ஹாய் பிரண்ட்ஸ்..
இந்த தளத்தில் என் முதல் கதை...உங்க எல்லோருடைய சப்போர்ட்டும் எப்பவும் வேண்டும்...இந்த கதைல கதை நடக்கற வருடம் எதயும் நா குறிப்பிடல...90களின் இறுதி...2k வின் ஆரம்பம்னு வச்சுக்கலாம் ஓகேவா...எல்லாமே கதையோட போக்குலயே படிச்சு உணர்ந்துக்கலாம்...ஓகேவா.. நம்பி படிங்க...ஶ்ரீயும் கார்த்திக்கும் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..
90s kids
"ஶ்ரீ சாப்ட எதுனா வாங்கிட்டு போலாம்டி...இப்பல்லாம் இன்டர்வல் டைம்ல சாப்ட எதுமே இல்லாம நல்லாவே இல்ல....கடுப்பாகுது...."
பள்ளி செல்லும் வழியில் உஷா புலம்ப சட்டென ஶ்ரீ அவளது BSA SLR சைக்கிளை நிறுத்தியவள்... நால்வரிடம் இருந்த காசை வைத்து அந்த காலத்து 5ரூபாய் dairy milkயை வாங்கி ஸ்கர்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டாள்...
"அய்ய அத உடனே சாப்பிடலன்னா உருகிடும்...நல்லாவே இருக்காது.. குடுடி இப்பவே சாப்பிடலாம்..."
ஆசையாய் கேட்ட மகேஸிடம் மாட்டேன் என தலையாட்டியவள்.."இத வச்சு இன்னைக்கு ஒரு வேலை இருக்கு....அத முடிச்சுட்டு அப்புறம் தர்றேன்.. சரியா... வேணா சாக்லேட் உங்களுக்கு....கவர் எனக்கு... என்னடி டீல் ஓகேவா..."
பக்காவாய் பிளான் செய்யும் இவர்கள் கூட்டணி இப்போது ஆறாம் வகுப்பில் ஜகஜோதியாய் காலடி எடுத்து வைத்துள்ளது...படிப்பு விளையாட்டு என கலந்து கட்டி ஆட்டம் காட்டும் இந்த பெண்களின் வாலும் அடக்க ஆளின்றி...சற்று அதிகமாகவே கூடித்தான் போனது இந்த ஒரு வருடத்தில்....
சரியாய் அன்றைய பகல் வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியும் முடிந்து மிச்சமிருந்த நேரத்தில் க்ருப்பாய் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருக்க.... பெரிய வகுப்பு அண்ணன்கள் இவர்கள் வகுப்பிற்குள் வந்தவர்கள் சடசடவென பெரிய கவரில் சாக்லெட் ...தேன்மிட்டாய் பாக்கெட் என வேகமாய் அடுக்க அங்கிருந்தவர்கள் கண்ணெல்லாம் விரிந்தது..
"அண்ணே அண்ணே என்னண்ணே இது...இவ்ளோ சாக்லேட்டும் எங்களுக்கா... இப்ப இத எங்களுக்கெல்லாம் குடுக்க போறீங்களா.. யாருக்குண்ணே பர்த்டே..."
ஆசையாய் கேட்ட ஶ்ரீயின் தலையில் செல்லமாய் தட்டிய ஜெகன் என்பவன்...
"இல்ல பாப்பா...இது பர்த்டேக்காக இல்ல...நாங்க இது எல்லாத்தையும் இங்க வச்சு விக்க போறோம்... இனிமே லன்ச் டைம் இன்டர்வெல்ல திங்கற ஐட்டம்ஸ்லாம் நம்ம ஸ்கூல்லயே வாங்கிக்கலாம்... இங்க உங்க கிளாஸ்ல மட்டும்தான் எடுத்து குடுக்க வசதியா ஜன்னல் கரெக்டா இருக்கு..அதுனால இனி இங்கதான் வச்சு விப்போம்... உனக்கு வேணும்னா காசு குடுத்து இப்படியே வாங்கிக்க....சரியா..."
பதில் சொன்னவன் மும்முரமாய் அவன் வேலையை செய்ய...முதல் நாள் என்றாலும் கூட்டம் தள்ளியது...
அவர்கள் இருவர் வந்துமே காசு வாங்க பொருள் குடுக்க என சற்று சிரமமாக... திணறினர் அந்த வளர்ந்தவர்கள்...
"டேய் கார்த்தி...இங்க பாரு...டேய் உன்னைத்தான்... உள்ள வாடா..."
சத்தம் வந்த திசையில் ஒலியை விட ஓளி வேகமாய் பாய்ந்தது....ஆம் கார்த்தி பெயரை கேட்டதுமே இருந்த இத்தூண்டு ஜன்னல் வழி தலையை உள்ளே நுழைத்து தள்ளி அவனை பார்த்தவளுக்கு கொண்டாட்டமாய் இருந்தது...
"வாடி வா...உன்னைதான் காலைல இருந்து தேடறேன்...சிக்காம ஆட்டம் காட்டுனல்ல...உள்ள வாடி... இன்னைக்கு இருக்கு கச்சேரி.."
"ஏண்ணே கூப்டீங்க.."
"டேய் உள்ள வாடா...வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா...சார்கிட்ட நா சொல்லிக்கறேன்.."
பள்ளியிலேயே கார்த்திக்கு மிகவும் பிடித்த அண்ணன் ஜெகன்... விளையாட்டு பள்ளி நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் இப்போதே கார்த்தியை உடனிருக்க வைத்து ஒவ்வொன்றாய் கற்று தரும் இளைய ஆசான் அவனை பொறுத்தவரை... மூச்சுமுட்ட ஆசையிருந்தும் உள்ளேப் போக பயமாய் இருந்தது கார்த்திக்கு..ஓரு நொடி கை அவனது நெற்றி காயத்தை தடவி பார்க்க...தலையை இடம் வலமாய் ஆட்டினான்..
"இல்லண்ணே நா வரல...இது அந்த பிசாசோட செக்ஸன்... வந்தா வீணா பிரச்சனைதான் வரும்...நா வரல..."
ஆம்...அன்று ஶ்ரீ அடித்த நாள் தொட்டு கார்த்திக்கும் அவளுக்கும் ஏக பொருத்தம்... இல்லையில்லை ஏழரை பொருத்தம்.....ஶ்ரீ அடித்ததை வைத்து அப்போதே பிடீ சாரிடம் சொல்லி திட்ட வைத்தாலும் சின்ன பெண்ணிடம் அடி வாங்கிய பெயரே இறுதியில் நிலைத்து...நண்பர்கள் மத்தியில் அவன் பிழைப்பை சிரிப்பாய் சிரிக்க வைத்தது... இத்தனைக்கும் கூடைபந்தாட்டத்தின் அடிப்படையை கார்த்திதான் புதிதாய் வந்த நால்வருக்கும் சொல்லி குடுத்தான்... கற்பூரமாய் அதை கற்று கொண்டாலும் கிரவுண்டிற்கு வெளியே ஏதோ ஜென்ம விரோத போல அவனை முறைத்தே திரிந்தாள் ஶ்ரீ..... மொத்தத்தில் முதல்நாள் பற்ற வைத்த நெருப்பை அவ்வபோது ஊதி ஊதி அணையாமல் பார்த்து கொண்டனர் இருவரும்...
"டேய் ச்சீ வாடா... சின்ன புள்ளக்கு போய் பயந்துட்டு...அசிங்கமா இல்ல...நாளைக்கு ஸ்கூல் லீடரா ஆகப்போறவன்... இதுக்குல்லாம் பயந்தா எப்படி...வாடா..."
ஸ்கூல் பீப்பிள் லீடர் என்ற வார்த்தை கேட்டவனுக்கு கண்ணுக்குள் இடி இடித்து மின்னலும் அடிக்க... "ம்ம்...எஸ்...ஆகறேன்... நானும் ஸ்கூல் லீடர் ஆகறேன்... ஆய்ட்டு அப்றம் இவள வச்சுக்கறேன்..."
இப்போதே அவளை விதம்விதமாய் தண்டிக்கும் கற்பனையில் மிதந்தபடி வாய்கொள்ளா புன்னகையுடன்...ஶ்ரீ இருந்த திசையை பார்த்து ஊஃப் என ஊதி தள்ளிவிட்டு வலதுகால் எடுத்து வைத்து உள்ளேப் போனான்..
"டேய் வாடா...வந்து இந்த காச மட்டும் எண்ணி சொல்லு..அதுக்குள்ள நாங்க இத முடிச்சர்றோம்..."
சரி என தலையாட்டி காசை எடுத்தவன் சற்று தள்ளி நின்று எண்ண...பிடித்த சனியும் அவன் அருகிலேயே வந்து நின்றது...
"அப்றோண்டி மகேஸூ...இப்ப நம்ம என்ன பண்ண போறோம்னா.... இன்னைக்கு காலைல நாம கஷ்டபட்டு வாங்குன இந்த சாக்லேட்ட இப்ப சாப்பிட போறோம்...சரியா.."
காக்கை குரலில் சத்தமாய் அறிவிப்பு போல் சொன்னவள்.. பாக்கெட்டிலிருந்த சாக்லேட்டை எடுத்து கார்த்தியின் குனிந்த தலையின் முன் வைத்து அப்படியும் இப்படியும் ஆட்ட....கணக்காய் எண்ணிக் கொண்டிருந்தவனின் கணக்கு தவறியது...
"இவ்வ்....வ......ள" .....வந்த கோவத்தை கண்ணை மூடி அடக்கியவன் குனிந்து மறுபடி எண்ணினான்...
"ஆமா...இது வாங்க...நா எவ்வளவு குடுத்தேன்...."
"நீ இரண்டு ரூவாடி.."
"அப்ப நீ..."
"நா காசே இல்லன்னு ஒரு ரூவா..."
"அப்பறம் நம்ம மகேசு ஒரு இரண்டு..."
"இல்லல்ல அவளும் ஒரு ரூவாதான் குடுத்தா..."
"ஏய் இல்லடி நா இரண்டு ரூவா குடுத்தேன்..."
"ஏய் ஶ்ரீ இவ பொய் சொல்றாடி...இவ ஒரு ரூவாதான் குடுத்தா..."
"அப்ப வெண்ணி நீ??..."
"ஏய் நானும் இரண்டு ரூவாதான் குடுத்தேன்..."
"ஏண்டி அஞ்சு ரூவா சாக்லேட்டுக்கு எல்லாருமே ஆளாளுக்கு இரண்டு ரூவா குடுத்தேன்... இரண்டு ரூவா குடுத்தேன் சொன்னா அப்ப கடைசில எப்படி அஞ்சு ரூவா வரும்...ஒரே குழப்பமா இருக்கே...ஏம்பா ஏய் கார்த்தி உனக்கு ஏதாவது கணக்கு நல்லா வருமா...ஆமா இவன் ஏண்டி இப்படி முழிக்கிறான்... சரி விடு அவனுக்கு அஞ்சு ரூவா கணக்கு தெரியாது போல...நாம மறுபடி கணக்கு போடலாம்..."
அவனை சுற்றி வட்டமாய் உட்கார்ந்து பேப்பர் வைத்து கத்தி கத்தி கணக்கு போட....
"டேய் கார்த்தி டேய் ஏண்டா அழற...என்னாச்சு...ஆமா காச எண்ணிட்டியா...."
கார்த்தி தேம்பி தேம்பி அழ ஜெகன் பயந்து போனான்...
"அண்ணே..நீங்க என்னண்ணே அவன்கிட்ட போய் காச எண்ண சொல்றீங்க....கார்த்திக்கு கேவலம் ஒரு அஞ்சு ரூவா கணக்கு கூட தெரியல... கார்த்தி பாவம்....இல்ல கார்த்தி..."
குனிந்து அழும் கார்த்தியைவிட குனிந்து அவன் முகம் பார்த்து கேட்டவளை முடிந்தமட்டும் பல்லை கடித்து முறைத்தவன்...
"இதுக்குதான் இந்த குட்டி பிசாசு இருக்கற கிளாஸ்க்கு வரமாட்டேன் சொன்னேன்...கேட்டீங்களாண்ணே... பாருங்க...வேணும்னே வந்து வம்பளக்கறா..."
ஜெகனுக்கு நடந்த உள்குத்து தெரியாததால் கார்த்தியைதான் முறைத்தான்....
"ஏண்டா அது பாவம் பச்ச புள்ள...அது பாட்டுக்கு சாக்லேட்டு தின்னுட்டு இருக்கு...அத போய் எப்ப பாரு கோள் சொல்லிட்டே திரி...ஒரு காசு ஒழுங்கா எண்ணல... இதுல மூக்கு முட்ட அழுகுறான் தள்ளிப்போடா..."
தன்னை திட்டியது...அதும் அவனின் விரோதி முன்னால் திட்டியது கார்த்திக்கு பெருத்த அவமானமாய் இருந்தது... திட்டி முடித்து அவர்கள் போனது கூட தெரியாமல் அங்கேயே அமர்ந்தவன் கண்ணுக்குள் வந்து நின்றாள் ஶ்ரீ...
"டேய் கார்த்தி யார பார்த்து குட்டி பிசாசுன்னு சொன்ன..."
"உன்னைதான் சொன்னேன்... ஆமா நீ இப்ப யார டேய்னு சொன்ன...நா உன்னை விட ஒரு வருஷம் பெரியவன்... ஞாபகம் வச்சிட்டு பேசு..."
கவனமாய் அவன் சொன்ன வருட கணக்கை புறம் தள்ளியவள்...
"ஆமா இவ்ளோ பயம் இருக்கறவன் எதுக்குடா என் கிளாஸ்குள்ள வர்ற..."
"இதென்ன உன் கிளாஸ்னு எழுதி குடுத்துருக்கா..எங்க இங்க எதுவும் உன் பேரு இருக்கா...காட்டு பார்க்கலாம்.."
வேண்டுமென்றே தேடுவது போல் அங்குமிங்கும் தலையை திருப்பி பார்த்தவனை கண்டு கொதித்து போனவள்.... "ஆமாடா எழுதிருக்கு... இங்க பாரு...இந்த டெஸ்க்ல என் பேரு எழுதிருக்கு... அப்ப இது எங்க இடம்தான....கிளம்பு கிளம்பு..."
சட்டமாய் சொல்லி ஸ்டைலாய் திரும்பி நடந்தாள்..
"அட ஆர்வக்கோளாறே!!".... ஶ்ரீயையே ஒருநிமிடம் விடாது பார்த்தவன் கண்கள் மின்னியது...
"இருடி தோ வந்துட்டேன்..."
அவசரமாய் ஓடிப்போய் புதிதாய் வந்த டிரெயினிங் பிடீ மாஸ்டரிடம் விவரம் சொல்ல அவர் பரபரப்பாய் வகுப்பிற்குள் வந்தார்...
"யாரது கிளாஸ் டெஸ்க்குல பேரு எழுதுனது....யாருமா அது...ஒழுங்கா உண்மைய சொல்லிடு.."
"இந்த பொண்ணுதான் சார்..இங்க பாருங்க சார்...ஶ்ரீ தனலட்சுமின்னு போட்டு அய்யோ சார் இங்க பாருங்க சார்...கீழ ஹார்ட்டுல்லாம் வரைஞ்சிருக்கா.."
கார்த்தி அந்த பெஞ்சையே சுற்றி சுற்றி வந்து காட்ட...மாஸ்டரின் பார்வையில் அனல் பறந்தது ஶ்ரீக்கு...
"அய்யோ சார்...இல்ல சார்...அது ஏற்கனவே வரைஞ்சிருந்தது...நா சும்மா பேரு மட்டும்தான்..."
"ஓ அப்ப எங்க இடம் காலியா இருந்தாலும் அங்க உன் பேர செதுக்கிடுவியோ.... பெரிய சிற்பியோ..இரு உன்ன்ன..."
கோவமுகத்தோடு வேகமாய் பிரம்பை ஓங்கிய அடுத்த நொடி ஶ்ரீ மயங்கி விழுந்திருந்தாள்...
"அய்யோ சார்...என்னாச்சு சார்...அடி வாங்குனதும் விழுந்துட்டா.."
மகேஸ் பதற..
"எது...ஏய் பொண்ணு நா இன்னும் அவள அடிக்கவே இல்ல....நீ என்னம்மா இப்படி சொல்ற...
"அய்யோ இல்ல சார்...நீங்க குச்சி ஓங்குனப்ப எங்கயோ பட்டிருச்சு போல...அதான் பொசுக்குன்னு விழுந்துட்டா.. பாருங்க சார்..."
சுற்றி இருந்த பொடிசுகளின் பதற்ற முகம் பார்த்து அவருக்குமே அப்படியும் இருக்குமோ என தோன்ற பயந்து விட்டார்...கார்த்தியுமே பயந்தவன் அவரை விட்டு இரண்டடி தள்ளி நின்று கொண்டான்..
அதற்குள் யாருமே தண்ணி தெளிக்காமலேயே ?? ஶ்ரீ மெதுமெதுவாய் கண்ணை திறக்க...பிடீ சார் அவளிடம் விரைந்தார்..
"எம்மா என்னாச்சு....இங்க பாரும்மா...என்ன பண்ணுது உனக்கு.."
கண்ணை மெதுமெதுவாய் திறந்தவள் குய்யோ முய்யோவென ஒரே கத்தல்...
"அய்யோ சார் ஒரே இருட்டா இருக்கே... ஒன்னுமே தெரியலயே... என்ன சார் சுத்தி இவ்ளோ இருட்டா இருக்கு..."
பிடீ சாரின் முகம் அவளுக்கு வெகு அருகில் இருக்க...ஶ்ரீ சொன்னதும்..கொல்லென சிரிப்பு சத்தம் அந்த அறையையே நிறைத்தது...... கார்த்தி கூட வெடித்து வந்த சிரிப்பை பல்லை கடித்து அடக்கினான்...
காரணம் கேட்ட சாரின் நிறம் அப்படி...தொட்டால் ஒட்டி கொள்ளும் கருமை நிற கண்ணனாய் இருந்தவரை பார்த்து இப்படி சொன்னால் அவருமே என்ன நினைப்பார் பாவம்..." ஆமா இந்த பொண்ணு நிஜமா சொல்லுதா இல்ல நாம அண்டங்கருப்பா இருக்கறத வச்சு நம்மள கிண்டல் பண்ணுதா... ஒண்ணும் புரியலயே".... மனதுக்குள் புலம்பியவர் வேலைக்கு சேர்ந்த அன்றே அதிகமாய் மிரட்டவும் முடியாமல் நடந்த களேபரத்தில் முழி பிதுங்கி போனார்....
"ஏம்மா ஏய் கண்ண நல்லா திறந்து பாரும்மா...அதெப்படி இருட்டா தெரியும். இங்க பாரும்மா...ஏம்மா... அந்த தண்ணிய நல்லா அடிச்சு தெளிங்க..."
உயிரை குடுத்து அவர் கத்த...பொளிச்சென தெறித்த தண்ணீரில் கண்ணை மலங்க மலங்க விழித்தவள்...அதை துடைத்திடும் சாக்கில்...பேய் முழி முழித்து நின்றிருந்த கார்த்தியை பார்த்து சட்டென கண்ணடித்தாள்... அதிர்ச்சியில் கார்த்திக்கு கண்ணெல்லாம் விரிந்து கை அப்படியே வாயை பொத்தி முணுமுணுத்தது...
"அடி....ப்ப்ப்....பாவி...."
________________________________
2k kids
"தில்லுமா....உங்க கையால தில்லா குடிக்கற மாதிரி ஒரு காபி குடுங்களேன் ப்ளீஸ்..."
கட்டிபிடித்து செல்லம் கொஞ்சிய கார்த்தியை பார்த்து முறைத்தவர்... கேட்டதை கலந்து குடுக்க...ரசித்து ருசித்து குடிக்கும் மகனை ஆசையாய் பார்த்திருந்தார் தில்லு அலைஸ் திலகவதி..
"என்னம்மா என்னை இப்படி பார்க்குற...நா என்ன அம்புட்டு அழகாவா இருக்கேன்".... தாடையை இடித்து கேட்ட மகனை பார்த்து சிரிப்புதான் வந்தது..
"நீ அழகன்னு ஏற்கனவே எனக்கு தெரியும்டா..ஆனா இந்த சிரிப்பு இருக்கு பாரு...இத இததான் நா உத்து பார்த்தேன்..."
ஆச்சரியமாய் பார்த்தான் கார்த்தி..
"ம்ம்மா நா சிரிச்சதே இல்லையா என்ன..சும்மா கிண்டல் பண்ணாதம்மா.."
"இல்ல கார்த்தி...நீ சிரிப்ப நா இல்லேங்கல...ஆனா எப்பவும் உன் உதட்டுல இருக்கற அந்த சிரிப்பு ஏதோ உன் முகத்துல இருக்கற சோகத்த மறைக்கற மாதிரி...ஒரு மாதிரி வித்தியாசமா தெரியும்டா எனக்கு..ஆனா இப்ப இந்த இரண்டு நாளா...உன் கண்ணு மட்டுமில்ல... உன் மொகமே மொத்தமா மலர்ந்து கிடக்கே...அததான் நா என்னன்னு அப்பப்ப பார்த்துட்டே இருக்கேன்..."
தாயறியாதொரு சூலுண்டோ... அழகாய் அவனை உரித்து பிட்டு பிட்டு வைத்த அம்மாவை உள்ளுக்குள் மெச்சியவன்..
"ம்ம்மா..ஆனாலும் நீங்க ரொம்ப ஷார்ப்மா...அதோட ரொம்ப டேஞ்சரஸ்..எதுக்கும் நா தள்ளியே இருந்துக்கறேன்.."
அவசரமாய் இடத்தை காலி செய்தவனையே யோசனையாய் பார்த்து நின்றார் திலகவதி...
அம்மாவிடம் தப்பித்தாலும் அகத்திடம் தப்பிக்க முடியுமா...அம்மா கேட்ட அதே கேள்வியை அறிவும் கேட்க... உள்ளமோ இரண்டு நாள் முன்னே நடந்ததை நினைத்து பார்த்தது...
ஶ்ரீயை பார்த்த இரண்டு மணி நேரம் கழித்து...ஸ்டேஷன் அருகிலிருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் அவர்கள் இருந்தனர்..
அவர்கள் என்பது ஶ்ரீ... கார்த்தி... அதோடு ஶ்ரீயின் தம்பி சரவணன்...நடந்த கலவரத்தின் காரணகர்த்தா...
அங்கு வந்ததிலிருந்து கார்த்திக்கு ஏதோ மாய லோகத்தில் பறப்பது போல் இருந்தது...காரணம் ஶ்ரீ அவனை அப்படி விழுந்து விழுந்து கவனித்தாள்..
"சரோ...எனக்கு ஒரு டீயும் தேங்கா பன்னும்...அப்டியே சாருக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கி குடுத்துடு..நீங்க சொல்லுங்க கார்த்தி சார்..."
திக்கென்றது கார்த்திக்கு...
"சாரா....நானா...அய்யோ ஶ்ரீ.... என்னை பாவம் பார்த்து விட்டுடு... எங்கம்மாவுக்கு நா ஒரே பையன்..."
கார்த்தியின் பாவனையில் அப்படி ஒரு சிரிப்பு வந்தது ஶ்ரீக்கு.. வாய்விட்டு கண்ணில் நீர் பொங்கி வர.. இத்தனை மணிநேர தவிப்பையும் ஈடு செய்பவளை போல் விழுந்து விழுந்து சிரித்தாள்..
பின்னே இருக்காதா...லன்ச் டைமில் கொண்டு போன அந்த காய்ந்த பிரட் வேண்டாமென மறுத்து சுகமான குட்டி தூக்கத்தில் இருந்தவளை கலைத்தபடி வந்தது அந்த போன்கால்... சரோ யாரையோ அடித்து இப்போது கேஸாகி ஸ்டேஷனில் இருக்கிறான் என்ற நொடியில் போன உயிர்...ஷேர் ஆட்டோ...பஸ்... மறுபடி ஆட்டோ என மாறி மாறி ஓடி வந்து ஸ்டேஷனில் அவள் தம்பியை பார்த்த பிறகே வந்தது... அப்போதும் படிக்கும் பையன் மேல் கேஸ் வேண்டாமென கெஞ்சி தான் செய்ததாய் ஒப்பு கொள்வதாய்....பதிலுக்கு அடிபட்டவருக்கு ட்ரீட்மெண்டிற்க்கு பணம் தருவதாய் செட்டில்மெண்ட் பேசி என இந்த நாளின் பிற்பாதி ஶ்ரீயை பொறுத்தவரை நரகமாய் நகர்ந்தது....எல்லாம் முடிந்து முதல்முறை ஸ்டேஷன் வந்த படபடப்பில் கூடவே பசி மயக்கமும் சேர...மனதளவில் சோர்ந்து போய் இருந்தவளை காப்பதற்கென்றே வந்து சேர்ந்த ரட்சகனல்லவா இவன்... ஏனோ அந்த நொடி அவள் கண்களுக்கு தெய்வம் போல் தெரிந்தான் கார்த்திக்..
ஆம் உண்மையில் தெய்வம் போல்தான் எல்லாம் செய்தான் அவளுக்கு... அவளை கண்டு கொண்ட அடுத்த பத்து நிமிடத்தில் எங்கெங்கோ பேசியவன்.. இன்ஸ்பெக்டரிடம் தனியாய் சென்று பேசிவிட்டு வந்து இவர்களை வெளியில் அழைத்து வந்துவிட்டான்..
"இல்ல கார்த்தி...அங்க அவங்க ஏதோ சைன்லாம் கேட்டாங்க...அப்பறம் உங்க பிரெண்ட்கு ஏதோ செட்டில்மெண்ட்லாம் பேசணும் சொன்னாங்க...
சொன்னவளை திரும்பி நேராய் ஒரு பார்வை.... அழுத்தமான அந்த பார்வைக்கு அவள் கால் தன்னாலேயே நடந்தது...
மறுபேச்சின்றி அவனுடன் கிளம்பியவளை ஒரு புன்னகையுடன் தொடர்ந்தவன் இங்கு வரும் வழியிலேயே கதிரிடம் பேச வைத்து சற்று நிம்மதியாக்கினான்...
"நிஜமாவே தேங்க்ஸ் கார்த்தி...நா கூட செட்டில்மெண்ட்னு சொன்னதும் இவன் கோச்சிங்கு வச்சிருந்த காசுல கைய வைக்கணுமேன்னு பயந்துட்டே இருந்தேன்...இப்ப நிஜமாவே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...மனசார சொல்றேன் வச்சுக்க.."
இமைக்காமல் பார்த்திருந்தான் அவளை... உண்மைக்கு இந்த இடத்தில் கார்த்தி மிக மிக அதிகமாய் சந்தோஷம்தான் பட்டிருக்க வேண்டும்..ஆனால் ஏனோ உள்ளுக்குள் வலித்தது அவனுக்கு... தொண்டைக்குள் எதுவோ சிக்கி கொண்ட உணர்வு...பேச்சற்று பார்த்தது பார்த்தபடி இருந்தான்...
அவன் பார்வைக்கு சற்று தடுமாறியவள்..."ஆமா நான்தான்னு எப்படி கரெக்டா கண்டுபிடிச்ச...நா பார்த்ததும் அப்படியே அடையாளம் தெரியறேனா கார்த்தி..."
"ம்ஹ்ம்....நல்லாவே தெரியுது..." சொன்னவன் பார்வை சரியாய் அவள் உதட்டிற்கு கீழ் இருந்த மச்சத்தில் வந்து நிற்க... அவளுக்கு குப்பென முகம் சிவந்தது... கண்ணுக்குள் ஏதேதோ காட்சிகள் ஓடின இருவருக்கும்...
சரோவோ ஶ்ரீயையே பார்த்தபடி குற்ற உணர்வில் அமர்ந்துவிட்டான்..சரோ இயல்பில் ஶ்ரீக்கு நல்ல தம்பிதான்..குடும்ப கஷ்டம் அறிந்து படிக்கும் இளையவன்தான்... கட்டுசெட்டாய் பள்ளி படிப்பை முடித்தவனுக்கு...கல்லூரியும் அதில் விரிந்து கிடந்த சுதந்திரங்களும் ஏதோ சொர்க்கலோகம் போல் தெரிய....அதை அனுபவிக்கும் ஆசையில்... ஏதோ வயது கோளாறால்..இன்று சூடுபட்ட பூனையாய் மாறிப் போனான்... அதிலும் ஸ்டேஷன் வரும்போது பயந்து போயிருந்த அக்காவின் முகத்தை பார்த்து அப்படி ஒரு வருத்தம் அவனுக்கு... ஆனால் கார்த்தியை பார்த்ததும் அவள் முகத்தில் வந்த நிம்மதி...சிரிப்பு... வெட்கம்.. இதோ இந்த முகச்சிவப்பு என கடந்த இரண்டு மணிநேர நிகழ்வை ஓட்டி பார்த்தபடி இருந்தான்...எங்கோ ஏதோ இடித்தது...
இருவரும் பேச தனிமை குடுத்து சரோ விலக... கவனமாய் கார்த்தியை தவிர்த்து அங்குமிங்கும் பார்வையோடடிய மங்கையை கார்த்தியின் குரல் இழுத்து பிடித்தது.
"ஶ்ரீ..."
அவன் அழைத்தது ஒற்றை எழுத்துதான்..ஆனால் ஏனோ அது தாளாத அன்பை கனமாய் சுமந்து வந்து விழுந்தது போல் இருந்தது பெண்ணிற்கு...
"வேண்டா ஶ்ரீ....இப்டில்லா நீ கரைய கூடாது...பீ ஸ்ட்ராங்க்.... அவன் ஒரு வார்த்தை சொன்னா நீ இரண்டு வார்த்தை சொல்லனும்...நீ யாரு... ஶ்ரீதா...கெத்து கேர்ள்டி...கமான் சொல்லு பார்க்கலாம்...கார்த்தி சொல்லுடா...ம் அப்படித்தான் சொல்லு.."
உள்ளுக்குள் பேசி பார்த்தவள்...நிமிர்ந்து...
"ம்ம்ம்..."
"ச்சீ வெக்கமா இல்ல...அவமானம் அவமானம்...அந்த வண்டுமுருகன் உன்னை என்ன நினைப்பான்...நீ அவன பார்த்து பேசக்கூட பயப்படறேன்னு நினைக்க மாட்டான்..." கேள்வி கேட்ட மனசாட்சியை... "ஆமா நிமிரும் போது இப்படி உசுர உருவர மாதிரி பார்த்தா நா வேற என்ன பேச...நீ போபோ"... என அடக்கினாள்...
"ஏன் ஶ்ரீ இப்படி இருக்க..."
அவன் தெரிந்து கொள்ளதான் கேட்டது... ஏனோ அவளுக்கு அது இனிக்கவில்லை... சுயமரியாதையை சுட்டது போல் உணர நிமிர்ந்து அவனை நேராய் பார்த்தாள்..
"என்ன கார்த்தி...சொல்லு நா எப்படி இருக்கேன்.."
"எப்படி இருக்கியா...அத என்னால சொல்லக்கூட முடியல...ம்ஹ்ம்... என் முன்னாடி கெத்தா ஸ்டைலா பயப்படாம எல்லாரையும் வம்பிழுத்து சண்டை போட்ட அந்த குட்டி ஶ்ரீதா எங்க போனா ஶ்ரீ...இப்ப இப்படி பயந்த முகத்தோட... இருக்கறதுலயே பெரிய கொடுமையா என்னை மரியாதையா வேற கூப்பிடற.. ஏதோ சேவிங்க்ஸ்ங்கற... யோசனைங்கற... நீ இப்படி பேசுற ஆள் இல்லையேடா... என்னாச்சு ஶ்ரீ... சொல்லுடா.. எதுனா கஷ்டமாடா ஶ்ரீ உனக்கு..."
நியாயமாய் அவன் கேள்விக்கு... அதிலும் அப்போது ஶ்ரீ இருந்த மனநிலைக்கு அவன் தோள் இல்லையென்றாலும் குறைந்தது கை சாய்ந்தாவது அழுதிருக்க வேண்டும்.. ஆனால் அப்படி அழுதால் அவள் ஶ்ரீ அல்லவே... வாஞ்சையாய் கேட்ட அவன் கேள்விக்கு சுருட்டி வந்த அழுகையை அடக்கியவள்...
"எனக்கென்ன கார்த்தி...நா ராணி மாதிரி இருக்கேன்... தோ என் தம்பி படிச்சு கலெக்டர் ஆகப்போறான்.. என் தங்கச்சிய ஊட்டி கான்வென்ட்டுல சேர்த்திருக்கேன்...அவ ஏதோ மரைன் படிக்கனும் சொன்னா... அவளயும் படிக்க வச்சிருவேன்னு நம்பிக்கை இருக்கு...தோ நானும் வேலைக்கு போறேன்... ஒன்னில்ல... மூனு ஜாப் பண்றேன்..எல்லாமே பார்ட் டைமா...வர்ற காசுல ஒன்னு தங்கச்சிக்கு..இன்னொன்னு இவனுக்கு..கடைசி செலவுக்கு... எல்லாமே பக்காவா பிளான் பண்ணி வாழ்றேன்... எனக்கென்ன கார்த்தி கஷ்டம்...நம்புடா நா சந்தோஷமாதான் இருக்கேன்..."
அவள் சொல்லி சொல்லாததை புரிந்தவன்...
"அப்ப உனக்கு ஶ்ரீ..."
ஶ்ரீ அவன் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்து அவனையே உற்று பார்த்தாள். சளைக்காமல் அவள் பார்வையை எதிர்கொண்டான் கார்த்திக்...கண்கள் பளபளக்க இதழோரம் வந்த புன்னகையை முயன்று அடக்கியவள்..அவர்களை நெருங்கிய சரோவை அழைத்து பக்கத்தில் வைத்து கொண்டாள்..
எல்லாம் முடிந்து மூவரும் கிளம்ப...சரோவுடன் தலையாட்டி கிளம்பியவள்... அடுத்து ஐந்தாவது நிமிடம் தனியே வந்தாள்...அவள் வருவாள் என தெரிந்தே கார்த்தியும் நகராமல் அங்கேயே இருந்தான்...
வந்தவள் படபடவென பொரிந்தாள்..
"தேங்க்ஸ் கார்த்தி... நீ எனக்குன்னு யோசிச்சு கேட்ட பார்த்தியா...அப்ப.. அந்த செகண்ட் சான்ஸே இல்ல... அப்படியே காத்துல மிதந்து கரைஞ்சு காணாம போன மாதிரி மனசெல்லாம் லேசா ஆயிடுச்சு.... ரொம்ப நாளுக்கப்புறம் எனக்காக யோசிக்கற ஒரு ஜீவன்... அவ்ளோ சந்தோஷமா பீல் பண்றேன்...ஆனா கார்த்திக் நா ஆண்டவன நல்லா வேண்டிக்குவேன்....இனி நீயும் நானும் எப்பவும் பார்க்கவே கூடாதுன்னு நல்லா டீப்பா வேண்டிக்குவேன்... சரியாடா..."
கண்ணீருடன் கேட்டவளை பார்த்து அழகான சிரிப்புடன் சம்மதமென தலையாட்டினான்...
இரண்டெட்டு வைத்தவள்..."ஆமா உனக்கு நா இதுக்கெல்லாம் பீஸ் தரவே இல்லையேடா...சொல்றியா எவ்ளோன்னு..."
சிரித்தான்...
"ஆமா உனக்கு நா பீஸ் தரணுமா..."
கேட்டவளை பார்த்து இன்னும் சிரித்தவன்..
"ம்ம்..தரணும்..."
"தரணுமா...சரி சொல்லு எவ்ளோன்னு..."
கண்களில் ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டவளை பார்த்து கார்த்திக்கு ஏனோ அழுகை வரும்போல் இருந்தது.... முகத்தை திருப்பி சமன் செய்தவன்...
"ஒண்ணுமில்ல...நீ போடா....பார்த்து போ....இனி உன்னை எப்பவும் பார்க்க கூடாதுன்னு நானும் நல்லா வேண்டிக்குவேன்...சரியா.. இப்ப போ..."
சொன்னவனையே திரும்பி திரும்பி பார்த்து போனாள் ஶ்ரீ....
வருவாள்...