• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் -முற்றும்

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
38​

வசந்தம் வீடு மறுபடியும் கல்யாணக்கோலம் பூண்டது. பட்டாசு சத்தமும், பலகாரமுமாக அமளி துமளிபட்டது.

“டேய் சந்தோஷ்....இந்த பலூனை கொஞ்சம் கட்டிவிடடா!” ப்ரீத்தீ வந்து இழுக்க,

“ஏய்...நில்லுடி..” சந்தியா அவளது கையை தட்டிவிட்டபடி,

“இனிமே என் புருஷனை தொட்டுப்பேசுறது..அப்புறம் வாடா போடான்னு கூப்பிடுறது இந்த வாடிக்கை வச்சுகிட்டே தொலைச்சுப்போடுவேன் தொலைச்சு...”
 என்றாள் சந்தியா கண்டிக்கும் குரலில்.

“இதோடா...! உனக்கு புருஷனாக முதலே ஏன் நான் பொறந்ததிலேருந்து அப்படித்தான் கூப்புடுறேன்..”
 ப்ரீத்தியும் விடாமல் சொன்னாள்.

“இனிமே கூப்பிடுறது மட்டும் இல்லை..! அவரை யாரும் தொட்டும் பேசக்கூடாது..”
 பெரியவள் உரிமையுடன் சொல்ல.

“நான் கூடவா...?” அஐய்
அப்பாவியாக கேட்க,

“ஆமாண்டா வாலு..”
 செல்லமாக அவன் முடியை கலைத்துவிட்டாள் சந்தியா.

“ஏன்?” அபிஷேக் முறைத்தபடி கேட்க,

“ம்....அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம்....” அவள் சிறுகுழந்தைகளுடன் வாயாட, சந்தோஷ் சிரித்தவண்ணம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

“அப்ப சந்தோஷ் எங்களை தொட்டுப்பேசினா...” ப்ரீத்தீ இழுத்தாள்.

“பேசிடுவாரா...? பேசிடுவாராங்கிறேன்..” அவள் திரும்பி கணவனை பார்வையாலே கேட்க, அவன் வேகமாக இல்லை என தலையாட்டினான்.

“அய்யோ பொண்டாட்டி தாசனாயிட்டாண்டா போ....” ரங்க நாயகி விசிலடித்தார்.. சந்தோஷ் வாய்விட்டு சிரித்தபடி,

“பாட்டி இப்போ முன்னால தலையாட்டி வைச்சுட்டு அப்புறமா...மாறிடவேண்டியதுதான்...” அவன் கண்ணடிக்க, சந்தியா முறைத்தபடி பாட்டியின் ஸ்டிக்கை பறித்து அவனை துரத்த, அவன் நாலுபடிக்கு ஒரே தாவாக தாவி அறைக்குள் வந்து ஒளிந்து கொண்டான். தேடிக்கொண்டு வந்த சந்தியா உள்ளே நுழைய கதவை சாத்தி அவளை பின்னால் இருந்து அணைத்தான்.

“அய்யோ என்னங்க இது? இதுக்கா அந்த ஓட்டம் ஓடிவந்தீங்க..” சிணுங்கியபடி அவனது மூக்கை திருகினாள்.

“ம்ஹூம்...உங்கிட்டே ஒண்ணு கேட்கணும்...”
 என்றான் அவன் கன்னத்தில் விளையாடியபடி,

“ஒண்ணு என்னங்க ஓராயிரம் கேளுங்க தருகிறேன்...”
 காதலுடன் அவனை பார்த்தாள்.

“ஆமா எதுக்கு நீ டைவோர்ஸ் நாள் வரைக்கும் காத்திட்டிருந்தே...?” அவள் புரியாமல் பார்த்தாள்.

“அதுதான் உன் மனசை திறந்து காட்ட எதுக்குடி பதினைந்தாம் தேதி வரையும் காத்திருந்தே..?”

“அ...அப்படீன்னா...உங்களுக்கு..” வியப்பாக கணவனை ஏறிட்டாள்.

“ம்..தெரியும்....என்ன நீ சந்தோஷ் எதுக்கு உங்களை நீங்களே அழிச்சுக்கிறீங்கன்னு கேட்டாயே ஞாபகம் இருக்கா?

“ம்....ம்....”
 தயங்கியபடி அவள் தலையாட்ட,

“அன்னிக்கு தெரிஞ்சுகிட்டேன் உன் மனசின் ஓரத்தில் நான் இருக்கேன்னு...அதை எப்படியும் வெளியில கொண்டு வரணும்னு முயற்சியில் இறங்க ஆனா அதனால பல உண்மைகள் வெளிவந்துவிட்டது.”
 பெருமூச்சு விட்டபடி அவளை பார்த்தான்.

“ப்ளீஸ்....நிச்சயமாக நான் அதுக்காக உங்களை வெறுக்கலை... புரிஞ்சுக்கோங்க” அவள் கெஞ்சலுடன் கணவனை பார்த்தாள். மனைவியின் கண்களில் அதை படித்தவனாக கை அமர்த்தினான்.

“எனக்கு முதல்லே நீ புடிக்கலைன்னு சொன்னதும் இதுதான் காரணமாக இருக்கும்னு நினைச்சேன்...ஆனா பீசா கார்னரில ஹரியோடு உன்னை பார்த்ததும் எனக்கு புரிஞ்சு போச்சு..”

“எ...ன்ன..?” அவள் திகைக்க,

“ம்...ஒண்ணும் ஒண்ணும் எத்தனைன்னு....சும்மா என் பிறப்பைக்காட்டி நீ புடிக்கலைன்னு சொன்னாலும்..நான் உன்கூட பேசி பழகியாவது என் குணத்தை உனக்கு புரிய வைச்சு, என்பால் ஈர்த்துடுவேன்னு நினைச்சு இருந்தேன். ஆனா நீ ஹரி கூட காதல் என்ற ஒரு காரணத்தையும் சேர்த்துத்தான் என்னை வெறுக்குறாய் என்றதும் எனக்கு...” அவன் மேலே பேச முடியாமல் அவளை பார்த்தான். கணவனின் ஏங்கிய விழிகளை பார்த்தவள். ஸாரி என்று அவன் மார்பில் சாய்ந்தாள்.

அவனே மீண்டும் தொடர்ந்தான்.
“நான் காதல் செய்தவள். எனக்கு மனைவியாக வந்ததை எண்ணி சந்தோஷத்தில் திளைத்திருந்தேன். ஆனா அவ இன்னொருத்தனை காதலிச்சுட்டு அவனை கல்யாணம் பண்ணிக்க தடையா இருக்க.. என்னை பகடைக்காயாக உபயோகப்படுத்துறாள்னு தெரிஞ்சதும் எனக்கு உன்மேலே வந்த கோபம் இருக்கே...ம்...ஒருத்தரின் சுயநலத்துக்காக இன்னொருத்தரின் மனசை சாகடிச்சுட்டு....மனச்சாட்சியே இல்லாமல்....”
 வேதனையுடன் அவன் தொடர விழிகளில் கவலையுடன் அவனையே பார்த்தாள்.

“ஆனா..என்ன பயன்? ஓகே நான் நினைச்சது நடக்கலை..நீ நினைச்ச வாழ்வாவது உனக்கு கிடைக்கட்டுமே என்று நான் புள்ளி போட..ஆனா அதுவே ஒரு அழகான கோலமாக எனக்கே கிடைக்கும்னு புரிஞ்சு போக, பொறுமையாக காத்திட்டிருந்தோன். நீ உன் மனசை சொல்வாய் என்று..அதுக்காக நான் வாங்கிய அடிகள் எத்தனை? அப்ப கூட உனக்கு பாசம் வரலையா? கொஞ்சமாவது இரக்கம்?.”

“வ....வந்திச்சு...ஆ..ஆனா..எப்படி? எவ்வளவு தூரம் துணிவு இருந்தா உங்க முக்தை பார்த்து என் வெறுப்பின் மொத்த உருவம் இது என்று சொல்லியிருப்பேன் ? அதன் பின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எந்த மனசால உங்களை...நா... ?’ அவள் திணறல் விம்மலானது..”

“ஏய்..என்ன இது பழக்கம்? எதுக்கெடுத்தலும் புசுக் புசுக் என்று அழுறது பொண்ணுங்ககிட்டே உள்ள வியாதியா? கலங்காமல் தைரியமா பேசத்தெரிந்த பொண்ணுன்னு நினைச்சேன்...’ என்றான் அவளை இறுக அணைத்தபடி.

“நானும் ஒண்ணு கேட்கணும்...”
 அவன் நெஞ்சில் கோலம் போட்டபடி முணுமுணுத்தாள்.

“இரு....நான் முடிச்சுடுறேன்...அப்புறம் நீ தொடங்கு..” என்றபடி தொடர்ந்தான்.

”அன்னிக்கு ஒரு நாள் நான் பேசிக்கொண்டிருக்க தீடிரென்று எதுக்கு வெளியே ஓடினே...? அப்படி மழையில நனைஞ்சது எதுக்கு?” அவன் புரியாமல் வினவ,

“அ...அது நீங்க பேசிய ஒவ்வொன்றும் என்னைக்குத்தியது. உனக்கு பொருத்தமானவனை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என்று வாழ்த்து சொன்னிங்க , அதுக்கு மேலே என்னால தாளமுடியலை என்மேலேயே எனக்கு வெறுப்பாக இருந்திச்சு..கோபம் கோபமாக வந்திச்சு...அதான் மழையில நனைஞ்சேன்..”

“ம்..மழையில நனைஞ்சு குளிர்விச்சுங்களாக்கும்...” அவன் கோபமாக கேட்க,

“ம்...ம்...அப்புறம் என்னை தூக்கிட்டுவந்து துவட்டுன்னு அதட்டினீங்க..”

“ம்..நான் சொல்ல சொல்ல நீ பேசாம நின்னே...” அவன் ஞாபகப்படுத்த,

“ம்..அதுக்கு இல்லே...உங்க முரட்டுத்தனத்தையும் கோபத்தையும் ரசிச்சுகிட்டிருந்தேன்...” அவள் சிரிக்க அவன் காதலுடன் பார்த்தபடி,

‘‘ம்..ம்..அததான் தெரியுமே..என் படத்தை தலகாணிக்கு அடியில வச்சுக்கொண்டு நிதமும் அதுக்கு முத்தம் கொடுத்த அழகை..”

“அய்யோ பாத்திட்டீங்களா...?” வெட்கம் படர முகத்தை மூட அவன் தடுத்தவனாக,

‘பேசு’ என்றான்.

“ஆமா....நிஜமாகவே உங்களுக்கு கோபம் வந்திச்சா?’ அவனது கன்னத்தில கோலம் போட்டபடி கேட்டாள்.

“லேசில வராது! ஆனா நீ என்னை படுத்தின பாட்டுக்கு வந்திச்சு...உன் மனசிலேயும் காதலை வச்சுக்கொண்டு என்கூட சரிக்கு சரி வாயாடிகிட்டு...எனக்கு வந்த ஆத்திரத்துக்கு...”
 அவன் போலி கோபத்தோடு பார்க்க,

“என்ன? என்னை அறைஞ்சா என்னெண்ணு இருந்திச்சா?”
 சந்தியா புன்முறுவலளித்தாள்.

“ம்ஹூம்..அப்படியே இழுத்து ரேப் பண்ணினா என்னெண்ணு இருந்திச்சு..”
 சந்தோஷ் காதலுடன் பார்த்து கண்ணடிக்க,

“ச்சீ...”
 என அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

“என்ன சசீ..? பொம்பளைங்க மனசில என்ன இருக்குன்னு கண்டு பிடிக்குறதுக்குள்ளே ஆம்பிளைங்க தலைமுடி அத்தனையும் கொட்டுண்டுடும்.” அவன் சீரியசாக சொல்ல சிரித்தாள்.

“போவாளாம்..வருவாளாம்....என் கூட வாயாடிகிட்டு...ச்சே வதைச்சுகிட்டிருந்தேடி.”. அவன் அணைப்பை இறுக்க,

“அய்யோ இவ்வளவு இறுக்கமாகவா...? மூச்சு முட்டுதடா...”
 அவன் காதில் சிணுங்கலுடன் முணுமுணுக்க,

‘‘ம்....ம்..” பிடியை தளர்த்தினான்.

“இப்ப உன் முறை நீ கேளு..”

“ம்..ஆமா அன்னிக்கு நிஜமாகவே குடிச்சிருந்தீங்களா?”
 கவலையுடன் பார்த்தவளை,

“ம்..ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவே....?”
 என சீண்டலாகக் கேட்டான்.

“ம்..இனி அதை தொட்டுக்கூட பார்க்க கூடாதுன்னு ஆர்டர் போடுவேன்.” அவள் மிரட்ட,

“அதுக்குத்தான் நீ இருக்கியே..” அவன் கண்சிமிட்ட,

“சீ...போங்க...”
 சந்தியா அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.

“இல்லைமா..! குடிக்கணும்னுதான் போனேன். ஆனா மாமாவின் முகம் வந்து பயமுறுத்திச்சு! குடிக்கலை..! அப்படியே என்மேலே தெளிச்சகிட்டேன்....நான் குடிச்சிருந்தா.. எல்லாம் இந்த சிறுக்கியாலதான் வந்ததுன்னு உன்னை போட்டுக் கொடுத்திருப்பேன்...“ அவள் நுனி மூக்கை பிடித்து ஆட்டினான்.

“ம்...ம்...அப்புறம் எப்படி கண்ணெல்லாம் சிவந்து போய்?“ அவள் சிறுகுழந்தை போல கேட்க,

“மூணு நாள் சரியாத் தூங்கலை! சாப்பிடலை! சிவக்காதாக்கும்....பெரிய புத்திசாலி கண்டு பிடிச்சுட்டா...“ அவள் காதில் தொங்கிய ஜிமிக்கியை சுண்டி விளையாடியபடி புன்னகைத்தான்.

“ஆமா...நீங்க ஒரு வாட்டி கூட குடிச்சது இல்லையா...?” அவனை ஒர கண்ணால் ஒரு பார்வை பார்த்தபடி கேட்க அவன் உதட்டில் வந்த சிரிப்புடன்,

“ம்..ஒரு வாட்டி...யுனிவர்சிடியில சேரும் போது ராகிங் பண்ணாங்க அவங்க இந்தா இதைக் குடின்னாங்க...நானும் ஏதோ ஜூஸ் தானேன்னு வாங்கி குடிச்சேன்....”

“அய்யய்யோ அப்புறம்..?” அவள் பதட்டமாக வினவ,

“அப்புறம் என்ன? அவங்க பிராண்டி, விஸ்கி, பீர், அது இது என்று ஒரு பட்டியலே அத்தனையும் ஒண்ணாக கலந்து கொடுத்தாங்கன்னு புரிஞ்சுது...அவங்க மேலேயே வாந்தி எடுத்து பரிசாக கொடுத்திட்டேன். இது எல்லாம் யுனிவர்சிட்டிக்கு தடை செய்யப்பட்டதுன்னு தெரிஞ்சும் கொண்டு வந்து ராகிங் செய்தவங்களுக்கு பணிஷ்மெண்டாக அபராதமும் கட்டவச்சு ஒரு வாரம் சஸ்பெண்ட் கொடுத்தாங்க.. நாந்தான் வேணும்னா அபராதம் கட்டிட்டு போகட்டும் சஸ்பெண்ட் எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..“

“எதுக்கு..? எதுக்கு? செமத்தியா நாலு உதைவிட்டிருக்காலமே..” அவள் கோபமாக,

“இதெல்லாம் மேல நாட்டவர்களுக்கு சகஜம்....”
 சாதாரணமாக சொன்னவனை,

“ம்..அங்கேயே படிச்சுட்டு நல்லா புள்ளையாக எப்படி திரும்பி வந்தீங்களோ?” அவள் ஆச்சர்யமாக பார்த்தாள்.

“இது என்ன கேள்வி? நல்ல அம்மா, அப்பா நற்குடும்பத்திலே பிறந்தேன் அதனால...” அவன் சட்டென்று வாயை மூடினான்.

“என்னங்க?” அவனது இறுகிப்போன முகத்தை பார்த்து பதறினாள்.

“ம்ஹூம்..முடியலை சந்தியா....! ஏந்தான் இந்த உண்மை தெரிஞ்சுதோன்னு இருக்கு....! சந்தோசமாக சிரிச்சு மகிழ்ந்தாலும் கடைசியில மனசு அங்கேயே தான் வருது..” அவன் எங்கோ பாhத்தபடி சொல்ல,

“சந்தோஷ்....இது எல்லாம் என்னாலதான்....என்னாலதானே..நான் மட்டும் சும்மா இருந்திருந்தா இது கடைசிவரைக்கும் தெரிஞ்சிருக்காதே.. ப்ளீஸ்....என்னை மன்னிச்சுடுங்க...” அவனை கட்டிக்கொண்டு அவள் அழத்தொடங்க,

“ஏய்...என்ன இது...எதுக்கு இந்த அழுகையாம்..?“

“...........“

“நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும்? இந்தக்குடும்பத்தில் வந்து சேர... இது போதும்டி...! இனி மறந்து கூட நான் நினைச்சுப்பார்க்க மாட்டேன்... போதுமா? அதைவிட்டு நீ உன்னாலதான்னு கவலைப்படாதே...“ நிமிர்ந்து பார்த்த மனைவியின் நீரை சுண்டிவிட்ட கணவனை அன்பு பொங்க பார்த்தாள்.

“என்ன இப்பவும் ஒண்ணுமில்லையா?“ காதருகில் கொஞ்சலுடன் கேட்டவனை பார்த்து,

“இருக்கு....!’’
என கண்கள் பளபளக்க தலையாட்டி புன்னகைத்தாள்.

“என்ன?“ என்று மேலும் தன்னருகே நெருக்கமாக இழுக்க,

“எனக்கு உங்க மேலே உள்ள காதலை சொல்ல வார்த்தைகளே இல்லை’’ எட்டி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

“என்னைத்தாக்கிய புயலே வா..“ அவன் விசிலடிக்க சந்தியா வாய்விட்டு சிரித்தாள். இனி அவர்கள் வாழ்வெல்லாம் இன்பம் இன்பமே!

முற்றும் ***********எங்கே அவளது மனம் என்று கண்டு கொண்டாள்**********.முற்றும்
 
  • Like
  • Love
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
எம்புட்டு கஷ்ட பட்டான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒத்தை எபியில் இப்படி முடிசிட்டீக...

Nice story ❤️

அடுத்து என்ன நடக்கும் .. இவ என்ன பேசுவா? பிளான் ல எதை செயல்படுத்துவா அப்படினு ஒரு டென்ஷன் ல ஏ இருந்தேன்... என்னனு தெரியாம மூடி வைக்கவும் முடியலை... ஒரே மூச்சா படிச்சு முடிச்சிட்டேன்.... எழுதி வருடங்கள் கடந்து இருந்தாலும ரசிக்கும்படி இருக்கு..

சந்து ❤️ அருமையான கேரக்டர் ரொம்ப பிடிச்சது.....