அத்தியாயம் -6
மறுநாள் நாள் பொழுது அனைவர்க்கும் சுகமாக விடிய சோம்பல் முறித்து எழுந்தவள் மணியை பார்க்க அது எட்டு மணி என்று காட்ட அச்சோ நேரமாகிடுச்சே........தாமதமானால் அந்த பிதாமகனிடம் யார் திட்டு வாங்குவது என நினைத்தவள் வேகமாக கிளம்பி கீழே வந்தாள்.
ராம் சாப்பிட்டு கொண்டிருக்க வேகமாக வந்தவள் அவனிடம் தட்டை பிடுங்கி அதில் இருக்கும் பூரியை சாப்பிட
“ஹே ரோஜா என்ன இது........சின்ன புள்ள மாதிரி... நான் சாப்பிட்டது என அவன் முகம் சுளிக்க
அதற்குள் அங்கு வந்த காவேரி “ரோஜா என்ன அதுக்குள்ள எழுந்து கிளம்பி வந்திட்ட ....உனக்காக கஞ்சி எல்லாம் வச்சிருக்கேன்......நீ பூரி சாப்பிட்டு இருக்க” என கேட்டாள் .
“முதல்ல இரண்டு பேரும் பேசாதிங்க......எனக்கு நேரமாச்சு....இன்னைக்கும் தாமதமா போனேன்...அந்த பிதாமகன் அவ்ளோதான்.......அப்புறம் நரசிம்ம அவதாரம் எடுப்பான் என சொல்லிகொண்டே சாப்பிட்டு முடித்தவள் அத்தை மதியம் டிபனுக்கு இதே கொடுத்திடுங்க.....ஐந்து பூரி சேர்த்து வைங்க” என சொல்லிகொண்டே கை கழுவ சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த ராம் ....அதற்குள் அவன் அம்மா “என்ன ராம்......இன்னைக்கு வேலைக்கு போறேன்னு கிளம்பறா......நேற்று வேற அப்படி இருந்தா” என கவலையாக கேட்க
“அதான்மா நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.......நான் கூட வேலைக்கு போகவேண்டாம்னு சொல்லலாம்னு நினச்சேன்......ஆனா இவ இவ்ளோ ஆர்வமா கிளம்புபோது எப்படி சொல்றது........அதும் இல்லாம நேற்று இருந்த களைப்பு இன்னைக்கு அவகிட்ட இல்லை...... அவ போகட்டும் விடுங்க.......மறுபடியும் பிரச்சனியினா பார்த்து கொள்ளலாம்” என்றவன் அவளை புரிந்து கொள்ளமுடியாமல் கொஞ்சம் குழம்பித்தான் போனான்.
நேற்று பட்ட அவஸ்த்தையில் அவள் வேலைக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிப்பாள்......நாமும் சரி என்று விட்டு விடுவோம் என்று தான் ராம் நினைத்தான்.ஆனால் அதற்க்கு எதிர்மறையாக அவள் நேரமே கிளம்பி போவாள் என்று அவன் நினைக்கவே இல்லை.சரி அவள் பாதையிலே விட்டு விடுவோம் என அவனும் அமைதியானான்.
நேரமாக அலுவலகம் சென்றவள் உள்ளே நுழைய அந்த நேரத்திலும் இராகதேவன் அங்கிருந்தான்.அடபாவி இவன் என்ன மனுசனா,மெசினா ....இருபத்தி நாலு மணிநேரமும் இங்கே இருக்கான் என நினைத்தவள் நேற்று பெண்டிங் வேலையை வேகமாக டைப் பண்ண ஆரம்பித்தாள்..
உள்ளே இருந்த தேவா அவள் அலுவலகத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவளது முக பாவனையை கவனித்தவன் அவனை அறியாமலே முகத்தில் புன்னகை தோன்ற எழுந்து வெளியே வந்தவன் “குட் மார்னிங் ரோஜா” என்றான்.
அவள் நிமிர்ந்து பார்க்காமலே “குட் மார்னிங் பட்டாபி......எங்கடா போன நேற்று வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை ....அந்த பிதாமகன் என்னை பழிவாங்கிட்டான்......இரவு எட்டு மணி ஆகிடுச்சு வீட்டுக்கு போறதுக்கு .........அங்க போன உடனே தலைவலி வந்து டாக்ட்டர்கிட்ட போய் ஏன் கேட்கிற.......ஒரே அலம்பல் தான்....... ஆனாலும் பட்டாபி அவன் அநியாத்திற்கு நல்லவனா இருக்கிறான்.......நேர்மை,கடமை ,உண்மைனு என்னனென்னமோ பேசறான்......நமக்கு ஒன்னும் புரியலை............சரி சரி வேலைய பாரு ...அப்புறம் அலாரம் மாதிரி சரியா வந்து நிற்ப்பான்....இராகதேவன் பேர் வைக்கிறதுக்கு பதிலா ராகுகாலம்னு வச்சிருகலாம்....... அவன் வந்தாலே பிரச்சனை தான் ...என்னடா சொல்ற” என கேட்டு கொண்டே சிரித்தபடி அவள் நிமிர எதிரில் அவளை முறைத்த படி தேவா நின்று கொண்டிருந்தான்.
ஆஹா இப்போ நம்மகுதான் எமகண்டமா போய்டுச்சே என மனதிற்குள் நினைத்தவள் ...”ஹிஹிஹி குட் மார்னிங் சார் ...எப்போ சார் வந்திங்க” என கேட்க
அவள் பேசும்போது அவளின் முகபாவனையும்,இப்போது அவளின் அசடு வழியும் முகத்தையும் பார்த்தவன் சட்டென்று சிரிப்பு வந்துவிட சிரித்து கொண்டே “குட்மார்னிங்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
ஹப்பா ....நல்லவேளை நம்ம பேசினது ஏதும் கேட்கவில்லை என நினைத்து சந்தோசபட்டு இருக்கையில் அமர்ந்தவள் சட்டென்று குட்மார்னிங் என்ற குரல் நியாபகம் வர,அதற்கு பின்பு தானே நாம் இத்தனையும் பேசினோம் என அவளுக்கு தெளிவாக...ஆஹா இன்னைக்கு பிதமாகன்கிட்ட லட்சார்ச்சனைக்கு தயார் ஆகிடனும் என புலம்பி கொண்டே வேலையை தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் மறுபடியும் குட்மார்னிங் என்ற குரல் வர உடனே வேகமாக எழுந்து நின்று அவள் “குட்மார்னிங் சார்” என சொல்ல உடனே “என்ன ரோஜா இது...எனக்கு இவ்ளோ மரியாதையா...தேங்க்ஸ்...தேங்க்ஸ்” என பட்டாபி சந்தோசத்துடன் சொல்ல
“அடபாவி நீயா....ஏண்டா காலையிலே இப்படி என்ன டென்ஷன் படுத்தரிங்க என்றவள்...போடா டேய் போய் வேலையை பார்” என சலிப்புடன் சொல்லிவிட்டு அமர்ந்தாள்..
அவள் எதற்காக சலித்து கொள்கிறாள் என புரியாமல் “இங்க பாரு ரோஜா நான் உன்னை விட சீனியர் .....நீ மரியாதை இல்லாம டா போட்டு கூப்பிட்ற “என அவன் கிடைத்த மரியாதையை போகுதே என ஆதங்கத்தில் பேச
“அச்சோ இப்ப உனக்கு பிரச்சனை......நான் எங்க மாமாவே கோபம் வந்தா டா போட்டு தான் கூப்பிடுவேன்......நீ என்ன பெரிய ஆளா...வேலைய பாருடா” என மறுபடியும் டா என்றாள்..
“இங்க பாரு ரோஜா நீ இப்பதான் law முடிச்ச.....ஆனா நான் போன வருடமே முடிச்சுட்டேன்......அதுநாள் நீ என்னை சார் அப்டின்னு மரியாதையா கூப்பிடு” என்றான்.
“இவன் தொல்லை தாங்கமுடியலே என்றவள் டேய் நானும் உன்னோட செட் தான்....ஒரு வருஷம் படிப்பு விட்டு போச்சு” என சொல்லிவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.
ஓ ....ஒரு வருஷம் கோட்டா ....எதுல பத்தாவதா .....பன்னிரண்டாவதா ....நான் எல்லாம் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணேன்” என பெருமையாக சொன்னான் பட்டாபி.
“ஆஹா என பல்லை கடித்தவள் வேலை செய்ய விட மாட்டேன்கிறானே என திட்டிகொண்டே டேய் பட்டாபி நான் கோட்டு அடிச்சேன்னு உன்கிட்ட சொன்னேனா.......ஒருவருஷம் மெடிக்கல் காலேஜ்ல படிச்சேன்...அப்புறம் இதுல சேர்ந்தேன் போதுமா” என வேகமாக சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.
“என்னது நீ மெடிக்கல் காலேஜ் ஸ்டுடன்ட்டா என பட்டாபி அதிர்ந்தவன்....அப்புறம் எப்புடி லா காலேஜ்” என அவன் சந்தேகமாக நிறுத்த
அப்போது தான் தான் உளறியதை அவள் உணர்ந்தாள்..
சட்டென்று முகம் வேர்க்க ,கைகள் செய்த வேலையை அப்படியே நிறுத்த கண்கள் எதிரில் இருக்கும் கணினியை அவள் பார்த்து கொண்டிருக்க...
அதை கவனிக்கத பட்டாபி “பொய்தான சொன்ன நீ....சரி...சரி உன் பிறந்த தேதி சொல்லு” என்றான்.
அவள் ஏதும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க
“ஹே ரோஜா உன் பிறந்தவருடம் சொல் என்று அவன் மறுபடியும் கேட்டதும் அவள் அவளை அறியாமலே ஜூன் இருபத்தியாறு 1990” என்றாள்..
“ஹே நான் ஜூன் இருபத்தி நான்காம் தேதி பிறந்தேன் என அவன் கூச்சலிட அந்த சத்தத்தில் சுய நினைவ்ர்க்கு வந்தவள் ...ஹே எதுக்கு இப்படி கத்தர” என எரிச்சல் பட
“ஹே ரோஜா உனக்கும் எனக்கு ஒரே வயசுதான்.....ஆனாலும் நீ என்னை சார்தான் கூப்பிடனும் “என்றான்.
“டேய் அதான் ஒரே வயதுன்னு தெரிஞ்சுடுசுல ....அப்புறம் என்ன...சார்...மோருனு” என சலிப்பாக சொல்ல
“இருந்தாலும் உன்னை விட நான் இரண்டு நாள் பெரியவன்....அதுநாள் நீ அப்படிதான் கூப்பிடனும்” என அவன் அடம்பிடிக்க.....
அதற்குள்” சார்...உங்கள பாஸ் கூபிட்றார் என்றபடி மணி வந்தான்.என்னது பாஸ் உள்ள இருக்காறா....இத ஏன் யாரும் என்கிட்டே சொல்லல ....போச்சு “என புலம்பியபடி உள்ளே சென்றான் பட்டாபி.
இங்கு ரோஜாவின் நினைவுகளோ அவளை மீறி சென்ற கொண்டிருந்தது.......பட்டாம்பூச்சி போல எந்த கவலையும் இன்றி பறந்து திரிந்த அந்த நினைவுகள் இன்று மனதில் ஏகந்தாமாய் வந்து நிற்க அந்த காலம் திரும்ப வருமா?இப்போது போட்டிருக்கும் இந்த இரட்டை வேடம் எப்போது கலைப்பது ?நான் நானாக மாற முடியுமா?என பல கேள்விகள் மீண்டும் அவள் மனதில் படையெடுத்தன.?
நான்கு தலைமுறைக்கு பிறகு பிறந்த பெண் ஆனாதால் ரோஜாவிர்க்கு அவளது குடும்பத்தில் எப்போதும் ராஜ மரியாதை தான். அவள் எது செய்தாலும் கேட்டாலும் உடனே கிடைக்கும்.அவளை யாரும் கண்டிக்க மாட்டார்கள்.அவளிடம் கண்டிப்பு பாசம் இரண்டையும் சரிவிகிதத்தில் காட்டுவது ராமும்,பார்வதியும் தான். ஆனால் பார்வதி சொல் மரகதத்தின் முன் அம்பலத்தில் ஏறாது.அதனால் பாட்டியின் துணை கொண்டு அவள் பார்வதியை ஏய்த்து விடுவாள்.ஆனால் ஏனோ சிறுவயதிலிருந்தே ராமின் சொல்லை அவள் மீறுவது இல்லை.கெஞ்சி பார்ப்பாள்....முடியவில்லை என்றால் அவன் என்ன சொல்கிறானோ அதன் படி நடந்து கொள்வாள்.
பள்ளி படிக்கும் வரை அவளின் தாத்தா தான் இவளை பள்ளிக்கு அழைத்து செல்வார்....இருவரும் நண்பர்களை போல் பேசிகொள்வர்....அவர் அந்த காலத்திலே பியூசி படித்தவர்....அதனால் உலக அனுபவம் அதிகம்.....இவ்ளோ வேதனைகளையும் தாண்டி ரோஜா இந்த அளவு இருப்பதற்கு காரணம் அவர் சொல்லித்தந்த பாடங்களே......நிறைய முற்போக்குசிந்தனைகளை அவளுக்குள் நுழைத்தவர்......விவேகானந்தரின் பரம சீடர் அவர்....அதனால் அவருடைய பேச்சில் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்......அவரோடு இருக்கும் ரோஜாவிர்க்கும் அது இருந்ததில் வியப்பு இல்லை.......
பத்தாம் வகுப்பு முடித்ததும் நான் மருத்துவர் ஆகவேண்டும் என்றாள் ரோஜா.....அதற்க்கான படிப்பையிம் தேர்ந்தெடுத்தாள்.அவளது தாத்தாவோ உனக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை செய் என்றார்.....பதினொன்றாம் வகுப்பு பள்ளி வாழ்க்கை நினைக்கும் போதே ரோஜாவின் மனதிள் உற்சாகம் துள்ளி குதித்தது......டீன் ஏஜ் அடியெடுத்து வைத்திருக்கும் ரோஜாவிற்கு அந்த வயதிர்க்கான குறும்பும் ,குதூகலத்திற்கும் என்றும் குறைவில்லை...... அவள் படித்த பள்ளிகள் அனைத்துமே பெண்களுக்கான பள்ளிகள் என்பதால் இவர்களின் அடாவடி தனம் அளவில்லாமல் இருந்தது. அது பிற்காலத்தில் அவளுக்கு எவ்ளோ பெரிய துன்பத்தை கொண்டுவந்து விடபோகிறது என்பதை அவள் அறியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் அவள் எடுத்த மதிபென்ணிற்கு பொது மருத்துவத்தில் சீட் கிடைக்காமல் பல் மருத்துவம் எடுத்தாள்.
அது கொளத்தூரில் இருந்து சற்று தொலைவு என்பதால் அனைவரும் யோசித்தனர்......ஆனால் அவள் தாத்த தான் அவள் செல்லட்டும்....அப்போதுதான் உலக அறிவு வரும் என அவர்களை சமாளித்து பேத்தியை அனுப்பி வைத்தார். ......அவள் அட்மிஷனுக்கு செல்லும்போதே அங்கு இருக்கும் மாணவர்களை பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.அவர்களின் நடை ,உடை,பாவனை அனைத்தும் அவளுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில் கொளத்தூர் என்பது கிராமத்தில் இருந்து சற்று ஒரு படி மேலே...அவ்ளோதான்......மற்றபடி நாகரீகம் பெருமளவு அந்த ஊரில் நுழையவில்லை......அங்கு அணியும் அதிகபட்ச நாகரீக உடை சுடிதார் தான்......அந்த சூழ்நிலையில் படித்த ரோஜாவிற்கு இதை பார்த்ததும் கொஞ்சம் சந்தோசமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.அதை தன் தாத்தாவிடம் கேட்கவும் அவள் தயங்கவில்லை.
“தாத்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு......அங்க எல்லாரும் ரொம்ப மாடர்னா இருக்காங்க....ரொம்ப ஸ்டைலா இங்க்லீஷ் பேசறாங்க எனக்கு ஒத்துவருமா? எனது தோழிகள் வேறு எதோ எதோ சொல்லி பயமுறுத்தறாங்க “என கவலயுடன் கேட்டாள்.
அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்த தாத்தா “ஏன் ரோஜா உனக்கு இதை பற்றி முன்பே தெரியாதா ?இந்த மாதிரி படிப்புகளை தெரிவு செய்யம்போது இவை அனைத்திற்க்கும் தயாராக இருக்க வேண்டும் என்று......மேலும் நீ படிக்கத்தானே செல்கிறாய்.....அதை பற்றி ஏதாவது பயம் இருந்தாள் சொல்...மற்றபடி வீண் சந்தேகங்களை மனிதில் போட்டு குழப்பி கொள்ளாதே....எங்கு செல்கிறாயோ அதற்க்கு ஏற்றார் போல் உன்னை மாற்றி கொள்” என்றார். எந்த ஒரு துன்பத்தையும் கடவுள் உடனே கொடுக்க மாட்டார்....அதற்க்கான சில நிகழ்வுகளை முன்பே காட்டுவார்....புரிந்து கொள்பவன் புத்திசாலியாகிறான்.....புரியாதவன் அது அனுபவித்து அறிந்து கொள்கிறான்.தாத்தாவிடம் கேட்ட சந்தேகத்தை அவள் ராமுவிடம் சொல்லி இருந்தாள் அவள் மனதில் என்ன விதமான உணர்வு இருக்கிறது என்பதை அவன் அறிந்து அதற்க்கு ஏற்றார் போல் விளக்கங்கள் கொடுத்திருப்பான்........தாத்தா அவளுக்கு அறிவுரை மட்டும் வழங்கிவிட்டு சென்றுவிட்டார்.
மேலும் அவள் மருத்துவபடிப்பில் சேர்ந்ததை கேள்விப்பட்ட உறவினர்கள் அவளை பாராட்ட, பெருமையாக சொல்ல அவளும் அந்த சூழ்நிலைக்கு தன்னை தயார்படுத்தி கொண்டாள். அவள் கல்லூரிக்கு செல்லும் அந்த நாளும் வந்தது......அன்றய மனநிலையை வார்த்தைகளால் வடிக்க முடியுமா என்ன ?வானத்தில் அல்லவா அவள் பறந்து கொண்டிருந்தாள்.
“இப்படியே உட்கார்ந்திருந்தா கணினியில் எழுத்துகள் தானாக ஏறி அமர்ந்து கொள்ளுமா” என கோபமாக ஒரு குரல் அருகில் கேட்க திடுக்கிட்டு நிம்ர்ந்தவள் எதிரே தேவா நின்று கொண்டிருந்தான்.
சட்டென்று பழையது எல்லாம் மறந்து போக வேகமாக எழுந்து நின்றவள் “இதோ இப்போ முடித்து விடுகிறேன் சார்” என்றாள்.
“சரி உனது ரிசல்ட் வந்து விட்டதா.....அப்போது தான் பார் கவுன்ஸில் உன் பெயர் பதிவு செய்ய முடியும்” என்றான்.
“ரிசல்ட் வந்து விட்டது சார்......நாளை எடுத்து வருகிறேன் என்றவள் சார் “என இழுக்க
அவன் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்.
“அத்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்லை.... நடக்கவே முடியாது.........நான் தான் எல்லாமே செய்யணும் அதுனால எனக்கு நாளைக்கு லீவு வேண்டும்” என கேட்டாள்.
“ஏன் என்னாச்சு என்றவன்...ராம் எங்கு சென்றான்” என்றான்.
“எங்க சார்....... மாமாவிற்கு நேரமே இருப்பது இல்லை....தினமும் இரவு நான் வீட்டிற்கு சென்று சமைத்து தான் எல்லாரும் சாப்பிடவேண்டும் ...என்ன செய்வது” என அவள் பெரிய மனுசிபோல் சொல்ல
கேட்ட தேவாவிற்கு அன்று போனில் கேட்ட வார்த்தைகள் நியாபக வர ....அவன் சிரித்து கொண்டே” நீ தான் எல்லா வேலைகளையும் செய்கிறாய் ...ம்ம்ம்ம்” என அழுத்தி கேட்க
“ஆமாம் சார்” என அவளும் அவளது முட்டைகண்ணை உருட்டி படி சொல்ல....ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல் அப்படியே நின்ற தேவா பின்னர் சுதாரித்து ......”நீ சரியான படிப்பதான் தேர்ந்தேடுதிருகிறாய்.....எந்த ஒரு வக்கீலும் உன்னை போல் பொய் சொல்ல மாட்டான் என்றவன் சரி...சரி....ஆனால் திங்கட்கிழமை வேலைக்கு வந்து விடு” என்றான்.
“நிஜமாவா சார்” என அவள் ஆச்ரியதுடன் கேட்க....ஏனனில் அவன் இப்படி உடனே சரினு சொல்வான் என்று அவள் நினைக்கவில்லை.......சண்டை போட்டுதான் லீவு வாங்கவேண்டும் ....அதற்காக என்ன பேசவேண்டும் என்பதை எல்லாம் காலையில் குளிக்கும்போதே யோசித்து தயாராக இருந்தாள்.ஆனால் சுலபமாக அவன் சரி என்று சொன்னதும் அவளால் நம்பமுடியவில்லை...ரொம்ப தேங்க்ஸ் சார் என சந்தோசத்தில் துள்ளி குதித்தாள் .”வந்த முதல் மாதத்திலே விடுப்பு கேட்கிறாய்.......முதல் முறை என்பதால் தருகிறேன்” என அப்போதும் தன் விறைப்பு குறையாமல் சொல்லிவிட்டு கிளம்பினான் தேவா.
“அதான கடைசியா ஒரு பன்ச் வைக்கலயினா இவரு பிதாமகனே இல்லயே என மனதிற்குள் அவனை திட்டியவள் ஆனாலும் ஊருக்கு போவதை நினைக்கும்போது மனம் சந்தோசத்தில் துள்ளியது.
ஆம் ரோஜா நாளை பெற்றோரை பார்க்க ஊருக்கு போகிறாள்.இதை யாரிடமும் சொல்லவில்லை......அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறாள்....ராமிடமே இரவுதான் சொல்லபோகிறாள். மருத்துவமனை ,தலைவலி போன்றவை அவளுக்கு வீட்டின் நியாபகத்தை அதிகபடுத்த உடனே கிளம்ப முடிவு செய்தாள்..
மாலை நேரமாக வீட்டிற்கு சென்றவள்......தனது அத்தையை கூட்டி கொண்டு கடைவீதி கிளம்பினாள்.அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு பொருட்களை வாங்கி கொண்டு அப்படியே வெளியே வர எதிரில் பானிபூரி கடை இருக்க “அத்தை...அது வேணும் ப்ளீஸ்” என அவள் கெஞ்ச
“ரோஜா மழை வர மாதிரி இருக்கு ....கிளம்பலாம்” என காவேரி மறுக்க
“இல்லை அத்தை நான் ராம்க்கு போன் பண்ணிட்டேன் ....வீட்டுக்கு போகும்போது நம்மையும் கூட்டிட்டு போக சொல்லி......அதுனால இன்னும் நேரம் இருக்கு.....ப்ளீஸ்” என மீண்டும் கெஞ்ச
அவள் சிரித்து கொண்டே “சரி...சரி..போ...அங்க கும்பல் அதிகமா இருக்கு ராம் வரதுக்குள்ள வாங்கிட்டு வந்திடு” என்றாள்.
அவள் செல்லும்போது தான் ராமிற்கு போன் செய்தாள்.”மாம்ஸ் நாங்க இங்க ஷாப்பிங் மால்ல இருக்கோம்.....நீ போகும்போது வந்து எங்களை கூட்டிட்டு போய்டு” என சொல்ல
“ரோஜா நான் ஒரு முக்கியமான இடத்துல இருக்கேன்.......எப்போ வருவேன்னு தெரியாது ....அதுனால நீங்க காத்திருக்கவேண்டாம்......கிளம்புங்கள்” என்றான்.
“என்ன ராம் இப்படி சொல்ற...நான் வேற அத்தைகிட்ட நீ வந்து கூட்டிட்டு போவாய் என்று சொல்லிவிட்டேன்....எனக்கு தெரியாது நீ வர” என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
“ஹே ரோஜா..ரோஜா” என அவன் கத்த அவளோ பானிபூரி வாங்க கும்பலில் நின்று கொண்டிருந்தாள்.
இவளோட இதே தொல்லையா போச்சு என சலித்து கொண்டவன்.......அப்போது வெளியே இடி சத்தம் கேட்க அச்சோ மழை வரும் போல இருக்கே.......இவள் வேறு கடையில் இருக்கிறாள் என யோசித்தவன் வேகமாக சென்று காரை எடுத்தான்.
இங்கோ பைகள் அனைத்திற்கும் காவலாக காவேரியை அமரவித்து விட்டு அவள் சென்று விட தனியாக அமர்ந்திருந்தார் காவேரி.
அப்போது அவள் அருகில் வந்து நின்ற ஒருவன்....”நீங்க ராம் சரண் அம்மாதானே” என கேட்க
அவள் நிமிர்ந்து பார்த்து “ஆமாம் ....ஆனால் நீங்க “என யோசனையுடன் கேட்க
“அம்மா நான் ராகதேவன் ...தேவா நியாபகம் இல்லையா ....வாலிபால் மேட்ச் அப்போ நான் கீழே விழுந்தப்ப ஓடி வந்து எனக்கு முதல் உதவி செய்திர்களே அந்த தேவா” என்றான். 3
பருவ வயதில் பார்ப்பது எல்லாம்
கண்களுக்கு குளிர்ச்சியாக தோன்றும்.
பயமறியாது பாகுபாடும் அறியாது
அனைவரும் ஒன்றே என என்ன தோன்றும்
பருவம் இந்த பதின் பருவம்
நல்லவன் கெட்டவனாவதும்
கெட்டவன் நல்லவனாவதும்
இந்த பருவத்தில் தான்.....
பலருக்கு இப்பருவம் இன்பத்தை கொடுக்க
ஒரு சிலருக்கோ ஆறாத ரணத்தை
ஏற்படுத்தி விடுகிறது!!!!!!!!!!!!....