• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 என் அன்பு நெஞ்சங்களே இது என்னுடைய முதல் கதை .இந்த கதை மூலமா என்னுடைய எழுத்து திறமையை உங்களிடம் நான் காட்ட விரும்புகிறேன் .இதில் சிறு தவறுகளோ இல்லை யாரேனும் மனது புண்படும்படியான வார்த்தைகளோ இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். இதற்கு உங்களுடைய ஆதரவினையும் அளித்து வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி!!!!

வாங்க நம்மளுடைய கதைக்குள்ள போகலாம்.


முன்னுரை,

ஒரு பாசமான ஒரு குடும்பத்துல வளர்ந்த ஒரு பையன் எதிர்பாராத நேரத்துல மொத்த குடும்பமும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துடறாங்க , அதுக்கப்புறம் அவனோட வாழ்க்கையில் பல இன்னல்கள் அனுபவிக்கிறான். அந்த இன்னல்களில் இருந்து போராடி எப்படி வாழ்க்கையில ஜெயிக்கிறான் என்பது தான இந்த கதையோட கருத்து.

இதுல வேற மனசு ரொம்ப வேதனையில் இருக்கும்போது அவன் எதிர்பாராமல் ஒரு தேவதை சந்திக்கிறான் . அந்த தேவதை அவனுக்கு
வரமா வருகிறார்களாம் ! இல்லை
சாபமா வருகிறார்களா! தான் இந்த கதை.





அத்தியாயம் .1


ஒரு அழகான காலை பொழுது பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இறை தேடி சென்று கொண்டிருந்தது. பசுமை நாயக்கன்பட்டி
( கற்பனையூர்)உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று பெயரடங்கிய பலகையைத் தாண்டி பச்சை புல் வேலி நடுவே ஒரு தார் சாலை அதில் மிக மெதுவாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.


அதில் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரையும் காட்டிலும் சந்தோஷமானவான் நான் மட்டும் தான் என்னும் நிலையில் தான் அப்பா அம்மாவுடன் தான் அப்பாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் நாம் கதையின் நாயகன் அர்ஜுன் கார்த்திக் கிருஷ்ணா.


அவன் தந்தை கிருஷ்ணன், தாய் ஜானகி.
இருவரும் பல போராட்டங்கள் நடுவே காதல் திருமணம் செய்தவர்கள் .

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இருவரின் பெற்றோர்களும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை .

பின் கார்த்திக் பிறந்த பிறகு தான் கிருஷ்ணனின் தந்தையும் தாயும் இவர்களை ஏற்றுக் கொண்டார்கள்.


ஏனெனில் கிருஷ்ணர் அந்த வீட்டிற்கு ஒரே மகன் அவர்கள் விவசாய குடும்பம் நிறைய தோட்டம் தொறவு அதிகமாக இருந்தது அந்த காலத்திலேயே கிருஷ்ணன் மட்டும் தான் அந்த ஊரில் வெளியூருக்கு சென்று தன் உயர்கல்வியை முடித்தவர்.


(அங்கு படிக்க சென்ற இடத்தில் தான் ஜானகியை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.)


அதன் பின் வரும் விடுமுறை நாட்களில் கிருஷ்ணனும் ஜானகியும் கார்த்திக் உடன் ஊருக்கு வந்து விடுவார்கள்.

ஏனெனில் கிருஷ்ணனின் தொழில்கள் அனைத்தும் சென்னையில் இருந்தது இவருடைய நண்பரும் இணைந்து தொழில்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் . இவர்கள் ஊருக்கு செல்லும் நாட்களில் மட்டும் அவர் பார்த்துக் கொள்வார்.


கிருஷ்ணனின் தந்தை இவர்களை ஏற்றுக் கொண்ட பிறகு வரும் பள்ளி விடுமுறை நாட்களில் வருடம் வருடம் தன்னுடைய தாத்தா பாட்டியை காண்பதற்காக பசுமை நாயக்கன்பட்டி வந்துவிடுவான் கார்த்திக்.


கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்கல்விக்காக வெளிநாடு சென்றமையால் கார்த்திக்கால் தன் தாத்தா பாட்டியை காண இயலவில்லை .

இன்று தன்னுடைய படிப்பு, வேலை அனைத்தையும் முடித்துவிட்டு அவர்களை காண்பதற்காக பசுமை நாயக்கன்பட்டிக்கு வந்திருக்கான்.

கார்த்திக் 27 வயது ஆண் மகன் 6 அடி உயரத்தில் ஆண்களே பொறமை படும் அளவிற்கு அழகே உருவாய் இருக்கிறான் .அவன் படிப்பு முழுவதும் வெளிநாட்டு கல்வி ஆனாலும் நம்முடைய பாரம்பரியமான மரபுகளை கற்றுத் தெரிந்தவன் .




அந்த கார் அந்த மிகப்பெரிய கேட் முன்பு வந்து சத்தம் கொடுத்தவாறு நின்றது.


தோட்டத்திற்கு தண்ணி ஊற்றி கொண்டிருந்த ராமு அண்ணா கேட்டின் வெளியே காரின் சத்தம் கேட்ட பொழுது வேகமாக ஓடி சென்று கேட்டை திறந்து விட்டார் .


காரில் இருந்து இறங்கிய கிருஷ்ணனும் ,ஜானகியும் ராமு அண்ணாவை நோக்கி சின்ன சிநேக புன்னகையை சிந்தியவாறு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.


அதற்கு அவரும் சிரித்து விட்டு பெரிய ஐயா நீங்க எப்படி இருக்கீங்க, ஏன் இத்தனை நாளா இங்க வரவே இல்ல, உங்கள பாத்து எத்தனை நாள் ஆயிற்று,இந்த தடவையும் சின்னையா வரலையா என்று படபடபடவென்று பேசிக்கொண்டே சென்றார்.

அப்பொழுது சரியாக காரின் பின்புறம் இருந்து சிரித்த முகமாக இறங்கினான் கார்த்திக். .

அவனை பார்த்து புன்னகைத்த ராமு சின்னைய்யா சொல்லவருவதுற்குள் எப்படி இருக்கிருகள் ராமு மாமா என்று கேட்டிருந்தான்.

மிகவும் சந்தோசமாக நல்லா இருக்கிறன் என்று கூறினார்கள் . ஏனெனில் இந்த வீட்டைப் பொறுத்த அளவு வேலைக்காரர்களையும் சமமாகவே மதிப்பதால் இவர்களின் மீது அதீத அன்பு கொண்டு உள்ளார் ராமுவும் அவரது மனைவியும்.


நீங்கள் அப்படியே பெரிஐயாவை போல்தான் என்று கூறியவாறு இவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார் ராமு .


அவர் பின்னே கிருஷ்ணனும் ஜானகியும் உள்ளே நுழைந்தார்கள். அதற்குள் வேகமாக சென்ற கார்த்திக் தன் தாத்தா பாட்டியை அழைத்தவாறு ஹாலில் நின்று கொண்டிருந்தான்தான் .


யாரோ தங்களை அழைப்பது போல் தோன்றவும் இருவரும் வெளியே வந்து பார்த்த பொழுது ஹாலின் நடுவே தங்களது பேரனை கண்டவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் . தங்களது முதுமையையும் நினைக்காதவாரு ஓடி வந்து தங்களுடைய பேரனை கட்டிக் கொண்டனர்.


ஐயோ கார்த்தி எப்படி இருக்க எத்தனை நாளாச்சு உன்னை பார்த்து இந்த தாத்தாவையும் பாட்டியும் பாக்கணும் கூட உனக்கு என்னமே இல்லையா ,அந்த அளவுக்கு நாங்க உனக்கு பிடிக்காமல் போயிட்டோமில்ல என்று கண்கள் கலங்க பாட்டி பேசிக்கொண்டே இருந்தார்.

உனக்கு இந்த வயசானவங்கள பார்ப்பதற்கு பிடிக்கலையா ,அதனால தான் எங்களை பார்க்க நீ வரலையா என்று கண்கள் கலங்க தங்களது பேரனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பாட்டி மகாலட்சுமி.

அதற்குள் அவனுடைய தாத்தா பசுபதியோ இத்தனை நாள் உனக்கு இந்த தாத்தா பாக்கணும்னு கூட தோணலில்லா என்கூட பேசாத போ என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார் .

கார்த்தி அவரின் சிறு பிள்ளை தானத்தை கண்டு தனக்குள் சிரித்து அவரின் கன்னத்தில் முத்தம் வைத்து என் செல்ல குட்டிக்கு என் மேல என்ன கோபம் என் புஜ்ஜு குட்டி என்று தன் தாத்தாவை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அங்கு வந்த கிருஷ்ணன் மற்றும் ஜானகிடம் நலம் விசாரித்துவிட்டு பின் அவர்களை அவர்களுடைய அறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.



தொடரும்....
images.jpeg
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் .2

ஒரு மணி நேரம் கழித்து மடில இருந்து கீழ் இறங்கினான் கார்த்திக் அவனை பார்த்த தாத்தா பாட்டி உணவுன்னு அழைத்தார்கள் .

அங்கு சென்று பார்த்த கார்த்திக் அவனுக்கு பிட்டித்த உணவுகள் இருந்ததை கண்டு மிகவும் சந்தோஷமாக தனது பாட்டியை அணைத்து முத்தம் கொடுத்து நன்றி சொன்னான் .

அதை பார்த்த அவனின் தாத்தா எவன் டா என் பொண்டாட்டிக்கு பொசுக்கு பொசுக்கு முத்தம் கொடுத்தது என்று முகத்தை திருப்பி கொண்டார்கள் பசுபதி தாத்தா.அவரின் சிறுபிள்ளை தனத்தை எண்ணி சிரித்த கார்த்திக்
பாட்டி தாத்தா உடைய சிறு சிறு சண்டைகளையும் ரசித்தவாறு
உணவு உண்டு மகிழ்ந்தான்.

கார்த்திக் பின் தான் தாய் தந்தை பாட்டி தாத்தாவுடன் சிறிது நேரம் செலவிட்டு உறங்கு சென்றனர்.

மறுநாள் காலை பறவைகளின் கீச் கீச் சத்தத்திற்கு நடுவில் பூக்களின் நறுமணத்தை நுகர்ந்தவாறு தன் வீட்டின் மாடி பால் கனியின் நின்று வேடிக்கை பார்த்தான் கார்த்திக்.

கார்த்திக் மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது எழுந்து தான் காலை உடற்பயிர்ச்சை முடித்துக்கொண்டு மாட்டியிலிருந்த இறங்கினான் கார்த்திக்.

அவனை பார்த்த பெரியவர்களை சின்ன சிரிப்புடன் தாத்தா பாட்டி நடுவில் அமர்ந்தான்.

அவனை பார்த்த புன்னகைத்த பெரியவர்கள் ராமுவின் மனைவி ராஜி இடம் காபி எடுத்த வர சொன்னார்கள் .

ராமு அந்த வீட்டின் வேலி வேலையும் ராஜி வீட்டின் உள் வேலையும் மற்றும் பெரியவர்கள் தேவைகளை பார்த்து கொண்டார்கள் .

சிறிது நேரத்தில் ராஜி வந்து காபி கொடுத்து சென்ற பின் தான் தாத்தாவுடன் பேசி கொண்டிருந்தான் கார்த்தி. சிறிது நேரத்தில் அவனின் தாய் தந்தை இணைத்து கொண்டார்கள் .

அன்று நாளில் பெரியவர்கள் உடன் காலம் செலவழித்து தோட்டத்தை சுத்தி பார்த்து நேரம் செலவழித்தார்கள்.

மறுநாள் அவர்களின் குலா தெய்வ கோவில் கார்த்திக் வந்த காரணத்தினால் பூஜைகள் ஏற்பட்டு செய்ப்பட்டது அதனால் அன்று இரவு உணவை முடித்து கொண்டு நேரமாக தூங்க சென்றனர் அனைவரும் .


மறுநாள் விடியலி கார்த்திக் அவன் குடும்பத்தாருடன் கோயிலிற்கு சென்றனர் .

அங்கு எதோ விசேஷேஷ தினத்தால் கோவிலில் கூட்டம் நிரம்பியது.கார்த்திக் குடும்பத்தார் அந்த கோவிலின் நிர்வாகத்தினர் வந்து அழைத்து சென்றார்கள்.

அங்கு கோவில் கருவறையில் அழகாக காட்சியளித்தார் அம்மையப்பன் இருவரும் மனதார கடவுளை தொழுத்து சிறிது நேரம் கோவிலின் வெளியே வேடிக்கை பார்த்தான் கார்த்த்திக் .

அப்பொழுது அம்மையப்பன் பவனி உலா சென்று வந்து கொண்டிருந்தது அதை பார்த்த வுட்டன் கார்த்திக் தான் போனில் சேமிக்க என்னும் பொழுது
போனை உயிர்ப்பித்து சேமித்து கொண்டிருந்தான்.

கூட்டம் அதிகமாக வந்தமையால் கூட்டத்தை தவிர்க்க எண்ணிசிறிது தள்ளி நிற்க நகர்ந்த பொழுது
எதிர்பாராத விதமாக சாமியின் கழுத்தில் இருந்த மாலை கார்த்திக் அவன் முன்னின்ற பெண் கழுத்திலும் சேர்ந்து விழுந்தது .

கார்த்தி மிகவும் அதிர்ச்சியாகி யார்
அந்தபெண் என்று பார்ப்பதற்குள் அந்தக் கூட்டம் அவனை நகர்த்தி சென்றது.

வீட்டிற்கு வந்த பொழுதும் கார்த்திக்கின் தாத்தா பாட்டி உடைய சின்ன சின்ன செல்ல சண்டைகளையும் அவர்களின் தாய் தந்தை தந்தையுடைய காதல் பாஷைகளையும் பார்த்து தனக்கும் இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்த கார்த்திக்.

நேரமாக அவன் மனதில் அன்று கோவிலில் சந்தித்த அந்த முகம்ம் அறியாத பெண்ணின் நிழல் வந்து சென்றது அவளின் மேல் வந்த மஞ்சள் வாசனையும் ஞாபகம் வந்து சென்றது நினைக்கும் பொழுது அவனை அறியாமல் ஒரு வெட்கம் முகத்தில் வந்து போனது.

மறுநாள் அவனுடைய வாழ்க்கையில் எதிர்பாராத கோர சம்பவம் நடக்கப் போவதை அறியாமல் மிகவும் மகிழ்ச்சியாக தன் குடும்பத்தாருடன் நேரங்களை செலவிட்டு கொண்டிருந்தான் கார்த்திக்.

மறுநாள்அழகான விடியலில் அந்தக் காலைப் பொழுதில் கார்த்திக் அவன் குடும்பத்தாருடன் ஊரின் அடுத்த உள்ள அருவிக் கரைக்கு பிக்னிக் சென்று வருவதற்காக கிளம்பி கொண்டு இருந்தான் அங்கு கொண்டு சில சிற்றுண்டிகளையும் உணவுப் பொருள்களையும் தண்ணீர் பாட்டில்களையும் காரின் உள்ளில் வைத்துக் கொண்டு தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டிருந்தான்

அப்பொழுது எதிர்பாராத விதமாக கார்த்திக்கின் கால் தட்டி கீழே விழப்போகும் பொழுது அவன் தந்தை அவனைத் தாங்கிக் கொண்டார்.

வேகமாக குடும்பத்தார் அனைவரும் ஓடி வந்து கார்த்திகை நலம் விசாரித்துவிட்டு அவனுக்கு ஒன்றும் இல்லை என்ற பொழுது தான் சற்று கிளம்பி சென்றனர் பாவம் அவர்கள் அறியவில்லை அவனுக்கு காலில் சிறிது அடிபட்டு அதற்கு துடிக்கின்றோமே நாம் மொத்த குடும்பமும் இழந்து திரும்பி வரும் பொழுது சமாதானம் செய்வதற்கு ஒருத்தரும் இல்லாமல் போகும் நிலைமை வரும் என்று அவன் என்ன செய்வான் என்று அவர்கள் அறியவில்லை.

அந்த அருவிக் கரையின் தண்ணீரில் தன் தாய் தந்தையுடன் கார்த்திக் மிகவும் சந்தோஷமாக விளையாடு கொண்டிருந்தார் அதன் அருகில் உள்ள மர நிழலில் தாத்தா பாட்டி
இருவரும் தங்கள் கடந்த காலங்களை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் நேரமானதை உணர்ந்து உணவுகளை எடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கு உண்டு வீட்டுக்கு கிளம்பி வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சரக்கு லாரி அவர்களின் வாகனத்தை இடித்து தள்ளியது இதை

எதிர்பார்க்காத கார்த்திக் குடும்பம் உருண்டு விழுந்தனர் உருண்டு விழுந்த வேகத்தில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டால்

அவன் முழுவதும் மயக்கத்திற்கு செல்லும் பொழுது தூரத்தில் அவனுடைய பெற்றோர்கள் எரிந்து சாம்பல் ஆகியது அதைப் பார்த்து மனம் நொந்து மயக்கத்திற்கு சென்றான்



தொடரும்....
 
  • Like
Reactions: Sampavi

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
70
26
18
Coimbatore
நைஸ் ஸ்டார்டிங்க் ப்பா.
புது எழுத்தாருக்கு வாழ்த்துக்கள்
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் .3

நீண்ட மாதங்களுக்குப் பிறகு மயக்கத்திற்கு இருந்து கண்களை விழித்தான் கார்த்தி ஆனால் அவனால் அவனை சுற்றி உள்ள யாரையும் பார்க்க முடியவில்லை ஏனெனில் கார்த்திக்கு அன்று நடந்த விபத்தில் அவனுடைய கண் பார்வை இழந்தான் மேலும் அவன் முகத்தில்
கூறிய கற்கள் கிழித்ததால் ஒரு பகுதி சிதைந்தது இதை அறியாத கார்த்தி சுற்றியுள்ள யாரையும் பார்க்க முடியவில்லை என்று கதறி அழுதான்.


அவனின் கதறலை கேட்ட ராமு மாமாவும் ராஜி அக்காவும் தங்களால் முடிந்த அளவு தேற்றப் பார்த்தார்கள் ஆனால் அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை பின்பு மருத்துவரை அழைத்து அவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

மூன்று மணி நேரம் கழித்து கண்களை விழித்தான்கார்த்தி நடந்த நிகழ்வாள்தான் தனக்கு இப்படி நேர்ந்துள்ளது என்று அறிந்து மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர் வடித்தான்.


பின்பு ஏதோ ஞாபகம் வந்தவனாக அவனுடைய குடும்பத்தாரை பற்றி ராமு மாமா விடவும் கேட்டான் ஆனால் அவர்களால் இவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று அறிய முடியவில்லை .

அவன் கண் விழித்த போது அவனுக்கு கண் பார்வை இல்லை என்றவுடன் அவன் கதறிய கதறலை பார்த்து மிகவும் வேதனை அடைந்த ராமு மாமா இவனிடம் என்ன சொல்வதென்று அறியாமல் கண்களில் கண்ணீர் வடித்த பின்பு ஒருவாராக தேற்றிக்கொண்டு நடந்த நிகழ்வுகளை அவனிடம் கூறினார.
அதைக் கேட்டவுடன் இந்தபூமியே அவன் காலடியில் நழுவுவது போல் தோன்றியது அவனால் ஜீரணிக்க முடியவில்லை அடுத்தடுத்து நடந்த நிகழ்வை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறினான்.

அதில் அவனுடைய மொத்த குடும்பமும் இழந்து விட்டோம் என்பதை அறிந்த கார்த்தியால் மேலும் மேலும் அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கமடைந்தான் .

பின்பு மருத்துவர் வந்து முறையாக பரிசோதனை செய்த விட்டு இப்பொழுது அவனுக்கு மன அமைதி தேவை என்று சொல்லிவிட்டு சென்றார்

இரண்டு நாட்கள் இப்படியே சென்றது மூன்றாவது நாள் மருத்துவர் அனுமதி உடன் கார்த்திக் வீடுதிரும்பினான் . எப்பொழுதும் வேகவேகமாக நடக்கும் கார்த்தியால் இன்று ஒருவரின் உதவியோடு நடக்க வேண்டும் என்று எண்ணி மனதளவில் துடித்துப் போனான்

வீட்டினுள் நுழைந்த கார்த்திக் இன் மனதில் அன்று அவர்கள் கிளம்பு போது அவன் காலில் அடிபட்டவுடன் அவன் மொத்த குடும்பமும் அவனுக்காக துடித்ததை எண்ணி பார்த்தவுடன் இன்று யாரும் மற்ற நிலையில் இருப்பதை எண்ணி மிகவும் மனம் நொந்து போனான் அவனால் இந்த நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவன் அருகில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்தான்.

இப்படியாக இரண்டு நாட்கள் மிக வேகமாக கழிந்தது ஆனால் கார்த்தியின் பழைய குறும்புத்தனம்இல்லாமல் இன்று யாரிடமும் எந்தவித உயிர்ப்பு இல்லாமல் வெறுமையாக காணப்பட்டன.

அவனுடைய தொழில்கள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியாகவே மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் ஏனெனில் இந்த நிலைமையில் அவன் யாரிடமும் காட்சி பொருளாக
இருப்பதை விரும்பவில்லை .

ராமு மாமாவும் ராஜி அக்காவும் மனதளவில் துடித்தனர் நாளுக்கு நாள் கார்த்தியின் மன அழுத்தம் அதிகமாகி மிகவும் இறுக்கமாக காணப்பட்டான் நாளுக்கு நாள் அவனுடைய மூர்க்கத்தனமும் கோபமும் இயலாமையும் அவனை வெறியடைய செய்தது இதனால் அவன் அருகே யாரும் வர தயங்கினர்.

இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால் அவன் உடல்நிலை பாதிக்கப்படும் என்று எண்ணிய ராஜி அக்காவும் ராமு மாமாவும் அவனிடம் சிறிது நாட்கள் அமைதியாக உள்ள இடத்தில் தங்கி வருமாறு அனுப்பி வைத்தனர் .

உடனே கார்த்தி தனது மன அமைதிக்காக அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு அவர்களின் கோவையில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் கொஞ்ச நாட்கள் இருப்பதற்காக வந்தான்.

யாரிடமும் பேசாமல் அந்த வீட்டில் ஒரு அறையில் அமர்ந்திருந்தான் அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது அன்று அவன் தாய் தந்தையுடன் வந்து கோவையை சுற்றியுள்ள இடங்களை பார்த்துவிட்டு சென்று ஞாபகம் வந்தபொழுது அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது .ஆனால் தற்பொழுது என்று எண்ணி பார்க்கும் பொழுது அவனுடைய வேதனையை தாங்க முடியாமல் மனம் நொந்து போனான் .

இரண்டு நாட்கள் சென்ற பிறகு மன அமைதிக்காக அருகில் உள்ள கோவிலுக்கு சென்றான் எப்பொழுதும் பழக்கப்பட்ட இடத்திற்கு வருபவன்இன்று ஒருவரின்உதவியோடு கோவிலில் உள்ளே நுழைந்தான்.

மனம் வேதனையில் அவனை அறியாமல் கோவில் தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு ஓடி வந்துகார்த்தியின் மேல் விழுந்தது அதை எதிர்பார்க்காத கார்த்தி அக்குழந்தையை தூக்கி நிறுத்தும் போது அச்சிறு குழந்தை கார்த்தியின் முகத்தில் உள்ள தழும்பை பார்த்து வீறிட்டு கதறியது அதை எண்ணிய கார்த்தி அக்கோவிலில் உட்கார முடியாமல் எழுந்து அவனைக் கூட்டி வந்தவர் உதவியோடு வீடு வந்து சேர்ந்தான்.

மனம் நொந்து போய் அவனும் உடைய அறையில் அடைந்து கிடந்தான்

இப்படியாக இரண்டு நாட்கள் சென்ற பொழுது கார்த்திக் மன அமைதிக்காக அருகில் உள்ள பார்க்கில் சாய்ந்து உட்கார்ந்திருந்தால் அப்பொழுது ஒரு சிறு குழந்தையின் பேச்சு குரல் கேட்டது, அந்தக் குழந்தை தன் தாயிடம் ஏதோ ஒன்றைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை எண்ணிப் பார்த்த கார்த்திக் தாய் தந்தையின் இல்லாத நிலையில் எண்ணி மிகவும் வருந்தினான் .

அப்பொழுது ஒரு கை அவனை ஆதரவாக அமைத்தது யார் என்று அறியாமல் தனக்கு ஆதரவாக ஒரு கை தன்னை பிடித்திருப்பதை பார்த்து கார்த்திக் அதிர்ந்தான்.



தொடரும்....
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் .4


ஒரு இனிமையான குரல் அவனிடம் பேசத் தொடங்கியது உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல ஆனா நீங்க ரொம்ப சங்கடமா இருக்கீங்க மட்டும் எனக்கு புரிஞ்சுச்சு உங்களோட வேதனையை என்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்கிறதா இருந்தா பண்ணுங்க உங்க மனசுல இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும் என்ன உங்க பிரண்டா நினைச்சு நீங்க கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க சங்கடப் படாதீங்க என்று சொல்லி அவனுடைய கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தது.

ஒரு நிமிடம் கண்களை இருக்க மூடி திறந்த கார்த்திக் அவன் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை அவளிடம் பேசத் தொடங்கினான்.

அதை பொறுமையாக கேட்ட அக்கையின் உரிமையாளரும் கார்த்தியின் தலையை கோதி தன்னுடைய தோல் சாய்த்து அவனுடைய மனதை அமைதி அடைய செய்தாள்.

சிறிது நேரம் கார்த்தியுடன் உரையாடி விட்டு மற்றொரு நாள் வருவதாக கூறி சென்றாள் பார்க்கிற்கு வரும் முன் இருந்த மனநிலை முற்றிலும் மாறி மிகவும் சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாளும் அதே போல் அந்தப் பார்க்கில் அமர்ந்து கையின் சொந்தக்காரியை வருவாளா என்று எண்ணி காத்திருந்தாள் .

ஆனால் அவள் இன்று வரவில்லை என்றவுடன் அவன் மனம் கொஞ்சம் சுணங்கி தான் போனது, அதை எண்ணிக் கொண்டிருந்த அவனிடம் யாரோ அவனுடைய தலை முடியை மெது மெதுவாக கோத அந்த வருடலில் யார் அதை செய்வது என்று உணர்ந்து கொண்டவனோ மென்மையாக இதழ் பிரித்தான்

பின்பு சிறிது நேரம் அக்கையின் சொந்தக்காரி உடன் உரையாடி விட்டு அவன் வீடு வந்து சேர்ந்தான் இப்படியாக தினமும் அவர்களின் உரையாடல் நட்பாக தொடர்ந்தது , இந்த சிறிய நாட்களிலே கார்த்தியின் முழு விவரமும் அப்பெண்ணின் தெரியும் ,ஆனால் அப்பெண்ணின் எந்த விவரமும் கார்த்தி அறியவில்லை என்பதை விட இதுதான் விதியோ! இல்லை காலம் உணர்த்தும் சதியோ! யார் அறிவாரோ?


அவளை கார்த்தி செல்லமாக அம்மு என்று அழைத்துக் கொண்டிருந்தார். அன்றும் அதே போல் கார்த்தி வருவான் என்று அவனுக்காக காத்துக் கொண்டிருந்தால் அம்மு.

ஆனால் அவன் வந்த நிலைமையை பார்த்து மிகவும் நொந்து போனால் ஏனெனில் இன்றுடன் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் இறந்து ஓராண்டுகள் ஆனது அதை எண்ணி மிகவும் வருந்தி அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் அழுது கரைந்தான் அதை அறிந்த அவளோ அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என்று அறியாமல் சிறிது நேரம் யோசித்து ,அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்தாள் பின்பு ஒரு முடிவு எடுத்தவளாக சமையலறை சென்று சாதம் சமைத்து ஒரு தட்டில் பரிமாறி அதை எடுத்து வந்து அவனை சாப்பிட அழைத்தாள் ஆனால் அவன் சாப்பிட மறுத்தான் பின்பு அவளே அவனுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்டி விட்டாள் கார்த்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது ஒரு வாராக அவனை அவனுடைய அறையில் படுக்க வைத்தாள் மெதுவாக அவன் தலைகோதி மார்பில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் கார்த்திக் அவனை அறியாமல் கண்மூடி உறங்கினான்.


நெடு நாட்களாக தூங்காத தூக்கத்தை அவளுடைய ஆறுதலின் பேரில் நீண்ட நிம்மதியான உறக்கத்திற்கு சென்றான்.

மறுநாள் அழகாக விடிந்தது அவனுக்கு இப்படியாக அவர்கள் இருவரின் நட்பும் மிகவும் நெருக்கமாக இருந்தது கார்த்திக்கின் அணுகுமுறையும் பழக்கங்கள் முதற்கொண்டு அவனுக்கு எந்த நேரத்தில் எப்படி என்பதை முதற்கொண்டு அவள் அறிந்து வைத்திருந்தாள்.

கார்த்திகை பொருத்தம் மாட்டிலும் அம்மு அவனுடைய இன்னொரு உலகம் அவர்களின் உலகத்தில் வேறு யாரையும் வருவதைஅவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.

நாட்கள் அதன்போர்ட்டில் வேகமாக சென்று கொண்டே இருந்தது இருவருக்கும் இடையேயான பிணைப்பு நாளுக்கு நாள் மிகவும் அதிகமாக இருந்தது நட்பை தாண்டி அவர்களின் இருவர் மனதிலும் காதல் என்பது உதித்தது அதை இருவரும் சொல்லத் தயங்கி கொண்டே சென்றனர் .

அன்றும் அதே போல் ஒருவருக்கொருவர் சிறியவிவாதம் செய்து கொண்டிருக்கும் சமயம் கார்த்திக் அவன் அறியாமல் அம்முவை தன் கைவளவில் கொண்டு வந்தான் பேச்சு சுவாரஸ்யத்தில் இருவரும் இதை அறியவில்லை திடீரென்று கார்த்தியின் மூச்சுக்காற்று அவள்மேல் படுவதை உணர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்த போது கார்த்தியின் உதடுகள் அவளுடைய கன்னத்தில் பட்டது மின்சாரம் தாக்கிய உணர்வினை பெற்றால் மங்கை அவளை அறியாமல் கண்களை மெல்லமாக மூடினால் திடீரென்று கார்த்தி அவளுடைய பேச்சு சத்தம் கேட்காததால் என்ன என்று அறிய முற்படும் பொழுது அவளுடைய கண்ணம் அவனுடைய உதடுகள் அருகில் இருப்பதை எண்ணி நாணம் கொண்டான் .

சிறிது நேரம்இருவராலும் பேசஇயலவில்லை நேரம் ஆனதை உணர்ந்த அவள் விடைபெற்று சென்றான் மாலை நடந்த நிகழ்வினை எண்ணியவாறு உறங்க சென்றான் கார்த்தி முன்பு இருந்த வேதனைகள் மறைந்து முற்றிலும் புது மனிதனாக மாறிய கார்த்திக் அவன் தொழில் அசுர வளர்ச்சிஅடைந்தான்.



தொடரும்....
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் .5

நாட்கள் செல்ல செல்ல கார்த்தி மிகவும் சந்தோஷமாக இருந்தான் காலை ஆனவுடன் மாலையும் மாலை அம்முவுடன் ஆனா சந்திப்பும் அவனுக்கு நிம்மதியை அளித்தது.

இதற்கிடையில் எப்பவும் போல மாலை ஆனவுடன் அம்முவை சந்திப்பதற்காக கார்த்திக் பார்க்கிற்கு வந்து பார்க்கும் பொழுது அவனால் அமுவை சந்திக்க இயலவில்லை , கார்த்திக் மனம் மிகவும் வேதனை அடைந்தது.

பின்பு நாளை அவளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுடன் தன்னுடைய வீட்டிற்கு வந்தான்.

இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அம்முவை அவனால் சந்திக்க இயலவில்லை, அம்முவிற்கு என்ன ஆனதோ என்று கார்த்தியின் உள்ளம் மிகவும் துடித்து போனது.


அவனுடைய ஏக்கம் அதிகமாகி போனது எங்கே தன் பெற்றோர்களையும் பிரிந்தது போல அம்மு தன்னை விட்டு பிரிந்து போய்விட்டாலோ அவளுக்கு ஏதேனும் ஆகி உள்ளதோ என்ற எண்ணத்திலேயே மன உளைச்சலில் உலன்று கொண்டிருந்தான்.


இப்படியாக 15 நாட்கள் கழித்து அம்மு கார்த்தியை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தால் அம்மு கார்த்தியின் அறைக்குச் சென்று அவனைக் பார்க்கும் பொழுது அவன் இருந்த நிலைமையைக் கண்டு அம்முவின் மனம் துணுக்குற்றது, மிகவும் மெலிந்து கண்ணிற்கு கீழ் கருவளையம் வந்து உடல் மெலிந்து காணப்பட்டான், அவனை இந்த நிலைமையில் கண்ட அம்மு மனம் மிகவும் துணுக்குற்றது.

என்ன சொல்லி தேற்றுவது என்று அறியாமல் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அம்மு தன்னை இறுக அனைத்தையும் கூடஉணர முடியாத நிலையில் மிகவும் இருந்தான் இங்கனம் விட்டால் என்பதே அறிந்த அம்மு அவனை உலுக்கினால்

அதன் பின் கொஞ்சம் சுயம் வந்த கார்த்தி அம்முவை கண்டு தாயைக் கண்ட போல் அவன் அவள் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறினன்.

அவன் கதறியதை தாங்க முடியாமல் அம்மு அவனுடன் தான் இல்லாத நாட்களை மிகவும் வெறுமையாக இருந்திருக்கிறான் என்று அறிந்த அம்மு ஒருவன் தன்னை தேடுகிறான் என்று அறிந்து சந்தோஷமாக உணர்ந்து அவனை இரு அனைத்துக் கொண்டாள்.

பிறகு ஒரு வாராக அவனைத் தேற்றி என்ன ஏது என்று கேட்ட பொழுது அதற்கு அவனும் பெற்றோர்கள் விட்டு சென்றபோல் நீயும் என்னை விட்டு சென்று விட்டாயோ என்று கூறினான்.

இதைக்கேட்ட அம்மு அவன் பெற்றோர்கள் ஸ்தானத்தில் தன்னை வைத்துள்ளான் என்று எண்ணி மிகவும் சந்தோஷமடைந்து பின்பு தான் வராத காரணத்தை அவனிடம் கூறினால்.

தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதித்ததால் தான் வர இயலவில்லை கடந்த 15 நாட்களாகவும் தன் தந்தையுடனும் தாயுடனும் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்ததனால் வர இயலவில்லை என்று கூறினால்

இப்பொழுது அவள் தந்தை தாயைப் பற்றி கூறிய பொழுது அவளைப் பற்றி முழுவதுமாக கேட்டிருந்தால் பின்னாளில் அவளைத் தேடி அலைந்திருக்க மாட்டான் கார்த்திக் விதி யாரை விட்டது???

தொடரும்...
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் .6

பின்பு ஒருவராக கார்த்தி அம்மு வராத 15 நாட்கள் நடந்த நிகழ்வினை பேசியவாறு தன்னை மறந்து அவளுடன் உரையாடிக கொண்டிருந்தான்.

இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது ஆனால் இதில் யார் சொல்வது என்ற
விடயம் இருவரும் அறியவில்லை

ஏனெனில் கார்த்தியை பொருத்த அளவுக்கு தான் அம்முவிற்கு ஒரு குறைவானவன் என்று எண்ணிக் கொண்டிருந்தான்

ஆனால் அம்மு தான் அவனுடைய உயர்ந்த இடத்திற்கு தான் தகுதியானவளா என்று எண்ணிக் கொண்டிருந்தாள் .

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் எந்த பொருளும் அழகும் தேவையில்லை என்பதை இருவரும் அறியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் அந்த பதில் கிடைக்கும் நேரத்தில் இருவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்திருப்பார்களா, இல்லை விதி செய்யும் செயலால் பிரிவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அம்மு அவனிடம் உரையாடியவாறு சாப்பிட்டாயா என்று கேட்ட பொழுது சாப்பிட்டேன் என்று மழுப்பாக்களாக பதில் கூறினான் அவன் சொல்வது பொய் என்று அறிந்த அம்மு உடனே சமையலறை சென்று தனக்குத் தெரிந்த மிக எளிமையான உணவை தயாரித்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

பல வருடங்கள் சாப்பிடாதவன் போல் மிக வேகமாக அவன் சாப்பிடுவதைக் கண்ட அம்மு தலையில் அடித்துக் கொண்டல

பின்பு மெல்லமாக சிரித்து அவன் தலை கோதி அனைத்து உணவுகளையும் அவனுக்கு ஊட்டி முடித்து வாயை தண்ணீர் கொண்டு துடைத்து தனது சுடிதார் ஷால் கொண்டு துடைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து அவன் கைகளை கோர்த்துக்கொண்டு இனி ஒரு முறை இப்படி செய்யக்கூடாது என்று கூறினால் .

அம்மு கார்த்தியின் தலை வேகமாக நாளாக பக்கமும் ஆடியது அதனை எண்ணிப் பார்த்து சிரித்தாலும் இவனுடன் உரையாடி விட்டு தன்னுடைய இல்லத்திற்கு கிளம்பினால் .

அடுத்து வந்த நாட்களும் இவர்களுக்கான நேரத்தில் ஒருவர் ஒருவர் சந்தித்துக் கொண்டனர் .

சில நேரம் அம்மு அவனை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தால் இப்படி ஆக அவர்கள் நாட்கள் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது ஒருநாள் பேச்சு சுவாரஸ்யத்தில் அம்மு கார்த்தியின் பெற்றோர்களைப் பற்றி கேட்ட பொழுது அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் பின் தான் பிறந்த பிறகு ஏற்றுக் கொண்டதாகவும் தங்கள் ஊருக்கு சென்று அங்கு இருந்த நாட்களைப் பற்றி கூறிக்கொண்டு வந்தான்.

அப்பொழுது பிக்னிக் பற்றி கூறிய பொழுது அவனை அறியாமல் கண்கள் நிறைந்து வழிந்தது இதையெல்லாம் பொறுமையாக கேட்ட அம்மு மனம் நேரடியது பின்பு இது தக்க தருணம் இல்லை என்று உணர்ந்த அம்மு அவனிடம் சமாதானம் செய்து தன் இல்லத்திற்கு கிளம்பினால்


அம்முவின் மனம் நெருடியதற்கான காரணம் என்னவோ?


தொடரும்...
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம்.7

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்கும் தருவாயில் ஒரு நாள் கார்த்திக் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனை அவனால் தவிர்க்க இயலாது என்ன செய்யலாம் என்று

இதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று எண்ணியவாறு உட்கார்ந்திருந்தால் அலுவலகத்தில் உள்ள அவனுடைய பி ஏ வை அனுப்பி வைக்க என்னும் பொழுது கார்த்தி இதில் முக்கியமாக கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் யோசனையை கலைக்கும் வகையில் அம்மு அவன் வீட்டிற்கு வந்தால் கார்த்தியின் தீவிரமான பாவனையைக் கண்டு என்ன எது என்று அம்மு கேட்டால்.

கார்த்தி அதற்கான விடையும் சொன்ன பொழுது சிறிது நேரம் அமைதிக்குப்பின் அவனை சென்று வருமாறு கூறினார்

அதற்கு மறுப்பாக தான் உள்ள நிலைமையை கூறினான் கார்த்தி அப்படியே விட்டால் சரியாகாது என்று உணர்ந்து அம்மு அவனிடம் அருகில் சென்று அமர்ந்து அவன் இரு கைகளையும் பிடித்தவாறு பேசத் தொடங்கினாள்.

வாழ்க்கையில எத்தனையோ போராட்டத்துக்கு நடுவுல நீ இந்த நிலைமைக்கு வந்திருக்க எத்தனையோ இழப்புகள் உனக்கு வந்து இருக்கு அது எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண உன்னால ஏன் இப்ப இந்த நிலைமையிலும் உன்னால ஃபேஸ் பண்ண முடியாதா, நீ அந்த அளவுக்கு மன அளவுல பலவீனமா இருக்கியா என்று கேட்டால் .

சிறிது நேர அமைதிக்குப்பின் தான் சென்று வருவதாக கூறினான் கார்த்தி.

அவன் அறியவில்லை இந்த பயணமே அவன் வாழ்க்கையை முழுவதுமாக திருப்பிப் போடப் போவதை அம்முவை தேடி அலைய போவதை எண்ணி பார்த்திருப்பானோ என்னவோ!விதி யாரை விட்டது .

தொடரும்....
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம். 8

அன்றும் அதே போல் கல்லூரி விடுமுறை ஆக இருந்தது அம்முவிற்கு அதனால் இன்று கார்த்திக்கை காண்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வந்து இருந்தால் அம்மு ஆனால் கதவு சாத்தப்பட்டு இருந்தது என்ன மணி 11 ஆகியுள்ளது இன்னும் கதவு திறக்கப்படாமல் உள்ளது என்று எண்ணி கதவை தட்டிக் கொண்டிருந்தால் ஆனால் வெகு நேரமாக தட்டிக் கொண்டே இருந்தாலே தவிர கதவு திறந்த பாடில்லை இதனால் மிகவும் பரிதவித்து போனால் அம்மு மீண்டும் கதவை தட்டிக் கொண்டே இருந்தால் ஆனால் கதவு திறக்கப் படவில்லை.

அவனுக்கு என்ன ஆனதோ என்று மனம் துணுக்குற்று, பின்பக்கம் ஏதாவது கதவு திறந்து உள்ளதா என்று எண்ணியவாறு பின்பக்கம் சென்று பார்த்தல் ஆனால் அங்கும் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்தது மிகவும் குழப்பமாக என்ன செய்வது என்று யோசித்தவாறு கார்த்தியின் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் அங்கு அவனும் கிடப்பதை பார்த்து அதிர்ந்து வேகமாக அருகில் உள்ள கல்லை எடுத்து ஜன்னல் கதவினை உடைத்து மெதுவாக அவன் அரையினுள் நுழைந்து வேகமாக சென்று கார்த்தியை எழுப்பி பார்த்தாள் .

அப்பொழுதுதான் அவன் உடல் சூட்டினை உணர்ந்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தவாறு சிறிது நேரம் அமைதியாக இருந்தால் , பின்பு ஒரு முடிவு எடுத்தவளாக அருகினில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்தாள்.

பின்பு சமையலறைக்கு சென்று சிறிது கஞ்சி ,சிறிது சுடு தண்ணீர் வைத்துக்கொண்டு அவன் அருகில் சென்றால் ஒரு வாராக அவனை மெதுவாக படுக்கையில் இருந்து எழுப்பி, சாய்ந்தவாறு உட்கார வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியை புகட்டினால் பின்பு காய்ச்சலுக்கான மருந்துகளை கொடுத்து முழுவதும் ஆரிய சுடு
தண்ணி கொண்டு துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள் மருந்தின் தீவிரத்தால் கொஞ்சம் அவனுடைய காய்ச்சல் மட்டுப்பட்டு இருந்தது.

இரண்டு மணி நேரம் முடிந்த பின்பு மெது மெதுவாக கண்விழித்த கார்த்தி அவன் அருகில் அம்முவின் வாசம் உள்ளதை அறிந்து கொண்டு தட்டு தடுமாறி எந்திரித்து அம்முவை அணைத்துக் கொண்டான்.

அதில் கார்த்தியை பார்த்த அம்மு திட்ட ஆரம்பித்தால் நீ என்ன சின்ன குழந்தையா உடம்பு சரியில்லாட்டினா ஒரு டாக்டரின் கூட போக மாட்டியா உனக்கு தான் ஹெல்ப் பண்றதுக்கு ஒரு அங்கிள் வருவாருல்ல அவருக்கு கூட்டிட்டு போய் டாக்டர் பாத்துட்டு வந்திருக்கலாமில்ல என்று கேட்டால்.


அதற்கு கார்த்தி அந்த அங்கிள் ஓட மருமகனுக்கு அடிபட்ட உள்ளதால் அவர்களைக் காணுவதற்காக ஊருக்கு சென்று உள்ளதாக கூறினான் .

அவனை பரிசோதித்துப் பார்த்த பொழுது காய்ச்சல் கொஞ்சம் குறைந்து இருந்தது அவனுக்காக ரச சாதம் செய்து ஊட்டி விட்டாள் .

இப்படியாக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திக்கு காய்ச்சல்களின் தீவிரம் அதிகமானது அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் அம்முவையும் சேர்த்து இழுத்துக் கொண்டான்.

அவன் உடல் குளிரில் விரைப்பதை உணர்ந்து கொண்ட அம்மு அவனை இருதுணைத்துக் கொண்டாள் ஆனால் கார்த்தி காய்ச்சலின் தீவிரத்தாள் மேலும் மேலும் அவளுடன் ஒன்றிக் கொண்டே இருந்தான் எவ்வளவு முயன்றும் அவளால் அவனை தடுக்க இயலவில்லை, ஒரு கட்டத்தில் அவளால் எதுவும் செய்ய இயலாமல் போனது இறுதியில் இருவரும் ஈருடல் ஓர் உடலானார்கள் .

இதை இருவரும் எண்ணிப் பார்க்கவில்லை.அம்முவாள் அவனை தடுக்கவும் இயலவில்லை.

மாலையானவுடன் மெது மெதுவாக கண் திறந்து பார்த்தான் கார்த்தி சிறிது நேரம் அமைதிக்கு பின் அருகில் அம்மு இருப்பவத்தை உணர்ந்து கொண்டு நடந்த நிகழ்வினை எண்ணி கதறி அழுதான் கண் திறந்து பார்த்து அம்மு அவன் அழுவதை எண்ணி அவனிடம் பேச முயன்றால் ஆனால் அவன் கதறல்கள் அதிகமானதை தவிர குறைந்த பாடு இல்லை .

ஒரு கட்டத்திற்கு மேல் அருகில் உள்ள பூஞ்சாடியை உடைத்து தன்னை தாக்கிக் கொள்ள முயன்றான் கார்த்தி அதற்குள் அவனை வேகமாக தடுத்த அம்மு அவனுடைய கன்னத்தில் அறைந்தாள் பின்பு கதறி அழுது அவனை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் இருவரும் அழுது கரைந்தனர் பின்பு ஒருவராக தன்னை சமாளித்துக் கொண்டு கார்த்தி பேசத் தொடங்கினான் நான் உனக்கு தகுந்தவன் அல்ல இது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு அதற்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் நீ யாரையாவது திருமணம் செய்து கொள் என்று கூறினான்.

இதை எதிர்பார்க்காத அம்மு கோபமாக அவனுடன் பேசத் தொடங்கினாள் என்னுடைய மனசாலையும், உடம்பாலையும் உன்னை மட்டும்தான் நினைத்தேன் அதனால தான் ஒரு கட்டத்துக்கு மேல நான் உன்ன தடுக்கல இதுல நம்ம ரெண்டு பேத்து மேலயுமே தப்பு இருக்கு நீ உன்னை மட்டும் தண்டித்தாள் சரியா என்று கேட்டால்.

இதை எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ந்து பின்பு ஒரு வாராக தன்னை தேற்றிக்கொண்டு அவனுடைய கழுத்தில் கடைசியாக அவனுடைய பெற்றோர்கள் பிறந்த நாளிற்காக பரிசளித்த செயினை கழட்டி அம்முவின் கழுத்தில் அணிந்து விட்டு பேசத் தொடங்கினான் இது நான் உனக்கு கட்டும் தாலி என்று கூறினான் .

இதை எதிர்பார்க்காத அவளோ கண்களில் கண்ணீர் வடிய அவனை இரு கனைத்துக் கொண்டாள்.

பிறகு என்ன பேசுவது என்று அறியாமல் ஒருவரின் கையோடு ஒருவரின் கை இணைத்து கொண்ட அமைதியாக உட்கார்ந்து இருந்தனர் நேரம் ஆவது உணர்ந்து கொண்டு அம்மு அவனிடம் விடை பெற்று அவளுடைய வீட்டிற்கு சென்றால்.

தொடரும்....
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் 9

இப்படியாக அன்று நடந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகு இருவருடைய நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமானது கார்த்தி அவளை தன்னுடைய மனைவியாக எண்ணியவாறு நெருங்கிக் கொண்டிருந்தான் .

அதில்அதிகமாக கூச்சம் கொண்டு அவனை தவிர்க்க எண்ணினாள் ஆனால் அது முடியவில்லை.

அவளுடைய கல்லூரி விடுமுறையில் காலை கார்த்தியின் வீட்டிற்கு வந்து உணவு சமைத்துக் கொடுப்பதிலிருந்து அவனுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது முதல் அம்முவே செய்தால்.

இப்படியாக அவர்களுடைய நாட்கள் மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.

இன்னும் ஐந்து நாட்களில் கார்த்திக் அவனுடைய அலுவலக வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் அவளுடைய கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து கார்த்திக்டன் நேரம் செலவழித்து வந்தால் .

முன்பை விட இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர் மறுநாள் கார்த்தி செல்ல இருப்பதால் அவனை இருகணைத்து கொண்டு படுத்திருந்தால் அம்மு.

அவனும் அவளுடைய தலையை மெதுவாக முடியினை கோதி விட்டுக் கொண்டிருந்தான். ஏன் என்று அறியாமல் இருவரின் உள்ளமும் மிகவும் வருந்தி கொண்டிருந்தது தங்களை விட்டு ஏதோ ஒன்று பிரிந்து செல்வது போல் இருவரும் உணர்ந்தனர்

இருவரின் கண்களிலும் அவர்களை அறியாமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது இந்தப் பிரிவு அவர்களுக்கு தற்காலிகமானது அல்ல நிரந்தரமானது என்று யார் சொல்வது இதை எதையும் அறியாதவாறு இருவரும் அனைத்து கொண்டு படுத்திருந்தனர்.

இப்படியாக ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது .அம்முவிடம் விடை பெற்றுக்கொண்டு கார்த்திக் ஏர்போர்ட்டிற்கு சென்றான்.

அவனுடைய உயிரை யாரோ பிரிந்து செல்வது போலான ஒரு வழியினை உணர்ந்து கொண்டேசென்றான்.

இது அவர்களுடைய வாழ்க்கைக்கான தொடக்கமல்ல முடிவு என்று யார் சொல்வது?

தொடரும்...
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம். 10

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அலுவலகமே மிகவும் பரபரப்பாக இருந்தது இன்று அவர்களுக்கான மாதாந்திர மீட்டிங் அதற்காக அனைவரும் மீட்டிங் ஆல் உட்கார்ந்திருந்தனர் .


இன்று என்ன நடக்கப் போகிறதோ யாருக்கு என்ன பனிஷ்மென்ட் கிடைக்க போகிறதோ என்று அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் சமயம் அழுத்தமான காலடித்தடம் சத்தம் அவர்களின் மீட்டிங் ஹால் பக்கம் வருவதை உணர்ந்து அனைவரும் கப்சிப் என்ற அமைதி ஆகினர் .

அந்த மீட்டிங் ஹாலில் ஆண்களே போட்டி போடும் அளவிற்கு ஆண்அழகனாக ஆறடி உயரத்தில் நுழைந்தான் அவன் ஆனால் அவன் முகத்திலோ மருந்துக்கும் சிறு புன்னகையும் இன்றி இறுக்கமான முகத்துடன் முதலில் விட இப்பொழுது மிகவும் கம்பீரமாக இருந்தான்.

அனைவரையும் அவனுக்கு காலை வணக்கம் சொல்லியும் சிறிது தலை அசைப்புடன் நிறுத்திக் கொண்டான் .

பின் 2 மணி நேரம் அந்த அறையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்காதது போல் இருந்தது அந்த அறை முழுவதும் அவனுடைய குரலே எதிரொலித்தது கொண்டிருந்தது .

பின்பு மீட்டிங்கை முடித்துவிட்டு அந்த மாதத்திற்கான வரவு செலவுகளை பார்த்துவிட்டு அனைவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனக்கான அழைத்துச் சென்று அமர்ந்து கொண்டான்.

அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தவன் கண் முன்னே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் வரிசையாக நிழல் போல வந்து கொண்டிருந்தது அதனை என்று தடுக்க முனைந்த போதும் மீண்டு வர முடியவில்லை, அந்த நிகழ்வில் இருந்து.

அப்படியே அமைதியாக உட்கார்ந்து இருந்த பொழுது அவனின் அமைதியை கலைப்பதற்காகவே அவனுடைய அறைக்குள் பிரவேசமானார்கள் அவனுடைய ஆருயிர் கௌதம் கௌஷிக் ஆதித்யன் மற்றும் ரகு.

அவர்களின் குரல் சத்தம் கேட்டவுடன் எதிலிருந்து மீள்பவனாக கண்களை
திறந்து பார்த்தான் அர்ஜுன்.

அவன் முன்பு அவன் ஆருயிர் நண்பர்கள் நால்வர் உட்கார்ந்து அவனைப் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் .

இவர்கள் இவன் சிறுவயது முதல் தற்போது வரை இவனுடன் இருப்பவர்கள் அவனுடைய பெற்றோர்கள் இறந்த சமயம் அவனுடன் இருக்க முடியாத சூழ்நிலையில் இருந்தனர் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இவனுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக அவனுடைய வேதனையிலிருந்து பாதுகாத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது வரை இந்த மூன்றாண்டு காலங்களாக அவன் உயிரோட்டமாக இருப்பதற்கு இவர்கள் மட்டுமே காரணம் .

ஏனெனில் பெற்றோர்களையும் இழந்து அவனுடைய உயிருக்கு உயிரானவளையும் இழந்து அவள் எங்கே சென்றால் என்று கண்டறிய முடியாமல் இப்பொழுது வரை தேடிக் கொண்டிருக்கிறான்.

இப்பொழுது அனைவருக்கும் சிம்ம சொப்பனம் ஆகவும் டாப் பிசினஸ் மேன் ஆகவும் எதிரிகள் அனைவரும் கண்டு பயக்கும் ருத்ரமூர்த்தி ஆகவும் யாராலும் தொடக்கூட முடியாத அளவிற்கு அவன் வாழ்க்கையில் உயர்ந்துள்ளான் என்றால் மிகையாகாது.

இவர்களின் துணை கொண்டு மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடிந்தது ஏனெனில் அவனுடன் பிசினஸ் பார்ட்னராக கௌஷிக் அவனுடனே இருந்தான் .

அர்ஜுனன் மருத்துவ நிர்வாகம் முழுவதுமாக அங்கு குழந்தைகள் நல மருத்துவராக இருந்து ரகு பார்த்துக் கொண்டான்.

அர்ஜுனை அழிக்க நினைக்கும் எதிரிகளிடம் இருந்து அவனை காக்கும் பாதுகாவலனை போல் இருந்தான் ரகு ஏனெனில் அவன் ஒரு ஐபிஎஸ் ஆபிஸர்.

அர்ஜுனின் தொழில் தொடர்பான சட்ட சிக்கல்களையும் அவன் எதிரிகள் கொடுக்கும் சட்ட சிக்கல்களையும் பார்த்துக் கொண்டான் ஆதித்யன் .
இவர்கள் நால்வரும் அவனுக்கு தூண் போன்றவர்கள் .

இன்று அர்ஜுனன் உயிரோட்டமாக இருப்பதற்கு இவர்கள் நால்வரும் காரணம் , இவ்வாறாக ஐவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சமயம் யாருடைய அனுமதியும் இன்றி அறைக்குள் பிரவேசித்தால் ஒரு மாடர்ன் யுவதி யார் அவள்? என்று பார்த்த பொழுது கௌசிகோ சும்மா இருக்காமல் ஒரேகொசு தொல்லை அப்பா என்று கூறினான்.

அதைக்கேட்டு அனைவரும் சத்தமாக சிரித்தனர் அர்ஜுனன் முகத்திலோ சிறிய புன்னகை அர்ஜுனன் அறையில் இவர்களை எதிர்பார்க்காதவளோ கௌசிக்கை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் ஆனால் எவனோ அவளை மேலும் வெறுப்பேற்றும் விதமாக அருகில் உள்ள ஃபைல் எடுத்து அனைவருக்கும் விசிறி கொண்டு இருந்தான் இதை பார்த்து அவளோ மீண்டும் முறைக்க தொடங்கினால் அதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

பின்பு ஒருவராக தன்னை சமாளித்துக் கொண்டு அர்ஜுனன் அருகில் சென்று அவன் உடலில் தன் உடல் உரசுவது போல் வழிந்து பேசிக் கொண்டிருந்தால் இவளின் இந்த வகையான செயலை முக சுழிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஹாய் honey எப்படி இருக்க உன்ன பாக்கவே முடியல எப்பத்தான் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்ல போகிறே என்று கேட்டால் அர்ஜுனிடம் அதற்கு ஏதும் பதிலளிக்காமல் அமைதியாக அவனுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் அதைப் பார்த்த கௌசிகா சும்மா இருக்காமல் பல்பு பல்பு பெரிய சைஸ் டியூப் லைட்டை எரியுது என்று கூறினான் சற்றென்று அவனை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினால் அவள்.

ஏண்டா இவ்வளவு எல்லாம் இந்த ஆபீஸ்குள்ள விடுற அவ அப்பா தான உன் கம்பெனி ஷேர் ஹோல்டர் ஏன் இவ வரலாமா என்று கேட்டான் ரகு அதற்கு அர்ஜுனா என் அப்பாவோட நண்பரோட மகள்டா அந்த ஒரு காரணத்துக்காக தான் இவ வரதுக்கு அனுமதி அளித்தேன் என்று கூறினான்.

சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுடைய வீட்டிற்கு சென்றனர், இவர்கள் ஐவரும் ஒரேவீட்டில் தான் உள்ளனர். அன்றைய நாள் அப்படியே அவர்களுக்கு கழிந்தது.

தொடரும்....
 
  • Like
Reactions: Joss uby