• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-7 & 8

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
10

அத்தியாயம்-7

எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்சவங்க யாருனு தெரியுமா? என்னோட அம்மாதான். ஆனால் என்னோட வெட்டிங்க் சம்பந்தப்படற அப்ப என்னோட அம்மா வேற ஒரு ஆளா மாறிடறாங்க. நமக்கு என்னதான் படிச்சு மெச்சுரீட்டி இருந்தாலும் நமக்குப் பிடிச்சவங்க ஹர்ட் செஞ்சால் தாங்க முடியறது இல்லை. அதனால் தான் இந்த பிரேக். அது மட்டுமில்லாமல் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சுருக்கு. ஃப்ன்னா சண்டை போட ஒரு ஆளும் கிடைச்சுருக்கு.
-மனோ.

அவளை ஒருவன் முட்டாள் என்று கூறிவிட்டு செல்கிறான். ஆனால் அதைப் பார்த்து கொண்டு அமைதியாக நிற்கலாம் என மூளை நினைத்தாலும் மனது கேட்கவில்லை. தன் முன் சென்று கொண்டிருப்பவனை ஓடிச் சென்று கை பிடித்து நிறுத்தினாள்.

“பார்ரா! இப்படி கமண்ட் பன்னால் நாங்க இன்சல்ட் ஆகிடுவேனு நினைச்சால் அதுதான் ராங்க். தேங்க் யூ ஃபார் பிரைசிங்க் மீ.

இதுக்கு எப்படி எல்லாம் உனக்கு இல்லாத மூளையை போட்டு நீ கசக்கி இருக்கனும். வெல் டிரைட். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.” என சிரித்தப்படி கண்ணடித்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

‘என்ன வாய் இந்த சின்ன பொண்ணுக்கு?’ என நினைத்த ஆதித் இதற்கு மேல் இப்படி வீணாக வம்பிழுத்து நேரத்தை வீணடிக்க அவனுக்கு விருப்பமில்லை. சரியாக அவனது அலைபேசி அடித்து விட வேலைகள் அவனைப் பிடித்துக் கொண்டன.

கல்வி வளர்ச்சி நாள்.
மதிய வேளை. ஏ.ஐ பப்ளிக் ஸ்கூல். நவீன கட்டிடக் கலையிடனுன் பசுமையும் கலந்து அழகாகக் கட்டப்பட்டது. பள்ளியின் நடுவே வட்டமாக இரண்டாயிரம் பேர் அமரும் கேலரி இருந்தது. நடுவில் உள்ள வட்டத்தில் செடிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மாலை நடை பெற போகும் விழாவுக்கு மேடை அலங்காரங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இன்னும் விழாவுக்கு ஒன்றரை மணி நேரம் இருந்தது.

எம்.வி நர்சரி பணியாளர்கள் மூவர் செடிகளை எடுத்து விழா ஒருங்கிணைப்பாளர் கூறியபடி அடுக்கிக் கொண்டிருக்க அதை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் மனோஷா. அவள் அண்ணன் ஒரு புறம் விதை பந்துகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் விழா தொடங்க முக்கால் மணி நேரம் இருந்தது.

“ஆல்செட் மித்து. டபுள் செக் பன்னிட்டேன். நான் கிளம்புறேனே?”

“எங்க கிளம்புற? பங்கசன் முடியற வரைக்கும் இருந்துட்டுத்தான் போகனும். போ காரில் உன்னோட டிரஸ் இருக்கு. எடுத்துட்டு கேலரியை ஒட்டி இருக்கற பில்டிங்கில் கீரீன் ரூம் இருக்கும். அங்க போய் பிரஷ் ஆகிக்கோ. ஷவர் கூட இருக்கு.”

“ஷவர் பன்றதுக்கு எந்த திங்க்ஸ்ம் இல்லை.”

மனோஷாவை ஒரு பார்வை பார்த்தவன், “உங்கிட்டயா? இரண்டு நாள் காட்டுக்குள்ள மாட்டிகிட்டா கூட சர்வைவ் ஆகற அளவுக்கு இருக்கும். அது ஒரு மினி சூப்பர் மார்க்கெட். போ.”
மித்ரனை முறைத்தவாறு அங்கிருந்து வெளியேறினாள்.

மித்ரன் வேண்டுமென்றே இதைச் செய்கிறான் என்று அறிந்தாலும் அவனை சந்தர்ப்பம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அமைதியாக சென்றாள்.
காருக்குச் சென்றவள் அவன் கூறியபடி தன் பெரிய பேக்கிலிருந்து தேவையானவற்றை எடுத்து தன் உடை இருக்கும் ஜூட் பேக்கில் போட்டவள் மித்ரன் கூறிய பில்டிங்கிற்கு நடந்தாள்.

அங்கு முன்னால் யாரும் இல்லை. சற்று தூரம் நடந்ததும் வாட்ச் மேன் எதிர்பட்டார். அவரிடம் வழி கேட்க அவரும் காட்டினார்.
சலிப்புடன் ஷவர் செய்ய பாத்ரூமிற்குள் சென்றவள் குளித்து விட்டு அருகில் உள்ள கீரீன் ரூமிற்குள் உடை மாற்ற ஆரம்பித்தாள். லைட் பிங்கும் கிரேவும் கலந்த அம்பிரெல்லா டாப்பிற்கு மாறியவள் தலையை பின்ன ஆரம்பித்தாள்.

அப்போது அங்கிருந்த ஒரு கதவைத் திறந்து கொண்டு யாரோ உள்ளே வர திடுக்கிட்டு திரும்பினாள். ஏனால் அது ஒரு ஆண்கள் அணியும் ஷூவின் சத்தம். அந்தக் கதவு இங்கிருக்கிறது என்றே அவளுக்குத் தெரியவில்லை. கைப்பேசியில் பேசியபடியே நுழைந்தவன் அந்தக் கதவைத் தாழிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனும் கவனித்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் முகத்தைச் சுருக்கினான் ஆதித்.

“நீயா? பொண்ணுங்க டிரஸ்ஸிங்க் ரூமுக்குள் என்ன செய்யற?”
அவளைக் குற்றம் சாட்டும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோஷா.

“வாட்? காண்ட் யூ ரீட்?”

“திஸ் இஸ் பிரைவேட் டிரஸ்ஸிங்க் ரூம். எஸ்பெசலி ஃபார் மேல் ஸ்டாப்ஸ். இங்க நீ என்ன பன்னற?”
அவன் கூறியதில் மனோஷா அதிர்ந்து விழித்தாள்.

“நோ வாட்ச்மேன் இந்த ரூமைதான் காட்டுனார்.”

“இதில்லை. ரைட் சைட் இருக்கற ரூம். ஓகே ஏதோ கன்புயூசன். யாரும் பார்க்கறதுக்கு முன்னாடி இங்க இருந்து கிளம்பு.”

“ஹே சில். ஏதோ சின்ன கன்புயூசன் அவ்வளவுதான்.” தன் உடைமைகளை பேக்கில் எடுத்து போட்டவள் தலையில் சொருகி இருந்த சீப்புடன் அங்கிருந்து நகர முற்பட வெளியில் யாரோ ஆடவர் பேசும் சத்தம் கேட்டது. வயதானவர் போன்று குரல் ஒலித்தது.

“ஓ காட்? ஹே கம் வித் மி.” என்று மெல்லிய குரலில் கூறியவன் அமைதியாக அவளை அங்கிருந்து கையைப் பிடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தான். அவன் முகத்தில் தீடிரென்று தெரிந்த பதட்டத்தில் அமைதியாக அவனுடன் சென்றாள் மனோஷா.

தான் வந்த கதவின் வழி வெளியேறியவன் அவளையும் இழுத்துக் கொண்டு நடந்தான்.
அவனுக்கு இடது பக்கம் இருந்த அறைக்கதவைத் திறந்தவன் வரிசையாக வித விதமான உடைகள் தொங்கவிடப்பட்டிருந்த அறைக்குள் இழுத்துச் சென்று கதவைச் சாற்றினான்.

“வாட்?”

“என்ன?”

“ஐம் சோ சாரி. உன்னோட முட்டாள் தனத்தால் நான் பிரச்சினையில் மாட்டிக்க விரும்பலை. பி கொயட் ஃபார் சம் டைம்.”

தன்னை மீண்டும் முட்டாள் என்று கூறியவன் மேல் கோபம் எழுந்தது. ஏதோ பிரச்சினை என்று அமைதியாக இருந்தால் அவன் அத்துமீறி பேசியது அன்றி கட்டளையும் இடுகிறான். அவன் கையை உதறியவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
மீண்டும் தலையில் அடித்துக் கொண்ட ஆதி அவளைப் பிடித்து இழுத்து அருகில் இருந்த டிரையல் ரூமிற்கு நுழைந்து அவள் வாயைப் பொத்தினான். மறு கை அறையை தாழிட்டிருந்தது.



அத்தியாயம்-8

நாம வாழ்க்கையில் யாரை எப்ப சந்திப்பமுனு தெரியாது. ஆனால் அந்தப் பொண்ணை இப்ப மூணாவது முறையா சந்திக்கிறேன்.
இரண்டாவது முறை சந்திக்கும் போது அவளோட ஆட்டியூட் எனக்குப் பிடிக்கலை. சரியான டிரபுல் மேக்கர். மூணாவது தடவை பார்க்கும் போது நிஜமாவே டிரபிளில் மாட்டிக்கப் போறனு தெரியலை.
-எழில்.


இதை முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை மனோஷா. அந்த சிறிய அறையில் அவனிடம் மாட்டிக் கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்..” என திமிற ஆரம்பித்தாள். அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர்ந்தவன் போல் அமைதியாக அவள் தாக்குதலில் இருந்து தப்பித்து நின்றான். இதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை என்று நினைத்தவள் அவன் கைவிரலைக் கடித்து வைத்தாள்.
அவள் கடித்தாலும் அதை அமைதியாகத் தாங்கிக் கொண்டான்.

“நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். ஃபைவ் மினிட்ஸ். அந்த ஆளு போனதும் உன்னை நானே பத்திரமா விடறேன். டிரஸ்ட் மீ பிளீஸ்.” அவன் கண்களில் இருந்த உண்மையைப் பார்த்து சற்று அமைதியானாள் மனோஷா.

அவள் வாயிலிருந்து மெல்ல விரலை எடுத்தான். அவனுடைய உள்ளங்கை இரத்த சிவப்பாக அவள் பற்கள் பட்டு அப்படியே உள்காயமாக நின்றது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி நின்றனர். அவள் கண்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. இந்த களோபரத்திலும் அவள் தலையில் சீப்பு இன்னும் மேலே இருந்தது. அதைப் பார்த்ததும் ஆதித்தின் முகத்தில் லேசான புன்னகை படர்ந்தது.
அந்த சீப்பை எடுத்து அவளிடமே கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டவள் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். லேசாகத் தலையைக் கோதி கையில் மாட்டியிருந்த பேன்டைப் போட்டுக் கொண்டாள்.
அவள் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித் அமைதியாக நின்றான். இப்படி பள்ளி மாணவர்களுக்கான டிரையல் ரூமில் ஒரு பெண்ணுடன் நிற்பான் என்றும் அவனும் நினைத்துப் பார்த்தது இல்லை.
பத்து நிமிடங்கள் கழிந்ததும் அந்த வயதான ஆளின் சத்தம் முழுவதுமாக நின்று போனது.

கதவைத் திறந்த ஆதித் முன் நடக்க மனோஷா பின் தொடர்ந்தாள்.
காஷ்டியூம் ரூமில் இருந்து தலையை எட்டிப் பார்த்த ஆதித், “கமான் யாருமில்லை. இந்த எக்ஸிட்டில் போயிடலாம்.” என்று வெளியே செல்லும் திசையைக் காட்டினான்.

ஆனால் நகரவில்லை மனோ.

“கமான் லெட்ஸ் கோ” என அவன் முகத்தைத் திருப்பும் முன் அவன் கன்னத்தில் அவள் விரல்கள் பதிந்திருந்தன.
சற்றென்று அவள் அடித்ததில் தடுமாறித்தான் போனான் ஆதித். வீட்டில் யாரும் அவனைத் திட்டியது கூட இல்லை. அவன் என்றும் திட்டும் படியும் நடந்து கொண்டதும் இல்லை. எந்தப் பெண்ணையும் மரியாதை இன்றி நடத்தியது இல்லை. தன்னை ஒருவள் அடித்து விட்டாள், அதுவும் ஒரு சிறிய பெண் என்பதிலேயே அவன் உறைந்து போய் நின்றிருந்தான்.

அவன் எதிரில் நிற்பவளோ கோபத்தின் உச்சியில் இருந்தாள். அவன் முன் விரலைச் சொடுக்கினாள். உடனே தன்னிலைக்கு வந்தான் ஆதித். அவள் அடித்ததில் கன்னம் வேறு எரிந்தது. ஆனாலும் அவளைத் திருப்பி அடிக்கவில்லை.

“இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”

“ரீசன் சிம்பில். உனக்கு ஏதோ பிராபளம். சோ நான் பேசாமல் வந்தேன். ஆனால் அதுக்காக என்னோட பர்மிஷன் இல்லாமல் உனக்கு கையப் பிடிச்சு இழுத்துட்டுப் போற ரைட்ஸ் கிடையாது. எனக்கு மேன் ஹேண்டலிங்க் பிடிக்காது.”

“வாட்?” அவள் கூறிய விஷயத்தில் அதிர்ந்து நின்றான் ஆதித்.

“சீரியஸ்லி. எனக்கு அந்த மாதிரி இண்டன்சன் கிடையாது. ஜஸ்ட் புயூர் இன்ஸ்டிங்க்ட்.”

“ஹான் இன்ஸ்டிங்க்டா? இன்ஸ்டிங்க்னா என்ன வேணாலும் செய்யக் கூடாது. இது வாழ்வோ சாவோ விஷயம் இல்லை. இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க உங்கிட்ட என்னால் முடியாது. ஆளை விடு.”
என அங்கிருந்து அவனுக்கு முன்னால் வேகமாக வெளியேறினாள் மனோஷா. அவளைத் தொடராமல் அவள் செல்லும் திசையை வெறித்தான் ஆதித். அவனுக்கு தான் என்ன தவறு செய்தோம்? இந்தச் சிறிய பெண் இந்தப் பேச்சுப் பேசுகிறாள். தன்னை ஒரு ரோக் போன்று பேசிவிட்டு செல்கிறாள் என யோசித்தவாறு அப்படியே நின்றான்.

ஒரு வழியாக கோபத்திலும் வெளியேறும் வழியைக் கண்டுபிடித்த மனோஷா நேரடியாகக் காரை நோக்கிச் சென்றாள். காரின் கதவைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து மட மடவென குடித்தாள்.

“காம் டவுன். காம் டவுன்… 100.. 99.. 98.. 97…” ஒன்று வரை எண்ணி முடித்தவளின் கோபம் மட்டுப்பட்டது. தன்னை அனுமதி இல்லாமல் முன் பின் தெரியாதவன் இழுத்துச் சென்றால் யாருக்குத்தான் பிடிக்கும். அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. தன் கைப்பேசியை எடுத்து மித்ரனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

‘எனக்கு வேலை இருக்கு. முன்னாடி கிளம்புறேன்.’ என இப்படி செய்தியை அனுப்பி விட்டாள். ஆனாலும் அவளுக்கே தெரியாது. அவனின் தொடுதலுக்காக ஒருநாள் ஏங்கப் போகிறோம் என்று. ஆதித்துக்கும் தெரியாது.

அங்கிருந்து புயல் போல் அவளுடைய கார் கிளம்பி கோயம்புத்தூரின் சாலை நெரிசலில் தன்னைத் தொலைத்துக் கொண்டது.

ஆதித் அலைபேசி அடிக்கவும் சுய நினைவுக்கு வந்தான். அழைப்பை எடுத்தவாறு ஆண்கள் உபயோகிக்கும் பகுதிக்குள் நுழைந்தவன் தன் கன்னத்தைப் பார்த்தான். லேசாக சிவந்து போயிருந்தது கன்னம்.
‘என்ன அடி?’ என மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. கன்னத்தைத் தடவிக் கொண்டான். அந்த சிறிய விரல்கள் அவன் மனதில் ஆறாத ரணத்தை உருவாக்கிச் சென்று விட்டிருந்தன. அவள் அனுமதி இல்லாமல் பிடித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. அது மட்டுமில்லாமல் முதலில் பொறுமையாக ஒத்துழைத்து விட்டு பிறகு தன் கோபத்தை வெளிக்காட்டி சென்றுள்ளாள். முகத்தில் மாஸ்க் ஒன்றை அணிந்து மறைத்துக் கொண்டான்.
ஒரு வேளை இங்குதான் படிக்கிறோளோ? இல்லை எனில் எதற்கு இங்கு இருக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி இருந்தால் தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றியது.
அவளுடன் மட்டும் தன்னை யாராவது அந்த அறையில் பார்த்திருந்தால் அது வீணான பிரச்சினைகளுக்கு வித்திட்டிருக்கும் என்று தோன்றியது. அவளிடம் அடி வாங்கியது கூட பரவாயில்லை. ஆனால் அவனுக்கு அநாவசியமான பேச்சுகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். இந்தப் பெண்ணை இனி சந்திக்கக் கூடாது என்றும் முடிவெடுத்திருந்தான். ஆனால் அவன் எண்ணம் சுலபத்தில் ஈடேறிவிடுமா?

- ஊஞ்சலாடும்.
 
Top