அத்தியாயம் -8
வழக்கு விபரங்களை அவன் படித்து கொண்டிருக்க அவன் எதிரில் சென்று அமர்ந்தாள் ரோஜா.
“சார் எனக்கு ஒரு சந்தேகம்” என மெதுவாக பேச்சை தொடங்கினாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவாக இருந்தாலும் “இன்று என்னுடைய வாதம் முடிந்து நான் திரும்ப வந்த பிறகு நீ கேட்டுகொள்....இப்போது எனக்கு வேலை இருக்கிறது” என்றவன் மீண்டும் கேஸ்கட்டில் மூழ்கினான்.
அவள் அப்படியே அவனை முறைத்து கொண்டிருக்க அருகில் இருந்த பட்டாபியோ அவளை வெளியே இழுத்து வந்தவன் “என்ன ரோஜா உனக்கு பிரச்சனை....என்ன சந்தேகம் “ என்றான்.
“இல்லை பட்டாபி வழக்கின் விபரங்களை படித்து பார்த்தால் நம்ம கிளையன்ட் பக்கம் தான் தவறு இருக்கிறது. சாட்சிகளும் நமக்கு எதிராக அதிகம் இருக்கிறது......இப்போது இவர்கள் பேசுவதை பார்த்தால் நம்ம சார் தெரிந்து தான் இந்த வழக்கை எடுத்து கொண்டது போல் தெரிகிறது....ஏன் அப்படி செய்கிறார் ...அவன்தான் தவறு செய்தான் என தெரியும் போது நாம் ஏன் அவன் சார்பாக வாதாட வேண்டும்.....அது நீதிக்கு செய்யும் துரோகம் இல்லையா .......இதை நான் சாரிடம் சொல்ல வேண்டும்” என தன் மனதின் கருத்துகளை அவள் சொன்னாள்.
“ரோஜா சார் சொல்வது போல் நீ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது......முதலில் உன்னுடைய தொழில் என்ன......அதற்க்கு நீ என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்........நம்மை நம்பி வழக்கை ஒப்படைத்தவர்களுக்கு நாம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்......நீ கல்லூரியில் படிக்கும்போது இதுவும் கற்று கொடுத்து இருப்பார்களே....நான் சொல்வதை விட நீ நடக்க இருக்கும் வாத பிரதிவாதங்களை கவனி...உனக்கே புரியும்” என்றவன் அதற்குள் நீதிபதி வருகிறார் என்ற குரல் வர அனைவரும் தங்களூடைய இடத்திற்கு சென்றனர்.
நீதிமன்றத்தில் முதன் முறையாக தேவாவின் வாத திறமையை பார்க்க போகிறாள் ரோஜா.....மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்திருக்க இவர்களின் வழக்கு நடைமுறைக்கு வர கேள்விகனைகள் சூடாக நடைபெற்று கொண்டு இருந்தது. அரசாங்க வக்கிலிடம் அனைத்து ஆதாரங்களும் சாட்சிகளும் இருந்தாலும் தேவாவின் இரே வாதத்தில் அவை அனைத்தும் அடிபட்டு போய்விட்டன..... யார் லஞ்சம் கொடுத்தார்...எந்த கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது என சொல்லப்பட்டதோ அவர் அக்கட்சியிலே இல்லை என அவன் ஆதாரபூர்வமாக நிருபிக்க கட்சியின் பெயர் காப்பாற்றப்பட்டு மாறன் மாட்டிகொண்டான். மேலும் இவனை கருவியாக பயன்படுத்தி இந்த வேலையை செய்தது இந்த வழக்கை தொடுத்தது இந்த வழக்கின் எதிர்கட்சியினர்தான் என சில ஆதாரங்களை காட்டி மாறனையும் அப்பாவியாக மாற்றி அவனையும் அந்த வழக்கில் இருந்து வெளிவர செய்தான் தேவா..............தவறு யார் மேல் என்பது அனைவர்க்கும் தெரிந்தாலும் நீதிமன்றத்திற்கு தேவை சாட்சிகள் தானே......கடைசி நிமிடத்தில் அதை பயன்படுத்தி தேவா வெற்றி பெற்றான். நீதிமன்றம் மாறனை நிரபராதி என அவனை விடுவித்தது.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த ரோஜாவிற்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை......இது எப்படி சாத்தியம் ......முப்பது நொடிக்குள் 50லட்சம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து விட்டது.அதுவும் எந்த மாதிரி வாக்குவாதம் ........பாடத்தில் படித்து இருக்கிறாலே தவிர நேரில் பார்க்கும்போது அவளுக்கு பிரமிப்பாக இருந்தது.
நீதிமன்றம் நேரம் முடிந்து அனைவரும் வெளியே வர ஒருசிலர் தேவாவிடம் வந்து அவனை பாராட்ட அனைவர்க்கும் புன்னகை மட்டுமே பதிலாக தந்துவிட்டு வேகமாக தனது அறைக்கு வந்தான் தேவா.
பின்னர் அனைத்து விபரங்களையும் தட்டச்சாளரிடம் பெற்று கொண்டு பட்டாபியும் ரோஜாவும் வந்து சேர்ந்தனர்.
அதற்குள் மாறன் அவன் தலைவன் மற்றும் ஆட்கள் அவனது அறைக்குள் வந்தவர்கள் “ரொம்ப நன்றி தம்பி......நீங்கள் எப்படியும் மாறனை காப்பாற்றி விடுவீர்கள் என நம்பினேன்...ஆனால் இந்த மாதிரி ஒரு வாதத்தை நான் எதிர்பார்க்கவில்லை......அருமை..அபாரம் தம்பி என சொன்னவர் பேசாமல் நீங்கள் எங்கள் கட்சியின் வழக்கறிஞராக வந்து விடுங்களேன்” என சொல்லும்போதே
கைகளை உயர்த்தி அவரது பேச்சை தடுத்தவன் “நான் சொன்னது போல் இதில் இருந்து உங்களை விடுவித்து விட்டேன்......நீங்கள் சொன்னது போல்” என அவன் நிறுத்த
“ஹிஹிஹி தம்பி எப்பவும் வெட்டு ஒன்னு துண்டு இரண்டுதான் அதான் நானும் சொல்லவந்தேன்......அந்த இடத்திற்கு பதிலாக” என அவர் இழுக்க
“மாறன் நான் பேச்சு மாறுவதில்லை” என அவன் முகத்தை கடுமையாக வைத்துகொண்டு அழுத்தமாக சொல்ல
“சரி சரி தம்பி ...கண்டிப்பாக நான் சொன்னது போல் அந்த இடத்தை கொடுத்து விடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்தவர்கள் ஆனாலும் ரொம்பதான் ஆடறான் இவன்......ஏதோ திறமை இருக்கிறது என்று இவனிடம் வந்தால் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை முழுவதும் கறந்து விடுகிறான்......ம்ம்ம்ம் மெயின் சிட்டியில் அந்த இடம் மட்டும் தான் இருந்தது .....இப்போது அதுவும் இல்லையா....யார்க்குமே தெரியாது இவன் எப்படி அது என் இடம் என்று கண்டுபிடித்தான்.....ஐம்பது லட்சம் வழக்கில் இருந்து வெளியே வர இரண்டு கோடி ரூபாய் சொத்து போய்விட்டது.........” என புலம்பிகொண்டே செல்ல அதை கேட்டுகொண்டே ரோஜாவும் பட்டாபியும் உள்ளே வந்தனர்.
பட்டாபி நேராக தேவாவிடம் சென்றவன் “சார் இன்று உங்களோட வாதம் மிகவும் அருமை சார்.......நான் எதிர்பார்க்கவே இல்லை ........மாறன் வெளியே வருவது சிரமம் ....தண்டனை வேண்டுமானால் குறையலாம் என நினைத்து இருந்தேன்.......ஆனால் நீங்கள் சாதித்து விட்டீர்கள் “என மகிழ்ச்சியுடன் அவன் சொல்ல
“நான் எப்போதும் போல்தான் வாதாடினேன் பட்டாபி......எதிர்தரப்பினர் இன்னும் கொஞ்சம் கவனித்து இருந்தால் என்னுடைய வாதத்தை உடைத்து இருக்கலாம்.....அவர்களின் பலவீனம் நமது பலமாக அமைந்துவிட்டது” என சொல்லிகொண்டே திரும்பியவன் அங்கு ரோஜா தன்னை முறைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.
அதற்குள் ஒரு வக்கீல் வேகமாக உள்ளே வந்தவன் “டேய் மச்சான் இன்னைக்கு நீதிமன்றத்துல கலக்கிட்ட போ.......எனக்கே ஆச்சிரியமாக இருந்தது....எப்டிடா இப்படி எல்லாம் யோசிக்கிறாய்....கண்டிப்பா இதுக்கு எனக்கு ட்ரீட் வேண்டும் மச்சான்” என சொல்ல
“உனக்கு இல்லாததா நாதா என்ன வேண்டும் சொல்” என சிரித்துகொண்டே கேட்டான் தேவா ........ரங்கநாதன் தேவாவின் கல்லூரி தோழன்.....தேவாவிற்கு நட்பு வட்டம் அதிகம் கிடையாது.குறைந்த நபர்களே அதில் முதல் இடம் ரங்கநாதனுக்கு உண்டு.....ஏனெனில் அவன் இருக்கும் இடத்தில் கலகலப்பு எப்போதும் இருக்கும்......அதனால் தேவாவிற்கு அவனை பிடிக்கும்......தேவாவின் சில சரிவுகளில் ரங்கநாதன் தான் அவனுடன் இருந்து தோல் தட்டி உன்னால் முடியும் என்று உற்சாக படுத்தினான்.அதனால் அவன் மேல் எப்போதும் தேவாவிற்கு ஒரு தனி பாசம் உண்டு..
. உடனே நாதன் “அப்போ அண்ணா நகர்ல ஐந்து கிரௌண்ட் நிலம் இந்த மாறனிடம் வாங்குகிறாயே அதை கொடுத்து விடு என கிண்டலாக சொல்ல ...அவனும் அதை தவிர வேறு என்ன வேண்டும் கேள் எல்லாம் தருகிறேன்” என்றான்.
“அதான நீதான் பண விஷயத்துல ரொம்ப கறார் ஆச்சே என்றவன் ஓகே மச்சான் நாளைக்கு சோழாவுல பார்ட்டி ஒகேவா” என சொல்லிவிட்டு நகர்ந்தவன் அப்போது தான் ரோஜாவை கவனித்தான்.
திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் முழித்து கொண்டு தேவாவையும் தன்னையும் பார்த்துகொண்டிருந்த ரோஜாவை பார்த்தவன் ஒரு சில கணங்கள் யோசித்தவன் பின்னர் தேவாவிடம் திரும்பி .....”என்ன மச்சான் எதவது புது வழக்கா” என கண்கள் ரோஜாவை மொய்க்க வாய் கேள்வி கேட்டது.
“டேய் அவங்க என்னோட ஜூனியர் ....புதுசா சேர்ந்திருக்காங்க பெயர் ரோஜா” என்றவன் பின்னர் ரோஜாவை அழைத்து அவனையும் அறிமுகபடுத்தினான். அவள் சிரித்துகொன்டே தலை அசைக்க அவள் கன்னங்குழியில் ஒரு இதயம் விழுந்ததை அவள் அறியவில்லை. சரி மச்சான் நாளைக்கு பார்க்கலாம் என்றவன் ரோஜாவை திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.ரோஜாவோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை .ஆனால் இரு கண்கள் அதை கவனித்தன.
ரோஜாவையும் பட்டாபியையும் தனது அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு ஒரு சிறு வேலை இருக்கிறது முடித்து விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பினான் தேவா.
அலுவலகம் வந்ததும் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக பட்டாபியும் வெளியே சென்று விட ரோஜா மட்டும் தனித்து இருந்தாள்.அவளது நினைவுகள் எல்லாம் இன்று காலையில் நடந்த நிகிழ்ச்சியை சுற்றி வந்தது.அவன் எவ்வளவு திறமையாக வாதாடினான் என மனதில் மெச்சினாலும் அநியாயத்தின் பக்கம் சென்றுவிட்டானே என அவளுக்கு ஆத்திரம் வந்தது. அதை அவனிடம் கேட்டு விட வேண்டும் என முடிவோடு காத்திருந்தாள்.ஆனால் அன்று முழுவதும் அவன் அலுவலகம் வரவில்லை......நேரமாகி கொண்டே இருக்க “ரோஜா கிளம்பலாமா” என பட்டாபி கேட்டான்.
“இல்ல பட்டாபி சார் வரட்டும் ........அவரிடம் சில கேள்விகள் இருக்கிறது......அதை கேட்டால்தான் எனக்கு தூக்கம் வரும்” என சொல்லிவிட்டு வாயிலே பார்த்து கொண்டிருந்தாள்.
“ரோஜா நீ எல்லாம் எப்டிதான் வக்கீல் பட்டம் வாங்கினாயோ என அலுத்து கொண்டவன் எல்லாவற்றிற்கும் அவசரம் தானா.....நாளை என்பது இல்லாமல் போய்விடுமா என்ன.......இதற்கு மேல் சார் அலுவலகம் வரமாட்டார் ......முதலில் கிளம்பு நீ....ஏற்கனவே நேரமாகிவிட்டது.......பார்த்து பத்திரமாக செல்” என அவளை மிரட்டி அனுப்பிவிட்டு தானும் கிளம்பினான்.
வீட்டிற்கு சென்றவள் ஏதோ யோசனையுடன் அமர்ந்திருக்க அதை பார்த்த காவேரி ....அன்று போல் ஏதாவது பிரச்சனையோ என பயந்து அருகில் வந்தவள் “ரோஜா ஏண்டா ஒரு மாதிரி இருக்க” என கேட்டாள்.
“இல்லை அத்தை....கொஞ்சம் தலைவலி அவ்ளோதான்” என அவள் சாதாரனமாக சொல்ல...அன்றே தலைவலி என்றால் தனக்கு போன் பண்ணுமாறு ராம் சொல்லி இருந்தததால் உடனே ராமிற்கு போன் பண்ணி சொன்னவர் அவளுக்கு டீ போட்டு கொடுத்தார்.
அதற்குள் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சி வர மனநிலை மாறியவள் சிரித்து கொண்டு அத்தையை அழைத்து கிண்டல்பண்ணிகொண்டிருக்க.....தலைவலி என்றதும் பதறிக்கொண்டு ராம் உள்ளே நுழைந்தவன் அந்த காட்சியை பார்த்ததும் “ஹே என்ன இது அம்மா உனக்கு தலைவலின்னு போன் பண்ணாங்க....நீ என்னடானா இப்டி சிரிச்சுட்டு இருக்க” என அவன் கோபமாக கேட்க.....இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க
அந்த நேரத்தில் இந்த உலகம் இன்னுமாடா என்னை நம்புது ..அய்யோ...ஹைய்யோ என்ற வரிகள் டயலாக் வர சட்டென்று அனைவரும் சிரித்து விட உடனே” மாம்ஸ் என்ன இது....உங்களுக்கு சீரியஸ் டைலாக் எல்லாம் ஒத்துவராது....இங்க பாருங்க நீங்க உள்ளே நுழைந்த உடனே டிவில கூட என்ன வருதுன்னு” என சொல்லி அவள் சிரிக்க
காவேரியோ “ஏண்டி என் பையனை கண்டால் இந்த ஊரே நடுங்குது ....நீ மட்டுந்தான் அவனை எப்ப பாரு கிண்டல் பண்ணிட்டே இருக்க” என காதை பிடித்து திருக
“பின்பு நான் பண்ணாம வேறு யார் பண்ணுவார் இல்லை மாம்ஸ்” என அவள் சிரித்து கொண்டே சொல்ல அவரின் முகத்திலே சொல்லமுடியாத சந்தோசம் வந்து போனது”.கண்டிப்பா ரோஜா இந்த வீட்டு ராணி நீ ......உனக்கு இல்லாத உரிமையா என சொல்லிவிட்டு ராம் இரு உனக்கு காபி எடுத்து வரேன் “என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அவர் உள்ளே சென்றதும் ரோஜாவின் அருகில் அமர்ந்தவன் ....”ரோஜா இன்னைக்கு ஏதாவது பிரச்சனையா ....ஏன் அம்மாவிடம் தலைவலின்னு சொன்னாய் .......அவங்க உடனே எனக்கு போன் பண்ணிட்டாங்க .........உன் உடல்நிலையை பற்றி உனக்கு தெரியும் அல்லவா ....அப்புறம் ஏன் இப்டி நடந்து கொள்கிறாய்” என குரலில் சற்று கடுமையும் பாசத்தோடும் சொல்ல
அதை கேட்டதும் ரோஜாவும் “சாரி ராம் .இன்று தான் முதன் முதலாக நீதிமன்றம் சென்றேன் என அங்கு நடந்ததை சொன்னவள் எனக்கு தேவா சார் செய்ததது சுத்தமாக பிடிக்கவில்லை.....பணத்திற்காக அநியாத்திற்கு துணை போகலாமா .....அது தப்பில்லையா ராம்” என கேட்டாள்.
அவள் சொன்னதை கேட்டவன் “ரோஜாம்மா நீ இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருகிறாய்....ஏட்டறிவு வேறு...அனுபவ அறிவு வேறு......தேவாவை பொறுத்தவரை அவன் தொழிலில் இது வரை எந்த ஒரு கரும்புள்ளியும் இல்லை......அவன் ஒரு காரியம் செய்கிறான் என்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.முதலில் ஒரு மூன்று மாதம் ஜூனியராக அவனிடம் வேலை செய் .....பிறகு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ வெளியே வந்து விடலாம் ....ஆனால் ரோஜா வக்கீல் தொழிலில் இது எல்லாம் சாதாரண விஷயம் ....நீ ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத” என பொறுமையாக சொன்னான் ராம்.
“சரி ராம் ......எனக்கும் இந்த தொழில் பிடிச்சுதான் இருக்கு.......வாழ்க்கையே ரொம்ப த்ரில்லா போயிட்டு இருக்கு......அலுவலகத்தில் இந்த பிதாமகன் எந்த நேரத்தில் எந்த அவதாரம் எடுக்கிறானோ என்ற நினைப்பு....இன்று நீதிமன்றம் சென்றபோது அங்கு நடந்த வாதங்களை கவனிக்கும்போது அடுத்தது என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ...வேற எந்த எண்ணமும் மனசில தோன்றுவதில்லை” என அவள் ஆர்வத்துடன் சொல்ல ராமின் மனதில் நம்பிக்கை ஒளி தோன்றியது.
அவள் பேசுவதையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் அதை கவனித்து பேச்சை நிறுத்தியவள் “என்ன ராம் என்னை அப்படி பார்க்கிற” என கேட்க
மெதுவாக அவளை தன தோளோடு அணைத்தவன் “நான் மறுபடியும் பழைய ரோஜாவை பார்த்திடுவேணு நம்பிக்கை வந்திருச்சுடா” என உணர்ச்சி பெருக்கோடு அவன் சொல்ல ரோஜாவின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழ சட்டென்று நிதனமானவன்...”ஹே ரோஜா என்ன இது என அவன் கேட்க ...உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டபடுத்திடனா ராம் என கேட்டவள் என்னால முடியல...இப்போ நினைத்தாலும் குலை நடுங்குது”.....என்றவள் தாயின் அரவணைப்பை தேடும் கன்றினை போல் அவனுடன் மேலும் நெருங்கி அமர அவனும் அதற்க்கு ஏற்றார் போல் அதை மறந்துவிடு ரோஜா என்றவன் உனக்கு நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என சொல்லிகொண்டிருக்க அப்போது அந்த காட்சியை கண்ட காவேரியின் மனநிலை அவருக்கு ஒரு நிறைவை ஏற்படுத்தியது. மகனிடம் காபியை கொடுத்துவிட்டு இரவு உணவு தயார் செய்ய உள்ளே போனார் அவர்.
“அவளும் கண்டிப்பாக ராம்.....நீ மட்டும் என்னை இங்கு அழைத்து வராமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் எப்படி இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது......ரொம்ப தேங்க்ஸ் ராம்” என சொல்ல
“ஆஹா என்ன இது என்னை சொல்லிவிட்டு இப்போது நீ இந்த டைலாக் பேசற என்றவன் ரோஜா இதற்கு எல்லாம் சேர்த்து நான் ஒரு உதவி கேட்டால் நீ செய்வாயா” என்றான் ராம்.
“என்ன மாம்ஸ் வேணும் கேள்......என் உயிரையும் கொடுப்பேன்” என அவள் உணர்சிபெருக்கோடு சொன்னாள்
“யாருக்கு வேணும் உன் உயிர் ......அதெல்லாம் நீய வைத்துகொள் என்றவன் அது வந்து வந்து” என இழுக்க
உடனே சற்று தள்ளி அமர்ந்தவள் “மாம்ஸ் என்ன இது....இந்த ரியாக்சன் எல்லாம் புதுசா இருக்கு ....ம்ம்ம்ம் இது நல்லதுக்கு இல்லயே” என அலற
“ஹே லூசு உலராத என்றவன் பின்னர் அது வந்து ..வந்து என்றவன் உன் அலுவலகத்திற்கு யார் யார் வருவார்கள்” என்றான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .....”என்ன மாம்ஸ் கேட்கிற” என அவள் மறுபடியும் கேட்க
“அச்சோ என சலித்து கொண்டவன் அலுவலகத்திற்கு தேவா மட்டும்தான் வருவானா இல்லைஈஈஈஈ” என அவன் இழுக்க
உடனே அவள் “இல்ல மாம்ஸ் பட்டாபி ,நானு,அப்புறம் மணி மூன்று பேர் இருக்கோம் ஏன் மாம்ஸ் யார்காவது வேலை வேண்டுமா ......வேண்டாம் மாம்ஸ் என்னை பலியாடு ஆக்கினது போதாதா ...இன்னும் ஒரு பலியாடா” என அவள் அலற
“அது இல்லை ரோஜா” என அவன் சிணுங்க ...
அதுவும் இல்லயா என யோசித்தவள் ...”ராம் மரியாதையா உனக்கு என்ன வேணும் தெளிவா சொல்லு ....இப்படி வழிஞ்சு நெளிஞ்சு என்னை கடுபேத்தாதா......உங்களுக்கு என்னை வருமோ அதை பண்ணுங்க அதை விட்டு சினிமா நடிகன் மாதிரி இந்த சேட்டை எல்லாம் வேண்டாம்” என கடுப்புடன் சொன்னாள்.
“இல்ல ரோஜா நேற்று ஷாப்பிங் மால்ல பார்த்தோம் இல்லயா அந்த தேவதை” என அவன் சொல்லும்போதே முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய
“தேவதையா என யோசித்தவள் நான் பார்கலையே ...எங்க அந்த பிதாமகன்ந்தான் உர்றேனு முகத்தை வச்சுக்கிட்டு நின்று கொண்டு இருந்தான். ... அவனை பார்க்க முடியாம நானே கீழே பார்த்து நின்றுகொண்டிருந்தேன்.......அப்போ யாராவது வந்தாங்களா ......வேற யாரு இல்லயே என சொன்னவள் ...போ மாம்ஸ் நீ போர் அடிக்கிற ...நீ நாளைக்கு சொல்லு நான் கிளம்பறேன்” என அவள் அங்கிருந்து எழ முற்பட்டாள்.
“அய்யோ ரோஜா ...இரு இரு சொல்லிடறேன் ....அதான் தேவாவோட தங்கை ரதி தேவி அந்த பொண்ணத்தான் சொன்னேன்......ரொம்ப நல்ல பொண்ணுல்ல....அமைதியா,சாந்தமா அடக்கமா இருந்தது இல்ல” என அவன் சொல்லிகொண்டிருக்க
இப்போ மாட்டினியா மவேனே....அன்று அம்மாவும் மகனும் என்னை எப்படி டேமேஜ் பண்ணினிங்க ........இன்று உனக்கு இருக்கு ஆப்பு என மனதில் நினைத்தவள்
“ஆமா நிலத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருந்ததே அதுவா.....ஆமா அது என்ன ஊமையா ...வந்ததுல இருந்து எதுவும் பேசல என அவள் நக்கலாக கேட்க
ராம் அவளை பார்த்து முறைக்க
சரி சரி விடு....... இப்போ அதுகென்ன” என அவள் அவனை கீழ்கண்ணில் பார்த்துகொண்டே ஒரு மாதிரி குரலில் கேட்டாள்.
“இல்ல அந்த பொண்ணு அலுவலகம் வருமா...நீ பேசி இருக்கியா....எப்படி” என அவன் ஆரம்பிக்க
“அடபாவி மாமா என் மேல இருக்க பாசத்துல என்னை அங்க நீ ஜூனியரா சேர்த்து விட்டேன் நினைச்சேன்......இப்படி உங்களுக்கு உளவு வேலை பார்க்கத்தான் சேர்த்து விட்டியா.....பாசகாரபயபுல்லைய்னு உன்னை நம்பினேன் பாரு”.... என அவள் சத்தமாக பேச
“அய்யோ ரோஜா கத்தாத அம்மா வந்திடபோறாங்க” என வேகமாக அவள் வாயை மூடியவன் ப்ளீஸ் ...ப்ளீஸ் என கெஞ்ச
சரி விடு விடு என சைகை காட்ட அவன் வாயில் இருந்து கையை எடுத்ததும்......”அடபாவி இந்த பூனையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சுக்கிட்டு இப்பதான தெரியுது அது வோட்காவே குடிச்சிருக்குனு ..... இது எவ்ளோ நாளா நடக்குது ......... வேண்டாம் மாம்ஸ் .....எப்டிடா இப்படி இருக்கீங்க” என அவள் மேலும் ஆரம்பிக்க
“ரோஜா ப்ளீஸ் என்றவன் சட்டென அவள் கால்களில் விழுவது போல் குனிய ...ஹே ராம்” என அவள் அலற
வேகமாக எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தவன் “கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு......நீ கத்தி அம்மாவை வர வச்சிடாத” என கெஞ்சினான்.
“ஹஹஹஹா ....என்ன ராம் நீ இப்பதான் உங்க அம்மா என் பையன பார்த்து எல்லாரும் பயபட்றாங்கனு சொன்னாங்க நீ என்னடானா இப்படி குப்புற விழுந்திட்டு இருக்க...ஒரு ஐபிஎஸ் இப்படி ஐந்தாம் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி நடந்துக்கிற ” என சொல்லி சிரித்தாள்.
“ம்ம்ம்ம் என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு...எல்லாம் என் நேரம் ....இப்போ எனக்கு காரியம் ஆகணும் என்றவன் ப்ளீஸ் ரோஜா நான் சொல்றத கொஞ்சம் கேளேன்......எனக்கு உன்னை விட்ட வேற யார் இருக்கா சொல்லு.......எனக்கு எதாவது ஒன்னுனா நீதான பார்த்துக்கணும்” என அவன் கெஞ்சுவது போல் சொல்ல
“ஓகே மாம்ஸ் ...நீ இவ்ளோ கீழ இரங்கி வந்ததால நீ சொல்றத கேட்கிறேன்.....ஆனா சும்மா எல்லாம் கதை கேட்க முடியாது ......ஏதாவது சாப்டனும் போல இருக்கு.......அதும் பீட்சா சாப்பிடனும் போல இருக்கு” என்றாள்.
“பீட்சாவா என்றவன் அதுக்கு கடைக்கு போகணும்.....அம்மாகிட்ட சொல்லி பொட்டுகடலை உருண்டை எடுத்திட்டு வர சொல்றேன்...வேண்டாம் நானே போய் எடுத்திட்டு வரேன்” என அவன் நகர
“எனக்கு பீட்சா தான் வேணும்...அதும் உடனே வேணும்.....இல்லையனா” என அவள் இழுக்க
“சரி...சரி...ஆர்டர் பண்ணிடறேன் “என பல்லை கடித்து கொண்டே அவன் சொல்ல அதை ஒரு சின்ன சிரிப்புடன் அவள் ரசித்துகொண்டிருந்தாள்.
“சரி மாம்ஸ் இப்போ உன்னோட கதைய ஆரம்பி” என்றவள் ராமின் முன் சம்மணம் இட்டு அமர்ந்தாள்.
“அது வந்து ரோஜா” என அவன் தயங்க
“ஓகே மாம்ஸ் இது ஒத்து வராது நான் படுக்கபோகிறேன்......நீ பீட்சாவை ரூம்க்கு அனுப்பிவிடு என அவள் எழ ...இரு இரு சொல்றேன் என்றவன் அவளை நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் முதன் முதலில் சந்தித்தேன்” என ஆரம்பித்தான்..
வாழ்வின் விநாடிகளை வான்மேகமாக மாற்றி
எண்ணங்களை சிறகாக விரித்து
சிட்டு குருவி போல் சுற்றிகொண்டிருந்தேன்!
ஏய் பெண்ணே எப்பொழுது
உனது விழிகளில் என் விழி கலந்ததோ]
அன்றே காலம் கடுகு போல் சுருங்க
சிறகுகள் மறைந்து
சிலநொடிகள் கிடைத்தாலும்
உன் நினவுகள் என்னை சிறைபிடிக்க
இப்போது உன் இதயத்தின்
சிறை கைதியாய் நான் !
காவல்காரன் இன்று உன்னால்
கைதியாய் நிற்கிறேன்
சிறை மீட்க வருவாயா ????????