• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் 11

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவர்களுக்கான வேலைப்பளு அதிகமாக இருந்ததால் ஒருவருக்கொருவரால் பேசிக்கொள்ள இயலவில்லை அதனால் வார இறுதி நாள் அன்று வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தனர் .

அதன்படியே இன்று அனைவரும் ஷாப்பிங் மாலிற்கு சென்றனர் சிறிது நேரம் மால் அனைத்து பகுதிகளும் சுத்திபார்த்துவிட்டு ஃபுட் கோட்டுக்கு வந்து அமர்ந்து இருந்தனர் அப்பொழுது ஒரு பெண் அம்மு அம்மு என்று அழைத்துக் கொண்டு ஓடி சென்றதைப் பார்த்த அர்ஜுன் அவள் பின்னே வேகமாக ஓடினான் இதை எதிர்பார்க்காத நண்பர்கள் அவன் பின்னே வேகமாக சென்றனர்.


வேகமாக ஓடிய அர்ஜுன் அந்தப் பெண்ணை மறைப்பது போல் நின்று அவளிடம் அம்மு யாரு அம்மு யாரு என்று கேட்டான் திடீரென்று ஒரு ஆடவன் தன்னிடம் வந்து இப்படி கேட்டதை பார்த்து அந்தப் பெண் சற்று அதிர்ந்து ஒருவாராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தன்னுடைய தங்கையை அழைத்ததாக கூறினால் அப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு 15 வயது சிறுமி அவள் அருகில் வந்து இவர் யார் என்று கேட்டால் இதை எதிர்பார்க்காத அர்ஜுன் மிகவும் வருந்தி சாரி என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியே சென்றான்.

கார்த்தியின் இத்தகைய செயலை எதிர்பார்க்காத நண்பர்கள் அதிர்ந்து பின் வேகமாக கார்த்தியின் பின் சென்றனர்

வேகமாக சென்ற கார்த்தி அருகில் உள்ள பார்க் பென்சில் அமர்ந்து எங்கோ இலக்கின்றி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் இதை பார்த்த நண்பர்கள் வேதனை அடைந்து அவன் அருகில் சென்று அமர்ந்தனர்.

கௌஷிக் அர்ஜுன் என்று அழைத்தான் ஆனால் அவனிடம் எந்த பதிலும் இல்லை பின்பு ரகு ஆதவன் கௌதம் அழைத்தும் அவனிடம் எந்த பதிலும் இல்லை ஒரு வராக தங்களை நிலைப்படுத்திக் கொண்டு அவனை வேகமாக உலுக்கினர் அதன்பின் தன்னிலை அடைந்தவனோ அவர்களை ஏமாற்றமடைந்த முகத்தோடு நோக்கிக் கொண்டிருந்தான்.

பின்பு கௌதம் பேசத் தொடங்கினான் நீ அப்பா அம்மா இறந்ததற்காக மட்டும் இப்படி இருக்கேன்னு என்னால நம்ப முடியல கார்த்தி இந்த மூணு வருஷமா நீ பழைய அர்ஜுனா இல்ல உன்ன பெத்தவங்களை இழந்த வலியை தாண்டி வேற ஏதோ ஒரு வழி உன் உள் மனச அழுத்தது அது அப்படியே உன் முகத்தில் தெரியுது என்றனர்.

எங்கள உன் உயிர் நண்பனா நினைச்சிருந்தா நீ எங்ககிட்ட சொல்லிருப்ப ஆனா நாங்க வேற யாரோ தானே என்று கேட்டான் கௌதம்.

சிறிது நேர அமைதிக்கு பின் அர்ஜுன் பேச தொடங்கினான் நான் என் பெத்தவங்கள மட்டும் இழக்கல என்னோட உயிருக்கும் மேலானவளையும் மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த நிகழ்வுகளை இழந்துட்டேன் என்று கூறி கதறினான்.

அவன் அவ்வாறு கூறியதை எதிர்பார்க்காத நண்பர்கள் அதிர்ந்தனர் பின்பு தங்களை ஒருவர் நிலைப்படுத்திக் கொண்டு கார்த்தியை உலுக்கி நீ லவ் பண்ணியா நீ
லவ் பண்ணியா என்று கேட்டனர்

தொடரும்...
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் 12

ஆமா! ஆமா! அந்த இடமே அதிரும் அளவுக்கு அர்ஜுன் கத்தினான் இதை எதிர்பார்க்காத நண்பர்கள் உரைந்து நின்றுனர் பின்பு ஒருவராக மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வினை கூறத் தொடங்கினான்.

அவன் கூறக் கூற நண்பர்கள் நிலைமையே மிகவும் மோசமானது இவ்வளவு வலியை ஒழித்து வைத்துள்ளானா என்று எண்ணி மனம் கலங்கிப் போனார்கள்.

பின்பு தங்களைத் தேற்றிக்கொண்டு நீ சொல்றத பார்க்கும்போது அம்முவும் உன்ன லவ் பண்றாங்கன்னு தெரியுது நீ கோவைக்கு போய் பார்க்க வேண்டியதுதானே என்று கேட்டான்
ஆதவன் .

அதற்கு அர்ஜுனோ ஒரு விரக்தியான புன்னகை செய்துவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வினை பேசத் தொடங்கினான் நான் மூணு வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பின்பு என் ஆருயிர் ஆனவளை காண கோவை சென்று பார்த்த பொழுது எனக்கு கிடைத்த பதில் பூஜ்ஜியமே .

எனக்கு கண் பார்வை வந்த பொழுதும் என் உயிருக்கு உயிரானவளைக் காண ஓடோடி வந்தும் என்னால் அவளை பார்க்க முடியவில்லை என்ன நடந்தது ஏது நடந்தது என்று இன்று வரை என்னால் உணரவும் முடியவில்லை இன்று வரை அவளைத் தேடிக்
கொண்டே இருக்கிறான் அவள் கிடைத்தால் தான் இந்த மூன்று ஆண்டு முன் என்ன நடந்தது அதற்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறான் என்று கூறி முடித்தான். அனைவரும் சோகமாக அங்கே அமர்ந்தனர்.


தொடரும்...
 

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
அத்தியாயம் 13

அனைவரும் ஒரு மௌனநிலையில் அமர்ந்திருந்தனர் அப்போது கௌஷிக் கலகலவென சிரிக்க தொடங்கினான்.

அனைவரும் இவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்கா நினைத்து அவனைப் கேவலமாக பார்த்தனர் அதை எதையும் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் கௌஷிக் சிரித்துக் கொண்டே இருந்தான் இவனின் செயலில் பொறுமை இழந்த ரகு அவனை இழுத்து என்னவென்று கேட்டான் அதற்கு அவன் சிரித்துக் கொண்டே இருந்தான் அவனை அடிப்பதற்காக கையை ஓங்கி கொண்டு சென்ற போது சிரிப்பினோடு இல்லடா மச்சான் நான் கூட அந்த மேக்கப் பைத்தியம் தான் இவனுக்கு பொண்டாட்டியா வந்துரும்னு நினைச்சேன் அதுக்கு மேக்கப் ஐட்டங்கள் வாங்கி கொடுத்து இவன் கம்பெனி மொத்தமா முடிஞ்சிடும் டா அதைத்தான் நினைச்சு சிரிச்சேன் என்றான்.

அதைக் கேட்ட அனைவருக்கும் நேரம் இருந்த இறுக்கம் மறைந்து இதழ் விரித்தனர் பின்பு ஒருவராக சிறிது நேரம் பேசி சிரித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அர்ஜுனன் அதிலும் இத்தனை நாள் இருந்த இறுக்கம் சற்று மற்று பட்டு இருந்தது.

கௌதம் அண்ட் ரகுவும் மிகவும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர் அர்ஜுனின் வாழ்க்கையில் எவ்வாறு அம்முவை சேர்த்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த அறைக்கு கௌசிக்கும் அண்ட் ஆதவும் வந்தனர் என்ன சிந்தனையில் இருக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களின் அருகில் அமர்ந்த போது கௌதமும் ரகுவும் தங்கள் யோசித்த விஷயத்தை கௌஷிக் மற்றும் ஆதவன் இடமும் பகிர்ந்து கொண்டனர் .

பின்பு ஒரு வாராக தங்களுக்குத் தெரிந்த ஒரு நண்பர் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்திக் கொண்டிருப்பார் அவன் மூலமாக வழி கிடைக்குமா என்று யோசித்து விட்டு அவனை அழைத்து அர்ஜுன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவனிடம் கூறினர்.

அதை பொறுமையாக ஏற்ற
அவர்களின் டிடெக்டிவ் நண்பரோ இன்னும் பத்து பதினைந்து நாட்களில் இதற்கான முடிவை நான் உங்களுக்கு தருகிறேன் என்று கூறினான் அப்பொழுதுதான் அவர்களின் நால்வரின் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

இப்படியாக அனைவரும் பேசி மறுநாள் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதாக கூறிக் கொண்டிருந்தான் கௌதம் பின்பு அனைவரும்உறங்கச் சென்றனர்.

மறுநாள் பல மாயாஜாலங்கள் நிகழ்த்தி தேடலுக்கான முடிவு காண முதல்அத்தியாயத்தை எழுதுவதற்காக தொடங்கியுள்ளது யாருக்கு என்ன காத்திருக்கிறதோ?

தொடரும்....