• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!!-1

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
10
உள்ளத்தில் ஊஞ்சலொன்று!


அத்தியாயம்-1

இது பொதுவாக எல்லாரும் சொல்றதுதான். வீடு என்பது செங்கல் சிமெண்ட் கல்லால் மண்ணால் கட்டப்பட்டது இல்லை. அன்பால் கட்டப்படுவது. அது உண்மைதான். வீடு ஒரு கட்டடம் தான். ஆனால் அதைத் தாங்கறது அங்க இருப்பவங்களோட அன்பு. அதான் அதோட ஆத்மா. அன்பில்லாத வீடு வெறும் கூடு மட்டும்தான்.
-எழில்

கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்…
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்…


இந்தப் பாடல் ஒலித்தால் அந்த வீட்டில் பூசை முடிந்து விட்டது என்று அர்த்தம். அந்த வீட்டின் பரந்த ஹால் முழுவதும் சாம்பிராணியும் ஊதுபத்தியும் நறுமணத்தைப் பரப்ப சின்ன முட்கரங்கள் தனக்குத் துணையாகக் கடிகாரத்தின் பெரிய முட்கரத்தினைப் பிடித்து நேராக நின்று ஆறைத் தொட முயன்று காலை விடியலை அறிவித்துக் கொண்டிருந்தது.
சாம்பிராணியுடன் ஹால் முழுவதிலும் உள்ள மூலை முடுக்கெல்லாம் காட்டியவர் திரும்பவும் அதை பூசை அறையில் வைத்தார்.
அங்காங்கே உப்பின் நிறத்தில் நரையோடிய கூந்தல் இன்னும் அடர்த்தியாக அரை முதுகைத் தாண்டி இருந்தது. ஆனால் அதை ஒரு துண்டால் அடக்கிக் நீர் வடியாமல் இருக்கக் கட்டி இருந்தார் அந்தப் பெண்மணி.

முகம் பூமியில் வாழ்ந்த அடையாளத்திற்காக மகிழ்ச்சியின் சுருக்கங்களைக் கொண்டிருந்தது. காதில் நீலக் கற்கள் பதித்த தேன் கூடு வடிவம் கொண்ட பெரிய தோடு. மஞ்சள் கயிரோடு இணைந்த தங்கத் தாலியில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு திருநீற்றோடு நெற்றிக்கு இட்டார் வடிவழகி.
இது அவர் திருமணம் ஆகும் முன்பிருந்தே பின் பற்றும் பழக்கம். அறுபத்திந்தைத் தொட்டுக் கொண்டிருந்தார் இப்போது. புது வீட்டுக்கு மாறிய பின்னரும் அவர் இந்த வீட்டின் ஆணி வேர்.
நல்லப் பெண்ணிற்கு அழகு என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட வீட்டு வேலைகள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுதல் என அனைத்திலும் கை தேர்ந்தவர் என்றாலும் மிகவும் புத்திசாலி.

அவருடைய கணவர் மிக முக்கிய முடிவுகள் எதுவும் இவரைக் கேட்காமல் எடுத்தது இல்லை. அந்த வீட்டில் ஆல்பா எனக் காட்டிக் கொள்ளாமல் அடக்கமான பெண்ணாகக் காட்டிக் கொள்பவர்.
ஆல்பா என்றால் அனைத்தையும் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் இல்லை. அதுவே அவரது மருமகள்களுக்கும் மகன்களுக்கும் இடையில் பெரிதாக எந்தச் சிக்கலும் இன்றி குடும்பத்தை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.

அவருக்கு ஆறு மணிக்கு பூசை முடித்து விட வேண்டும். இந்த வீட்டின் மற்ற அனைவரும் ஆறரைக்குத்தான் துயில் எழுவது வழக்கம். ஒருவனைத் தவிர.
அவன் பெயருக்கு ஏற்றார் போல் காலையில் பாட்டிக்கு முன்பு எழுந்து ஜாக்கிங்க் முடித்துக் கொண்டு மொட்டை மாடியில் உள்ள அறையில் உபகரணங்களைக் கொண்டு உடல் பயிற்சி செய்து விட்டு அவனது தந்தை வழி பாட்டியான வடிவழகி போடும் பில்டர் காஃபிக்காக மாடியிலிருந்து கீழிறிங்கிக் கொண்டிருந்தான் அவன்.

இப்போது ஹாலில் கூடுதலாக காஃபியின் நறுமணமும் தவழ்ந்தது.
அனைத்து நறு மணங்களுடனும் போட்டி போட்டு அது வென்றது. அதனால் தான் அந்தக் கதிரவன் இப்போது ஹாலுக்குள் பிரேவசித்து சமையலறைக்குச் சென்று கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் அவரவர் அறைக்குள் காலணிகள் அணிந்து கொள்ளலாம். ஆனால் ஹாலுக்குள் பூசை அறை இருப்பதால் அங்கு மட்டும் யாரும் செருப்புடன் வர மாட்டார்கள்.
அதே போன்று சமையலறை சாப்பிடும் இடம் எதிலும் காலணி அனுமதி இல்லை.அது
சாப்பாட்டிற்கும் சாமிக்கும் கொடுக்கும் மதிப்பு என்பார் வடிவழகி.

அதனால் வெறுங்காலுடன் நடந்து சமையலறைக்குள் நுழைந்தான்.

“குட் மார்னிங்க் கிரானி..”

“குட் மார்னிங்க் ஆதித் பொன்னெழிலன்.”
அவன் வீட்டில் அவன் பெயரை முழுவதும் கூறி அழைப்பவர் வடிவழகி ஒருவரேதான். மற்ற அனைவருக்கும் அவன் ஆதி மட்டுமே.

“ம்ம்ம்.. இந்தா காஃபி..”

“தேங்க் யூ..”,
என்றவன் காஃபியின் நிறத்திற்கு சற்று பொருத்தமான செம்பிலான டபரா டம்பளரை வாங்கிக் கொண்டான்.

“எப்பவும் நீங்க போடறதான் பெஸ்ட் காஃபி.”

“ஆத்தாவுக்கு காலையிலே ஐஸ் வைக்காமல் சமத்தா காஃபி குடிச்சுட்டு மார்கெட் போயிட்டு வந்துடு.”

மார்க்கெட் என்றதும் எழிலனின் முகத்தில் இருந்த எழில் சற்று குறைந்துதான் போனது. ஏனோ சந்தை அவனுக்குப் பிடிக்காது.

“கிரானி…”

“கிரானி பிராணி எல்லாம் வேண்டாம். மார்க்கெட் போ.. நேத்தே எல்லாம் போனில் சொல்லிட்டேன். எல்லாம் போட்டு வச்சுருப்பாங்க. நீ காரில் எடுத்து வச்சுட்டு வந்தால் மட்டும் போதும். என்னமோ ஒவ்வொரு காயா பார்த்து வாங்கற மாதிரி..” என்று பேரனைக் கடிந்தார் வடிவு.

டம்பில்ஸ் தூக்கிய ஜிம்பாடியை இப்படி காய்கறி தூக்க விடும் அதிகாரம் வடிவுக்கு மட்டுமே உண்டு. தன் விதியை நொந்தவன் காஃபியைக் குடித்துக் கொண்டு ஹாலில் உள்ள தன் கார்ச் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
முகத்தைத் தொங்கப் போட்டவாறு செல்லும் தன் பேரனை சிரிப்புடன் பார்த்தவர் அரிசியை எடுத்து ஊற வைத்தார்.

“மார்க்கெட்டுனா மட்டும் முகம் அப்படியே சுருங்கிக் போயிடுது..” என்று முனகியவர் தன் வேலையைத் தொடர்ந்தார்.
காரிற்குள் சலிப்பாக ஏறி அமர்ந்து ஆதி காரை முடுக்கினான். பக்கத்துத் தெருவில் சந்தை இருந்தது. வாரம் இரண்டும் முறை இவன் இப்படித்தான் காய்கறிகளை எடுக்க வருவான். இல்லை வரச் செய்துவிடுவார் வடிவு.

அது என்னவோ மிகவும் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை என்றால் ஆதிக்கு அலர்ஜி. கூட்டத்தில் அவனால் ஓரளவு இருக்க முடியும். ஆனால் ஆதி இண்ட்ரோவெர்ட் வகையைச் சார்ந்தவன். அதிகம் கூட்டமுள்ள இடங்களுக்கு வருவது அவனுக்குப் பிடிக்காது.
அமைதி விரும்பி. ஓரளவு அனைவரிடமும் பழகுவான் என்றாலும் யாரும் அவனிடம் நெருங்கி விட முடியாது. அளவுடன் தான் வெளிப் பழக்கம். ஒரு சில நெருக்கமான நண்பர்கள்.
தான் வழக்கமாக வாங்கும் கடைக்கும் சென்று கொண்டிருந்தவனின் மீது யாரோ மோதினார்கள். ஏற்கனவே ஆதி இருக்கும் நிலையில் அவனை இடித்த ஆளை முறைத்தான். ஆனால் அது பதினைந்து வயது நிரம்பிய சிறுமி. டீசர்ட் பைஜாமாவில் இருந்தாள். அவள் முட்டைக் கண்களில் அளவுக்கு அதிகமான பயம் தெரிந்தது.

-ஊஞ்சலாடும்.


வணக்கம். எழுதுவதற்கு பழசு. இந்த தளத்தில் புதுசா வந்திருக்கும் இளசு நான். தங்கள் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். அங்காங்கே சில சிந்தனைகளோடு ரொமான்டிக் காமடி, குடும்ப கதையாக இந்த நாவல் இருக்கும்.
 

Attachments

  • FB_IMG_1695991939833.jpg
    FB_IMG_1695991939833.jpg
    56.8 KB · Views: 7
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
43
மங்களகரமான ஆரம்பம் ❤️
கிரானி கேடியா இருக்கும் போலயே?
மிஸ்டர்.ஜிம் பாடிய காய்கறி கூடைய தூக்க வெச்சுட்டாங்களே? 🤣
யாருடா அது? மிஸ்டர்.ஜிம் பாடிய இடிச்சுட்டு மிரண்டு போய் பாக்குறது? 🧐🤔
 

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
10
மங்களகரமான ஆரம்பம் ❤️
கிரானி கேடியா இருக்கும் போலயே?
மிஸ்டர்.ஜிம் பாடிய காய்கறி கூடைய தூக்க வெச்சுட்டாங்களே? 🤣
யாருடா அது? மிஸ்டர்.ஜிம் பாடிய இடிச்சுட்டு மிரண்டு போய் பாக்குறது? 🧐🤔
அடுத்த எபியில் வரும்.
 
Top