வேண்டும் ...அதற்கு தான் சொன்னேன்.......இனி அதையும் சொல்லலை” என அவள் சொல்ல அவளை ஆழ்ந்து பார்த்தவன் ...மனதிற்குள் என் அம்லு எனக்கு விரைவில் கிடைத்து விடுவாள் என எண்ணி பூரிபடைந்தான்.
அன்று மாலை அருகில் இருக்கும் பூங்காவிற்கு அவளை அழைத்து சென்றவன் அங்கு சிறுவர்கள் விளையாடுவதை அவள் ரசித்து கொண்டிருக்க தேவா இளம் மாலை பொழுதில் அழகிய நிலவொளியில் தனது தேவதையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவன் அவனை அறியாமல் அவள் மேல் காதல் உணர்வு பொங்கி ததும்பியது.
இப்படியாக ரோஜா தேவாவின் வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஓட அந்த ஒருவாரத்தில் பிதாமகன் தேவா காதல் மன்னனாக வசனம் பேச அதிரடி சரவெடியாக இருந்த ரோஜா சற்று மட்டுப்பட்டு பூவானமாக மாறி புன்னகையால் அந்த வீட்டை சிறப்பித்து கொண்டு இருந்தாள்......ரதியின் இரண்டு நாள் கேம்ப் ஒருவாரமாக மாற இருவரின் தனிமையும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க பேச உதவியாக இருந்தது.ராமும் வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்ததால் ரோஜாவிற்கும் துணைக்கு ஆள் இல்லாமல் போனது.
இரவு வர நேரமாகும் ...அதனால் சாப்பிட்டு விட்டு நீயும் ரதியும் உறங்குங்கள் என சொல்லிவிட்டு தான் சென்றான் தேவா.....இரவு நேரமாகி அவன் வர அவனுக்காக வரவேற்பறையில் காத்து கொண்டு இருந்தாள் ரோஜா......அவளை பார்த்தும் வேகமாக அருகில் வந்தவன் “ரோஜா என்னம்மா தூங்காம இங்க உட்கார்ந்திருக்க......உடம்பு சரி இல்லையா .....யாராவது ஏதாவது சொன்னாங்களா” என பதறி போய் அவன் கேட்க
அவளோ “இல்லை...இல்லை.....உங்க கிட்ட பேசணும் அதான் காத்திட்டு இருக்கேன் என்றாள்.
அவளது குரலில் உள்ள மாற்றம் அவனை ஏதோ செய்ய ....அவள் “அது வந்து நான் ...நான் .....இல்லை எனக்கு பாட்டிய பார்க்கணும் போல இருக்கு.......நாளைக்கு இங்க வரேன்னு சொன்னாங்க ....ஆனா கொஞ்சம் அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம்...அதான் வரலைன்னு சொல்லிட்டாங்க......எனக்கு அவங்கள் பார்க்கணும் போல இருக்கு.......நான் போய் பார்த்திட்டு வரணும்” என சொல்ல சொல்ல அவளுக்கு அழுகை வர
“ஹே ரோஜா இதுக்கு எதற்கு அழுகிற ....இப்போ என்ன ஊருக்கு போகணும்...அவ்ளோதான சரி போலாம் என்றவன் அதுக்கு எதற்கு அழுகனும்” என சொல்லிகொன்டே அவளை தோளோடு அணைக்க பாட்டியின் நினைவில் இருந்தவள் அவளுக்கு ஆறுதல் தேட ஒரு தோள் தேவைபட கிடைத்ததும் அவனின் தோளில் சாய்ந்து சிறிது நேரம் அழுது தனது துயரத்தை குறைத்து கொண்டாள்......அவளது அழுகையை தாங்க முடியாத அவன் காதல் மனம் ஆனாலும் இந்த நிலையில் மட்டுமே அவள் தன்னை நெருங்கி இருக்கிறாள் எனவே அதை தடுக்கவும் மனம் இல்லாமல் அவன் தவித்து கொண்டு இருக்க ....சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்தவள் அவனிடம் இருந்து விலகி “சரி நான் நாளை ஊருக்கு போக ரெடி பண்றேன்” என சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல் அவள் உள்ளே செல்ல தேவாவோ அவளது அருகாமை அவனது ஆசையை தூண்டி விட அதை கட்டுபடுத்த முடியாமல் தவித்து போனான்.