• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-2

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
10
அத்தியாயம்-2

“எனக்குப் பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லாப் பெண்களுக்குமே பூக்கள் பிடிக்கும் அப்படிங்கறாளா? நோ.. பூக்கள் பிடிக்காத பெண்கள் இருக்காங்க. அதே சமயம் எனக்கு பூக்கள் பிடிக்கக் காரணம் வேற. சில பூக்கள் தனிமையைக் குறிக்கும். லில்லி எல்லோ கிரைசாந்திமம் பட்டர்பிளை வீட்.. இந்த மாதிரி பூக்கள் எல்லாம் தனிமையைக் குறிப்பவை. சில மனிதர்களும் இப்படித்தான். அதிகம் தனியாக இருப்பார்கள். மற்றவர்களுடன் அதிகம் பழகமாட்டார்கள். அவர்களை இன்ட்ரோவர்ட்டுனு சொல்லலாம்.”
-மனோ.


விட்டால் அங்கேயே அழுது விடுவாள் என்ற நிலையில் இருக்கும் சிறு பெண்ணைப் பார்த்ததும் பரிதாபம் உண்டானது ஆதிக்கு. பரவாயில்லை என்று அவன் திரும்பும் சமயம் அந்தக் குரல் காதில் கேட்டது.
அமைதியாகவும் மென்மையாகவும் உறுதியுடன் ஒலித்தது.

“அவர்கிட்ட சாரி கேளு. உன்னை ஒன்னும் சொல்ல மாட்டார். பயப்படாத. கமான்.”

அவள் குரலில் தானாக ஒரு ஆர்வம் எழ திரும்பினான் ஆதித். அந்தப் பெண்ணிற்கு அருகில் சந்தன நிற டீசர்ட்டின் முன்பக்கத்தில் பெரிய பட்டர்பிளை கருப்பும் நீலமும் கலந்து மினு மினுக்க கருப்பும் வெள்ளை வரிகள் இட்ட பேலாஷோ பேண்ட் அணிந்து பாதங்களை ஸ்னிக்கருக்குள் மறைத்திருந்தாள்.
முடியை மேலே தூக்கி
மெஸ்ஸி பன்னாக போட்டிருந்தவளின் மூக்கில், ரோஸ் கருப்பு ஆகாய நீலம் வெள்ளை நிறங்கள் கலந்த கேட் ஐ பிரேமிட்ட கண்ணாடி ஒன்று புகுந்திருந்தது. அவளுடைய மீடியம் ஸ்கின் டோனிற்கும் ஸ்கொயர் டைப் முக வடிவுக்கும் ஏற்றதாக இருந்தது.
அவள் முகத்தைப் பார்வையில் அளந்து கொண்டிருந்தான் அவன்.

சில நொடிகள் அவனைப் பார்த்திருந்தவனின் எண்ணத்தில் தடையாக அந்தச் சிறு பெண்ணின் “சாரி அண்ணா..” என்ற நடுங்கிய குரல் கேட்டது.

பார்ப்பதற்குப் பயப்படும் அந்தச் சிறு பெண்ணிற்கு “பதிலாக இட்ஸ் ஓகே..” என்று சிறு புன்னகையுடன் கூறியவன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.

“தேங்க் யூ.” என்று அந்தப் பெண்ணின் குரல் பின்னால் ஒலித்தது. மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்தவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தான். அந்த முகம் எங்கோ பார்த்தது போன்று இருந்தது.

அவன் இப்படி நினைத்து நகர்ந்து கொண்டிருக்க எதிரில் இருப்பவளுக்கும் அவனை எங்கோ பார்த்தது போன்று நினைவு.
சதுர வடிவ தாடை அமைப்போடு மீடியம் டேன் நிறத்தில் முதலில் முறைப்புடன் திரும்பியவன் சிறு பெண் என்பதால் சாந்தமானதும் பிறகு தன் குரல் கேட்டு திரும்பி தன்னை ஆராய்ந்ததையும் அவளும் கவனித்திருந்தாள். அவளுடைய வேலைக்கு அது பழக்கம்.

‘யார் இந்த ஹேண்ட்சம்? பேஸ் ரொம்ப பெமிலியரா இருக்கு.’ என்று அவள் மனதிலும் அதே எண்ணத்தைத் தோற்றுவித்து அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அவை எல்லாம் சில நொடிகள் தான். அதற்குள் அங்கிருந்த பெண் அவளை கையைப் பிடித்தாள்.

“அக்கா.. போலாம்கா..”

“குட் ஜாப் டூடே. வெரி குட். பாரு யார்மேலயாவது மோதிட்டா இப்படி சாரி கேட்கனும். சிலர் பதிலுக்குத் திட்டலாம். அது அவங்க அவங்க மன நிலையைப் பொறுத்து இருக்கும். ஓகே?”

“ம்ம்ம்..” புரிந்தது என்ற நிலையில் தலையாட்டினாள் அந்தச் சிறு பெண்.

“இங்க பாரு.எவ்வளவு மனுசங்க? அவங்க அத்தனை பேரும் நம்மளைப் பார்க்க மாட்டாங்க. சிலர் கவனித்தாலும் அவங்க அவங்க வேலையில் மூழ்கிடுவாங்க.”

“புரியுதுக்கா..”

“கம் .டைம் ஆச்சு.” அவள் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைப்பேசியை எடுத்தவள் மணியைப் பார்த்தப்படி அந்த சிறு பெண்ணின் கையை விடாமல் கூட்டத்தில் மெல்ல நகர ஆரம்பித்தனர்.

சில நிமிடங்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் நிரம்பிய இரண்டு கட்டப்பைகளைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்த ஆதித் அந்தப் பெண்ணைச் சந்தித்த இடத்தில் நின்றான். அவர்கள் நின்ற இடத்தில் வெள்ளையும் பிங்கும் கலந்து ஒரு கார்ட் கிடந்தது. விசிட்டிங்க் கார்ட் என்பதால் அதைக் கையில் எடுத்தவன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு மீண்டும் பைகளுடன் நடக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அவனுக்கு அழைப்பொன்று வர புளூ டூத்தை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.

“ஆதி எடுத்திட்டியா?”

“எடுத்துட்டேன் கிரானி. இன்னும் ஃபைவ் மினிட்ஸ் வந்திடுவேன்.”

“சரி.. சரி சீக்கிரம் வா..” என்று அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.

காரில் பைகளை வைத்தவன் காரை இயக்க ஆரம்பிக்க அவனுடையைக் காரைத் தாண்டி ஹெல்மெட் அணிந்து புல்லட்டில் அந்த சிறு பெண்ணுடன் சென்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

புல்லட் சத்தம் கேட்டாலும் தன் கைப்பேசியில் அன்றையை வேலைகளின் குறிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு வாகனத்தை இயக்க ஆரம்பித்தான்.
வீட்டில் நுழைந்தவனுக்கு ஹாலில் பேப்பரும் அமர்ந்திருந்த அவனுடைய அப்பாவும் பெரியப்பாவும் பட்டனர். இருவரும் பனியனும் லுங்கியுமாக நாட்டு நடப்பைப் படித்துக் கொண்டிருந்தனர்.

ஆதியைப் பார்த்ததும், “குட் மார்ங்கிங்க் ஆதி” என்று இருவரும் ஒரு மித்த குரலில் கூறினர்.

பெரியவர் வரத ராஜ் .இளையவர் ஆனந்த் ராஜ். இருவரும் அண்ணன் தம்பி. இன்று வரை ஒற்றுமையாக வாழும் கூட்டுக் குடும்பங்களில் ஒன்று.

ஆனந்தராஜின் புதல்வன் ஆதித். அவனுக்கு உடன் பிறந்த ஒரு தங்கை உண்டு.

அப்போது படிக்கட்டில் இரு பெண்கள் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.

“ஹேப்பி மார்னிங்க்.” என மூவருக்கும் பொதுவாக அந்த அழகிய யுவதிகள் கூறிக் கொண்டே ஆதித்தின் அருகில் வந்தனர். இரு பெண்களுக்கும் முகச்சாயல் லேசாக இருந்தது.

மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவ முகத்துடன் இருந்தவள் அகல் நிலா,கோதுமை நிறத்தில் வட்ட வடிவ முகத்துடன் இருந்தது இளமதி.

அகல் நிலா வரதராஜின் புதல்வி. இளமதி ஆனந்த்ராஜின் புதல்வி. எதிரில் நிற்கும் அண்ணனிடம் இருந்து ஆளுக்கு ஒரு பையாக இரு தங்கைகளும் சிரித்தப்படியே வாங்கிக் கொண்டனர்.

“அண்ணா‌ பையோட போட்டோவில் ரொம்ப சூப்பரா இருக்க? ஹேஷ் டேக் என்ன தெரியுமா? ‘இட்ஸ் மென்ஸ் டூயுட்டி ஆல்சோ’ ஓகேவா?” என்றாள் அகல் நிலா.

அவன் பையோடு நிற்பதை மாடியில் இருந்து இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டுதான் வந்திருந்தனர்.

“நிலா.. டெலிட் பன்னு..”

“முடியாதே புரோ.” என்று தலையை இட வலமாக ஆட்டிய இளமதி தன் பையைக் கீழே வைத்தாள்.

நிலாவும் அதே போல் செய்து அந்த இடத்தை விட்டு இருவரும் சிட்டாகப் பறக்க ஆரம்பித்தனர்.


-ஊஞ்சலாடும்..
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
165
Brother and sisters bonding very nice
 
Top