• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 6

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
12
11
3
Coimbatore
அத்தியாயம் 6.,

அவன் சென்ற அடுத்த நொடியே, அங்கிருந்து எஸ்கேப் ஆகி அறைக்குள் அடைந்தவள் தான். அவனை ரசிக்கிறோம் என மனது வெட்கப்பட்டாலும், மூளை ' அடி வெட்கங்கெட்டளே ' என அசிங்கமாக திட்டியது.


அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், தன் போட்டு வாங்கும் திறமையை ஆதவனுக்கு காட்ட வேண்டும் என்று அவள் இங்கு வந்தாள் என்பதை மறந்து அவனின் பக்கம் மனம் சாய, உள்ளுக்குள் இதமாக இருந்தாலும்... கொஞ்சம் அசிங்கமாகத் தான் இருந்தது.

இப்படி அனைவருக்கும் தெரியும் படியாகவா பார்த்து வைப்பது என முகத்தை வெளியில் காட்டவே முடியாமல் இருந்தாள்.

"கவி... கதவை திற" என ஆதவன் அழைக்க, அவன் தன்னைப் பார்த்து சிரிப்பது போலயே தோன்ற,

"என்ன" என்றாள் கடுப்பாக,

"எதுக்கு இப்ப கத்துற, வா... வெளில போயிட்டு வரலாம்" என ஆது அழைக்கவும் தான்,

"எங்க" என்றபடி கதவைத் திறந்தாள்.

"மால் போலாம்" என்றவன் அவளின் சம்மதம் கேட்டு நிற்க,

"திவ்யா" என அவளையும் அழைத்தாள்.

"அவளை இப்ப நான் கூப்பிட்டேன், என்னை எதுல அடிப்பான்னு தெரியாது" என்றவன் நேரத்தைக் கட்டினான்.

"சரிதான். நான் மட்டும் இளிச்ச வாயா, எனக்கும் தூக்கம் வருது" என்றாள் கடிகாரத்தில் பத்து மணி என்பதை பார்த்தபடி...

"அண்ணாவும் இன்னும் வரல, எனக்கு போர் அடிக்குது" என அவன் சொல்ல... மனசாட்சியோ, ' இல்லனா மட்டும் அவன் கொஞ்சி கூத்தாடுவான் ' என திட்ட அவளிடம் அசடாக சிரித்து வைத்தான்.

' ஓஹோ... இன்னும் மிஸ்டர் அழகன் வரலையா ' என எண்ணிக் கொண்டு,
"வெயிட் பண்ணு, ரெடியாகி வரேன்" என்றவள் கால் மணி நேரத்தில் கிளம்பி வர, திவியாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் வெளியில் வந்தனர்.

அந்நேரம் ஒரு கையில் காரின் சாவியை ஸ்டைலாக சுழற்றிக் கொண்டு, மறு கையை பேண்ட் பக்கெட்டில் நுழைத்த படி நடந்து வந்தவனைக் கண்டு சொக்கி நின்றாள்.

உடன் வந்தவளை காணவில்லை என ஆதவன் பார்க்க, வைத்த கண் எடுக்காமல் உறை நிலையில் ருத்ரனைப் பார்த்திருந்தாள் அவள்.

முதல் முறையாக ஒரு ஆணைக் கண்டு அடிக்கடி மயங்கி நிற்கும் பெண்ணைப் பார்க்கிறான் ஆதவன்.

திவ்யாவை அவன் ரசித்து நின்றதுண்டு ஆனால் அவள் இப்படி இருந்தது இல்லை. அவனும் அதைப் பற்றி நினைத்தது இல்லை.

இன்றோ கண் முன்னேயே கவியின் கண்கள் செய்யும் காதல் கவிதையாக தெரிந்தது அவனுக்கு.

எதிரே வந்த ருத்ரனும் அவளையும் அவளின் பார்வையையும் கண்டு கொண்டவன், "அய்யோ பாக்கிறாளே... இன்னைக்கு நைட் நான் தூங்கின மாதிரி தான்" என தனக்குள் புலம்பிக் கொண்டே வந்தவன் அவளின் பார்வை வீச்சு தாங்காமல், தலையைக் கோதியபடி கண்களால் அவளை படம் எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து விட,

"கவி" என அவளை உலுக்கினான் ஆது.

"ஆது... எனக்கு என்னமோ சரி இல்ல டா. உன் அறிவு கெட்ட அண்ணனைப் பார்த்தா மட்டும் நான் எங்கேயோ பறந்திடுறேன்" என்றவள் சோகமா, வருத்தமா, படபடப்பா என எதோ புரியாத உணர்வால் தவித்தாள்.


"ஃப்ரீயா விடு... அவனைப் பார்த்து பறக்காமா இருந்தா தான் அதிசயம்" என்றவன் முன்னே நடக்க,

"ஆரம்பிச்சுட்டான். அண்ணன் புராணத்தை, ஊர்ல இல்லாத பேரழகன் அளவுக்கு பேசுவான்" என புலம்பினாலும், உள் மனம், ' அப்புறம் ஏன் ஊர்ல வேற எந்த பசங்களையும் வாயை பிளந்துட்டு நீ பாக்கல ' என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாட்டு பாடிக் கொண்டே ஆதவன் பின்னால் சென்றாள் கவி.

"கவி அண்ணனையும் கூப்பிடலாம். அவன் இன்னும் தூங்கல பாரு, ரூம்ல லைட் எரியுது" என்றான் ஆதவன்.

"ஹான்" என அதிர்ந்தவள், "என்னமோ பிளான் பண்ற ஆது" என யூகமாக கவி சொல்ல,

"அவனும் தனியா என்ன பண்ணுவான் பாவம்" என்றதும், சரி என்பதாக தலை அசைத்தாள் அவள்.

அறைக்குள் வந்த ருத்ரன், "அய்யயோ சாமி, என்ன பார்வை அது... ஷ்ஷப்பா நெஞ்சுக்குள்ள கிர்ருனு இருக்கு" என வாய்விட்டு சொன்னவன், தன் இடது புற நெஞ்சுப் பகுதியைத் தடவிக்கொண்டான்.

அவனால் அவளின் கண்களையும் அதனால் ஏற்படும் பார்வை வீச்சும் தாங்கவே முடியவில்லை. மூச்சடைப்பது போலயே உணர்ந்தான். கண்களை பார்க்க ஆசை தான், ஆனால் பார்க்க முடியாமல் தடுக்கிறது அந்த ரசனை பார்வை, நெஞ்சத்தில் ரோஜா கூட்டம் பூத்து குலுங்குவது போல சில்லென்ற உணர்வில் இருந்தான் ருத்ரவன்.


அவன் அவளின் பார்வையை எண்ணி இன்னமும் நிலைக்கு வராமல் தவிக்க அவனுக்கு அழைத்தான் ஆதவன்.
அழைப்பு ஏற்று காதில் வைத்தவன், "சொல்லு ஆது" என இயல்பாக கேட்கவே, வெகுவாக சிரமப்பட்டான்.

"அண்ணா நானும் கவியும் மால் போறோம். நீயும் வரியா" எனக் கேட்க,

ருத்ரன், "எந்த மால்" எனக் கேட்டவனுக்கு அருகில் இருக்கும் மாலின் பெயர் சொன்னான்.

"சரி நீங்க போங்க, நான் பின்னாடி வரேன்" என்றான்.

"எல்லாரும் ஒன்னா போலாம் அண்ணா. ஜாலியா இருக்கும்" என அடம் பிடித்தவனை எண்ணி, நேரில் கவியும் போனில் ருத்ரனும் தலையில் அடித்துக் கொண்டனர். அவர்களின் அவஸ்தை புரியாமல் படுத்துகிறான் என அவர்கள் புலம்ப, அவனோ அவர்களின் அவஸ்தையை அதிகப்படுத்த திட்டம் போட்டான்.


"சரி வரேன்" என்றவன் உடையை கூட மாற்றாமல் கீழே வந்தான். இருவருக்கும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க ஆசை இருந்தும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை.

உள்ளுணர்வு மட்டுமே பேசியது. வெளியிலோ, இருவரும் நீயும் நானும் எதிரி என்ற உடல் மொழி தான்.


ஒரே நாளில் அவனை ரசனையால் திக்குமுக்காட வைத்தவளை ருத்ரனும், ஒரே நாளில் அவளுள் பொங்கி வழியும் ரசனை என்ற ஊற்றை தோற்றுவித்தவனும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை என ஆதவனுக்கு வருத்தம்.

ஆதவன் காரோட்ட, அவனருகில் அமர்ந்து இருந்தான் ருத்ரன்.

பின்னிருக்கையில் இருந்தாள் கவி.
ஆதவன் இருவருடன் பேசியபடி காரோட்ட, மெல்லினமாக அவளை தடவிச் சென்றது ருத்ரனின் பார்வை சைட் மிரர் வழியே அவளறியாமல்...

அவளும் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவள், சட்டென மிரரில் அவன் முகம் தெரியவும்... டோட்டல் ஃப்ரீஸ்.

இரவு நேர குளிர் காற்று முகத்தில் மோத, அந்த காற்றில் அவன் அலையான கேசம் அவளை வெகுவாக அலைக்கழித்தது.

அவனும் அவளைப் பார்த்திருக்க அவளும் பார்த்திருக்க, இருவரின் பார்வை காந்தங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள துடித்தது.


ஆதவன் பேசிக் கொண்டு வர, மற்ற இருவரும் வேறு கிரகத்தில் இருப்பது போன்ற பிரம்மை அவர்களுக்கு. திடீரென சத்தமாக எதோ இடையூறாக இருக்க நிஜம் வந்தனர் இருவரும். ஆதவன் தான் ஹார்ன் அடித்துக் கொண்டு இருந்தான். இன்று என்னவோ இரவு ட்ராஃபிக் அதிகமாக இருந்தது.


சிறிது நேரம் பின் கவியை திரும்பி பார்த்த ருத்ரனிற்கு அவளின் மூடிய விழிகள் ஏமாற்றத்தைத் தரவும், அமைதியாக இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து விட்டான். எதையோ எதிர் பார்க்கும் மனம், சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். அதைவிட கடின நிலையில் கவி, அவளுக்குள் எதோ வித்தியாசம் நடக்கிறது. என்னவென புரியாமல் விழிக்கிறாள். இதை அறியாத ஆதவன் ட்ராஃபிக் ஜாமில் எரிச்சலாக இருந்தான்.