வணக்கம் மக்களே:
சிறுகதை போட்டி - 2023 முடிவுகள்
"ஊடல் முதல் காதல் வரை" - Breakup Ah...? Patch Up Dhan...!
எழுத்தின் ஆழத்தில் புதைந்த காதல் வி(க)தைக்கு நீரூற்றி, தளிர்விடும் அதன் குளிர் நிழலில் இளைப்பாறிய அனைவருக்கும் வைகைத்தளத்தின் இனிய வணக்கங்கள்
வைகை தளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் உயிரோடும், உணர்வோடும் கலந்த காதலின் பல வர்ணங்களை, நம்முடைய அகக்கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்து அசத்தி விட்டனர் போட்டியில் பங்கேற்ற எழுத்தாளர்கள்.
"ஊடலும் தேவை....
என்னில் உன்னை தேட..."
ஆம்... ஊடலும் காதலின் அங்கமே. இடைவெளிவிட்டு, ஊடலில் உடல்கள் பிரிந்து இருந்தாலும், காதலில் என்றும் இதயங்கள் இணைந்தே பயணிக்கின்றது.
வலிகளின் உச்சத்தில், மரிக்கும் காதல். மீண்டும் மீண்டும் உயிர்க்கும்...
இந்த வித்தியாசமான கதை களத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், ஊக்கமும் உற்சாகமும் தந்து ஆதரவளித்த வாசகப் பெருமக்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் கலந்து கொண்ட 40 கதைகளும் ஊடலோடு கலந்த காதலைக் கொண்டாடி நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது.
காதல் இனிக்கும்!
ஊடல் கசக்கும்!
காதல் சிறகடிக்கும்!
ஊடல் துடிக்கும்!
காதல் வெல்லும்!
ஊடல் கொல்லும்!
காதல் நிறையும்!
ஊடல் உறையும்!
காதல் களி!
ஊடல் வலி!
ஆனால் காதலோடு ஊடல் கூடும்போது, ஊன் விட்டு உயிரும் வெளிவந்து, உயிரோடு உயிர் உரசி, காதல் ஜோதியாய் சுடர்விட்டு ஒளி வீசும்.
காதலின் சிறப்பை உணர்த்தி, பிரிவால் வலி மேவிய காதலின், உயிர் மேவிய நேசத்தை, ஊடலும் கூடலுமாய், உணர்வுக்குவியலாய் கதைகள் எழுதி, அதில் முதல் 20 இடங்களை பிடித்த படைப்புகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
பரிசு பெற்ற சிறுகதைகள்:
1. மனதின் மொழியறிவாயோ - புனிதா பார்த்திபன்
2. மௌனமாய் ஓர் யுத்தம் - தீரா
3. மறுகும் நீ உருகும் நான் - வித்யா வெங்கடேஷ்
4. காதல் பெருகிப் பொழியும் - அதியா
5. ஈர்ப்பு விசை - சக்தி மீனா
6. என்னோடு நீ இருந்தால் - ஹரிணி அரவிந்தன்
7. இணைவாய் எனதாவியிலே - மஹி அபிநந்தன்
8. வளையாத நதிகள் - ப்ரியபாரதீ
9. ஆறாவடுவோ ஔஷதமோ - ஆண்டாள் வெங்கட்ராகவன்
10. ஊடல் நீங்கி காதல் கொள்வோமா - பார்கவி முரளி
11. வாழவைக்கும் காதலுக்கு ஜே - அதியா
12. இதயத்திலே தீப்பிடித்து - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
13. ஊடலும் இனிக்குதடி - மோகனா
14. ஆசைக்குத் தடையேது - விஸ்வதேவி
15. பிரிவரிதடி பனிமலரே - ஹில்மா தாவூஸ்
16. குந்தவையின் காதலன் - பானுரதி துரைராஜசிங்கம்
17. நேசம் பொய்க்குமா - ரமா
18. என் வானில் நிலா நீயடி - சமித்ரா
19. காதல் செய்யும் மாயம் - நர்மதா செந்தில்குமார்
20. அது அவர்கள் பாடு - புவனேஸ்வரி கலைசெல்வி
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வைகை தளம் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.
காதலின் சக்கர வியூகத்திற்குள் எமை நிலை நிறுத்திய அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று கதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கதைகளுக்கும் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
நன்றிகளுடன்
வதனி ...

- YouTube
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.
www.youtube.com