• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 16

kkp29

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2023
Messages
36

தவிப்பு - 16 :



ஆத்விக் கோபத்தில் கத்தியதை பார்த்த சங்கமித்ரா அதிச்சியடையவில்லை.



மார்பின் குறுக்காக கைகளை கட்டியவன் "உனக்கு ரகு மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கா?" என்று கேட்டாள்.



தன் தலையை அழுந்தக் கோதியவன் தன் இருக்கையில் அமர்ந்தபடி அவளையும் அமருமாறு சைகை செய்தான்.



அவள் அமர்ந்ததும் ஆழ்ந்த மூச்செடுத்தவன் "நிச்சயமா... இப்போ நானும் அவனும் பேசிக்காம சண்டை போட்டுட்டு இருக்கலாம். ஆனா ஒருகாலத்துல அவனும் நானும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸா இருந்தவங்க... அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் பொண்ணுங்களை தப்பான கண்ணோட்டத்துல பார்க்கவே மாட்டான். ஏன் நான் ஏதாவது கமெண்ட் அடிச்சா கூட சண்டை போடுவான். ஏன்னா அதுக்கு காரணம் அவன் தங்கச்சி அமிர்தா... அதுக்காக அவன் எல்லாரையும் தங்கையா பார்க்கிறான்னு அர்த்தம் இல்ல... ஒரு பொண்ணை எந்த விதத்திலும் தன் பார்வையாலோ பேச்சாலோ சங்கடப்படுத்திட கூடாதுன்றதுல அவன் ரொம்ப உறுதியா இருக்கறவன். அந்த நம்பிக்கையில தான் நான் அவன் கூட உன்னை பூட்டி வச்சேன்" என்றான்.



"நீ சொல்றபடி அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க வாய்ப்பில்லைனே வச்சிப்போம்... ஆனா அவனுக்கு என்னை பிடிக்காது. ஏற்கனவே எங்களுக்குள்ள பிரச்சனை வேற இருக்கு... நான் எவ்வளவு வாய் பேசுவேன்னு உனக்கே தெரியும். ஒருவேளை அவன் என்னை அடிச்சி நான் அவனை கடிச்சி இப்படி ஏதாவது நடந்திருந்தா என்ன பண்றது?" என்று அவள் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள்.



அவள் கேட்ட விதத்தில் ஆத்விக்கிற்கு சிரிப்பு வந்தது.



"ஹா ஹா ஹா... அப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்குதான்... அதாவது நீ அவனை கடிச்சு வைக்க" என்று சிரித்தபடி சொன்னவன் பின்னர் ஆழ்ந்த குரலில் "இங்க பார் சங்கமித்ரா... அவனை வெறுப்பேத்த நான் இந்த மாதிரி பண்ணியிருந்தாலும் உங்க நல்லதுக்காக தான் இப்படி பண்ணேன். ஏனோ அவனுக்கு உன்னை பார்த்தாலே எரிச்சலாகுது. உனக்கும் அவன்கூட இருக்கறது கன்வீனியன்ட்டா இருக்க மாதிரி தெரியல... ஆனா நம்ம தலையெழுத்து நாம எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்கிற மாதிரி ஒரு நிலைமை வந்துடிச்சி. சோ நீங்க ரெண்டு பேரும் உங்க பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கிட்டா மட்டும்தான் நீங்க ரெண்டு பேரும் நல்ல மனநிலையோட வேலை பார்க்க முடியும்... நாங்க வானம்பாடி ட்ரூப் ஆரம்பிச்சதுல இருந்து மியூசிக் போட அவன் இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை. இன்னைக்கு ஏனோ அவனால மியூசிக் போடவே முடியல... ரெண்டு வருஷ கேப் அதுக்கு ஒரு காரணமா இருந்தாலும் நானும் நீயும் கூட அதுக்கு ஒரு காரணம் தான். எங்க பிரச்சனையை ஒன்னும் பண்ண முடியாது... ஆனா உங்க பிரச்சனை நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேசினா சரியாகிடும்னு தோணுச்சு... அதான் இப்படி பண்ணேன்" என்றான்.



அவன் சொன்னதை கேட்ட சங்கமித்ரா திகைத்தாள்.



"அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற? எங்களுக்கு இப்போ கூட ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காது தெரியுமா?" என்று அவள் சொன்னதும்



"ஹா... ஹா... அதான் பொய் பேச வரல இல்லை... அப்புறம் ஏன் ட்ரை பண்ற? நீ சாரை விட்டுட்டு ரகுன்னு சொல்லும் போதே நீங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிடீங்கன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு" என்று அவளை பார்த்து கண்ணடித்தபடி சொன்னான்.



"கண்டுபிடிச்சிட்டியா? உண்மைதான்... இப்போ நாங்க ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்" என்றவள் பின்னர் அவனை தயக்கத்துடன் பார்த்தபடி " அவரை பத்தி இவ்வளவு நல்லா புரிஞ்சி வச்சிருக்க... அப்புறம் ஏன் அவரோட பேச மாட்ற? எங்களை மாதிரி நீங்களும் உட்கார்ந்து பேசினா உங்க பிரச்சனை தீர்ந்திடும் இல்லையா?"



அவள் சொன்னதை கேட்டதும் ஆத்விக்கின் முகம் கல்லாய் இறுகியது.



"நான் இதை பத்தி பேச விரும்பல... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... சோ ப்ளீஸ்" என்று ஆத்விக் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.



அவன் இதைப் பற்றி தன்னிடம் பேச விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்ட சங்கமித்ரா இருக்கையில் இருந்து எழுந்தபடி "ஓகே... நாளைக்கு பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.



அவள் சென்றதும் வேலை செய்ய மனமில்லாமல் ஆத்விக் தன் இருக்கையின் பின்னே சாய்ந்து கண்களை மூடினான். மூடிய கண்களுக்குள் அவன் கடந்த காலம் வலம் வர தொடங்கியது.



அதேநேரம் வெளியே வந்த சங்கமித்ரா அங்கே நின்றிருந்த பிரேமை பார்த்து திகைத்தாள்.



"சார்... நீங்க இங்க எங்க?"



"ஹலோ மேடம் நான் அதை கேட்கணும்? ஆத்விக் பண்ண காரியத்தால கோபமே இல்லாத மாதிரி எங்ககிட்ட பேசிட்டு இங்க வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்க?"



அவனை பார்த்து சிரித்தவள் "நிஜமாவே எனக்கு கோபமெல்லாம் இல்லை சார்... நான் இப்போ இங்க வந்து சண்டை போட்டதுக்கு காரணமே ஆத்விக் ரகுவை முழுக்க வெறுத்துட்டாரா? இல்லையான்னு தெரிஞ்சிக்க தான்... அதான் சும்மா அவர் வாயை பிடுங்கினேன்... அவர் பேசினதை வச்சி பார்த்தா அவருக்கு ரகு மேல இருக்கறது வெறும் கோபம் தான்னு தோணுது"



"உண்மைதான்... ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினா தீர்ந்திடும் தான். ஆனா ரெண்டு பேரும் பேச ரெடியா இல்ல... அதுசரி உனக்கு என்ன இந்த விஷயத்துல இவ்வளவு அக்கறை?"



"அக்கறை இல்லாம எப்படி சார் இருக்கும்? இப்போ ரெண்டு பேரும் என் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க... சோ அவங்களுக்குள்ள இருக்க பிரச்சனையை தீர்க்கணும்னு ஒரு ப்ரெண்டா நான் நினைக்கிறேன்... இல்லைனா உங்களை மாதிரி இவங்களுக்கு நடுவுல அல்லாடணுமே... அப்புறம் இவங்க ஒன்னு சேர்ந்துட்டா எங்க கம்பெனிக்கும் லாபம்... நிறைய ப்ராஜெக்ட் பண்ணி கொடுப்பாங்க... அவங்க சேர நானும் ஒருவகையில காரணம்னு தெரிஞ்சா என் பாஸ் என்னோட வேலையை கூட கன்பார்ம் பண்ண வாய்ப்பிருக்கு... இது எல்லாத்தையும் விட ஒரு ரசிகையா அவங்களோட ஆல்பம்ஸை நான் ரொம்ப மிஸ் பண்றன்..."



அவள் சொன்னதை கேட்ட பிரேம் வாயடைத்து நின்றான்.



"அதுசரி நீ ஒரே கல்லுல இத்தனை மாங்காய் அடிக்க திட்டம் போட்டிருக்கியா..."



"அதே அதே"



"என்னோட எண்ணமும் அதுதான். எப்படியாவது இவங்க ரெண்டு பேரும் முன்ன மாதிரி மாறணும்... ஆனா என்ன பண்றதுன்னு தான் தெரியல... ரெண்டு பேர்கிட்டயுமே மத்தவங்களை பத்தி பேச முடியல... நான் அந்த டாபிக்கை ஆரம்பிச்சாலே வாயை மூடுன்னு சொல்லிடறானுங்க" என்று பிரேம் சோகமாக சொன்னான்.



"அட கவலைப்படாதீங்க சார்... அதான் இப்போ நானும் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்கேனே... நாம ரெண்டு பேரும் சேர்ந்து காரியத்தை முடிச்சிடலாம்"



"எப்படி? எப்படி?" என்று அவன் ஆர்வமாக கேட்டான்.



"சார் இவங்க ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் கோபமா இருந்தாலும் வெறுக்கலாம் இல்ல... ஆனா அதேசமயம் கொஞ்சம் ஈகோவும் இருக்கு... அதனால நாம என்ன சொன்னாலும் நம்ம பேச்சை கேட்க மாட்டாங்க... ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க நல்ல எண்ணத்தை மத்தவங்க நேரடியா தெரிஞ்சிக்கிற மாதிரி ஒரு சுச்சுவேஷன் வந்தா அவங்களா சேர்ந்துடுவாங்கன்னு எனக்கு தோணுது"



அவள் சொன்னதை கேட்ட பிரேம் ஆச்சர்யமடைந்தான்.



"எப்படி சங்கமித்ரா? நீ அவங்க கூட பழக ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் ஆகுது... அதுக்குள்ள எப்படி அவங்களை பத்தி இவ்வளவு சரியா கெஸ் பண்ண?"



"எனக்கு மனுஷங்க மனசை படிக்க ரொம்ப பிடிக்கும் சார்... நான் யாரோட பழகினாலும் அவங்களை எடைபோட்டுத் தான் பழகுவேன்... அந்த பழக்கத்துல அவங்களை கவனிச்ச போது, அவங்க பேசினது, அவங்க செயல், இதையெல்லாம் வைத்து தான் கெஸ் பண்ணேன்"



"செம கேடி தான் நீ..."



"நான் கேடியாவே இருந்துட்டு போறேன்... அப்புறம் நாம அவங்களை ஒன்னு சேர்க்கணும்னா எனக்கு அவங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்... சொல்றீங்களா?"



"நிச்சயமா... ஆனா இங்க வைத்து வேண்டாம்... வா கார்ல போகும் போது சொல்றன்" என்ற பிரேம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.



"ஆத்விக்கை பார்க்காம கிளம்பறீங்க? வேணும்னா போய் மீட் பண்ணிட்டு வாங்க... நான் வெயிட் பண்றேன்"



"அதுக்கெல்லாம் இப்போ அவசியமில்லை.... அவனை திட்டதான் நான் இங்க வந்தேன்... இப்போ அதுக்கு அவசியமில்லாம போயிடிச்சு... நாம கிளம்பலாம்" என்றவன் அவளுடன் லிப்ட்டில் ஏறி கார் பார்க்கிங்கிற்கு சென்றான்.



காரை செலுத்த ஆரம்பித்த பிரேம் "நான், ஆத்விக், ரகு, வசந்த் நாலு பேரும் ஸ்கூல்ல இருந்தே ப்ரெண்ட்ஸ்... ஒரே காலேஜ், ஒரே சப்ஜெக்ட் ரொம்ப ஜாலியா இருந்தோம்... காலேஜ் படிக்கும் போதுதான் நாங்க வானம்பாடி ட்ரூப் ஆரம்பிச்சோம்... எங்க நாலு பேருல ரகு, ஆத்விக் ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்... ரெண்டு பேரும் ஒரு விஷயம் விடாம எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாங்க..." என்று சொல்லத் தொடங்கியவன் தங்களின் கடந்த காலத்தில் மூழ்கினான்.



நான்கு வருடங்களுக்கு முன்பு...



ரகு, ஆத்விக், பிரேம், வசந்த், அமிர்தா ஐந்து பேரும் இன்டெர்காலேஜ் பாட்டுப் போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.



பயிற்சி முடிந்ததும் ரகு "ஆத்விக், பைனல் இயர் விவேக் ஏதோ புது மியூசிக் போட்டிருக்கானாம்... எப்படி இருக்குன்னு ஒப்பீனியன் தெரிஞ்சிக்க என்னை வர சொன்னான். நான் போய்ட்டு வரேன்" என்றான்.



அவனை முறைத்துப் பார்த்த ஆத்விக் "எனக்கு அவனைப் பிடிக்காதுன்னு தெரியும் தானே... அப்புறம் எதுக்காக அவனை பார்க்க போறதை என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க... நீ யார்கிட்ட வேணும்னாலும் பேசு, பழகு... பட் அவங்களை பத்தி என்கிட்ட பேசாத" என்று எரிந்து விழுந்தான்.



ரகு அதற்காக கோபப்படவில்லை.



ஆத்விக்கின் தோளில் கையை போட்டவன் "உனக்கு பிடிக்குதோ? இல்லையோ? உன்கிட்ட சொல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்னு தெரியும் தானே" என்றான்.



"தெரியும்... தெரியும்" என்று முகத்தை தூக்கி வைத்தபடி ஆத்விக் சொன்னான்.



ரகு அவனை சமாதானப்படுத்த முனைந்த போது "விடு ரகு... அவனை பத்திதான் உனக்கு தெரியுமே... நீ கிளம்பு... வந்து அவனை சமாதானப்படுத்திக்கோ" என்றான்.



பிரேம் சொன்னது சரியாகப்படவே ரகுவீர் வசந்தை பார்க்க சென்றுவிட்டான்.



அவன் சென்றதும் வசந்த் "எங்களை ப்ரோபஸர் வர சொன்னாரு... போய் பார்த்துட்டு வந்துடறோம் மச்சான்" என்றான்.



"என்ன விஷயம்டா?" என்று ஆத்விக் கேட்டான்.



"வேற என்ன? இன்டெர்னல் டெஸ்ட்ல முட்டை வாங்கியிருக்கோம்... அதுக்கு பாராட்டு விழா நடத்தத் தான் கூப்பிட்டு இருக்காரு... போய் பார்த்துட்டு வந்துடறோம்" என்ற பிரேம் வசந்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.



அவர்கள் சென்றதும் அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் அமிர்தா மற்றும் ஆத்விக் இருவர் மட்டுமே இருந்தனர்.



ஆத்விக்கை ஆசையுடன் பார்த்தபடி அவன் அருகே வந்த அமிர்தா "ஆது... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.



ஆனால் அவள் முகத்தை கூட பார்க்காமல் "எனக்கு உன்கிட்ட பேச எதுவுமில்ல" என்றவன் அங்கிருந்து செல்லத் தொடங்கினான்.
 

k. ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 16, 2023
Messages
35
அடுத்த எபியை இன்னும் காணும் ...
 
Top