• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 4

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
12
11
3
Coimbatore
அத்தியாயம் 4.,

கவியும் ருத்ரனும் ஒருவருக்கு ஒருவர் மனதினுள்ளேயே கேலி செய்துகொண்டனர். வெளியில் சாதாரணமாக ஒரு பார்வை அவ்வளவுதான் இருவரின் உறவும்.

ருத்ரன் சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்று அடைந்து கொள்ள, ' ஃபஸ்ட் பாயிண்ட்... இந்தாளு ஒரு உமனா மூஞ்சி, செகண்ட் பாயிண்ட் லூசுப்பய தனியாவே இருக்க நினைக்கிறான் ' என தன் போனில்...

"பன் மண்டையன்" என்ற தலைப்பில் வரிசையாக நோட்ஸ் ஏப்பில் லிஸ்ட் போட்டுக்கொண்டாள் கவி.

அவள் டைப் செய்து கொண்டு நிமிர, "என்ன ரிப்போர்ட்டரம்மா, எப்போ ஐடி ல ஜாயின் பண்ணீங்க" எனக் கேட்டுக் கொண்டே அவளின் போனை பாக்க முயன்றான் ஆதவன்.

அவனுக்கு தெரியும் அவளின் பழக்கம் அதுவென. எதேனும் முக்கியமான விஷயம் அல்லது மறக்க கூடாது என நினைக்கிற விஷயங்களை நோட்ஸ் எடுத்துக் கொள்வது அவள் வழக்கம்.

இப்போதும் அதே போல அவள் டைப் செய்வதை பார்த்தவுடன், பக்கத்து நபரின் பரீட்சை தாளைப் பாத்து பிட் அடிப்பது போல அவன் வரவும் உஷாராகினாள் கவி.

"என்ன" என்றாள் கோவை சரளா டோனில்..

"ஒண்ணுமில்ல" என்றவன், அவள் கண்டு பிடித்தது தெரிந்து அமைதியாக சென்று விட்டான்.


தன் ரகசியங்களை எப்போதும் ரகசியமாக வைப்பாள் கவி. எப்போது அதற்கான நேரம் வருமோ அதுவரை அவளுடன் பத்திரமாக இருக்கும். வேலையில் கூட அவள் அந்த செய்திக்கான நேரம் வரும் வரை ஒரு சின்ன வார்த்தை கூட வெளியிட மாட்டாள். திறமைசாலி, அதனால் தான் அவளின் எம்டி அவளை வேறு சேனல் க்கு சென்று விடுவாளோ என கேள்விகள் கேட்டது.

ஆதவன் தான் இதை செய்ய சொன்னான் என்றாலும், அதற்கான நேரம் வரும்போது தான் அதை ஒப்படைப்பாள்.

அவள் ஒரு மாதம் தங்க வேண்டும் என சொல்லியதால் அவளுக்காக எப்போதும் தங்கும் அறை தயார் செய்யப்பட்டது.

திவ்யா குழந்தைகளுடன் இருப்பதால் தூசி அலர்ஜி ஆகுமென, ஆதவனும் கவியும் சுத்தம் செய்ய பார்வதி வாயில் வேலை செய்து கொண்டு இருந்தார்.


"வாய் மட்டும் கேளுங்க... இப்படி வேலை செஞ்சிட்டு தான், நான் வேலை செய்ரேன்னு ஊரை ஏமாத்துறீங்க", என பார்வதியிடம் வாயாடியபடி தூசி தட்டிக் கொண்டு இருந்தாள் கவி.

"நான் வேலை செய்லனு சொல்லு ஒத்துகிறேன், ஆனா நீ வேலை செய்ரேனு சொல்லாத" என பார்வதி சொல்ல..

"நான் செய்யாம, இந்த தூசியை எல்லாம் அதை கட்டுன ஸ்பைடரே கழட்டி எடுத்துட்டு போய் வேற வீட்ல பால் காய்ச்சிருச்சா" என்றாள் அவரை முறைத்துக் கொண்டே.

"ஏன் டி தலை வலிக்க வைக்கிற, இன்னைக்கு ஒரு நாள் லீவுன்னு சந்தோஷப்பட்டேன். அது முழுசா அனுபவிக்க முடியாம போச்சுன்னு கடுப்புல இருக்கேன். ஒழுங்கா ஒட்டடை அடிக்கிற வேலையை பாரு" என ஆதவன் திட்டவும்.

"நீதான கேட்ட, அப்போ நீ ஹெல்ப் பண்ணித் தான் ஆகனும்" என ஹஸ்கி குரலில் அவனிடம் சொல்லி விட்டு, விட்ட வேலையை தொடர்ந்தாள்.


"என் தலை எழுத்து, எனக்கு அப்போ மூளை வேலை செய்யல" என அவன் மெலிதாக புலம்ப..

"அப்படி ஒன்னு இருக்கா" எனக் கேட்டு அவள் சென்று விட,

"இவளை" என பல்லைக் கடித்துக் கொண்டான் ஆதவன்.


ஒன்றும் செய்ய முடியாது, உன் தேவைக்காக அவளை இதுல மாட்டி விட்டிருக்க... சோ நீ எல்லாம் தான் அனுபவிக்கனும் என்றது மனசாட்சி.
அவனும் அதை ஒப்புக் கொண்டான்.

அவனுடைய எதிர்பார்ப்பு ஒன்று இருக்கிறது. அது நடக்குமா என தெரியாது. ஆனால் முயற்சி செய்யவே கவியை இழுத்து விட்டான்.

அவளும் அவளின் ஈகோ தலை தூக்க, நான் ஆணியை எளிதாக கழட்டி விடுவேன் என கிளம்பி வந்துவிட்டாள்.

பார்வதிக்கும் கவியை மருமகளாக்க ஆசை இருக்கிறது தான், ஆனால் முப்பத்தி ஆறு வயதான தன் மகனுக்கு கவியின் அம்மா பெண் கொடுக்க சம்மதிக்க மாட்டார் என்றே எண்ணினார்.

ஆனால் இங்கு விவகாரமோ வேறு மாதிரியாக இருக்கிறதே.
ஆனாலும் பார்வதிக்கு ஆதவனை நினைத்து சங்கீதா சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் ஒரு பக்கம்.

எல்லாம் மனதில் ஓட, திவ்யா சொன்னது போல கொஞ்ச நாள் போகட்டும் என மனதை சாந்தப்படுத்திக் கொண்டார்.

ஆதவனும் கவியும் வம்பு செய்து கொண்டே அறையை சுத்தம் செய்தனர்.

ருத்ரன் அறையில்,

"கண்ணை நோண்டி காக்காக்கு போடணும், என்ன முழி முழிக்கிறா... முட்டைக்கண்ணி" என அவன் திட்டிக் கொண்டு இருந்தான்.

திட்டுகிறானா? ரசனையாக சொல்கிறானோ? அது அவனை படைத்த கடவுளுக்கே வெளிச்சம்.

' இது நாள் வரை உன்னை பாத்தா எல்லாரும் பயப்படுறாங்க.. வர வர எனக்கே பயமாகுது' என்றது அவன் மனம்.

"உனக்கென்ன பயம், அதுவும் என்னை பார்த்து" புரியாமல் தான் கேட்டான். தன் மனசாட்சி ஏன் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என...

' நீ மூளையை குழப்பி, அந்த மூளைப் பய என்னைய குழப்பி... மொத்தமா பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருவனு தான் ' என மனம் சொன்னவுடன்...

"யூ இடியட்" என்றான் இவன்.

"உனக்கு மனசாட்சியா இருக்கேன் ல, அப்படித்தான் இருப்பேன்" என்றது.

குறைந்த டென்ஷன் மீண்டும் ஏறியது.

ஒரு சிகரெட்டை எடுத்து ஊதித் தீர்த்த பின் தான் கொஞ்சம் அமைதியடைந்தான்.

இப்போது தான் ஒரு படம் முடிந்தது, இனி அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருந்தும் ஆரம்பிக்க வேண்டிய நாட்கள் தொலைவில் இருக்கிறது. அதுவரை வீட்டில் இருக்க வேண்டும் இல்லையானால் ஊர் சுற்ற வேண்டும். ரெண்டுமே அவனுக்கு சரிப்பட்டு வராத வழி.

திவ்யாவின் திருமணத்திற்கு பின், அவளை அசிஸ்ட் செய்ய வேண்டாமென சொல்லி விட்டான் ருத்ரன். அதற்கு பதிலாக ஷ்ரவன் என ஒருவன் அவனுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்து இருந்தான்.


திவ்யா ஏன் என்று கேட்காமல் வேலையில் இருந்து நின்று விட்டாள். ருத்ரன் எதேனும் சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என எண்ணுபவள் அவள்.

அதுவும் நிஜம் தான் தன் காதார கேட்ட செய்தியில் புரிந்து கொண்டாள்.

முகத்தின் முன் மரியாதையை கொட்டினாலும், இன்னும் முதுகின் பின்னால் பேசும் ஆட்கள் ஒழியவில்லை.

"டேய் அண்ணன் கூட அசிஸ்டன்ட் வேலை பார்த்த பொண்ணை தம்பி கல்யாணம் பண்ணிகிட்டாறாம்" என ஒருவன் சொல்ல.

"அவர் யூஸ் பண்ணுன பொருள்னு தெரியாம இருக்கும்" என்றான் இன்னொருவன்.

இவர்கள் பேசுவது போல எல்லாம் இல்லை ருத்ரன். கண்ணில் நெருப்புடன் திரிபவன். திவ்யா துளசி போன்றவள்.

பேசும் நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசுமே. நரம்பில்லாமல் திசைக்கு ஏற்ப வளையும் தானே. அப்படித்தான் அவர்களுக்கு வளைந்தது.


இதை கேட்ட பின் ஆதவன் என்ன சொல்வான் என்ற பயம் இருந்தது. ஆனால் அவனோ அவர்களை செருப்பளவிற்கு கூட மதிக்காமல் தன் மனைவியை தங்கமாய் தாங்கினான்.

அண்ணன் எப்படி என்றும் தெரியும், மனைவி எப்படி என்றும் தெரியும் அவனுக்கு.


ஷ்ரவனுக்கு அழைத்தான், " ஷ்ரவன்... அந்த நியூ ஃபிலிம் டைரக்க்ஷன் சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணிடலாம்" என சொல்ல.

"நேத்து புரோடியூசர் கால் பண்ணினார் சார், நெக்ஸ்ட் மன்த் தான் புரோடியூஸ் பண்ண அமௌண்ட் ரெடி ஆகும், சோ கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொன்னார்" என்றான் அவன்.


பணம் பிரச்சனை என்பது அனைவருக்கும் வருவது தானே, அவருக்கு எங்கு எவன் எதை பற்ற வைத்தானோ..


சரியென அழைப்பை அணைத்தான் ருத்ரன். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என யோசிக்கவே சோம்பலாக உணர்ந்தான். இன்று மிகவும் மன அழுத்தத்திற்கும் ஆட்பட்டு இருந்தான்.

புதிதாக வந்த குட்டை கத்தரிக்காய் வேறு மூளைக்குள் புட் பால் விளையாடியது.

அனைத்தையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து தூக்க மாத்திரை ஒன்றை போட்டு தண்ணீரைக் குடித்து விட்டு படுத்துக் கொண்டான். அமைதியாக அவனை ஆட்கொண்டது உறக்கம்.
 
Last edited: