• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-27 &28

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
65
39
18
Tiruppur
அத்தியாயம்-27

என்னோட பீல்டில், அவ்வளவு வருஷம் இல்லைனாலும் பதினேழு வயசில் இருந்து சைக்காலஜி பீல்டுதான். நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பிராக்டீஸ் பன்ன ஆரம்பிச்சதில் இருந்தும் வித்யாசமான நபர்களை சந்திச்சுருக்கேன். ஆனால் யாரும் இப்படி ஒரு ரிக்வஸ்ட்ட எங்கிட்ட கேட்டது இல்லை. எனக்கு முன்னாடி இருக்கற ஆதித் ஒரு மிஸ்டரி மாதிரி பீல் ஆகுது.
-மனோ.

“கம் அகெய்ன்?” மனோஷா ஐஸ்கீரிமை விழுங்கியபடி கேட்டதில் அவள் நாக்கு லேசாகக் குழறி ஒலித்தது. அவன் கூறிய விஷயம் ஐஸ்கீரிமையே விக்க வைத்து விடும் போலிருந்தது.

“நான் சொல்றது கரக்ட்தான். நீ ஒரு பேம்லிக்குள்ள போய் அங்க நடிக்கனும்.”

“வாட்?”

“அங்க இருக்கறவங்களோட மனசில் இடம் பிடிச்சு அவங்கிட்ட குளோஸ் ஆகி நீ ஒரு உண்மையைக் கண்டு பிடிக்கனும்.”

ஐஸ்கீரிம் அள்ளும் மரத்திலான ஸ்பூன் அவள் உதடுகளுக்கு இடையில் சிறைபட்டு நின்றது. அவள் கையை ஆதித் தொட்டதும் மீண்டும் அந்த ஸ்பூனை ஐஸ்கீரிற்குள்ள குத்திய மனோஷா இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனை நேராக பார்த்தாள்.

“யூ மீன் ஸ்பை வேலை பார்க்கனும்?”

“கிட்டதட்ட அப்படித்தான்.”

“அதுக்கு நீங்க பார்க்க வேண்டியது போலீஸ் இல்லை ஆக்டர். நான் இல்லை.”

“இல்லை இதுக்கு கரக்டான ஆள் நீ மட்டும்தான். உன்னால் நிச்சயம் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.”

“அப்படி என்ன உண்மை?”

“அது தெரியல. அதனால் தான் உன்னைக் கண்டுபிடிக்க அனுப்பறேன்.”

வலது கையை எடுத்து நெற்றியில் நீவிக் கொண்டாள். தலை வலிக்கும் போல் இருந்தது.

“தெளிவா எக்ஸ்பிளைன் பன்னுங்க.”

“இன்னும் ஒன் மன்த்தில் எங்க சொந்த ஊரில் கோயில் பங்க்சன் வரப் போகுது. பதினஞ்சு நாள் நீ நான் சொல்ற வீட்டில் இருக்கனும். அந்த வீட்டு ஆளுங்க உன்னை முழுசா நம்பனும்.”

“இதுக்குப் பேரு மேனிபுலேசன். சீட்டிங்க்.”

“யெஸ். நான் இல்லைனு சொல்லலை. ஆனால் எனக்கு என்னோட இல்லை இந்த குடும்பத்தில் ஒரு ஆள் மிஸ் ஆகிட்டாங்க. அதுக்கான காரணம் தெரியனும்.”

“வெயிட். நான் சைக்காலஜிஸ்ட். என்னோட பேசண்ட்ஸ்கிட்ட உண்மையைத்தான் நான் எதிர்பார்ப்பேன். அவங்கள விடுங்க. நீங்க என்னோட கிளையண்ட் கிடையாது. நீங்க கேட்கறதும் ரொம்ப காம்பிளிகேட்டடு. சோ இந்த குடும்பம் யாரு குடும்பம்?”

“என்னோட குடும்பம்.”

தன் வாயை ஒரு கையால் மறைத்தவளுக்கு எதிரில் இருப்பவனை என்ன செய்யலாம் என்று கூட ஒரு நொடி யோசித்தாள். தன் சொந்த குடும்பத்தினரை ஏமாற்ற வெளியாளை பணம் கொடுத்து அழைத்து செய்ய முயற்சிக்கிறான். அதையும் கூலாக சொல்கிறான். இவன் என்ன மாதிரி டிசைன் என்று யோசித்தாள்.

‘நாமல்லாம்தான் டிசைன் வித்யாசமாம்னா இவன் நமக்கு மேல இருப்பான் போலிருக்கு.’

“எனக்கு புரியுது. தன்னோட சொந்த குடும்பத்தை ஏமாற்ற எதுக்கு இப்படி டிரை பன்றானு தெரியலை. இவனை என்ன செய்யலாம்னு நீ யோசிக்கற?” என அவள் சிந்தனைகளை அப்படியே கூறினான்.

“பெரிய கண்டுபிடிப்பு. யாரா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பாங்க. எனக்கு உன்னை திட்டறதா என்ன செய்யறதுனு தெரியலை?”

“இத்தனை லட்சம் கொடுத்து உன்னோட ஃபேம்லியை ஏமாத்த வேண்டிய அவசியம் என்ன?”

“எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவன் எங்க வீட்டிலிருந்து போயிட்டான். அது ஏன் எதுக்குனு இப்ப வரைக்கும் தெரியலை. நானும் என் சிஸ்டர்ஸ் எல்லாரும் அப்ப அய்யாவோட சொந்த ஊரில் இருந்தோம். என்ன நடந்துச்சுனு பெரியவங்க யாரும் வாயைத் திறக்க மாட்டீங்கறாங்க. நானும் முதலில் கேட்டேன். எனக்கு பதில் கிடைக்கல. உன்னைப் பார்த்த உடனே ஒரு ஹோப். உனக்கு அந்த மக்களை பேச வைக்கற டெண்டன்சி இருக்கு.
பீளிஸ் ஹெல்ஃப் மி.”

“நான் ஒன்னு சொல்லட்டுமா? உங்க முகத்தில் ஒரு எக்ஸ்பிரசனும் இல்லை. ஜஸ்ட் கோல்ட் ஐஸ். எவ்வளவு பெரிய கிரிமினலா இருந்தாலும் ஒரு சில இடங்களில் தடுமாறுவாங்க. உங்க கண்ணில் ஆகட்டும், உங்க பாடியில் ஆகட்டும் அந்த டெஸ்பிரேசன் இல்லை.”

“வாட்? ஐம் டாக்கிங்க் சீரியஸ்லி.”

“ஓகே. சொல்லுங்க இப்படி என்னை சொல்லிட்டு கூட்டிட்டுப் போயிட்டு எங்காவது என்னை டிராபிக்கிங்க் பன்னிட்டால் நான் என்ன செய்யறது?”

“வாட்? ரெடிகுலஸ் மனோஷா.”

“ஹலோ என்ன ரெடிகுலஸ்? ஒரு நாளைக்கு எத்தனை பொண்ணுங்க கடத்தபடறாங்க தெரியுமா?”

“நீ ஆட்களை நம்பவே மாட்டியா?”

“யெஸ். நம்ப மாட்டேன். மனுசங்கள நான் நம்ப மாட்டேன்.”

“உன்னோட குளோஸ் ரிலேட்டிவ்ஸ். அண்ணன், பிரண்ட்ஸ் இவங்களை எல்லாம்?”

“தொண்ணூறு பர்சண்ட் தான் நம்புவேன். பத்து பர்சண்ட் நம்ப மாட்டேன். முழுக்க யாரையாவது நம்பினால் அதனால் வரும் ஏமாற்றம் தாங்க முடியாது. பத்து பர்சண்ட் டிஸ்டிரஸ்ட் இருந்தால் எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக்க முடியும். இந்த உலகத்தில் நான் முழுசா நம்புற ஒரே ஆள் நான் மட்டும்தான்.”

“ஹவ் இஸ் ஈட் பாசிபிள் ஃபார் ஏ வுமன்?”

“பாசிபிள். நான் பொண்ணு. அதனால் தான் யாரையும் முழுசா நம்ப மாட்டேன். ஏனால் இந்த சொசைட்டி அப்படி. எப்ப வேணாலும் நம்மளோட இரத்த பந்தத்தையே நமக்கு எதிரா திரும்ப வைக்கும்.”

“நீ எப்பவும் இப்படித்தானா?”

“ம்ம்ம்..” என கண்களைச் சிமிட்டினாள்.
தன் எதிரில் இருப்பவள் குழந்தைத் தனம் மாறாமல் சுற்றிய மனோஷா அல்ல. காலம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி இருக்கிறது என்று தோன்றியது. இவள் முகத்தில் மட்டும் அப்பாவித்தனம் குடி இருக்கிறது. ஆனால் மிக மிக எச்சரிக்கையானவள் என்று தோன்றியது ஆதித்திற்கு. இவளை அவ்வளவு சுலபத்தில் யாராலும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்தான்.

“வொய்? என்னை ஏமாத்த முடியாதுனு யோசிக்கிறீங்களா?” என்றாள்.
அடுத்த நொடியே ஆதித்தின் முகத்தில் புன்னகை ஒன்று உதயமானது. அவன் சிரித்தால் விழும் கன்னக்குழியின் மீது சில நொடிகள் கவனம் அவளை அறியாமல் சென்றது.

“எதுக்கு இந்த ஸ்மைல்?”

“இல்லை. உன்னை விட யாராலும் இதை பர்பெக்டா செய்ய முடியாதுனு எனக்குத் தோணுது. நீ என்னை நம்பவே வேண்டாம். ஆனால் நான் உன்னை 100 பர்சண்ட் நம்பறேன். கான்ட்ராக்ட் வேணால் சைன் பன்றேன். பீளிஸ் ஹெல்ஃப் மி.”











அத்தியாயம்-28

என்னோட ஜாப் டிஸ்கிரிப்ஷனையே ஒருத்தன் மாத்த சொல்லி என்னோட எதிரில் உட்கார்ந்திருக்கான். இவனை எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. நேர்மையில்லாமை, துரோகம் இதைக் குறிக்க ஒரு பூ இருக்கு. ரொம்ப ரொம்ப அழகா இருக்கும். சிவப்பு டேலியாக்கள். முதன் முதலா இதை பலருக்கு செய்யப் போறேன்.
-மனோ.

மனோஷா அமைதியாக எதிரில் இருந்தவனைப் பார்த்தாள். சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

“ஒரு உண்மையை மட்டும் சொல்லு. நீ என்னை நம்புனதால் மட்டும்தான் இப்ப இங்க என்னை வச்சு பேசிட்டு இருக்க. அப்புறம் என்ன?

“மிஸ்டர். ஆதித் இதில் எவ்வளவு பிரச்சினை இருக்கு தெரியுமா? எனக்கு அவ்வளவாக பொய் சொல்லவோ நடிக்கவோ வராது. எனக்கு அப்படிப்பட்ட சுட்சுவேசனும் ஏற்பட்டது இல்லை.”

“இல்லை.. நீ நடிக்க வேண்டியது இல்லை. அது நீ ஆல்ரெடி பழகுன ஃபேம்லிதான். நீ அங்க வொர்க் பன்னப் போற. அவங்க கூட பழகப் போற. நீ உன்னோட பிகேவியர் எதையும் மாத்திக்க வேண்டியது இல்லை. கிராமத்துக்கு ஏத்த மாதிரி டிரஸ்ஸிங்க் மட்டும் மாத்திக்கனும்.”

“ஹே எனக்கு தாவணி எல்லாம் கட்ட தெரியாது.”

“மனோஷா கிராமத்துப் பொண்ணுங்க எல்லாம் சினிமால மட்டும்தான் தாவணி கட்டி இருப்பாங்க. நிஜத்தில் அவங்கதான் இப்ப மாடர்னே. ஜஸ்ட் ஸ்டிச்சிடு சுடிதார்ஸ், குர்தி மட்டும்.”

“அப்பா!” என நிம்மதி பெருமூச்சு விட்டாள் மனோஷா. அவளுடைய கவுன்சிலிங்க் செஷனுக்கே அவள் கட்டுவது ரெடிமேட் புடவைகள். வேறு வழி இல்லாமல் அதைக் கட்டிக் கொண்டிருக்கிறாள். அவுட்டோர் எல்லாம் அதைக் கட்டிக் கொண்டு செல்ல விரும்பமாட்டாள்.

“லெகின்ஸ் , ஜெகின்ஸ் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.”

“லெகின்ஸ், ஜெகின்ஸ் வேண்டாமே. என்னோட ஆத்தாவுக்கு அது அவ்வளவா பிடிக்காது. என்னோட சிஸ்டர்ஸ் போட்டாவே திட்டிட்டு இருப்பாங்க. பட்டியாலா, கிரஷ், செமி பட்டியாலா, நார்மல், ஸ்ட்ரைட் இதெல்லாம் ஓகே. என்னோட ஆத்தாவுக்கு மட்டும் நீ குளோஸ் ஆகிட்டால் மத்த எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிடும்.”

‘இன்னும் என்ன என்ன இருக்கிறதோ?’ என்ற ரீதியில் அவனைப் பார்த்து வைத்தாள்.

“விட்டால் எல்லா வுமன் குளோத்திங்க் தெளிவா சொல்லுவீங்க போல?”

“ ஐ ஹேவ் சிஸ்டர்ஸ். அவங்களை ஷாப்பிங்க் கூட்டிட்டு போறதே நான்தான். சோ எனக்கும் கொஞ்சம் தெரியும்.”
அமைதியாக பதில் அளித்தான் அவன்.

“ம்ம்ம். அதான் பார்த்தேனே.”

“எங்க? ஹான்.. டவுன் ஹால்.”

அவன் டவுன் ஹால் என்றதும் அவள் மனம் தானாக அந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தது.

“ஒகே. எனக்கு ரொம்ப டைம் ஆச்சு.” கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தபடி கூறியவள் எழுந்தாள்.

“ஹே ஐஸ்கீரிம் சாப்பிடவே இல்லை..”

“ப்ச்ச் மூட் இல்லை.”
பணியாளரை அழைத்து இன்னொரு ஐஸ்கீரிம் பார்சல் கேட்ட ஆதித் பில் பே செய்து விட்டு வந்தான்.

அவனுக்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தாள் மனோஷா.

“மனோஷா.” அவளை நோக்கி நீட்டிய பார்சலைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“உனக்குத்தான் வாங்கினேன்.”

“நான் இப்பத்தான் சாப்பிட்டேன்.”

“நீ எங்க சாப்பிட்ட? அப்படியே வச்சுட்ட. இந்தா இதை வீட்டில் போய் சாப்பிடு.”

“வேணாம் எதுக்கு?”

“கோல்ட் டெசர்ட் ஃபார் கோல்ட் ஹார்ட்.” என முனு முனுத்தான்.

“என்ன சொன்னீங்க?”

“ஒன்னுமில்லை. இதை சாப்பிட்டு திங்க் பன்னிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லு.”

“ஒகே.” ஐஸ்கீரிம் பேக்கை வாங்கி தன் காருக்குள் வைத்தாள்.

“எனக்கு இன்னொரு மீட்டிங்க் இருக்கு. உன் கார் பின்னாடி வரது இன்னிக்கு முடியாது.”

“ஓ கமான். எல்லாரும் இப்படியே சொல்றீங்க?”

“யாரு சொன்னாங்க?”

“இருக்கான் ஒருத்தன்.” அவனைப் பற்றிக் கூறும் போது மனோஷாவின் முகம் கனிந்தது. ஆதித்தின் மனம் ஒரு நொடி ஏதோ உணர்வினால் தடுமாறியது.

“ஒகே பாய்.” என்றபடி காருக்குள் ஏறி அமர்ந்த மனோஷா காரை ஸ்டார்ட் செய்தாள்.

“ஐ வில் கால் யூ. குட் நைட்.”

“என்னோட நம்பர் உங்கிட்ட இல்லையே?”

“இருக்கு. பாய்.” என புன்னகைத்தப்படி காரை இயக்கி மறைந்தாள்.
எப்படியும் அவள் தன் திட்டத்துக்கு சம்மதிப்பாள் என்ற எண்ணத்துடன் ஆதித்தும் காரில் ஏறி தான் சந்திக்க வேண்டிய நபரிடம் சென்றான்.

அவர்கள் இருவரும் ஐஸ்கீரிம் பார்லரில் அமர்ந்து பேசியது, ஆதித் மனோஷாவின் கையைத் தொட்டது என அனைத்தும் ஒருவர் தன் கைப்பேசியில் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை இருவரும் அறியவில்லை.

அதனால் பின்னால் வரப் போகும் அனர்த்தங்களையும் அறிய வாய்ப்பில்லை.
வீட்டுக்கு தாமதமாக வந்து சேர்ந்தான் ஆதித். வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் வடிவழகி.

“ஆத்தா ஏன் இன்னும் தூங்கலை? நான் போட்டு சாப்பிட்டிருப்பேன்.”

“ஆதி இப்ப எல்லாம் நீ ஏதோ அடிக்கடி யோசிக்கற? அடிக்கடி லேட்டா வீட்டுக்கு வர. இப்படி லேட்டா சாப்பிட்டு தூங்குனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“இல்லை ஆத்தா. இனிமேல் இப்படி லேட்டாகாது. கரக்டா வந்திடுவேன்.”

“அது ஓகே. என்ன பிரச்சினை உனக்கு?”

“எனக்கா? ஒன்னும் இல்லை ஆத்தா.”

“மத்தவங்க வேணா எதுவும் கண்டுபிடிக்காமல் இருக்கலாம். உன்னை வளர்த்த எங்கிட்ட இருந்து எதுவும் தப்ப முடியாது. சொல்லு ஆதி. ஸ்கூல் சீக்கிரம் முடிஞ்சுடுது. ஆனால் நீ வரது லேட்டா வர்ர?” உறுதியுடன் வடிவழகியின் குரல் ஒலித்தது.
ஆதித் மெல்ல சிரித்தான்.
அவர் வழக்கம் போல் கண்டுபிடித்து விட்டார் என்பதை உணர்ந்த ஆதித்திற்கு சிரித்து மழுப்புவதைத் தவிர வேற வழியில்லை. வடிவழகிக்கு எப்படித்தான் தன்னிடம் இருக்கும் சிறிய மாற்றம் கூட தெரிகிறதோ? இன்னும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறான். சிறு வயதில் இருந்தே அவரைப் பார்க்கிறான்.

“ஒன்னுமில்லை ஆத்தா. இளாவுக்கு காலேஜ் சம்பந்தமா விசாரிச்சுட்டு இருக்கேன். அதான் வேற ஒன்னுமில்லை.”

“உண்மைதானா?”

“ஆத்தா உங்கிட்ட இருந்து எதையாவது மறைக்க முடியுமா? சரி சொல்லுங்க. அடுத்த மாசம் கோவில் திருவிழாவில் என்ன பிளான்?”

“அதை நாளைக்குப் பேசலாம் இப்ப வந்து சாப்பிடு வா..”
அவரிடம் இருந்து தப்பித்து விட்ட நிம்மதியுடன் பெரு மூச்சு விட்டப்படி ஆதித் சென்றான்.

‘மனோஷா இதுக்கு கண்டிப்பா ஒத்துக்கனும்.’
அதே சமயம் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.

-ஊஞ்சலாடும்...