• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-70 final part 2 & epilogue

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அவள் கையைப் பிடித்து சுண்டி அவன் மடியில் விழ வைத்தான் ஆதித்.


“ஆதித்.. என்ன விளையாட்டு இது?”
அவள் முகவாயின் மீது ஒரு கையை வைத்து தூக்கிய ஆதித் தன் கண்களைப் பார்க்க வைத்தான்.

“நான் சொல்றதையும் கேட்டுட்டுப் போ. உன்னை ஃபேம்லிக்காக கல்யாணம் செஞ்சுகிட்டதை விட. சொல்லப் போனால் அந்த ரீசனை யூஸ் பன்னிகிட்டேன். மார்க்கெட்டில் பார்த்தப்பவே ஏதோ ஒன்னு உங்கிட்ட என்னை இழுத்துச்சு. அப்புறம் நர்சரி. ஸ்கூல். நீ என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிச்சுகிட்டே இருந்த. ஆனால் அருண் என்னோட மைண்டில் இருந்தான். அதனால் வேற எதையும் திங்க் செய்யற நிலையில் நான் இல்லை. உன்னை காண்டிராக்ட்டில் அனுப்புனாலும் ஏதோ ரீசனை கிரியேட் செஞ்சு உன்னைப் பார்க்க வந்தேங்கறது மட்டும்தான் உண்மை. என்னோட மனசை கன்ட்ரோல் பன்ன ரொம்ப கஷ்டப்பட்டேன். உனக்கு என்னைப் பிடிக்காதுனு தெரியும். ஆனால் எப்படி டிரை செஞ்சாலும் உன்னை என்னால் அவாய்ட் செய்யவே முடியலை. எனக்கு ஆப்பர்சுனிட்டி கிடைச்சுது. சோ.. மேரேஜ். என்னை நல்லாப் பாரு. ஐ லவ் யூ. எங்கிட்ட இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கேத் தெரியாது. யூ மேக் மி வைல்ட். யோசிச்சு முடிவெடு. அது மட்டுமில்லாமல் நான் அடிவாங்குன மாதிரி யாரும் உங்கிட்ட பொறுமையாக அடிவாங்க மாட்டாங்க. எனக்கு சின்ன வயசில் இருந்தே உன்னை நல்லாத் தெரியும். இன்பேக்ட் ரொம்ப பிடிக்கும். ஏனா நீ எனக்கு ஆப்போசிட். உன் கூட இருந்தால் லைஃப் நல்லாருக்கும்னு தோணுது. அப்புறம் அந்த வீட்டுக்கு உனக்கு வரதுக்கு விருப்பமில்லைனாலும் நான் உன் வீட்டில் இருக்கறதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உனக்கு எங்க இஷ்டமோ அங்க இருக்கலாம். இன்னொரு விஷயம். உனக்கு என்னைப் பிடிக்கவே இல்லைங்கறது நான் நம்ப மாட்டேன். உனக்குப் பிடிக்கலைனா இந்தத் தாலி இன்னும் உன்னோட கழுத்தில் இருக்காது. தூக்கி முகத்தில் அடிச்சுருக்க மாட்ட.” அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை நிற்க வைத்தான்.

அவன் கூறியதைக் கேட்ட மனோ அதிர்ச்சியில் குளத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் சிலை போல் நின்றாள். இங்கு ஒருவன் காதலைக் கேட்டு மனோ உறைந்து நிற்க மறுபக்கம் இருவர் காதலால் உருகிக் கொண்டிருந்தனர்.
கனி லட்சம் முறை நினைத்திருப்பாள். கோயம்புத்தூருக்கு வந்தால் அருணைப் பார்க்க நேர்ந்தால் என்ன கூறலாம் என்று. இப்போது வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் மட்டும் காதலாய் வந்து கொண்டிருந்தது.


“உன்னை எங்கெல்லாம் தேடி இருப்பேன் தெரியுமா.. ஆனால் நீ இங்க என் பக்கத்திலேயே இருந்திருக்க..”

“அருண்…”

“நீ எதுவும் பேச வேண்டாம். எனக்கே எல்லாம் தெரியும். ஐம் சோ சாரி. எல்லாத்தையும் மறந்திரு. இனிமேல் எதைப் பத்தியும் நினைக்காத. இனிமேல் நம்ம லைஃப்பில் யாரும் குறுக்கிட முடியாது.”
அப்போது அவனின் சகோதரன் குறுக்கிட்டான்.


“நீ என்னவோ செய் அண்ணா. தயவு செஞ்சு உன்னோட பேரில் இருக்கற பிராப்பர்டிஸ் எல்லாத்தையும் நீயே மேனேஜ் செய். டபுள் வொர்க் செஞ்சு நான் ஓடாய் தேஞ்சு போயிட்டேன்.”


‘ஆத்தி இது அண்டபுளுகு.. படிக்கட்டு தேகம் வச்சுக்கிட்டு இவன் விடற டையலாக்கைப் பாரேன்.’ என மனோ மனதில் அவனை வாரிவிட்டாள்.


“அண்ணி.. தயவு செஞ்சு அவனை வீட்டுக்கு ஒரு முறை வந்துட்டு போகச் சொல்லுங்க. நீங்களுமே வாங்க. எல்லாத்தையும் விட அகல் நிலா இவனை எவ்வளோ தேடுனா தெரியுமா? அவளுக்காக வரச் சொல்லுங்க. என்னால் உறுதியாக சொல்ல முடியும். அந்த கண்ணம்மாளையும், சதாசிவத்தையும் நான் பார்த்துக்கிறேன். ஆத்தாவுக்காக ஒரு தடவை வாங்க. பிளீஸ். அருண் பிளீஸ்.”


“ஆதித் அவங்களை இப்பவாவது நிம்மதியாக இருக்க விடு.” மனோ அவனைத் தடுத்தாள். மனோ தடுத்ததற்கு மாறாக அருண் அவனை கட்டியணைத்துக் கொண்டான். அருணின் செல்ல தம்பி அல்லவா.

“ரொம்ப நல்லா எல்லாத்தையும் மேனேஜ் செஞ்ச ஆதி.”

“வேற வழி. சதாசிவத்துகிட்ட இருந்து எல்லாத்தையும் காப்பாத்தனும் தெரியுமா? இல்லைனா பாட்டி அவரை நம்பி முக்கிய சிலதோட கன்ட்ரோல் கொடுத்துருவாங்க. அந்தாள் மேல எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. நீ காணாமல் போனதில் அவருக்கு எதாவது சம்பந்தம் இருக்குமோனு டவுட் இருந்துச்சு. எதுக்கு என் மேல் அத்தனை வெறுப்புனு தெரியலை.”


“ஆதி.. இந்த வீட்டோட முக்கிய வாரிசுகள் கெட்டப் பேரு எடுத்தால் அவருக்கு நல்லதாகப் போயிடும். அதை வச்சு ஸ்கூல், காலேஜ் நிர்வாகம் எல்லாம் கன்ட்ரோல் செய்யற பிளான். அவரு நான் இருந்தால் எங்க என்ன குறை கண்டுபிடிக்கலானு அங்கதான் சுத்துவார்.”


“அங்க நிறைய மனி உள்ள வரும். அதான்.” அவனுக்குத் தேவையான பதிலை அருண் கூறினான்.

“சரி இவ்ளோ நாள் எங்க இருந்தண்ணா?”

“இங்கதான். மனோ போற பிட்னஸ் செண்டரில் டேன்ஸ் மாஸ்டரா இருந்தேன். அவளையும் அங்கதான் மீட் பன்னேன். ஆனால் மனோ நம்ம பேம்லி பிரண்ட்டுனு தெரியாது. அன்னிக்கு நானும் மனோவும் ஷாப்பிங்க் செய்யும் போது அவ டிரஸ்ஸிங்க் ரூமில் இருக்கும் போதுதான் நீ அந்தப் பக்கம் வரதைப் பார்த்தேன். அவகிட்ட ஏதோ பேசுன..”

அண்ணன் தம்பி இருவரையும் விலக்கிய மனோ, “கனி ஐம் சாரி..” என அருணின் முதுகில் நன்றாக இரண்டு தடவை சாத்தினாள்.

“அண்ணன் தம்பி இரண்டு பேரும் சேர்ந்து என்னோட வாழ்க்கையில் விளையாடிருக்கீங்க?”

“அப்படி எல்லாம் இல்லை மனோ. நீயா எவ்வளவு தேடுனாலும் இந்த மாதிரி ஒரு நல்லவன் கிடைக்க மாட்டான். உன்னை நல்லா பார்த்துக்குவான் மனோ.”


“போடா.. சார் என்ன காரியம் செஞ்சாரு கேட்டுட்டுப் பேசுடா. கண்ணை மூடி சாமி கும்பிட்டு இருக்கும் போது தாலி கட்டிட்டான் தெரியுமா?”

“ஆதி..” அருண் முதலில் அதிர்ந்தாலும் பிறகு மனோவைக் கூர்மையாகப் பார்த்தான்.

“உனக்குப் பிடிக்கலைனா டைவர்ஸ் செஞ்சுடு மனோ.”

“அண்ணா..” ஆதி கத்தியே விட்டான்.

“இருடா.. மனோ அப்படி எல்லாம் செய்யாட்டி இவன் எப்ப உனக்கு புரப்போஸ் செஞ்சு கல்யாணம் செய்யறது, அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வரமாட்டான். இப்ப எல்லாம் பொண்ணுங்க கன்செண்ட் இல்லாமல் கூட கல்யாணம் செஞ்சுடலாம். ஆனால் பேரண்ட்ஸ் சைன் வேணும். உன்னை இப்ப விட்டால் கிடைக்க மாட்டினு செஞ்சுருக்கலாம். இல்லைனா இவ்வளவு பெரிய விஷயத்தை ஆதி நிச்சயம் செஞ்சுருக்க மாட்டான்.”

“டேய் பன்ன தப்பை ஜஸ்டிபை செய்யாத.”

“ஆல் ஈஸ் பேர் இன் லவ் அண்ட் வார் மனோ..” கூறிவிட்டு கண்ணடித்தான் அருண்.

அதற்கு மேலும் இரண்டு அடிகளை வாங்கிக் கொண்டான் அருண்.

“அது என்ன அநியாயம் வேணாலும் செய்யறதுக்கு இந்த ஆம்பளைங்க உருவாக்குன பிராவெர்ப்.”

“புரோ லீவ் ஹெர். நான் பார்த்துக்கிறேன். இப்ப வீட்டுக்குப் போலாமா?”

“கனி போயிட்டுவா. என்னோட கிப்ட் பிடிச்சுருந்ததா?”
ஓடிப்போய் மனோவை அணைத்துக் கொண்டாள்.

“அக்கா.. நீங்க இல்லைனா நான் இப்ப இல்லவே இல்லை. என் உயிரைக் காப்பாத்தி.. இப்ப இவரையும் எங்கிட்ட கூப்பிட்டு வந்துருக்கீங்க..”

“அது நான் இல்லை கனி. உன்னோட நம்பிக்கை. என்னைக்கு இருந்தால் அவரு உன்னைத் தேடி வருவாருனு. நீதான் சொன்ன. உன்னோட நம்பிக்கை வீணாகலை.”
“அக்கா.. ஒரு ரெக்வஸ்ட்.”
“என்ன ரெக்வஸ்ட்? நீ கேட்டு நான் எதை இல்லைனு சொல்லி இருக்கேன்?”

“அவரை மட்டும் அடிக்க வேண்டாம்.”

“ஓ.. கனி உன்னோட ஆளுக்கு ரொம்ப சப்போர்டா? இந்த இரண்டு பிரதர்ஸையும் நம்பாத கனி. இது நம்பர் ஒன் டூபாக்கூர். இது நம்பர் டூ டூபார்கூர்.” முதலில் அருணையும், இரண்டாதவாக அவள் கணவனையும் கை காட்டிக் கூறினாள்.

கனி அவள் கூறியதில் சிரித்தாள்.

“சரி சரி கிளம்புங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.”

“மனோ நீயும் வா. கனி முதல் தடவை அங்க வரா. உன்னோட சப்போர்ட் இருந்தால் நல்லா இருக்கும்.” அருண் அழைத்தான்.
யோசித்த மனோவும் அதுவும் உண்மை என்ற ரீதியில் ஒத்துக் கொண்டாள்.

“நீங்க இரண்டு பேரும் வெயிட் பன்னுங்க. நான் கனியை மேக் ஓவர் செஞ்சு கூட்டிட்டு வரேன்.”
காரில் என்று ஒரு பேப்பர் பேகை எடுத்தவள் உள்ளே வந்தாள். இதெல்லாம் முன்பே நடக்கும் என எதிர்பார்த்தவள் போன்று ஒரு புடவையுடன் வந்திருந்தாள். கனியிடம் கொடுத்து அனுப்பினாள். பையைத் திறந்து பார்த்த கனி, “அக்கா எதுக்கு பட்டுப்புடவை எல்லாம்?” என்றாள்.

“கனி.. நீ ஏ.ஐ குடும்பத்து மூத்த வாரிசோட வொய்ஃப். அதுக்கு ஏத்த மாதிரிதான் நீ உள்ள போகனும். போயிட்டு வா. என்னோட மம்மியும் அநேகமாக அங்கதான் இருப்பாங்க. அவங்களைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லை. ஜிவல்ஸூம் போட்டுக்க.”

“ம்ம்ம்..” என தலையாட்டினாள். தனக்கு எந்த நகை எடுத்தாலும் கனியை ஒரு தங்கை போல் கருதிய மனோ அவளுக்குமே சேர்த்துதான் எடுப்பாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் பளிங்கு சிலை போல் வந்து நின்றாள் கனிமொழி.

“கார்ஜியஸ் கனி.” அருண் அவளை கண்ணாரப் பார்த்துக் கொண்டான். அவன் தொலைத்த காதல், சந்தோஷம் அத்தனையும் அவன் முன் அவள் உருவில் நின்று கொண்டிருந்தது.

“போதும் அருண் சைட் அடிச்சது. செண்டரில் எந்தப் பொண்ணையும் நீ திரும்பிக் கூட பார்க்காத காரணத்தை நான் எங்கூட வச்சுட்டு சுத்திட்டு இருக்கனு எனக்கே தெரியலை.” என முனுமுனுத்துக் கொண்டாள்.

“நீங்க மூணு பேரும் காரில் வாங்க. நான் அருண் பைக்கை எடுத்துட்டு வரேன்.” ஆதித் முந்திக் கொண்டு வழிகாட்டிக் கொண்டே செல்ல மனோ காரை ஓட்டினாள்.
காரின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்த அருணும், கனியும் கையைக் கோர்த்தபடி அமைதியாக வந்தனர். இருவருக்குள்ளும் அப்படி ஒரு அமைதி நிறைந்திருந்தது. இருவரின் மனதில் வெறுமையும் காணாமல் போயிருந்தது.

பரிபூரண நிம்மதி, சந்தோஷம்.

வீட்டின் கேட்டில் வண்டி நுழைந்தது.
அருணுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் தாக்கியது. காலை தரையில் வைக்கும் போது லேசாக நடுங்கியது எனக் கூறலாம்.
கனி அவன் கையை ஆதரவாக மீண்டும் பிடித்துக் கொண்டாள்.

மறுபக்கம் மனோவும் ஆதரவாக நின்றாள். பைக்கை நிறுத்தி விட்டு ஆதியும் மனோவின் பக்கத்தில் நின்றனர். ஆள் வரும் அரவத்தில் வடிவு பாட்டி தன் மருமகள்கள், மகன்கள் மற்றும் பேத்திகளுடன் வெளியே வந்தார். சிவ நாராயணனும் வெளியே வந்தார். மகேஸ்வரியும், விஜய ராகவனும் உடன் இருந்தனர். அவர்களுக்கும் கனியைப் பார்த்ததில் ஆச்சரியம்.

அப்போது அங்கு சரியாக மித்ரனும் வந்து சேர்ந்தான்.
முன்னை விட இளைத்திருந்தான் அருண். ஆரத்தி நால்வருக்கும் எடுக்கப்பட்டது.
உள்ளே வரவும் கனியின் கைகளைப் பற்றிக் கொண்டார் வடிவு.

“மன்னிச்சிரு தாயி.. நீ வயித்துல புள்ளையோட இருந்தனு எனக்குத் தெரியாமல் போச்சு. பணத்தைக் கொடுத்ததும் நீ அருணை விட்டுட்டு போயிட்டனு சதாசிவம் சொன்னான். ஆனால் சதாசிவமும், கண்ணம்மாளும் பேசனதை அருண் கேட்டுகிட்டு மொத்தமாக எங்களை விட்டுட்டு போயிட்டான். ஒரு உயிரைக் கொல்ற அளவுக்கு நாங்க தரம் தாழ்ந்த மனுசங்க இல்லைம்மா.. என் மருமக இவன் இல்லைனு இன்னை வரைக்கு இராத்திரி அழுதுட்டு இருக்காள்.”


“பாட்டி நடந்தது நடந்து போச்சு. விட்ருங்க. மறந்துருவோம்.” கனி இப்படி கூறிக் கொண்டிருக்க தன் அன்னையின் அருகில் சென்ற அருண் கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்தான்.


“ஏண்டா என்னை நீ நினைச்சுப் பார்க்கவே இல்லைலை.. இதோ நிலா எத்தனை நாள் உன்னைக் கேட்டு அழுதுருப்பா..”

“அம்மா.. சாரிம்மா..”

“போய் அதைக் குப்பைத் தொட்டியில் போடுடா..” முறுக்கி கொண்டார் அருணின் அன்னை.

அன்று அனைவரின் அட்டேன்சனும் கனி, அருண் மீதிருக்க மனோ வீட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள்.
ஆதியும் அவளைத் தொடர்ந்தான். கீழே சுற்றிப் பார்த்தவள் மாடி ஏற ஆரம்பித்தாள். ஒரு அறை மட்டும் திறந்திருக்க அதை ஒரு பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.


திறந்திருந்த அறையின் பால்கனியில் வைத்திருந்த செடி அவளை ஈர்த்தது.

“அட ஹீலியோடிரிப் செடியாச்சே..”
உள்ளே நுழைந்தவள், “செடியை மட்டும் பார்த்துட்டுப் போயிடறேன்.” என அந்தப் பெண்ணிடம் கூறினாள். அவளும் சரி என பதில் கொடுத்தாள்.

“இங்க யாரு இதை வச்சுருப்பா..” சுற்றிப் பார்க்க புகைப்படமாக அதில் ஆதித் தன் தங்கைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.
பின்னால் நிற்பவளை சட்டென அணைத்தான் ஆதித்.


“வொய்ஃபி.. எப்படி இருக்கு நம்ம ரூம்? நீ கொடுத்த எட்ர்னல் லவ் செடிதான். நீதான் எனக்கு முதலில் புரப்போஸ் செஞ்சுருக்க இந்த செடி கொடுத்து. இந்தச் செடியைப் பார்க்கும் போதெல்லாம் உன்னைப் பத்தி நினைச்சுட்டே இருப்பேன்.”

“விடு ஆதித்.. நான் எப்ப செடி கொடு..” தான் கொடுத்த இடம் புரிந்தது.

“ம்ம்ம்..”

“ஹே நாட்டி புயூட்டி.. சொல்லு எஸ் ஆர் நோ?”
காதோரம் அவன் குரல் குறுகுறுத்தது. கழுத்தோரம் ஊர்ந்தது அவன் இதழ்கள்.


மனோவின் மனமும் ஊசலாடத் தொடங்கி அவன் பக்கம் சாய்ந்து மயங்கத் தொடங்கியது.
கண்களை மூடினாள்.


“ம்ம்ம்..” என கிறக்கத்துடன் ஒலித்தது அவள் குரல்.


“நோ..”
அவனிடம் இருந்து விலக முயன்றவளை அவன் விட்டால் தானே.


“சொல்லு.. உன்னோட ரிவெஞ்ச் பிளான் எக்ஸ்கியூட் செய்ய முடியலை. கனி மொழியை என்னோட ஃபேம்லி எல்லாரும் ஏத்துகிட்டாங்க. இல்லைனா என்ன பிளான் வச்சுருந்த?”

“எந்தப் பிளானும் இல்லையே..” வேகமாக மறுத்தாள் மனோஷா.


“பார்ரா.. நான் தாலி கட்டும் போது கூட ஷாக்கில் இருந்திருக்கலாம். அது தெளிஞ்ச உடனே நீ செஞ்ச பிளான் இதுதானே. என்னை அந்த வீட்டில் இருந்து வெளிய வர வச்சுட்ட. அது மட்டுமில்லாமல் இன்னிக்கு இவங்க கனியை அக்சப்ட் செஞ்சுக்கலைனா நீ என்னோட ஃபேம்லியை ஆட்டிப் படைச்சுருப்பதான. உன்னோட பிளானுக்கு என்னோட லவ்வை யூஸ் பன்னிகிட்டேன். நான் உனக்கு விழுந்தது உனக்கு எப்பவோ தெரிஞ்சுருக்கும். இருந்தாலும் உன்னால உண்மையை ஏத்துக்க முடியலை. அதுக்காத்தான ஊரில் இருக்கும் போதே எங்கிட்ட டிஸ்டன்ஸ் மெய்ண்டெயின் செய்ய டிரை பன்ன. சொல்லு. அப்புறம் அருண் விஷயம்.” இப்போது அவளைத் தன்னை நோக்கித் திருப்பினாள்.


மனோஷா தலையைக் குனிந்திருந்தாள். அவள் திட்டம் போட்டது அனைத்தும் தெரிந்து விட்டது. அவன் ஆள்காட்டி விரலால் மனோவின் முகத்தை தாடையில் தள்ளி உயர்த்த அவள் பக்கவாட்டில் பார்த்தாள். அவன் விழிகளைப் பார்க்கவில்லை.


“வொய்? என்னைப் பாரு?” இன்னும் அவனைப் பார்க்க மறுத்தாள்.


“அப்படி எதுவும் இல்லை.” மனோஷா மெல்லிய குரலில் பதில் அளித்தாள்.


“என்னோட லவ்வை நீ யூஸ் பன்னிக்கலை சொல்லு? நம்ம மேரேஜை நீ யூஸ் பன்னிக்கலைனு சொல்லு? என்னைப் பிடிக்கவே இல்லைனு சொல்லு?”

“இல்லை.. ஹான்.. யெஸ்.” வார்த்தைகளால் அவளை இந்த முறை மடக்கி இருந்தான் ஆதித். இப்போது அவன் பக்கம் தன் பார்வையைச் செலுத்தினாள் மனோ.


“மனோ நமக்குள்ள எந்த ஈகோவும் வேண்டாம். நீ எவ்வளவு டிரை பன்னாலும் உன்னை விட்டு போற ஐடியா எனக்கில்லை. அக்சப்ட் யுவர் பிலீங்க்ஸ்.”
பெருமூச்சு விட்டாள் மனோஷா.

“எப்பனு தெரியலை.. ஆனால் நீ என் பக்கத்தில் வரும் போதெல்லாம் மனசு அப்படியே ஊஞ்சலாட மாதிரி இருக்கும். இந்த சைலண்ட் கில்லர்ட்ட அப்படி சார்ம் இருக்குனு தெரியலை. நானும் விழுந்துட்டேனுதான் நினைக்கிறேன்.”

“அப்ப ஓகேங்கற..”

“தெரியாது.. உன் மேல் அட்ராக்ட் ஆனது உண்மை.”

“என் கூட இருக்கனு மட்டும் சொல்லு. அந்த மாந்தோப்பை உனக்கே எழுதித் தரேன்.”

“பார்ரா. யோசிச்சு சொல்றேன்.” அவனை விலக்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேற முயன்றவளைப் பிடித்து தன் அறைக் கதவிலேயே சாய்த்தான். அவள் யோசிக்கும் முன்னரே அவனுடைய இதழ்கள் அவளின் இதழ்கள் மேல் போர் தொடுத்திருந்தன. முற்றிலும் எதிர் பார்க்காத மனோ தடுமாறித் தள்ளாடித்தான் போனாள். முதலில் சில எதிர்ப்புகளைக் காட்டியவள் பின்பு அவனுடன் போராட ஆரம்பித்தாள். அவளை அப்படியே தூக்கி அருகில் இருந்த கபோர்ட்டின் மேல் புறத்தில் அமர வைத்தவன் விட்டதைத் தொடர்ந்தான். மனோவின் விரல்கள் இந்த முறை அவன் தலை முடியை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது.
இருவரும் மூச்சுக்காக இடை வெளி எடுத்தனர். ஆதித் தன் நெற்றியை அவள் நெற்றி மீது வைத்திருந்தான்,
“இப்ப சொல்லு எஸ் ஆர் நோ?”

“நோ…” அவள் குரல் தடுமாற்றத்துடன் ஒலித்தது.

“உனக்கு சின்ன வயசில் ஒரு விளையாட்டு ரொம்ப பிடிக்கும். என்ன தெரியுமா?”

“என்ன?”

“ஹைட் அண்ட் சீக். எப்பவும் நான்தான் சீக்கரா இருப்பேன். இப்பவும் அதேதான். உன்னைக் கண்டுபிடிக்கறது கஷ்டம். ஆனால் கடைசியில் உன்னை நான் கண்டுபிடிச்சுருவேன்.”


“சரி கண்டுபிடிச்சுக்கோ.. நான் இப்ப என் வீட்டுக்கு கிளம்பறேன்.” என கூறிவிட்டு அவனை மார்பில் தள்ளி விலக்கியவள் கதவை நோக்கிச் செல்ல அவள் கையைப் பிடித்து சுண்டி தன்னருகில் இழுத்தான் ஆதித். மனோ நகராமல் இருக்க அவனை இடையோடு சேர்த்து அணைத்துப் பிடித்தான்.

“இதை நைட் கண்டினியூ பன்னலாம். போய் திங்க்ஸ் பேக் பன்னிட்டு வா.. வேண்டாம். என்னோட மச்சானே அனுப்பிச்சு விட்ருவாரு. உனக்கு இங்கேயும் டிரஸ் நான் வாங்கி வச்சுருக்கேன்.”

“மாட்டேன்.”
மறுத்தாள் மனோ.

“கோ.. நானே வந்து உன்னைத் தூக்கிட்டு வரேன்.” என அவளை விடுவித்தான்.
மெல்லிய சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் மனோஷா.


எபிலாக்:


ஒரு மாதம் கழித்து,
வீட்டில் உள்ள அனைவரும் குழுமி இருந்தனர். எதிரில் போட்டோகிராபர் நின்று கொண்டிருந்தார். குடும்பமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அது. மனோவும் ஆதித்தும், அருணும் கனியும் வடிவழகியும், சிவநாராணயனும் நடுவில் இருக்க இரு புதிய ஜோடிகளும் பக்க வாட்டில் அமர்ந்திருந்தனர். பின்புறம் ஆதித், அருணின் அம்மா அப்பா நிற்க, மனோவின் அம்மா, அப்பா, கனியின் பெற்றோர் நின்றனர். அகல் நிலா அருண் அமர்ந்திருந்த நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருக்க, இள மதியும் ஆதித்தின் அப்படியே அருகில் அமர்ந்திருந்தாள். மித்ரன் அனைவருக்கும் நடுவில் கீழே தரையில் ஒரு காலை மட்டும் ஊன்றி அமர்ந்திருந்தான்.


“ஸ்மைல்…”
அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை பரவியது.

“கிளிக்.”

ஆதித்தை ஒரு தடவை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள் மனோ. அவனும் திரும்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தினான். அவனுக்கு பதிலாக கண்ணடித்து விட்டு திரும்பிக் கொண்டாள் மனோ. ஆதித் புன்னகைத்தபடி அவளுடன் கையைக் கோர்த்துக் கொண்டான்.